Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“ஒரு நாடு ஒரு சட்டம்” வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய வேண்டும்- ஆயர்கள் பேரவை கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“ஒரு நாடு ஒரு சட்டம்” வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய வேண்டும்- ஆயர்கள் பேரவை கோரிக்கை

November 3, 2021

WhatsApp Image 2021 10 27 at 9.19.18 AM “ஒரு நாடு ஒரு சட்டம்” வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய வேண்டும்- ஆயர்கள் பேரவை கோரிக்கை

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் செயலணியொன்றை நேற்று முன்தினம் உருவாக்கியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே அதற்குத் தலைவராக சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நியமித்துள்ளமை பாரிய சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.

இலங்கையினுள் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்பதைச் செயற்படுத்துதல் தொடர்பாகக் கற்றாராய்ந்து அதற்காகச் சட்டவரைவொன்றைத் தயாரித்தல் மற்றும் நீதி அமைச்சினால் இதுவரை இதற்குரியதாக தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவுகள் மற்றும் திருத்தங்களைக் கற்றாராய்ந்து அவற்றின் பொருத்தம் மற்றும் தகுந்த திருத்தங்கள் இருப்பின் அதற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தலும் ஏற்றவாறு உரிய வரைவில் உள்ளடக்குதலும் இந்த செயலணியின் பிரதான பணிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், சட்டரீதியாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்படாமல் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியினால், “ஒரு நாடு ஒரு சட்டம்” என்ற நோக்கத்தை ஆராய்ந்து நடைமுறைப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் அற்றுப் போயுள்ளதாக இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டவரின் கடந்த காலங்களை கருத்திற்கொள்ளாமல், தமிழ், இந்து, கத்தோலிக்க, கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் வழங்காது, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதால் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளதாகவும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை குறிப்பிட்டுள்ளது.

சட்டத்தின் முன்பாக, சகல பிரஜைகளும் சமமாக நடத்தப்படும் அரசியலமைப்பு உருவாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை அறிக்கையூடாக கோரிக்கை விடுத்துள்ளது.

https://www.ilakku.org/withdraw-one-country-one-law-task-force-gazette-catholic-bishops-conference/

ஒரே நாடு ஒரே சட்டம் என்பது நல்ல விடயம்தானே ? சிங்களவருக்கு ஒரு சட்டம் தமிழருக்கு ஒன்று முஸ்லிம்களுக்கு வேறொன்று இருப்பதால்தானே பிரச்சனை. எல்லோருக்கும் ஒரே சட்டம் வருமானால் எல்லோருக்கும் சம உரிமை கிடைக்கும் அல்லவா ?

செயலணியின் தலைவரும் தமிழர் தரப்பு இடம்பெறாததும் முக்கிய பிரச்சனை. இந்தச் செயலணி தெரிவிக்கும் சட்டத் திருத்தங்கள் நேரடியாக அமுல்படுத்தப் பட மாட்டாது. பாராளுமன்றத்தைத் தாண்டி இச் சட்டங்கள் வெளியே வராது என்றே நினைக்கிறேன். இது வேறு எதையோ குறிவைத்துச் நகர்த்தப்படுகிறது.

3 hours ago, இணையவன் said:

ஒரே நாடு ஒரே சட்டம் என்பது நல்ல விடயம்தானே ? சிங்களவருக்கு ஒரு சட்டம் தமிழருக்கு ஒன்று முஸ்லிம்களுக்கு வேறொன்று இருப்பதால்தானே பிரச்சனை. எல்லோருக்கும் ஒரே சட்டம் வருமானால் எல்லோருக்கும் சம உரிமை கிடைக்கும் அல்லவா ?

