Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்கிரேன்: தோல்வியில் முடிந்த மீட்பு நடவடிக்கையும், முற்றுகைக்குள் சிக்கிய சிறப்புப் படையணியும் | வேல்ஸ் இல் இருந்து அருஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வியில் முடிந்த மீட்பு நடவடிக்கையும், முற்றுகைக்குள் சிக்கிய சிறப்புப் படையணியும் | வேல்ஸ் இல் இருந்து அருஸ்

April 4, 2022

முற்றுகைக்குள் சிக்கிய சிறப்பு படையணி

எதிரியின் எல்லைக்குள் தாக்குதல் நடத்துவது என்பது எதிரியை அச்சமடைய வைப்பது ஒருபுறம் இருக்க, தாக்குதல் நடத்தும் தரப்பின் பிரச்சாரத்திற்கு மிகவும் சிறந்த வாய்ப்பாகும். பிடல் கஸ்ரோ அவர்கள் கூறியது போல ஆயிரம் மேடைப் பேச்சுக்களை விட ஒரு கெரில்லாத் தாக்குதல் மிகச் சிறந்த பிரச்சாரமாகும்.

ஆனால் உக்ரைன் விவகாரத்தில் அதனையும்விட மேல், அதாவது தாக்குதல் நடத்துவது மட்டும் தான் உக்ரைன் படையினரின் பணி; பிரச்சார வேலைகளை மேற்குலக அரசியல் தலைவர்களும், ஆய்வாளர்களும், ஊடகங்களும் பலமடங்கு பெரிதாக செய்து முடிப்பார்கள்.

உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள 60 ஆயிரம் படையினரை அழிப்பதில் தான் தற்போது ரஸ்யா அதிக கவனம் செலுத்துகின்றது. இந்தப் படையணியில் 20,000 படையினரைக் கொண்ட அசோ பட்டலியன் எனப்படும் மேற்குலகப் படையினரால் சிறப்புப் பயிற்சி கொடுக்கப்பட்டு மரியப்போல் பகுதியில் நிரந்தரமாகத் தளம் அமைத்துக் கொடுக்கப்பட்ட படையினரை அழிப்பதில் தான் ரஸ்யா தனது முழுமையான கவனத்தையும் குவித்துள்ளது.

போர் ஆரம்பமாவதற்கு முன்னர் ரஸ்யாவின் அதிபர் முன்வைத்த கோரிக்கைகளில் இந்தப் படையணியை அழிப்பதும் ஒன்றாகவே இருந்தது. எனவே தான் அவர்களை அழிக்கும் போது ஏனைய படையணிகள் உதவிக்கு வருவதைத் தவிர்ப்பதற்கு தலைநகர் கிவிவ் மீது வடக்கில் இருந்தும், கிழக்குப் பகுதியின் கார்கிவ் முதல் டொன்பாஸ் வரையிலும் ஒரு பரவலான படை நகர்வை மேற்கொண்டு, உக்ரைன் படையினரின் கவனத்தைத் திசைதிருப்பியது ரஸ்யா.

இந்த பத்தி எழுதப்படும் போது மரியப்போல் பிரதேசத்தின் 90 விகிதமான பகுதிகளை ரஸ்யா கைப்பற்றியுள்ளதுடன், அசோ படைப்பிரிவும் கடுமையான அழிவைச் சந்தித்துள்ளது.

இந்த நிலையில் தான் தமது படையினரின் மனவலிமையை அதிகரிக்கும் நோக்கத்துடனும், மேற்குலகத்திற்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும் முகமாகவும் பேர்டைன்ஸ்க் துறைமுகத்தில் தரித்து நின்ற ரஸ்யாவின் தரையிறங்கு கலம் மீது உக்ரைன் படையினர் ஒரு கொரில்லாத் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். ஏவுகணை கொண்டு அல்லது கிராட் வகையை சேர்ந்த பல்குழல் உந்துகணை செலுத்திகள் மூலமே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப் படுகின்றது.

