Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதிரியாரின் அதிர்ச்சி...... மோசடிகள் பலவிதம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாதிரியாரின் அதிர்ச்சி...... மோசடிகள் பலவிதம்.

இங்கிலாந்து, பெட்போட்சயர், லூட்டன் பகுதியில் சொந்த வீட்டில், வேலை இல்லாமல் இருந்த பாதிரியார் மைக் கோல், (Mike Hall) வடக்கு வேல்ஸ் பகுதியில், தங்குமிடத்துடன், வேலை கிடைத்து, வீட்டைப் பூட்டிவிட்டு கிளம்பி விட்டார்.

வந்து போக குடும்பம் இல்லாததால், மாதக்கணக்காக வரவில்லை.

ஒருநாள், பக்கத்து வீட்டுக்காரர் போனைப் போட்டு..... என்ன..நல்ல துட்டு கிடைக்கிற வேலை போல இருக்குது.... வீட்டில பில்டிங் வேலைகள் செய்கிறீர்கள் போல என்று விசாரித்து இருக்கிறார்.

இல்லையே..... நான்..... யாரையும் வேலை செய்யச் சொல்லவில்லையே... என்ற ..... அப்படி என்றால்.... வீட்டு வேலை செய்வது யார் என்று கேட்டிருக்கிறார், அயலவர்.

குழப்பத்துடன், அடித்துப் பிடித்துக் கொண்டு, ஓடி வர..... உண்மையாகவே, வீ்ட்டில்.... பில்டர் நின்று வேலை செய்கிறார்...... கதவு பூட்டுக்கள் மாத்தப் பட்டுள்ளன.

கார்பெற்..... தளபாடங்கள் உள்பட.... அவரது பொருட்கள் எதுவுமே இல்லை.....

குழப்பத்துடன்... போலீசாரை அழைக்க..... பில்டர்.... நழுவி விட்டார்.

அவர் ஓடிவிட்டார் என்று நிணைத்து.... வந்த போலீசாரிடம் பேசிக் கொண்டிருக்கையில், பில்டர்..... வீட்டின் ஓனரின் தகப்பன்..... இவர்தான்.... இவர் தான் என்னை வேலைக்கு அமர்தியவர் என்று இன்னும் ஒருவருடன் வந்து நிற்கிறார்.

அவரோ கடந்த ஜூலை மாத இறுதியில் இந்த ஆதனத்தை வாங்கி விட்டோம்.... நீர் யார்.... முதலில் எல்லோரும் வெளியே போங்க..... பில்டர் வேலையை குழப்பாமல்.... வெளிய நின்று பேசலாம் என்று ஒரே போடாய் போடுகிறார்.

போலீசாரும்..... காணிப் பதிவகத்தை.... ஒன்லைன் மூலமாக செக் பண்ணிய போது.... ஆம்.... அந்த தந்தை சொன்னது போலவே.... ஆகஸ்ட் மாதம் புதியவர் பேரில் பதியப்பட்டுள்ளது.

பாதிரியாருக்கு இன்னும் ஒரு அதிர்ச்சி, வித்தவர் வேறு ஒருவராக இருந்தால் பரவாயில்லை.... பாதிரியார் தான்.....

ஆகவே..... நாம்...... செய்ய எதுவுமே இல்லை.... அவர்கள் பெயரில் பத்திரப் பதிவு உள்ளது. இது.... கிரிமினல் இல்லை..... சிவில் விடயம்..... போய் சிவில் பிரக்கிராசியாரை பாருங்க என்று போலீசார் கிளம்பிப் போகிறார்கள்.

அதாவது, வித்து.... காசாயும் வாங்கிப் போட்டு..... இப்ப..... இப்படி எங்களது நேரத்தினை விரயம் செய்வதுடன்...... வாங்கியவர்களையும் முட்டாள் ஆக்குகிறீர்கள்..... என்பது போல.....

பித்துப் பிடித்தவரானார் பாதிரியார்..... பெரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்.....

தான் விற்கவில்லை என்பது அவருக்கு தெரியும்..... ஆனாலும்..... சட்டப்படி.... தான் பலவீனமாக இருப்பதை உணர்கிறார்....

ஒரு கிரிமினல் விடயம் நடந்துள்ளது என, தனக்கு சொல்ல வேண்டிய போலீசாரே...... சிவில் விடயம் என்று கை கழுவி விட்டதை... நம்பவே முடியவில்லை அவரால்.

பிபிசி தொலைக்காட்சியின், You and Yours எனும் நிகழ்ச்சியாளர்களை தொடர்பு கொள்கிறார்....

அவர்கள்.... பாதிரியாரின் திருடப்பட்ட (அவரால் தொலைந்து போனதாக கருதப்பட்ட) வாகண லைசன்ஸை பயன்படுத்தி, பாதிரியார் போல நடித்து வியாபாரம் செய்துள்ளார்கள் என்றும்.... வித்த பணத்தை பெற.... அதே வாகண லைசன்ஸை பயன்படுத்தி வங்கிக் கணக்கை திறந்துள்ளனர் என்றும் கண்டறிந்து.... பெட்போட்சயர் போலீஸ் மோசடிப் பிரிவுக்கு அறிவிக்க.... அவர்கள் விசாரணைகளை ஆரம்பித்து உள்ளனர்.

