Jump to content

இந்தியாவிற்கு கூட்டாக கடிதம் அனுப்ப தமிழ், முஸ்லிம் கட்சிகள் தீர்மானம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிற்கு கூட்டாக கடிதம் அனுப்ப தமிழ், முஸ்லிம் கட்சிகள் தீர்மானம்!

13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என இந்தியாவிற்கு கூட்டாக கடிதம் அனுப்புவதற்கு தமிழ், முஸ்லிம் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

கொழும்பில் இன்று தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் நடைபெற்ற  கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் தலைவர்களான இரா. சம்பந்தன், ரவூப் ஹக்கீம், சி.வி. விக்னேஸ்வரன், மனோ கணேசன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

ரெலோ அமைப்பின் ஏற்பாட்டில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என ஆரம்பிக்கப்பட்ட குழுவின் முதலாவது அமர்வு கடந்த மாதம் 2ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

அதன் இரண்டாம் கட்டமாக இன்று கொழும்பில் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது 13 ஆவது திருத்தத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தீர்மானம் எடுக்கப்பட்டு, அது தொடர்பில் இந்தியாவுக்கு கூட்டாக அறிவிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் கலந்துரையாடவுள்ளனர்.

இந்தக் கலந்துரையாடலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-(3)

 

http://www.samakalam.com/இந்தியாவிற்கு-கூட்டாக-கட/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் .... அந்த பதின்மூன்று அயிற்றம் சாம்பாரை ஊத்துங்கோ....🤦‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா கட்சி லெற்றர் பேடிலும் எழுதி(ரைப்) மொத்தமா கிளிப் அடிச்சு கொடுப்பினமா ? 

உலகம் எங்கயோ போய்கொண்டுருக்க ..

1cbd52d0-b3a6-4386-a929-7669692f73d1.961

அந்த பேப்பர் கொம்பனி எல்லாம் இழுத்து மூடுங்கப்பா...👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடு நடுவில மாடு,சாணி,மாட்டுமூத்திரம்,பிரியாணி அண்டா போட்டுக்குங்க… 

