Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசின் மாநில பாடலாக அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 17/12/2021 at 15:37, ஏராளன் said:

நீக்கப்பட்ட வரிகள்

அப்படி ஏற்கும்போது சம்ஸ்கிருதம் போல அழியாத தமிழின் சிறப்பாக சுந்தரனார் குறிப்பிடும் சில வரிகளை நீக்கிவிட்டே அது அதிகாரப்பூர்வ வாழ்த்தாக ஏற்கப்பட்டது.

"பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல், கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதரத்து உதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையாவுன்..." என்பதே அந்த நீக்கப்பட்ட வரிகள்.

மதச்சார்பின்மையும் தமிழ் வாழ்த்தும்

தமிழ்த்தாய் வாழ்த்து அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னணி குறித்து தமிழ்வளர்ச்சித் துறையின் முன்னாள் இயக்குநரும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான மா.ராசேந்திரனிடம் கேட்டோம்.

தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான அரசாணை.

படக்குறிப்பு,

தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான அரசாணை.

1970ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது, கடவுள் வாழ்த்துக்கு மாற்றாக அரசு நிகழ்ச்சிகளில் பாடுவதற்கு தமிழ்த்தாய் வாழ்த்து அறிமுகம் செய்யப்பட்டது என்றார்.

மதச் சார்பற்ற அரசுக்கு மத நம்பிக்கையோடு கூடிய ஓர் இறைவணக்கப் பாடலைப் பாடுவது பொருத்தமாக இருக்காது என்பதால், மொழி வணக்கப்பாடல் அறிமுகமானது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

பெருமாள்,

மேலே ஏராளன் இணைத்த பி பி சி கட்டுரையில் இந்த பாடலில் நீக்க பட்ட பகுதி எது, மதச் சார்பற்ற அரசுக்கு மத நம்பிக்கையோடு கூடிய ஓர் இறைவணக்கப் பாடலைப் பாடுவது பொருத்தமாக இருக்காது என்பதால் அது நீக்கப்பட்டது என்பதை தெளிவாக குறிப்பிடுள்ளது.

தமிழகம் போன்ற ஒரு மதசார்பற்ற மாநிலத்தில் இது சரியான நடவடிக்கைதான் என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என நம்புகிறேன்.

இவ்வாறான நல்ல காரியங்களையும் திமுக செய்து விட்டது என்பதனால் மட்டுமே எதிர்பது அல்லது பொய் செய்தியை (தெரியாமல்தான்) பரப்புவது - இந்த மனநிலைதான் - எரியுதடி மாலா.

  • Replies 91
  • Views 11.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய மனோன்மணியம் முழுப்பாடலும் படித்தால் இறை நம்பிக்கை உண்மையானது அதை கருணாநிதி அவர்கள் அந்த இறைநம்பிக்கை மற்றும் தமிழால் மற்றைய திராவிட மொழிகள் பெற்ற செழுமைகள் உள்ள பகுதியை தூக்கி விட்டு தங்களுக்கு ஏற்றவாறு வெட்டி  கொத்தி வைத்துள்ளனர் .

கொசுறாக இந்தமனோன்மணீயம் இயற்றிய சுந்தரனார்  தமிழரல்ல கிரீஸை  பூசிக்கொண்டு கூகிள் பன்னும்கோ விடைகள் குவிந்து கிடக்கின்றன  .

அப்படி நீக்கப் பட்ட பகுதியைப் பற்றி ஏற்கனவே பி.பி.சி நம்பகத் தன்மையான கட்டுரை வெளியிட்டு விட்டது (அது கூகிளில் தேடினால் முதலாவதாக வராது என்பதால் உங்கள் கண்ணில் படாது!😎)

ஆனால், தமிழ் என்பதை திராவிடம் என்று மாற்றினர் என்பது பொய் என்று மேலே சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது. ஆனால், அதை ஏற்றுக் கொண்டால் நமக்குத் தான் இல்லாத மீசையில் மண் ஒட்டி விடுமே? எனவே கிறீஸ் போத்தல் தான் கதி உங்களுக்கு!

NB: சுந்தரனார் தமிழரா என்பது எனக்கு அவசியமற்றது.  தாவீது அடிகள் முதல் இன்றும் தமிழ் மொழியை வளர்க்கப் பணியாற்றும் பலர் தமிழர்களாக பிறந்தவர்கள் அல்ல. தமிழர்களாக பிறந்த உங்களைப் போன்ற பலருக்கு அந்த மொழியை விளங்கிக் கொள்வதே கடினமாக இருக்கும் போது வேற்று மொழியினர் அதை வளர்க்க முனைவது நல்ல செயல் தான்! 

  • கருத்துக்கள உறவுகள்

54 minutes ago, Justin said:

இந்தக் குழப்பங்களைத் தவிர்க்க வழி: வாசிப்பு, வாசிப்பு, வாசிப்பு! 

சுருக்கமாக கருணாநிதியர் தமிழ் தமிழ் என்று குரல் எழுப்பியவர் மறுக்க முடியாது என்னுடைய இரண்டு கேள்விகளுக்கு பதில் உங்களிடம் இருந்தால் தரவும் .

இந்த மனோன்மணியம் பாட்டில் கருணாநிதியால் தூக்கப்பட்ட பகுதிகள் கீழே 

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பது போல்

கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்

உன்உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடுனும்

ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையாஉன்

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.

“பல்லுயிரும் பலவுலகும் படைத்து அளித்துத் துடைக்கினும் ஓர் எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பது போல்”

என்ற இரண்டு வரிகள் தரும் பொருள்:

  • அனைத்து உயிர்களையும், அனைத்து உலகங்களையும் படைத்து, காத்து, முடிவில் அவைகளைத் தன்னுள் ஒடுக்கும் ஓர் எல்லையற்ற பரம்பொருளாம் இறைவன்
  • எந்த மாற்றத்திற்கும் உட்படாமல் எப்போதும் இருந்தபடி நிலைப்பேறாக இருப்பதைப் போல,
  • என் தமிழ்த்தாய் என்றும் மாறாத சீரிய இளைமையோடு நிலைத்திருப்பாள் என்பதாகும்.

கட்சிக்கு மாறானது மேல் உள்ள பகுதிகள் இது ஓகே 

தமிழன்னையின் பெருமை சாற்றும் இந்த இரண்டு வரிகளை ஏன் நீக்கவேண்டும்?

இந்த வரிகளில் ‘உயர்வு நவிற்சி’யாக தமிழன்னை என்றுமுள்ள பரம்பொருளுக்கு இணையாக உயர்த்திப் புகழப்பட்டாள்; இவை பெருமைக்குரியவை அல்லவா?

எந்தமதத்தையும் குறிக்காமல் பொதுவாகப் ‘பரம்பொருள்” என்று குறித்திருப்பது ‘மதச்சார்பின்மைக்கும்’(secular) ஒத்துவருகிறதே! இதை நீக்கியது வியப்புக்குரியது!

கவியுள்ளத்தைப் புறம்தள்ளி வசதிக்காக வரிகளை நீக்கியது அறமற்ற செயல்!

கவியுள்ளத்துக்குப் புறம்பாகக் கவிதையை வெட்டி-ஒட்டியது நெருடலான விடயம்! அக்காலச் சொல் வழக்குகள், நம்பிக்கைகள், வரலாறு போன்ற உணர்வுகளை உள்ளடக்கிப் பாடியுள்ள கவிஞரின் கருத்துக்கு மாறாக, கவிதையைச் சிதைப்பது எவ்விதத்தில் அறமாகும்?

திராவிடக் கொள்கைகளுக்கு வலுவூட்டும் பின்னுள்ள மூன்று வரிகளை ஏன் நீக்கவேண்டும்?

“தமிழ்த் தாயே, நீ நான்கு திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய நான்கு குழந்தைகளை உன் வயிற்றிலே சுமந்து பெற்ற பின்பும் என்றும் நீங்காத இளமையுடன் திகழ்கின்றாயே! உன்னை எங்ஙனம் வாழ்த்துவேன்?” என்னும் பொருள்படும்

“கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும் உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடுனும்”

என்ற வரிகளை ஏன் நீக்கினார்கள் என்பது வியப்பாக உள்ளது!

“ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து”

தமிழன்னையே! பேச்சு வழக்கு ஒழிந்தமையால் உலக வழக்கு அழிந்து ஒழிந்த வடமொழியான ஆரியம் போல் அல்லாது நீ சீரிய இளமையோடு விளங்குகின்றாயே! என்ற வரி தமிழுக்குப் பெரும் பெருமை சேர்க்கும் விடயமல்லவா? பின் ஏன் நீக்கினார்கள் என்பதுவும் வியப்பே!

https://ta.quora.com/மனோன்மனீயம்-சுந்தரனார்

இதில் மாயோன் (கிருஷ்ணன்) நல்லபெருமாள் அங்கலாய்க்கும் கேள்விகளுக்கு விடை உள்ளதா ?

