Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் தமிழருக்கெதிரான யுத்தத்தில் ரஸ்ஸிய மற்றும் உக்ரேனிய அரசுகளின் பங்கு.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, கிருபன் said:

தமிழர்களின் போராட்டம் அழிக்கப்பட்டதற்கு முதலில் தமிழர்கள்தான் காரணம். போராட்டத்தில் பங்குபற்றாமல் புலம்பெயர்நாடுகளில் இருந்து நிதி கொடுத்தால் போதும் என்ற நிலைதான் காரணம். அந்த குற்றவுணர்வை மறைக்க மற்றைய எல்லோரையும் குற்றம்சாட்டி மனச்சாட்சியின் கேள்விகளில் இருந்து இலகுவாகத் தப்பிக்கும் உளவியலையும் புரிந்து கொள்ளமுடிகின்றது.

விடுதலைக்காக போராட போனவர்கள் எல்லோரும் துவக்கு தூக்கி இராணுவத்துடன் சண்டை பிடிக்கவில்லை. பலர் பல துறைகளில் பணி புரிந்தார்கள்.

இந்த வகையில் நிதி விடயங்களில் புலம்பெயர்மக்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.

  • Replies 477
  • Views 30.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, கிருபன் said:

போராளிகளை நிர்வாணப்படுத்தி கொன்ற காணொளிகளைப் பார்த்துவிட்டு கோபம் கொண்டு சிங்கள அரசுக்கு எதிராகப் போராடினாமோ? இல்லைத்தானே! 

 இன அழிப்பிற்கான சாட்சிகள் ஆயிரம் ஆயிரம்  இருக்கின்றது. உங்கள் மக்கள் பிரதிநிகள் முன்னின்று செய்ய வேண்டிய வேலை அது. தனி மனிதர்களால் சாத்தியப்படாததை வைத்து உங்கள் கருத்திற்கு பலம் சேர்க்காதீர்கள்.

10 hours ago, கிருபன் said:

இடதுசாரிகள், ரஷ்யா இப்போதும் ஒரு சோஷலிச நாடு என்ற மயக்கத்தில் இருக்கின்றார்கள். ரஷ்யா மேற்கத்தைய ஏகாபத்திய விஸ்தரிப்புக்கு எதிராகவும், உக்ரேயின் நேட்டோவில் சேருவதைத் தடுக்கவும் உக்ரேனிய நாட்டை ஆக்கிரமித்து, உக்கிரேனிய மக்களின் ஜனநாயக விருப்பங்களுக்கு எதிராக ஒரு பொம்மை அரசை நிறுவுவதை இந்த இடதுசாரிகள் கண்டிப்பதில்லை. கொல்லப்படும் மக்களைப் பற்றிய அக்கறை இல்லை.

வலதுசாரிகள், ரஷ்ய அதிபர் பூட்டின்மீது பேரபிமானம் கொண்டவர்கள். ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகளின் மீதான ஆழமான விருப்பு, ஹிட்லைரைப் போல நடக்கும் பூட்டின் மீதும் விருப்பம் வரக் காரணம். பெரும்தொகையில் உக்கிரேனிய மக்கள் கொல்லப்படவேண்டும் என்று மனதார விரும்புவர்கள் இந்த வலதுசாரிகள். அதற்கு கொடுக்கும் நொண்டிச்சாட்டு எம்மக்களை உக்கிரேனிய வானோட்டி குண்டுபோட்டு அழித்தான் என்பது. ஆனால் அதே உக்கிரேனினடமிருந்துதான் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும், பிற ஆயுதங்களையும் புலிகளும் பெற்றிருந்தார்கள் என்பதை வசதியாக மறந்துவிடுவார்கள்.

உங்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜம்  ஆசிய,ஆபிரிக்க,அமெரிக்க,அவுஸ்ரேலிய கண்டங்களில் செய்யாத அட்டூழியங்களையா ஹிட்லரும் புடினும் செய்தார்கள்?????

பூனை எப்பவும் கண்ணை மூடிக்கொண்டுதான் பால் குடிக்குமாம் :cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Eppothum Thamizhan said:

இதைவிட பெரியப்பங்கை வகித்ததில் ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளும் உள்ளடக்கம். நீங்களும் அங்கே இருந்து குப்பை கொட்டுவதால் எஜமான் விசுவாசம் அதுதானே!! விவேக் சொன்னமாதிரி 1000 பிரபாகரன் வந்தாலும் எங்கடைசனம் திருந்தப்போவதில்லை!அப்பாவிப்பொதுமக்களின் அழிவில் களிப்புறும் நாமெல்லாம் வெளிநாடு உதவவில்லை என்று இன்றுவரை சப்பைக்கட்டு கட்டுவது சகிக்கமுடியவில்லை! இப்படியானவர்களுக்காகவா போராட வெளிக்கிட்டேன் என்று நினைத்துத்தான் தலைவரும் தனது  முடிவை தானே தேடிக்கொண்டாரோ!!!