அப்புரம் அடுத்தவாட்டி பாளிமெண்ட் போறப்போ ஒரு பசு மாட்டில் 13 எழுதி அழைத்து செல்லவும்.. சிங்களவன் அடிச்சு மாட்டுக்கு ஏதும் ஆனா பிரச்சனை இந்திய அளவில் பரவும்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதி தேர்தல் - 48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்க தீர்மானம் ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்கள் விரிவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமைதியான காலப்பகுதியில் பிரசாரம் மற்றும் சமூக ஊடகங்களில் சேறு பூசுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் சமூக ஊடக வலையமைப்பை சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் திட்டத்தை தயாரிப்பதில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. தேர்தல் பிரசாரங்கள் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைவதோடு, 19ஆம் மற்றும் 20ஆம் திகதிகளில் அமைதியான காலகட்டமாக காணப்படுகின்றது. இந்த காலப்பகுதியில் பிரச்சாரம் செய்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக ஊடக குழுக்களுடன் கலந்தாலோசித்த பின்னர் அமைதியான காலத்தில் தேர்தல் பிரசாரம் மற்றும் அவதூறு பரப்புரைகளை நிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவதூறு பிரச்சாரங்கள் இந்த பிரச்சாரங்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த நிறுவனங்களுடன் கலந்துரையாடி சமூக ஊடகங்களில் ஏற்கனவே வெளியிடப்பட்ட அவதூறு பிரச்சாரங்கள் போன்றவற்றை நீக்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார். அமைதியான காலத்தில் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் முறை ஒன்றை தயாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/sl-president-election-2024-social-media-banned-1726320709#google_vignette
    • Published By: DIGITAL DESK 3  14 SEP, 2024 | 12:19 PM ஆபிரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதன்முதலில் குரங்கம்மை  தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் வெள்ளிக்கிழமை  அனுமதி வழங்கியுள்ளது. ஆபிரிக்க நாடான கொங்கோவில் 'எம் பாக்ஸ்' எனப்படும் குரங்கம்மை நோய் முதலில் கண்டறியப்பட்டது. இதுவரை ஆபிரிக்காவில் குரங்கம்மைக்கு 107 பேர் உயிரிழந்துள்ளனர். 3,160 பேருக்கு தொற்று பாதிப்பு உள்ளது. பெரியம்மையை ஏற்படுத்தும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கிருமி தான் குரங்கம்மை நோயை ஏற்படுத்துகிறது. காய்ச்சல், உடல் வலி, உடல் சில்லிடுதல் ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகள். மிகவும் தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு முகம், கை, மார்பு மற்றும் பிறப்புறுப்புகளில் கட்டிகள் தோன்றும். இறப்பு ஏற்படும். இந்நிலையில் குரங்கம்மைக்கான தடுப்பூசியை, டென்மார்க்கைச் சேர்ந்த, 'பவாரியன் நார்டிக்' எனும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்தது. பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பின் உலக சுகாதார ஸ்தாபனம் அந்த தடுப்பூசிக்கு நேற்று அனுமதி வழங்கியது. அந்த அனுமதியில், இந்த ஊசியை, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தற்போது பயன்படுத்த வேண்டும். இரண்டு டோஸ்களாக இந்த தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். குழந்தைகளிடையே குரங்கம்மை அதிகம் பரவியிருந்தால், அந்த சூழலில் தடுப்பூசியின் ஆபத்துக்களை விட, நன்மை அதிகம் எனில் அப்போது பயன்படுத்தலாம் என, தெரிவிக்கப்ட்டுள்ளது. தடுப்பூசி தேவைப்படும் ஆபிரிக்க நாடுகளுக்கு அதிகளவில் கொள்முதல், நன்கொடை போன்றவை வாயிலாக விநியோகிக்க உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரியாசெஸ் அழைப்பு விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/193658
    • வணக்கம் வாத்தியார் . .............! ஆண் : நீராம்பல் பூவே நீராம்பல் பூவே மின்சாரல் பட்டதாலே ஈரம் ஆனேனே ஆண் : நெஞ்சத்தில் நீயே நச்சென்று தானே நங்கூரம் இட்டதாலே நின்றே போனேனே ஆண் : கால் கொண்ட மின்னல் கணுவில்லா கண்ணால் காதோரம் கூந்தல் காற்றை ஆளை அள்ளாதோ ஆண் : நிழலின்ற கண்கள் நீரில்லா மீன்கள் தூண்டிலாய் தாமே மாறி என்னை கொல்லாதோ ஆண் : ஏனோ தோணுது பெண்ணே காற்றிலே கஸ்தூரி உன் நறுமணம் தானடி ஆண் : யார் அந்தப் பெண்ணோ யார் பெற்ற பெண்ணோ அவளோடு சேர்ந்து போக இப்படி தவிக்கின்றாய் ஆண் : அவள் மட்டும் தூங்கி என் தூக்கம் வாங்கி எப்போதும் போலே வாழ்ந்தால் நியாயம் இல்லையே ஆண் : நான் மட்டும் ஏங்கி என் வீட்டை நீங்கி பின்னாலே வந்தால் என்ன செய்வாள் கள்ளியே குழு : ஏனோ தோணுது பெண்ணே காற்றிலே கஸ்தூரி உன் நறுமணம் தானடி   ஆண் : அந்த பிரம்மன் படைத்த அழகான பெண்ணோ குழு : ஏனோ தோணுது பெண்ணே என் ஒரு வழிப் பாதையே கம் ஆன் உன் இருவிழி தானடி ஆண் : இவள் கண்கள் பாத்த போதும் மயக்கம் வருது டோய்......! --- நீராம்பல் பூவே - --
    • Published By: RAJEEBAN   14 SEP, 2024 | 10:36 AM   தேசிய மக்கள் சக்தியின் இடைக்கால அமைச்சரவையில் வடக்கு, கிழக்கு, மலையகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பார்கள் என கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் இலங்கையின் பரந்துபட்ட அரசியல் அடையாளத்தை பிரதிபலிக்கும் விதத்தில் இடைக்கால அமைச்சரவையை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். வடக்குகிழக்கில் உள்ள தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் இடைக்கால அமைச்சரவை ஏற்படுத்துவதற்கு தனது கட்சி முயலும் என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் இலங்கை அரசாங்கத்தை ஏற்படுத்த விரும்புகின்றோம். சிங்கள அரசாங்கத்தையில்லை, என தெரிவித்துள்ள அவர் அரசாங்கம் சாராத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருக்கும் முதலாவது அமைச்சரவையாக இது காணப்படும் என தெரிவித்துள்ளார். 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் வடக்குகிழக்கு மலையகத்தை சேர்ந்த சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், அவர்கள் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக தெரிவு செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/193648
    • என்னம்மா சிங்கார கண்ணம்மா ............!  😍
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.