Jump to content

வாழ்கை


Recommended Posts

பதியப்பட்டது

பசுமை எழில் கொஞ்சும் வயல் வெளிகளையும்,ஆறுகளையும் தன்னகத்தே கொண்டு,ஆலய மணியின் இனிய ஒலி செவியில் இன்னிசையாக காதில் தேன் போல பாய,கால்நடைகளின் சத்தங்கள் ஒரு வித புத்துணர்ச்சியை ஊட்ட,ஒரு புறம் குமரி பெண்களின் சிரிப்பு சலங்கை ஒலி போல சலசலக்க வார்த்தைகளாள் வர்ணிக்கமுடியாதய் இருந்தது அந்த பசுமை நிரம்பபெற்ற கிரமாம்.................

அந்த கிராமத்தில் வைத்தியர் கனகவேலை தெரியாதவர்கள் யாருமில்லை என்றே சொல்லலாம் அந்தளவிற்கு அந்த கிராமத்தில் அவரை விட்டால் வேறோரு வைத்தியர் இல்லை என்றே சொல்லலாம்....அவரும் எல்லோரிடத்திலும் அன்பாகம் பணிவாகமும் இருப்பது தான் அவரை எல்லாருகும் பிடித்து போய் இருந்தது.கனகர் வீட்டை தான் கார் இருக்குது என்று அந்த ஊரே பேசி கொள்ளுமளவுக்கு அவருக்கு செல்வாக்கு இருந்தது,அவரும் கசங்காம உடுப்பும் போட்டு நேர்தியாக காரில வருவார்,அவரின்ட பெட்டியை கவி கொண்டு மணி பெடியன் வருவான்,ஆனால் வைத்தியர் என்ற பெருமிதம் காட்டி கொள்ளாத செய்கை ஊர் மக்களிடம் அவருக்கு நல்ல பெயர் வர காரணம்.அவருக்கு ஒரே ஒரு மகன் தான் பெயர் சின்ன பெடியன் ஆனாலும் சரியான துடிப்பு.கனகரின்ட பெண்சாத்தியின்ட பெயர் ராசாத்தி கனகரின்ட ஊர் தான் அவாவும் இவரும் பள்ளி நாட்களிளே லவ் பண்ணிணவை,அப்ப ஊரில இது தான் பெரிய செய்தி இப்ப இருவரும் திருமணமாகி அந்த செய்தி எல்லாம் பழசா போயிட்டுது பாருங்கோ..........இப்படி கனகரின்ட வாழ்கை இனிமையாக போய் கொண்டிருந்தது..........

அதே ஊரில் வைத்தியரின் வீட்டுக்கு அருகில் வசித்து வந்தவர் தான் கந்தப்பு எல்லாரும் கந்தர் என்று தான் ஊரில கூப்பிடுறவை,ஆளும் நல்ல வாட்டசாட்டமான நல்ல பெரிய வயிற்றுடன் கம்பீரமாக இருப்பார் புகையிலை சுருட்டி விற்று சீவியத்தை நடத்தி வந்தார்,கந்தருக்கு 45 வயசு இருக்கு ஆனா பார்த்தா சொல்ல ஏலாது அந்த மாதிரி சுறுசுறுப்பு,கந்தர் தன்ட மச்சாளை தான் கல்யாணம் கட்டினவர் அவருக்கு ஒரு பெடியன் தான் கந்தரும் தன்ட மோனுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று தேடி திரிந்து மலரவன் என்று பெயர் வைத்தவர் அந்த காலத்தில்,பெடியன் இப்ப நல்லா வளர்ந்துட்டான் ஒலேவர் படித்து கொண்டிருகிறான் கந்தரும் வாறவர் போறவையிட்ட மக்னை புழுகி கொண்டு தான் இருப்பார்,பெடியன் பிறந்து 3 வருடத்தில் பார்வதி இறந்து போனாள் கனகர் அதில் இருந்து மீள கனகாலம் சென்றது ,பிறகு குடும்பத்தில் இருகிறவர்கள் மறுமணம் செய்ய சொன்ன போதும் கூட ஏலாது என்று பிடிவாதமா சொல்லி போட்டார்..என்ற மோனுகான்டி நான் வாழ்வேன் என்று மனிசன் அன்றைக்கு சபதம் எடுத்தவர் இன்றுவரை மனிசன் அவ்வாறுதான் வாழ்ந்து கொண்டிருகிறார் என்றா பாருங்கோ........கந்தர் வேட்டியோட தான் சேட் எல்லாம் போடமாட்டார் ஆளும் நல்ல சைஸ்தானே வண்டி வேற தொங்கி கொண்டு நிற்கும் என்றா பாருங்கோ.........உந்த கோலத்தில உடம்பேல்லாம் விபூதியை பூசி கொண்டு சைக்கிளை மிதித்தார் என்றால் சொல்லவே தேவையில்லை........

