Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாரிதாஸ் கைது: சீமான் எதிர்ப்பு ஏன்?- சுபவீ விளக்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாரிதாஸ் கைது: சீமான் எதிர்ப்பு ஏன்?- சுபவீ விளக்கம்!

 
spacer.png
 

டிசம்பர் 8 ஆம் தேதி, குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் நாட்டின் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் வீரமரணம் அடைந்தனர். இதுகுறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட யு ட்யூபர் மாரிதாஸ் டிசம்பர் 9ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.

இந்நிலையில் தமிழக பாட நூல் அறிவுரைக் குழு உறுப்பினரும், திராவிட தமிழர் பேரவை தலைவருமான பேராசிரியர் சுபவீரபாண்டியன் இவ்விவகாரம் தொடர்பாக இன்று (டிசம்பர் 11) ஒரு விளக்கம் அளித்துள்ளார்.

“இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத், சில நாள்களுக்கு முன்னால், ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் காலமானார். அவருடன் பயணித்தவர்களில் ஒருவரைத் தவிர மற்ற 12 பேரும் அவ்விபத்தில் இறந்து போனார்கள்.

அதிர்ச்சியும் வேதனையும் நிறைந்த இச்செய்தி நாடு முழுவதும் துயரத்தைக் கொண்டுவந்துள்ளது. இது இயற்கையான விபத்துதானா அல்லது வேறு சதி வேலைகள் ஏதேனும் உள்ளனவா என்று ஆராய, ஒன்றிய அரசு ஒரு குழுவையும் நியமித்துள்ளது.

இந்நிலையில், வழக்கம்போல் எந்த ஆதாரமும் இல்லாமல், தன் மனம் போன போக்கில் வலையொளியில் பேசக்கூடிய மாரிதாஸ் என்னும் ஒரு நபர், தன் ட்விட்டர் பக்கத்தில், ’திமுக ஆட்சியில் தமிழ்நாடு காஷ்மீராக மாறிக்கொண்டிருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார். அதாவது, பிபின் ராவத் மரணத்திற்குத் திமுக அரசு காரணம் என்பதுபோல் அந்தப் பதிவு அமைந்துள்ளது. அந்த மாரிதாஸ் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவதூறாகப் பேசுபவர்களின் மீது கைது நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருப்பதை நாம் அண்மையில் பார்க்கிறோம். கிஷோர் கே சாமி, கல்யாணராமன், சாட்டை முருகன், தட்க்ஷிணாமூர்த்தி ஆகிய நபர்களின் வரிசையில் இப்போது இந்த மாரிதாஸ். இவர்கள் எல்லோருமே பொறுப்பற்றும், ஆதாரமற்றும் பேசும் குணமுடையவர்கள். கண்ணியக் குறைவாகப் பேசுவதிலும், எழுதுவதிலும் தங்களுக்கென்று ஒரு தனி இடத்தைப் பெற்றிருப்பவர்கள்!

கைதாகும் வரையில் வீராதி வீரர்களைப் போல் முழக்கமிடும் இவர்கள், கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டவுடன், "அன்று எனக்கு காய்ச்சல், உடம்பு சரியில்லை, அந்த உஷ்ணத்தில் உளறி விட்டேன்" என்பதாக, சாவர்க்கர் பாணியில் மனு கொடுப்பார்கள்!

மாரிதாஸ் கைது செய்யப்பட்ட பிறகு, இரண்டே இரண்டு பேர் அதனைக் கண்டித்துப் பொங்கி எழுந்துள்ளனர். ஒருவர் பாஜக அண்ணாமலை. இன்னொருவர், பாஜகவின் புதிய கிளைச் செயலாளர் சீமான்.