spacer.png

கடந்த 24 ஆம் நாள் தாக்குதல் இடம்பெற்ற சமயம், 3 கப்பல்கள் தரித்து நின்றன, அது தொடர்பான புலனாய்வுத் தகவல்களை அமெரிக்கா வழங்கியிருந்தது. எனினும் Black Sea Fleet’s Alligator (Project 1171)-class வகையை சேர்ந்த ஒரு கப்பல் சேதமடைந்ததுடன், ஏனைய இரு கப்பல்களும் தப்பிச் சென்றுவிட்டன. மரியப்போல் பகுதியில் இருந்தே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப் படுகின்றது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து மரியப்போல் பகுதி மீதான தனது தாக்குதலை விரைவுபடுத்திய ரஸ்யா, நகரத்தின் ஒரு சிறு பகுதிக்குள் வைத்து 14,000 இற்கு மேற்பட்ட சிறப்புப் படையினரை சுற்றிவளைத்துள்ளது. இந்த முற்றுகைக்குள் சிக்கியுள்ள படைத் தளபதிகளையும், மேற்கு நாடுகளின் பயிற்சியாளர்களையும் மீட்பதற்கு உக்ரைன் படையினர் துணிகரமான திட்டம் ஒன்றை தீட்டினார்கள்.

இந்தத் திட்டத்தில் இரு இலக்குகள் இருந்தன. ஒன்று ரஸ்யப் படையினரின் ரடார் கண்களில் சிக்காது, உலங்குவானூர்திகளில் தாழ்வாகப் பறந்து சென்று, முற்றுகைக்குள் சிக்கியுள்ள முக்கிய தளபதிகளை மீட்பது, இரண்டாவது ரஸ்யப் படையினரின் கவனத்தைத் திருப்புவதற்காக கார்கிவ் பகுதிக்கு அண்மையாக உள்ள ரஸ்யாவின் எல்லைக்குள் ஒரு வான் தாக்குதலை நடத்துவது. இதன் மூலம் உக்ரைனின் வான்படை வலுவாக உள்ளது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவது.

அதற்கான திட்டத்தில் உக்ரைன் வான்படையினர் ரஸ்யாவின் தாக்குதல்களில் இருந்து காப்பாற்றி மறைவான இடங்களில் வைத்திருக்கும் தமது எஞ்சியுள்ள தாக்குதல் விமானங்களை ஒழுங்கு படுத்தியது. நான்கு தரைத்தாக்குதல் எஸ்யூ-24 விமானங்களும், தரைத் தாக்குதல் விமானங்களை பாதுகாக்கும் சூட்டாதரவை வழங்குவதற்காக ஒரு எஸ்யூ-27 விமானமும் மார்ச் 28 ஆம் நாள் நள்ளிரவு தமது நடவடிக்கையை ஆரம்பித்தன.

spacer.png

அதேசமயம், எம்ஐ-8 உலங்குவானுர்தியும் மரியப்போல் மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்தது. அதற்கு ஆதரவாக சூட்டு ஆதரவை வழங்குவதற்கு 2 தரைத்தாக்குதல் எஸ்யூ-24 விமானங்களும், தரைத் தாக்குதல்  விமானங்களை பாதுகாக்கும் சூட்டாதரவை வழங்குவதற்காக ஒரு எஸ்யூ-25 விமானமும் சென்றன. அவர்களுக்குத் தகவல்களை வழங்க ஒரு ஆளில்லாத விமானமும் சென்றது.

ஒடிசா பகுதியில் இருந்து கடற்கரை வழியாக உலங்குவானூர்தி சென்ற அதேசமயம், கார்கிவ் பகுதியை 5 தாக்குதல் விமானங்கள் ஊடறுத்துச் சென்றன. ஆனால் ரஸ்யப் படையினரின் ரடார்களில் விமானங்கள் சிக்கிக்கொண்டன. சிக்கிய விமானங்களைத் தரையில் இருந்து வானுக்குப் பாயும் ஏவுகணைகளால் தாக்கி அழிப்பதை விடுத்து, பெலாரூஸ் படைத்தளத்தில் நிலைகொண்டிருந்த எஸ்யூ-35 தாக்குதல் விமானங்களைப் பயன்படுத்தி ஒரு வான் சண்டையாக மாற்றியிருந்தது ரஸ்யா.