இந்த வீட்டு வாங்கல், விற்றலுடன் தொடர்புடைய இரு பக்க பிராக்கிராசிமாரும்.... இந்த விடயம் போலீஸ் விசாரணையில் இருப்பதால் கருத்து சொல்ல முடியாது என்று சொல்லி விட்டார்கள்.

மோசடி என்று உறுதியாவதால், வீடு பாதிரியார் வசம் உடனடியாக போகும். அவரது சொந்த பொருட்கள் போனது போனது தான்.... சிலவேளை காப்புறுதி பணம் கிடைக்கும்.

மோற்கேஜ் பணம் கொடுத்த வங்கிக்கு தான் முழு நஸ்டம்.

வாங்கியவருக்கு..... முத்திரை செலவுதிரும்ப கிடைக்கும்.... பில்டிங் செலவுகள் நஸ்டம்....

மோசடிகாரர்களுக்கு...... நல்ல வருமானம்..... நல்ல வருமானம்.....

வீட்டைப் பூட்டிப் போட்டு ஊரில போய் கொஞ்ச நாள் இருக்கப் போறன் எண்டு கிளம்பாதீங்கோ....... குடிகாரர் தெருவில... குமர்பிள்ளைய விட்டுட்டு தல யாத்திரை போற மாதிரி ஆயிடும் சொல்லீற்றன்..

மூலம்; தினதந்தி ( அதாவது London Daily Telegraph)

Edited by Nathamuni

  • Replies 171
  • Views 9.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆக சுத்துமாத்து உலகம் பூராவும் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனில் title agency என்ற ஒன்று இந்த வீடு விற்றல் வாங்கலில் இல்லையோ? அவர்கள் தான் வீட்டின் பத்திரம் சுத்து மாத்தில்லாமல் இருக்கிறதா என்று பார்த்து ஒரு title insurance உம் விற்பர். ஏதும் பிழை பின்னர் கண்டறியப் பட்டால் title agency தலையில் தான் பொறுப்பு. 

வங்கி எப்படி இதெல்லாம் இல்லாமல்  வீட்டுக் கடனைப் பாஸ் செய்தார்களாம்?

  • கருத்துக்கள உறவுகள்

ரெண்டு புறக்கிராசிமாருக்கும் Title Insurance  கொம்பனிக்காறருக்கும்தான் பிரச்சினை. 

புறக்கிறாசிமார்  due diligence  வடிவாகச் செய்திருந்தா தப்பி விடுவினம். 

ஆனால் இந்த புறோட் எல்லாம் இவங்கட சப்போட் இல்லாம செய்யிறது கஸ்ரம். 

😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

1 hour ago, Kapithan said:

ரெண்டு புறக்கிராசிமாருக்கும் Title Insurance  கொம்பனிக்காறருக்கும்தான் பிரச்சினை. 

புறக்கிறாசிமார்  due diligence  வடிவாகச் செய்திருந்தா தப்பி விடுவினம். 

ஆனால் இந்த புறோட் எல்லாம் இவங்கட சப்போட் இல்லாம செய்யிறது கஸ்ரம். 

😂

நீங்கள் இருவர் சொல்வது சரிதான். நாதம் செய்தியின் மூலத்தை தரவில்லை. ஆனால் எழுத்தை பார்த்தால் டெயிலி மிரர் எனும் டேப்லாயிட் செய்தியை அடிப்படையாக வைத்து எழுதியது போல தெரிகிறது.

பிபிசி செய்தியில் land registry, land registry compensation பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன.

 The Land Registry paid out a total of £3.5m in compensation for fraud last year.

It said: "We work with professional conveyancers, such as solicitors, and rely on them and the checks that they make to spot fraudulent attempts to impersonate property owners.

"Despite our efforts, every year we do register a very small number of fraudulent transactions."

https://www.bbc.co.uk/news/uk-england-essex-59069662.amp

தவிரவும் இங்கே buyers, good faith buyers ஆக இருப்பதால் வீட்டை உடனடியாக எடுத்து பாதிரியாருக்கு கொடுக்க மாட்டார்கள். பி பி சி கட்டுரை இதையும் தொட்டு செல்கிறது.

Once the house was sold to the new owner for £131,000 by the person impersonating Mr Hall, they legally owned it.

வீடு யாருக்கு, யாருக்கு எவ்வளவு நட்ட ஈடு என்பதெல்லாம் திரிக்கு அப்பாலான சட்ட விளக்கங்கள். 

ஆனால் நான் முன்பு ஒரு முறை விசுகு அண்ணாவுக்கு திண்ணையில் சொன்னேன். கொஞ்சம் போல் மோர்கேர்ட் மிச்சம் இருக்க வேண்டும். இந்த வீடு மோர்கேட்ஜ் இல்லாத வீடாக இருக்கும், ஆகவேதான் இலகுவில் ஏய்க்க முடிந்திருக்கும் என்பது என் ஊகம்.

அதே போல் ஒரு இலவச credit report ஐயாவது மாசாமாசம் எடுத்து நம் பெயரில் ஏதும் கணக்குகள் திறக்கப்படுகிறதா? என அவதானிக வேண்டும்.

இங்கே பொலிசார் முதலில் எடுத்த அணுகுமுறை வெட்ககேடானது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

பிரிட்டனில் title agency என்ற ஒன்று இந்த வீடு விற்றல் வாங்கலில் இல்லையோ? அவர்கள் தான் வீட்டின் பத்திரம் சுத்து மாத்தில்லாமல் இருக்கிறதா என்று பார்த்து ஒரு title insurance உம் விற்பர். ஏதும் பிழை பின்னர் கண்டறியப் பட்டால் title agency தலையில் தான் பொறுப்பு. 