சீமானுடன் சேர்ந்து பயணிக்கும் இயக்குனர் களஞ்சியம் கூட இதில் சற்றுப் பின்வாங்கிவிட்டார். அபாண்டமாகப் பழி சுமத்தியிருக்கும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டது சரிதான் என்றும், குண்டர் சட்டத்திலேயே அவரை அடைக்கலாம் என்றும் கூறியுள்ளார். இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டிக்கும் அளவுக்குத் தான் அவ்வளவு மோசமான வலதுசாரி இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். ('கொஞ்சூண்டு' வலதுசாரி போலிருக்கிறது). சாணக்கியா பாண்டே கொஞ்சம் பூசி மெழுகி, வழக்குப் போட்டிருக்கலாம், கைது செய்ய வேண்டியதில்லை என்கிறார்”என்று குறிப்பிட்டிருக்கும் சுபவீரபாண்டியன் தொடர்ந்து,

“ அண்ணாமலை ஆர்ப்பரிப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. சீமான் தன் வேடத்தை இப்படிச் சட்டென்று கலைத்துக் கொண்டதுதான் சற்று வியப்பாக உள்ளது. 'ஜெய்பீம்' பிரச்சினையிலும், அன்புமணியின் வலியையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று சீமான் 'அருளாசி' வழங்கினார்.

சீமான் கருத்துரிமை பற்றிக் கவலைப்படுகிறார். தான் ஆட்சிக்கு வந்ததும் (!!!), எதிர்க்கருத்து சொல்பவர்களைப் பச்சை மட்டையால் அடித்துத் தோலை உரித்து விடுவேன் என்று கூறும் ஜனநாயகவாதியான சீமான், கருத்துரிமைக்காக இப்போது கவலைப்படுகிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொதுவாக மிக மென்மையாக நடந்து கொள்கிறார். வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் எல்லோருக்குமான அரசு இது என்பதை அடிக்கடி தன் சொல்லாலும், செயலாலும் நினைவுபடுத்துகிறார். எனவே அவர் மென்மையான மனிதராகத்தான் எப்போதும் நடந்து கொள்வார், நாம் என்ன வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம் என்று சிலர் நினைக்கின்றனர். வேறு சிலர் சொல்கின்றனர் - ரஷ்ய மொழியில் ஸ்டாலின் என்ற சொல்லுக்கு 'இரும்பு மனிதன்' என்று பொருளாம்”என்று கூறியிருக்கிறார் சுபவீரபாண்டியன்.

 

https://minnambalam.com/politics/2021/12/11/18/maridoss-arrest-seenan-oppose-subavee-explain-mkstalin-iron-man

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

அதிர்ச்சியும் வேதனையும் நிறைந்த இச்செய்தி நாடு முழுவதும் துயரத்தைக் கொண்டுவந்துள்ளது. இது இயற்கையான விபத்துதானா அல்லது வேறு சதி வேலைகள் ஏதேனும் உள்ளனவா என்று ஆராய, ஒன்றிய அரசு ஒரு குழுவையும் நியமித்துள்ளது

சுப வீரப்பாண்டியனுக்கு சொறீலங்கா இனப்படுகொலை இராணுவத் தளபதிக்கும் என்ன வித்தியாசம். இந்த முன்னாள் ஐ பி கே எவ் அதிகாரியின் மரணத்தில்.. சுபவீ க்கு மட்டுமல்ல.. சொறீலங்கா இராணுவத் தளபதிக்கும் கவலை. நேரடியாக இவரது மரண வீட்டில் கலந்து கொள்ள உள்ளதாக செய்தி படித்த ஞாபகம்.

என்ன கரு நா நிதியின் வால்பிடிகள் எல்லாமே ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு மறைமுக ஆதரவாளர்களே. 

1 hour ago, nedukkalapoovan said:

சுப வீரப்பாண்டியனுக்கு சொறீலங்கா இனப்படுகொலை இராணுவத் தளபதிக்கும் என்ன வித்தியாசம். இந்த முன்னாள் ஐ பி கே எவ் அதிகாரியின் மரணத்தில்.. சுபவீ க்கு மட்டுமல்ல.. சொறீலங்கா இராணுவத் தளபதிக்கும் கவலை. நேரடியாக இவரது மரண வீட்டில் கலந்து கொள்ள உள்ளதாக செய்தி படித்த ஞாபகம்.

என்ன கரு நா நிதியின் வால்பிடிகள் எல்லாமே ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு மறைமுக ஆதரவாளர்களே. 