டாக்டர் கனகரின்ட அயலவர் தான் கந்தர் தற்போது கந்தரின்ட மகன் வளர்ந்து ஒயெல் படித்து கொண்டிருகிறான்,வைத்தியரின்ட மகன் இப்ப தான் 6 வகுப்பு படிகிறான்,ஊரில என்னொரு பிரச்சினை அதாவது கந்தர் புகையிலை சுருட்டி விற்பனை செய்கிறார் என்று ஊரில சில போகிறதில்லை இப்படி சில பேர் என்று சொல்ல ஏலாது பாருங்கோ பலர் இருந்தவை பாருங்கோ ஆனால் கனகர் அப்படி இல்லை கந்தரோட நல்ல நட்பு வைச்சிருந்தவர்,கனகரின்ட பிள்ளை கந்தரின்ட வீட்ட நிற்கிறது தான் கூட என்பதில் இருந்து உங்களுக்கே விளங்கி இருக்கும் என்று நினைகிறேன்..............

கந்தர் தன்ட பெடியனுக்கு கஷ்டம் தெரியாதபடி வளர்த்து வந்தவர் "பார்கர்" பேனாவை தான் சுந்தரலிங்கம் அண்ணரின்ட கடையில வாங்கி கொடுகிறவர் என்றா பாருங்கோ,மகன் மேல அம்முட்டு பாசம் அவருக்கு,மகனும் சளித்தவன் இல்லை சரியான கெட்டிகாரன் தான் வீட்டில குப்பி விளக்கை கொழுத்தி தான் இரவில் இருந்து படிப்பான் மண்ணேய் விளக்கு இருக்கு ஆனால் மண்ணேயிக்கு காசு போயிடும் என்று தகப்பனிடன் வேண்டாம் என்றூ சொல்லுவான்...........என்றாலும் தம்பி நான் வாங்கி கொண்டு வாரேன் நீ கஷ்டபடாதே என்று கனகர் சொல்லுவார் அவன் மறுத்திடுவான்,அதில கந்தருக்கு ஒரு பெருமிதம்....

பிரேமும்,மலரவனும் நல்ல சகோதரர்கள் போல் பழகி வந்தார்கள்,ஊரிலே இதை கூட கொஞ்ச பேர் குற்றம் கண்டுபிடித்தவை தான் பாருங்கோ ஆனால் கனகர் இதை எல்லாம் கண்டுகிறதில்லை,பிரேமும் கந்தர் கூட சரியான விருப்பம் அவரின்ட வயிற்றில தட்டி பார்கிறது அவனுக்கு அலாதி பிரியம் என்றே சொல்லலாம்,கந்தரும் கோயில்,சினிமா என்று மோனையும்,பிரேமையும் கூட்டி கொண்டு தான் போவார்,அவ்வாறு மிகவும் அந்நியொன்னியமாக பழகி வந்தது இரு குடும்பங்களும்.

காலங்கள் பறந்தோடின மலரவன் ஏலவர் சோதனை கணித துறையில் சித்தியடைந்து "கட்டுபத்த" பல்கலைகழக அனுமதி பெற்றான் கந்தருக்கு மகனை பிரிய விருப்பம் இல்லை மகனுக்கு தகப்பனை பிரிய விருப்பமில்லை கடைசியில் கனகர் வந்து உன்ட மோன் படித்தா தானே உனக்கு பெருமை என்று ஒரு மாதிரி சமாதபடுத்தி மலரவனை அனுப்பி வைத்தார் கொழும்பிற்கு...........

கந்தருக்கோ மகனை பிரிந்த துயரில் இருந்து மீளவில்லை ஆனால் பிரேமுடன் காலத்தை போக்கி கொண்டிருந்தார்,விடுமுறை நாட்களிள் மலரவன் வரும் போது கந்தர் அடைந்த ஆனந்ததிற்கு எல்லை இல்லை என்றே சொல்லலாம்,இவ்வாறு காலங்கள் காற்றாக பறந்தன,மலரவனும் பட்டம் பெற்று ஊர் திரும்பினான்.........

கேட்கவா வேண்டும் அன்று கந்தர் ஊரையே கூட்டிட்டார்,வாரவர் போறவர் எல்லாருக்கும் தன்ட மோன் இன்ஞ்ஜினியர் என்று மார்புதட்டி கொண்டார்,அன்று அமோக வரவேற்பை மலரவனுக்கு ஊர் கொடுத்தது,சில லொள்ளு கதைத்தவர்களும் கூட வந்து நெருங்கி உறவாடினது தான் வேடிக்கை பாருங்கோ.........