Edited by பெருமாள்
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியர்  இப்படியான தவறுகள் வேண்டுமென்றே செய்வார் என்று நினைக்கவில்லை ஆனால்  இந்த ஒன்றுடன் மட்டும் நின்று இருந்தால்............................... அவையெல்லாம் ஆவணப்படுத்தப்பட்டுக்கொண்டு இருக்கின்றன ஏனென்றால் எமது எதிர்கால சந்ததிக்கு தெரியணும் நாங்கள் எப்படி கருவறுக்கப்பட்டோம் என்று 😉

12 minutes ago, Justin said:

எனவே கிறீஸ் போத்தல் தான் கதி உங்களுக்கு!

சீக்கிரம் அனுப்பி விடுங்க 😀

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

கருணாநிதியர்  இப்படியான தவறுகள் வேண்டுமென்றே செய்வார் என்று நினைக்கவில்லை இந்த ஒன்றுடன் மட்டும் நின்று இருந்தால் அவையெல்லாம் ஆவணப்படுத்தப்பட்டுக்கொண்டு இருக்கின்றன ஏனென்றால் எமது எதிர்கால சந்ததிக்கு தெரியணும் நாங்கள் எப்படி கருவறுக்கப்பட்டோம் என்று 😉

சீக்கிரம் அனுப்பி விடுங்க 😀

தமிழைத் திராவிடமாக்கினர் என்று பொய் சொல்ல வெளிக்கிட்டு (அல்லது இணையத்தில் காதைப் பூச்சுத்தலுக்குக் கொடுத்து மாட்டிய பின்னர்!) இப்ப ஏன் ஆரியத்தை நீக்கினர் என்று "கோரா வழிப்போக்கன்" கேட்கும் கேள்வியில் வந்து நிற்கிறீர்கள்!

வாசிப்பு என்றதும் கோரா என்று புரிந்து கொண்ட கற்பூரம் ஐயா நீங்கள்! 👍

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

கோராவில் எழுதுவது எல்லாம் உண்மையல்ல ஆனால் 

இவர் பற்றி தெரிந்தால்  மேல் உள்ள கருத்து வந்திருக்காது 

மாயோன் (கிருஷ்ணன்) நல்லபெருமாள் இன் தற்குறிப்பு போட்டோ
 
மாயோன் (கிருஷ்ணன்) நல்லபெருமாள் (Maayon (Krishnan) Nallaperumal)
Senior Professor and Head, CITE, MS University, Tirunelveli
10 minutes ago, பெருமாள் said:

மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய மனோன்மணியம் முழுப்பாடலும் படித்தால் இறை நம்பிக்கை உண்மையானது அதை கருணாநிதி அவர்கள் அந்த இறைநம்பிக்கை மற்றும் தமிழால் மற்றைய திராவிட மொழிகள் பெற்ற செழுமைகள் உள்ள பகுதியை தூக்கி விட்டு தங்களுக்கு ஏற்றவாறு வெட்டி  கொத்தி வைத்துள்ளனர் .

கொசுறாக இந்தமனோன்மணீயம் இயற்றிய சுந்தரனார்  தமிழரல்ல கிரீஸை  பூசிக்கொண்டு கூகிள் பன்னும்கோ விடைகள் குவிந்து கிடக்கின்றன  .

பெருமாள், மனோன்மணியம் இறை நம்பிக்கை உடையவர். அவர் எழுதிய “ தமிழ் தெய்வவணக்கப்பாடல்” என்ற பாடலே சில வரிகள் நீக்கி தமிழ் நாடு அரசின் தமிழ் தாய் வாழ்தது பாடலாக  ஏற்று 1970ல் தமிழ் நாடு அரசினால் அரசாணை  பிறப்பிக்கப்பட்டது. அந்த வரிகள் நீக்கப்பட்டதற்காக தகுந்த காரணம் கூறி உத்தியோக பூர்வமாகவே மாற்றப்பட்டது. ஒரு மதசார்பற்ற அரசில்் தெய்வ வணக்க பாடல் தேவையில்லை என்று பாற்றப்பட்டது.  கருணாநிதி மட்டுமல்ல  புலிகள் கூட தமது அனைத்து நிகழ்வுகளிலும் மத சார்பஇன்மையை பேணுவதற்காக கடவுள் வணக்கம் பாடுவதில்லை. 

அதே போல் ஆரியம் போல் உலக வழக்கொழிந்து போகாமல் என்ற வரியும் நீக்கப்பட்டது.  காரணம் தமிழை வாழ்த்தும் ஒரு உத்தியோக பூர்வ வாழ்த்து பாடலில் மற்றய மொழியை இகழ்வது போல் இருப்பது அழகல்ல என்பதாலும் என்ற காரணத்தைக் காட்டியதுடன்  அடுத்த மொழியை இகழ்கிறது என்ற சாட்டில் அதற்கு எதிர்காலத்தில் மத்திய அரசால் தடை வந்துவிட கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன். 

ஆனால் அனைத்தும் தமிழக அரசு சார்பில் உத்தியோக பூர்வமாகவே செய்யப்பட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

கோராவில் எழுதுவது எல்லாம் உண்மையல்ல ஆனால் 

இவர் பற்றி தெரிந்தால்  மேல் உள்ள கருத்து வந்திருக்காது 

மாயோன் (கிருஷ்ணன்) நல்லபெருமாள் இன் தற்குறிப்பு போட்டோ
 
மாயோன் (கிருஷ்ணன்) நல்லபெருமாள் (Maayon (Krishnan) Nallaperumal)
 
Senior Professor and Head, CITE, MS University, Tirunelveli

பேருக்கும் பின்னால் சில பட்டங்கள் இருந்தால் ஒருவர் சொல்லும் அபிப்பிராயங்கள் தரவுகளாகி விடாது! பிரின்ஸ்ரன் பல்கலை தெரியுமா? அங்கே பௌதீகவியல் பேராசிரியராக இருக்கும் ஒருவர் "உலகம் வெப்பமாதல் மனிதனுக்கு ஆபத்தில்லை" என்கிறார் - அவரது அபிப்பிராயம், அதற்காக அதுவெல்லாம் தியரியாகி விடுமா? அது போலத்தான். இது இவரது அரசியல் கருத்து, பேராசிரியர் என்பதால் இது கல்விசார் தியரியாகி விடாது!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

பெருமாள், மனோன்மணியம் இறை நம்பிக்கை உடையவர். அவர் எழுதிய “ தமிழ் தெய்வவணக்கப்பாடல்” என்ற பாடலே சில வரிகள் நீக்கி தமிழ் நாடு அரசின் தமிழ் தாய் வாழ்தது பாடலாக  ஏற்று 1970ல் தமிழ் நாடு அரசினால் அரசாணை  பிறப்பிக்கப்பட்டது. அந்த வரிகள் நீக்கப்பட்டதற்காக தகுந்த காரணம் கூறி உத்தியோக பூர்வமாகவே மாற்றப்பட்டது. ஒரு மதசார்பற்ற அரசில்் தெய்வ வணக்க பாடல் தேவையில்லை என்று பாற்றப்பட்டது.  கருணாநிதி மட்டுமல்ல  புலிகள் கூட தமது அனைத்து நிகழ்வுகளிலும் மத சார்பஇன்மையை பேணுவதற்காக கடவுள் வணக்கம் பாடுவதில்லை. 

அதே போல் ஆரியம் போல் உலக வழக்கொழிந்து போகாமல் என்ற வரியும் நீக்கப்பட்டது.  காரணம் தமிழை வாழ்த்தும் ஒரு உத்தியோக பூர்வ வாழ்த்து பாடலில் மற்றய மொழியை இகழ்வது போல் இருப்பது அழகல்ல என்பதாலும் என்ற காரணத்தைக் காட்டியதுடன்  அடுத்த மொழியை இகழ்கிறது என்ற சாட்டில் அதற்கு எதிர்காலத்தில் மத்திய அரசால் தடை வந்துவிட கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன். 

ஆனால் அனைத்தும் தமிழக அரசு சார்பில் உத்தியோக பூர்வமாகவே செய்யப்பட்டது. 

தயவு செய்து மேல் சுருக்கமாக எழுதியவைகள் என்ன பிழை என்று நன்கு கவனமாக படித்துவிட்டு கருத்தாடுங்கள் அவற்றை படிக்காமல் உங்கள் மனதில் உள்ளவற்றை இங்கு விதைக்க வேண்டாம். 