தவறு இணையவன்

ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் வாழும் நாட்டில் எல்லாருக்கும் ஒரே சட்டம் என்பது பொருந்தாது. கிரிமினல் குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் எல்லா இனத்துக்கும் ஒன்றானதாக இருக்க முடியும், ஆனால் சிவில் சட்டங்கள் அப்படி இருக்க முடியாது. ஏனென்றால் பல சிவில் சட்டங்கள் அந்தந்த இனத்துக்கும் பிரதேசத்துக்கும் பண்பாட்டுக்கும் உரியவை. 

தேச வழமைச் சட்டம், கண்டிய திருமணச் சட்டம், தென் இலங்கை சிங்கள மக்களுக்கு என்று இருக்கும் சில திருமணம் தொடர்பான முறைகள் எல்லாம் இல்லாமல் ஆக்கப்பட்டு ஒரே சட்டம் என்று கொண்டு வந்தால் அந்தந்த பிரதேச / பாரம்பரிய பண்பாட்டு முறைகள் அழிக்கப்பட்டு பெரும்பான்மையான சமூகத்தின் சட்டம் மட்டுமே திணிக்கப்படும். 

அதே நேரத்தில் 18 வயதுக்கு குறைந்த பெண் பிள்ளைகளை திருமணம் செய்ய சட்ட ரீதியில் அங்கீகாரம் கொடுக்கும் முஸ்லிம் விவாக சட்டம். முஸ்லிம் விவாகரத்து சட்டம் (காதிகள் / ஆண்கள் மட்டுமே தீர்மானிக்கும் சட்டம்) என்பனவை திருத்தப்பட்டு மானுட நாகரீகத்துக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டியவை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாடு ஒரு சட்டம் ஜனாதிபதி தனது பதவியையும், செல்வாக்கையும் நீண்ட காலத்தில் நிலைநிறுத்தல் செய்யும் பொருட்டு எடுக்கின்ற செயற்பாடு போல் தோற்றம் தருகின்றது. நடைமுறைக்கு வராததை பற்றி அலசுவது கடினமானது. இது வெறும் பேச்சாகவே கழியலாம். 

5 hours ago, நிழலி said:

தவறு இணையவன்

ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் வாழும் நாட்டில் எல்லாருக்கும் ஒரே சட்டம் என்பது பொருந்தாது. கிரிமினல் குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் எல்லா இனத்துக்கும் ஒன்றானதாக இருக்க முடியும், ஆனால் சிவில் சட்டங்கள் அப்படி இருக்க முடியாது. ஏனென்றால் பல சிவில் சட்டங்கள் அந்தந்த இனத்துக்கும் பிரதேசத்துக்கும் பண்பாட்டுக்கும் உரியவை. 

தேச வழமைச் சட்டம், கண்டிய திருமணச் சட்டம், தென் இலங்கை சிங்கள மக்களுக்கு என்று இருக்கும் சில திருமணம் தொடர்பான முறைகள் எல்லாம் இல்லாமல் ஆக்கப்பட்டு ஒரே சட்டம் என்று கொண்டு வந்தால் அந்தந்த பிரதேச / பாரம்பரிய பண்பாட்டு முறைகள் அழிக்கப்பட்டு பெரும்பான்மையான சமூகத்தின் சட்டம் மட்டுமே திணிக்கப்படும். 

அதே நேரத்தில் 18 வயதுக்கு குறைந்த பெண் பிள்ளைகளை திருமணம் செய்ய சட்ட ரீதியில் அங்கீகாரம் கொடுக்கும் முஸ்லிம் விவாக சட்டம். முஸ்லிம் விவாகரத்து சட்டம் (காதிகள் / ஆண்கள் மட்டுமே தீர்மானிக்கும் சட்டம்) என்பனவை திருத்தப்பட்டு மானுட நாகரீகத்துக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டியவை.

