Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி , இளம் பெண் வைத்தியரை மிரட்டியமைக்கு பின்னால் என்ன நடக்குது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் வரும் கோல்களை எல்லாம் பதிவு செய்து சோஷல்மீடியாக்களுக்கு லீக் செய்கிறா போலிருக்கு.

சிறிதரன் எம்பியுடன் கதைக்கும்போது தனது மேலதிகாரியின்மீதும் முறைப்படுகின்றார். இது ஹியூமன் ரிஸோஸர்ஸுக்கு எல்லோ சொல்லவேண்டும்!

 

அதிகாரிகளின் பெயர் விபரங்களைப் பார்க்கலாம்! கூகிள் தேடலில் எல்லாம் கிடைக்கும்!

https://np.gov.lk/information-officers-and-designated-officers-rdhs/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

வைத்தியர் வரும் கோல்களை எல்லாம் பதிவு செய்து சோஷல்மீடியாக்களுக்கு லீக் செய்கிறா போலிருக்கு.

சிறிதரன் எம்பியுடன் கதைக்கும்போது தனது மேலதிகாரியின்மீதும் முறைப்படுகின்றார். இது ஹியூமன் ரிஸோஸர்ஸுக்கு எல்லோ சொல்லவேண்டும்!

 

அதிகாரிகளின் பெயர் விபரங்களைப் பார்க்கலாம்! கூகிள் தேடலில் எல்லாம் கிடைக்கும்!

https://np.gov.lk/information-officers-and-designated-officers-rdhs/

ஒரு பக்கம் அதிகாரவர்க்கம் இடையில் இவவும் எல்லாத்தையும் ரெக்கோட் அடிக்கிரா  நடுவில் தமிழ்ச்சனம் அதுவும் ஏழைகள் மாட்டுப்பட்டு சின்னாபின்னமாகுதுகள் .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

ஒரு பக்கம் அதிகாரவர்க்கம் இடையில் இவவும் எல்லாத்தையும் ரெக்கோட் அடிக்கிரா  நடுவில் தமிழ்ச்சனம் அதுவும் ஏழைகள் மாட்டுப்பட்டு சின்னாபின்னமாகுதுகள் .

இதில் பிழையேதுமில்லை, அவ தன்னைக் காப்பாற்ற ஆதாரங்களை வைத்திருப்பது நல்லது. இன்றைய காலகட்டத்தில் உதவி பெறுபவர்கள் அவர்களுக்கு கைம்மாறு செய்வதில்லை. ஒன்று மட்டும் உண்மை! நாளடைவில் இவ தன் செயற்படுகளை மாற்றி இவர்களைப்போல் தான்தோன்றித்தனமாக மாறலாம் அல்லது தூய பணியிலிருந்து விலகிப்போகலாம். நாறிப்போன சுயநலம், அரசியல் ஏழைச்சனங்களையே பாதிக்கும். பட்ட காலே படும் கெட்ட குடியே கெடும். குற்றவாளிகள் தண்டிக்கப்படாத விடத்து எல்லோருக்கும் குற்றம் செய்து தப்பிக்கும், தங்களை காப்பாற்றும் மனப்பாங்கு தானாகவே வந்துவிடும். அவர்களும் மனிதர்தானே!                             

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இதில் பிழையேதுமில்லை, அவ தன்னைக் காப்பாற்ற ஆதாரங்களை வைத்திருப்பது நல்லது. இன்றைய காலகட்டத்தில் உதவி பெறுபவர்கள் அவர்களுக்கு கைம்மாறு செய்வதில்லை. ஒன்று மட்டும் உண்மை! நாளடைவில் இவ தன் செயற்படுகளை மாற்றி இவர்களைப்போல் தான்தோன்றித்தனமாக மாறலாம் அல்லது தூய பணியிலிருந்து விலகிப்போகலாம். நாறிப்போன சுயநலம், அரசியல் ஏழைச்சனங்களையே பாதிக்கும். பட்ட காலே படும் கெட்ட குடியே கெடும். குற்றவாளிகள் தண்டிக்கப்படாத விடத்து எல்லோருக்கும் குற்றம் செய்து தப்பிக்கும், தங்களை காப்பாற்றும் மனப்பாங்கு தானாகவே வந்துவிடும். அவர்களும் மனிதர்தானே!                             

