Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

சுமார்... 600 ஆண்டுகளின் பின்னர், நீண்டநேர சந்திர கிரகணம் இன்று!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சுமார் 600 ஆண்டுகளின் பின்னர் நீண்டநேர சந்திர கிரகணம் இன்று!

சுமார்... 600 ஆண்டுகளின் பின்னர், நீண்டநேர சந்திர கிரகணம் இன்று!

சுமார் 600 ஆண்டுகளின் பின்னர் நீண்டநேர சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது.

இதன்போது சந்திரன் 99 சதவீதம் சிவப்பு நிறத்தில் தென்படவுள்ளது.

இந்த சந்திர கிரணம், இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11.32 இற்கு ஆரம்பமாகி, 3 மணித்தியாலங்களும், 28 நிமிடங்களும் நீடிக்கும் என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த சந்திர கிரணத்தின் முழுமையான காலம் ஆறு மணித்தியாலங்களும், ஒரு நிமிடமுமாகும்.

இந்த சந்திர கிரகணம் இலங்கையில் தென்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பொலினிசியா, அவுஸ்ரேலியா மற்றும் வடகிழக்கு ஆசியாவின் பல பகுதிகளிலும் இது தென்படவுள்ளது.

https://athavannews.com/2021/1251013

  • கருத்துக்கள உறவுகள்
Posted

600 ஆண்டுகளின் பின்னர் நிகழும் நீண்டநேர சந்திர கிரகணம் இன்று

 
 600 ஆண்டுகளின் பின்னர் நீண்டநேர சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. இதன்போது சந்திரன் 99 சதவீதம் சிவப்பு நிறத்தில் தென்படவுள்ளது என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திர கிரணம், இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11.32க்கு ஆரம்பமாகி, 3 மணித்தியாலங்களும், 28 நிமிடங்களும் நீடிக்கும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

lunareclipsenasa.jpg

எனினும், இந்த சந்திர கிரணத்தின் முழுமையான காலம் ஆறு மணித்தியாலங்களும், ஒரு நிமிடமுமாகும்.
இந்த சந்திர கிரகணம் இலங்கையில் தென்படாது. எனினும் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பொலினிசியா, அவுஸ்திரேலியா மற்றும் வடகிழக்கு ஆசியாவின் பல பகுதிகளிலும் இது தென்படவுள்ளது.
இதற்கு முன்னர், 1440 ஆம் ஆண்டு ஏற்பட்ட நீண்ட சந்திர கிரகணம், 581 ஆண்டுகளின் பின்னர் மீள ஏற்படவுள்ளது.
இதுபோன்ற சந்திர கிரகணம் மீண்டும் 648 ஆண்டுகளின் பின்னர், அதாவது 2,669 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிகழவுள்ளது.
 

https://thinakkural.lk/article/150651

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சா.... பார்த்து 600 வருசமாச்சு..... இன்னும் ஒருக்கா வடிவா பார்க்கத்தான் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Nathamuni said:

சா.... பார்த்து 600 வருசமாச்சு..... இன்னும் ஒருக்கா வடிவா பார்க்கத்தான் இருக்கு.

நாதம்ஸ்… இந்த சந்திரகிரணம் ஐரோப்பாவில் தெரியாதாம்.

அமெரிக்கா, அவுஸ்திரேலியாவில்தான்… தெரியுமாம். 😂

வுட்றா.. வண்டிய… அமெரிக்காவுக்கு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்… இந்த சந்திரகிரணம் ஐரோப்பாவில் தெரியாதாம்.

அமெரிக்கா, அவுஸ்திரேலியாவில்தான்… தெரியுமாம். 😂

வுட்றா.. வண்டிய… அமெரிக்காவுக்கு. 🤣

நான் இப்ப, யாழ்பாணத்தில, வெள்ளத்துக்கில மிதக்கிறன்.....😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Nathamuni said:

சா.... பார்த்து 600 வருசமாச்சு..... இன்னும் ஒருக்கா வடிவா பார்க்கத்தான் இருக்கு.

1 hour ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்… இந்த சந்திரகிரணம் ஐரோப்பாவில் தெரியாதாம்.

அமெரிக்கா, அவுஸ்திரேலியாவில்தான்… தெரியுமாம். 😂

வுட்றா.. வண்டிய… அமெரிக்காவுக்கு. 🤣

 

நான் 2,669 ம் ஆண்டு பாப்பம் எண்டு நினைச்சிருக்கிறன் :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Nathamuni said:

நான் இப்ப, யாழ்பாணத்தில, வெள்ளத்துக்கில மிதக்கிறன்.....😁

நேரம் இருந்தால்… சுமந்திரன் உழுத வயலில், நெல்லு முளைச்சிருக்கா எண்டு பாத்துக் கொண்டு வாங்கோ. 🤣

42 minutes ago, குமாரசாமி said:

 

நான் 2,669 ம் ஆண்டு பாப்பம் எண்டு நினைச்சிருக்கிறன் :grin:

2669’ம் ஆண்டில், சந்திரனில் சனம் குடியேறி… “லைற்” போட்டிருப்பாங்க. 🌗 🌕 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, தமிழ் சிறி said:

நேரம் இருந்தால்… சுமந்திரன் உழுத வயலில், நெல்லு முளைச்சிருக்கா எண்டு பாத்துக் கொண்டு வாங்கோ. 🤣

2669’ம் ஆண்டில், சந்திரனில் சனம் குடியேறி… “லைற்” போட்டிருப்பாங்க. 🌗🌕😂

சந்திரன் வந்து சும்மா தரித்துச் செல்லுமிடம்......நாங்கள் எல்லாம் செவ்வாயில்தான் வாசம் செய்வோம்......!   🪐

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

நேரம் இருந்தால்… சுமந்திரன் உழுத வயலில், நெல்லு முளைச்சிருக்கா எண்டு பாத்துக் கொண்டு வாங்கோ. 🤣

அந்த உழுவைக்கு கொஞ்சூண்டு புல்லு முளைச்சிருக்கும்.. வெட்டிக்கொண்டுபோய் மாட்டுக்கு போடலாம்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அந்த உழுவைக்கு கொஞ்சூண்டு புல்லு முளைச்சிருக்கும்.. வெட்டிக்கொண்டுபோய் மாட்டுக்கு போடலாம்..

புல்லுமட்டும் தான் எண்டால் பிறகேன் வெட்டி மினககெடுவான்.....

மாட்டைக் கொண்டே.... மேய விட வேண்டியது தானே....

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.