400 மைல்களுக்கு அப்பால் வைத்து இலக்குகளை அழிக்கும் இந்த விமானம், உக்ரைனின் 5 விமானங்களையும் தனது ஆர்-73 மற்றும் 77 ஏவுகணைகளால் வீழ்த்தி விட்டது. கடந்த மாதம் 5 ஆம் நாள் உக்ரைனின் தலைநகருக்கு அண்மையான வான்பரப்பில் இடம்பெற்ற மிகப்பெரும் வான் சமருக்கு பின்னர் இடம்பெற்ற வான் சமர் இதுவாகும். அந்தச் சமரில் ரஸ்யாவின் எஸ்யூ-35 விமானம் 4 எஸ்யூ-27 விமானங்களைச் சுட்டு வீழ்த்தியிருந்தது.

ரஸ்யாவின் எல்லைக்குள் தாக்குதல் நடத்தும் திட்டம் தோல்வியில் முடிந்த அதேசமயம், மீட்பு நடவடிக்கையும் வெற்றிபெறவில்லை. மீட்பு நடவடிக்கைக்குச் சென்ற குழுவும் ரடார்களில் சிக்கி கொண்டது.

spacer.png

டிநிபர் பகுதியில் இருந்து புறப்பட்ட எம்ஐ-8 உலங்குவானூர்தி தரையில் இருந்து ஏவப்படும் சாம் வகை ஏவுகணைகளால் வீழ்த்தப்பட்டதுடன், (சிதறிய விமானத்தின் பாகங்களை படத்தில் காணலாம்), தாக்குதல் விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன. விமானங்களை புக்-எம்3 வகையான தரையில் இருந்து வானுக்குப் பாயும் ஏவுகணைகளா அல்லது எஸ்யூ-35  விமானமா சுட்டு வீழ்த்தியது என்பது தொடர்பில் சரியான தகவல்கள் இல்லை.

இருந்தபோதும் இந்த நடவடிக்கையில் 4 உலங்குவானுரர்திகள் ஈடுபட்டதாகவும் இரண்டு சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இரண்டு தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகின்றது ஆனால் அதனை ரஸ்யத் தரப்பு உறுதிப்படுத்தவில்லை. வீழ்ந்த விமானத்தில் இருந்து உயிர்தப்பிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

எனினும் தனது முயற்சியை கைவிடாத உக்ரைன், நேற்று வெள்ளிக்கிழமை (01) அதிகாலை உலங்குவானூர்திகள் மூலம் தாழ்வாகப் பறந்து சென்று ரஸ்யாவின் மேற்கு எல்லைக்குள் 21 மைல்கள் தொலைவில் பெல்கொரோட் நகரில் உள்ள எரிபொருள் களஞ்சியத்தை தாக்கியுள்ளது.

spacer.png

இரண்டு தினங்களுக்கு முன்னர் அதே பகுதியில் இருந்த ரஸ்யாவின் ஆயுதக் கிடங்கு ஒன்றும் அழிக்கப்பட்டிருந்தது. அதனைத் தாமே ஏவுகணைகள் மூலம் அழித்ததாக உக்ரைன் தெரிவித்தபோதும், தவறுதலாக ஏற்பட்ட வெடிவிபத்து என ரஸ்யா தெரிவித்திருந்தது.

போர் ஆரம்பமாவதற்கு முன்னரே உக்ரைனினால் மறைத்து வைக்கப்பட்டுள்ள வான் கலங்களையும், ஏவுகணைகளையும், மேற்குலகத்தினால் வழங்கப்படும் ஆயுதங்களையும் தேடி அழிப்பது தான் ரஸ்யாவுக்குச் சவாலான விடயமாக தற்போது மாறியுள்ளது. எனவே தான் உக்ரைனின் வான்பரப்பை சுதந்திரமாக விட்டுள்ள ரஸ்யா அதனை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றது.

https://www.ilakku.org/rescue-operation-ended-failure-the-special-forces/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேல்ஸ் அரூஸுக்கும் பல வருடங்களுக்குப் பின்னர் உசாராக ஆய்வுகள் எழுத வாய்ப்புக் கிடைத்துவிட்டது. 😀

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

வேல்ஸ் அரூஸுக்கும் பல வருடங்களுக்குப் பின்னர் உசாராக ஆய்வுகள் எழுத வாய்ப்புக் கிடைத்துவிட்டது. 😀