கொஞ்சநாளிள் அவனுக்கு அநுராதபுரத்தில் வேலையும் கிடைத்து விட்டது,மீண்டும் பிரிவு தான் ஆனால் சனி,ஞாயிறு வந்து போவான் தானே என்று மனசை தேத்தி கொண்டார் கந்தர்,மற்ற நேரங்களிள் பிரேம் குட தான் கந்தர் இப்ப அவனும் வளர்ந்து பெரிய ஆள் ஆயிட்டான் என்றாலும் கந்தரை வந்து பார்த்துவிட்டு தான் போவான் ஏன் என்றா கந்தர் மேல் அவ்வளவு விருப்பம் அவனுக்கு.

கந்தரும் மகனிற்கு வேலை கிடைத்த சந்தோசத்தில் தலை,கால் புரியாமல் இருந்தார் காலங்கள் போயின மகளிற்கு கால நேரத்தில் கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று கனகர் சொல்ல அது தான் சரி என்று கந்தரும் ஆமோதித்தார்..............கந்தருக்கு ஒரே ஒரு தங்கை அவளுக்கு புருசன் இல்லை ஒரே மகள் காயத்திரி மிகவும் அழகு தங்கை காயத்திரியை மலரவனுக்கு கட்டி கொடுக்கலாமா என்று கேட்க.........மனிசனிற்கு சரியான கோபம் வந்திட்டுது அவன் படிப்பு என்ன ஒன்ட மகள் எங்கே என்று நிராகரித்துவிட்டார்..........பிறக

Posted

ஹிஹி... குட் இம்புரூவ்மண்ட்... நல்ல முன்னேற்றம்.. நல்ல கதை தொடர்ந்து எழுதுங்கோ...

வாழ்த்துக்கள்...

அன்புடன்,

குருநாதன்.. :lol:

Posted

சோ சுவீட் பேபி

நல்லா இருக்கு கதை. ஜம்மு எங்கேயோ இடிக்குதே. உண்மைக் கதை தானே ஜம்மு. ஜம்மு உங்கள் நண்பன் நல்ல நண்பனாக இருக்கின்றான். அவனுக்கும் காயத்ரிக்கும் ஒரு ஹாய் சொல்லிடுங்கோ நிலா சொன்னா என்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

என்ன அண்ணா அனுபவங்கள் எலாம் கதையா வருகுது போல?? :P

கதை நல்லாயிருக்கு. :lol: எழுத்து பிழைகளையும் திருத்தினீங்க என்டா வெரி குட்

Posted
ஹிஹி... குட் இம்புரூவ்மண்ட்... நல்ல முன்னேற்றம்.. நல்ல கதை தொடர்ந்து எழுதுங்கோ...வாழ்த்துக்கள்...அன
Posted

என்ன அண்ணா அனுபவங்கள் எலாம் கதையா வருகுது போல?? :P

கதை நல்லாயிருக்கு. :lol: எழுத்து பிழைகளையும் திருத்தினீங்க என்டா வெரி குட்

தங்கா அனுபவங்கள் தான் கதையா மாறும் தவிர கதை அநுபவமா மாறுமா.........நானே குழம்பி போனேன்..........நம்ம அனுபவம் பாருங்கோ சங்கர் ரேஞ் மாதிரி வேறொரு கதையில சொல்லுறேன்................ஆனால் அந்த கதையை எல்லாரும் பார்க்க ஏலுமோ தெரியவில்லை............. :P

தங்காவே கதை நல்லா இருக்கு என்று சொல்லிட்டா அப்ப நல்லா தான் இருக்கு போல...............நன்றியுங்கோ.............ஓ எழுத்துபிழையோ பேபி இப்ப தான் மொண்டசூரியில படிக்குது போக போக திருத்துறன்............. :rolleyes:

Posted

நிலா அக்கா பேபி சுவீட்டா இருக்கோ இல்லாட்டி கதை சுவீட்டா இருக்கோ :P ............மறுபடியும் இடிக்குதோ.............ஆமாம் உண்மை கதையே தான்.........நாம எப்பவும் பொய் கதை எல்லாம் எழுதமாட்டோமல...............ஆனா கதை கொஞ்சம் மற்ற எல்லாம் கிராமத்து மண் வாசனையுடன் பாரதிராஜா வெறி சாறி ஜம்மு..........ஹாய் சொல்லிட்டா போச்சு............ :P

நிலா அக்கா நீங்க கதை எழுதாலபடியா நானே எழுதி அதில கே.ஸ் ரவிகுமார் மாதிரி நானெ வந்திட்டு போயிட்டேன் பாருங்கோ................ ;)

:P :P ஹீஹீ ஜம்மு

ரொம்ப ரொம்ப நல்லாக தான் பேசுறீங்க இப்ப எல்லாம்.

