Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைது செய்யப்பட்ட இளம் எழுத்தாளர் ; கண்ணீருடன் தொடரும் பெற்றோரின் விடுதலைக்கான பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகளால் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும் இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் யுத்தத்திற்கு முன்னரும் பின்னரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தமிழ் இளைஞர்கள் ஏராளம் . இவ்வாறு சிறையில் உள்ள இளைஞர்களின் விடுதலைக்காக இடம் பெறும் போராட்டம் தாராளம்.

தமிழ் இளைஞர்கள் மாத்திரமின்றி எல்லோராலும் அறியப்பட்ட பல முக்கிய முஸ்லிம் அரசியல் வாதிகளும் அண்மைகாலமாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவை எல்லாவற்றையும் கடந்து மன்னார் முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறை பொற்கேணி பகுதியில் 'நவரசம்' எனும் கவிதை நூல் மூலம் தீவிரவாத செயற்பாட்டை ஊக்குவித்தது எனும் சந்தேகத்தின் பெயரில்  கடந்த 2020 மே மாதம் 16 கைது செய்யப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கு மேலாக  சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனை விடுதலை செய்யுமாறு கோரிக்கை வைக்கின்றனர் அஹ்னப்பின் பெற்றோர்.

27 வயதான அஹ்னப் பேருவளை ஜாமியா நளீமியா கலைப்பீடத்தில் கலை துறை சார்ந்த பாடம் கற்றும் மதுரங்கு தனியார் பாடசாலையில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிய நிலையில் 2017 ஆம் ஆண்டு நவரசம் எனும் கவிதை நூலை வெளியிட்டார்.

IMG_3504.jpeg

கவிஞராக, சிறந்த மேடைப் பேச்சாளராக, எழுத்தாளராக பல பரிமாணங்களில் சிறந்து விளங்கிய அஹ்னாப் நவரசம் நூலின் ஊடாக ஒன்பது உணர்வுகளை மையப்படுத்தியும் 45 கவிதைகள் எழுதப்பட்ட நிலையில் அதில் “உருவாக்கு” என  எழுதப்பட்ட ஒரு கவிதையை மையப்படுத்தி ஏற்பட்ட சர்ச்சை காரணமாக பயங்கரவாத தடுப்பு பிரிவினால் அஹ்னாப் கைது செய்யப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கு மேலாக மெஹசீன் CRP சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

நவரசம் கவிதை தொகுப்பில் தீவிர வாதத்திற்கு எதிரான பல கவிதைகள் எழுதப்பட்ட நிலையில் ISIS தீவிரவாத அமைப்பை கடுமையாக சாடியுள்ளார். அஹ்னாப் தீவிரவாதத்திற்கு எதிராக இருந்த தனது மகனை காரணம் இன்றி கைது செய்துள்ளதாக அஹனா பின் பெற்றோர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது தொடர்பாக ஐரோப்பிய பாராளுமன்றம், இலங்கை பாராளுமன்ற உட்பட பல இடங்களில் பேசப்பட்டாலும் இதுவரை நடைமுறையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சிறையில் தனது இளமையை அஹ்னாப் தொலைப்பதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக தன்னுடைய பிள்ளையை சந்திக்க கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் வாரம் ஒரு முறை 2 நிமிடமே தொலைபேசியில் பேச வாய்ப்பு கிடைப்பதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

எழுத்தாளரான தனது மகன் எந்த வித தீவிரவாத செயற்பாட்டில் அல்லது தீவிரவாதத்தை ஆதரிக்கும் செயற்பாட்டிலோ நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபடவில்லை எனவும் எனவே தனது மகன் மாத்திரம் இல்லாமல் அநியாயமாக பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அனைவரையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே நேரம் அஹ்னாப் தொடர்பான வழக்கில் தங்களுக்காக தங்கள் பக்கம் செயற்படும் (ACDFAE) கலை மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை குழு மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணிகள் மற்றும் பொது அமைப்புகள் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு தொடர்ந்து தமது பிள்ளையின் விடுதலைக்காக குரல் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்

இந்த நிலையில் இம் மாதம் ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாகவும் அஹ்னாப் பின் கைது தொடர்பாகவும் WORKING GROUP ON ARBITRARY DETENTION குழுவினர் ஜெனிவா மனித உரிமை கவுன்சிலுக்கு   கடிதம் அனுப்பி   வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1__2_.jpg

2__2_.jpg

3.jpg

4__2_.jpg

5__2_.jpg

7__2_.jpg

 

 

 

 

 

 

 
  • கருத்துக்கள உறவுகள்

சபிக்கப்பட்ட இலங்கை தீவில், முதலில் சிங்களவரும், பின்னர் தமிழரும் அனுபவித்ததை, இப்போது தமிழருடன், அதிகமாக இஸ்லாமியரும் அனுபவிக்கின்றனர்.