 எனது எஜமான் விசுவாசத்தை எங்கேயாவது ஓரிடத்தில் காட்டுங்கள் பார்க்கலாம்.

@ரஞ்சித், @கிருபன்

யுக்ரேனின் முக்கிய வருவாய்களில் ஒன்றாக ஆயுத வியாபாரம் இன்றுவரை உள்ளது. ஒரு நாட்டில் போரில் ஈடுபடும் இரு தரப்புக்கும் ஆயுதம் விற்று வருமானம் பார்க்கும் நாடு. தான் விற்கும் ஆயுதங்கள் எவரை எப்படி கொன்றாலும் பரவாயில்லை என்று காசு பார்க்கும் நேட்டோ நாடுகளுக்கு கொஞ்சமும் சளைத்ததில்லை இந்த நாடு. 

அதன் மக்களும் இது நாள் வரை அது பற்றி பிரக்ஞை அற்றே வாழ்கின்றனர்.

அப்படி இருக்கும் போது, இன்று அவர்களும் அதே அழிவு ஆயுதங்களால் பாதிக்கப்படும் போது அதை உலகம் எதிர்க்க வேண்டும் என எதிர்பார்க்க அவர்களுக்கு தார்மீக உரிமை உள்ளதா?

உங்கள் இருவரதும் கருத்துகள் மேற்குலகினதும் அமெரிக்க அரசினதும் கொள்கைகளுக்கு வெள்ளையடிப்பதாகவே உள்ளன.

யுக்ரேன் நேட்டோ எனும் கொலை இயந்திரத்தில் இணைய முற்பட்டமையே இந்த யுத்தத்தின் அடிப்படை காரணம். 

நேட்டோவில் உக்ரைனை இணைக்க நேட்டோ நாடுகள் உடன்பட்டதன் முழுக் காரணமும் ரசியாவை அதன் எதிர்காலத்தை அழுத்தம் கொடுத்து  தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே.

சீனா தன்னை சுற்றி வளைக்கும் போதும் அதை தடுக்க வழியற்று இந்தியா இருப்பதை போல் மேற்குலகும் அமெரிக்காவும் தன்னை சுற்றி வளைக்கும் போது ரஷியா சும்மா இருக்க வேண்டும் என அமெரிக்காவும் அதன் நேச அணிகளும் நினைக்கின்றனர். ஆனால் ரஷ்சியா இந்தியா அல்லவே.

ஈராக், லிபியா, ஆப்கன், என நேட்டோ நாடுகளும் அமெரிக்காவும் புரிந்த அழிவுகள் ஏராளம். USSR எனும் நாட்டினை துண்டு துண்டாக உடைத்த பின் அமெரிக்கவும் அதன் நேச அஎணிகளும் ஐ.நா எனும் முதுகெலும்பற்ற அமைப்பை தமக்கு சாதகமாக்கி புரிந்த அட்டூழியங்கள் ஏராளம். இன்று தம்மை மீறி இன்னொரு நாடு தம்மைப் போன்றே செய்கின்றது என்பதை கண்டு கொந்தளிக்கின்றனர்.

உக்ரைனில் இவர்களின் நலன்கள் இந்த ஆக்கிரம்பிப்பால் பாதிக்கப்படுகின்றது என்பதால் தான் இந்த குத்தி முறிவு... இல்லையெனில் நாம் கொத்து கொத்தாக அழிக்கப்படும் போது எப்படி வேடிக்கை பார்த்தனரோ அப்படித்தான் இதையும் கடந்து போயிருக்கும் இந்த கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் உலகப்போரின் பின் அமெரிக்கா குண்டுவீசிய மற்றும் ஆக்கிரமித்த நாடுகள்:

China 1945-46

Syria 1949

Korea 1950-53

China 1950-53

Iran 1953

Guatemala 1954

Tibet 1955-70s

Indonesia 1958

Cuba 1959

D Rep. of Congo 1960-65

Iraq 1960-63

Dominican Republic 1961

Vietnam 1961-73

Brazil 1964

Belgian Congo 1964

Guatemala 1964

Laos 1964-73

Dominican Republic 1965

Peru 1965

Greece 1967

Guatemala 1967-69

Cambodia 1969-70

Chile 1970-73

Argentina 1976

Turkey 1980

Poland 1980-81

El Salvador 1981-92

Nicaragua 1981-1990

Cambodia 1980-95

Grenada 1983-84

Angola 1980

Lebanon 1982-84

Libya 1986

Philippines 1986

Iran 1987-88

Libya 1989

Iran 1998

Panama 1989-90

Iraq 1991

Kuwait 1991

Iraq 1992-1996

Somalia 1992-94

Bosnia 1995

Sudan 1998

Afghanistan 1998

Yugoslavia - Serbia 1999

Afghanistan 2001

Iraq 2002-3

Somalia 2006-2007

Iran 2005

Libya 2013

Yemen 2015

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பிள் ஈக்குவேசன்… அமெரிக்க கூட்டாளி வெள்ளைத்தோல் நாடுகளுக்கு வந்தா ரத்தம், மற்ற நாடுகளுக்கு வந்தா தக்காளி சட்னி… இதுக்கு ரஞ்சித்தும் கிருபனும் இவ்வளவு பொங்கித்தள்ளவேண்டிய அவசியம் இல்லை… உக்ரைன் உட்பட அமெரிக்ககூட்டாளிகளுக்கு அழ உலகே இருக்கிறது.. யூரியுப் ரீவி ரேடியோ பத்திரிகை உச்சபட்ச ஊடகம்கள் இருக்கின்றன.. உகரைனில் இருக்கும் ரஷ்யமக்களுக்காக அழ ரஷ்யாவைத்தவிர யாரும் இல்லை.. ஒடுக்கப்படுபவர் பக்கம் நிக்கவேண்டிய தார்மீக கடமை ஒடுக்கப்படும் எமக்கு இருக்கிறது.. ஆக நாங்கள் உக்ரைனில் உள்ள குரலற்றவர்களின் குரலாக உள்ள ரஷ்யாபக்கமே நிற்போம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, நிழலி said:

அப்படி இருக்கும் போது, இன்று அவர்களும் அதே அழிவு ஆயுதங்களால் பாதிக்கப்படும் போது அதை உலகம் எதிர்க்க வேண்டும் என எதிர்பார்க்க அவர்களுக்கு தார்மீக உரிமை உள்ளதா?

ஓ, இப்படியொரு வியாக்கியானம் இருக்கிறதா? ஒரு மக்கள் கூட்டம் வாழும் நாடு ஆயுதங்களை தயாரித்து விற்பனை செய்தால், அந்த மக்களை எவரும் கொல்லலாம். அப்படிக் கொல்லப்படும்போது அம்மக்கள் தம்மைக் காப்பாற்றும்படி யாரையும் கேட்கக் கூடாது, ஏனென்றால் அதற்கான தார்மீக உரிமை அவர்களுக்கில்லை.  இந்த நியதி ஆயுதம் உற்பத்திசெய்யும் நாட்டு மக்களுக்கு மட்டும்தான் செல்லுபடியாகுமா? ஏன் கேட்கிறேன் என்றால் ஒரு ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் மக்களுக்கும் இந்த நியதி பொருந்தும்போலத் தெரிகிறது, அதனால்த்தான். ஆயுதம் விற்றவன், ஆயுதத்தினால் சாவான். ஆயுதம் தூக்கினவன் அதே                ஆயுதத்தால் சாவான் என்று கருதுகிறீர்கள் போலும். அதுதான் 2009 இல் எம்மை எவரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஏனென்றால், அப்படி கேட்கும் தார்மீக உரிமையும் எமக்கு இருக்கவில்லை  என்று நீங்கள் கூறவருகிறீர்கள் போலத் தெரிகிறது.

51 minutes ago, நிழலி said:

யுக்ரேன் நேட்டோ எனும் கொலை இயந்திரத்தில் இணைய முற்பட்டமையே இந்த யுத்தத்தின் அடிப்படை காரணம்.

இந்த நேட்டோ கொலை இயந்திரம் பற்றி நீங்கள் சொல்லுங்களேன், கேட்கலாம். இதுவரை நேட்டோ கொலை இயந்திரம் அழித்த நாடுகளை, இனக்கொலை புரிந்த மக்கள் கூட்டத்தைப் பட்டியலிடுங்களேன். அதுசரி, சனநாயகத்தை மதிக்கின்ற, மக்களின் சனநாயக உரிமைகளை தனது இரு கண்களாகவும் கட்டிக் காக்கிற ரஸ்ஸியா எனும் உலகின் மனித விழுமியங்கள் செழித்து வளரும் நாட்டை விட்டுவிட்டு கனடா எனும் நேட்டோ கொலைகாரக் கும்பல்களின் பகுதியில் ஏன் வாழ்ந்து கஷ்ட்டப்பட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்? எப்போது அந்த ஒப்பற்ற நாடான ரஸ்ஸியாவுக்குச் செல்வதாக உத்தேசம்?