வங்கி எப்படி இதெல்லாம் இல்லாமல்  வீட்டுக் கடனைப் பாஸ் செய்தார்களாம்?

விற்பவர் வெளி ஆள் இல்லையே அந்த வீட்டு ஆள்தானே வேறு ஆள் என்றால்தான் title agencyயின்   கணனிகள் அலறும்  கள்ளன் கள்ளன் என்று .

3 hours ago, Kapithan said:

ஆனால் இந்த புறோட் எல்லாம் இவங்கட சப்போட் இல்லாம செய்யிறது கஸ்ரம். 

விற்பவரின் புரோக்கராசி யின் சப்போர்ட் இல்லாமல் இவ்வளவு குற்றம் நடக்க வாய்ப்பில்லை .

1 hour ago, goshan_che said:

நீங்கள் இருவர் சொல்வது சரிதான். நாதம் செய்தியின் மூலத்தை தரவில்லை. ஆனால் எழுத்தை பார்த்தால் டெயிலி மிரர் எனும் டேப்லாயிட் செய்தியை அடிப்படையாக வைத்து எழுதியது போல தெரிகிறது.

பிபிசி செய்தியில் land registry, land registry compensation பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு நாளாக ஆங்கில ஊடகங்களில் இதுபற்றிய கருத்துக்கள் தான் முன்னுக்கு நிற்கின்றன அதில் போலீஸின் அசண்டைதனமான பதிலை கேட்டு வறுத்து எடுக்கிறார்கள் .

அடுத்து இங்குள்ள land registry ல் யாரும் ஒரு கள்ள மெயில் ஐடி டொப் அப் கிரெடிட் கார்ட் மூலம் அல்லது வேறு பெயரில் காசு சேர்ந்தால் காணும் எனும் கொள்கை மூலம்  அனைத்து விபரமும் எடுக்கலாம் எனும் ஓட்டை இப்படியான குற்றங்கள் நடக்க வழி  வகுக்கின்றன. இன்னும் விளக்கமாக என்றால் பணம் போனால் இலகுவாக ஒரு வீட்டின் உரிமையாளரின் அனைத்து விபரங்களையும் கொடுத்து விடுகிறார்கள் .

குறிப்பிட்ட பெயரை எடுத்தபின் மிகுதி ஏதாவது ஒரு சமூக ஊடகங்களில் ஒரிஜினல் பெயரில் சிங்கன் போஸ் கொடுத்தபடி நிற்பார் தற்போதைய வேலை போன்ற விபரங்கள் அங்கு இருக்கும் பிறகென்ன வேலை இலகுவாக போய் விடும் .

இதில் கவனிக்க வேண்டிய விடயம் செவ்வாய்கிரகம் போனாலும் நேபர்களை அரவணைத்து வச்சிருக்கணும் எனும் நீதி .

https://www.dailymail.co.uk/news/article-10153585/Shocked-vicar-discovers-131-000-house-Luton-SOLD.html

https://www.independent.co.uk/news/uk/home-news/house-sold-property-fraud-luton-b1949238.html 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

இதில் கவனிக்க வேண்டிய விடயம் செவ்வாய்கிரகம் போனாலும் நேபர்களை அரவணைத்து வச்சிருக்கணும் எனும் நீதி .

👏🏾👏🏾👏🏾 மிக முக்கியம். நானெல்லாம் கொலிடே போறெண்டாலே சொல்லி போட்டுத்தான் போறது. அவையளும் அப்படித்தான்.

ஆனால் இந்த கேஸ் முதல் முறை அல்ல. மிட்லான்ஸ் பக்கமும் ஒரு வயசான ஜோடி தமது வீட்டை ஒன்லைனில் விற்க போட்டதை பார்த்து அதிர்சியானார்கள்.

https://www.mirror.co.uk/news/uk-news/dad-500000-home-put-up-9353105.amp

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அதே போல் ஒரு இலவச credit report ஐயாவது மாசாமாசம் எடுத்து நம் பெயரில் ஏதும் கணக்குகள் திறக்கப்படுகிறதா?

இலவசமாக credit report தரும் இணையங்கள் இருந்தால் போட்டு விடுங்க https://ins.experian.co.ukற்கு மாதம் 15 மட்டும் அழவேண்டி உள்ளது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பெருமாள் said:

இலவசமாக credit report தரும் இணையங்கள் இருந்தால் போட்டு விடுங்க https://ins.experian.co.ukற்கு மாதம் 15 மட்டும் அழவேண்டி உள்ளது .

https://www.creditkarma.co.uk

why £15 

*****

Once the house was sold to the new owner for £131,000 by the person impersonating Mr Hall, they legally owned it.

wrong!

The word ‘impersonating’ is automatically invalidate any transaction occurred. If the seller is unable to be in person, he must use another person with his power of attorney.

They ceased to be legally owning it when there is a case arise that the transaction is suspected to be fraudulent 

தவிர நான் இதற்கு முன்னர், வெம்பிளியில்.... கணவன், மணைவி.... சேர்ந்து வாங்கிய வீடடில்...... பிரிவு வந்த பின்னரும் ஒன்றாக இருந்து..... மணைவி தாயை வருத்தம் பார்க்க கொழும்பு சென்ற போது.... இவர் இலங்கையில் இருந்து எடுத்த வேறு பெண் படம் கொடுத்து மணாவி பெயரில் எடுத்த கள்ளப் பாஸ்போட்டை வைத்து.... வீட்டை விற்று.... பணத்துடன் ஓடி கனடாவுக்கு விட்டார்.