இஸ்லாமியர் பிரச்சணை, ஈஸ்டர் மற்றும் அண்மைய நீயுசீலாந்து காரணமாக, உலகம் கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் “உருவாக்கு” என்ற கவிதையை வாசித்து விட்டுத்தான் கருத்து சொல்ல முடியும்.

கவிதை, இன்னொரு கலிபைட்டை இலங்கையில் உருவாக்கு, முகத்தை மூடாவிட்டால் கல்லால் அடிக்கும் நிலையை உருவாக்கு என்று இருந்தால் - உள்ளே பிடிச்சு போடத்தான் வேண்டும்.

மேற்கு நாடுகளில் கூட glorifying terrorism ஒரு குற்றம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதச்சட்டம் கொண்டு வரப்பட்டு

கிட்டத்தட்ட 40 வருடங்களாகின்றன

இதுவரை அமைச்சர்களாக அரசின்  பங்காளிகளாக  இருந்த இசுலாமிய  சகோதரர்கள்

இதற்கு எதிராக  எந்த நேரத்திலும்  குரல் கொடுக்கவில்லை

ஆனால்  தமிழர்கள் இது உங்களையும்  ஏன்  சிங்களவரையும் விடாது என்று அடிக்கடி  சொல்லியே  வந்தோம்

இன்று குத்துது  குடையுது  என்றால்......???😪

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் அந்தக் கவிதை....

 

 

 

நீயும் இறந்து பிறரையும் இறக்கச்

செய்த உனக்கு இறைவன் பெயர் எதற்கு?

நீயும் சிதறி பிறரையும் சிதறடித்த

உனக்கு இஸ்லாத்தின் பெயர் எதற்கு?

நீயும் செத்து பிறரையும் சாகடித்த

உனக்கு நபிகளார் பெயர் எதற்கு?

உன்னையும் கொன்;று பிறரையும் கொன்ற

உனக்கு திருமறை எதற்கு?

ஏதும் அறியா ஓரப்பாவி உயிரை

கொல்வது ஒட்டு மொத்த மனிதத்தையும்

கொல்வதென்று திருமறை சொன்னதை

நீ கற்கவில்லையோ?

 

பத்தாண்டாய் நிம்மதிப் பெருமுச்சு விட்டோம்

புத்தாண்டையும் பயந்து சாகாமல்

கொண்டாடி மகிழ்ந்தோம் – நீ வந்து

நிமிடத்தில் உருக்குலைத்தாயே!

இலங்கைத் தாய் மீண்டும் விம்மி

அழுகிறாள் – நீயோ நிலையான

சுவனம் கிடைக்கும் என்று உன்னுயிரை

மாய்த்து எம்மனைவரையும் உயிரோடு

நெருப்பிலேற்றிநாயே!

உனக்கு சாவதில்தான் சந்தோசம்

என்றால் எங்கேயாவது மூலையில்

விழுந்து செத்திருக்கலாமே

ஏன் எம்மை இனி தினம் தினம்

செத்துப் பிழைக்க வைத்தாயே!

தற்கொலையே தவறென்று

சொன்ன இஸ்லாத்தின் பெயரால்

நீ தற்கொலையும் செய்து கொலையும்

செய்த உனக்கும் இஸ்லாத்திற்கும்

தொடர்பு ஏதடா? தொடர்பு ஏனடா?

குருதி வெள்ளத்தில் துவண்டு

கிடக்கும் உடற் சிதிலங்களில்

நீ என்ன வெற்றி கண்டாய்?

மூத்தோரையும், சிறாரையும்

யுத்தமென்றாலும் வதைப்பது

தவறாகும் எனும் அண்ணல்

வாக்கை தூக்கி வீசினாயே!

பிறமதக் கடவுளரை தூற்றாதே

துற்றினால் அவர்கள் உன்னிறைவனை

தூநீற்றுவர் எனச்சொன்ன வேளை நீ

தேவாலயங்களின் உள்ளே வெடித்தாயே!