ஆளுக்கொரு சட்டம் என்ற கொள்கையை வைத்துத்தான் தமக்குச் சாதகமான சட்டங்களை சிங்களம் முதன்மைப்படுத்துகிறது என்றே கருதுகிறேன். நீங்கள் சொன்னதுபோல் முஸ்லிம்களின் மனித நாகரிகத்துக்கேதான வழக்கங்கள் ஒழிக்கப்பட்டு பொதுவான ஒழுங்கு முறைக்கு வர வேண்டும் என்பது போலவே ஏனைய சிறுபான்மை இன வழங்கங்களும் (குறிப்பாக சாதி) மனித நேயத்துக்கேற்றவாறு மாற்றப்பட வேண்டும். பொதுவாக இல்லாத என்ன விதமான சட்டங்கள் சிறுபான்மையினருக்கு எதிராக இருக்கும் ? மதச் சடங்குகளா ? கலாச்சாரம் (உடை, வாழ்க்கை முறை போன்றவை), மொழி போன்றவை ஒவ்வொருவருக்கும் தனித்துவமாக ஏனையவரைப் பாதிக்காத வகையில் பேண வேண்டும் என்ற ஒரே சட்டம் இருந்தால் போதுமானது. சிங்கள மொழியில்தான் எல்லாப் பிரதேசங்களிலும் அனைவரும் பேச வேண்டும் என்றால் அது பொதுச் சட்டம் ஆகாது. இத்தகைய சட்டம் வந்தால் அதனைச் சர்வதேச ரீதியாக எதிர்க்க வேண்டி வரும்.

பிரான்சில் ஒரே சட்டம் இருந்தாலும் அது பல்லின மக்கள் தமது மொழியையும் மதத்தையும் பின்பற்ற தாராளமாக அனுமதிக்கிறது - பொது வெளியில் மத அடையாளங்களைத் திணிப்பதைத் தவிர. கனடாவிலும் பல்லின மக்கள் தமது அடையாளங்களுடன் சுதந்திரமாக வாழ்ந்தாலும் நாட்டில் ஒரே சட்டம்தான் உள்ளது. இவை எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு நாம் வாழவில்லையா ? 

17 minutes ago, இணையவன் said:

கனடாவில் ஒரே நாடு ஒரே சட்டம் இல்லை இணையவன். மாகாணங்களுக்கு சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் இருப்பதால், கனடாவின் அரசியலமைப்பை மீறாத வண்ணம் ஒவ்வொரு மாகாணங்களும் தம் மக்களுக்கேற்ப சட்டங்களை உருவாக்கியும் உள்ளன. எல்லாவற்றுக்கும் பொதுவான பெடரல் அரசின் சட்டங்கள் என்பன நாட்டின் இறையான்மை, பாதுகாப்பு, அடிப்படை பொருளாதாரக் கொள்கை போன்றவற்றில் மட்டுமே உள்ளன.

கியூபெக் மாகாணத்தின் சட்டங்கள் பல ஏனைய மாகாணங்களின் சட்டங்களில் இருந்து - குடியேற்றவாசிகளை அனுமதிப்பது தொடக்கம் - வேறுபட்டவை. பிரஞ்சு பேசும் மக்களின் கலாச்சார, பண்பாட்டுக்கு ஏற்றவை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாடு ஒரு சட்டம் என்று சொன்னால் 20...30...40..ஆண்டுகளாக சிறையினுள்ளே   வாடும்தமிழ் இளைஞர்கள் உடனே விடுதலை செய்யுங்கள் இல்லையென்றால் கோத்தா கூட்டணியை சிறையில் அடையுங்கள் இந்த அறிவிப்பு இதுவரை ஒரு நாடுமில்லை ஒரே சட்டமுமில்லை என்பதை உறுதி செய்கிறது அதுமட்டுமல்ல சட்டததை மதிக்காதவனை இதன் தலைவராக நியமித்துள்ள நிலையில் எதிர்காலத்தில் எந்தவொரு மாற்றமும் எற்படாது என்பது உறுதியாக தெரிகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kandiah57 said:

ஒரு நாடு ஒரு சட்டம் என்று சொன்னால் 20...30...40..ஆண்டுகளாக சிறையினுள்ளே   வாடும்தமிழ் இளைஞர்கள் உடனே விடுதலை செய்யுங்கள்

