Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேங்காய் எண்ணெய் என நினைத்துக் கொண்டு விளக்குக்குப் பெற்றோல் ஊற்றிய பூசகர் மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Sat Jul 21 8:47:56 EEST 2007

தேங்காய் எண்ணெய் என நினைத்துக் கொண்டு விளக்குக்குப் பெற்றோல் ஊற்றிய பூசகர் மரணம்

எரிந்துகொண்டிருந்த விளக்கில் தேங் காய் எண்ணெய் என நினைத்து பெற் றோலை ஊற்றிய ஆலயப் பூசகர் தீக்கா யங்களுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

புங்குடுதீவு சிவன்கோயிலில் நேற் றுக்காலை இச்சம்பவம் இடம்பெற்றது.

எரிகாயங்களுக்குள்ளான புங்குடு தீவு 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஆல யப் பூசகரான சிவசுப்பிரமணியம் தினேஸ் சர்மா (வயது 27) யாழ். ஆஸ்பத்திரி யில் சேர்க்கப்பட்டார்.

சிகிச்சை பயனளிக்காத நிலையில் நேற்றுமாலை அவர் உயிரிழந்தார்.

ஆலயத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்குத் தணியும் தறுவாயில் இருப் பதைக் கண்டு தேங்காய் எண்ணெய் என நினைத்து பெற்றோலை ஊற்றியபோதே, தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதாகத் தெரிய வந்தது.

உதயன்

அட பாவமே ...........

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையரசு எரிபொருட்களின் நிறத்தை மாற்றியதால் ஏற்பட்ட விளைவாக இருக்குமோ?

இலங்கையரசு எரிபொருட்களின் நிறத்தை மாற்றியதால் ஏற்பட்ட விளைவாக இருக்குமோ?

இருக்கலாம். ஏன் பெற்றோலை கோவிலில் வைத்தார்கள்? யாரும் திட்டமிட்டு செய்ய்திருப்பார்களோ தெரியவில்லை. உந்துருளிகளுக்கு பெற்றோல் தேவை என்றாலும் அதை வேறொரு இடத்தில் வைத்திருக்கலாம் அல்லவா?

அதுசரி தூய்ஸ். என்ன புது அவதாரில் "சிரிப்பாய் சிரிக்கிறீர்?". :mellow::)

Edited by Eelathirumagan

ஐயோ பாவம்.

அட கடவுள் முன்னாலே தானே இருந்திருப்பார். அவருக்கு தெரியாதா என்ன? பாவம் ஐயர் சின்ன பெடியன்

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி தூய்ஸ். என்ன புது அவதாரில் "சிரிப்பாய் சிரிக்கிறீர்?". :D:D

தகுதிகள் கூடிய சந்தோசத்தில் தலைக்கனம் ஏறிச் சிரிப்பா வருது. :D:D

ஐயோ பாவம்.

அட கடவுள் முன்னாலே தானே இருந்திருப்பார். அவருக்கு தெரியாதா என்ன? பாவம் ஐயர் சின்ன பெடியன்

நிலா அக்கா அக்சுவலி நித்தாவா போயிட்டாரம் பிறகு தான் எழும்பினவராம்........... :P

நிலா அக்கா அக்சுவலி நித்தாவா போயிட்டாரம் பிறகு தான் எழும்பினவராம்........... :P

அதுசரி எனக்கொரு டவுட்

இது ஒரு ஐயருக்கு நடந்திருக்கு. அதை கடவுளும் பார்த்துட்டு இருந்திருக்கிறார். அவர் நித்தாவோ இல்லை முழிப்போ நாமறியோம்

ஆனால் சிவனடியார் அதுதான் சுந்தரமூர்த்தியோ சம்பந்தரோ அப்பரோ எனக்கு சரியாக நினவில்லை. இவர்களுள் ஒருவர் இறந்த பூம்பாவையை எழும்பினார்கள் தானே. அதே போல நிறைய புராண வரலாறு எலலம் இருக்குதானே.

சிவனடியார்களுக்கே இபப்டி பவர் என்றால் கடவுள் எல்லாமே சிவன் என்கிறார்கள். அப்போ கடவுளுகள் ஏன் உயிர்ப்பிக்க முடியாது இறந்த ஒருவரை.