அதுசரி, உக்ரேனை காரனை உள்ளே விட்டு, பின்னர் தேள்வடிவத் தாக்குதல் வியூகம் அமைத்து, கொடுக்கினால் குத்தி அழிக்கும் உத்திபற்றி உவர் ஒண்டும் சொல்லேல்லைப் போலக் கிடக்கு. இனி இனி வருமெண்டு நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'i உக்ரைனுக்காக குரலெழுப்ப ஒத்துழைக்குமாறு இலங்கையிடம் கோரிக்கை Lankans 26, 1986 OQ正® MEME SIYA டொலர் மட்டும் கொடுண்னே குரல் மட்டும் இல்ல, எல்லாத்தையும் எழுப்புவோம்ணே'

டொலர் மட்டும் கொடுண்ணே... 

May be an image of 3 people and text that says 'டேய் யாருடா இவனுங்க SYANIE MEMEI ங்கொம்மால, எல்லா ராக்கட்டையும் முதல் இவனுங்க மேல திருப்புங்கடா'

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாலு சம்பவங்களை ஒன்று சேர்த்து, ஒரு மிகப் பெரும் பலூனாக  ஊதி ஊதி எந்த அளவுக்கு பெரிதாக்கலாம் என்பதற்குச் சிறந்த உதாரணம்  இந்தக் கட்டுரை. 

மேற்கால், சமூக வலைத்தளங்களில்  உக்ரேன் தொடர்பான செய்திகள் இருட்டடிப்புச் செய்தது  இந்த வகை கட்டுரையாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. 

நன்மையான விடயம் என்னவென்றால் இப்படியான கட்டுரையாளர்களை நம்பி உக்ரேனோ அல்லது ரஸ்ய மக்களோ இல்லை என்பதே. 

😏

16 minutes ago, Kapithan said:

இப்படியான கட்டுரைகள் உக்ரேனுக்கும் ரஸ்யாவுக்கும் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழருக்குத் தேவைப்படுதே 🙂

- உக்ரேன் அழிவதை ஆவலுடன் எதிர்பார்ப்போம்|
- இலங்கை கடனில் மூழ்குவதை ரசிப்போம்
- மக்களுக்கு உணவுப் பற்றாக்குறை வந்தாலும் பரவாயில்லை தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவர்களின் நிலையை மீம்ஸ் போட்டு ரசிப்போம்
இப்படி பல. எங்கள் பாடு கொண்டாட்டம்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, இணையவன் said:

உக்ரேன் மீதான தாக்குதலை இரசிப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

ரஸ்யாவை ஆதரிப்பதற்குக் காரணம் மேற்குலகு எம்மை வஞ்சித்துவிட்டது என எம்மக்களிற் பலர்  உணர்வதாகத் தோன்றுகிறது. அதனால் மேற்கின் கொள்கைக்கு  உக்ரேனில் ரஸ்யா மூலம்  அடி விழுவதாக திருப்திப்படுகின்றனர் என நினைக்கிறேன்.

இலங்கை கடனில் மூழ்குவதை நானும் விரும்புகிறேன். அதற்குக் காரணம் இலங்கை  மீதான வெறுப்பல்ல. மாறாக எனது வலியை சிங்களம் புரிந்துகொள்ள இது ஒரு நல்ல சந்தர்பம். அதனூடாக எமது மக்களுக்கு நிரந்தரமாக, சுய கெளவரத்துடன் வாழ்வதற்கான சந்தர்ப்பமாக இது அமையும் என நம்புவதாலேயே இலங்கையின் தற்போதைய கையறுநிலையை மகிழ்வுடன் வரவேற்கிறேன்.

1 hour ago, Kapithan said:

ரஸ்யாவை ஆதரிப்பதும் இலங்கை கடனில் மூழ்குவதை விரும்புவதும் உங்கள் உரிமை. 

இரண்டின்போதும் பாதிக்கப்படுவது ரஸ்ய மக்களும் உக்ரெய்ன் மக்களும் இலங்கையில் தமிழ்-சிங்கள மக்களும்தான். 

இதில் தெரிந்து கொள்ள வேண்டியது மக்கள் பாதிப்படைந்ததால் இலாபம் அடைந்தது ரஸ்யா அல்ல. இலங்கயில் பாடம் படிக்கப் போவது பௌத்த பேரினவாதம் அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

நான் ரஸ்யாவை  ஆதரிப்பதாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. 

