Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலையின் உச்சியில் புத்தர் சிலை வைப்பதற்கு ஜே.வி.பி முயற்சி

Featured Replies

மலையின் உச்சியில் புத்தர் சிலை வைப்பதற்கு ஜே.வி.பி முயற்சி

மூதூர் பகுதியில் இனக்கலவர பீதி!!

திருமலையில் கூடி வாழும் சிங்கள முஸ்லிம் மக்களிடையே முறுகலை ஏற்படுத்த ஜே.வி.பி அரசியல்வாதிகள் முயன்று வருகின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூதூர் 3ம் கட்டை கல்லுமலைப் பகுதியல் இனக்கலவரமொன்றை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாக-தூபமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியிட்டிருக்கும் அப்பகுதி முஸ்லிம் மக்கள், அது தொடர்பில் பீதியடைந்திருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜே.வி.பி யின் திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த ஜயசேகர தலைமையிலான பிக்குமார் அடங்கிய குழுவொன்று குறித்த கல்லுமலைப்பகுதிக்கு 'திடீர்" விஜயமொன்றை மேற் கொண்டு மலையின் உச்சியில் புத்தர் சிலை ஒன்றை நிர்மாணிக்கும் முயற்சியில் மும்முரம் காட்டி வருவதாக அறிய முடிந்தது.

அத்துடன் இந்த மலையில் கல்லுடைக்கும் தொழிலை தமது தொழிலாகக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் அதனைக் கைவிட வேண்டும் என்றும் ஜயலத் தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர் என்றும் தெரிகின்றது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிகள் தமது ஜீவனோபாயத் தொழிலை இழந்துள்ளனர்.

இதுவே சிங்கள-முஸ்லிம் மக்களிடையே தறசமயம் முறுகலை ஏற்படுத்தியிருக்கிறது. முஸ்லிம்கள் செறிந்து வாழும் இந்த 3ம் கட்டைப் பகுதியில் இனவாதிகளின் இந்தகைய செயற்பாடு பாரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என முஸ்லிம் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அதுவே இனக்கலவரமாக 'விஸ்வரூபம்" எடுக்கலாம், என்றும் அவர்கள் தரப்பில் அச்சம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

இதே போன்றதோர் மதக்கலவரமொன்று கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னரும் இதே கல்லுமலையில் இடம்பெற்றதும் இங்கு குறிப்படத்தக்கது.

குறித்த மலையின் உச்சியில் கிறிஸ்தவர்கள் சிலுவையை கொண்டு வந்து வைத்தனர் என்றும் அதைத் தொடர்ந்து அப்பகுதியில் தொடங்கய 'சிலுவைப் போர்" என்ற கலவரத்தில் பத்து அப்பாவிகள் பலியாகினர்.

அச்சத்தில் உறைந்து போயுள்ள முஸ்லிம் மக்கள் முன்னர் நடந்தவற்றை நினைவு கூர்ந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி : சுடர் ஒளி

தென்தமிழீழப் பகுதிகளை சிறிலங்கா படையினர் முற்றுமுழுதாக ஆக்கிரமித்தது தமிழருக்கு மட்டுமல்ல முஸ்லீம்களிற்கும் பாதகமானது என்பதை முஸ்லீம் மக்கள் உணருவதற்கான காலம் இதன் மூலம் தொடக்கம் பெறுகிறது.

முஸ்லீம்களின் பாதுகாப்பும் புலிகளின் கையில்தான் என்பதை முஸ்லீம் சமூகம் உணரும் நாள் விரைவில் வரும்...

பதிவைக்கவும் வர மாட்டினம் , மரக்கண்டு நடவும் வரமாட்டினம், மரத்துக்கு தண்ணி ஊத்தவும் வரமாட்டினம், ஆனா பழம் சாப்பிட மட்டும் வருவினமோ...???

தமிழர் கொடுத்த விலை எண்டு ஒண்டு இருக்கு... அதிலை எவரும் குளிர்காய விட ஏலாது....

உங்கள் மனத்தாங்கல் புரிகிறது. ஆனாலும் ஒரு நாடு என்று வரும் போது அந்த நாட்டின் குடிகள் எவரும் சமனாகத்தான் கருதப்படவேண்டும். சிறீலங்காவில் சிங்களவர்கள் பெரும்பான்மை திமிரில் எமக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டிருக்கும் இனவாதத்தை நாமும் தமிழீழத்தில் இன்னொரு சிறுபான்மை இனம் மீது காட்ட நினைத்தால் எமக்கும் சிங்களவருக்கும் என்ன வித்தியாசம்?