பேராசிரியர் மாயோன் அவர்கள்  கடைசியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு என்ன பதில் உங்களிடம் உள்ளது ?

1 minute ago, Justin said:

பேருக்கும் பின்னால் சில பட்டங்கள் இருந்தால் ஒருவர் சொல்லும் அபிப்பிராயங்கள் தரவுகளாகி விடாது! பிரின்ஸ்ரன் பல்கலை தெரியுமா? அங்கே பௌதீகவியல் பேராசிரியராக இருக்கும் ஒருவர் "உலகம் வெப்பமாதல் மனிதனுக்கு ஆபத்தில்லை" என்கிறார் - அவரது அபிப்பிராயம், அதற்காக அதுவெல்லாம் தியரியாகி விடுமா? அது போலத்தான். இது இவரது அரசியல் கருத்து, பேராசிரியர் என்பதால் இது கல்விசார் தியரியாகி விடாது!

அப்படியா பேராசிரியர் மாயோன் அவர்கள்  கடைசியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு என்ன பதில் உங்களிடம் உள்ளது ?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

தயவு செய்து மேல் சுருக்கமாக எழுதியவைகள் என்ன பிழை என்று நன்கு கவனமாக படித்துவிட்டு கருத்தாடுங்கள் அவற்றை படிக்காமல் உங்கள் மனதில் உள்ளவற்றை இங்கு விதைக்க வேண்டாம். 

பேராசிரியர் மாயோன் அவர்கள்  கடைசியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு என்ன பதில் உங்களிடம் உள்ளது ?

அப்படியா பேராசிரியர் மாயோன் அவர்கள்  கடைசியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு என்ன பதில் உங்களிடம் உள்ளது ?

👆மேலே ருல்பென் எழுதிய காரணம் தான் என ஊகிக்கிறேன். தமிழை ஆரியத்தை இகழாமலே உயர்வாகக் காட்டும் முயற்சி. இது தூய "தமிழ் ஜீன்" இருப்பதாக நம்பும் தீவிர தேசியர்களுக்கு சதி முயற்சியாகத் தெரிவதில் வியப்பில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, tulpen said:

பெருமாள், மனோன்மணியம் இறை நம்பிக்கை உடையவர். அவர் எழுதிய “ தமிழ் தெய்வவணக்கப்பாடல்” என்ற பாடலே சில வரிகள் நீக்கி தமிழ் நாடு அரசின் தமிழ் தாய் வாழ்தது பாடலாக  ஏற்று 1970ல் தமிழ் நாடு அரசினால் அரசாணை  பிறப்பிக்கப்பட்டது. அந்த வரிகள் நீக்கப்பட்டதற்காக தகுந்த காரணம் கூறி உத்தியோக பூர்வமாகவே மாற்றப்பட்டது. ஒரு மதசார்பற்ற அரசில்் தெய்வ வணக்க பாடல் தேவையில்லை என்று பாற்றப்பட்டது.  கருணாநிதி மட்டுமல்ல  புலிகள் கூட தமது அனைத்து நிகழ்வுகளிலும் மத சார்பஇன்மையை பேணுவதற்காக கடவுள் வணக்கம் பாடுவதில்லை. 

பல்லுயிரும் பலவுலகும் படைத்து அளித்துத் துடைக்கினும் ஓர் எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பது போல்”

திரும்ப திரும்ப எந்தமதத்தையும் குறிக்காமல் பொதுவாகப் ‘பரம்பொருள்” என்று குறித்திருப்பது ‘மதச்சார்பின்மைக்கும்’(secular) ஒத்துவருகிறதே! இதை நீக்கியது வியப்புக்குரியது!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தாய் வாழ்த்து: மனோன்மணியம் சுந்தரனார் கண்டிப்பாக ஏற்றுக் கொண்டிருக்கவே மாட்டார் - பாஜக தலைவர் அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

கடவுள் நம்பிக்கை வரிகளைச் சிதைக்காமல், முழுமையாகப் பாடலைப் பயன்படுத்துவதே, தமிழ் நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும், தமிழ் மொழிக்கும், பெருமை என அண்ணாமலை கூறியுள்ளார்.

  • SHARE THIS:
  •  
  •  
  •  
  •  
சுந்தரனார் எழுதிய கவிதை வரிகளைச் சிதைக்காது முழுமையான பாடல் வரிகளை பயன்படுத்த வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
 
தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசின் மாநிலப் பாடமாக அங்கீகரித்தது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணையில், தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசின் மாநிலப் பாடலாக அங்கீகரித்து அறிவித்துள்ளது. முதலில் பாரதிய ஜனதா கட்சி தமிழ்த்தாய் வாழ்த்திற்கான அரசின் அங்கீகாரத்தை  மிகவும் வரவேற்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புகளிலும் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
 
Also Read: ராஜேந்திர பாலாஜி எந்நேரமும் கைதாக வாய்ப்பு - பெங்களூருவில் பதுங்கலா?

தமிழ்நாட்டில் தமிழ் வாழ்த்துப்பாடலாக அனைத்து விழாக்களிலும் மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய “நீராரும் கடலுடுத்த’’ என்னும் பாடல் பாடப்பட வேண்டும் என்னும் கோரிக்கை 1913ஆம் ஆண்டைய கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டறிக்கை தீர்மானமாக இடம்பெற்றது. தொடர்ந்து கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாக்களில் இப்பாடலை வாழ்த்துப்பாடலாக பாடி வந்துள்ளார்கள். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வழி வந்த பிறதமிழ்ச் சங்கங்களின் விழாக்களிலும் தொடக்கப் பாடலாக இப்பாடல் பாடப்பட்டது.

ஆனால் அப்பாடல் முழுமையான பாடலாக இருந்தது. இதனைத் தமிழ்நாடு அரசின் பாடலாக அறிவிக்க வேண்டும் என்று அக்காலகட்டத்தில் முதலமைச்சராக இருந்த அண்ணாதுரைக்கு, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர் கோரிக்கையாக எழுதி அனுப்பியும் வைத்தனர்.

ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை அவர்களால் 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்டது. மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் 'தமிழ்த் தெய்வ வணக்கம்' எனும் தலைப்பில் தமிழ்த்தாயை போற்றும் வகையில் அமைந்த வரிகளை ஏற்று, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை 1970ம் ஆண்டு நவ.,23ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்து, அரசாணை வெளியிட்டார்.

Also Read: 3 மாணவர்கள் உயிரிழந்த நெல்லை பள்ளி விபத்தில் நடந்தது என்ன? மாவட்ட ஆட்சியர் விளக்கம்

அப்போதே அப்பாடலை முழுமையாகப் பயன்படுத்தாமல் அதில் சில வரிகளைத் தவிர்த்தது சர்சையானது. அவ்வரசாணையை தொடர்ந்து, தமிழகத்தில் அரசு விழாக்களில், கல்வி நிலையங்களில், பொது நிறுவனங்களில், பொது நிகழ்ச்சிகளின் போது நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டு வருகிறது.

மனோன்மணியம் சுந்தரனார் என்று போற்றப்படும் திருவனந்தபுரம் பெருமாள் சுந்தரம் பிள்ளை அவர்கள், இருந்திருந்தால், தாம் எழுதிய இப்பாடலுக்கு கிடைத்த மாநில அரசின் அங்கீகாரத்தை நினைத்து பெரிதும் மகிழ்ந்திருப்பார். ஆனால் அப்பாடலை தமிழக அரசு முழுமையாகப் பயன்படுத்தாமல், அதில் சில வரிகளை நீக்கி, திருத்திப் பயன்படுத்துவதை கண்டிப்பாக ஏற்றுக் கொண்டிருக்கவே மாட்டார்.

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்

உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்

ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!

சுந்தரனார் எழுதிய கவிதை வரிகளைச் சிதைக்காது முழுமையான பாடல் வரிகளை பயன்படுத்துவதே, அப்பாடலை எழுதிய சுந்தரனாருக்கும், நம் தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும், ஏன் அப்பாடலின் பொருளமைதிக்கும் நன்மை பயப்பதாக அமையும்.