Posted

:P :P ஹீஹீ ஜம்மு

ரொம்ப ரொம்ப நல்லாக தான் பேசுறீங்க இப்ப எல்லாம்.

பின்னே அக்கா கூட சேர்ந்துட்டேன் தானே.............மீண்டும் அடுத்த கிராமத்து காற்றுடன் என் இனிய யாழ் மக்களே சந்திக்க வேண்டுமல............... :P

Posted

பின்னே அக்கா கூட சேர்ந்துட்டேன் தானே.............மீண்டும் அடுத்த கிராமத்து காற்றுடன் என் இனிய யாழ் மக்களே சந்திக்க வேண்டுமல............... :P

மீண்டும் கிராமத்து காற்றோடு மண்வாசனையும் கலந்து நம்முன் தோன்ற வாழ்த்துக்கள் :P

Posted

மீண்டும் கிராமத்து காற்றோடு மண்வாசனையும் கலந்து நம்முன் தோன்ற வாழ்த்துக்கள் :P

நீங்க பார்க்க தயார் என்றா நான் தோன்ற தயார் தான் நிலா அக்கா,அடுத்த முறை பாட்டு எல்லாம் போட வேண்டும்........... :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜம்மு கதை என்றா சரி இல்லாட்டி புத்துவுக்கும் காதில பூவோ,கதை நல்லா இருக்கு தொடர்ந்து எழுதவும்,அடுத்த மண்வாசனை வேண்டாம் புல வாசணை வரட்டும். <_<

Posted

ஜம்மு கதை என்றா சரி இல்லாட்டி புத்துவுக்கும் காதில பூவோ,கதை நல்லா இருக்கு தொடர்ந்து எழுதவும்,அடுத்த மண்வாசனை வேண்டாம் புல வாசணை வரட்டும். <_<

உங்களுக்கு போய் பூ வைப்பனோ அது சரி என்ன இருந்தா போல டவுட் வந்திருச்சு.........அது தானே தெளிவா பிரேம் என்று போட்டிருகிறேன்..........இப்படி எல்லாம் டவுட் வரகூடாது.............நன்றி மாமா........ ;)

Posted

ஜம்மு பேபி கதை எழுதினது என்று சொன்ன போது ஆச்சி வடை சுட்ட கதையோ என்று தான் நினைத்தனான் பார்த்தா சூப்பரப்பா எப்படிடா இப்படி எல்லாம்,தொடர்ந்து இப்படி கதைகளை எழுதுங்கோ அது சரி யார் அந்த காயத்திரி??கதையை வாசிக்க உண்மை கதை மாதிரி தெரியுது என்ன உண்மையா இருந்தா அது உங்க கதையோ பேபி,வாழ்த்துகளடா நாளை சந்திகிறேன். :P ;)

Posted

கதை நல்லா இருக்கு ... இனி பிறேம் படப் போற பாடு என் கண்முன்னால் ஈஸ்மன் கலரில் வந்து வந்து போகுது... :lol:

இந்தக்கதை இன்னும் தொடருமோ..... இதோட முடிச்சாச்சோ....?

பாராட்டுக்கள் தொடர்ந்து எழுதுங்கோ.....பேபி.... B)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அட இது நம்மட ஜம்முவின் கதையா.நம்பவே முடியவில்லை.ரொம்பத் தான் பொறாமையாய் இருக்கு.இருந்தாலும் வாழ்த்துக்கள்.தொடர்ந்து தவண்டு எழும்புங்கள்.