காலத்தின் கட்டாயம் காரணமாக ஒரு சில கடுமையான நடவடிக்கைகள் எடுக்க புலிகள் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த போதும் இனவாதம் என்பது எப்போதும் விடுதலை புலிகளின் கொள்கையல்ல.

தமிழீழ விடுதலையின் பின் நம் சக்தி யாவும் தமிழீழத்தின் பொருளாதார சமூக அபிவிருத்திக்கு செலவழிக்கப்பட வேண்டுமே ஒழிய தேவையற்ற இனவேறுபாடுகளை வளர்ப்பதற்கு அல்ல.

புதியதோர் உலகு செய்வோம்

புகழ் எல்லாம் தமிழுக்கென்போம்

சாதிக்கோர் சமாதி செய்வோம்

சமத்துவ ஈழம் காண்போம்

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

யாழப்பாணத்தில புத்தர்சிலையை எங்காவது வைக்கமுற்பட்டால் அதற்காக முஸ்லிம் அரசியல்வாதிகள் எதிர்ப்புக்குரல் கொடுக்கப் போவதில்லை. நாம்தான் அவர்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் சிங்களவர்களால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்காகக் கூச்சலிட முனைகிறோம். தான்போக வழியில்லையாம் எலி தவிலையும்

தூக்கிச்சுதாம் எண்டிறதுபோல நாம் பெரிய சமத்துவம் பேச வெளிக்கிடுறது இப்போதைக்கு அவசியமானதில்லை. முஸ்லீம்களின் அரசியலுக்கும் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப்போராட்டத்துக்கும் வேறுபாடுகள் மலைக்கும் மடுவுக்கும்போலானது. இன்றைக்கு கிழக்குமாகாண முஸ்லீம்கள் தமிழத் தேசிய விடுதலைப்போராட்டத்தில் தாங்களும் தமிழ் பேசுவதால் தமிழர்கள்தான் என்ற உணர்வோடு ஒருமித்துக் கைகொடுத்திருந்தால் பாகிஸ்தான் வந்து எங்களுக்குக் குண்டுபோடாது. தமிழீழத்தின் ஆரம்பப் படிநிலை வளர்ச்சி எங்கேயோ போயிருக்கும். ஆனபடியால் முஸ்லீம்கள் அரசியல் விழிப்படைந்து தமிழர்களோடு ஒன்று சேரும்வரைக்கும் அவர்களைப்பற்றிய விடயங்களை அவர்களே பார்த்துக்கொள்ள விட்டுவிட்டு நாங்கள் தேசிய விடுதலைப்போராட்டத்தை தக்க அரசியல் ராஜதந்திர வழிமுறைகள+டாக முன்னெடுத்துச் செல்லுறதுதான் புத்திசாலித்தனமெண்டு நினைக்கிறன்.

யாழப்பாணத்தில புத்தர்சிலையை எங்காவது வைக்கமுற்பட்டால் அதற்காக முஸ்லிம் அரசியல்வாதிகள் எதிர்ப்புக்குரல் கொடுக்கப் போவதில்லை. நாம்தான் அவர்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் சிங்களவர்களால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்காகக் கூச்சலிட முனைகிறோம்.

முஸ்லீம்கள் செறிந்து வாழ்கிறார்கள் என்பதற்காக மூதூரும் திருமலையும் தமிழீழத்தின் பகுதிகள் இல்லையா? ஜே.வி.பி யின் இனவாத நடவடிக்கைகள் தமிழீழத்தின் எப்பகுதியில் நடந்தாலும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது நம் உரிமை மட்டும் அல்ல கடமையும் கூட.

தமிழீழத்தின் எப்பகுதியையும் நாம் யாருக்கும் தாரைவார்த்து கொடுத்துவிடவில்லை

உங்கள் மனத்தாங்கல் புரிகிறது. ஆனாலும் ஒரு நாடு என்று வரும் போது அந்த நாட்டின் குடிகள் எவரும் சமனாகத்தான் கருதப்படவேண்டும். சிறீலங்காவில் சிங்களவர்கள் பெரும்பான்மை திமிரில் எமக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டிருக்கும் இனவாதத்தை நாமும் தமிழீழத்தில் இன்னொரு சிறுபான்மை இனம் மீது காட்ட நினைத்தால் எமக்கும் சிங்களவருக்கும் என்ன வித்தியாசம்?