மணைவி வந்த போது வீடு வேறு பூட்டுபோட்டு வாங்கியவர்களால் பூட்டப்பட.... கணவன் வேலை என்று உடைத்து உள்ள புகுந்து இருந்து விட்டார்....

வாங்கியவர்கள் வர.... மனிசி எனக்கு யார் என்றே தெரியாது என்று சொல்லி..... வெளியேற முடியாது என்று சொல்ல, உடனடியாக மோசடி என புரிந்து..... வாங்கியவர்களை வெளியே அனுப்பி யது போலீஸ்.

சிலர்..... கணவன், மணைவி சேர்ந்து சுத்துனார்கள் என்றும் குசுகுசுத்தார்கள்..... அது வேறு கதை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

Creditkarma.com

why £15

முதலில் இவர்களும் இலவசம் என்றார்கள் கொஞ்சகாலம் போனபின் கிரடிட் கார்ட் தந்தாள் தான் இலவச சேவை தொடரும் என்றார்கள் இன்னும் சிறிது காலம் போனபின் மெயில் வந்தது இலவச சேவை கட்டணசேவையாகின்றது கொஞ்சமே எடுப்பம் என்றார்கள் கடைசியில் ஒட்டகம் கூடாரத்துக்குள் வந்த கதை போல் 15க்கு கொண்டு போயிட்டார்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

முதலில் இவர்களும் இலவசம் என்றார்கள் கொஞ்சகாலம் போனபின் கிரடிட் கார்ட் தந்தாள் தான் இலவச சேவை தொடரும் என்றார்கள் இன்னும் சிறிது காலம் போனபின் மெயில் வந்தது இலவச சேவை கட்டணசேவையாகின்றது கொஞ்சமே எடுப்பம் என்றார்கள் கடைசியில் ஒட்டகம் கூடாரத்துக்குள் வந்த கதை போல் 15க்கு கொண்டு போயிட்டார்கள் .

இல்லையே.... நான் பத்து வருசமா வைச்ு இருக்கிறேன்....

முதலில் callcredit.co.uk என்று இருந்தது. இது ஒரு Experian கிளை. நீஙகள் காசு கொடுத்து மெயின் சேவிசுக்குள் போய் விட்டீர்கள்.

காசு தாங்கோ... அதை தாறம்.... இதை செய்யிறம் எண்டு வரும் மெயில்களை கண்டு கொள்வதில்லை.

தவிர NatWest வங்கி கிரடிட் ஸ்கோர் இலவசமாக தருகிறது.

Creditkarma. இது ஒரு Transunion கிளை.....

இரண்டுக்கும் வித்தியாசம் இரண்டு வாரம்..... அதாவது... காசு கொடுத்தால் உடன் விபரம்.... இலவசமாயின் இரண்டு வாரம் முந்தியது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பெருமாள் said:

இலவசமாக credit report தரும் இணையங்கள் இருந்தால் போட்டு விடுங்க https://ins.experian.co.ukற்கு மாதம் 15 மட்டும் அழவேண்டி உள்ளது .

நாதம் தந்த credit karma நல்லது. முன்னர் noddle என்ற பெயரில் இருந்தது நான் பலவருடமாக இலவசம்மாய் வைத்துள்ளேன்.

இங்கே 3 பெரிய கிரெடிட் செக் பெனிகள்தான்.

Trans credit, Equifax, experian.

இதில் credit karma, trans credit பைலை செக் பண்ணும்.

Experian , equifax இரெண்டும் காசு. ஆனால்  statutory credit check என்பதை இலவசமாக தந்தே ஆக வேண்டும்.

ஆகவே credit karma வில் ஒவ்வொருமாதமும் இலவச full report ஐயும், Experian , equifax இல் 3மாதம் ஒரு தடவை statutory credit check ஐயும் செய்து வந்தால் ஓரளவு பாதுகாப்பு.

Statutory credit check க்குகான லிங் கீழே.

https://www.experian.co.uk/consumer/statutory-report.html

https://www.equifax.co.uk/Products/credit/statutory-report.html

பிற்சேர்க்கை

எக்ஸ்பீரியன் இலவச கிரெடிட் ஸ்கோரையும் பார்க்க விடும் ஆனால் ரிப்போர்ட் வேணும் எண்டால் காசு.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

wrong!

The word ‘impersonating’ is automatically invalidate any transaction occurred. If the seller is unable to be in person, he must use another person with his power of attorney.

They ceased to be legally owning it when there is a case arise that the transaction is suspected to be fraudulent 

நாதம் மேலே நாம் ஆங்கிலத்தில் எழுதியது நான் எழுதியதல்ல - நான் பகிர்ந்த பிபிசி கட்டுரையில் இருந்தது.

உங்களுக்கு land law படிபிப்பது எனது நோக்கம் அல்ல, ஆனால் ஒருவர் இப்படி ஒரு வீட்டை bonafide buyer ஆக வாங்கும் போது - சட்டம் black and white ஆக இல்லை. 
குறிப்பாக title மாறிய பின். களவின் மூலமோ இல்லையோ, land registry யில் டைட்டில் மாறி விட்டது. அதைதான் பி பி சி அப்படி குறிப்பிடுகிறது.  

