Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண நகரத்தின் அடையாளங்களை மேம்படுத்தல்! ஐந்திறன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண நகரத்தின் அடையாளங்களை மேம்படுத்தல்! ஐந்திறன்.

September 3, 2021

கடந்த ஞாயிற்றுக்கிழமை உதயன் பத்திரிகையில் வெளிவந்த ‘நகரபிதாவிற்குக் குடியானவன்’ எழுதிய கடிதத்தை வாசிக்க நேர்ந்ததில் ஏற்பட்ட சிந்தனைகளை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளும் ஆசையின் விளைவே இச்சிறு கட்டுரை. யாழ்ப்பாண நகரத்தை, வீதி அகலிப்பு முதலிய பலநடவடிக்கைளால் அழித்துக் கொண்டிருக்கும் செயற்பாடுகள் மீதான கோபமும், மனவருத்தமும் கூட இக்கட்டுரை எழுதக் காரணமாகும். ஏன் யாழ்ப்பாணத்தில் துறைசார் நிபுணர்களை எல்லா இடங்களிலும் அகற்றிவிடுதல் என்பதை அதிகாரிகள் ஒரு வியூகமாகக் கடைப்பிடிக்கிறார்கள் என்ற காரணம்  கட்டுரையாளர் ஜீவன் தியாகராஜாவைப் போல எனக்கும் புரியவில்லை.

spacer.png

படம் 01- குறிப்பிட்ட பண்புத்தொடர்ச்சியுடைய ஆஸ்பத்திரிவீதி கடைத்தொகுதிகள்

போருக்குப் பின்னரான மீள் கட்டுமானம் பற்றிய சிந்தனைக்கும் செயற்பாட்டிற்குமான தேர்ந்த முன்னுதாரணமாக இரண்டாம் உலகப்போருக்குப் பிந்திய ஜெர்மனியையும், ஜப்பானையும் கூறுவார்கள். அவை தமது பொருளாதார அபிவிருத்தியோடு பண்பாட்டுத் தனித்தன்மையையும் – வரலாற்று அடையாளத்தையும் தக்க வைக்கும் முயற்சியையே அவற்றின் வடிவமைப்பின் பிரதானமான கொள்கையாகக் கடைப்பிடித்து இருந்தன என்று கூறுவார்கள். இப்பின்னணியில் வைத்து, போருக்குப் பிற்பட்ட யாழ்ப்பாண நகரத்தை மீள்கட்டமைத்தல் என்ற விடயப்பரப்பினைப் எடுத்துப் பார்ப்போமாயின், அச் செயற்பாடானது  மிக மிகக் குழப்பமூட்டுவதாகக் காணப்படுகிறது என்பதை அடிப்படை நகரத் திட்டமிடல் பற்றிய பார்வையுடைய எவரும் புரிந்து கொள்வார்கள். அதேசமயம்,  யாழ்ப்பாண நகரத்தின் பண்டைய அடையாளங்களை, வரலாற்றுத் தடங்களை அழிப்பதை திட்டமிட்ட உள்நோக்கத்துடன் ‘ யாழ்ப்பாண நகர அபிவிருத்தி’ என்ற கவர்ச்சியான சுலோகத்துடன் செய்கின்றார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

spacer.png

படம் 02 – ஆஸ்பத்திரி வீதி : ஒழுங்கற்ற விளம்பரத்தட்டிகள், ஒழுங்குகுலைக்கப்பட்ட நடைபாதைகள்

ஒரு நகரத்தின் மீள் கட்டுமானத்தில் அதன் பார்வைத்தோற்றம் மிகப்பெரிய பங்காற்றுகின்றது.  இப் பார்வைத்தோற்றத்தைக் கட்டமைக்கும் பிரதான அமைப்புகளாக அவ் இடத்தின் தெருக்கள், பாதையோர நடைபாதைகள் , கட்டட முகப்பு அமைப்புகள் என்பன முக்கிய இடம் பெறுகின்றன. இங்கு கட்டட முகப்பு அமைப்பு (facade) என்பது இவற்றில் தலையானதாகும். இதுவே மனிதருக்கும் கட்டட சூழலுக்கும் இடையிலான பிணைப்பை உருவாக்கும் முக்கிய காரணியுமாகும். அதுவே நகரத்தின் பண்புகளைச் சிருஷ்டிக்கும் முக்கிய அலகுமாகும். அவ்வகையில், அவ்விடத்தின் கட்டடக் கலையின் தனித்தன்மையைம் சிறப்பையும் அவை உருவாக்குவதுடன்,  அம் மக்களின் கலை, காலாசார வாழ்வியல் விழுமியங்கள், பொருளாதார நிலை , அறிவியல் சார் விழிப்புணர்வு என்பவற்றை ஒருங்கே வெளிப்படுத்தி நிற்கும் ஒன்றாகவும் காணப்படுகிறன. இன்னொருவகையிற் சொன்னால் அந்த மக்களின் கீர்த்தியை –செழுமையை மற்றவர்களுக்கு காட்டி நிற்கும் தோற்ற அமைப்பாகவும் அவை காணப்படுகிறன. இப்படி எல்லாம் இருக்கும்போது அதனைக் குழப்பிச் சிதைத்து அடையாளமற்ற ஒன்றாகுகின்றோம். இது தமிழ் மக்களுக்கு வரலாறும் இல்லை; பண்பாட்டுச் சிறப்புமில்லை என நிறுவ முயலுவர்களுக்கு இலகுவாக வழி சமைத்துக் கொடுக்கும் ஒன்றாகிவிடும் என்பதிற் சந்தேகம் இல்லை.