இந்த விடயத்தை மூடி  மறைக்க படாத பாடு படுகின்றனர் இதுக்கு பின்னால் இருப்பவர்கள் நாளை இந்த பிரியந்தியும் பணத்தால் அல்லது வன்முறை அல்லது எதிர் பிரச்சாரம் மூலம்  அடக்கப்படலாம் ஆனல் அங்கிருக்கும் மக்களுக்கு விடிவு இல்லை .

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 31/1/2022 at 14:18, MullaiNilavan said:

ஐயா பாலகிருஷ்ணன் MSc- Software Engineering,

புகையை அடிச்சு பழம் பழுக்க வைக்கிறது  தெரியுமோ?

அவருக்கு பூநகரியில் 100 ஏக்கர் காணி உண்டாமே அங்கு வேலை செய்பவர்களுக்கு கொரனோ ஊசிக்குதான் இவவை தொடர்பு கொண்டவராம் என்கிறாராம் இப்ப .

  • கருத்துக்கள உறவுகள்

பிறரின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பார்களானால் அங்கு சமத்துவம் இருக்கும்

spacer.png

கிளிநொச்சி–தர்மபுரம் ஆரம்ப பாடசாலை ஒன்றில் கல்விபயிலும் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு என கூறிய கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மருத்துவர் பிரியந்தினி விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பாடசாலை மாணவர்களை குறிவைத்த மாபியாக்களின் தகவலை வெளிக்கொணர்ந்த வைத்திய பிரியந்தினிக்கு மிரட்டப்பட்ட சம்பவமும் இடம்பெற்றிருந்தது. எனினும் மாபியாக்களின் மிரட்டல்களுக்கு அஞ்சாது தனது கடமையை செவ்வனே செய்துவரும் மருத்துவருக்கு ஆதரவாக பலரும் குரல்கொடுக்க முன்வந்துள்ளனர்.

இந்நிலையில் மருத்துவர் பிரியந்தினி தனது முகநூலில் பதிவிட்ட கருத்து பல்லரையும் ஈர்த்துள்ளது. அவர் பதிவிட்ட பதிவில்,

நான் சுதந்திரத்தை மட்டுமே அடையாளமாகக் கொண்டவள். எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் அடங்கிப் போவதையோ யாரையும் அடக்கி ஆள்வதையோ, வாழ்வின் அவமானமாகக் கருதுகிறவள்.

அதிகார குரலுக்கோ, அடிதடிக்கோ, உணர்வுப் பூர்வமான அச்சுறுத்தலுக்கோ சற்றும் சுருங்கி விடாதபடி மிக மிக திடமான மூளையையும் உடலையும் செதுக்கி வைத்திருக்கிறேன். பெண் என்ற முறையில் என் உடல் குறித்தோ, அதன் உறுப்புகள் குறித்தோ எவ்வித பயமோ, எரிச்சலோ, வேதனையோ, தாழ்வு மனப்பான்மையோ எனக்கில்லை.

குறிப்பாக அகங்காரம், கோபம், பொறாமை, கூச்சம், நாணம் போன்றவற்றின் எச்சமாக என்னை ‘நான்’ சுமந்து திரிவதில்லை. சுமையில்லாத மனமும், உடலும் இருப்பதாலேயே என்னால் சிரிக்க முடிகிறது. மிக சத்தமாக, மிக மிக சத்தமாக….

எத்தகைய வளைவுக்குள்ளும் நெளிந்து வெளியேறவும், நீள்கோடுகளில் நீண்டு மீளவும் வட்டங்களுக்குள் வளைந்து சுற்றவும் நான் கற்றது பிரச்னைகள் நிறைந்த இவ்வுலகத்திடமிருந்து.