பாதிக்கப்படுவது பொதுமக்கள் என்பதில் ஒருவருக்குமே மாற்றுக்கருத்திருக்காது என நம்புகிறேன். 

இலாபம் அடைவது யாராக இருந்தாலும் அவர்களைத் தெரிவுசெய்து, அவர்களுக்கு ஆதரவளிப்பது மக்கள்தானே. இதனைத்தான் சனனாயகம் என்கிறார்கள்.

கடைசி இரண்டு விடயங்களையும் குறிப்பிட்டு மக்களுக்காக வருந்தும் நீங்கள், மக்கள் துன்பம் அடையாமல் இருக்க என்ன செய்யலாம் என்றும் கூறலாமே. ? 

(அப்படி அல்லாதுபோனால் அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களை பட்டினி போட்டால்தானுண்டு. இதெல்லாம் நடக்கிற காரியமா ?)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, இணையவன் said:

இப்படியான கட்டுரைகள் உக்ரேனுக்கும் ரஸ்யாவுக்கும் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழருக்குத் தேவைப்படுதே 🙂

- உக்ரேன் அழிவதை ஆவலுடன் எதிர்பார்ப்போம்|
- இலங்கை கடனில் மூழ்குவதை ரசிப்போம்
- மக்களுக்கு உணவுப் பற்றாக்குறை வந்தாலும் பரவாயில்லை தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவர்களின் நிலையை மீம்ஸ் போட்டு ரசிப்போம்
இப்படி பல. எங்கள் பாடு கொண்டாட்டம்தான். 

7 hours ago, இணையவன் said:

ரஸ்யாவை ஆதரிப்பதும் இலங்கை கடனில் மூழ்குவதை விரும்புவதும் உங்கள் உரிமை. 

இரண்டின்போதும் பாதிக்கப்படுவது ரஸ்ய மக்களும் உக்ரெய்ன் மக்களும் இலங்கையில் தமிழ்-சிங்கள மக்களும்தான். 

இதில் தெரிந்து கொள்ள வேண்டியது மக்கள் பாதிப்படைந்ததால் இலாபம் அடைந்தது ரஸ்யா அல்ல. இலங்கயில் பாடம் படிக்கப் போவது பௌத்த பேரினவாதம் அல்ல. 

இனிவரும் காலங்களில் நீங்களும் உங்களைப்போன்றவர்களும் தமிழர்கள் எப்படியான நிலையில் இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இனிவரும் காலங்களில் நீங்களும் உங்களைப்போன்றவர்களும் தமிழர்கள் எப்படியான நிலையில் இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

இலங்கை கடனில் மூழ்குவது தவிர்க்க முடியாது தவறான தகவல்களை கொடுத்து ராணுவத்தை பெருப்பித்தது இலங்கையின் மொத்த வருமானத்தில் மிகக்குறைந்த அளவே ராணுவ சிலவாக காட்டப்பட்டது . உண்மையில் 2035 அல்லது 40களில்   இன்றுள்ள நிலைமை இலங்கைக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது கொரனோ  உக்கிரேன் சண்டைகள் இவ்வளவு விரைவாக இலங்கையை கடன் தேசமாக மாற்றியுள்ளது .

மேல் உள்ள கருத்தை மறுதலிப்பவர்கள் கொரனோ  இல்லாத சாதாரண நாட்களிலே அம்பாந்தோட்டை ஏன் தாரை வார்க்கப்பட்டது என்பதை ஆராய்தல் நன்று .

அதுசரி இலங்கை கடனில் மூழ்குவதை ரசிப்பதை நான் கேவலமாக எண்ணவில்லை சாதாரண காலையில் குடிக்கும் கோப்பியையே 15 நிமிடம் ரசித்து குடிப்பவன் இலங்கை மூழ்குவதை ரசிக்க கொடுத்துவத்திருக்கணும் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

இனிவரும் காலங்களில் நீங்களும் உங்களைப்போன்றவர்களும் தமிழர்கள் எப்படியான நிலையில் இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

இதுக்குப் பதில் வராது குமாரசாமியர்.

மதில் மேல் இருந்தால் எந்தப்பக்கம் பாய்வது என்பதில் குழப்பம் வருவது இயல்புதானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.