59 minutes ago, நிழலி said:

நேட்டோவில் உக்ரைனை இணைக்க நேட்டோ நாடுகள் உடன்பட்டதன் முழுக் காரணமும் ரசியாவை அதன் எதிர்காலத்தை அழுத்தம் கொடுத்து  தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே.

அப்போ ரஸ்ஸியா செய்வது உக்ரேன் மக்களுக்கான விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதா? 1990 இல் சோவியத் ஒன்றியம் உடைந்து தனியான சுதந்திர நாடுகள் உருவாகிவிட்டன. அந்த நாடுகள் தாம் விரும்பும் அமைப்பில் இணையவும் விரும்பாதுவிட்டால் விலகவும் அவற்றிற்கு சகல உரிமையும் இருக்கிறது. ஏனென்றால் அவை சுதந்திரமான, இறைமையுள்ள தனியான நாடுகள். அந்த நாட்டு மக்களின் விருப்பத்தின்படிதான் அந்த நாடு பயணிக்கும், பக்கத்துநாட்டின் விருப்பத்தின் அடிப்படையில் அல்ல. 

நேட்டோ கொலை இயந்திரம் செய்வது தனது பிரதேசத்தை அத்கிகரிப்பதென்று நீங்கள் கருதினால், புட்டின் செய்வதும் அகண்ட சோவியத் ஒன்றியத்தை தனது ஆக்கிரமிப்பின்மூலம் உருவாக்குவதே. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஷ்யா தனது பாதுகாப்பிற்காக போராடுகின்றது.
இந்தியா தனது பாதுகாப்பையே அழித்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

யுக்ரேன் நேட்டோ எனும் கொலை இயந்திரத்தில் இணைய முற்பட்டமையே இந்த யுத்தத்தின் அடிப்படை காரணம். 

இதுதான் எனது கருத்தும், இந்த போருக்கு பிரதான காரணி நேட்டோ. ரஷ்யா ஏற்கனவே பல நேட்டோ நாடுகளால் ஆகாயம், தரை , கடல் வழிகளால்  சுற்றி வளைக்க பட்டுள்ளது. உக்ரைனும் இந்த அமைப்பில் சேர்ந்தால், அதுதான் ரஷ்யாவுக்கு  கடைசி ஆணி. எல்லையில்  ரஷ்ய கனரக வாகனங்கள் பல செல்லும்போது ஒரு குடிமகன் பனி வழித்துக் கொண்டு இருக்கிறார், அவரிடம் ஒருவர் இரு நாட்டு யுத்தத்தை பற்றி கேக்கிறார், அப்ப அவர் சொல்கிறார்  " யுத்தமா, எங்கே? அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்கிறார், அவர்  சொல்வதிலும் பல அர்த்தங்கள் உள்ளன .

Edited by Ahasthiyan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சிம்பிள் ஈக்குவேசன்… அமெரிக்க கூட்டாளி வெள்ளைத்தோல் நாடுகளுக்கு வந்தா ரத்தம், மற்ற நாடுகளுக்கு வந்தா தக்காளி சட்னி… இதுக்கு ரஞ்சித்தும் கிருபனும் இவ்வளவு பொங்கித்தள்ளவேண்டிய அவசியம் இல்லை… உக்ரைன் உட்பட அமெரிக்ககூட்டாளிகளுக்கு அழ உலகே இருக்கிறது.. யூரியுப் ரீவி ரேடியோ பத்திரிகை உச்சபட்ச ஊடகம்கள் இருக்கின்றன.. உகரைனில் இருக்கும் ரஷ்யமக்களுக்காக அழ ரஷ்யாவைத்தவிர யாரும் இல்லை.. ஒடுக்கப்படுபவர் பக்கம் நிக்கவேண்டிய தார்மீக கடமை ஒடுக்கப்படும் எமக்கு இருக்கிறது.. ஆக நாங்கள் உக்ரைனில் உள்ள குரலற்றவர்களின் குரலாக உள்ள ரஷ்யாபக்கமே நிற்போம்..

நீங்கள் எழுதியதில் உக்ரேன் இருக்கும் இடத்தில் எம்மையும், ரஸ்ஸியா இருக்கும் இடத்தில் சிங்களவரையும் போட்டுப்பாருங்கள். அப்போதும் சிங்களவர் பக்கம் தான் நிற்பீர்களோ? நீங்கள் நின்றாலும் நிற்பீர்கள். உங்களைத் தலை கீழாகக் கட்டி, கண்ணுக்குள் ஒரு பிடி மூக்குத்தூளைப் போட்டும் கொழுப்பு அடங்கவில்லை!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, ரஞ்சித் said:

இந்த நேட்டோ கொலை இயந்திரம் பற்றி நீங்கள் சொல்லுங்களேன், கேட்கலாம். இதுவரை நேட்டோ கொலை இயந்திரம் அழித்த நாடுகளை, இனக்கொலை புரிந்த மக்கள் கூட்டத்தைப் பட்டியலிடுங்களேன்.