தன்னை சுதந்திரமாக வைத்துக் கொள்கிறவர்கள், பிறரின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பார்களானால், அங்கு சமத்துவம் இருக்கும் என்பது என் நம்பிக்கை… உடலளவில் தங்களை சுதந்திரப் படுத்திக் கொள்ளும் பலர், சிந்தனை அளவில் இன்னும் குறுகிய வட்டத்துக்குள் தான் இருக்கிறார்கள் என மருத்துவர் பிரியந்தினி பதிவிட்டுள்ளார்.

cjMLuENMW0uo5RuBhDY7.jpg

https://www.thaarakam.com/news/085e9450-1a97-48f3-88de-f401a836dd7d

  • கருத்துக்கள உறவுகள்

1.வன்புணர்வு மிரட்டல் - பிறாங் கோல்

2.கொலை மிரட்டல் - தெளிவான அடையாளத்தோடு RDHS அனுப்பியதாக தொலைபேசியினூடு(பொலீஸ் விசாரணையில்)

3. அப்பனை சீவுவம் வாள் வெட்டு காங் -நேரடியாக RDHS அனுப்பியதாக மீண்டும் மிரட்டல் (பொலீஸ் விசாரணையில்)

4.வளர்ப்பு நாயை லபி- காணவில்லை/கடத்தல் (பொலீஸ் விசாரணையில்)
 
5.செய்யும் வேலையில் இடம்மாற்ற டிரான்சர் அழைப்பு(நிராகரித்துவிட்டேன்)

6.கண்ட நிண்டவனின் ஓடியோக்களை நானே பிரபலமாவதற்கு லீக்பண்ணினேன் என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டு

7.நான் வேலை செய்த அலுவலகத்திலேயே லீவெடுத்த இரு நாட்களில் பல மாற்றங்கள்

8..இன்டர்நெட்டில்  இல்லாத பொல்லாத  கேவலமான கற்பனையிலும் நினைத்துப்பார்க்க இயலாத கதைகள் 

அடேய் பன்னிதான் படையோடு வரும்
🔴 சிங்கம் சிங்கிளாத்தன் வரும்🔴
வெட்கமே இல்லையாடா ஒரு தனித்து நிக்கும் பெண்ணுடன் இவ்வளவு கூட்டமாக கேவலமாக மோத!!!

😷இலட்சங்ளில்தான் கொள்ளையிட்டீர்கள் என்று நினைத்திருந்தேன் உங்கள் அலப்பறைகள்ளப்பார்க்கையில் கோடியில் சுருட்டியுள்ளீர்கள் என்று புரிகிறது!!!😷

மருத்துவமாணவியாக வருடக்கணக்காக உளவியலைப்படித்து... மருத்துவராக உளவியலைப்புரிந்து சேவை செய்யும் மருந்துவிச்சி நான். உங்கள் உளவியலை முன்னே கணித்து எல்லா ஏற்பாட்ட்டுடன்தான் களமிறங்கியிருக்கன்😂

மீண்டும் சொல்கிறேன்... 
மருத்துவ நிர்வாகம் எனது PASSION!!!
அதுக்கடுத்ததுதான் PROFESSION !!!
 
9. நிச்சயம் வெளியே கிளினக்கில் பேசன்ட் பார்க்கச்செல்கையில் என்னைக்கொல்வீர்கள் 

அன்றும் இதே சிரித்த முகத்துடன்  
🔴வாழ்க்கையை முழுதுமாக அனுபவித்த திருப்தியுடன்  🔴அரசியல் கலப்படமற்ற வைத்தியராக இறப்பேன்🙏

 

 

https://www.facebook.com/100001299781943/posts/4775760615810551/?d=n

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த மருத்துவரின் தந்தையாரிடம் உயர்தர தூய பிரயோக கணிதம் கற்று இருக்கிறேன். கமலசிங்கம் மாஸ்ரர். நல்ல ஆசான். கோண்டாவிலில் இருந்தார். பின்னர் வவுனியாவுக்கு மாறி இருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2022 at 06:29, கிருபன் said:

வடக்கில் மருத்துவத்துறையும் அரசியலும் 


 

வடக்கில் மருத்துவத்துறையும் அரசியலும் – பகுதி 2 
================================

கண்டாவளையில் இடம்பெற்ற இலவசக் கண் மருத்துவ முகாம் தொடர்பாக நாங்கள் கடந்த வாரம் பதிவிட்ட பின்னர் கிடைத்த பிந்திய தகவல்களையும் எமது அவதானிப்புகளையும் இங்கு தருகிறோம்.

(முக்கிய குறிப்பு: இந்தப் பதிவின் நோக்கம், யாரையும் இழிவுபடுத்துவதோ அவர்களின் தனிநபர் செயற்பாடுகளைக் கேலி செய்வதோ, பெயருக்கு களங்கம் விளைவிப்பதோ அல்ல.)