Also Read: நளினிக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ஆகவே  தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழ் மீது நல்லெண்ணம் கொண்டு செய்த முயற்சியை, அரைகுறையாக செயல்படுத்தாமல், அவர் பதவி ஏற்ற போது எடுத்துக் கொண்ட,”என் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராமல் செயலாற்றுவேன்” என்ற உறுதி மொழியின்படி  கடவுள் நம்பிக்கை வரிகளைச் சிதைக்காமல், முழுமையாகப் பாடலைப் பயன்படுத்துவதே, தமிழ் நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும், தமிழ் மொழிக்கும், பாடுபட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் உமா மகேசுவரனாருக்கும் பெருமை சேர்ப்பதாக அமையும். இதை தாங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராமல் செய்வீர்கள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

https://tamil.news18.com/news/tamil-nadu/tamil-thaai-vazhthu-bjp-leader-annamalai-request-to-mkstalin-hrp-642557.html

  • கருத்துக்கள உறவுகள்

அறியப்படாத தமிழ்த்தாய் வாழ்த்து – மெய்யுணர்வும் தமிழுணர்வும்

அறியப்படாத தமிழ்த்தாய் வாழ்த்து – மெய்யுணர்வும் தமிழுணர்வும்
பேராசிரியர்.முனைவர்.கிருஷ்ணன் நல்லபெருமாள், .சு.பல்கலைக்கழகம்
நாற்பத்து இரண்டே ஆண்டுகள் வாழ்ந்தாலும் தமிழுக்கும், தமிழ் நாடகவியலுக்கும் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை அளித்த கொடை அளப்பரியது. அவர் ஒரு தமிழ்ப் பேராசிரியரல்லர். தத்துவத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். மலையாள மண்ணின் மைந்தனாகப் பிறந்திருந்தாலும், அவரின் தமிழ்ப் பற்றுக்கு நிகர் அவரே. மனோன்மணியம் நூலுக்கு அவர் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையே தமிழ்த்தாய் வாழ்த்தாகத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டது. ஆனால், அன்றைய தமிழக அரசின் சார்பாக தமிழ்த்தாய் வாழ்த்தை உருவாக்கியவர்கள், சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் இரண்டாம் பத்தியின் அனைத்து வரிகளையும் மிகக் கவனமாக நீக்கிவிட்டு கடைசி வரியை மட்டும் வெட்டியெடுத்து, முதல் பத்தியோடு ஒட்ட வைத்துப் புதிய தமிழ்த்தாய் வாழ்த்தை உருவாக்கினர். இப்போது அந்த இரு பத்திகளையும் காண்போம்:
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழணங்கே.
 
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடுனும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.
(தமிழக அரசால் நீக்கப்பட்ட வரிகள் சிவப்புவண்ணத்தில் தரப்பட்டுள்ளன.)
 
தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து நீக்கப்பட்ட அவ்வரிகள் சுந்தரம் பிள்ளையவர்களின் தமிழுணர்வையும், மெய்யுணர்வையும் பறைசாற்றுபவை.
பல்லுயிரும் பலவுலகும் படைத்து அளித்துத் துடைக்கினும் ஓர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பது போல்
என்ற இரண்டு வரிகள் தரும் பொருள்: அனைத்து உயிர்களையும், அனைத்து உலகங்களையும் படைத்து, காத்து, முடிவில் அவைகளைத் தன்னுள் ஒடுக்கும் ஓர் எல்லையற்ற பரம்பொருளாம் இறைவன் எந்த மாற்றத்திற்கும் உட்படாமல் எப்போதும் இருந்தபடி நிலைப்பேறாக இருப்பதைப் போல, என் தமிழ்த்தாய் என்றும் மாறாத சீரிய இளைமையோடு நிலைத்திருப்பாள் என்பதாகும்.
இந்த இரண்டு வரிகள் சொல்லும் செய்திகள் மிகமுக்கியமானவைகள்; ஒன்று, சுந்தரம்பிள்ளையவர்கள் இறைக்கொள்கை உடையவர் என்பது; இரண்டு, தமிழ்மொழியும் இறைவனைப் போல் என்றும் மாறாத இளமையுடன் இருக்கின்றது என்பது.
தமிழன்னையின் பெருமை சாற்றும் இந்த இரண்டு வரிகளை ஏன் நீக்கவேண்டும்?
இந்த வரிகளில் உயர்வு நவிற்சியாக தமிழன்னை என்றுமுள்ள பரம்பொருளுக்கு இணையாக உயர்த்திப் புகழப்பட்டாள்; இவை பெருமைக்குரியவை அல்லவா? எந்தமதத்தையும் குறிக்காமல் பொதுவாகப் ‘பரம்பொருள்” என்று குறித்திருப்பது ‘மதச்சார்பின்மைக்கும்’(secular) ஒத்துவருகிறதே! பின் ஏன் நீக்கினார்கள்? உங்களுக்குக் குழப்பமாக இருக்கிறதா? குழம்பத் தேவையில்லை! நீக்காவிட்டால், கடவுள் மறுப்பு இயக்கத்தைச் சார்ந்தவர்களால் நடத்தப்படும் தமிழக அரசு, பரம்பொருளாம் ‘இறைவனின்’ இருப்பை ஏற்றுக் கொண்டதாக ஆகிவிடும் என்று நினைத்தார்களோ என்னவோ?  தமிழக சூழலில் secular என்றால் ‘இறைமறுப்பு’ என்பதாகவே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.
கவியுள்ளத்தைப் புறம்தள்ளி வசதிக்காக வரிகளை நீக்கியது அறமற்ற செயல்
தமிழ்த்தாய் வாழ்த்து நாம் அரசு விழாக்களில் பாடுவோம் என்று மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பாடவில்லை. அவரின் ஒப்பற்ற காவியத்தில் தமிழைப் போற்றித் தொடங்கவே பாடினார். அவரின் பாடலின் கருத்துப் பிடிக்கவில்லையா? விட்டுவிட வேண்டியதுதானே! அதை விடுத்துக் கவியுள்ளத்துக்குப் புறம்பாக வெட்டி-ஒட்டுவது அறச்செயலுக்கு மாறானது. அக்காலச் சொல் வழக்குகள், நம்பிக்கைகள், வரலாறு போன்ற உணர்வுகளை உள்ளடக்கிப் பாடியுள்ள கவிஞரின் கருத்துக்கு மாறாக,  போற்றுகிறேன் பேர்வழி என்று கிளம்பிக் கவிதையைச் சிதைப்பது எவ்விதத்தில் அறமாகும்?
திராவிடக் கொள்கைகளுக்கு வலுவூட்டும் பின்னுள்ள மூன்று வரிகளை ஏன் நீக்கவேண்டும்?
திராவிடம் திராவிடம் என்று ஒட்டுமொத்த தமிழர்களுமே திராவிடக் கருத்தியலை தங்கள் பண்பாடு என்று ஏற்கும்படிக்கு மூளைச்சலவை செய்தவர்களுக்கு, “தமிழ்த் தாயே, நீ நான்கு திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய நான்கு குழந்தைகளை உன் வயிற்றிலே சுமந்து பெற்ற பின்பும் என்றும் நீங்காத இளமையுடன் திகழ்கின்றாயே! உன்னை எங்ஙனம் வாழ்த்துவேன்?” என்னும் பொருள்படும்
கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும்துளுவும்
உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடுனும்
என்ற வரிகள் தேனினைப் போல அல்லவா இனித்திருக்க வேண்டும்?  பின் என் நீக்கினார்கள்? தமிழின் பெயராலும், அடுக்கு மொழிச் சொற்களாலும் ஆட்சிக்கட்டிலைப் பிடித்தோர்களில் பெரும்பான்மையினர் தமிழரல்லர் என்பதால் அவர்களுக்கு இவ்வரிகளால் தமிழுக்குப் பெருமை சேர்வதை ஏற்றுக் கொள்ள இயலவில்லையோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து
தமிழன்னையே! பேச்சு வழக்கு ஒழிந்தமையால் உலக வழக்கு அழிந்து ஒழிந்த வடமொழியான ஆரியம் போல் அல்லாது நீ சீரிய இளமையோடு விளங்குகின்றாயே! என்ற வரி தமிழுக்குப் பெரும் பெருமை சேர்க்கும் விடயமல்லவா? பின் ஏன் நீக்கினார்கள்?  தமிழரல்லாத அவர்களின் உள்ளீடான ஆரியப்பற்று இவ்வரி சொல்லும் செய்தியின் உண்மையைப் பொறுத்துக் கொள்ள விடவில்லையோ என்ற ஐயம் எழுவதையும் தவிர்க்க இயலவில்லை..
பேசாப் பொருளைப் பேச . . .
முழுமையான தமிழ்த்தாய் வாழ்த்தில் இடம்பெற்ற அணி அமைப்புகள், உட்பொருள்கள், நயங்கள், செம்மைகள் அனைவரையும் வியப்படையச் செய்பவை. இதுவரை முழுவதுமாக தமிழ்த்தாய் வாழ்த்துப்  பாடலை உள்வாங்கிச் சுவைக்க வாய்ப்புக் கிட்டாத தமிழன்பர்களுக்காகவும், தமிழ்த்தாய் வாழ்த்தின்  ‘கண்’ பற்றியும் ‘காது’ பற்றியும் மட்டும் சிந்தித்துவிட்டு, சுந்தரனார் ‘உணர்த்த விழைந்த’ செய்தியைப் பேசாமல் போவது முழுமையான பார்வையாகாது என்பதாலும், தமிழன்னையை வணங்கி இதுவரை யாரும் பேசாப் பொருளைப் பேசத் துணிகின்றேன்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், இவ்விரண்டு பத்திகளுக்குப் பின்வருபவை எல்லாம், தமிழ்த்தாயின் பெருமையை, இரண்டு அடிகளில் ஒருபொருள் குறித்து பாடப்பட்ட பன்னிரண்டு பாடல்களாகப் பாடப்பட்டுள்ளன.
கடலும் தமிழ்த்தாய்க்கு ஒப்பாகாது
கடல் குடித்த குடமுனி உன் கரை காணக் குருநாடில்
தொடுகடலை உனக்கு உவமை சொல்லுவதும் புகழாமே!
“முன்னர் ஒரு காலம் பெருங்கடலையே குடித்துத் தன் வயிற்றில் அடக்கிய குறுமுனி அகத்தியர் தமிழ்மொழியின் கரை காண்பதற்காக இறைவனையே குருவாக நாடினார் என்பதால், என் தாயே! தமிழே!! தொடுகடலை உவமையாகச் சொல்லுவதுவும் உனக்குப் புகழ் ஆகாது!!!” என்று பாடிப் பரவசமடைகின்றார் கவிஞர். என்னே சுந்தரனாரின் தமிழ்ப் பெருமை! வியந்தல்லாவா போகிறோம் நாம்?
தமிழ் இலக்கணம் எம் இறைவனுக்கே எட்டாதது!
ஒரு பிழைக்கா அரனார் முன் உரையிழந்து விழிப்பாரேல்
அரியது உனது இலக்கணம் என்று அறைவதும் அற்புதமாமே.
பாண்டிய மன்னனின் ஐயத்தைத் தீர்க்குமாறும், வறுமையில் வாடும் தருமிக்குப் பொற்கிழி பெற்றுத் தருவதற்காகவும் இறையனாரே பாடல் இயற்றிக் கொடுக்க, அப்பாடலில் ஒரு பொருட்பிழை நேர்ந்தது. அப்பிழையை தமிழ்ச்சங்கத் தலைமைப் புலவன் நக்கீரன் சுட்டிக்காட்ட இறைவன் பேச்சற்றுத் விழித்தார் (சிலேடையாக-தன் நெற்றிக்கண்ணை விழித்து  நின்றதாக) என்று கூறப்படும் புராணக் கதையை உயர்வு நவிற்சிகொண்டு உவமித்து, தமிழின் இலக்கணத்தின் அருமை  பெருமையைப் பறைசாற்றுகின்றார் சுந்தரனார்.
தமிழ்மொழி உலகின்மொழிதோற்றநாசம் அற்ற முதுமொழி!! 
சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே.
நம் இந்தியத் துணைக் கண்டத்துள் ஆரிய நான்மறை சாற்றும் வடமொழி ஆரியம் நுழைவதற்கு முன்பு வரை தமிழே பேச்சு மொழியாக எங்கும் இருந்தமையால், தொன்மொழியாகிய தமிழைத் ‘தோற்ற-நாசம்’ அற்றது என்று சொல்வது ஒன்றும் வியப்புக்குரியதல்ல என்கின்றார் சுந்தரனார். வடமொழியாம் ஆரியம் இங்கு வந்தேறிய மொழி என்ற கருத்தும் இப்பாடலில் உள்ளுறையாக உள்ளது.
காலத்தை வென்றவள் எம்தமிழன்னைவைகைநதி வெள்ளத்தை எதிர்த்து நீந்திக் கடந்த தமிழேடு சொல்லும் செய்தி காலநதியால் தமிழுக்கு ஒரு அழிவும் நேராது என்பதே!!
வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு
காலநதி நினைக்கரவாக் காரணத்தி னறிகுறியே.
தமிழ்ஞானசம்பந்தப் பெருமானைப் ‘புனல்வாதம்’ என்னும் போருக்கு அழைத்த ‘வடமொழி விற்பன்னர்’களாம் சமணர்களின் “अश्थि नाश्थि – அஸ்தி நாஸ்தி” என்று எழுதப்பட்ட வடமொழி ஓலைச்சுவடி வைகைநதி வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது;
அஸ்தி என்றால் உண்டு என்று பொருள். கடவுள் உண்டு என்று சொல்பவர்களை ஆஸ்திகர் என்று சொல்லும் வழக்கம் இங்கிருந்தே வந்தது. நாஸ்தி என்றால் இல்லை என்று பொருள். கடவுள் இல்லை என்று சொல்பவர்களை நாஸ்திகர் என்று சொல்லும் வழக்கம் இங்கிருந்தே வந்தது.
இந்த அத்தி நாத்தி எழுதிய ஏட்டைத்தான் சமணர்கள் மதுரையில் சம்பந்தருடன் செய்த புனல் வாதத்தில் வைகை ஆற்றில் விட்டார்கள். சமணர்களின் ‘அத்தி நாத்தி’ ஏடு வைகை ஆற்றின் போக்குடன் அடித்துச் செல்லப்பட்டது.
சம்பந்தர் ” வாழ்க அந்தணர்” என்று தொடங்கும் பதிகம் எழுதிய ஏட்டை ஆற்றில் விட்டார். சம்பந்தர் இட்ட ஏடு ஆற்றில் எதிரேறி கரையையும் அடைந்தது. இவ்வாறு ஏடு எதிரேறிக் கரையை அடைந்த தலமே சோழவந்தான் அருகேயுள்ள திருவேடகம் ஆகும்.
சம்பந்தப் பெருமானால் எழுதப்பட்ட இறைவனைப்புகழும் ஏடு – திருஏடு வைகையாற்று வெள்ளத்தை எதிர்த்து நீந்திக்கரையேறி அடைந்த அகம் என்ற காரணப்பெயரால் திருவேடகம் எனப்பட்டது. இது மதுரையில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
இந்த ” வாழ்க அந்தணர்” என்ற திருப்பாசுரத்துக்கு பல தனிச்சிறப்புகள் உள்ளன.
  1. இது ஒன்றே பன்னிரண்டு பாடல்களை உடையது. மற்றைய பதிகங்கள் எல்லாம் பதினொரு பாடல்கள் கொண்டவை.
  2. இந்தப் பாசுரத்தை சம்பந்தர் தன் கையாலேயே எழுதினார். சம்பந்தரின் மற்றைய பாடல்களை ஏட்டில் எழுதி வந்தவர் அவருடைய தாய்மாமன் சம்பந்த சரணாலயர்.
  3. சைவத்தின் கொள்கை விளக்கம் செய்த பாடலும், சைவ சமயத்தை மெய்ச்சமயம் என்று நிறுவிய பதிகமும் இதுவே.
  4. இவ்வொரு பதிகத்துக்கு மட்டுமே சேக்கிழார் 22 பாடல்களில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
  5. முதல் ஒன்பது பாடல்களின் யாப்பு வேறு; கடைசி மூன்று பாடல்களின் யாப்பு வேறு.
அஸ்தி நாஸ்தி அல்லது அத்தி நாத்தி என்பது சமண மதக்கொள்கை. அருகனை முதல்வனாக ஏற்ற சமணரின் ஆருகத மத மந்திரம் ” அத்தி நாத்தி”. ஒரே முடிவு என்றில்லாது பல முடிவாகக் கூறுதல். உண்டாம்-இல்லையாம், உண்டு-இல்லையாம்,  உண்டாம்-ஆயின் சொல்ல இயலாதாம், இல்லை-ஆயின் சொல்ல இயலாதாம்,  உண்டும்-இல்லையுமாம் ஆயின் சொல்ல இயலாதாம் என்பது போன்ற ஏழு பகுதிகள் உள்ளன. அதனால் இதை ஸப்த பங்கி வாதம் என்பர். ஸப்த என்றால் ஏழு.  இது சமற்கிருதமொழி அல்ல; அர்த்த மகத மொழி என்னும் வடமொழி. மகதம் என்பது இன்றைய இந்தியாவின் பீகார் மாநிலம். சமணமும் வடமொழியும் இங்கிருந்துதான் வந்தது. பல திராவிடவாதிகள் சமணம் திராவிட மதம் என்றும், திருவள்ளுவர் சமணர் என்றும், சமணம்தான் தமிழை வளர்த்தது என்று எண்ணியும், எழுதியும், பேசியும் வருவது வேறு கதை.
மெய்யுணர்வினும் ஓங்கிநிற்கும் தமிழுணர்வு!
ஆனால், தமிழ்ஞானசம்பந்தப் பெருமானால் தமிழில் எழுதப்பட்ட ஓலைச்சுவடி வைகை நதியின் வெள்ளத்தை எதிர்த்து நீந்திக் கரை சேர்ந்தது என்பது பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணத்தில் வரும் தொன்மம். அத் தொன்மத்தையே சான்று காட்டி, காலமாகிய நதியின் ஓட்டம் தமிழுக்கு ஒருக்காலும் ஊறு விளைவிக்க இயலாது என்பதற்கான அறிகுறியே அந்நிகழ்வு என்கின்றார் சுந்தரனார். இதுவல்லவா மனோன்மணியம் சுந்தரனாரின் மெய்யுணர்வினும் ஓங்கி நிற்கும் தமிழுணர்வு! வார்த்தை வணிகர்களுக்குப் புரியாத நுண்நுண்ணுணர்வு!
இறைவனே தன் கைப்படத் தமிழன்னையின் திருவாசகத்தின் படி எடுத்து எழுதிவாங்கிக்கொண்டது இறைவனின் கடையூழிக் காலத் தனிமையைக் கழிப்பதற்கே! எம் மொழிக்கும் கிட்டாத மேன்மைஆயின்தமிழன்றோ இறைமொழி?
கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையார் உன் வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே.
‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது தமிழ்ப் பழமொழி. நம்மை யெல்லாம் உருக்கும் திருவாசகம், அன்புருவாம் இறைவனை உருக்காதிருக்குமா? திருவாசகத்தில் உருகிய இறைவன் அவ் வாசகத்தைத் தன் திருக்கரங்களால் படி-எடுக்க விரும்பினான்; ஒரு வயோதிக அடியவரின் உருவில் தோன்றி, மணிவாசகரிடம் திருவாசகத்தை மீண்டும் சொல்லுமாறு வேண்டித் தன் கைப்படவே படியெடுத்துக் கொண்டான் சிற்றம்பலமுடையான்.
‘மாணிக்கவாசகன் சொல்ல, அழகிய சிற்றம்பலம் உடையான் கைப்பட எழுதியது’ என்ற  அழகிய சிற்றம்பலம் உடையானின் திருவாசகப் பிரதியைச் சிற்றம்பலப் படியில் கண்ட தில்லைவாழ் அந்தணர்கள், மாணிக்கவாசகரிடம் சென்று, திருவாசகத்தின் பொருள் கூறுமாறு விண்ணப்பித்தனர்; ‘திருவாசகத்தின் பொருள் அம்பலக்கூத்தனே’ என்று கூறிவிட்டு, மணிவாசகர் இறைவனுடன் கலந்தார் என்பது தொன்மம்.
இங்கும் மெய்யுணர்வினும் ஓங்கியது தமிழுணர்வல்லவா?
இத்தொன்மத்தின் அடியாகப் பிறந்தது இவ்விரண்டு வாழ்த்து வரிகள்; என்ன அற்புதமான உயர்வு நவிற்சி! கடையூழிக் காலத்தில் அனைத்தும் ஒடுங்க, இறைவன் மட்டுமே தனித்திருப்பான்; அவன் மீளவும் இப் பிரபஞ்சத்தைப் படைக்கும் முன்பு, ஒரு சிறிய இடைவேளை, ‘Small Break” வருமல்லவா? அப்போது, எம் தமிழன்னையின் திருவாசகத்தின் துணைகொண்டே அத் தனிமையை இறைவன் போக்கிக் கொள்வான்; அத்துணை பெருமை கொண்டது எம்தமிழ் என்று இறுமாக்கின்றார் சுந்தரனார்; இவ் வுணர்வெல்லாம் மெய்யுணர்வினும் ஓங்கிய தமிழுணர்வல்லவா?
சங்கப் பலகை – தமிழின் உண்மை வரலாற்றுக்குச் சான்று 
தக்கவழி விரிந்திலகுஞ் சங்கத்தார் சிறுபலகை
மிக்கநலஞ் சிறந்தவுன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே.
தகுதியுடைய நூலுக்கே மதுரைச் தமிழ்ச்சங்கப் பலகை விரிந்து இடம் கொடுக்கும் என்பது மிகுந்த பெருமை கொண்ட உன் உண்மை வரலாற்றிற்கு ஒரு அடையாளம் என்று தமிழ் மொழியின் மெய்ச் சரிதத்தை வியந்து போற்றுகின்றார் கவிஞர். இங்கு “வியஞ்சனம்” என்ற சொல் “குறிப்பால் உணர்த்தி நிற்கும் அடையாளம்” என்ற பொருளாகும்.
வடமொழி உயர்வென்றும் தமிழ் மொழி அன்றென்றும் கூறுவோர் மதியிலாரே
வடமொழிதென் மொழியெனவே வந்தவிரு விழியவற்றுள்
கொடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே.
வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால்
கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார்.
கலைமகடன் பூர்வதிசை காணுங்கா லவள் விழியுள்
வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார்.
 பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே.
ஆரியமொழியே உயர்வென்ற, மனோன்மணியம் சுந்தரனாரின் காலத்திலிருந்த மக்களின் மனநிலையை மேற்கண்ட பாடல்கள் பதிவிட்டிருக்கின்றது. தமிழ்மொழியின் மேன்மை அறியாதவரே நிறைந்திருந்த காலம் என்பதை உணர்த்தும் பாடல்கள் இவை. சுந்தரம் பிள்ளையவர்களின் பின் கா.சு.பிள்ளை, மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் போன்றோரின் அரும்பணிகளால் தமிழன்னையின் பெருமை மீட்டெடுக்கப் பட்டது எனினும், இன்னும் அச்சப்பாடுகள் முற்றிலும் நீங்கிவிடவில்லை.
பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும் – ஒருகுலத்துக்கு ஒரு நீதி குறள் நீதியும் மநுநீதியும்  
வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக் கொருநீதி
அனைத்து உயிர்களும் பிறப்பினால் ஒருவரே! அவரவர் செய்யும் தொழில் காரணமாகவே சிறப்புகள் வேறு வேராகக் காணப்படுகின்றன என்னும் குறள் கூறும் அறநெறியையும், நீதியையும் உணர்ந்தோர்கள் குலப் பிறப்பின் காரணமாகவே அந்தணர், அரசர், வணிகர், சூத்திரர் என்று மனிதகுலத்திற்குள் வேற்றுமை பாராட்டும் மநுநீதியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தமிழ்நீதியாம் குறள்நீதியின் மேன்மையையும், வடமொழி நீதிநூலாம் மநுநீதியின் மானுடத்திற்குப் புறம்பான தீமையையும் தமிழர்களுக்கு இனம் காட்டுகின்றார் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள்.
திருவாசகத்தில் கரைந்தோர்கள் பிறவொன்றையும் கருதார்
மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.
‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்று பழமொழி கண்டவர் தமிழர்.  மனித மனங்களைக் கரைத்து, மனமாசுகளை நீக்கும் திருவாசகத்தில் கரைந்துபோனவர்கள் வேறு எந்த மந்திர உருவேற்றும் கண்மூடிக் கதறும் வழிபாடுகளை இயற்றமாட்டார்கள் என்று உறுதிபடக் கூறுகின்றார். திருவாசகத்தில் கரைந்துபோன அனுபவத்தையல்லவோ மேலை ஆரியரும் உணரும் வண்ணம் அருட்தந்தை ஜி.யூ.போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு உணர்த்துகின்றது. தமிழ்த் திருவாசகம் போலன்றி, ஆரியமொழி ஆரவார மந்திரங்கள் சடங்குகளே அன்றி உள்ளம் ஒன்றி வழிபாடியற்ற துணைபுரியா என்பது இங்கு தமிழின் மேன்மை குறித்து வலியுறுத்தப் பெறுகின்றது.
இறுதியாக,
மலையாள மண்ணில் ஆலப்புழை என்ற ஊரில் பிறந்த மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையவர்கள் தமிழ் மொழியையே தாயாகப் பாவித்து வந்தவர்; அவரல்லவோ உண்மையான தமிழர்? இச்செய்தியைப் பறைசாற்றும் அவர்தம் தமிழ்த்தாய் வாழ்த்தின் நிறைவுப் பகுதி இதோ:
 