என்ன இது?????

தெரிந்துதான் கேட்கின்றீர்களா? அல்லது தெரியாமல் கேட்கின்றீர்களா?

நாம் பள்ளிகளில் படித்த வார்சோ ஒப்பந்தம் ஞாபகத்திற்கு வருகின்றது.😄

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரஞ்சித் said:

நீங்கள் எழுதியதில் உக்ரேன் இருக்கும் இடத்தில் எம்மையும், ரஸ்ஸியா இருக்கும் இடத்தில் சிங்களவரையும் போட்டுப்பாருங்கள். அப்போதும் சிங்களவர் பக்கம் தான் நிற்பீர்களோ? நீங்கள் நின்றாலும் நிற்பீர்கள். உங்களைத் தலை கீழாகக் கட்டி, கண்ணுக்குள் ஒரு பிடி மூக்குத்தூளைப் போட்டும் கொழுப்பு அடங்கவில்லை!!!

உக்ரைனின் சுயநிர்ணயத்தை ஆதரித்து அங்கீகாரம் கொடுத்ததே சோவியத் யூனியன் தான். ஜார் காலத்தில் இவர்களுக்கு எந்த உரிமையுமில்லை. இரண்டாம் உலகப்போரில் சோவியத் மீது ஹிட்லர்  படையெடுப்பு நடத்தி அழித்த போது  நாஜி உடையை அணிந்து கொண்டு சோவியத்துக்கு எதிராக போராடியவர்களும் இவர்கள்தான்..

பனிப்போர் காலத்தில் உருவான ஆக்கிரமிப்பு "நேட்டோ",  தற்பாதுகாப்பு "வார்சோ" நாடுகள் தேவை இல்லாமல் போவது என்பது அழிவல்ல. தேவையாற்ற ஆபத்தானவை அழிய வேண்டும். ஆனால் இன்னும் நேட்டோ தொடர்ந்தால் வேறு கூட்டணி உருவாவதையும் உலகை அழிவின் நுனியில் வைத்திருபதையும் தவிர்க முடியாது. அமெரிக்காவும் நேட்டோவும் அல்ல புதிய உலக ஒழுங்கை தீர்மானிப்பதோ பதுகாப்பதோ... 
பலமானவன் பலமீனமானவனை அழிப்பது இயற்கையின் தேர்வல்ல... மாற்றத்திற்கு ஏற்ப தம்மை மாற்றி அமைத்து கொள்வது தான் தேர்வு. பலமானவர் யார்? அமெரிக்கா Not anymore.

உக்ரைனின் உள்நாட்டு அரசியலில் அமெரிக்கா நேட்டோ தலையிடாமல் தங்கள் படைகளை விலத்தி கொண்டாலே போதும். உக்ரைன் ஊடாக ரஷ்ஷியா மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்ந்து செய்யும் வர்த்தகம் எரிபொருள் என்பது தங்கு தடை இல்லாமல் நடக்குமானால் அதனால் ரஷ்ஷியாவிற்கும் , ஐரோப்பாவிற்கும் உக்ரைனிற்கும் லாபமே.  நஷ்டம் அமெரிக்காவிற்கு மட்டுமே. ரஷ்ஷியாவிற்கும் உக்ரைனிற்குமான நட்பால் எந்த ஆன்மாவும் இழக்கப்படமாட்டாது. 
பனிப்போர் முடிந்த பின்னும் ஏன் நேட்டோ படைகள் ஏன் ஐரோப்பாவில் இருக்க வேணும். கலைத்து விடலாமே. அதை ஏன் ரஷியாவை சினம் மூட்டவும் அச்சுறுத்தவும் உபயோகிக்க வேணும்..?  உலகம் முழுவதையும் போர் சூழலில் தக்க வைத்து கொள்ள விரும்பும் நாடு எது…?

இதுவரை எந்த நாடுகள் மீது ரஷ்ய படை எடுத்திருக்கிறது அமெரிக்க எத்தனை நாடுகளில் படையெடுத்திருக்கிறது. ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இரண்டாம் உலகப்போரின் பின் அமெரிக்கா குண்டுவீசிய மற்றும் ஆக்கிரமித்த நாடுகள்:

China 1945-46

Syria 1949

Korea 1950-53

China 1950-53

Iran 1953

Guatemala 1954

Tibet 1955-70s

Indonesia 1958

Cuba 1959

D Rep. of Congo 1960-65

Iraq 1960-63

Dominican Republic 1961

Vietnam 1961-73

Brazil 1964

Belgian Congo 1964

Guatemala 1964

Laos 1964-73

Dominican Republic 1965

Peru 1965

Greece 1967

Guatemala 1967-69

Cambodia 1969-70

Chile 1970-73

Argentina 1976

Turkey 1980

Poland 1980-81

El Salvador 1981-92

Nicaragua 1981-1990

Cambodia 1980-95

Grenada 1983-84

Angola 1980

Lebanon 1982-84

Libya 1986

Philippines 1986

Iran 1987-88

Libya 1989

Iran 1998

Panama 1989-90

Iraq 1991

Kuwait 1991

Iraq 1992-1996

Somalia 1992-94

Bosnia 1995

Sudan 1998

Afghanistan 1998

Yugoslavia - Serbia 1999

Afghanistan 2001

Iraq 2002-3

Somalia 2006-2007

Iran 2005

Libya 2013

Yemen 2015

எங்கே இருக்கிறீர்கள்? நீங்கள் இந்த விபரங்களைக் கிண்டிய்ந்டுத்த அதே தளர்ஹ்தில் டோவியட்பொன்றியம் புரிந்த இனக்கொலைகளும், சிந்த மக்கள் மீது கம்மியூனிச ஆட்சியாளஎகள் புரிந்த படுகொலைகளும் இருக்கின்றன. உலகில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு ரஸ்ஸிய ராணுவம் பேர்பெற்றது. 2 ஆம் உலகப்போர் முடிவடைந்த பின்னர் ரஸ்ஸியா ஆக்கிரமித்துக்கொண்ட கிழக்கு ஜேர்மனி, போலந்து, ஹங்கேரி, செக்குடியரசு உட்பட்ட பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோவியத் ராணுவமும் அவர்களின் ராணுவ உளவுப்படையும் புரிந்த கொடுமைகள் போர்க்குற்றங்களாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆகவே இந்த பட்டியலினை நீண்டதாக போட்டு பிலிம் காட்டும் வேலைகள் வேண்டாம் ஓணாண்டி. என்னிடமும் இதைவிட நீண்ட விபரமான பட்டியல் கைவசம் இருக்கிறது.?

11 minutes ago, குமாரசாமி said:

என்ன இது?????

தெரிந்துதான் கேட்கின்றீர்களா? அல்லது தெரியாமல் கேட்கின்றீர்களா?

நாம் பள்ளிகளில் படித்த வார்சோ ஒப்பந்தம் ஞாபகத்திற்கு வருகின்றது.😄

தெரிந்துதான் கேட்கிறேன், நேட்டோ கொலை இயந்திரம் புரிந்த படுகொலைகளை பட்டியலிடுங்கள்.

வோர்சோ பற்றி நானும் படித்திருக்கிறேன். ஆனால் அது ஏன் இன்று சுருங்கிப்போய் வெறும் ரஸ்ஸியா எனும் நாட்டில் படுத்துக்கொண்டது என்பதையும் நீங்களே கூறிவிடுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, ரஞ்சித் said:

தெரிந்துதான் கேட்கிறேன், நேட்டோ கொலை இயந்திரம் புரிந்த படுகொலைகளை பட்டியலிடுங்கள்.

ஆப்கானிஸ்தான் தொடக்கம்  சிரியா லிபியா வரைக்கும் படர்ந்துள்ளது. ஈராக் வேறு கதை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உக்ரைனின் உள்நாட்டு அரசியலில் அமெரிக்கா நேட்டோ தலையிடாமல் தங்கள் படைகளை விலத்தி கொண்டாலே போதும். உக்ரைன் ஊடாக ரஷ்ஷியா மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்ந்து செய்யும் வர்த்தகம் எரிபொருள் என்பது தங்கு தடை இல்லாமல் நடக்குமானால் அதனால் ரஷ்ஷியாவிற்கும் , ஐரோப்பாவிற்கும் உக்ரைனிற்கும் லாபமே.  நஷ்டம் அமெரிக்காவிற்கு மட்டுமே. ரஷ்ஷியாவிற்கும் உக்ரைனிற்குமான நட்பால் எந்த ஆன்மாவும் இழக்கப்படமாட்டாது. 
பனிப்போர் முடிந்த பின்னும் ஏன் நேட்டோ படைகள் ஏன் ஐரோப்பாவில் இருக்க வேணும். கலைத்து விடலாமே. அதை ஏன் ரஷியாவை சினம் மூட்டவும் அச்சுறுத்தவும் உபயோகிக்க வேணும்..?  உலகம் முழுவதையும் போர் சூழலில் தக்க வைத்து கொள்ள விரும்பும் நாடு எது…?

நீங்கள் ரஸ்ஸியாவின் வெளிவிவகார அமைச்சில் பணிபுரியும் சகல தகுதியும் கொண்டிருக்கிறீர்கள் என்பதை இத்தால் அறிந்துகொள்கிறேன்.

