Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்ணை வெட்டிக் கொலை செய்து தங்க நகைகளை கொள்ளையிட்ட தந்தையும் மகளும் - மட்டக்களப்பில் பயங்கரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு நகர பார் வீதியில் வீட்டில் இருந்த பெண் ஒருவரை துண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்ததுடன், அவரின் கழுத்தில் இருந்த தங்க நகைகளையும் தோட்டுடன் காதை வெட்டி எடுத்து பையிலி்ட்டு கொண்டு செல்ல  முட்பட்ட குறித்த வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணையும் அவரது தந்தையையும், அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (20) மாலை 4 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

 

 

betti2.jpg

 

மட்டக்களப்பு  பார் வீதியைச் சேர்ந்த 47 வயதுடைய செல்வராஜா தயாவதி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 

குறித்த வீட்டில் உயிரிழந்தவர் அவருடைய கணவர் மகள் ஆகிய மூவரும் வாழ்ந்து வருகின்ற நிலையில் சம்பவ தினமான  இன்று பகல், குறித்த வீட்டில் முன்பு, வீட்டுவேலை பார்த்து வந்த பெண் ஒருவர்,  அவரது தந்தையுடன்  சென்று தனது கஸ்டத்தை தெரிவித்துள்ள நிலையில் வீட்டின் உரிமையாளர் மதிய உணவை சாப்பிட்டுவிட்டு நித்திரை கொள்வதற்கு மேல்மாடிக்கு சென்றுள்ளார்.

அதேவேளை மகளும் உணவை உண்டுவிட்டு தனது அறைக்கு சென்றுள்ளனர் அதேநேரம் உயிரிழந்தவர் குறித்த பணிப்பெண்ணையும் மற்றும் அவரின் தந்தையையும் உணவு உண்டுவிட்டு செல்லுமாறு தெரிவித்துள்ளார். 

betti1.JPG

இந்த நிலையில் குறித்த பெண்ணை கத்தியால் கழுத்து மற்றும் கைகளை துண்டாகவெட்டியதையடுத்து அவர் உயிரிழந்த நிலையில், அவரின் கழுத்தில் இருந்த தங்க ஆபரணங்களையும் காதில் இருந்த தோட்டை காதுடன் அறுத்தெடுத்து பையில் போட்டு எடுத்துக் கொண்டு முச்சக்கரவண்டியில் ஒன்றில் தப்பியோட முயற்சித்தபோது அங்கு வீதியில் இருந்த பொதுமக்கள் அவர்களை மடக்கி பிடித்ததாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்ட பெண் திருமணம் முடித்துள்ளதாகவும் இவர்கள் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பொலிஸ் தடயவியல் பிரிவு  வரவழைக்கப்பட்டு இது தொடர்பான  மேலதிக விசாணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெண்ணை வெட்டிக் கொலை செய்து தங்க நகைகளை கொள்ளையிட்ட தந்தையும் மகளும் - மட்டக்களப்பில் பயங்கரம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

எஜமானி பழிவாங்கப்பட்டு உள்ளார் போல. 🤔

தந்தைமார் வயது குறைந்த பிள்ளைகளை வேலைக்கு விடுவது. சம்பளத்தை தாம் வாங்குவது. மலையகத்தில் இருந்து வசதி குறைந்தவர்களை அரை விலைக்கு வேலைக்கு எடுப்பது.. இப்படி இடியப்ப சிக்கல் பிரச்சனை இது. 

இதுவே சவூதி அரேபியா என்றால் தகப்பனும் மகளும் சதக் சதக்.. தலை வேறு முண்டம் வேறு ஒரே வெட்டு தான்.

 

 

Edited by நியாயத்தை கதைப்போம்

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

மலையகத்தில் இருந்து வசதி குறைந்தவர்களை அரை விலைக்கு வேலைக்கு எடுப்பது.. இப்படி இடியப்ப சிக்கல் பிரச்சனை இது. 

இந்த பிரச்சனைக்கும் மலையகத்துக்கும் என்ன லிங்க் கொலைகாரர்கள் வாழைசேனையை சேர்ந்தவர்கள் என்று அறிவித்து உள்ளார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

வாழைச்சேனை என்றால் இஸ்லாமிய சகோதரர்களோ? மலையக வீட்டு பணியாளர்கள் பற்றி பொதுவாக கூறினேன். 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

வாழைச்சேனை என்றால் இஸ்லாமிய சகோதரர்களோ? மலையக வீட்டு பணியாளர்கள் பற்றி பொதுவாக கூறினேன். 