நிற்புகழ்ந்து ஏத்துநின் நெடுந்தகை மைந்தர்
பற்பலர் நின் பெரும் பழம்பணி புதுக்கியும்
பொற்புடை நாற்கவிப் புதுப்பணி குயிற்றியும்
நிற்பவர் நிற்க நீபெறும் புதல்வரில்
அடியேன் கடையேன் அறியாச் சிறியேன்
கொடுமலையாளக் குடியிருப்பு உடையேன்
ஆயினும் நீயே தாய் எனும் தன்மையின்
மேய பேராசை என் மீக்கொள ஓர்வழி
உழைத்தலே தகுதி என்று இழைத்த இந் நாடகம்
வெள்ளியது எனினும் விளங்கு நின் கணைக்காற்கு
ஒள்ளிய சிறு விரல் அணியாக்
கொள் மதியன்பே குறியெனக் குறித்தே.
-மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை
நிறைவாக,
யாம் பெற்ற இன்பமாம் இவ்வுணர்வரிய தமிழ்த்தாய் வாழ்த்தின்பத்தை தமிழர் அனைவரும் பெற்று, எம் ஊன் பற்றி நின்ற தமிழ் உணர்வது ஓங்கி, அன்பால் அனைவரும் இன்புறப் பணிசெய்து, நிலமிசை தமிழால் இசைபட வாழ்ந்து, மறைத்தமிழ் கொண்டு வான் பற்றி நின்ற மறைப்பொருளோடு இரண்டறக் கலந்து இன்புற்று வாழ்க. (இந்நிறைவுரை, திருமூலதேவ நாயனாரின் திருமந்திரத்தில் உள்ள
‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
வான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணர்வு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும்தானே.’ என்ற ஊன் கலந்த பாடலால் நிறைந்தவை)
 