கண்டாவளையில் கண் சிகிச்சை என்ற பெயரில் நடைபெற பெரும் பணமோசடியில் (மருத்துவ மோசடியும் கூட) பாடசாலை அதிபருக்கும் இந்தக் கொள்ளையில் சம்பந்தம் இருக்குமோ என்று ஆரம்பத்தில் சிலருக்கு சந்தேகம் இருந்தது. ஆனால்  இந்த விவகாரத்தை உண்மையில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த மு. தமிழ்ச்செல்வன் என்ற ஊடகவியலாளர் பெப்ரவரி 02ம் திகதி உதயன் சஞ்சீவி இதழில் வெளியிட்ட கட்டுரை உண்மையைத் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த விடயத்தில் அந்தப் பாடசாலை ஆசிரியர்களும் அதிபரும் தாமே வலியப் போய் பொறியில் விழுந்ததால் நடக்கவிருந்த விடயம் என்று தற்போது தெரிய வந்துள்ளது. 

கிளிநொச்சியில் மாவட்டச் செயலக ஏற்பாட்டில் நடைபெற்ற ஒரு கண் சிகிச்சை முகாமில் தற்செயலாக குறித்த தனியார் நிறுவனத்துடன் தொடர்பைப் பெற்றுக் கொண்ட குறித்த பாடசாலை ஆசிரியர்கள் இலவச முகாம் என்பதால் அதனைத் தமது பாடசாலைக்குப் பயன்படுத்தலாமே என்று எண்ணியிருக்கிறார்கள். பின்னர் அதனை தமது பாடசாலை அதிபருக்கு தெரிவித்து, பின்னர் கல்வித் திணைக்களத்திற்கும் அறிவித்து கண் பரிசோதனை முகாமுக்கும் ஒழுங்கு செய்துள்ளனர்.

அதன் பின்னர் நடந்த பரிசோதனை விபரங்களை முதல் பதிவில் விபரமாகக் குறிப்பிடிருந்தோம். யாழில் மேலதிக சோதனை முடிந்த பின்னர், பரிசோதனைக்குச் சென்றவர்களுள் ஒரு பிள்ளையின் பெற்றார் தமிழ்செல்வனிடம் இது தொடர்பில் தெரிவித்தபோது அவருக்கு இதுபற்றி சந்தேகம் ஏற்பட வேறு சில பெற்றோருடனும் உரையாடியிருக்கிறார். பின்னர் இது தொடர்பில் அவர்தான் கண்டாவளை மேலதிக MOH ஐத் தொடர்பு கொண்டிருக்கிறார். அவர் அக்காலப் பகுதியில் களுத்துறையில் பயிற்சியில் இருந்ததால், தமிழ்ச்செல்வன் கண்டாவளையில் பதில் MOH ஆக கடமையில் இருந்த Dr. நிமால் அருமைநாதனைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உத்தரவுப்படி குறித்த 71 மாணவர்களுக்கும் மீள கண் பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்பின்னர் டிசம்பர் 27 முதல் ஜனவரி 11 வரை கட்டம் கட்டமாக 55 மாணவர்கள் பரிசோதிக்கப்பட்டபோது அவர்களில் 38 பேருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. 

இதேவேளை, கண்டாவளை மேலதிக MOH டிசம்பர் இறுதியில் பயிற்சி முடிந்து திரும்பிய நிலையில் இந்தப் பாடசாலை உள்ள பிரதேசம் குறித்த கண்டாவளை MOH அலுவலகத்தின் நிர்வாகப் பிரதேசத்தில் அமைந்திருப்பதால், மீள் கண் பரிசோதனயை ஜனவரி முதல் வாரத்தில் இருந்து தொடர்வதை குறித்த பெண் வைத்திய அதிகாரியின் பொறுப்பில் கிளிநொச்சி RDHS விட்டிருக்கிறார். எனினும் அது தொடர்பில் அவர் நடவடிக்கை எடுக்காத நிலையில் மிகுதி பரிசோதனைகளும் RHDS அலுவலகமூடாகவே செய்து முடிக்கப்பட்டதாக RDHS வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. 

எனினும் இன்னமும் மிகுதி 16 மாணவர்களுக்குரிய பரிசோதனைகள் கண்டாவளை மேலதிக MOH இனால் ஒழுங்கு செய்யப்பட வேண்டி இருக்கிறது. இந்த நிலையில், தற்போது ஒரு மாதம் கடந்த நிலையிலும் அவரது கண்டாவளை அலுவலகம் இன்னமும் பரிசோதனைகளைச் செய்து முடிக்க எதுவித நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை.