கந்தையா அண்ணா

இதற்கு தான் இணையவன் சிங்களவருக்கு ஒரு சட்டம் தமிழருக்கு ஒன்று முஸ்லிம்களுக்கு வேறொன்று இருப்பதால்தானே பிரச்சனை எல்லோருக்கும் ஒரே சட்டம் வருமானால் எல்லோருக்கும் சம உரிமை கிடைக்கும் என்று சொன்னார்.  கிரிமினல் சட்டமும்  சிவில் சட்டமும்  இனம் மதம் பார்க்காமல் பொதுவான கிரிமினல் சட்டம், பொதுவான சிவில் சட்டம் இருப்பது நாட்டிற்கு அவசியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிற சட்டத்தையே மதிக்க காணேல்லை. சிங்கள மரண கைதிக்கு விடுதலை, தமிழ் அரசியல் கைதிகள் வாழ்நாள் முழுவதும் சிறையில். இந்த லட்ஷணத்தில் ஒரு நாடு, ஒரு சட்டம் எப்படி அமையும் என்பதை கூடி  ஆராயதேவையில்லை. சிங்களமும் பவுத்தமும் இலங்கையின் மொழியும் மதமும் என்றால் நம்ம கற்பகம் கண்டிப்பா ஏற்றுக்கொள்வார், அவரது முன்னைய எழுத்துக்கள் அதனையே பூடகமாக சொல்லியது. தேர்தல் இல்லை, இன, மத, மொழி அடையாளம் இல்லை. இனத்துக்கென்றொரு பிரதேசம் இல்லை. அரசு அடையாளம் காணும் இடத்தை காரணம் இல்லாமல் அபகரித்து தமது இராணுவ கட்டிடங்களை அமைக்கலாம்,   ஒரு பிள்ளைக்கு மேல் பெறக்கூடாது இன்னும் எத்தனையோ.....இன்னொரு சீனா இங்கே உருவாகலாம்.  நீங்கள் தயாரா? 

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கந்தையா அண்ணா

இதற்கு தான் இணையவன் சிங்களவருக்கு ஒரு சட்டம் தமிழருக்கு ஒன்று முஸ்லிம்களுக்கு வேறொன்று இருப்பதால்தானே பிரச்சனை எல்லோருக்கும் ஒரே சட்டம் வருமானால் எல்லோருக்கும் சம உரிமை கிடைக்கும் என்று சொன்னார்.  கிரிமினல் சட்டமும்  சிவில் சட்டமும்  இனம் மதம் பார்க்காமல் பொதுவான கிரிமினல் சட்டம், பொதுவான சிவில் சட்டம் இருப்பது நாட்டிற்கு அவசியமானது.

ஆமாம்  ஒரே சடட்டம் [எந்தச் சட்டமானாலும்]என்று சொல்லிக்கொண்டே சுற்றவாளிகள் சிறையிலும் குற்றவாளிகள் சுதந்திரமாகவும் எப்படிச் சுற்றித்திரிய முடியும் என்பதே எனது கேள்வியாகும் சும்மா கதைத்து காலத்தைப்போக்கமால் செயல்படுத்தவேண்டும் செயல்படுத்துவார்களா?இல்லை ஒருபோதுமில்லை எனெனில்  அவர்கள் தண்டணை அனுபவிக்க விரும்பப்போவதில்லை தலைவர் நியமனம் பற்றி உங்கள் கருத்து என்ன? பிரச்சனை வளர வேண்டும் தீரப்படாது என்பது தான் நோக்கம் 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kandiah57 said:

தலைவர் நியமனம் பற்றி உங்கள் கருத்து என்ன?

அந்த தலைவர் ஒரு இனவாத அமைப்பையே வைத்திருப்பவர் தானே மற்றும் மத குருக்களை மக்களுக்கான சட்ட தயாரிப்பின் போது தூரவே தள்ளிவைத்துவிட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.