அதற்காக இந்த வீட்டை பாதிரியாருக்கு மீட்டு கொடுக்க மாட்டார்கள் என்பதல்ல. ஆனால் இப்போதும் அந்த வீட்டின் legal owner வாங்கியவர்தான். 

இனி விசாரண நடந்து, முடிவாகி. அதன் பின் சட்டபடி வீட்டின் பதிவை மீண்டும் அவரின் பெயருக்கு மாற்ற வேண்டும். அதுவரை இப்போ land registry யில் யாரின் பெயர் உள்ளதோ அவர்தான் லீகல் ஓனர். 

அதைதான் பி பி சியும் யும், (நானல்ல) கீழ்வருமாறு சொல்கிறது.

7 hours ago, Nathamuni said:

Once the house was sold to the new owner for £131,000 by the person impersonating Mr Hall, they legally owned it.

  • கருத்துக்கள உறவுகள்

பிகு

இதற்கான பதிலை நீங்கள் ஏன் ஆங்கிலத்தில் எழுதினீர்களோ தெரியவில்லை.

சில சமயம் நான் பிபிசி யை மேற்கோள் காட்டியதை நான் ஆங்கிலத்தில் எழுதியதாக கருதி விட்டீர்களோ? ஆங்கிலத்தை போலன்றி தமிழில் அநேகம் பிழை விடாமல்தானே எழுதுகிறீர்கள் - தமிழிலேயே தொடர்வோம்🙏🏾.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, goshan_che said:

பிகு

இதற்கான பதிலை நீங்கள் ஏன் ஆங்கிலத்தில் எழுதினீர்களோ தெரியவில்லை.

சில சமயம் நான் பிபிசி யை மேற்கோள் காட்டியதை நான் ஆங்கிலத்தில் எழுதியதாக கருதி விட்டீர்களோ? ஆங்கிலத்தை போலன்றி தமிழில் அநேகம் பிழை விடாமல்தானே எழுதுகிறீர்கள் - தமிழிலேயே தொடர்வோம்🙏🏾.

பிபிசி எழுதுவது அணைத்துமே சரியானதும் அல்ல..... சகலமும் சட்ட கருத்து பெற.... நேரமும் இல்லை..... பணமும் இல்லை என்பது பொதுவான கருத்து.

ஈபே..... பொது சந்தை.....

நீஙகள் விற்கப்படும் பொருள்... விற்பவரின் சட்டபூர்வமான உரிமை கொண்டது என்று தானே வாங்குகிறீர்கள்.

பொலீஸ்காரர்கள் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டி..... அது......... கத்தியை காட்டி பயமுறுத்தி...... பிடுங்கி விற்றுவிட்டார்கள் என்றால், உங்கள் சட்டபூர்வமான நிலைமை என்ன என்று சொல்ல முடியுமா?

நீஙகள் நல்லெண்ணத்தில், பொது சந்தையில் வாங்கியிருந்தால்..... சட்டப்பிரச்சனை இல்லை. ஆனால் விற்றவர்..... கோசன் தான் ஈபேயில் போடு...... கொஞ்சம் பழுதானது என்று போடு... நான் வாங்குகிறேன்.... என்று சொல்லியிருந்தால் ...... கதவை தட்டிய பொலீஸ்காரர்கள் பொருளை மட்டுமா கொண்டு போக நிணைப்பார்கள்?

விளக்கம் தர முடியுமா?

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெம்ளி விடயத்தில்... பெண் தெளிவாக போலீஸ்காரரிடம் சொல்லி விட்டார்.... வீடு கொம்பிளீசன் நடந்த காலத்தில் நாட்டிலேயே நான் இல்லை..... பிறகு எப்படி?

ஆரம்பத்திலேயே பொலீஸ்காரர்கள்... மோசடி என்று புரிந்து இருந்தது.

பாதிரியார்..... விடயத்தில் போலீசார் அந்த கோணத்தில் பார்க்காமல்.... காணிப்பதிவகத்தில் ஆரம்பித்ததால் தவறு செய்தார்கள். அது குறித்து விசாரணை நடக்கும்.

ஆக.... பிரக்கிராசியார், ஜட்ஜ் அய்யாவிடம்.... வழக்கை விபரிக்கும் கெட்டித்தனத்தில் தானே வெற்றி

சிலவேளை... வெம்ளி பெண் போல.... நான் மூன்று மாதமா, இங்கிலாந்து பக்கமே இல்லை, வேல்ஸ் பக்கமே இருந்தேன்.... என்று சொல்லி பொலீசாரை சரியான தடத்தில் செயல்பட வைத்திருக்கலாம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பிபிசி எழுதுவது அணைத்துமே சரியானதும் அல்ல..... சகலமும் சட்ட கருத்து பெற.... நேரமும் இல்லை..... பணமும் இல்லை என்பது பொதுவான கருத்து.

ஈபே..... பொது சந்தை.....

நீஙகள் விற்கப்படும் பொருள்... விற்பவரின் சட்டபூர்வமான உரிமை கொண்டது என்று தானே வாங்குகிறீர்கள்.

பொலீஸ்காரர்கள் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டி..... அது......... கத்தியை காட்டி பயமுறுத்தி...... பிடுங்கி விற்றுவிட்டார்கள் என்றால், உங்கள் சட்டபூர்வமான நிலைமை என்ன என்று சொல்ல முடியுமா?

