Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அதான.. ஜடியா இல்லாத மோட்டு பொடியனா இருக்கு… ஒரு வேளை எல்லாரும் கைய விட்டுட்டானுவள் பட்டத்த நான்தான் காப்பாத்த போறன் எண்டு நினைச்சிருப்பார் போல…😂

சிங்களவர் கொமென்ட் போட்டிருக்கிறார்....

திருப்பி இந்த நாட்டிலயே குதிச்சிராமல்,

அப்படியே பறந்து போய்..... ஜரோப்பாவில.... லாண்ட் ஆகி... தப்பி பிழைத்திருக்கலாமே...

அவங்களே ஓட நிற்கிறார்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, Nathamuni said:

சிங்களவர் கொமென்ட் போட்டிருக்கிறார்....

திருப்பி இந்த நாட்டிலயே குதிச்சிராமல்,

அப்படியே பறந்து போய்..... ஜரோப்பாவில.... லாண்ட் ஆகி... தப்பி பிழைத்திருக்கலாமே...

அவங்களே ஓட நிற்கிறார்கள் ...

இன்னும் ஒருத்தர் 

 
 
Iverkkum 20 perchlle kollupittile land kudukelame😁
இவருக்கும் 20 பெர்சேஸ் காணி கொல்பிட்டியில்  கொடுக்கணுமாம்  🤣
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ராட்சத காற்றாடி கயிற்றுடன் ஆகாயத்தில் மிதந்த இளைஞர்: கீழே விழுந்து முதுகுத் தண்டு பாதிப்பு

  • யூ.எல்.மப்றூக்
  • பிபிசி தமிழுக்காக
8 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ராட்சத காத்தாடி

 

படக்குறிப்பு,

ராட்சத காத்தாடி

ராட்சத காற்றாடி (பட்டம்) ஒன்றை பறக்க விட்டபோது, பட்டம் விடுவதில் அனுபவமற்ற இளைஞர் ஒருவர், அதன் கயிற்றைப் பிடித்தவாறு ஆகாயத்தில் சுமார் 120 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்து, அதிருஷ்டவசமாக தப்பிய சம்பவமொன்று இலங்கையின் பருத்தித்துறை - குரும்பசிட்டி பகுதியல் நடந்துள்ளது.

மனோகரன் என்ற அந்த இளைஞருடைய வீட்டுக்கு அருகில் உள்ள வெற்றுக் காணியில் இளைஞர்கள் சிலர் இணைந்து, ராட்சத காற்றாடி ஒன்றைப் பறக்க விட்டனர். காற்றாடி விடுவதில் எந்தவித முன் அனுபவங்களும் அற்ற மனோகரன் அவர்களுடன் இணைந்துகொண்டார்.

பட்டம் மேலெழும் போது அதன் கயிற்றைப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள், சிறிது சிறிதாக கயிற்றை விட வேண்டும் என்பது தெரியாத மனோகரன், காற்றாடியின் கயிற்றை இறுகப் பிடித்துக் கொண்டிருக்க, அவர் பட்டத்துடன் மேலெழத் தொடங்கினார்.

இப்படி ஆகாயத்தில் கயிற்றைப் பிடித்தவாறு உயரத் தொடங்கிய மனோகரன், சுமார் 120 அடி வரை தான் கயிற்றுடன் ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்ததாக பிபிசி தமிழிடம் கூறினார்.

கடந்த சனிக்கிழமை (18) பிற்பகல் வேளையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஆகாயத்தில் மனோகரன் உயர்ந்த நிலையில், அவரை சத்தமிட்டு தைரியப்படுத்திய நண்பர்கள், மிகச் சிரமத்துடன் கயிற்றை கீழே இழுத்து மனோகரனை தரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இதன்போது சுமார் 30 அடி உயரத்தில் இருந்த நிலையில் - தான் பிடித்திருந்த கயிற்றை கைவிட்டு கீழே குதித்துள்ளார் மனோகரன்.

 

மனோகரன்

 

படக்குறிப்பு,

மனோகரன்

இதன்போது தனது உடலில் அடிபட்டதாகவும் முள்ளந்தண்டில் (முதுகுத் தண்டில்) பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மனோகரன் தெரிவித்தார்.

சம்பவத்தை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மனோகரன், மூன்று நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது விருப்பத்தின் பேரில் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டு தற்போது வீட்டுக்கு வந்துள்ளார்.

ஆனாலும் முள்ளந்தண்டில் தற்போதும் வலி உள்ளதாக மனோகரன் கூறினார்.

திருமணமான மனோகரன் வெற்றிலைக் கடையொன்றை நடத்தி வருகிறார். அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

மனோகரன் காற்றாடியின் கயிற்றைப் பிடித்தவாறு ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்த காட்சியை அப்போது அவரது நண்பர்கள் தங்கள் மொபைல் ஃபோன்களில் படமெடுத்துள்ளனர்.