காலத்தின் கட்டாயம் காரணமாக ஒரு சில கடுமையான நடவடிக்கைகள் எடுக்க புலிகள் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த போதும் இனவாதம் என்பது எப்போதும் விடுதலை புலிகளின் கொள்கையல்ல.

தமிழீழ விடுதலையின் பின் நம் சக்தி யாவும் தமிழீழத்தின் பொருளாதார சமூக அபிவிருத்திக்கு செலவழிக்கப்பட வேண்டுமே ஒழிய தேவையற்ற இனவேறுபாடுகளை வளர்ப்பதற்கு அல்ல.

தேவையோ இல்லையோ. முதலில் தமிழீழ விடுதலைக்காய் ஒவ்வொரு வீட்டின் பங்களிப்பின் அவசியத்தை சொன்ன அரசியல் துறை பொறுப்பாள அவர்களில் செவ்வியை நீங்கள் கேட்க்க வேண்டும்...

ஊர் ஓடும்போது தனியாக சுகமாக நிண்டபின் அந்த மக்களின் மகிழ்வில் பங்கு கேட்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை... எல்லா காலங்களிலும் தங்களின் சுகங்களை எண்ணி எங்களை காட்டி கொடுத்தவர்களுடன் அரசின் இடர்பட்டாலும் கால்களை கட்டி நிக்கிற இனம் தாங்களாகத்தான் சிறுமை பட்டு கொண்டு இருக்கிறது... அதை நாங்களாக ஒதுக்க வேண்டியதில்லை... அவர்களே ஒதுங்கித்தான் நிக்கிறார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தேசத்தில் காலங்காலமாக குடியிருந்த முஸ்லிம் இனத்தவர்களும் வாழுகின்றனர். அவர்களை விரட்டிவிட்டுத் தமிழீழம் அமைக்கவேண்டும் என்று தமிழர்கள் சொல்லுவதற்கும், தமிழர்களை விரட்டிவிட்டு முழு இலங்கைத் தீவையையும் சிங்களமாக்கவேண்டும் என்று சிங்களவர்கள் சொல்லுவதற்கும் ஏதும் வித்தியாசமில்லை. சுதந்திரத்திற்காகப் போராடும் இனம் பிறர் சுதந்திர வாழ்வையும் மதிக்கும் என்பதை புலிகள் பல தடவைகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அவர்கள் சுதந்திரமாக இருக்கட்டும் வேண்டாம் எண்டு சொல்ல இல்லை.... தமிழர் மனங்களிலை இடம் பெற முடியாது... அவர்களால் கஸ்ரப்பட்ட தமிழனை மன்னித்து ஏற்றுக்கொள் எண்று புலிகள் சொல்ல முடியும்... ஆனால் பாதிக்க பட்டாவன் ஏற்று கொள்வானா என்பதுதான் கேள்வி...

இந்திய விடுதலையில் பெரும்பான்மையானவர் பங்காற்ற வில்லை, மனிதரை மனிதராக மதிக்க வில்லை என்னும் குற்றத்துகாய் இண்றுவரை பார்ப்பணரை குதறுவோர் இருக்கிற்றார்கள்.... இந்தியாவில் பார்ப்பணர் ஒதுக்க பட்டதுக்கு அடித்தளமே அதுதான்.... அது முஸ்லீம்களுக்கு ஈழத்தில் மாறிவிட போவதில்லை...

அவர்களுக்கு வக்காலத்து வாங்க வேண்டிய தேவையை உருவாகாமல் அவர்களே பார்த்து கொள்வது நல்லது....

தமிழர் தாயகம் என்று ஒன்றில்லை, சிங்களவனின் சலுகைகளே போதும் என்றிருப்பவர்களை நாங்கள் ஒன்றும் சுதந்திரத்தை இருத்தி வைத்து தீத்த வேண்டியதில்லை. அவர்களுக்கு தேவையானதை அவர்கள் சிங்களவரிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள். காலங்காலமாக மண்ணோடு மண்ணாகும் எங்கள் மக்களை காக்க உதவுங்கள்.