நீஙகள் நல்லெண்ணத்தில், பொது சந்தையில் வாங்கியிருந்தால்..... சட்டப்பிரச்சனை இல்லை. ஆனால் விற்றவர்..... கோசன் தான் ஈபேயில் போடு...... கொஞ்சம் பழுதானது என்று போடு... நான் வாங்குகிறேன்.... என்று சொல்லியிருந்தால் ...... கதவை தட்டிய பொலீஸ்காரர்கள் பொருளை மட்டுமா கொண்டு போக நிணைப்பார்கள்?

விளக்கம் தர முடியுமா?

இந்த கேள்வியில் ஒரு மயக்கம் இருக்கிறது. அது என்னவென்றால் சாதாரண ஒரு பொருளை விற்பது வாங்குவது போல அல்ல காணி/வீடு வாங்குவது. ஆகவே இரெண்டையும் ஒப்பிட முடியாது.

காணியை பொறுத்தவரை nine tenth of law is possession என்பார்கள். காலாகாலமாக காணியின் 100% உரிமையாளர் என யாரையும் கருதுவதில்லை. Possession (காணியில் இருப்பவர் யார்), title - யாரின் பெயரில் பத்திரம் இருக்கிறது என்பன காணியில் ஒன்றுக்கு மேலான competing claims இருக்கும் போது உரிமையை யார், யாரை விட அதிகம் கோரலாம் என்பதை தீர்மானிக்க பயன்படுகிறது.

தவிரவும் இங்கே லாண்ட் ரெஜிஸ்தரி உள்ளது - அதில் உள்ள பதிவே title ஐ prove பண்ண உள்ளதில் நல்ல சாட்சி

இங்கே ஒரு நன்நம்பிக்கையுடன் காணியை வாங்கிய நபர். அவரால் எடுக்க கூடிய எல்லா checks ஐயும் செய்துள்ளார், லாண்ட் ரெஜிஸ்டிரியில் பார்த்துள்ளார், ஒரு சொலிசிட்டரை வைத்து பதிவுகளை சரி பார்த்துள்ளார் - என்பதற்கும் மேல் அவரின் பெயரில் லாண்ட் ரெஜிஸ்டரியில் legal owner ஆக பதிவாகி விட்டது. ஆகவே அவர்தான் இப்போதைக்கு legal owner. Title உம் possession அவரிடமே உள்ளது

ஆகவே நிச்சயம் இங்கே இந்த bonafide buyer ஐ அந்தரத்தில் விட மாட்டாது சட்டம். ஒன்றில் அவருக்கு நட்ட ஈடும், பாதிரியாருக்கு வீடும் அல்லது பாதிரியாருக்கு நட்ட ஈடும் அவருக்கு வீடும் போகும்.

ஆனாலும் பாதிரியார் is not fully out of the woods. இப்படியான வீடுகளை பாதுகாக்க லாண்ட் ரெஜெஸ்டிரியில் ஒரு திட்டம் உள்ளது. அதில் இந்த வீட்டின் விரபங்களை ஏன் பதியவில்லை. லாண்ட் ரெஜிஸ்திரி கடிதம் இந்த அட்டிரசுக்குத்தான் வந்திருக்கும். ஏன் எங்கேயோ இருந்த படி, land registry correspondence address ஐ மாற்றாம்மல் இருந்தார்?

ஆகவே பாதிரியார் இதில் contributory negligent ஆக இருந்துள்ளார் எனவும் ஏனையோர் வாதாடுவர்.

யார் நஸ்ட ஈட்டை வழங்குவது? இந்த தவறை சொலிசிட்டர்களா, லான்ட் ரெஜிஸ்திரியா, பாதிரியாரா தமது due diligence மூலம்  தடுத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அது முடிவாகும். 

இங்கே வாங்கியவரும் பொய்யாக வித்தவரும் எந்த கள்ள உடன்படிக்கையும் செய்ததாக தெரியவில்லை. எனவே அவரின் மீது நட்டத்தை சுமத்த வாய்ப்பு குறைவு.

ஆகவேதான் அவரை bonafide buyer என்கிறேன்.

இல்லை அவர் mala fide buyer ஆக, கூட்டு களவாணி என்று நிறுவ முடிந்தால் - அவர் மேலும் fraud வழக்கு பாயும். அப்படியாயின் இதனால் அவருக்கு வீடோ அல்லது இழப்பீடோ கிடைக்காது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நல்ல விவாத கருத்து...

உங்களிடம் ஒரு கேள்வி....

சட்டத்தை ஒரு பக்கத்தில வைப்போம்....

கொமன் சென்ஸ் உடன் பேசுவோம்....

எனது வீடு..... பூட்டி விட்டு போகிறேன்..... வரும் போது வேறு.... யாரோ இருக்கிறார்கள்....

காணிப் பதிவக பத்திரம் காட்டுகிறார்கள்.....

சரிதான் நீஙகள் இருங்க.... என்று கிளம்புவேனா..... அல்லது..... நம்ம எச்ச ராசா சொன்னது போல.... காணிப்பதிவகமாவது.....   ******** என்பேனா.....?

நான் சாமானியன்.... எனக்கு பாதுகாப்பு தரவும்..... சூழலை ஒழுங்கமைக்கவும் அரசை தேர்வு செய்கிறேன்..... வரி கட்டுகிறேன்.....