யாவரும் ஆனந்தமாய் கொண்டாடும்

அந்தப் பொழுதிலா இந்தக் காரியம்

செய்தாய் – நீ நிச்சயம் அனுபவிப்பாய்

அன்று நான் உனக்கெதிராய் சாட்சி யளிப்பேன்.

அன்னையும் மகளும்,

தாத்தாவும் பேரனும்

ஆள் அடையாளம்

தெரியாமல் செய்து – நீயும்

அடையாளம் இழந்து

இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும்

குற்றவாளி என அடையாளப் படுத்திநாயே!

இனி தினம் இங்கு சாவே!

எம்மை சாகாடமல் சாகடித்த

என் தோழர்களை சிதறடித்த

உமக்கு என் சாபங்கள்

கோடி கொடு நெருப்பாய்வரும்

ஏசு உயிர்த்த ஞாயிறு என்றே

உலகம் போற்றும் – புண்ணிய

விழாக் கோலம் பூணும் நாளில்

எனக்க ஏதும் நம்பிக்கை இல்லை

ஆனால் அருமந்த உயிர்கள்

இருநூறுபேர் உயிர் நீத்த நாள்

என்று நான் நம்புவேன் – காரணம்

நம் இனத்தின் சில நரிகள்

இழைத்த இழி செயலால்

உயிர் நீத்த உறவுகளுக்கு

என் கண்ணீர் திவலைகள்.

13 hours ago, goshan_che said:

எதுக்கும் “உருவாக்கு” என்ற கவிதையை வாசித்து விட்டுத்தான் கருத்து சொல்ல முடியும்.

கவிதை, இன்னொரு கலிபைட்டை இலங்கையில் உருவாக்கு, முகத்தை மூடாவிட்டால் கல்லால் அடிக்கும் நிலையை உருவாக்கு என்று இருந்தால் - உள்ளே பிடிச்சு போடத்தான் வேண்டும்.

மேற்கு நாடுகளில் கூட glorifying terrorism ஒரு குற்றம்தான்.

 

 

 

இதுதான் அந்தக் கவிதை....

 

 

 

நீயும் இறந்து பிறரையும் இறக்கச்

செய்த உனக்கு இறைவன் பெயர் எதற்கு?

நீயும் சிதறி பிறரையும் சிதறடித்த

உனக்கு இஸ்லாத்தின் பெயர் எதற்கு?

நீயும் செத்து பிறரையும் சாகடித்த

உனக்கு நபிகளார் பெயர் எதற்கு?

உன்னையும் கொன்;று பிறரையும் கொன்ற

உனக்கு திருமறை எதற்கு?

ஏதும் அறியா ஓரப்பாவி உயிரை

கொல்வது ஒட்டு மொத்த மனிதத்தையும்

கொல்வதென்று திருமறை சொன்னதை

நீ கற்கவில்லையோ?

 

பத்தாண்டாய் நிம்மதிப் பெருமுச்சு விட்டோம்

புத்தாண்டையும் பயந்து சாகாமல்

கொண்டாடி மகிழ்ந்தோம் – நீ வந்து

நிமிடத்தில் உருக்குலைத்தாயே!

இலங்கைத் தாய் மீண்டும் விம்மி

அழுகிறாள் – நீயோ நிலையான

சுவனம் கிடைக்கும் என்று உன்னுயிரை

மாய்த்து எம்மனைவரையும் உயிரோடு

நெருப்பிலேற்றிநாயே!

உனக்கு சாவதில்தான் சந்தோசம்

என்றால் எங்கேயாவது மூலையில்

விழுந்து செத்திருக்கலாமே

ஏன் எம்மை இனி தினம் தினம்

செத்துப் பிழைக்க வைத்தாயே!

தற்கொலையே தவறென்று

சொன்ன இஸ்லாத்தின் பெயரால்

நீ தற்கொலையும் செய்து கொலையும்

செய்த உனக்கும் இஸ்லாத்திற்கும்

தொடர்பு ஏதடா? தொடர்பு ஏனடா?

குருதி வெள்ளத்தில் துவண்டு

கிடக்கும் உடற் சிதிலங்களில்

நீ என்ன வெற்றி கண்டாய்?

மூத்தோரையும், சிறாரையும்

யுத்தமென்றாலும் வதைப்பது

தவறாகும் எனும் அண்ணல்

வாக்கை தூக்கி வீசினாயே!