பெறர்க்கரிய இத் தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழராம் யாம் அனைவரும் பெற்றின்பமுறத் தந்த மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையவர்களுக்கு நன்றி கூற இவ்வொரு பிறவி போதுமா? நும் தமிழ் நுகர, நும் தமிழ் வாழ்த்த, யாம் பல்லாயிரம் மனித்தபிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே! தமிழ்த்தாய்க்கும், நுமக்கும் யாம் கூறுதும் பல்லாண்டு!!
 
தமிழால் இணைவோம்! தமிழாய் வாழ்வோம்!!
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

பல்லுயிரும் பலவுலகும் படைத்து அளித்துத் துடைக்கினும் ஓர் எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பது போல்”

திரும்ப திரும்ப எந்தமதத்தையும் குறிக்காமல் பொதுவாகப் ‘பரம்பொருள்” என்று குறித்திருப்பது ‘மதச்சார்பின்மைக்கும்’(secular) ஒத்துவருகிறதே! இதை நீக்கியது வியப்புக்குரியது!

பெருமாள்,

மதச்சார்பின்மை என்பது தனியே ஒரு மதத்தை மட்டும் சாராமல் என்பதல்ல.

Secular என்றால் not connected with religious or spiritual matters. 

ஆகவே குறித்த ஒரு மதத்தை சாராமல் பரம்பொருள் ஆன்மீகமாக எழுதினாலும் அது secular இல்லை.

ஏனென்றால் secular என்பதில் நம்பிக்கை இல்லாதவர்களும் வருவார்கள்.

ஆகவே அந்த வரி நீக்கப்பட்டது நியாயம்தான்.

1 minute ago, ஏராளன் said:

தமிழக சூழலில் secular என்றால் ‘இறைமறுப்பு’ என்பதாகவே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

பாருங்கள் பெருமாள் இந்த முனைவர் (இவர் யாழ்கள உறவும் கூட) மிக தெளிவாக சொல்லி உள்ளார். Secular என்பதை நாம் தவறாக விளங்கி கொண்டமையை.

3 minutes ago, பெருமாள் said:

பல்லுயிரும் பலவுலகும் படைத்து அளித்துத் துடைக்கினும் ஓர் எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பது போல்”

திரும்ப திரும்ப எந்தமதத்தையும் குறிக்காமல் பொதுவாகப் ‘பரம்பொருள்” என்று குறித்திருப்பது ‘மதச்சார்பின்மைக்கும்’(secular) ஒத்துவருகிறதே! இதை நீக்கியது வியப்புக்குரியது!

பெருமாள் உங்கள் நட்டில் புலிகள் ஏன் எல்லா மதத்திற்கும்  உரியதான கடவுள் வாழ்தது பாடலை பாடாமல்,  முற்றாக இறை வணக்கத்தை புறக்கணித்து தமது  நிகழ்வுகளை  நடத்தினாரகள் என்பதை புரிந்தீர்களானல் இதற்கான விடையை காண முடியும்.  விட்டால் பாராளுமன்றத்திலும் பஜனை பாட்டுடன் சபையை ஆரம்பிக்க சொல்வீர்கள் போலுள்ளது. 😂 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:
திராவிடக் கொள்கைகளுக்கு வலுவூட்டும் பின்னுள்ள மூன்று வரிகளை ஏன் நீக்கவேண்டும்?
திராவிடம் திராவிடம் என்று ஒட்டுமொத்த தமிழர்களுமே திராவிடக் கருத்தியலை தங்கள் பண்பாடு என்று ஏற்கும்படிக்கு மூளைச்சலவை செய்தவர்களுக்கு, “தமிழ்த் தாயே, நீ நான்கு திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய நான்கு குழந்தைகளை உன் வயிற்றிலே சுமந்து பெற்ற பின்பும் என்றும் நீங்காத இளமையுடன் திகழ்கின்றாயே! உன்னை எங்ஙனம் வாழ்த்துவேன்?” என்னும் பொருள்படும்
கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும்துளுவும்
உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடுனும்
என்ற வரிகள் தேனினைப் போல அல்லவா இனித்திருக்க வேண்டும்?  பின் என் நீக்கினார்கள்? தமிழின் பெயராலும், அடுக்கு மொழிச் சொற்களாலும் ஆட்சிக்கட்டிலைப் பிடித்தோர்களில் பெரும்பான்மையினர் தமிழரல்லர் என்பதால் அவர்களுக்கு இவ்வரிகளால் தமிழுக்குப் பெருமை சேர்வதை ஏற்றுக் கொள்ள இயலவில்லையோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

இதில் நான் நினைப்பது,

எமது மொழியை உயர்த்தி பாடும் போது, இன்னொரு மொழியை தாழ்த்தி பேச வேண்டிய அவசியம் இல்லை.

எனது பிள்ளை நல்ல கெட்டிக்காரன். ராமு, சோமு, கோபு அவனிடம் கேட்டு படிப்பார்கள்.

இதில் எனது பிள்ளையின் சிறப்பை கூட அவன் கெட்டிகாரன் என்று சொல்வது மட்டும் போதும் அல்லவா? ஏன் தேவையில்லாமல் ஏனையோரை இழுப்பான்?

தேசிய கீதங்களில் கூட தம் நாட்டின் சிறப்பை ஏற்றித்தான் பாடுவார்கள். இன்னொரு நாட்டை குறைத்து நாம் பெரிது என்று பாடுவதில்லை.

தவிர இப்படி ஒரு பாடலை அரச விழாவில் பாடும் போது அதில் அந்த மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் எல்லாரும் இருப்பர். நிச்சயம் சர்ச்சை வரும்.

ஆகவே அதை தவிர்ததும் நியாயம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

அண்ணை நீங்கள் குறிப்பிடும் பகுதியில் மற்ற மொழிகளை தாழ்த்தவோ/இழிவுபடுத்தவோ இல்லையே. பிள்ளைகள் என்பது இழிவுபடுத்துவதாகுமா?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

பெருமாள்,

மதச்சார்பின்மை என்பது தனியே ஒரு மதத்தை மட்டும் சாராமல் என்பதல்ல.

Secular என்றால் not connected with religious or spiritual matters. 

ஆகவே குறித்த ஒரு மதத்தை சாராமல் பரம்பொருள் ஆன்மீகமாக எழுதினாலும் அது secular இல்லை.

ஏனென்றால் secular என்பதில் நம்பிக்கை இல்லாதவர்களும் வருவார்கள்.

ஆகவே அந்த வரி நீக்கப்பட்டது நியாயம்தான்.

secular இங்கு முக்கியமல்ல மீண்டும் மீண்டும் துல்பன் .ஜஸ்டின் .கோசேன் மூவரிடமும் கேட்கிறேன் 

"பேராசிரியர் மாயோன் அவர்கள்  கடைசியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு என்ன பதில் உங்களிடம் உள்ளது" ?

  • கருத்துக்கள உறவுகள்

மேலே ஏராளன் இணைத்திருக்கும் இரு கட்டுரைகள் கவனத்திற்குரியவை. பெருமாள் இங்கே காவி வந்திருக்கும் நல்ல பெருமாளின் சைவசித்தாந்த ஆதரவுப் போக்கும், பா.ஜ.க வின் "மனோன்மணி சுந்தரனாரின் இலைக்குப் பாயாசம் போடுங்கோ!" என்ற தவிப்பும் ஒரே நேர்கோட்டில் வருகின்றன என நினைக்கிறேன்.