மனிதரால் உருவாக்கப்பட்ட மேற்பரப்புக்கள் அனைத்துமே குறிப்பிட்ட ஒரு கருத்தை அல்லது விடயத்தை வெளிப்படுத்தவும், கடத்துவதற்குமாகவே கட்டமைக்கப்படுகின்றன என்பது அறிஞர்கள்களது கூற்றாகும் . எனவே, ஒன்றிணைந்த – கட்டட முகப்புத் தோற்றமானது பல்வேறுதரப்பட்ட பௌதீக இடமைவு – நிலவுரு தொடர்பான ஒத்திசைவுகளைக் கொண்டதாக அடிப்படையில் காணப்படவேண்டும் என்பர். அது அவ்விடம் சார் கட்டடப் பாரம்பரியத்தை, அதன் அதனடிப்படைக் கோட்டுபாட்டு நிலைப்பாடுகளை, பாராம்பரியத்தை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும் என்பதில் நாடுகளும், சமூகங்களும் கவனமாயுள்ள நிலையில் அதற்கு எதிரான திசையில் நாம் பயணம் செய்கிறோம்.

spacer.png

 

படம் -03 ஆஸ்பத்திரி வீதி : ஒழுங்குநிலையில் அதன் தோற்றப்பொலிவு எவ்வாறு இருக்குமெனக் காட்டும் படம்

அபிவிருத்தி அடைந்த நாடுகளை எடுத்து நோக்கினால், குறிப்பாக எங்களில் பலருக்கும் ஏதோவொரு வகையில் நன்கு பரிச்சயமான பரீஸ், லண்டன், பார்சிலோனா போன்ற நகரங்களின் பெயர்களைச் சொன்னவுடனேயே எமக்கு முதலில் அவற்றின் பார்வைத்தோற்றமே எமது மனக் கண்ணிற்தோன்றும். அதுதான் அதன் தனியடையாளமாகும். அது அவர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது; அவற்றின் அழகான கட்டடவரிசைகளுடன் கூடிய, அதனடைய திட்டமிட்ட தனித்துவமே அவற்றை நோக்கி உலகத்தை ஈர்க்கிறது என்பதை நாம் பரிந்துகொள்ளவேண்டும்.

போர் சூழல் காரணமாக அங்கும் இங்கும் மூடப்பட்டு ஓட்டை ஒடிசாலாக எம்மிடம் ‘அபிவிருத்திக்காக’ ஒப்படைக்கப்பட்டு ஏறத்தாழ 11 வருடங்கள் கடந்தநிலையில் எம்மிடம் இன்று நகரத்தில் எஞ்சியுள்ளது,  தென்னிலங்கையைச் சோந்த பெரும் வர்த்தக நிறுவனங்கள் காவிவந்த ‘Alcobond Clading Sheet’ எனும் பெரியளவிலான வர்த்தகத்தட்டிகளான முகப்புக் கலாசாரம் மட்டுமே. இதன் மூலமாக தென்னிலங்கையில் உள்ள இன்னொரு நகரத்தைப் போல யாழ்ப்பாணத்தை மாற்றி அதன் தனித்துவத்தையும் – அடையாளத்தையும் அழிக்க உதவியுள்ளோம்.  அது யாழ்ப்பாண நகரத்தின் காட்சிப்புலத்தை ஒத்திசைவற்ற சிறியபெரிய வர்ண ஜால தட்டிகளின் நகராக்கிச் சீரளித்திருக்கிறது(படம் 02).

காலனிய காலத்தின் பிற்பகுதியிலும், அதற்கு பிற்பட்ட முதற் காலகட்டத்திலும் யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட கட்டடக்கலை, நகர அமைப்பு சம்பந்தமான விழிப்புணர்வும் மேலாண்மையும் அக்காலப்பகுதியில் நிறுவப்பட்ட யாழ் நூல்  நிலையம், யாழ்ப்பாண நகரமண்டபம், புகையிரத நிலையம் என்பனவற்றிலும், அதற்கு முற்பட்ட காலப்பகுதியில் கட்டப்பட்ட புகழ்  பூத்த  பல பாடசாலைகளின் கட்டடங்களிலும் காணப்படுகிறது . அதன் தொடர்ச்சியை இல்லாது ஆக்குவதைத்தான் இன்று நாம் முதன்மைப் போக்காக்கி உள்ளோம். இது எமது கல்வி முறையில் இயலாமையா அல்லது சிறுபான்மையினருக்கு எதிரான அரசியலின் வெற்றியா? லல்லது இரண்டும் தானா தெரியவில்லை.  மிஞ்சி இருக்கும் கட்டடங்களில் இன்று நாம் செய்யும் ஒவ்வாத இணைப்புக் கட்டடங்கள், முகப்புக்கள்  என்பன யாவும் யாழ்ப்பாணத்தின் அறிவுலக வங்குறோத்து நிலைமையைக் காட்டுகின்றது என்றால் அது மிகையாகாது.

ஒருபுறம் தென்னிலங்கையின்  காலிக்கோட்டைக்கு சுற்றுலா சென்று அவற்றின் கட்டடக்கலை அம்சங்களையும் நகர அமைப்பையும் வியந்து வரும் நாம் அதே கட்டடப்பாணியும் நகர அமைப்பும் உடைய எமது யாழ் கோட்டையைச் சுற்றிய குடியிருப்புகளில் எஞ்சியதையும் அழித்துக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசின் நேரடிக்கட்டுப்பாட்டுள் வரும் இச் செயற்பாடுகளோடு தொடர்புடைய திணைக்களங்களை விடுத்துப் பேசினாலும் யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் பங்கு இது தொடர்பாக யாது? ஒரு புறம் அரசின் நேரடித்தலையீட்டினால் காலிக்கோட்டை புனரமைக்கப்பட்டு யுனஸ்கோவின் அங்கீகாரம் பெற்ற பாரம்பரிய இடமாக விளங்கி பெருமையையும் அன்னியசெலாவணியை இலங்கைக்கு ஈட்டித்தருகிறது., இன்னொருபுறம் நமது அதே காலத்தினையும், கட்டடக்கலை மரபினையும் ஒத்த யாழ் நகரப்பகுதி அழிந்து கொண்டிருப்பதுக்கு யர் பொறுப்புக் கூறுவார்கள்?