யாழப்பாணத்தில புத்தர்சிலையை எங்காவது வைக்கமுற்பட்டால் அதற்காக முஸ்லிம் அரசியல்வாதிகள் எதிர்ப்புக்குரல் கொடுக்கப் போவதில்லை. நாம்தான் அவர்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் சிங்களவர்களால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்காகக் கூச்சலிட முனைகிறோம். தான்போக வழியில்லையாம் எலி தவிலையும்

தூக்கிச்சுதாம் எண்டிறதுபோல நாம் பெரிய சமத்துவம் பேச வெளிக்கிடுறது இப்போதைக்கு அவசியமானதில்லை. முஸ்லீம்களின் அரசியலுக்கும் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப்போராட்டத்துக்கும் வேறுபாடுகள் மலைக்கும் மடுவுக்கும்போலானது. இன்றைக்கு கிழக்குமாகாண முஸ்லீம்கள் தமிழத் தேசிய விடுதலைப்போராட்டத்தில் தாங்களும் தமிழ் பேசுவதால் தமிழர்கள்தான் என்ற உணர்வோடு ஒருமித்துக் கைகொடுத்திருந்தால் பாகிஸ்தான் வந்து எங்களுக்குக் குண்டுபோடாது. தமிழீழத்தின் ஆரம்பப் படிநிலை வளர்ச்சி எங்கேயோ போயிருக்கும். ஆனபடியால் முஸ்லீம்கள் அரசியல் விழிப்படைந்து தமிழர்களோடு ஒன்று சேரும்வரைக்கும் அவர்களைப்பற்றிய விடயங்களை அவர்களே பார்த்துக்கொள்ள விட்டுவிட்டு நாங்கள் தேசிய விடுதலைப்போராட்டத்தை தக்க அரசியல் ராஜதந்திர வழிமுறைகள+டாக முன்னெடுத்துச் செல்லுறதுதான் புத்திசாலித்தனமெண்டு நினைக்கிறன்.

இஸ்ரவேலில் தூதரகம் திறப்பதென்றால் வீதியலிறங்கி ஆர்பாட்டம் செய்வார்கள், உயர்பாதுகாப்பு வலயம் என்று தமிழர் பகுதி பறித்தெடுக்கப்படும் போது பாராளுமன்றத்தில் ஆதரித்து வாக்களிப்பார்கள்!

இந்தப் பெருச்சாளிகள் குறித்து தமிழர் தரப்பு மதில் மேல் பூனையாக இராமல் விரைவில் ஒரு தீர்மாணம் நிறைவேற்றுவது நல்லது!

எல்லா முஸ்லீம் களும் அப்படி அல்ல எம்மிலும் தவறு இருகின்றது நான் எதை சொல்கின்றென் என புரியும் என நினைகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் இல்லாத தமிழீழம் எப்போதும் சாத்தியப்படப்போவதில்லை. அரசியல் ரீதியாக முஸ்லிம்கள் தமிழரின் பக்கம் சாயாமல் இருக்க சிங்களம் போட்ட பல திட்டங்களில் அகப்பட்டு தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் சமூகத்தின் நிலைதான் மிகவும் பரதாபகரமானது. கிழக்கின் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று அமைச்சர்களாகியுள்ள நிலையில் அரசாங்கத்துக்கு எதிராக வாயைத் திறக்கவே அவர்கள் அஞ்சுகின்றனர். எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தையே நம்பியிருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அவர்களின் பேரம் பேசும் சக்தியும் பலவீனமாகியுள்ளது. கிழக்கில் புலிகளின் ஆதிக்கம் இருக்கும்வரை தான் அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு செல்வாக்கு இருக்கும். தற்போது படையினரின் ஆதிக்கம் அதிகரித்த நிலையில் அவர்களும் கவனிப்பாரற்று உள்ளனர். பேரினவாத நிகழ்ச்சி நிரல் தங்களையும் விழுங்கிவிடும் என்ற அச்சத்தில் உள்ளனர். அவர்களின் நிலை மிகவும் சங்கடமானது. ஒன்றில் புலிகளின் வாய்க்குள் அகப்பட வேண்டும் அல்லது கருணா குழுவினரின் வாய்க்குள் அகப்பட வேண்டும். இவ்விரண்டிலும் இருந்து தப்பினால் பேரினவாதிகளின் வாய்க்குள் அகப்பட வேண்டும். தமிழ்த் தரப்புடன் இணைந்து அரசியலை செய்யவும் அவர்களது சமூக உருவாக்கம் அனுமதிப்பதில்லை. சிங்களத் தரப்புடன் இணைந்து அரசியல் செய்ய கிழக்கின் யதார்த்த சூழல் அனுமதிப்பதில்லை. மொத்தத்தில் திரிசங்கு நிலைக்கு உட்பட்ட சமூகமாக அது மாறிக் கொண்டு இருக்கிறது. அவர்களின் வியூகங்கள் எல்லாம் அரசாங்கத்தின் ஊடாக தமது நிலையினை வலுப்படுத்துவதுதான். ஆனால், அவை நகருவதற்கான வாய்ப்புகள் குறைவு. மீண்டும் போர் கிழக்கில் தொடங்கின் வாய்ப்புகள் வரலாம்.