நெடுக்கர் உங்கள் அண்ணன் சீமான் இப்போது முதலமைச்சாராக இருந்திருந்தால் இறந்த ராணுவதளபதிக்கு வீர வணக்கம்  செலுத்தி பத்திரிகைகளுக்கு பேட்டியும் கொடுத்திருப்பார்.  

  • கருத்துக்கள உறவுகள்

CDS Chopper Crash | ‛எனக்கு டவுட் இருக்கு... சுப்ரீம் கோர்ட் விசாரிக்கணும்’ -ஹெலிகாப்டர் விபத்து குறித்து சு.சாமி., பகீர்!

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது.

By: ABP NADU | Updated : 09 Dec 2021 01:30 PM (IST)

 

FOLLOW US: 
 
Coonoor Chopper Crash Doubts about how CDS bipin rawat, his wife, several senior military officers died: Subramanian Swamy

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி

 

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை அமைக்கப்பட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று (டிச.8) காலை 10.30 மணிக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்துக்கு Mi-17V5 ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. அப்போது கடும் பனிமூட்டம் காரணமாக காட்டேரி மலைப்பகுதியில் உள்ள மலை முகடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்தனர். 

 

விபத்தில் சிக்கி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் 80 சதவீதத் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

 

பிபின் ராவத்தின் மறைவுக்கு நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். பிபின் ராவத்தின் மறைவையடுத்து தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும், அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் பிபின் ராவத் பிறந்த மாநிலமான உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது.

 

 

 

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி உள்ளிட்ட 3 பொருட்கள் காட்டேரி பகுதியில் உள்ள நச்சப்புராசத்திரம் மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. இந்த கருப்புப் பெட்டி டெல்லி அல்லது பெங்களூரு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 

 

டெல்லியிலிருந்து வந்த தொழில்நுட்பக் குழுவும், வெலிங்டன் ராணுவ மையக் குழுவும் இதனைக் கண்டுபிடித்தது. 3 மணிநேரமாக நடைபெற்ற தீவிரமான தேடுதலுக்குப் பிறகு இந்த கறுப்புப்பெட்டியைக் குழு கண்டுபிடித்ததாகவும் ராணுவத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மேலும், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் தடயவியல் துறை இயக்குநர் சீனிவாசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு ஆய்வு நடத்தி வருகிறது. 5 அதிகாரிகள் கொண்ட குழுவினர், தற்போது விபத்து நடந்த காட்டேரி பகுதியில் தடயங்களைச் சேகரித்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்துத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. இதனால் மத்திய அரசு இதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி போன்ற வெளியாட்கள் தலைமையில் விசாரணையைத் தொடங்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 
 


 

 

 

 

முன்னதாக, ''வெளியில் இருக்கும் எதிரியைவிட உள்ளுக்குள் இருக்கும் எதிரியால் அதிக ஆபத்து ஏற்படும். வெளியில் இருக்கும் எதிரியை நீங்கள் அழிக்கலாம். ஆனால் உள்ளுக்குள் இருக்கும் எதிரியுடன் நீங்கள் வாழ்ந்துதான் ஆக வேண்டும்'' என பாஜக தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி நேற்று ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

https://tamil.abplive.com/news/tamil-nadu/coonoor-chopper-crash-doubts-about-how-cds-bipin-rawat-his-wife-several-senior-military-officers-died-subramanian-swamy-29500

  • கருத்துக்கள உறவுகள்

 

திமுக அழிக்கப்பட வேண்டும் - 10 காரணங்கள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆனா ஒரு விசயத்தில நாம் தமிழரை பாராட்ட வேணும்

இரெண்டு தரம் சாட்டை துரைமுருகன் எனும் யூடியூப்பர தூக்கி உள்ள வச்சாங்க. வக்கீல் அணி போராடி, (துரைமுருகனும் தனக்கு சிறுநீரக பிரச்சனை என்று கடிதம் கொடுத்ததாக பேச்சு) வெளில வந்துட்டார்.

ஆனா பிஜேபிக்கு வேலை செய்த கல்யாணராமன், கிசோர் பலகாலமாக களி தின்கிறார்கள்/டார்கள்.