இங்கு பெருகி வரும் கெட்ட  பழக்கம் செய்தியை பார்த்து கருத்துஎழுதுவது கிடையாது எதிர் கருத்தாளர் என்ன எழுதுகிறார் என்பது வாசிப்பது  கிடையாது தமக்கு என்ன தோணுதோ அதை அங்கேயே எழுதிவிட்டு செல்வது அதில் என்னய்யா சம்பந்தா சம்பந்தமில்லாமல் எழுதுகிறீர்களே என்று கேட்டால் பொதுவாக கூறினேன் என்று நழுவுவது .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

வாழைச்சேனை என்றால் இஸ்லாமிய சகோதரர்களோ? மலையக வீட்டு பணியாளர்கள் பற்றி பொதுவாக கூறினேன். 

வாழைச்சேனையில் பல தமிழரும் உள்ளார்கள். அத்தோடு வீட்டு வேலைக்கு இஸ்லாமிய பெண்கள் வருவதும் அரிது. குறிப்பாக ஏனைய இனத்தவர் வீடுகளில்.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பெருமாள் said:

இங்கு பெருகி வரும் கெட்ட  பழக்கம் செய்தியை பார்த்து கருத்துஎழுதுவது கிடையாது எதிர் கருத்தாளர் என்ன எழுதுகிறார் என்பது வாசிப்பது  கிடையாது தமக்கு என்ன தோணுதோ அதை அங்கேயே எழுதிவிட்டு செல்வது அதில் என்னய்யா சம்பந்தா சம்பந்தமில்லாமல் எழுதுகிறீர்களே என்று கேட்டால் பொதுவாக கூறினேன் என்று நழுவுவது .

நேர காலத்துக்கு போய்படும் ஐசே. உடல் ஆரோக்கியம் முக்கியம். உம்மை போல் நான் ஒரு ஊடகவியலாளர் இல்லை.

23 hours ago, goshan_che said:

வாழைச்சேனையில் பல தமிழரும் உள்ளார்கள். அத்தோடு வீட்டு வேலைக்கு இஸ்லாமிய பெண்கள் வருவதும் அரிது. குறிப்பாக ஏனைய இனத்தவர் வீடுகளில்.

உண்மைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

நேர காலத்துக்கு போய்படும் ஐசே. உடல் ஆரோக்கியம் முக்கியம். உம்மை போல் நான் ஒரு ஊடகவியலாளர் இல்லை.

நன்றி அக்கறைக்கு சமயம் கிடைக்கும்போதெல்லாம் தூங்கி வழிவது நம்ம இயல்பு நான் ஊடகவியல் இல்லை நண்பரே .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாசிப்பவர்களின் கவனத்துக்கு
கீழே இணைக்கப்பட்டுள்ள மேலதிக தகவல்களில் கொலை செய்யப்பட்ட விதமும், குரூரமும் இருக்கின்றன. அவை உங்களை, உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என்பதை கருத்தில் எடுக்கவும்

 

நகைகள் மீது தான் கொண்ட ஆசையினாலே கண்டம் துண்டமாக வெட்டி கொன்றேன் - திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்ட பணிப்பெண்

மட்டக்களப்பில் வீடொன்றில் பணிப்பெண்ணாக இருந்த 27  வயது யுவதி ஒருவர் அந்த வீட்டில் உரிமையாளரான பெண்ணை கண்டதுண்டமாக வெட்டி படுகொலை செய்து நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் மக்கள் மத்தியில்  பேரதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நகைகள் மீது தான் கொண்ட அதீத ஆசையே குறித்த வீட்டின் உரிமையாளரை கொலை செய்து நகைகளை கொள்ளையிட தீர்மானித்ததாக பரப்பரப்பான வாக்கு மூலத்தை வழங்கியுள்ளார்.