பிறமதக் கடவுளரை தூற்றாதே

துற்றினால் அவர்கள் உன்னிறைவனை

தூநீற்றுவர் எனச்சொன்ன வேளை நீ

தேவாலயங்களின் உள்ளே வெடித்தாயே!

யாவரும் ஆனந்தமாய் கொண்டாடும்

அந்தப் பொழுதிலா இந்தக் காரியம்

செய்தாய் – நீ நிச்சயம் அனுபவிப்பாய்

அன்று நான் உனக்கெதிராய் சாட்சி யளிப்பேன்.

அன்னையும் மகளும்,

தாத்தாவும் பேரனும்

ஆள் அடையாளம்

தெரியாமல் செய்து – நீயும்

அடையாளம் இழந்து

இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும்

குற்றவாளி என அடையாளப் படுத்திநாயே!

இனி தினம் இங்கு சாவே!

எம்மை சாகாடமல் சாகடித்த

என் தோழர்களை சிதறடித்த

உமக்கு என் சாபங்கள்

கோடி கொடு நெருப்பாய்வரும்

ஏசு உயிர்த்த ஞாயிறு என்றே

உலகம் போற்றும் – புண்ணிய

விழாக் கோலம் பூணும் நாளில்

எனக்க ஏதும் நம்பிக்கை இல்லை

ஆனால் அருமந்த உயிர்கள்

இருநூறுபேர் உயிர் நீத்த நாள்

என்று நான் நம்புவேன் – காரணம்

நம் இனத்தின் சில நரிகள்

இழைத்த இழி செயலால்

உயிர் நீத்த உறவுகளுக்கு

என் கண்ணீர் திவலைகள்.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, theeya said:

 

இதுதான் அந்தக் கவிதை....

 

 

 

நீயும் இறந்து பிறரையும் இறக்கச்

செய்த உனக்கு இறைவன் பெயர் எதற்கு?

நீயும் சிதறி பிறரையும் சிதறடித்த

உனக்கு இஸ்லாத்தின் பெயர் எதற்கு?

நீயும் செத்து பிறரையும் சாகடித்த

உனக்கு நபிகளார் பெயர் எதற்கு?

உன்னையும் கொன்;று பிறரையும் கொன்ற

உனக்கு திருமறை எதற்கு?

ஏதும் அறியா ஓரப்பாவி உயிரை

கொல்வது ஒட்டு மொத்த மனிதத்தையும்

கொல்வதென்று திருமறை சொன்னதை

நீ கற்கவில்லையோ?

 

பத்தாண்டாய் நிம்மதிப் பெருமுச்சு விட்டோம்

புத்தாண்டையும் பயந்து சாகாமல்

கொண்டாடி மகிழ்ந்தோம் – நீ வந்து

நிமிடத்தில் உருக்குலைத்தாயே!

இலங்கைத் தாய் மீண்டும் விம்மி

அழுகிறாள் – நீயோ நிலையான

சுவனம் கிடைக்கும் என்று உன்னுயிரை

மாய்த்து எம்மனைவரையும் உயிரோடு

நெருப்பிலேற்றிநாயே!

உனக்கு சாவதில்தான் சந்தோசம்

என்றால் எங்கேயாவது மூலையில்

விழுந்து செத்திருக்கலாமே

ஏன் எம்மை இனி தினம் தினம்

செத்துப் பிழைக்க வைத்தாயே!

தற்கொலையே தவறென்று

சொன்ன இஸ்லாத்தின் பெயரால்

நீ தற்கொலையும் செய்து கொலையும்

செய்த உனக்கும் இஸ்லாத்திற்கும்

தொடர்பு ஏதடா? தொடர்பு ஏனடா?

குருதி வெள்ளத்தில் துவண்டு

கிடக்கும் உடற் சிதிலங்களில்

நீ என்ன வெற்றி கண்டாய்?

மூத்தோரையும், சிறாரையும்

யுத்தமென்றாலும் வதைப்பது

தவறாகும் எனும் அண்ணல்

வாக்கை தூக்கி வீசினாயே!

பிறமதக் கடவுளரை தூற்றாதே

துற்றினால் அவர்கள் உன்னிறைவனை

தூநீற்றுவர் எனச்சொன்ன வேளை நீ

தேவாலயங்களின் உள்ளே வெடித்தாயே!

யாவரும் ஆனந்தமாய் கொண்டாடும்

அந்தப் பொழுதிலா இந்தக் காரியம்

செய்தாய் – நீ நிச்சயம் அனுபவிப்பாய்

அன்று நான் உனக்கெதிராய் சாட்சி யளிப்பேன்.