அதுவும் பாருங்க இன்று கடவுளுக்கு பூசை வைக்கும் ஒரு பூசாரிக்கு அக்கடவுளின் முன்னே இக்கொடுமை நிகழ்ந்ததை கடவுள் பார்த்திட்டு இருந்தாரே ஏன்?

கடவுள் பற்றி கதைக்கும் உறுப்பினர்களே இதற்கு சற்று விளக்கம் சொல்ல முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி எனக்கொரு டவுட்

ஆனால் சிவனடியார் அதுதான் சுந்தரமூர்த்தியோ சம்பந்தரோ அப்பரோ எனக்கு சரியாக நினவில்லை. இவர்களுள் ஒருவர் இறந்த பூம்பாவையை எழும்பினார்கள் தானே. அதே போல நிறைய புராண வரலாறு எலலம் இருக்குதானே.

சிவனடியார்களுக்கே இபப்டி பவர் என்றால் கடவுள் எல்லாமே சிவன் என்கிறார்கள். அப்போ கடவுளுகள் ஏன் உயிர்ப்பிக்க முடியாது இறந்த ஒருவரை.

அதுவும் பாருங்க இன்று கடவுளுக்கு பூசை வைக்கும் ஒரு பூசாரிக்கு அக்கடவுளின் முன்னே இக்கொடுமை நிகழ்ந்ததை கடவுள் பார்த்திட்டு இருந்தாரே ஏன்?

வெண்ணிலா திருஞான சம்பந்தர் தான் எழுந்திரு பூம்பாவாய் என்று தமிழிலை பாடினதாலை அது கடவுளுக்கும் விழங்கி பூம்பாவையை எழுப்பியிருப்பார். இதுவும் ஞானக்குழந்தை படத்தை பாத்து தான் எனக்கு தெரியும். இந்த அய்யர் வருச கணக்கா சமஸ்கிருதத்திலை பூசை பண்ணி கடவுளை வெறுப்பேத்தியிருப்பார் . அதுதான் கடவுளும் எரிஞ்சு போகட்டும் எண்டு விட்டிருப்பார்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தடவை சொன்ன இராமகிருஸ்ணர் கதையைத் தான் வெண்ணிலாவிற்கு நினைவு படுத்த வேண்டியுள்ளது.

ஒரு தடவை இராமகிருஸ்ணரிடம் ஒருவர் போய்க் கேட்டாராம். சுவாமி, அன்றைக்கு ஒரு இரணியன் வந்ததற்காக, விஸ்ணு நரசிம்மா வேடம் எடுத்து வந்தாரே? இன்றைக்கு இத்தனையாயிரம் இரணியன்கள் பூமியில் இருக்கின்றார்கள். விஸ்ணு வரவில்லைத் தானே, எனவே கடவுள் என்பது பொய் தானே என்று.

அப்போது இராமகிருஸ்ணர் சொன்னார்: அன்றைக்கு ஒரு பிரகலாதன் இருந்தார். இன்றைக்கு ஒருத்தன் கூட இல்லையே என்று.

அன்றைக்கு ஒரு சுந்தரர், சம்பந்தர் இருந்தார்கள், இன்றைக்கு யார் இருக்கின்றார்கள்?

ஆகவே கடவுள் இருக்கிறார் ஆனால் வரமாட்டார்.

எனவே வராத கடவுளை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள், தயவு செய்து பஞ்சி பார்க்காது விவசாயத்தை கற்றுக் கொள்ளுங்கள்! அது தான் உங்களுக்கும் உங்களை நம்பி வரும் மக்களுக்கும் நல்லது!

ஐயரை சாமி கைவிட இல்லையாம்.! வைத்திய சாலை ஆசாமிதான் கையை விட்டுட்டாராம்...! அப்பிடித்தானே செய்தி சொல்லுது...

சரி இருக்கட்டும் ,இருக்கட்டும்....!

பிறப்பவர்கள் எல்லாம் இறப்பவர்கள் என்பதுதான் உலக நியதி... திருஞான சம்பந்தர் கூட சோதியில் கலந்து மறைந்தார், சிவனடி சேர்ந்தார், எண்றுதான் சொல்கிறர்கள்... அது வெளிச்சம் மட்டும்தான் எண்று எண்ணாமல் தீயினால் வந்த சோதியாக எண்ணிப்பாருங்கள்...!!