அந்தப் படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

https://www.bbc.com/tamil/sri-lanka-59752860

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இந்தக் காணொளியில், பருத்தித்துறை பகுதிகளில் எப்படி பட்டம் வடிமைத்துக் கட்டுகிறார்களென காண்பித்துள்ளார்கள்..!

வில்லு மாதிரி அமைப்பில் இருபுறமும் ஏதோ 'டப்பா' போல கட்டி அதில் பட்டையான நூலை இழுத்துப் பிடித்து முறுக்கேறியிருகிறார்கள், அதிலிருந்து வரும் விநோதமான ஒலியைக் கேளுங்கள். 🤔

இறுதியில் பொடியன்கள் கயிறைப் பிடித்து தொங்கி விளையாடுவது நல்ல த்ரிலிங்கான மற்ற்ம் வேடிக்கையான அனுபவம்.

Edited by ராசவன்னியன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, ராசவன்னியன் said:

வில்லு மாதிரி அமைப்பில் இருபுறமும் ஏதோ 'டப்பா' போல கட்டி அதில் பட்டையான நூலை இழுத்துப் பிடித்து முறுக்கேறியிருகிறார்கள், அதிலிருந்து வரும் விநோதமான ஒலியைக் கேளுங்கள். 🤔

இதை நாங்கள் “விண்” என்று சொல்லுவோம்.  வில்லு மாதிரி முறியாமல் வளையக்கூடிய தடி என்றால் மூங்கில் தடி அல்லது கமுகம் சிலாகை (தடி) பாவிப்போம். படலம் அல்லது தட்டி (காணொளியில் இருக்கும் செவ்வக வடிவ பட்டம்) க்கும், கொக்கு, பிராந்து போன்ற பட்டங்களுக்கும் விண்பூட்டித்தான் ஏத்துவோம்.

விண் செய்ய தேவையானவை:

விசை - வில்லு மாதிரி வளையக்கூடிய மூங்கில் அல்லது கமுகம் தடி.  விசையை வழுவழுப்பாக இணக்கி, நடுவில் வைத்து பலன்ஸ் பார்த்து, முறியாமல் வளையக்கூடிய மாதிரிச் செய்யவேண்டும்.

நார் - பார்சல் ரேப் அல்லது பனம் நார், அல்லது உரப்பையில் இருந்து கிடைக்கும் பொலித்தீன் நார் (1 1/2 முழ விசைக்கு மேல் பாவிக்கமுடியாது!)

வெடிப்பு இல்லாத பார்சல் ரேப்பாக எடுத்து, பிசிங்கானால் “வாட்ட”வேண்டும். பிசிங்கான் உடைந்த போத்தல் துண்டு. சிலவேளை உடைந்த பல்ப் துண்டும் பாவிக்கலாம். வாட்டுவது என்றால் நாரை சீராக செம்மைப் படுத்துவது. அப்போதுதான் பிசிறில்லாமல் கூவும்! காணொளியில்  உள்ள விண் “அழறுகின்றது” (நாரில் வெடிப்பு இருக்கலாம் அல்லது ரென்சன் போதாது!).

பனம் நார் செய்வது மிகவும் கடினம். முதலில் வடலிப்பனையில் நீண்ட ஓலையைக் கண்டுபிடிக்கவேண்டும். மூன்று நாலு முழ நீளமான பச்சை ஓலையின் தடியில் நீளப்பாட்டுக்கு பிசிங்கானால் நாரை வெட்டியெடுக்கவேண்டும். இது சரியாகக் கிடைக்க மிகவும் பொறுமை தேவை. அதை வெடிக்காமல் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்னர் “வாட்ட”வேண்டும்.  நார் அறாமல் இருந்தால் அதிஸ்டம்!  கொக்கு, பிராந்துப் பட்டங்களுக்கு பனம்நார் கலாதியாக இருக்கும்! அவை ஜா(சா)டும்போது விண் நன்றாகக் கூவும்! 

கூவைகள்- நாரை இழுத்துப் பிடித்துக்கொள்ள. இவற்றை கிளுவைத் தடியில் வெட்டி துளை போட்டுச் செய்வது.

காணொளியில் வரும் முதலாவது படலம் அளவு நானும் எனக்கு கூட்டுக்களும் கட்டி ஏத்தினோம். 😀 அதை ஒரு “மிஷனாக” இரண்டு மூன்று நாட்களில் செய்தோம். ஊரில் பலரது வேலிகளை வெட்டி தடிகளைப் பெற்றுக்கொண்டோம். நாங்கள் விண்ணை பட்டத்தின் மேல் விளிம்பில் இருந்து 2-3 இஞ்சுகள் கீழேதான் கட்டுவோம். அப்போதுதான் முழுநார் மீதும் காற்றுப் படாமல் வெளிநீட்டிய நாரின் பகுதிகளில் மட்டும் காற்றுப் படும். இது அதிர்வின் frequency ஐக் கூட்டும் என நினைக்கின்றேன்!

