Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரதமர் பதவியிலிருந்து.. விலக தயாராகின்றார்,  மஹிந்த?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் – மஹிந்தவிற்கு இடையில் அரசியல் கலந்துரையாடல் இடம்பெறவில்லை – ஐ.தே.க.

பிரதமர் பதவியிலிருந்து.. விலக தயாராகின்றார்,  மஹிந்த?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசியல் நெருக்கடியை தவிர்ப்பதற்காக இடைக்கால அரசொன்றை அமைக்கும் நோக்கில் மஹிந்த பிரதமர் பதவியை துறக்கத் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் அவசர சந்திப்பு இடம் பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது நாட்டில் நிலவும் தற்போதைய பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து கலந்துரையாடப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் குறித்த சந்திப்பின் நிறைவில் மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகல் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

https://athavannews.com/2022/1274625

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மத்திய கலாசார நிதியத்தை மறுசீரமைப்பதற்கான ஐவரடங்கிய குழு அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார் மஹிந்த? – ஜனாதிபதி இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என தகவல்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது பதவியை இராஜினாமா செய்வது தொடர்பான கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் ஜனாதிபதி இதுவரை குறித்த கடிதத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியல் நெருக்கடியை தவிர்ப்பதற்காக இடைக்கால அரசொன்றை அமைக்கும் நோக்கில் மஹிந்த பிரதமர் பதவியை துறக்கத் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

https://athavannews.com/2022/1274629

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஜனாதிபதியை சந்தித்த மஹிந்த - ராஜிநாமா தகவலை மறுத்த பிரதமர் அலுவலகம்

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

கோப்புப்படம்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அவரது வீட்டில் அந்நாட்டுப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துப் பேசியுள்ளார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது தமது பதவியை மஹிந்த ராஜபக்ஷ ராஜிநாமா செய்ய முன்வந்ததாகவும் அதை பின்னர் கோட்டாபய ஏற்றுக் கொண்டதாகவும் சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாயின. இருப்பினும் இந்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை மற்றும் அடிப்படையற்றவை என்று பிரதமரின் ஊடக செயலாளர் கூறியுள்ளார்.

 

இலங்கை

பட மூலாதாரம்,PMO SRI LANKA

ஜனாதிபதியுடனான பிரதமரின் சந்திப்பு விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

தொடரும் போராட்டங்கள் ரஞ்சன் அருண் பிரசாத், பிபிசி தமிழுக்காக வழங்கும் களத்தகவல்

இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

நாடு தழுவிய ரீதியில் இன்று அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்த திட்டமிடப்பட்ட போதிலும், நேற்று மாலை 6 மணி முதல் நாளை அதிகாலை 6 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது.

அத்துடன், இன்று அதிகாலை முதல் அனைத்து சமூக வலைத்தளங்களும் முன்னறிவித்தல் இன்றி முடக்கப்பட்டன.

 

இலங்கை போராட்டங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எனினும், ஐக்கிய மக்கள் சக்தி, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று நண்பகல், ஊரடங்கு சட்டத்தை மீறி போராட்டத்தை நடத்தியது.

அதேவேளை, பேராதனை பல்கலைக்கழக மாணவர்களும் இன்று போராட்ட பேரணியை நடத்தியதுடன், அதனை கலைக்க பாதுகாப்பு பிரிவின் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர் தாரை பிரயோகம் நடத்தியிருந்தனர்.

இவ்வாறான சூழ்நிலையில், நாட்டில் அனைத்து பாகங்களிலும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊரடங்கு சட்டத்தையும் மீறி மக்கள் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

 

இலங்கை போராட்டங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெரும்பாலான இடங்களில் தன்னிச்சையாக சிறு சிறு குழுக்களாக வருகைத் தந்த பலர், வீதியோரங்களில் பாதைகளை ஏந்தி போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

இவ்வாறான நிலையில், கொழும்பின் சில பகுதிகளில் பாரிய அளவிலான போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

குறிப்பாக கொழும்பு - இராஜகிரிய பகுதியில் ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கானோர், அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

 

இலங்கை போராட்டங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாதைகளை ஏந்திய கோட்டாபய வீட்டுக்கு செல் என்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

இவ்வாறு போராட்டங்களை நடத்தியவர்களுக்கு வாகனங்களில் செல்லும் அனைவரும் ஒலி சமிக்ஞைகளை எழுப்பி, தமது ஆதரவையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

கடும் மழையுடனான வானிலை நிலவிய தருணத்திலும், இளைஞர் யுவதிகள் போராட்டத்தை கைவிடாது நடத்தியிருந்தனர்.

இன்றிரவு மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறும், தொலைபேசிகளில் ஒலியை ஒலிரவிட்டும் போராட்டத்திற்கு வலு சேர்த்திருந்தனர்.

கொழும்பு மாத்திரமன்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு சட்டம் மற்றும் அவசர கால சட்டம் ஆகியவற்றை பொருட்படுத்தாது மக்கள் இவ்வாறு ஒன்று திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிந்தது.

https://www.bbc.com/tamil/sri-lanka-60975320

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் மஹிந்த பதவி விலகல் தொடர்பில் ஊடகப்பிரிவு விளக்கம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாகவும், பதவி துறந்துள்ளதாகவும் பல்வேறு சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின.

பிரதமர் பதவியை துறப்பது குறித்து இதுவரையில் கவனம் செலுத்தப்படவில்லை எனவும் பிரதமரின் ஊடகப்பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகல் குறித்து பல்வேறு ஊடகங்களில் பலதரப்பட்ட செய்திகள் வெளியாகியுள்ளமை அவதானத்திற்குரியது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை குறுகிய அமைச்சர்களை உள்ளடக்கிய வகையில் வெகுவிரைவில் ஸ்தாபிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக நம்பதகுந்த தரப்பினர் அனுமானித்துள்ளனர்.

மேலும், இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் முன்மொழிவுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரும் சாதகமான பதிலை வழங்கியதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்காக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று இன்று இரவு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/125225

  • கருத்துக்கள உறவுகள்

 

277738385_3942620509196213_1325128092878

Cartoon: Cartoonist Alok

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் போறன்......நான் போறன்.....நான் போறன்..... பெட்டி படுக்கையோட போறன்..

Bild

மூண்டு பேரும் கவனமாய் இருங்கோப்பா.....காலம் நேற்று மாதிரியில்லையப்பா.....

Bild

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பசிலு மாத்தையா ..வாங்கின கொமிசன்...அபிவிருத்தி நிதி...எல்லாவற்றையும்  வங்கியில் இருந்து எடுத்துக்கொண்டு அமரிக்கா போயிடுவார்...கடந்த தடவையும் அரசு கலையும்போது...ஆரோ கொடுத்த 600 மில்லியன் டொலரை இரவு இரவா எடுத்துக்கொண்டு..போனவர்..இந்த வழக்கில் நிரபராதி என்று போனகிழமைதான் விடுவிக்கப்பட்டவர்..

  • கருத்துக்கள உறவுகள்

நமது வசந்தம், விடிவெள்ளிகள் எங்கே போவினம்? அடுத்து இவர்களுக்குத்தானாம் சாத்து. கரையில் தூக்கியெறியப்பட்ட மீன்கள் மிதிபட்டு சாகப்போகுதுக.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.