காலனிய நகரம் மட்டுமன்றி யாழ்ப்பாணத்தின் கோயில் நகரமாக அறிஞர்களால் கருதப்படும்  வண்ணைச்சிவன் கோயில் சார்ந்த கட்டட அமைப்புகளும் காலத்தின் கோலத்தில் சிக்குண்டு பொலிவிழந்து காணப்படுவது இன்னொரு வருந்தத்தக்க நிலவரமாகும். காலனிய காலத்தில் மட்டுமன்றி அவற்றிற்கு முன்னேயே யாழ்ப்பாணத்தில் மிகச்சிறந்த நகர அமைப்பும் கட்டடக்கலைமரபும் காணப்பட்டதென இவற்றினை நேரடியாக பார்வையிட்ட ஆங்கில  காலனித்துவ ஆட்சியாளர்களின் குறிப்பேட்டில் இருந்து அறிய முடிகின்றது.

எனவே அவ்வாறான அழகிய தோற்றத்தை, அதன் பண்பாட்டு அடையாளங்களை, வரலாற்றுச் சிறப்பை கொண்டிருந்த யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலையை அதிலிருந்து மீட்டெடுத்து முன்னேற்றுவது தொடர்பான முன்னெடுப்புக்களைச் சரியான முறையில் செய்யாது இருப்பது ஏன்?  

அண்மையில் நகரபிதாவின் தலைமையில் வீதி அகலிப்புநடவடிக்கைக்கு வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பை நல்குவதாக தெரிவித்ததான செய்தி மகிழ்ச்சிக்குரியதாகும், எந்தவொரு நாட்டின் நகரத்தின் வளர்ச்சிக்கும் அவர்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. இச்சுமுகமான விழிப்புணர்வையும் பெருந்தன்மையையும் அடிப்படையாகக்கொண்டு யாழ் நகரத்தை மீட்டெடுக்க முடியும் என்பது எனது நம்பிக்கை(படம்-03).

இவ்வாறான முன்னேற்றங்களில் முன்னுதாரணமாக திகழும் நகரங்களையும், அவற்றின் கட்டமைப்புக்களையும் ஆராய்ந்து நகரத்திற்குரிய முதன்மைத் திட்டத்தினையும் விரிவான திட்ட வரைபுகளையும் அமைப்பது இன்றிமையாததாகும். அவ்வாறனதொரு செயற்திட்டத்தினையே நமது மாநகரசபையும் மேற்கொண்டிருக்கும்  அல்லது அதிற் தேவையான திருத்தங்களை மேற்கோள்ளும் என்பது எனது திடநம்பிக்கை. என்னையும், என்னைப்போன்ற பொது மக்களையும் எமது சமூகத் தலைவர்கள், அரசியலவாதிகள் ,நகரபிதா முதலியோர் கைவிட மாட்டார்கள் என்றே நம்புகிறேன். மாநகரசபைகளில்  இவ்வாறான திட்ட வரைபுகள் மக்களின் எளிதாகு பார்வைக்கு, பெரியளவில் அதிக கட்டுப்பாடற்ற  முறையில்  பார்வையிடக்கூடியதாக இருக்கவேண்டும். அத்துடன், அவர்கள் தங்களின் அது தொடர்பான கருத்துக்களை பதிவுசெய்யக்கூடியதாகவும் இருக்கவேண்டும்; அதுதான் ஜனநாயகமானதும் கூட.  நாம் பலர் அறிந்தது போல மேலை நாடுகளில் முதன்மை வரைபு, விரிவான வரைபுகள் என்பன மிக விரிவான வகையிலே செய்யப்பட்டு, அவை மக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளமை காணமுடியும் அதுமட்டுமின்றி  அவை இணையத்தின் மூலம் பார்வையிடக்கூடிய வசதியுடன் உள்ளமையும் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

குறிப்பாக தற்போது முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திக்குரிய திட்டமிடல் வரைபுகள் மீது எவ்வளவு தூரம் பொதுமக்கள் தரப்புக்களது கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன எனத் தெரியவில்லை. வெறும் கண்துடைப்பு மக்கள் கருத்துக் கணிப்பு கூட்டங்களை நான் குறிப்பிடவில்லை. பதிலாக உண்மையான சமூக மற்றும் நிபுணத்துவ ஊடாட்டங்களை மட்டுமே நான் இங்கே குறிப்பிடுகிறேன். யாழ் நகரம் மட்டும் அல்லாது யாழில் உள்ள மற்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரங்கள்- ஊர்களும் தமக்கான முதன்மை, விரவான திட்டமிடலைச்செய்து தமது விழ்புணர்வையும் பெருமையையும் நிலைநாட்ட வேண்டும். அதற்கு அத்திட்டங்கள் நேர்த்தியான முறையிலே துறைசார்ந்த அறிஞர்களால் வடிவமைக்கப்பட்டு.  பொது மக்களின் பார்வைக்குவைக்கப்பட்டு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட  வேண்டும்.

நமது நோக்கம் இன்னொரு லண்டனை உருவாக்குவதோ காலனிய கால கட்டடத்தை மீளகட்டுவதோ இல்லை மாறாக காலத்தின் தேவை கருதி எமக்கு தனித்துவமான தன்மைகளை பாதுகாத்து, அவற்றில் இருந்து எடுக்கப்பட வேண்டிய பண்புகளை உள்ளடக்கி, எமது தேவைகளுக்கு ஏற்புடைய எதிர்காலத்தையும் மனதில் கொண்டு வடிவமைக்கப்பட நகரம் ஆகும், இவற்றை செயற்படுத்த பெரும் பணச்செலவு தேவையென்பதைவிட அதற்கான மனநிலையும் மற்றவர்களையும் செவிமடுக்கும் பண்பும்தான் அடிப்படைத் தேவை.