மாரி ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட். பிறகு அப்படியே ஹிந்துவாவால் உள் “வாங்க” பட்டு ரொம்ப சின்சியரா சங்பரிவருக்கு வேலை செய்தார். அவரையும் கை விட்டு விடுவார்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nunavilan said:

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை அமைக்கப்பட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுப்பிரமணிய சுவாமிகளே! ராஜீவ் கொலையில் உங்கள் மீதும் சந்தேகமுள்ளதாமே? நான் சொல்லலை....தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தான் சொன்னாங்க...😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஆனா பிஜேபிக்கு வேலை செய்த கல்யாணராமன், கிசோர் பலகாலமாக களி தின்கிறார்கள்/டார்கள்.

(மாரி உட்பட) இவர்களை உள்ள போட வைச்சதும், கேடி ராகவன் கதை முடித்ததும், சங்கி வேலையாமே.....

ரொம்ப அலம்பறை பணணிணாலும் சிக்கல் தான்.

அய்யரு.... எச்ச ராசா... நோ ரச்சிங்....

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

(மாரி உட்பட) இவர்களை உள்ள போட வைச்சதும், கேடி ராகவன் கதை முடித்ததும், சங்கி வேலையாமே.....

ரொம்ப அலம்பறை பணணிணாலும் சிக்கல் தான்.

அய்யரு.... எச்ச ராசா... நோ ரச்சிங்....

ஓமாம். சூரியன் கிழக்கில் உதிப்பதும் மோடி சொல்லித்தானாம்🤣.

கிசோரும் ஐயர்தான். கல்யாணராமனும் ஐயர்தான் என நினைக்கிறேன்.

எச் ராஜா உள்ளே இருப்பதை விட வெளியே இருந்தால் தமக்கு லாபம் என கணக்கு போடுகிறது திமுக என நினைக்கிறேன் 🤣.

அத்தோடு “ராஜாவை கைது பண்ணு பண்ணு” எண்டு தம்பிகள் கத்தி தொண்டை தண்ணி வத்துவதை பார்த்து ரசிக்கும் திட்டமோ தெரியாது🤣.

#திருட்டு திமுக. கைது பண்ணினாலும், பண்ணாட்டிலும் அதில் ஒரு சுயநலம் இருக்கும்.

பாண்டே கெட்டிகாரன். அளவோடு நிறுத்தி கொள்வார்.

மாரிதாசும் இதுவரைக்கும் அப்படித்தான்.

கல்யாணராமன் போல் மிரட்டல் விடவோ, துரை முருகன் போல்  சட்டத்தை கையில் எடுத்து ரவுடியிசம் பண்ணவோ, கிசோர் போல் பாலியல் சைக்கோதனம் பண்ணியோ மாரிதாஸ் மாட்டவில்லை.

மாரிதாஸ் இந்த ஆபாச யுடியூப்பர் குப்பைகளை போல அன்றி தன்னை ஒரு சமூக ஆர்வலராக முன்னிலை படுத்தியவர்.  

மிக கவனமாக பேசுவார்.

அமித்ஷா நேரடியாக அனுப்பி வைத்த ஆள் வேறு.

தருணம் பார்திருந்தது திமுக.

வசமாக “தேசிய ஒருமைபாட்டுக்கு குந்தகம்” என்ற வகையில் வாயை விட்டு மாட்டி கொண்டார்.

ஆனாலும் ஏனையோரை விட மாரிதாஸ் விரைவில் வெளியே வருவார் என்றே நினைக்கிறேன்.

பிகு

சங்கிகள் தமிழ்நாட்டில் சோ இராமசாமி போல ஒருத்தரைத்தான் தேடுகிறார்கள்.  

ஆனால் அவர்களுக்கு வாய்ப்பது என்னவோ வி கே இராமசாமி போல ஆட்கள்தான்🤣.

பிற்சேர்கை

கேடி இராகவன் கதையை அண்ணாமலைதான் முடிப்பதாக நினைத்து இறங்க, மதனை வைத்து ஆட்டுகுட்டி முகத்தில் கரியை பூசி, அத்தோடு இராகவன் கதையையையும் முடித்தது திமுக என நான் நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

ஓமாம். சூரியன் கிழக்கில் உதிப்பதும் மோடி சொல்லித்தானாம்🤣.