அன்னையும் மகளும்,

தாத்தாவும் பேரனும்

ஆள் அடையாளம்

தெரியாமல் செய்து – நீயும்

அடையாளம் இழந்து

இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும்

குற்றவாளி என அடையாளப் படுத்திநாயே!

இனி தினம் இங்கு சாவே!

எம்மை சாகாடமல் சாகடித்த

என் தோழர்களை சிதறடித்த

உமக்கு என் சாபங்கள்

கோடி கொடு நெருப்பாய்வரும்

ஏசு உயிர்த்த ஞாயிறு என்றே

உலகம் போற்றும் – புண்ணிய

விழாக் கோலம் பூணும் நாளில்

எனக்க ஏதும் நம்பிக்கை இல்லை

ஆனால் அருமந்த உயிர்கள்

இருநூறுபேர் உயிர் நீத்த நாள்

என்று நான் நம்புவேன் – காரணம்

நம் இனத்தின் சில நரிகள்

இழைத்த இழி செயலால்

உயிர் நீத்த உறவுகளுக்கு

என் கண்ணீர் திவலைகள்.

இந்த கவிதைக்கு ஏன் தூக்கி உள்ள போட்டாங்கள்?

நான் நினைக்கிறேன் அரசுக்கு ஆதரவாக இருக்கும் எவரோ ஒரு முஸ்லீம் அரசியல்வாதியின் அழுத்தத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம்.

இஸ்லாத்தை பற்றி இஸ்லாமியர்கள் பந்தி பந்தியாக விளக்கம் சொல்வார்கள்.

ஆனால் மதத்தின் பெயரால் உலகமெங்கும் இவர்கள் பண்ணும் காடைதனத்தை பார்த்த பின்பு  இஸ்லாம் பற்றி நான் புரிந்து கொண்டதெல்லாம் 

அடுத்த மதத்தவரின்  உயிர்களை பற்றி  கவலை படகூடாது அவர்கள் கொல்லபட வேண்டியவர்கள்  என்பதே. 

இவர் கவலை பட்டுவிட்டார் அதனால் புடிச்சு உள்ள போட கோத்தாவுடன் செல்வாக்குள்ள அமைதி மார்க்க தலைவர் யாரோ சிபாரிசு செய்திட்டாங்கள் போல.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

இந்த கவிதைக்கு ஏன் தூக்கி உள்ள போட்டாங்கள்?

நான் நினைக்கிறேன் அரசுக்கு ஆதரவாக இருக்கும் எவரோ ஒரு முஸ்லீம் அரசியல்வாதியின் அழுத்தத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம்.

இஸ்லாத்தை பற்றி இஸ்லாமியர்கள் பந்தி பந்தியாக விளக்கம் சொல்வார்கள்.

ஆனால் மதத்தின் பெயரால் உலகமெங்கும் இவர்கள் பண்ணும் காடைதனத்தை பார்த்த பின்பு  இஸ்லாம் பற்றி நான் புரிந்து கொண்டதெல்லாம் 

அடுத்த மதத்தவரின்  உயிர்களை பற்றி  கவலை படகூடாது அவர்கள் கொல்லபட வேண்டியவர்கள்  என்பதே. 

இவர் கவலை பட்டுவிட்டார் அதனால் புடிச்சு உள்ள போட கோத்தாவுடன் செல்வாக்குள்ள அமைதி மார்க்க தலைவர் யாரோ சிபாரிசு செய்திட்டாங்கள் போல.

இலங்கை படைகள், பக்கத்து வீட்டில் வாடகைக்கு இருந்த பையன் மேல் சந்தேகம் என முன் வீட்டு காரனை பிடித்து போபவர்கள். 

இந்த கவிதையில் அப்படி ஒன்றும் இல்லை.  மனிதநேயத்தோடுதான் எழுதியுள்ளார்.

ஷக்ரான் ஷகீது என்று சொன்ன வவுனியா மெளவியே வெளில வந்துட்ட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, valavan said:

புடிச்சு உள்ள போட கோத்தாவுடன் செல்வாக்குள்ள அமைதி மார்க்க தலைவர் யாரோ சிபாரிசு செய்திட்டாங்கள் போல.

தலீபான்களுக்கு வக்காலத்து வாங்கும்  சிவப்புத் தொப்பிக்காரனாய் இருக்குமோ???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.