உதாரணமாக 1950 பிற்பாடு அமைக்கபட்ட சத்திரத்சந்தியை அண்மித்த 3-4 மாடி கடைத்தொகுதிகளை உற்றுநோக்கில், அவற்றுக்கிடையிலலான முகப்புசார்ந்த சந்தமும், ஒப்புவமையும் அதேசமயத்தில் அவற்றின் தனித்தன்மையும்  முன்மாதிரிகையாக கொள்ள கூடியவை(படம்-01). இன்று அவை பாரிய விளம்பரபலகைகளினால் திரைசெய்யப்பட்டு ஏதோ ஒரு அவமானச்சின்னம் போல மூடிமறைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் தனது பண்டைய கட்டடங்களைப் பாதுகாத்து அவற்றை வரலாற்று பெட்டகமாக்கியுள்ளது.  ஆனால், அதே காலகட்டத்திற்குரிய எம்மத்தியிலுள்ள கட்டடங்களை நகரத்திற்கு உள்ளேயே அழித்தும், விளம்பரத் தட்டிகளாலும்  திரை போட்டு மறைத்துள்ளோம். இவற்றை சீர்செய்து , விளம்பரப்பலகைகளை அமைப்பதற்குரிய அளவுத்திட்டங்கள் முறைமைகளை வகுப்பதன் மூலமும் இவ் வகையான கட்டுமானங்களுக்கான வழிகாட்டும் கொள்கைமுறைகளை அமைத்து வழிநடாத்துவதன் மூலமும் ஒழுங்கற்றமுறையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிய கட்டுமான அலகுகளை அப்புறப்படுத்தி பாதசாரிகளுக்குரிய இடங்கள், வாகனதரிப்பிடங்கள் சரியான முறையில் உபயோகப்படுகின்றன என்பதை ஆளுமைசெய்வதன் மூலமும் இவற்றை சரிசெய்ய முயற்சிக்கலாம் எனபதுவும் எனது கருத்தாகும்.

 

 

 

  • Replies 145
  • Views 9.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரையில் கூறியது போல மிகவும் சிலருக்கே பழைய கட்டிடகலைகளை ஏன் பேணவேண்டும் என்ற தெளிவும் அவற்றை சீரமைத்து பாதுக்காக்கவேண்டும் என்ற எண்ணமும் உள்ளது என்பதை அங்கே அடிக்கடி போய் வருவோருக்கு தெரிந்திருக்கும்.. 

புதிய கட்டிடங்கள்/வீடுகள் சிலவற்றை பார்க்கும் பொழுது, இந்த சூழலிற்கு/ஊரின் அமைப்பிற்கு இவை சற்றும் பொருந்தாத ஒன்றாக இருப்பதை அவதானிக்கமுடியும்..

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த கட்டுரையில் கூறியது போல மிகவும் சிலருக்கே பழைய கட்டிடகலைகளை ஏன் பேணவேண்டும் என்ற தெளிவும் அவற்றை சீரமைத்து பாதுக்காக்கவேண்டும் என்ற எண்ணமும் உள்ளது என்பதை அங்கே அடிக்கடி போய் வருவோருக்கு தெரிந்திருக்கும்.. 

புதிய கட்டிடங்கள்/வீடுகள் சிலவற்றை பார்க்கும் பொழுது, இந்த சூழலிற்கு/ஊரின் அமைப்பிற்கு இவை சற்றும் பொருந்தாத ஒன்றாக இருப்பதை அவதானிக்கமுடியும்..

 

 

எனக்கு இதில் சொந்த அனுபவமும் உண்டு. 

கண்ட பழைய பஞ்சாங்கங்களையும், மூட நம்பிகையையும், பொய் வரலாறையும் கட்டி பிடித்து கொண்டு தொங்கும் நாம் ( அங்கே, இங்கே எங்கேயும்) எமது வாழும் வரலாறுகளான கட்டிங்களை இடித்து தள்ளி விட்டு, காங்கிரீட் சிறைகளை கட்டுவதிலே முன்னுக்கு நிற்போம்.

கொழும்பில் அண்மையில் ஒரு காலனிய காலத்து கட்டிடத்தை இடித்துள்ளார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப உள்ள யாழ் நகரத்தை அப்டியே விடடுவிட்டு வேறு இடத்தில்  புதிதாக நகர மத்தியை உருவாக்கினால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, சுவைப்பிரியன் said:

இப்ப உள்ள யாழ் நகரத்தை அப்டியே விடடுவிட்டு வேறு இடத்தில்  புதிதாக நகர மத்தியை உருவாக்கினால் நல்லது.

இந்த கருத்தினை யாழ் மேஜர் மணிவண்ணனுக்கு நேரடியாக சொல்லி இருக்கிறேன்.

குறைந்தது, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையினை மண்டை தீவுக்கு நகர்த்துவதன் மூலம், பெரும் இடத்தினை நகரின் மையத்தில் வேறு தேவைக்கு பயன்படுத்த முடியும்.

மேலும், வளம் மிக்க மண் கொண்ட பலாலியில் இருந்து, விமான நிலையத்தினை வறண்ட தீவுப் பகுதிக்கு நகர்த்தலாம்.

இவைகளை, ஒரு சுஜ அதிகாரம் கொண்ட அமைப்பினாலேயே நடத்த முடியும். இப்போதைய நிலைமையில் அல்ல. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நகர அழகுபடுத்தலின் ஒருபகுதியாக 

யாழ்பேரூந்து நிலையத்தை முதலில் வேறு எங்காவது மாற்றவேண்டும்,  மக்கள் நெரிசலான ஒரு நகரத்தின் மத்தியில் சிரிபி பஸ்சுகள் ஆக்களில் உரசியவாறே செல்கிறது. ஆட்டோக்கள், வாடகை வாகனங்கள் தரிப்பிடத்தையும் மாற்ற வழி இருந்தால் சிறப்பு, முற்றவெளிக்கு மாற்றி இடத்தை நிரப்புங்கள், இல்லாவிட்டால் நயினாதீவு விகாரைக்கு போய் வரும் சிங்களவர்களின் இடைதங்கல் என்று சொல்லி  என்றைக்காவது அங்கே ஒரு பெரிய விகாரை கட்டினாலும் கட்டுவாங்கள்.

அதுக்கு அடுத்ததா கட்டாக்காலி மாடுகள், நாய்களை அப்புற படுத்த நடவடிக்கை எடுங்கள்.