இது ஒருபுறம் இருக்க, கடந்த ஒரு வாரத்திற்குள் வெளியான இன்னொரு ஓடியோ பதிவு, குறித்த கிளிநொச்சி RDHS மற்றும் கண்டாவளை மேலதிக MOH இருவருக்கும் இடையில் சுமூகமான மேலதிகாரி, உத்தியோகத்தர் உறவு இல்லை என்று தெரிகிறது. அதேநேரம் குறித்த பெண் வைத்தியருக்கு அழைப்பெடுத்து மிரட்டிய கோபால் என்ற கோபாலகிருஷ்ணன் தான் RDHSஉடன் பேசியதாகக் குறிப்பிட்டதும் இங்கு கவனிக்கப்பட வேண்டும். உண்மையிலேயே கிளிநொச்சி RDHS, தனக்குப் பிடிக்காத கண்டாவளை மேலதிக MOHஇனை மிரட்ட அந்தக் கோபாலைப் பயன்படுத்தியிருந்தால் நேரடியாக தனது பெயரைப் பாவித்து மிரட்டு என்று சொல்லும் அளவிற்கு அறிவில்லாதவரா என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த விவகாரங்கள் தொடர்பில் கண்சிகிச்சை மாபியாக்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததாலேயே குறித்த பெண் வைத்திய அதிகாரி கோபாலினால் மிரட்டப்பட்டார் என்ற கருத்துரை முதலில் பலராலும் பரப்பபட்டது. ஆனால், கண் சிகிச்சை என்ற பெயரில் நடைபெற இருந்த கொள்ளையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர் ஊடகவியலாளரான தமிழ்ச்செல்வனே என்ற நிலையிலும் அதன் பின்னர் நடைபெற்ற மீள் கண் பரிசோதனைகளை முழுமையாக மேற்கொண்டது RDHS அலுவலகம் என்ற நிலையிலும் கோபாலின் மிரட்டலுக்கும் கண் மாபியாக்களுக்கும் தொடர்பு இருப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை என்றே கொள்ளலாம். 

இந்தக் கண் பரிசோதனை விடயத்தில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நேரடியாக சம்பந்தப்படாத குறித்த பெண் வைத்திய அதிகாரியை கோபால் அழைப்பெடுத்து மிரட்டியதற்கு நிச்சயம் வேறு காரணம்/ காரணங்கள் இருக்கவேண்டும். உண்மை என்னவென்பது தற்போது நடைபெறும் விசாரணையின் முடிவில்  வெளிவரக்கூடும். அல்லது வராமலே போய்விடக்கூடும். 

குறித்த பெண் வைத்திய அதிகாரியின் முறைப்பாட்டின் பின்னர், ஜனவரி 29 அன்று அந்தக் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னர், கடந்த வாரம் கண்டாவளை மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி தனது வளர்ப்பு நாயைக் காணவில்லை என்று இன்னொரு முறைப்பாட்டையும் செய்திருக்கிறார். 

அதேநேரத்தில், குறித்த பெண் வைத்திய அதிகாரிக்கு மிரட்டல் அழைப்பு வந்த பின்னர், ஆறுதல் சொல்ல அழைப்பெடுத்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் உரையாடலும் சமூக வலைத் தளங்களில் வெளிவந்துள்ளது. இந்த சம்பவம், தொலைபேசியில் அந்தப் பெண் அதிகாரிக்கு சார்பாக பாராளுமன்றில் பேசுவேன் என்றும் சனாதிபதிக்கு கடிதம் எழுதுகிறேன் என்றும் சொன்னவரை, இறுதியில் குறித்த பெண் அதிகாரிக்கு எதிராக விசாரணை கோரி சுகாதார சேவைகள் நிறுவனத்திற்கு கடிதம் எழுத வைத்து விட்டது.