பதி, பசு, பாசம்... என்பது கடவுள், உயிர், மும்மலங்கள்((ஆணவம், கன்மம், மாயை ) என்று வரும்... அதில் மும்மலங்களை துறந்து உயிரானது((பசு)) கடவுளை(பதி) சேருகின்றது... மும்மலங்களையும் அடக்கி வைத்திருக்கும் உடல் முக்தி அடையாமல் போகிறது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்போ, ஐயர் ஜோதியிலே கலந்துட்டார்....... நேரே கடவுளாண்டிட்டே போயிட்டார்..... அந்தப் புங்குடு தீவுக் கோயிலின் சிறப்பு இனிப்பதிவாகி தேவாரம் பாடும் அந்தஸ்தைப் பெறப் போகிறது. இந்த உண்மையான இறைபக்தனையும் இனிக் கும்பிடவேண்டியதுதான்.... இந்த உண்மையான இறைபக்தனின் வாழ்வை கதையாகச் சொல்லி புதிய புராணத்தின் அங்கமாக்க வேண்டியதுதான்.

அரோகரா!!!!!

:D

வெண்ணிலா திருஞான சம்பந்தர் தான் எழுந்திரு பூம்பாவாய் என்று தமிழிலை பாடினதாலை அது கடவுளுக்கும் விழங்கி பூம்பாவையை எழுப்பியிருப்பார். இதுவும் ஞானக்குழந்தை படத்தை பாத்து தான் எனக்கு தெரியும். இந்த அய்யர் வருச கணக்கா சமஸ்கிருதத்திலை பூசை பண்ணி கடவுளை வெறுப்பேத்தியிருப்பார் . அதுதான் கடவுளும் எரிஞ்சு போகட்டும் எண்டு விட்டிருப்பார்

ஓ சமஸ்கிருதத்தாலை தான் பூசகருக்கு கடவுள் உதவி செய்யவில்லை போல. சரி சரி

  • கருத்துக்கள உறவுகள்

ஆகவே கடவுள் இருக்கிறார் ஆனால் வரமாட்டார்.

எனவே வராத கடவுளை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள், தயவு செய்து பஞ்சி பார்க்காது விவசாயத்தை கற்றுக் கொள்ளுங்கள்! அது தான் உங்களுக்கும் உங்களை நம்பி வரும் மக்களுக்கும் நல்லது!

உங்களின் கருத்து வேடிக்கையாக இருக்கின்றது நண்பரே!

பக்தி இல்லாதவர்கள் சொந்த உழைப்பில் உள்ளது போலவும், பக்தி உள்ளவர்கள் மற்றவர்களிடம் பிச்சை ஏந்தியும், அடுத்தவனின் காசில் வாழ்வது போல் அல்லவா உங்களின் கருத்து இருக்கின்றது?

ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். பக்தி இல்லாதவர்கள் என்று சொல்பவர்கள் சமூகத்தில் ஒன்றையும் கிழித்து விடவும் இல்லை. பக்தி உள்ளவர்கள் ஒன்றும், அடுத்தவனின் உழைப்பில் உண்டி வளர்க்கவுமில்லை.

சாத்திரி சொன்ன மாதிரி தமிழில பூசை செய்யாதது தான் முக்கிய காரணமாக இருக்கும்,பக்தி உள்ளவர்களும் பக்தி அற்றவர்களும் ஒன்று சேர்ந்து ஏதும் புதுசா செய்தா நல்லா இருக்கும்.நான் சொல்லுறது சரி தானே தூயவன் B)

உங்களின் கருத்து வேடிக்கையாக இருக்கின்றது நண்பரே!

பக்தி இல்லாதவர்கள் சொந்த உழைப்பில் உள்ளது போலவும், பக்தி உள்ளவர்கள் மற்றவர்களிடம் பிச்சை ஏந்தியும், அடுத்தவனின் காசில் வாழ்வது போல் அல்லவா உங்களின் கருத்து இருக்கின்றது?

ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். பக்தி இல்லாதவர்கள் என்று சொல்பவர்கள் சமூகத்தில் ஒன்றையும் கிழித்து விடவும் இல்லை. பக்தி உள்ளவர்கள் ஒன்றும், அடுத்தவனின் உழைப்பில் உண்டி வளர்க்கவுமில்லை.