உலகம் எங்கேயோ போய்விட்டது நமது நகர மத்தியில் மாடுகள் நாய்கள் இன்றும் குழந்தை குட்டியுடன் படுத்திருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, சுவைப்பிரியன் said:

இப்ப உள்ள யாழ் நகரத்தை அப்டியே விடடுவிட்டு வேறு இடத்தில்  புதிதாக நகர மத்தியை உருவாக்கினால் நல்லது.

இதை முறைப்படி town planning அனுபவம் உள்ளவர்கள் அணுக வேண்டும் என நினைக்கிறேன். 

இல்லாவிடில் கிளிநொச்சி பஸ் நிலையம், மட்டகளப்பு மாவட்ட மையத்தை கோட்டைக்கு வெளியே கொண்டு போதல் போல கோமாளி கூத்து ஆகிவிடும்.

இங்கே பல திரிகளில் சொல்லபட்டது போல, யாழின் இயற்கை சமநிலை என்பது சிக்கலானது. எந்த திட்டமும் சூழலியலை பாதிக்கா வண்ணம் இருக்க வேண்டும்.

ஆகவே இன்னொரு நகர மத்தி யாழுக்கு தேவையா?

அதை விட, சாவக்சேரி, சுன்னாகம்/மானிப்பாய், பருத்திதுறை போன்ற பட்டினங்களை சட்டிலைட் நகரங்களாக தரமுயர்த்தினால், எல்லாவறுக்கும் டவுணுக்கு போகும் நிலை மாறக்கூடும்.

இதை அதிக செலவில்லாமல் செய்யலாம். இப்போதே சில மருத்துவங்களுக்கு போதனா வைத்தியசாலையை விட மந்திகைக்கு போகும் நிலை உண்டு. 

யாழ்பாணம் ஒன்றும் டுபாய் அல்ல, அதன் மக்கள் தொகையும், தேவைகளும் சிறியன.

பொரிஸ் ஜான்சன் போல், தேம்ஸ் நதியருகில் ஏர்ப்போர்ட், மகிந்தவை போல் ஆளிள்ளா காட்டில் விமானநிலையம், துறைமுகம் என்று vanity projects ஐ உருவாக்கி அதை white elephants ஆக மக்கள் தலையில் கட்டாமல், இருக்கும் வழங்களை உச்ச பாவனைக்கு உட்படுத்தி, வளங்களை பரவலாக்குவதே (decentralize) நல்லது என்பது என் அபிப்பிராயம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, valavan said:

நகர அழகுபடுத்தலின் ஒருபகுதியாக 

யாழ்பேரூந்து நிலையத்தை முதலில் வேறு எங்காவது மாற்றவேண்டும்,  மக்கள் நெரிசலான ஒரு நகரத்தின் மத்தியில் சிரிபி பஸ்சுகள் ஆக்களில் உரசியவாறே செல்கிறது. ஆட்டோக்கள், வாடகை வாகனங்கள் தரிப்பிடத்தையும் மாற்ற வழி இருந்தால் சிறப்பு, முற்றவெளிக்கு மாற்றி இடத்தை நிரப்புங்கள், இல்லாவிட்டால் நயினாதீவு விகாரைக்கு போய் வரும் சிங்களவர்களின் இடைதங்கல் என்று சொல்லி  என்றைக்காவது அங்கே ஒரு பெரிய விகாரை கட்டினாலும் கட்டுவாங்கள்.

அதுக்கு அடுத்ததா கட்டாக்காலி மாடுகள், நாய்களை அப்புற படுத்த நடவடிக்கை எடுங்கள்.

உலகம் எங்கேயோ போய்விட்டது நமது நகர மத்தியில் மாடுகள் நாய்கள் இன்றும் குழந்தை குட்டியுடன் படுத்திருக்கிறது

வடிவாக தெரியவில்லை இப்போ வெளி மாவட்ட  பஸ்நிலையம் (அரச, தனியார்) கோட்டையடிக்கு மாறிவிட்டது?

ஆஸ்பத்திரி வீதி நிலையம் உள்ளூர் சீடிபி பஸ்சுக்கு மட்டும் என நினக்கிறேன்.

உள்ளூர் தனியார் நிலையம் எங்கே என்று தெரியவில்லை.

@ஏராளன் விளக்கம் பிளீஸ்.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Nathamuni said:

இந்த கருத்தினை யாழ் மேஜர் மணிவண்ணனுக்கு நேரடியாக சொல்லி இருக்கிறேன்.

குறைந்தது, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையினை மண்டை தீவுக்கு நகர்த்துவதன் மூலம், பெரும் இடத்தினை நகரின் மையத்தில் வேறு தேவைக்கு பயன்படுத்த முடியும்.

மேலும், வளம் மிக்க மண் கொண்ட பலாலியில் இருந்து, விமான நிலையத்தினை வறண்ட தீவுப் பகுதிக்கு நகர்த்தலாம்.

இவைகளை, ஒரு சுஜ அதிகாரம் கொண்ட அமைப்பினாலேயே நடத்த முடியும். இப்போதைய நிலைமையில் அல்ல. 

எமஜென்ஸி என்றால் ஆட்கள் எப்படி மண்டைதீவுக்கு போறது? 
 

20 minutes ago, goshan_che said:

வடிவாக தெரியவில்லை இப்போ வெளி மாவட்ட  பஸ்நிலையம் (அரச, தனியார்) கோட்டையடிக்கு மாறிவிட்டது?

ஆஸ்பத்திரி வீதி நிலையம் உள்ளூர் சீடிபி பஸ்சுக்கு மட்டும் என நினக்கிறேன்.

உள்ளூர் தனியார் நிலையம் எங்கே என்று தெரியவில்லை.

@ஏராளன் விளக்கம் பிளீஸ்.