கிசோரும் ஐயர்தான். கல்யாணராமனும் ஐயர்தான் என நினைக்கிறேன்.

எச் ராஜா உள்ளே இருப்பதை விட வெளியே இருந்தால் தமக்கு லாபம் என கணக்கு போடுகிறது திமுக என நினைக்கிறேன் 🤣.

அத்தோடு “ராஜாவை கைது பண்ணு பண்ணு” எண்டு தம்பிகள் கத்தி தொண்டை தண்ணி வத்துவதை பார்த்து ரசிக்கும் திட்டமோ தெரியாது🤣.

#திருட்டு திமுக. கைது பண்ணினாலும், பண்ணாட்டிலும் அதில் ஒரு சுயநலம் இருக்கும்.

பாண்டே கெட்டிகாரன். அளவோடு நிறுத்தி கொள்வார்.

மாரிதாசும் இதுவரைக்கும் அப்படித்தான்.

கல்யாணராமன் போல் மிரட்டல் விடவோ, துரை முருகன் போல்  சட்டத்தை கையில் எடுத்து ரவுடியிசம் பண்ணவோ, கிசோர் போல் பாலியல் சைக்கோதனம் பண்ணியோ மாரிதாஸ் மாட்டவில்லை.

மாரிதாஸ் இந்த ஆபாச யுடியூப்பர் குப்பைகளை போல அன்றி தன்னை ஒரு சமூக ஆர்வலராக முன்னிலை படுத்தியவர்.  

மிக கவனமாக பேசுவார்.

அமித்ஷா நேரடியாக அனுப்பி வைத்த ஆள் வேறு.

தருணம் பார்திருந்தது திமுக.

வசமாக “தேசிய ஒருமைபாட்டுக்கு குந்தகம்” என்ற வகையில் வாயை விட்டு மாட்டி கொண்டார்.

ஆனாலும் ஏனையோரை விட மாரிதாஸ் விரைவில் வெளியே வருவார் என்றே நினைக்கிறேன்.

பிகு

சங்கிகள் தமிழ்நாட்டில் சோ இராமசாமி போல ஒருத்தரைத்தான் தேடுகிறார்கள்.  

ஆனால் அவர்களுக்கு வாய்ப்பது என்னவோ வி கே இராமசாமி போல ஆட்கள்தான்🤣.

பிற்சேர்கை

கேடி இராகவன் கதையை அண்ணாமலைதான் முடிப்பதாக நினைத்து இறங்க, மதனை வைத்து ஆட்டுகுட்டி முகத்தில் கரியை பூசி, அத்தோடு இராகவன் கதையையையும் முடித்தது திமுக என நான் நம்புகிறேன்.

எச்ச ராசா, வடக்கர்..... ஹரிஹரசர்மா.... மத்ததெல்லாம்.... லோக்கல்....

அது சரி..... மதன்.... கேடி.... ஆட்டுக்குட்டி...... உங்க கதை நல்லா இருந்தாலும்.... ஸ்ராலின்..... கட்டுமரம் அல்ல.... சூதுவாதறியா பிள்ளைப்பூச்சி.

உதயண்ணா..... இருவாரத்துக்கு ஒருமுறை  துபாயில இருப்பார். சொல்லும் காரணம்; ஸ்போட்ஸ்......

உண்மையான காரணம்; கலக்சன்..... இன்வெஸ்டிங்.....

அப்புறம்..... சேர்ந்து நடிக்கிற அம்மணிகளுடன் சூட்டிங் டிஸ்கசன்....

கட்டுமரத்தின் உழைப்பு எங்கே..... இவர்கள் எங்கே?

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Nathamuni said:

எச்ச ராசா, வடக்கர்..... ஹரிஹரசர்மா.... மத்ததெல்லாம்.... லோக்கல்....

அது சரி..... மதன்.... கேடி.... ஆட்டுக்குட்டி...... உங்க கதை நல்லா இருந்தாலும்.... ஸ்ராலின்..... கட்டுமரம் அல்ல.... சூதுவாதறியா பிள்ளைப்பூச்சி.

உதயண்ணா..... இருவாரத்துக்கு ஒருமுறை  துபாயில இருப்பார். சொல்லும் காரணம்; ஸ்போட்ஸ்......