 

 

  • Like 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுகளை பார்த்தபின் இன்னும் எத்தனைபேர் கிறுக்கு பிடிச்சு அலைய போறாங்களோ ?



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழுக்கு குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை. குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரையான சேவையினை எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது. இதுவரை காலமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மாத்திரம் சேவையினை வழங்கி வந்த கடுகதி ரயில் , தற்போதைய பாடசாலை விடுமுறை மற்றும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கைக்கு அமைவாக இம்மாதம் 30ஆம் திகதி வரை தனது சேவையினை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 5.30 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் குளிரூட்டப்பட்ட புகையிரதமானது 11:15 மணிக்கு யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை வந்தடைந்து பின்னர் காங்கேசன் துறையிலிருந்து மதியம் 12.34 க்கு தனது சேவையை ஆரம்பிக்கும் புகையிரதம் இரவு 7.20 மணிக்கு மீண்டும் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடைகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து பயணிக்கும் புகையிரதம் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தில் தனது பயணத்தினை நிறைவு செய்கிறது. https://athavannews.com/2024/1411341
    • உண்மை தான் அண்ணா பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் இலங்கை இருந்தது என்பதற்காக இலங்கை ஜனாதிபதியோ பாராளுமன்ற உறுப்பினரோ பிரிட்டனில் கல்வி கற்றிருக்க வேண்டியது இல்லை. உண்மை தான்  Zuma. விசில் அடிச்சான் குஞ்சுகளை குசிபடுத்துவதே அவரது செயற்பாடாக இருக்கபோகின்றது.
    • அதிகரிக்கவுள்ள மழை வீழ்ச்சி. கிழக்கு கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 10ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெறும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும். மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். https://athavannews.com/2024/1411332
    • தரமற்ற மருந்துகள் தொடர்பாக வெளியான உண்மை. தரமற்ற மருந்துகள் தொடர்பாக நேற்று முன்தினம் செய்தித்தாள்களில் வெளியான செய்தி குறித்து எதிர்க்கட்சியின் பிரதான இணைப்பாளர் கயந்த கருணாதிலக முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து குறிப்பிட்ட அமைச்சர், ” தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட மருந்துகள்தான் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை ஊடாக விநியோகிக்கப்படுகின்றன. குறித்த அதிகார சபையில் வினைத்திறனற்ற நிலை காணப்படுகின்றது. தற்காலிக மற்றும் நிரந்தரப் பதிவுகள் தற்போது விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அவ்வாறு கூறும் விதமாக தரமற்ற மருந்துகள் அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பின் ஊடாக செல்லவில்லை. தரத்தின் தன்மை தொடர்பாக பிரச்சினை இருப்பின் அது அறிவிக்கப்படும். இந்நிலையில், இது தொடர்பாக எதிர்காலத்தில் விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெளிவுபடுத்தியுள்ளார். https://athavannews.com/2024/1411338
    • வாடகைக்கு காதலனை தேடும் பெண்கள் – வளரும் புது கலாசாரம். பல ஆண்டுகளாக ஆண்களுக்கும், பெண்களுக்கும் குறிப்பிட்ட வயதிற்குள் எல்லாம் நடக்க வேண்டும், வயது தாண்டி போக கூடாது என்று சொல்லி வயதிற்கு ஏற்றவாறு சடங்கு, சுப நிகழ்ச்சிகள் சமூகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருமண வயதை எட்டிய வியட்நாம் பெண்கள் திருமணத்தின் அழுத்தத்தை சமாளிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளனர். இளம்பெண்கள் தங்களுக்கு பிடித்த காதலனை வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் புதிய நடைமுறை தான் தற்போது வியட்நாமில் நடைபெற்று வருகிறது. திருமணம் செய்துகொள்ளும்படி பெற்றோர்கள் தொந்தரவு செய்வதால் தற்காலிகமாக அவர்களை சமாதானம் செய்வதற்காக பெரும்பாலான பெண்கள் இந்த வழியை பின்பற்ற தொடங்கி உள்ளனர். வடக்கு வியட்நாமை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவருக்கு காதலனை வீட்டிற்கு அழைத்து வருமாறு பெற்றோர் வற்புறுத்தியதன் காரணமாக வாடகைக்கு காதலனை அழைத்து சென்றுள்ளார். இதனை தொடர்ந்தே இந்த நடைமுறை அறிமுகமாகி உள்ளது. அந்தவகையில், வாடகைக்கு சென்ற 25 வயதான நபர் கூறும்போது, ஒரு வருடத்திற்கும் மேலாக “போலி காதலனாக” வேலை செய்து வருகிறேன். தனது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்காக ஜிம்மிற்குச் செல்வது, சமைக்கக் கற்றுக்கொள்வது மற்றும் பாடும் திறன் மற்றும் உரையாடல் திறன்களை மேம்படுத்துவது, தோற்றம் மற்றும் திறன்களை வளர்த்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1411353
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.