இல்லை இரண்டும் ஆஸ்பத்திரிக்கு பின்னால் தான் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

இல்லை இரண்டும் ஆஸ்பத்திரிக்கு பின்னால் தான் இருக்கு

🤔 நிச்சயமா பிரைவேட் கொழும்பு பஸ், மட்டகளப்பு பஸ் எல்லாம் முத்தவெளியடிக்கு மாறீட்டு கனகாலமாய்.

இரெண்டு இடத்தில் இருந்தும் பஸ்சில் போய் முத்தவெளியில் இறங்கியுள்ளேன்.

அண்மையில் யாழில்தானே ஒரு திரி ஓடியது - சிடிபிக்குக்கும் வெளி மாவட்ட நிலையம் கோட்டை அருகே கட்டபட்டதாக?

இன்னொரு விடயம் - போர் சூழலுக்கு முன்னும் கோட்டை அருகே பஸ் நிலையம் இருந்து பின் சண்டையால் இடம்மாறியது என நினைக்கிறேன்.

புலிகள் காலத்தில் முத்திரை சந்தியடியும் பஸ் நிலையாமாக இருந்தது.

 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

🤔 நிச்சயமா பிரைவேட் கொழும்பு பஸ், மட்டகளப்பு பஸ் எல்லாம் முத்தவெளியடிக்கு மாறீட்டு கனகாலமாய்.

இரெண்டு இடத்தில் இருந்தும் பஸ்சில் போய் முத்தவெளியில் இறங்கியுள்ளேன்.

அண்மையில் யாழில்தானே ஒரு திரி ஓடியது - சிடிபிக்குக்கும் வெளி மாவட்ட நிலையம் கோட்டை அருகே கட்டபட்டதாக?

இன்னொரு விடயம் - போர் சூழலுக்கு முன்னும் கோட்டை அருகே பஸ் நிலையம் இருந்து பின் சண்டையால் இடம்மாறியது என நினைக்கிறேன்.

புலிகள் காலத்தில் முத்திரை சந்தியடியும் பஸ் நிலையாமாக இருந்தது.

 

நான் 2019 தில் போயிருந்த போது எல்லா பேரூந்துகளையும் ஆஸ்பத்திக்கு பின்னால் தான் கண்ட நினைவு .

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ரதி said:

எமஜென்ஸி என்றால் ஆட்கள் எப்படி மண்டைதீவுக்கு போறது?

மண்டைதீவு இரண்டு, மூன்று மைல்கள் தானே....  பண்ணை வீதி வழியே.... சுத்தித் தானே போகவேண்டும்.

ஒரு ரோட்டை, கடலுக்கு மேலே, பண்ணைவீதிக்கு சமாந்தரமாக கொழும்புத்துறை, குருநகர் பகுதியில் இருந்து மண்டைதீவுக்கு நேரா போட்டால், விரைவாக போகலாம்.

https://www.google.co.uk/maps/place/Mandaitivu/@9.6068607,80.0068925,11.75z/data=!4m5!3m4!1s0x3afe50e06d182167:0xbf5fc858d216c300!8m2!3d9.6165391!4d79.9919995?hl=en-GB

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

🤔 நிச்சயமா பிரைவேட் கொழும்பு பஸ், மட்டகளப்பு பஸ் எல்லாம் முத்தவெளியடிக்கு மாறீட்டு கனகாலமாய்.

இரெண்டு இடத்தில் இருந்தும் பஸ்சில் போய் முத்தவெளியில் இறங்கியுள்ளேன்.

அண்மையில் யாழில்தானே ஒரு திரி ஓடியது - சிடிபிக்குக்கும் வெளி மாவட்ட நிலையம் கோட்டை அருகே கட்டபட்டதாக?

இன்னொரு விடயம் - போர் சூழலுக்கு முன்னும் கோட்டை அருகே பஸ் நிலையம் இருந்து பின் சண்டையால் இடம்மாறியது என நினைக்கிறேன்.

புலிகள் காலத்தில் முத்திரை சந்தியடியும் பஸ் நிலையாமாக இருந்தது.

 

இவை 4 மாதத்தின் முன்னர் எடுக்கப்பட்ட காணொலி என்று நினைக்கிறேன் கோசான்.

 

Edited by valavan

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

🤔 நிச்சயமா பிரைவேட் கொழும்பு பஸ், மட்டகளப்பு பஸ் எல்லாம் முத்தவெளியடிக்கு மாறீட்டு கனகாலமாய்.

இரெண்டு இடத்தில் இருந்தும் பஸ்சில் போய் முத்தவெளியில் இறங்கியுள்ளேன்.

அண்மையில் யாழில்தானே ஒரு திரி ஓடியது - சிடிபிக்குக்கும் வெளி மாவட்ட நிலையம் கோட்டை அருகே கட்டபட்டதாக?

இன்னொரு விடயம் - போர் சூழலுக்கு முன்னும் கோட்டை அருகே பஸ் நிலையம் இருந்து பின் சண்டையால் இடம்மாறியது என நினைக்கிறேன்.

புலிகள் காலத்தில் முத்திரை சந்தியடியும் பஸ் நிலையாமாக இருந்தது.

 

நீங்கள் சொன்னது சரி ...வெளி  மாவட்ட பேருந்துகள் முத்த வெளியில் இருந்து தான் போகுது ...  தவறுக்கு மன்னிக்கவும் 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

நேரா,  ஒரு ரோட்டை, கடலுக்கு மேலே, பண்ணைவீதிக்கு சமாந்தரமாக கொழும்புத்துறை, குருநகர் பகுதிில் இருந்து போட்டால், விரைவாக போகலாம்

கடலுக்கு மேலால ரோட்டு விட்டால் நல்லாதானிருக்கும் நாதம்ஸ்  ஆனா ரோட்டு விட காசு?😜 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, valavan said:

கடலுக்கு மேலால ரோட்டு விட்டால் நல்லாதானிருக்கும் நாதம்ஸ்  ஆனா ரோட்டு விட காசு?😜 

ரோட்டு போடுவது இலகுவானது.... இரண்டு வழி: நாம காசு சேர்த்து போடலாம்... 