வீட்டில் பலரும் இருந்த நிலையில் குறித்த யுவதி மீன் வெட்டும் கத்தியால் வீட்டின் உரிமையாளரான பெண்ணை கண்டதுண்டமாக வெட்டி அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையிட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை நடந்த இச்சம்பவத்தில், எந்த வித தயக்கமுமின்றி அந்த யுவதி நகைகளை கழற்றும் பொருட்டு வீட்டு உரிமையாளரான பெண்ணைின் கழுத்திருந்த நகைகளை அபரிக்க தலைமுடியை கத்தரித்தும் கையை தேங்காய் ஒன்றின் மீது வைத்து துண்டித்தும் கொடூரமாக கொலை செய்து நகைகளை அபகரித்துள்ளார்.

இதனை அடுத்து சம்பந்தப்பட்ட யுவதியும் அவரது தகப்பனாரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு, எதிர் வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பட்டப்பகல் பொழுதில் நடைப்பெற்றுள்ள இந்த கொடூர கொள்ளையும் , கொலையும்  பலரை  பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, 

மட்டக்களப்பு நகர பார் வீதியிலுள்ள வர்த்தகர் செல்வராசாவின் வீட்டிற்கு கருவப்பங்கேணி பகுதியில், வசித்துவரும் 27 வயதுடைய ரவி கார்த்திகா என்ற பெண்  தினமும் காலையில் சென்று மாலை வரை பணிப்பெண்ணாக வீட்டு வேலைகளை செய்துவந்துள்ளார். அங்கு அவருக்கு வேலைக்கான சம்பளத்தையும் வழங்கி வந்துள்ளனர்.

குறித்த பணிப் பெண் பின்னர் மலேசியாவுக்குச் சென்று அங்கு வீட்டு வேலை செய்துவந்த நிலையில் போதை பொருள் பாவனைக்கு அடிமையாகி அங்கிருந்து அவரை பொலிஸார் பிடித்து நாட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் இலங்கைக்கு வந்து திருமணம் முடித்து  கொண்டு பெற்றோருடன் 8 மாதங்களாக வாழைச்சேனையில் வாழ்ந்துவந்தவர் அடிக்கடி முன்பு வேலை செய்த வீட்டிற்குச் (தயாவதி வீடு) சென்று வந்துள்ளார்.

20211221_172240.jpg

இந்நிலையில்  சம்பவதினமான கடந்த திங்கட்கிழமை (20) குறித்த பணிப்பெண் தனது கணவன் மற்றும் தனது தந்தையிடம் கல்லாற்றுக்குச் செல்வதாக தெரிவித்து , தனக்கு வீட்டு உரிமையாளர் 85 ஆயிரம் ரூபா பணம் தரவேண்டும் அதனை வாங்கிவரவேண்டும் என பொய்கூறி தந்தையை அழைத்துக் கொண்டு  வீட்டை விட்டு வெளியேறி  பஸ்வண்டியில் ஏறி மட்டக்களப்பு சினன் வைத்தியசாலையில் சந்தியில் இறங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து அங்கிருந்து மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு  முன்னால் உள்ள கடை ஒன்றில் கோழிவெட்டுவதற்கு  கத்தி ஒன்று தேவை என கத்தி ஒன்றை  வாங்கி தனது தோல் பையில் வைத்துக்கொண்டு பார்வீதியிலுள்ள வீட்டு உரிமையாளரின் வீட்டுக்கு இருவரும் சென்றனர். 

அங்கு  முதலாளியின் கார் இருப்பதைக் கண்டு வீட்டுக்குச் செல்லாமல் அங்கிருந்து கருவப்பங்கேணியிலுள்ள தந்தை  தொழில் புரிந்துவரும் ஹோட்டல் முதலாளியை சந்திப்பதற்காக அங்கு சென்று பின்னர் அங்கிருந்து மீண்டும் வீட்டு உரிமையாளரின் வீட்டுக்கு வந்துள்ளனர்.

அப்போது வர்த்தகர் செல்வராசா அருகிலுள்ள கோவில் திருவிழா காரணமாக கடைக்கு மகனை அனுப்பிவிட்டு மனைவி தயாவதி மற்றும்  மகளுடன் கோவிக்குச் சென்று வழிபட்டுவிட்டு சுமார் 11.30 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளனர். 

தயாவதி கோவிலுக்கு செல்லும் போது முழு தங்க ஆபரணங்களை அணிந்து சென்ற நிலையில், சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் பணிப் பெண்ணும் அவரது தந்தையும் அங்கு சென்றதையடுத்து அவர்களை வரவேற்று கலந்துரையாடி மதிய உணவை சாப்பிட்டுவிட்டு செல்லுமாறு பணிப் பெண் மற்றும் அவரது தந்தையிடம் கூறியுள்ளார்.