அடிக்கடி இதைச் சொல்லி இங்கே நான் வசவு வாங்கினாலும், மீண்டும் சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை: தமிழ் எந்த மதத்தின் முட்டுக் கொடுத்தலுமின்றியே நிலைக்கக் கூடிய சிறப்புடைய மொழி. அதனை ஒரு மதத்தின் அடையாளமாக மாற்றும் முயற்சியை சுந்தரனாரின் பாட்டை மாற்றியதால் தவிர்த்திருக்கிறார்கள்!

1 minute ago, பெருமாள் said:

secular இங்கு முக்கியமல்ல மீண்டும் மீண்டும் துல்பன் .ஜஸ்டின் .கோசேன் மூவரிடமும் கேட்கிறேன் 

"பேராசிரியர் மாயோன் அவர்கள்  கடைசியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு என்ன பதில் உங்களிடம் உள்ளது" ?

நீங்கள் எழுதப் படும் பதில்களை வாசிப்பதேயில்லையா? 🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

நீங்கள் எழுதப் படும் பதில்களை வாசிப்பதேயில்லையா? 🤦‍♂️

மடை மாற்ற வேண்டாம் கோசான் எழுதியது விடுங்க அதுக்கான பதில் ஏராளன்  சொல்லியுள்ளார்  உங்க விடையை சொல்லுங்க ?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

அண்ணை நீங்கள் குறிப்பிடும் பகுதியில் மற்ற மொழிகளை தாழ்த்தவோ/இழிவுபடுத்தவோ இல்லையே. பிள்ளைகள் என்பது இழிவுபடுத்துவதாகுமா?

இதை நீங்கள் தமிழராகச் சொல்கிறீர்கள். நீக்கப் பட்ட அந்தப் பகுதி ஏனைய திராவிட மொழிகளைப் பேசுவோரைக் குறைவாகக் காட்டுமா என அவர்கள் நிலையிலிருந்து யோசிக்க வேண்டியது அரச அமைப்பின் கடமை. அப்படி அவர்கள் நினைத்தால் பாடலைத் தடை செய்ய வழக்கு போடுதல் போன்ற முயற்சிகள் எடுத்து இதை தேவையற்ற சர்க்கசாக மாற்றி விடலாம் என்று ஆலோசனை கொடுக்கப் பட்டிருக்கும். இதையே தவிர்த்திருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன். ஒரு அரச அமைப்பு இப்படித் தான் சிந்திக்க வேண்டும். (இணையப் போராளிகள் எப்படியும் சிந்திக்கலாம், அங்கே செயல் எதிர்பார்க்கப் படுவதில்லை!)

21 minutes ago, goshan_che said:

பெருமாள்,

மதச்சார்பின்மை என்பது தனியே ஒரு மதத்தை மட்டும் சாராமல் என்பதல்ல.

Secular என்றால் not connected with religious or spiritual matters. 

ஆகவே குறித்த ஒரு மதத்தை சாராமல் பரம்பொருள் ஆன்மீகமாக எழுதினாலும் அது secular இல்லை.

ஏனென்றால் secular என்பதில் நம்பிக்கை இல்லாதவர்களும் வருவார்கள்.

ஆகவே அந்த வரி நீக்கப்பட்டது நியாயம்தான்.

பாருங்கள் பெருமாள் இந்த முனைவர் (இவர் யாழ்கள உறவும் கூட) மிக தெளிவாக சொல்லி உள்ளார். Secular என்பதை நாம் தவறாக விளங்கி கொண்டமையை.

Secular என்ற வாத்தைக்கு அனைவரும் புரியும்படியாக சிறந்த  விளக்கம் அளித்ததற்கு நன்றி கோஷான். 👍

விடுதலைப்புலிகள் தமது நிகழ்வுகளில் இறை வணக்கத்தை முற்றாகத் தவிர்த்தமைக்கு  இது தான் காரணம் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Justin said:

மடையை மாற்ற கான் இருக்க வேண்டுமே? இங்கே கானே இல்லையே ஐயா? மேலே போய் பதிலை வாசியுங்கள்! உங்கள் விளக்கக் குறைவுக்கு நான் ஓவர்ரைம் செய்ய முடியாது!😂

கீழே வாங்க 

“தமிழ்த் தாயே, நீ நான்கு திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய நான்கு குழந்தைகளை உன் வயிற்றிலே சுமந்து பெற்ற பின்பும் என்றும் நீங்காத இளமையுடன் திகழ்கின்றாயே! உன்னை எங்ஙனம் வாழ்த்துவேன்?” என்னும் பொருள்படும்

“கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும் உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடுனும்”

 அந்த பாடலின் உயிர்நாடியான கருத்துக்களை நீக்கி தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல்கள் என்று அறிக்கை சரியா தப்பா ?

15 minutes ago, Justin said:

“ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து

தமிழன்னையே! பேச்சு வழக்கு ஒழிந்தமையால் உலக வழக்கு அழிந்து ஒழிந்த வடமொழியான ஆரியம் போல் அல்லாது நீ சீரிய இளமையோடு விளங்குகின்றாயே! என்ற வரி தமிழுக்குப் பெரும் பெருமை சேர்க்கும் விடயமல்லவா? பின் ஏன் நீக்கினார்கள் என்பதுவும் வியப்பே!

வழக்கொழிந்த மொழியான ஆரியமும் கேஸ் போடுமாக்கும் ?

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஏராளன் said:

அண்ணை நீங்கள் குறிப்பிடும் பகுதியில் மற்ற மொழிகளை தாழ்த்தவோ/இழிவுபடுத்தவோ இல்லையே. பிள்ளைகள் என்பது இழிவுபடுத்துவதாகுமா?

ஏராளன்,

நாம் அதை அப்படி எண்ணலாம் ஆனால் அவர்கள் அப்படி நினைக்க வேண்டும் அல்லவா?

மற்றைய மூன்று மொழி மாநிலங்களும் தாம் தமிழின் பிள்ளைகள் என்பதை ஏற்க மறுப்பவர்கள்.

தவிர இது மொழி வழி ஆராய்சி நிறுவுதல் கடினம்.

முன்னர் யாழில் proto-dravidian, proto-tamil என நாம் பலர் புடுங்கு பட்டது நினைவிருக்கலாம்.

அத்தோடு தமிழை செம்மொழி என அறிவித்த கையோடு, காரணமே இல்லாமல் ஆந்திராவும், கர்னாடகாவும் தாமும் அப்படியே என ஒன்றிய அரசை நெருக்கி அந்த அந்தஸ்தை பெற்றமையும் தெரியும்தானே.

ஆகவே நிச்சயம் தமிழ் நாட்டின் ஒரு உத்யோகபூர்வ பாடலில், 

சமஸ்கிருதம் செத்து விட்டது, தமிழ் அப்படி அல்ல.

தெலுங்கு, கன்னடம், மலையாளத்யின் தாய்மொழி தமிழ்தான் என சொல்வது சர்ச்சையை உண்டாக்கும்.

அதை தவிர்க இப்படி செய்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

கீழே வாங்க 

“தமிழ்த் தாயே, நீ நான்கு திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய நான்கு குழந்தைகளை உன் வயிற்றிலே சுமந்து பெற்ற பின்பும் என்றும் நீங்காத இளமையுடன் திகழ்கின்றாயே! உன்னை எங்ஙனம் வாழ்த்துவேன்?” என்னும் பொருள்படும்

“கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும் உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடுனும்”

 அந்த பாடலின் உயிர்நாடியான கருத்துக்களை நீக்கி தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல்கள் என்று அறிக்கை சரியா தப்பா ?

“ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து

தமிழன்னையே! பேச்சு வழக்கு ஒழிந்தமையால் உலக வழக்கு அழிந்து ஒழிந்த வடமொழியான ஆரியம் போல் அல்லாது நீ சீரிய இளமையோடு விளங்குகின்றாயே! என்ற வரி தமிழுக்குப் பெரும் பெருமை சேர்க்கும் விடயமல்லவா? பின் ஏன் நீக்கினார்கள் என்பதுவும் வியப்பே!

வழக்கொழிந்த மொழியான ஆரியமும் கேஸ் போடுமாக்கும் ?

நேரப் பெறுமதி கருதி: நான் நினைக்கிறேன் நீங்கள் சொல்வது தான் சரியாக இருக்கும். இது தமிழை இழிவு செய்ய திராவிடர்களின் "ஷதி".  😂🤐

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.