அரசும்..... காணிப்பதிவகம்....பொலீஸ் அமைப்புகளை ஒழுங்கமைவு செய்கிறது. ஆகவே நான் நிம்மதியாக வாழ்கிறேன்.

அந்த அமைப்புக்கள்... தவறிழைத்தால்..... அவர்கள் திருத்தட்டும்..... எனது பிரச்சணை இல்லை .....

எனக்கு தேவையில்லாத சட்ட வியாக்கியானமும் தேவையில்லை என்பேன்.

நான் சட்டப்படி நடந்தால்..... பயம் தேவையில்லை.....

எனது வீட்டில் Tress-passers இருக்கிறார்கள்.... வெளியே அனுப்பு.... பொலீஸ்காரா என்பேன்....

நான் அவர்கள் வாங்கிய நாளில் நாட்டிலே இல்லை..... இந்தா.... ஆதாரம்..... அவர் யாரிடம் வாங்கினாரோ.... அவரை கண்டுபிடித்துக் கொடு..... பணத்தை வாங்கட்டும்....

நல்லா இருக்கே..... உங்கட நியாயம்..... இரண்டு கள்ளர்..... எண்ட வீட்டை..... எனக்கே தெரியயாம. ஒருத்தர் விற்பார்.... ஒருத்தர் வாங்குவார்..... அதை காணிப்பதிவகம் காசை வாங்கிக் கொண்டு பதிவு செய்யுமாம்....

வந்து நிண்டு கொண்டு , bonafide buyer கத்தரிக்காய் கதை சொல்லிக் கொண்டு ..... என்று தானே கத்துவேன்.

இது சரியெண்டால்... நாளை பக்கிங்காம் அரண்மனையை மலிவா உங்களுக்கு விக்கலாம் எண்டு இருக்கிறன்.....

ராணியம்மா விக்கிற மாதிரி பத்திரம்....

ஆள் இருக்கு... காணிப் பதிவகத்தில.... நான் அதை பார்த்துக் கொள்ளுவன்....

காசைரெடி பண்ணுங்க.....

  • கருத்துக்கள உறவுகள்

// அதே வாகண லைசன்ஸை பயன்படுத்தி வங்கிக் கணக்கை திறந்துள்ளனர் //

எனக்கு ஒரு சந்தேகம்!, தனியே லைசென்ஸை மாத்திரம் அடையாளமாக காட்டி UKயில் வங்கிக்கணக்கை திறக்க முடியுமா? 100 pointsற்கான identification documents கேட்கமாட்டார்களா?  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

// அதே வாகண லைசன்ஸை பயன்படுத்தி வங்கிக் கணக்கை திறந்துள்ளனர் //

எனக்கு ஒரு சந்தேகம்!, தனியே லைசென்ஸை மாத்திரம் அடையாளமாக காட்டி UKயில் வங்கிக்கணக்கை திறக்க முடியுமா? 100 pointsற்கான identification documents கேட்கமாட்டார்களா?  

ஆம்..... கடவுச்சீட்டு இல்லாமல் பலர் இருக்கிறார்கள்....

மேலும் அடையாள அட்டைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் என்பதால் வாகண அனுமதி பத்திரம் அடையாள அட்டையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

ஆம்..... கடவுச்சீட்டு இல்லாமல் பலர் இருக்கிறார்கள்....

மேலும் அடையாள அட்டைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் என்பதால் வாகண அனுமதி பத்திரம் அடையாள அட்டையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

அட்ரெஸ் புரூப் இற்கு கரண்ட் பில் எப்படி எடுத்திருப்பார்கள்?

வங்கி கணக்கை திறந்த அன்றைய வங்கி கமெரா பதிவு போதும் இது பாதிரியார் திறக்கவில்லை பூரா பிராடு என்பதற்கு.. ஒரே ஒரு வீடியோ கேஸ் குளோஸ்.. வீடு பாதிரியாருக்கு..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Nathamuni said:

நல்ல விவாத கருத்து...

உங்களிடம் ஒரு கேள்வி....

சட்டத்தை ஒரு பக்கத்தில வைப்போம்....

கொமன் சென்ஸ் உடன் பேசுவோம்....

எனது வீடு..... பூட்டி விட்டு போகிறேன்..... வரும் போது வேறு.... யாரோ இருக்கிறார்கள்....

காணிப் பதிவக பத்திரம் காட்டுகிறார்கள்.....

சரிதான் நீஙகள் இருங்க.... என்று கிளம்புவேனா..... அல்லது..... நம்ம எச்ச ராசா சொன்னது போல.... காணிப்பதிவகமாவது..... மயிராவது என்பேனா.....?

நான் சாமானியன்.... எனக்கு பாதுகாப்பு தரவும்..... சூழலை ஒழுங்கமைக்கவும் அரசை தேர்வு செய்கிறேன்..... வரி கட்டுகிறேன்.....

அரசும்..... காணிப்பதிவகம்....பொலீஸ் அமைப்புகளை ஒழுங்கமைவு செய்கிறது. ஆகவே நான் நிம்மதியாக வாழ்கிறேன்.

அந்த அமைப்புக்கள்... தவறிழைத்தால்..... அவர்கள் திருத்தட்டும்..... எனது பிரச்சணை இல்லை .....

எனக்கு தேவையில்லாத சட்ட வியாக்கியானமும் தேவையில்லை என்பேன்.