அதுசரி, இப்போது உக்ரேனில் நேட்டோ படை இருக்கிறதா? சொல்லவேயில்லை? அப்போ ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்களை இப்போது எதிர்த்துப் போரிடுவது நேட்டோ கொலை இயந்திரம் தான் என்று நினைக்கிறேன்.

எப்படி? நேட்டோ ஆக்கிரமிப்பு படை, வார்சோ தற்காப்பு அமைப்பா? அப்படியானால் ரஸ்ஸியா இப்போது செய்வது தற்காப்பு? அதாவது இன்னொரு சுதந்திர, இறமையுள்ள நாட்டை ஆக்கிரமித்துக் நிற்பது தற்காப்பு? நன்றாக இருக்கிறது ஓய் உம்முடைய வியாக்கியானம். விட்டால் 2 ஆம் உலகப்போரில் ஹில்டர் செய்த ஆக்கிரமிப்புக் கூட தற்காப்பிற்காகத்தான் என்று சத்தியம் செய்வீர்கள் போலிருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரஞ்சித் said:

உண்மை என்னவென்றால், யாரும் போரை விரும்பவில்லை, பூட்டின் உட்பட. ஆனால் அது அமெரிக்காவின் நலனுக்காக மற்றய‌ நாடுகள் மீது திணிக்கப்படுகிறது. அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையும் நிறுத்த வலுவான எதிரி அவசியம். அமெரிக்காவால்  திணிக்கப்பட்ட புதிய உலக ஒழுங்கு ஒழிக்கப்பட வேண்டும். இது ஐரோப்பாவில் நிகழ்வது வரவேற்க்கத் தக்கது. அதை பூட்டினால் தான் செய்ய முடியும். இதுவரை சிரியாவிலும், ஈராக்கிலும், லிபியாவிலும் வெனுசுவேலாவிலும் நடக்கும் மோதல்களில் அமெரிக்கா அனுகூலமான நிலையில் இருந்து வந்தது. 

இந்த நடவடிக்கைக்குப் பிறகு அமெரிக்காவின் இயலாமை வெளிப்படும். எந்த நாட்டையும் ஆக்கிரமிக்க‌ அமெரிக்கா தயங்கும். அந்த நாடுகளும் அமெரிக்காவை நம்பாது வேறு நட்பு உறவுகளை தேடும். அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் கூட நீண்ட காலத்திற்கு நிலைக்காது. சர்வதேச சந்தை, திறந்த பொருளாதாரம் எல்லாம் அமெரிக்க நலன் களுக்காக உருவானவை. அந்நிலையில் கியூபா போன்ற சிறிய, வளங்கள் குறைந்த நாடுகள் மீது பிரயோகிக்கும் தடையை வளம் உள்ள பெரிய சந்தை உள்ள நாடுகள் மீது பிரயோகிக்க முடியாது. வேறு வழியான சந்தை பொருளாதாரம் உருவாகும். இதுவே அமெரிக்காவின் அதிகார, பொருளாதார கீழிறங்கும் பாதைக்கு வழி சமைக்கும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, ரஞ்சித் said:

வோர்சோ பற்றி நானும் படித்திருக்கிறேன். ஆனால் அது ஏன் இன்று சுருங்கிப்போய் வெறும் ரஸ்ஸியா எனும் நாட்டில் படுத்துக்கொண்டது என்பதையும் நீங்களே கூறிவிடுங்கள்.

வீசிய பணக்கட்டுகளும், சொர்க்க போகங்களும்....
இறுதியாக நேட்டோவில் இணைந்த நாடுகள் பஞ்சப்பரதேசி நாடுகள்.கொள்கையும் இல்லை நோக்கங்களும் அறவே இல்லாத நாடுகள்.....சும்மா எண்ணிக்கைக்கு மட்டும்...அதுவும் ரஷ்யாவுக்கு எதிராக......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

ஆப்கானிஸ்தான் தொடக்கம்  சிரியா லிபியா வரைக்கும் படர்ந்துள்ளது. ஈராக் வேறு கதை

மேற்கிற்கெதிரான இந்த மனப்பான்மையோடு எப்படி உங்களால் தொடர்ந்தும் அங்கே வாழ முடிகிறது? ரஸ்ஸிய அதிகாரத்தை ஆதரிக்கும் நீங்கள் அங்கு சென்று வாழவேண்டும் என்று ஏன் நினைக்கவில்லை? நீங்கள் சரியானவை என்று நம்பும் உரிமைகளை, சுதந்திரத்தை ரஸ்ஸியா கொண்டிருக்கிறதென்றால், ஏன் இன்னும் பிடிக்காத, நேட்டோ கொலை இயந்திரங்களில் ஒன்றான ஜேர்மனியில் இருந்து கஷ்ட்டப்படுகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா ஈராக் போன்ற நாடுகளைத் தாக்கும்போது பொய்யான காரணங்களைச் சொன்னது. 
ரஷ்யா தனதுபக்கமுள்ள நியாயங்களை வெளிப்படையாகச் சொல்கிறது .... ...