Posted

ஜம்மு பேபி கதை எழுதினது என்று சொன்ன போது ஆச்சி வடை சுட்ட கதையோ என்று தான் நினைத்தனான் பார்த்தா சூப்பரப்பா எப்படிடா இப்படி எல்லாம்,தொடர்ந்து இப்படி கதைகளை எழுதுங்கோ அது சரி யார் அந்த காயத்திரி??கதையை வாசிக்க உண்மை கதை மாதிரி தெரியுது என்ன உண்மையா இருந்தா அது உங்க கதையோ பேபி,வாழ்த்துகளடா நாளை சந்திகிறேன். :P ;)

அணு பாட்டி என்ன ஆச்சி வடை சுட்ட கதையோ..........அது பாட்டி சொல்லுற கதை ஆக்கும்............கதை நல்லாவா இருக்கு த ங் கீயூ பாட்டி............காயத்திரியோ அவா வந்து ஒரு பாட்டி தான்.......நாளைக்கு சந்திகிறீங்களோ என்னை பாராட்டி விழா ஏதாவது எடுக்கிற பிளானோ எனக்கு இது எல்லாம் பிடிகாது என்று தெரியாதோ.............. :P :lol: :P

Posted

கதை நல்லா இருக்கு ... இனி பிறேம் படப் போற பாடு என் கண்முன்னால் ஈஸ்மன் கலரில் வந்து வந்து போகுது... :lol:

இந்தக்கதை இன்னும் தொடருமோ..... இதோட முடிச்சாச்சோ....?

பாராட்டுக்கள் தொடர்ந்து எழுதுங்கோ.....பேபி.... B)

பிறேமின்டபாடு கண் முன்னே வருது என்றா அண்ணாவிற்கு நல்ல அநுபவம் போல தெரியுது..அப்படி என்றா ஒரு கதையை தாங்களும் எழுதுறது வாசிக்க நான் ரெடி........ :P

மண்வாசனை முடிந்து மீண்டும் புலவாசணை மூலம் அந்த கதை வரும் அண்ணா....... ;)

நன்றி அண்ணா........ :lol:

Posted

அட இது நம்மட ஜம்முவின் கதையா.நம்பவே முடியவில்லை.ரொம்பத் தான் பொறாமையாய் இருக்கு.இருந்தாலும் வாழ்த்துக்கள்.தொடர்ந்து தவண்டு எழும்புங்கள்.

ஈழபிரியன் மாமா ஜம்முபேபியின்ட கதை தான் ஆனா பிறகு சொந்தகதையா என்று கேட்க கூடாது பிறகு அழுவன்.......பொறாமையா இருக்கா நான் பாவம் பேபி இப்ப தான் பென்சில் பிடித்து இருகிறன்....நன்றி ஈழபிரியன் மாமா............. :lol:

Posted

காயத்திரியோ அவா வந்து ஒரு பாட்டி தான்.......

ஜம்மு பிரேம் உங்க நண்பன் தானே. அவர் காயத்ரி பாட்டியையோ திருமணம் முடிச்சவர்? அபப்டின்னா ஜம்மு பேபியா? பாட்டாவா? :D

Posted

ஜம்மு பிரேம் உங்க நண்பன் தானே. அவர் காயத்ரி பாட்டியையோ திருமணம் முடிச்சவர்? அபப்டின்னா ஜம்மு பேபியா? பாட்டாவா? :D

பிரேம் நண்பண் தான் ஜம்முவின்ட.................ஆனா காயத்திரியை நான் பாட்டி என்று தான் கூப்பிடுவேன் :P ............நான் பேபி தான் நிலா அக்கா.............. :angry:

Posted

பிரேம் நண்பண் தான் ஜம்முவின்ட.................ஆனா காயத்திரியை நான் பாட்டி என்று தான் கூப்பிடுவேன் :P ............நான் பேபி தான் நிலா அக்கா.............. :angry:

சமாளிச்சிடுங்கோ. :P

Posted

சமாளிச்சிடுங்கோ. :P

அப்ப நான் பேபி இல்லை என்று சொல்லுறீங்களா............. :angry:

Posted

அப்ப நான் பேபி இல்லை என்று சொல்லுறீங்களா............. :angry:

சமாளிச்சிடுங்கோ என்றால் நீ பேபி இல்லை என்பதுதான் அர்த்தமா?

சின்னப்பிள்ளைத்தனமாக இல்லையா? :P

Posted

சமாளிச்சிடுங்கோ என்றால் நீ பேபி இல்லை என்பதுதான் அர்த்தமா?

சின்னப்பிள்ளைத்தனமாக இல்லையா? :P

பேபி என்றா சின்ன பிள்ளைதனமாக தானே இருக்கும் நிலா அக்கா............ :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பறவால்ல கதை நல்லாத்தான் இருக்கு..... எழுத்து பிழையள் இருக்குபோல.... (ஆமா எழுத்து பிழ விடாத பெரிய மனுசி சொல்லுறா எண்டு கேக்குறது விளங்குது........)....... அதுசரி இதாவது உங்கட சொந்த ஆக்கமோ????? இல்லட்டி இதையும் எங்கையும் கவ்விக் கொணந்து போட்டு உங்கட எண்டு சொல்றிங்களோ?????? :P

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.