உண்மையான காரணம்; கலக்சன்..... இன்வெஸ்டிங்.....

அப்புறம்..... சேர்ந்து நடிக்கிற அம்மணிகளுடன் சூட்டிங் டிஸ்கசன்....

கட்டுமரத்தின் உழைப்பு எங்கே..... இவர்கள் எங்கே?

பார்பனர் எண்டாலே வடக்கர்தானே🤣.

ஆனால் ராஜாவுக்கு கட்சியில், டெல்லியில் இருக்கும் செல்வாக்கு இவர்களுக்கு இல்லைத்தான். முன்னாள் எம் எல் ஏ. முன்னாள் பாஜாக தேசிய பொறுப்பில் இருந்தவர். அதுவும் அவரை விட்டு பிடிக்க ஒரு காரணமாய் இருக்கலாம். அல்லது அரசியல் பேச்சுக்கு இல்லாமல், மாரிதாஸ் போல வசமாக மாட்டும் வரை வெவிட்டிங்கோ தெரியாது.

கட்டுமரம் ஒரு யுகத்திருடன் 🤣.

ஆனால் அவருக்கு எம் ஜி ஆர், ஜெயா போன்ற சமனான ஆளுமைகள் இருந்தமையால் just to keep above the water level கடுமையாய் உழைக்க வேண்டி இருந்தது.

ஸ்டாலினோ, சேப்பாக்கம் சேகுவாரா, வாழும் சாக்ரடீஸ் என சவுக்கு சங்கர் நக்கல் அடிக்கும் (நீங்கள் முன்பு திமுக செம்பு என எழுதிய அதே சவுக்கு சங்கர்🤣) உதய்யோ அந்தளவுக்கு கெட்டிகார திருடர்களாயும் இருக்க தேவையில்லை, உழைக்கவும் தேவையில்லை.

ஏனென்றால் அவர்களை எதிர்த்து தமிழ் நாட்டில் இப்போ அரசியல் செய்யும் அத்தனை தலைவர்களும் கரடியாய் கத்தினாலும் மக்கள் திரும்பியும் பார்க்காத அளவுக்கு மக்கள் நம்பிக்கை வைக்காத, வைக்க முடியாத காமெடி பீஸ் தலைவர்களாயே இருக்கிறார்கள்.

உள்ளதில் ஓரளவுக்கு இவர்களுக்கு டப் கொடுக்க கூடியவர் “வீரத்தமிழச்சி” அக்கூஸ்ட் நம்பர் 2. ஆனால் அவரே தடுமாறுகிறார். 

ஒரு வேளை விஜையோ அல்லது வேறு ஒரு நபரோ வந்து எதிர்க்கும் வரை ஸ்டாலின் போன்ற ஒரு திறமையற்றவர் கூட தப்பி பிழைக்கும் அளவில்தான் இருக்கிறது மாற்று தலைமைகளின் இலட்சணம்.

பிகு

ராஜா பிறந்தது தமிழ் நாட்டில்தான். பெற்றார் பீகாரில் இருந்து வந்தோர் என நினைக்கிறேன். அப்படி பார்த்தால் சில தமிழ் நாட்டு தலைவர்களும் மலையாளிகள்தானே.

  • கருத்துக்கள உறவுகள்

பேசுனா கைது பண்ணுவியா? மாரிதாசா ஆதரிச்சனா? சீமான் ஆவேசம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மாரிதாஸ் என்ற யூடியூபர் மீதான வழக்கு ரத்து - சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

3 மணி நேரங்களுக்கு முன்னர்
Maridhas Answers

பட மூலாதாரம்,@MARIDHASANSWERS TWITTER HANDLE

 
படக்குறிப்பு,

மோசடியாக போலி மின்னஞ்சல் அனுப்தாக மாரிதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்னும் அப்படியே இருக்கிறது.

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணத்தையொட்டி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்ததாக பா.ஜ.க. ஆதரவாளரான மாரிதாஸ் என்ற யூடியூபர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவு.