பக்தியுள்ளவர் இல்லாதவர் பற்றிய உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். எனினும் நான் கூறியது கடவுளை விற்று காசுசம்பாதிப்பவர்களை, மக்களின பலவீனத்தை பாவித்து அவர்களிடம் இருப்பதையும் பறித்துக் கொள்பவர்கள் பற்றியது.

இன்றைய அகால நிலையில் ஆன்மீகத்தை விட அடுத்தவரில் அதிகளவு மனிதாபிமானமே அனைத்து தமிழ் மக்களுக்கு தேவைப்படுகின்றது!

Edited by சாணக்கியன்

அப்போ, ஐயர் ஜோதியிலே கலந்துட்டார்....... நேரே கடவுளாண்டிட்டே போயிட்டார்..... அந்தப் புங்குடு தீவுக் கோயிலின் சிறப்பு இனிப்பதிவாகி தேவாரம் பாடும் அந்தஸ்தைப் பெறப் போகிறது. இந்த உண்மையான இறைபக்தனையும் இனிக் கும்பிடவேண்டியதுதான்.... இந்த உண்மையான இறைபக்தனின் வாழ்வை கதையாகச் சொல்லி புதிய புராணத்தின் அங்கமாக்க வேண்டியதுதான்.

அரோகரா!!!!!

:D

ஐயர் இறந்து ்போனது மருத்துவ மனையில் கோயிலில் இல்லை எண்டுதான் செய்திகள் சொல்லுது...! எதையும் சரியா கப்பெண்டு கற்பூரம் மாதிரி பிடிச்சு கொள்ளுறீங்களே...! ஆச்சரியம்தான் போங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

பக்தியுள்ளவர் இல்லாதவர் பற்றிய உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். எனினும் நான் கூறியது கடவுளை விற்று காசுசம்பாதிப்பவர்களை, மக்களின பலவீனத்தை பாவித்து அவர்களிடம் இருப்பதையும் பறித்துக் கொள்பவர்கள் பற்றியது.

இன்றைய அகால நிலையில் ஆன்மீகத்தை விட அடுத்தவரில் அதிகளவு மனிதாபிமானமே அனைத்து தமிழ் மக்களுக்கு தேவைப்படுகின்றது!

பக்தியைப் பாவித்து காசு சம்பாதிப்பவர்களை நிச்சயம் நானும் எதிர்க்கின்றேன். மதந்தை நிந்திப்பவர்களை விட இவர்கள் குறித்தே அவதானமாக இருக்க வேண்டும்.

ஆனால் இந்தத் தலைப்பில் இது பற்றி நீங்கள் சொல்ல வேண்டிய அவசியமில்லையே. அதனால் தான் அப்படி ஒரு பதிலைக் கொடுக்க வேண்டி ஏற்பட்டது

பக்தியுள்ளவர் இல்லாதவர் பற்றிய உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். எனினும் நான் கூறியது கடவுளை விற்று காசுசம்பாதிப்பவர்களை, மக்களின பலவீனத்தை பாவித்து அவர்களிடம் இருப்பதையும் பறித்துக் கொள்பவர்கள் பற்றியது.

இன்றைய அகால நிலையில் ஆன்மீகத்தை விட அடுத்தவரில் அதிகளவு மனிதாபிமானமே அனைத்து தமிழ் மக்களுக்கு தேவைப்படுகின்றது!

கடவுளை விற்று எனும் பதத்துக்கு பதிலாக காசை குடுத்தாவது தாங்கள் செய்த கொடுமைகளையும் பாவங்களையும் குறைக்க பரிகாரம் தேடி ஐயரை நாடுவோரை ஏன் நீங்கள் வம்புக்கு இழுப்பதில்லை..???

ஐயர் யாரின் வீட்டுக்கு வந்து எனக்கு காசுக்கு பஞ்சமாக இருக்கு வாங்க உங்களுக்கு பரிகார அபிசேகம் செய்து விடுகிறேன், இல்லை அரிச்சனை செய்து தாறன் எண்று அழைக்கிறாரா..???

  • கருத்துக்கள உறவுகள்

ஐயர் இறந்துபோனதால் அவதியுறும் அவர் குடும்பத்தினருக்கு ஆறுதலாக ஏதாவது கருத்துக்கள் இருக்கும் என்று பார்த்தால்??? :angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.