உக்ரைன் NATOவில் இணைவதை ரஷ்யா ஒருபோதும் அனுமதிக்காது, ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் வெல்லமுடியாது  என்பதைத் தெரிந்து வைத்திருக்கும்
அமெரிக்காவின் சதிவேலைகளில் மாட்டுப்பட்டு...
ஷெலன்ஸ்கி உக்ரையினை அவலநிலைக்கு கொண்டுவந்து விட்டுள்ளார்.

உக்ரைனை Nato வின் அங்கத்துவநாடாக சேர்க்கும் நடவடிக்கையில் இறங்கியது முட்டாள்தனமான முடிவு ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

வீசிய பணக்கட்டுகளும், சொர்க்க போகங்களும்....
இறுதியாக நேட்டோவில் இணைந்த நாடுகள் பஞ்சப்பரதேசி நாடுகள்.கொள்கையும் இல்லை நோக்கங்களும் அறவே இல்லாத நாடுகள்.....சும்மா எண்ணிக்கைக்கு மட்டும்...அதுவும் ரஷ்யாவுக்கு எதிராக......

எதிர்பார்த்ததுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரஞ்சித் said:

மேற்கிற்கெதிரான இந்த மனப்பான்மையோடு எப்படி உங்களால் தொடர்ந்தும் அங்கே வாழ முடிகிறது? ரஸ்ஸிய அதிகாரத்தை ஆதரிக்கும் நீங்கள் அங்கு சென்று வாழவேண்டும் என்று ஏன் நினைக்கவில்லை? நீங்கள் சரியானவை என்று நம்பும் உரிமைகளை, சுதந்திரத்தை ரஸ்ஸியா கொண்டிருக்கிறதென்றால், ஏன் இன்னும் பிடிக்காத, நேட்டோ கொலை இயந்திரங்களில் ஒன்றான ஜேர்மனியில் இருந்து கஷ்ட்டப்படுகிறீர்கள்?

USA / Nato / EU போன்றவற்றின் அதிகாரப் பரவலாக்கத்திற்கான, மறைமுகமான சுரண்டல் நடவடிக்கைகளை அந்தந்த நாடுகளில் எதிர்க்கும் அரசியல்வாதிகளும் மக்களும் இருக்கிறார்கள் ...
 
 நீங்கள் ஜோர்ஜ் புஷ் தொடக்கம் டொனால்ட் ரம்ப் வரைக்கும்  போர் சம்பந்தமாக ஜேர்மனியுடனான அரசியல் முறுகல்களை அறியவில்லை என நினக்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லிபியா.ஈராக்,ஆப்கானிஸ்தான்,சிரியா போன்ற நாடுகளுக்கு விரைந்த நேட்டோ ஏன் இலங்கைக்கு செல்லவில்லை?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ரஷ்யா தனதுபக்கமுள்ள நியாயங்களை வெளிப்படையாகச் சொல்கிறது

எது? உக்ரேனிலிருக்கும் நாஜிப்பயங்கரவாதிகளை அழிக்கவும், சட்டத்திற்கு முரணான ஆட்சியாளர்களை அகற்றி உக்ரேனிய மக்களை விடுதலை செய்யவுமே ஆக்கிரமிக்கிறேன் என்று புட்டின் சொன்னாரே, அதைச் சொல்கிறீர்களா? நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். 

18 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

USA / Nato / EU போன்றவற்றின் அதிகாரப் பரவலாக்கத்திற்கான, மறைமுகமான சுரண்டல் நடவடிக்கைகளை அந்தந்த நாடுகளில் எதிர்க்கும் அரசியல்வாதிகளும் மக்களும் இருக்கிறார்கள் ...
 
இருக்கட்டும், நீங்கள் ஏன் இருக்கிறீர்கள்? அந்த அரசுகளை விமர்சிக்கும் மக்கள் உங்களைப்பொஇன்று ரஸ்ஸிய ஆக்கிரமிப்பை ஆதரிப்பதில்லையே?

16 minutes ago, குமாரசாமி said:

 நீங்கள் ஜோர்ஜ் புஷ் தொடக்கம் டொனால்ட் ரம்ப் வரைக்கும்  போர் சம்பந்தமாக ஜேர்மனியுடனான அரசியல் முறுகல்களை அறியவில்லை என நினக்கின்றேன்.

நான் கேட்டதற்கான பதில் இதுவல்லவே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.