அடுத்தது: நீங்களே போடுங்கள், 25 வருசத்துக்கு, toll போட்டு வசூலிக்கலாம் என்று சொல்லி விட்டால், உலகின் பல நிறுவனங்கள் முண்டி அடிக்கும்.

பிரச்சனை இல்லை... ஆனால்... ஒரு தீர்வு வரட்டுமே முதலில்.

  • கருத்துக்கள உறவுகள்

மணிக்கு மண்டை விறைச்சிருக்கும் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குறைவான மக்கள் தொகையுடன், எந்த வளமும் இல்லாத, குடிநீர் வளம் கூட இல்லாத, நீங்கள் நம்மை விட்டு கழண்டு கொண்டால் போதும் என்று அனுப்பி வைக்கப்பட்ட, சிங்கப்பூர் இன்று உலகின் முன்னனி நாடு.

ஒரு சிறந்த தலைவன், அவனது கனவு அதனை மெய்ப்பித்தது.

இன்று உள்ள யாழ் நிலமையுடன் சிந்திக்காமல், எதிர்கால தேவைகள், கனவுகள் உடன் சிந்தித்தால், யாழும் சிறப்பான நகராக உருவாகும்.

ஒருகாலத்தில், தென் இந்தியாவில் இருந்தும், தென் இலங்கையில் இருந்தும் கல்விக்காக யாழுக்கு மாணவர்கள் வந்து படித்து போனார்கள்.

இந்தியா என்னும் மிகப் பெரிய சந்தையின், இலங்கைக்கான திறவுகோல் அந்த நாட்டின் ஒரு மொழியை பேசும் யாழ்ப்பாணம். இது சிங்களத்துக்கு புரிந்திருந்தால், மத்தள, பலாலிக்கு வந்திருக்கும்.

சிங்களவர்கள் உள்பட, புகலிட வாழ் இலங்கையர்கள் யாவருக்கும், வீச்சு ரொட்டி, frozen தேங்காய்ப்பூ, வருவது, கேரளாவில் இருந்து. பிரின்ஸ் நிறுவன லண்டன் முகவர், சங்கர் சொல்கிறார், 41 கொண்டைனர், ரொட்டி மட்டும் தனக்கு வருகிறது என்று. யாழ்ப்பாண மிளகாய் தூள், ஆணைக்கோட்டை நல்லெண்ணெய் வருவது யாழ்ப்பாணத்தில் இருந்து அல்ல, தமிழகத்தில் இருந்து.

தமிழக சினிமாவில் பெரும் முதலீடு செய்யும், லைக்கா முதலாளியை, அணுகி, இங்கே வடக்கு, கிழக்கில் முதலிட்டு, அங்கிருந்து கலைஞர்களை அழைத்து வாருங்கள். வரி விலக்கு தருகிறோம் என்று சொல்ல சிங்களத்துக்கு 'விளப்பம்' இல்லையா அல்லது, கடன் வாங்கி ஓட்டினால் போதும் என்று நினைக்கிறதா?

வியாபாரத்தை தென் இந்தியாவுக்கு கொடுத்து விட்டு, பங்களாதேஷிடம் $250மில்லியன் கடன் வாங்குகிறது இலங்கை இனவாத அரசு. 

லண்டனுக்கு வந்த விக்கியிடம் கூட சொன்னேன்.

அய்யா, அரசியல் இருக்கட்டும், முதல்வராக, ரணில் - மைத்திரி அரசிடம் பேசி, கட்டுநாயக்க free trade zone போல ஒன்றினை வடக்கே அமைக்க ஆவண செய்யுங்கள் என்று....

வேலை வாய்ப்பு கிடைக்கும். அதே போல, ஐரோப்பிய தூதர்களிடம் பேசினால், gsp+ வடக்கு, கிழக்குக்கு என்று கூடுதல் % பெற முடியும் என்றும் சொன்னேன்.

பிரயோசனம் இல்லாமல் போனது. விக்கியர் கதை மட்டுமே.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

இவை 4 மாதத்தின் முன்னர் எடுக்கப்பட்ட காணொலி என்று நினைக்கிறேன் கோசான்.

 

 

58 minutes ago, ரதி said:

நீங்கள் சொன்னது சரி ...வெளி  மாவட்ட பேருந்துகள் முத்த வெளியில் இருந்து தான் போகுது ...  தவறுக்கு மன்னிக்கவும் 

வல்லவனின் வீடியோவை பார்த்து எனக்கும் குழப்பமாய்தான் இருக்கு. சிடிபி, தனியார் ரெண்டும் வடமாகாணத்தில் ஓடுவது ?ஆஸ்பத்திரி ரோட்டிலும் நெடுத்தூர சிடிபி, தனியார் முற்ற வெளியில் இருந்தும் போகுதோ?

ஏராளன் தான் கிளியர் பண்ணோணும், ஆனால் நான் கிழக்கு, மேற்கில் இருந்து போய் இறங்குவது முற்றவெளியடியில்தான்.

 

விக்கிக்கும் விறைச்சிருக்கும். 🤣.   

  • கருத்துக்கள உறவுகள்

தளத்தின் கண்ணியம் காக்க, தேவையில்லா சீண்டுதல்களை கண்டுகொள்வதில்லை, பதிலும் தரப்போவதில்லை என்று சொல்லிவிட்டேன்.

அதனை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் எடுத்தால் சிறப்பு. மிக்க நன்றி.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

தளத்தின் கண்ணியம் காக்க, தேவையில்லா சீண்டுதல்களை கண்டுகொள்வதில்லை, பதிலும் தரப்போவதில்லை என்று சொல்லிவிட்டேன்.

அதனை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் எடுத்தால் சிறப்பு. மிக்க நன்றி.

இதில் சீண்டல் ஏதும் இல்லை நாதம்.  

யாழ்பாணத்தை கூகிள் மேப்பில் பார்த்து மண்டைதீவுக்கும் குருநகருக்கும் பாலம் போடுவோம் என்று எழுதினால் - அந்த ஊரவர்களுக்கு அது நகைப்பாகவே தெரியும். 