கோபால் சம்பந்தப்பட்ட தொலைபேசி அழைப்புப் பதிவுகளை பொலிசாருக்கு விசாரணைக்காகத் தானே கொடுத்ததாக அந்த பெண் வைத்திய அதிகாரி கூறுகிறார். ஆனால் அவர் RDHS உடனும் பா.உ. சிவஞானம் ஸ்ரீதரனுடனும் பேசிய அழைப்புகளின் ஓடியோ பதிவுகள் எப்படி வெளிவந்தது என்று தெரியவில்லை. அவற்றை அவரே யாரோ ஒருவருடன் பகிர்ந்திருக்க வேண்டும் அல்லது அவரது தொலைபேசியை எவரோ தொடர்ந்து tab செய்து அவரது அனைத்து உரையாடல்களையும் பதிவு செய்து வெளியிட்டிருக்க வேண்டும். அப்படியானால் அவர் உடனடியாக Cyber Crime பிரிவுக்கு முறைப்பாடு செய்வது நல்லது. 

இவ்வாறு தொலைபேசி உரையாடல்கள் வெளிவந்தமை தொடர்பில் எங்களில் சிலர் அது சட்டப்படி குற்றம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இப்படி ஒருவரின் தொலைபேசி உரையாடலை அவருக்குத் தெரியாமல் பதிவு செய்வது  இலங்கையில் சட்டப்படி குற்றம் இல்லை. எனவே குறித்த ஓடியோக்களை அந்த பெண் வைத்தியரே வெளியே கசிய விட்டிருந்தாலும் இவர்மீது ஒலிப்பதிவு செய்தமைக்காக வழக்குப் போட்டாலும் அது நிற்காது. அதனால்தான் ஸ்ரீதரனும் அதற்குப் பதிலாக மான நஷ்ட வழக்குப் போட்டிருக்கிறார். 

இது தொடர்பில் எமது கேள்விகளும் அவதானிப்புகளும் 
-------------------------------------------------------------------

இவ்வளவு விடயமும் வெளிவந்த நிலையில் பெரும் மோசடி செய்ய முற்பட்ட குறித்த தனியார் கண்சிகிச்சை நிறுவனத்தின் பெயரை யாருமே வெளிப்படையாக பேசவில்லை அல்லது தவிர்க்கிறார்கள். அதுவும் இந்த விடயத்தில் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. மாணவர்களின் பார்வையில் (Vision) அதிக அக்கறையுள்ளவர்கள் இன்னும் கொஞ்சம் அக்கறை (Care) எடுத்து அந்த நிறுவனத்தின் முகமூடியைக் கிழித்திருக்க வேண்டும் அல்லவா? இதனால் வேறு பல அப்பாவிகளும் காப்பாற்றப்படுவார்கள்தானே? ஏன் எந்த ஒரு ஊடகமும் வெளிப்படையாக அந்த நிறுவனத்தின் பெயரைச் சொல்லாமல் தவிர்க்கின்றன?

தொலைபேசி மிரட்டலுக்குப் பின்னர், வீட்டிற்கு வந்து மிரட்டியதாக அதுவும் அந்த வாகனம் மூன்று முறை வந்ததாகச் சொல்லப்படும் நிலையில் Vivek Vijayaratnam என்ற ஒரு வைத்தியர் மட்டுமே அந்த வீடியோவைப் பார்த்து மனம் பதறியதாவும் சொல்லியிருக்கிறார். ஆனால் அவரும் அந்த வீடியோவைப் பகிரவில்லை. யாருமே பார்க்கவுமில்லை. ஏற்கனவே கோபால் மீது புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அந்த வழக்கிற்கு வலுச் சேர்க்கும் இந்த வீடியோவும் ஆதாரமாகக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா? ஏன் அந்த வீடியோ பொலிசாரிடம் கொடுக்கப்படவில்லை?

பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகள், அந்தப் பிரதேசத்தில் இருந்த CCVT ஒளிப்பதிவுகளை ஆராய்ந்த பின்னர் அப்படியான ஒரு வாகனமே அந்தப் பகுதிக்கு குறித்த நாளில் வந்து செல்லவில்லை என்று கூறியதாக இன்னொரு தகவலும் தெரிவிக்கிறது. சிலவேளை போலீசார் அந்த அரசியல்வாதிக்கு சாதகமாக நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் வந்திருந்தாலும் இந்த விடயத்தில் உண்மையில் என்ன நடந்தது என்ற சந்தேகம் மேலும் அதிகரிக்கிறது.