நான் சட்டப்படி நடந்தால்..... பயம் தேவையில்லை.....

எனது வீட்டில் Tress-passers இருக்கிறார்கள்.... வெளியே அனுப்பு.... பொலீஸ்காரா என்பேன்....

நான் அவர்கள் வாங்கிய நாளில் நாட்டிலே இல்லை..... இந்தா.... ஆதாரம்..... அவர் யாரிடம் வாங்கினாரோ.... அவரை கண்டுபிடித்துக் கொடு..... பணத்தை வாங்கட்டும்....

நல்லா இருக்கே..... உங்கட நியாயம்..... இரண்டு கள்ளர்..... எண்ட வீட்டை..... எனக்கே தெரியயாம. ஒருத்தர் விற்பார்.... ஒருத்தர் வாங்குவார்..... அதை காணிப்பதிவகம் காசை வாங்கிக் கொண்டு பதிவு செய்யுமாம்....

வந்து நிண்டு கொண்டு , bonafide buyer கத்தரிக்காய் கதை சொல்லிக் கொண்டு ..... என்று தானே கத்துவேன்.

இது சரியெண்டால்... நாளை பக்கிங்காம் அரண்மனையை மலிவா உங்களுக்கு விக்கலாம் எண்டு இருக்கிறன்.....

ராணியம்மா விக்கிற மாதிரி பத்திரம்....

ஆள் இருக்கு... காணிப் பதிவகத்தில.... நான் அதை பார்த்துக் கொள்ளுவன்....

காசைரெடி பண்ணுங்க.....

நீங்கள் என்ன வேணும் எண்டாலும் கத்தலாம் ஆனால் சட்டபடி அணுகாவிட்டால் பைத்தியம் மாதிரி வீதியில் நிண்டு கத்ததான் முடியும்🤣.

நீங்கள் தான் சட்டத்தை ஒதுக்கு புறமாக வைத்து விட்டு, கொமென்சென்ஸ் கதைப்பவர் ஆச்சே, Ealing Common, Wimbledon common போல ஏதாவது ஒரு common இல் உள்ள பார்க்கில் இருந்து கத்த வேண்டியதுதான் வேறு எதுவும் நடவாது.

இப்போ இந்த பாதிரியாருக்கும் இதே நிலைதான். அந்த வீட்டிற்க்குள் இப்போ அவர் போனால் அவரைதான் பொலிஸ் வெளியே போடும். ஏனென்றால் இப்போ legal owner அவரில்லை.

பாதிரியார் கெட்டிகாரர் என்றால் நான் மேலே சொன்னதுபோல் சட்டப்படி அணுகி, முதலில் legal ownership ஐ அவர் பெயருக்கு மாற்ற வேண்டாம்.

இல்லை உங்களை போல் பேர்வழி என்றால் ஏதாவது ஒரு கொமெனில் இருந்து புலம்ப வேண்டியதுதான். வீடு கைக்கு வராது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

ஆம்..... கடவுச்சீட்டு இல்லாமல் பலர் இருக்கிறார்கள்....

மேலும் அடையாள அட்டைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் என்பதால் வாகண அனுமதி பத்திரம் அடையாள அட்டையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

நான் அறிந்த வரையில் இங்கே அப்படியில்லை.. passport, driver’s license, Medicare card, birth certificate இவ்வளவும் கட்டாயம்.. பின் உங்களது பெயர், விலாசம்(driver’s license or passport உடன் ஒத்துவரவேண்டும்) இவை சரியாக இருந்தாலே வங்கியில் உங்களுக்கு ஒரு கணக்கை திறக்கமுடியும். Anti Money Laundering சட்டத்திற்கு பின் இவை கட்டாயம் கவணிக்கப்படுகிறது..

அத்துடன் ஒரு purchase என்றால் title தொடங்கி, credit check, விற்பனை ஒப்பந்தம், copy of transfer என சகலதும் solicitor மூலம் சரிபார்க்கப்படும். மேலதிகமாக வங்கிகளில் கூட quality assurance team or document preparation team இவற்றை சரிபார்க்கும்..

நீங்கள் குறிப்பிட்ட விடயத்தில் பாதிரியாரின் வீட்டிற்கு mortgage இருந்திருக்கவில்லை போலுள்ளது.. இருந்திருந்தால் வங்கி இதனை சரி பார்த்திருக்கும்.. 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

// அதே வாகண லைசன்ஸை பயன்படுத்தி வங்கிக் கணக்கை திறந்துள்ளனர் //

எனக்கு ஒரு சந்தேகம்!, தனியே லைசென்ஸை மாத்திரம் அடையாளமாக காட்டி UKயில் வங்கிக்கணக்கை திறக்க முடியுமா? 100 pointsற்கான identification documents கேட்கமாட்டார்களா?  

பாஸ்போர்ட் இல்லாவிடில் வங்கிகளில் வதிவிட உரிமை அத்தாட்சி கேட்ப்பார்கள். ஆனால் தான் ஒரு பிரிதானியர், இந்நாட்டில் பிறந்தவர், ஆனால் பாச்போர்ட் இல்லை, என வேறு ஏதோ ஒரு டாக்குமெண்டை  கொடுத்து சரி கட்டி இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாவிடில் வாங்கியவர் எந்த வங்கியிலும் கடனைப்பெறாமல் வாங்கியிருந்தால் வங்கிகளால் இவற்றை தடுக்க முடியாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.