கேட்டால் toll road போட்டு வெள்ளைகாரனை காசு பார்க்க கூப்பிட்டால் ஓடி வருவான் என்கிறீகள்.

குருநகருக்கும், மண்டைதீவுக்குமான பாலத்துக்கு எத்தனை மில்லியன் பவுண் செலவாகும்?

இந்த பாதையில் போகும் C50, C90, கருவாட்டு வான், கொஞ்சம் கார், ஆஸ்பத்திரி வந்தாலும் அவ்வளவுதான் - அதை வைத்து toll road போட்டவன் எப்போ முதலை திருப்பி எடுப்பது ?

நீங்கள் சொல்லும் பாலத்தில் 1/20 மடங்கு கூட இல்லாத சங்குபிட்டி பாலம் - பராமரிப்பு இன்றி தள்ளாடுகிறது. உங்கள் பாலத்தின் பராமரிப்பு செலவை யார் ஏற்பார்கள்? 

மண்டைதீவில் ஒரு குடம் தண்ணீர் என்ன விலை தெரியுமா? 

ஒரு போதனா வைத்தியசாலையை அங்கே கட்டி விட்டு தண்ணீர் எடுக்கும் செலவில் மூன்று வைத்தியசாலை கட்டலாம்.

வெள்ளையர்கள் பலாலியை தேரும் முன் யாழில் எத்தனை இடங்களை, என்ன இடங்களை எல்லாம் ஆராய்ந்து, ஏன் பலாலியை தேர்ந்தார்கள் என தெரியுமா?

ஏன் தீவு பகுதியில் பல்கலை கழகம், தொழில்சாலைகள் ஏதுவும் இல்லை? என்ன காரணமாகிருக்கும்.

இருக்கும் விமான நிலையத்தை மாற்றி பெரும் செலவில் புதிய விமான நிலையம் கட்டி விட்டு - பலாலியில் கத்தரிக்காய் தோட்டம் போட்டால் - கத்தரிக்காய் வித்து, புதிய விமான நிலையம் அமைக்க செய்த செலவை ஈடு கட்ட எவ்வளவு ஆயிரம் ஆண்டுகள் எடுக்கும்?

கேட்டால், ரெடிமேட் ஆன்ஸர் - யூதர், இஸ்ரேல் அல்லது சிங்கப்பூர்🤦‍♂️.

சிங்கபூருக்கு பக்கத்தில், மிக அருகில் எத்தனை இந்தோனேசியா தீவுகள் உள்ளன என யாழ்பாணத்தை பார்த்த அதே கூகிள் மேப்பில் தேடிப்பாருங்கள். அவை எல்லாம் சிங்கபூருக்கு அருகே இருந்தும் ஏன் சிங்கபூர் போல் ஆகவில்லை?

இப்படி எல்லாம் நீங்கள் உண்மையிலேயே சொல்லி இருந்தால் மேயர் (அவர் எந்த படையில் மேஜர்?) மணிக்கும், விக்கிக்கும் மண்டை விறைக்காதா?

அதைதான் சொன்னேன்.

சசி சொன்னதன் பின் உங்களின் சில சுஜ (சுய) ஆக்கங்களை கடந்துதான் போனேன். 

ஆனால் இலங்கையின் வடக்கு கிழக்கு பற்றிய அறிவு, வாழ்ந்த அனுபவம் துளியும் இன்றி நீங்கள் இப்படி எழுதுதும் போது - மேலே சொன்ன விளக்கத்தை எழுத நினைத்தாலும், வேண்டாம் என நினைத்து ஒரு வரியில் ஹாஸ்யமாக அதை கடக்கவே நினைத்தேன்.

இதோ நீங்களாகவே கேட்டு நீண்ட பதிலை பெற்றுள்ளீர்கள்.

இது நிச்சயம் சீண்டல் இல்லை.

ஆனால் யாழ் களத்தில் வந்து மண்டை தீவில் ஆஸ்பத்திரி கட்டலாம், குருநகரில் இருந்து டோல்ரோட் போட்டு காசும் பார்க்கலாம் என எழுதினால் - கேள்வி வருவது தவிர்க முடியாது.

இன்னொரு உறவும் இதை கேட்டார் - அவருக்கான உங்கள் பதிலை பார்த்ததும் இது வேலைக்காகாது என கிளம்பிவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் சொல்கிறேன், தேவை இல்லாத சீண்டுதல் வேண்டாம், தவிர்க்க விரும்புகிறேன். நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும், மீண்டும் சொல்கிறேன் நாதம் - இது சீண்டல் இல்லை.

ஒரு பொது தளத்தில் பதியப்பட்ட கருத்துக்கான என் பதில் கருத்து. 

இல்லை சீண்டல் என்றால் தாராளமாக நிர்வாகத்திடம் முறையிடலாம். அவர்கள் முடிவுக்கு கட்டுப்படுவேன்.

6 minutes ago, Nathamuni said:

மீண்டும் சொல்கிறேன், தேவை இல்லாத சீண்டுதல் வேண்டாம், தவிர்க்க விரும்புகிறேன். நன்றி. 

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதனை தீவிரமாக எடுத்து பதில் அளித்தால், என்னை தான் 'புரியாத முட்டாள்' என்பார்கள்.

நிலைமை புரிந்து, அனுதாபத்துடன் நகர்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Nathamuni said:

நான் இதனை தீவிரமாக எடுத்து பதில் அளித்தால், என்னை தான் 'புரியாத முட்டாள்' என்பார்கள்.

நிலைமை புரிந்து, அனுதாபத்துடன் நகர்கிறேன்.

நீங்கள் அனுதாபத்துடன் நகரலாம், பரிதாபத்துடன் பதறலாம். 

அது எப்போதும் உங்கள் தெரிவு.

ஆனால் ஒரு பொதுதளத்தில் கருத்து என்று எழுதினால், பதில் என்று வரத்தான் செய்யும்.  

ஏதாவது விதிமீறல் இருந்தால் நிர்வாகத்தை அணுகலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.