மாரிதாஸ் என்ற யூடியூபர் கடந்த டிசம்பர் 9ஆம் தேதியன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணத்தையொட்டி கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில் தமிழ்நாடு காஷ்மீராக மாறி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக பாலகிருஷ்ணன் என்பவர் மதுரை மாநகரக் காவல் துறையில் புகார் அளித்ததையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டு தேனி மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனை எதிர்த்து, மாரிதாஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மாரிதாஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "நான் சமூக சிந்தனையுடன் பல்வேறு விஷயங்கள் தொடர்பான ஆவணங்களைச் சேகரித்து அது சம்பந்தமான பொதுவான எனது கருத்துகளை பேஸ்புக், ட்விட்டர், யு டியூப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவுசெய்து வருகிறேன். இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி இந்திய முப்படைத் தளபதி இறந்தது குறித்து யாரும் தேவையின்றி கருத்துகலைப் பதிவிட வேண்டாம் என ட்விட்டரில் தெரிவித்தேன்.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் என் மீது வழக்குப் பதிவுசெய்து கைதுசெய்துள்ளனர். என் மீது வழக்குப் பதிவுசெய்வதிலும் கைது நடவடிக்கையிலும் சட்டத்தைப் பின்பற்றவில்லை. எனவே என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை.
 
படக்குறிப்பு,

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை.

அந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பாக திங்கட்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜராகி, "அவரது ட்விட்டரில் முப்படைத் தலைமைத் தளபதி குறித்த கருத்துகளின்போது தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இதைப் பார்த்தால் தவறாக நினைப்பார்கள். மாநிலத்தின் நேர்மை குறித்தே கேள்வியெழுப்பியுள்ளார். எந்த அடிப்படையில் இந்தக் கருத்தைப் பதிவுசெய்தார் என விசாரிக்கவேண்டியுள்ளது" என்ற வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "சுப்பிரமணிய சுவாமியும் இது போன்ற கேள்வியை எழுப்பயிருந்தாரே, அவர் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டதா, ஜெயலலிதா மரணத்தின் போதும் இதுபோன்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டனவே" என்று கூறினார்.

பிறகு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மாரிதாஸ் கைதுசெய்யப்பட்டதால், அவரது கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்பட்டிருக்கிறது" என்றார். புகார் அளித்த பாலகிருஷ்ணன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க அவகாசம் கோரினார். இதையடுத்து வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மாரிதாஸ் என்ற பா.ஜ.க. ஆதரவு யூடியூபர் கைது

மாரிதாஸ் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான பாலகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞர் "மாரிதாஸைப் பலர் பின்தொடர்கிறார்கள். இந்த வழக்கு இப்போது துவக்க நிலையில்தான் இருக்கிறது. இந்தத் தருணத்திலேயே இதனைத் தடைசெய்யக்கூடாது. இது விசாரணையைப் பாதிக்கும்" என்று தெரிவித்தார்.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இதுபோலப் பதிவிட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.

அனைத்துத் தரப்பினர் வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாரிதாஸ் மீது சட்டப் பிரிவுகள் 153 A (ஜாதி, மத, இனங்களுக்குள் முரண்பாடு ஏற்படுத்தும் வகையில் பேச்சாலும் எழுத்தாலும் செய்கையாலும் தூண்டி விடுதல்) , 504 (தனது கருத்தால் அல்லது பதிவால் சமூகத்தில் பிரச்னை ஏற்படும் என தெரிந்தே பதிவிடுதல்), 505 ( ii ) (ஜாதி, மத, இன வேறுபாடு ஏற்படுத்தி பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் தூண்டி விடுதல்), 505 ( i ) ( b ) (பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது செல்லாது என்று கூறி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு தவிர, மோசடியாக போலி மின்னஞ்சல் அனுப்பிய வழக்கிலும் மாரிதாஸ் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

https://www.bbc.com/tamil/india-59648257

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஏராளன் said:

இந்த வழக்கு தவிர, மோசடியாக போலி மின்னஞ்சல் அனுப்பிய வழக்கிலும் மாரிதாஸ் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

களி தொடரும்?🤣

On 12/12/2021 at 00:11, goshan_che said:

ஆனாலும் ஏனையோரை விட மாரிதாஸ் விரைவில் வெளியே வருவார் என்றே நினைக்கிறேன்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.