இதன் பின்னர் வர்த்தகர் செல்வராசா, அவரது மகள் ஆகியோர் சாப்பிட்டு விட்டு வர்த்தகர் செல்வராசா வீட்டின் முதலாம் மாடியிலுள்ள அறையில் நித்திரைக்குச் சென்றார். மகளும் சாப்பிட்டுவிட்டு வீட்டுமண்டபத்தில் ஒருபதியிலுள்ள நாட்காலியில் அமர்ந்து கொண்டு கையடக்க தொலைபேசியில் இருந்த நிலையில் நித்திரைக்குப் சென்றுள்ளார்.

அப்போது வீட்டு உரிமையாளரான பெண் தனது கையால் பணிப் பெண் மற்றும் அவளின் தந்தை ஆகிய இருவருக்கும் உணவு வழங்கினார். பின்னர் அவர்களிடம் வீட்டு உரிமையாளர் பெண் கதைத்துக் கொண்டிருந்த போது நேரம் மாலை சுமார் 4 மணியை நெருங்கியது. 

இந்நிலையில்,  அங்கிருந்து பணிப் பெண்ணின் தந்தை வீட்டின் வெளிப்பகுதிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் வீட்டின் முன்பதியில் இருந்த களஞ்சிய அறைக்கு வீட்டின் உரிமையாளரான பெண் சென்றபோது அவரை குறித்த பணிப் பெண் பின் தொடர்ந்து சென்று, அறையில்  வீட்டின் உரிமையாளரான பெண்ணை வெட்ட தனது தோல் பையில் வைத்திருந்த கத்தியை எடுத்தபோது வீட்டின் உரிமையாளரான பெண் அதனை கண்டு வேலைக்காரப் பெண்ணை தள்ளியுள்ளார்.

20211221_171840.jpg

இதன்போது, பணிப் பெண்ணின் கையில் கத்தி வெட்டுப்பட அவளுக்கு காயம் ஏற்பட்டதைடுயடுத்து வீட்டு உரிமையாளரான பெண்ணை பிடித்து தள்ளியுள்ளார்.

அப்போது அவர் கீழே தலைக்குப்புற வீழ்ந்தபோது வீட்டு உரிமையாளரான பெண்ணின் கழுத்தை கத்தியால் சுமார் 10  தடவை வெட்டியுள்ளார்.

பின்னர் அவர் ஓடமுடியாதாவாறு முழங்கால்கள் இரண்டையும் வெட்டியுள்ளார். அவரின் கழுத்தில் இருந்த சுமார் 25 பவுண் தாலிக் கொடியை கழற்றியபோது தலைமுடி தாலியில் சிக்கியதையடுத்து தலைமுடியை வெட்டி தாலிக் கொடியை எடுத்துள்ளார்.

கையில் அணிந்திருந்த வளையல்களை கழற்ற அங்கிருந்த  பலகைக் கட்டையில் கையை வைத்து கையின் மணிகட்டு பகுதியை  துண்டாக்கிவிட்டு வளையல்களை கழற்றியுள்ளார்.

கைவிரலில் இருந்த மோதிரங்களையும் கழற்றிவிட்டு காதில் இருந்த தோட்டை கழற்ற காதை தோட்டுடன் கத்தியால் அறுத்து எடுத்துக் கொண்டு மொத்தமாக 46  பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு, அதனை தோல்பையில் பையில் எடுத்து வைத்துகொண்டு  கொண்டு கத்தியை அங்கு விட்டுவிட்டு அறையில் இருந்து வெளியேற முட்பட்டுள்ளார்.

இந்நிலையில் வீட்டின் வெளியே சென்ற பணிப் பெண்ணின் தந்தை அங்கு சென்ற போது மகள் செய்த கொடூரத்தை கண்டு மகளை தாக்கி, என்ன செய்துள்ளாய் என இருவரும் சண்டைப்பிடித்துக் கொண்ட போது ஏற்பட்ட சத்தத்தையடுத்து சோபாவில் நித்திரையில் இருந்த வீட்டு உரிமையாளரான பெண்ணின் மகள் விழித்தொழுந்து வந்த போது அங்கு தாய் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைகண்டு அதிர்ந்து கத்தியுள்ளார்.