RDHS உடனும் பா.உ. சிவஞானம் ஸ்ரீதரனுடனும் பேசிய ஓடியோக்கள் எப்படி வெளிவந்தன என்று தனக்குத் தெரியாது என்று கண்டாவளை மேலதிக MOH கூறியுள்ள நிலைமெயில் இந்த மூவரில் எவராவது சைபர் கிரைமில் முறைப்பாடு செய்துள்ளார்களா? தற்போதுள்ள தொழிநுட்ப உதவியுடன் இந்த ஓடியோக்கள் எப்படி வெளியே கசியவிடப்பட்ட என்பதை சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம் என்பதால் இதில் அதிகம் பாதிக்கப்பட்டதாகக் கருதும் நபர் உடனடியாக முறைப்பாடு செய்வதுதான் நல்லது. 

ஜனவரி 29ம் திகதி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) கிளிநொச்சிக் கிளை இணைச் செயலாளர்கள் கையொப்பமிட்டு வெளியிட்ட ஊடக அறிக்கையில் RDHS பற்றிய எந்த முறைப்பாடோ கருத்தோ வெளியிடப்படாத நிலையில் அதேநாளில் தமிழில் எவருடைய கையொப்பமும் இல்லாமல் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் இறுதியின் நேரடியாக RDHSமீது குறைசொல்லப்பட்டுள்ளது. தமிழில் இந்த இடைச் செருகல் யாரால் எதற்காகச் செய்யப்பட்டது? கையொப்பம் இல்லாத இந்த அறிக்கையின் நோக்கம் என்ன?
 
இவை ஒருபுறம் இருக்க, சமூக வலைத்தளத்தில் ஆரம்பம் முதலே குறித்த பெண் வைத்தியருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தும் குறித்த பெண் வைத்தியரின் பல பதிவுகளைத் தனது பக்கத்தில் உடனுக்குடன் பகிர்ந்ததுடன் அவரின் வதிவிடத்திற்கு காடையர்கள் வந்து மிரட்டிய வீடியோவைப் பார்த்ததாகவும் சொன்ன ஒரேயொரு நபரான Dr. Vivek Vijayaratnam என்பவரின் முகநூல் கணக்கு ஒரு போலிக் கணக்கு என்று தெரிகிறது. ஒரு தெலுங்கரான ராஜமுந்திரியில் இருக்கும் Dr. Subrahmanyam Karuturi என்பவரின் புகைப்படம் ஒன்றைத் திருடியே இந்தப் பொய்க்கணக்கு திறக்கப்பட்டுள்ளது. பெயரும் கற்பனைப் பெயராக இருக்கலாம். இதுவும் மிரட்டல் தொடர்பில் சொல்லப்படும் கதைகளின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

https://www.facebook.com/101881847986243/posts/499224908251933/?d=n

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோபால் பிணையில் எடுக்க முடியாத கடும்காவலில் உள்ளாராம் செய்தி தளம்களும் அடக்கி வாசிக்கின்றனர் அடுத்தப்பக்கம் முகநூலை காணாத ஆட்கள் போல் வைத்தியரும் நாளுக்கு இரண்டு மூன்று பதிவு போடுகிறா என்னதான் நடக்கின்றது ?

  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2022 at 00:09, முதல்வன் said:

நான் இந்த மருத்துவரின் தந்தையாரிடம் உயர்தர தூய பிரயோக கணிதம் கற்று இருக்கிறேன். கமலசிங்கம் மாஸ்ரர். நல்ல ஆசான். கோண்டாவிலில் இருந்தார். பின்னர் வவுனியாவுக்கு மாறி இருந்தார்.

நானும்தான்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

கோபால் பிணையில் எடுக்க முடியாத கடும்காவலில் உள்ளாராம்

அதென்ன கடும்காவல்....?? இப்போதுதான் ஒருவர் 667நாட்கள் காவலில் இருந்து என்ன கம்பீரமாகப் பிணையெடுக்க வெளியே வந்தார். 🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Paanch said:

அதென்ன கடும்காவல்....?? இப்போதுதான் ஒருவர் 667நாட்கள் காவலில் இருந்து என்ன கம்பீரமாகப் பிணையெடுக்க வெளியே வந்தார். 🤔

முகநூலில் பார்த்து பார்த்து அதுவே பழக்கமாகி விட்டது காவல் என்று வந்திருக்கணும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.