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=328647

முஸ்லீம் அரசியல் வாதிகள் பேரம் பேசும் வலுவை இழந்து பலகாலமாச்சுது தமது சொந்த நலனுகாகவே தற்போதய அரசியல் அவர்களினது

முஸ்லீம் மக்களைத் தமிழீழத்திலிருந்து வெளியேற்ற முடியாது. அப்படி வெளியேற்றுவோமேயானால் பிறகு சிங்களவர்களுக்கும் எமக்கும் என்ன வித்தியாசம்? அவர்களி;ன் சுதந்திரத்தை, உரிமையை நாம் பறித்துவிட முடியாது. புலிகளும் அதனைச் செய்யமாட்டார்கள். ஆனால் அவர்களை தமிழீழ அரசியலில் நுழையவிடக்கூடாது. அதற்கு அவர்களுக்குத் தகுதியும் கிடையாது. போராட்டத்திற்கு முன்னர் தமிழீழப் பகுதிகளில் இருந்தவர்கள் மட்டுமே எதிர்காலத் தமிழீழத்திலும் அனுமதிக்கப்படுவார்கள் என நினைக்கிறேன்.

புலம்பெயர் நாடுகளிலிருந்து தாயகம் சென்றோரில் பங்களிப்புச் செய்தவர்களுக்கு இருந்த வரவேற்பும், பங்களிப்புச் செய்யாதவர்களுக்கு இருந்த வரவேற்பும் வேறுவேறாக இருந்ததை தாயகத்திற்குச் சென்று வந்தவர்களுக்குத் தெரியுமென நினைக்கிறேன். அவ்வாறே முஸ்லீம்களுக்கும் இருக்குமென நினைக்கிறேன்.

முஸ்லீம்களை விடுங்கள் எம்மவர்களை பற்றி என்ன சொல்கின்றீர்கள்.அன்று ஒருவருடன் skype இல கதைத்தேன் அவரை முன்பின் எனக்கு தெரியாது லண்டனில் இருப்பதாக கூறினார் சொன்னார் இப்ப கலிகாலம் அடிபட்டு சாகட்டும் சண்டை எல்லாம் முடிஞ்சு சமாதானம் வந்தபின் இஞ்ச உழைச்சதுகளோட ஊரில போய் சந்தோசமாக முதலீடு செய்திட்டு இருப்பன் என்றார்.அவரின் பேச்சு பயங்கர சினத்தை உண்டாக்கியது இப்படி எண்ணிக்கொண்டிருக்கும் கறுப்பு ஆடுகளை புலிகள் இனம் காணவேண்டும் இவர்களை எதிர்காலத்தில் கவனத்தில் எடுக்க வேண்டும்

எமக்குள்ளும் பங்கு பெறாதவர்கள் ஆயிரக்கணக்காக இருகின்றனர் ஆனால் தமிழர் என நக்கை தொங்கபோட்டு கொண்டு வந்து நிப்பீனம் ஒருநாள்.சிங்களவனிடம் போராடுவதே சிறுபான்மையான நாம் விடுதலை பெறத்தான் சில துரோக முஸ்லீம் அரசியல்வாதிகளால் முஸ்லீம் அப்பாவிகளை பழிவாங்க கூடாது என்பது என் விருப்பம்.சிறுபாண்மையினரை நாம் மதிக்க வேண்டும் அவர்களும் தமிழர்களே ஆனால் மதத்தின் மேல் இருக்கும் வெறியால் மதம் இன்னொரு இனமாக காட்டி கொண்டு இருகின்றார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்னே குறை நெய்க்ககூடாது வெளிநாடு வந்தாக்கள் எல்லாரும் கருப்பு ஆடுகள்தான்(என்னையும் சேர்த்து) இந்தியாவுக்கு அகதியாபோனருகள் திரும்ப போகப்போரதா செய்தி சொல்ல நாங்க இங்கயிருந்து அனுப்பவேண்டாம் என்ரு ஆர்ப்பாட்டம் செய்யிரமே அது போதும் "ஆடு" இனம் கான

B)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.