இந்த சத்தம் கேட்டு மாடியில் படுத்திருந்த கணவர் பதற்றத்துடன் கீழ் இறங்கிவந்தபோது மனைவி இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தமிட்டார்.

இதன்போது கொள்ளையடித்த நகைகளுடன் வேலைக்காரப் பெண்ணும், அவளது தந்தையும் அங்கிருந்து வெளியேறி தப்பி ஓடி வீதிக்கு சென்றபோது வீதியில் இருந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் அவர்களை பின்தொடர்ந்துடன் அங்கு கடைகளில் இருந்தவர்களும் ஒன்றிணைந்து அவர்களை மடக்கிபிடித்தனர் என பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் வேலைக்காரப் பெண் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு திங்கட்கிழமை இரவு சென்ற மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான்  சம்பவ இடத்தை பார்வையிட்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட தடயப் பொருட்களை சேகரித்து கொள்ளுமாறும் உத்தரவிட்டார். 

கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்ட 46 பவுண் தங்க ஆபரணங்கள், கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடீவி கெமராவில் பதிவான ஒளித் தொகுப்புக்கள்  அடங்கிய இருவட்டு போன்ற தடயப் பொருட்களை மீட்ட பொலிஸார்  கைது செய்யப்பட்ட வேலைக்காரப் பெண் மற்றும் அவளது தந்தை ஆகிய இருவரையும்  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமை (21) ஆஜர்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.   

நகைகள் மீது தான் கொண்ட ஆசையினாலே கண்டம் துண்டமாக வெட்டி கொன்றேன் - திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்ட பணிப்பெண் | Virakesari.lk

On 20/12/2021 at 16:49, நியாயத்தை கதைப்போம் said:

 

தந்தைமார் வயது குறைந்த பிள்ளைகளை வேலைக்கு விடுவது. சம்பளத்தை தாம் வாங்குவது. மலையகத்தில் இருந்து வசதி குறைந்தவர்களை அரை விலைக்கு வேலைக்கு எடுப்பது.. இப்படி இடியப்ப சிக்கல் பிரச்சனை இது. 

 

 

 

 

On 20/12/2021 at 20:23, நியாயத்தை கதைப்போம் said:

வாழைச்சேனை என்றால் இஸ்லாமிய சகோதரர்களோ? மலையக வீட்டு பணியாளர்கள் பற்றி பொதுவாக கூறினேன். 

கொலை செய்த பெண்ணின் மன விகாரங்களுக்கும் எந்தவிதமான அடிப்படையும் அற்ற உங்களின் இந்த பதில்களுக்கும்,அதை எழுதத் தூண்டிய உங்கள் மனசுக்கும் இடையில் பெரிய வேறுபாடு இல்லை. முதலில் மனிதராக சிந்தியுங்கள், பின்னர் நியாயத்தை கதைக்கலாம்.

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

போதைபொருள் பாவனை.. ? 

 இவ்வளவு கொடூரமாக கொல்லப்படுவதற்கு நிச்சயம் நகைகள் காரணமாக இருக்குமா என ஆரம்பத்தில் சந்தேகம் இருந்தது.

😔

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

போதைபொருள் பாவனை.. ? 

 இவ்வளவு கொடூரமாக கொல்லப்படுவதற்கு நிச்சயம் நகைகள் காரணமாக இருக்குமா என ஆரம்பத்தில் சந்தேகம் இருந்தது.

😔

போதைப்பொருள் தான் இதற்கு காரணம். போதைப்பொருள் குரூரமாக கொல்லத்தூண்டியிருக்கலாம். போதைப்பொருள் வாங்க பணத்துக்கு நகை தேவைப்பட்டிருக்க வேண்டும். ஹெரோயின் போன்ற தீவிரமான போதைக்கு அடிமையான பெண்ணாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

போதைப்பொருளை விட கொடூரமானது 

சமுதாய ஏற்றத்தாழ்வு

சமதர்ம சோலிச  நாடாக எம்  மக்களை மாற்றணும்

ஆனால் இனி?????

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

போதைப்பொருளை விட கொடூரமானது 

சமுதாய ஏற்றத்தாழ்வு

சமதர்ம சோலிச  நாடாக எம்  மக்களை மாற்றணும்

ஆனால் இனி?????

நல்ல வேளை அப்படியொன்று நடக்கவில்லை என்பதையிட்டு மகிழ்ச்சி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.