Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முதல் பார்வை | பீஸ்ட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

16498246723078.jpg

 

தீவிரவாதி உமர் ஃபாருக்கை கைது செய்து அழைத்துவரும் ஸ்பெஷல் ஆபரேஷனில் ஈடுபடுகிறார் 'ரா' பிரிவு ஏஜெண்ட் வீரராகவன். கைது செய்யப்பட்ட உமர் பாரூக்கை விடுவிக்க வலியுறுத்தி மால் ஒன்றை தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். மக்களை வீரராகவன் (விஜய்) மீட்டாரா? அவர் கையாண்ட உத்திகள் என்னென்ன? கைது செய்யப்பட்ட உமர் ஃபாருக் என்ன ஆனார்? - இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது 'பீஸ்ட்'.

வீரராகவனாக விஜய். படத்துக்கு படம் வயதைக் குறைக்கும் மேஜிக்கை நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறார். அதே ஃபிட்னஸுடன் மிடுக்கும் கூடிக்கொண்டே செல்கிறது. தனது லுக்கில் ரசிகர்களைக் கவரும் விஜய், எனர்ஜியுடன் நடனக் காட்சிகளில் தெறிக்க விடுகிறார். ஒட்டுமொத்த படத்தையும் 'ஒன்மேன் ஆர்மி'யாக சுமந்து செல்கிறார். என்ன நடந்தாலும் பெரிய அளவில் முகத்தில் உணர்ச்சிகளை வெளிபடுத்தாத ஒரு கதாபாத்திரத்தில் பக்குவமாக வலம் வருகிறார். பிரீத்தியாக வரும் பூஜா ஹெக்டேவுக்கு விஜய்யை காதலிப்பதைத் தாண்டி பெரிய ரோல் இல்லை. சிலசமயம் எதிரிகளை அடிக்க 'டூல்' ஆகவும் பயன்படுகிறார். அழகிலும், நடனத்திலும் ரசிகர்களை ஈர்க்கிறார். கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பூஜா.

சில காட்சிகள் மட்டுமே வந்து செல்லும் அபர்ணா தாஸ் கவனம் பெறுகிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ கதாபாத்திரங்களுக்கு பெரிய ஸ்கோப் இல்லாதது ஏமாற்றம். விஜய்யை புகழ்வதையே தனது பார்ட் டைம் வேலையாக செய்கிறார் செல்வராகவன். மற்றபடி விடிவி கணேஷின் 'ராமா கொஞ்ச இர்ரா காமா' போன்ற டைமிங் காமெடிகள் படத்துக்கு பெரும் பலம் சேர்த்திருக்கின்றன. அதேசமயம், யோகி பாபு, ரெடின் கிங்க்ஸ் லீ-க்கு நெல்சனின் முந்தையப் படங்களைக் காட்டிலும், இந்தப் படத்தில் முக்கியத்துவம் குறைவுதான்.

முதல் பாதி முழுவதும் காமெடி, காதல், அவ்வப்போது வரும் சண்டைக் காட்சிகள் என கமர்ஷியல் சினிமாவுக்கே உண்டான பாணியில் படம் நகர்கிறது. சலிப்பை ஏற்படுத்தாத திரைக்கதை மூலம் முதல் பாதியை சிறப்பாகவே கொண்டுசென்றிருக்கிறார் நெல்சன். இரண்டாம் பாதியில் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டிய இடத்தில் தடுமாற்றம் தெரிகிறது. தீவிரவாதிகளை டம்மி செய்து, நாயகனுக்கான வெயிட்டை கூட்டிருப்பது, படத்தில் சுவாரஸ்யமில்லா போக்கை உருவாக்கியிருக்கிறது.

ஷைன் டாம் சாக்கோ போன்ற நல்ல நடிகரை பயன்படுத்தாமல் வீணடித்திருப்பது, காதபாத்திரங்களை எழுதிய விதத்தில் சொதப்பிருப்பதை உணர முடிகிறது. உமர் ஃபாருக் கதாபாத்திரம் நெகட்டிவ் ரோலுக்கு கொஞ்சம்கூட பொருந்தாத தேர்வு. முகமூடி அணிந்து பில்டப் கொடுக்கும் தீவிரவாதி குழுவின் தலைவன் எந்த விதத்திலும் அந்தக் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கவில்லை.

மத்திய உள்துறை அமைச்சரை அவ்வளவு அசால்ட்டாக அதிகாரி டீல் செய்வது, ஒரு மாலில் சிறைபிடிக்கபட்ட பணயக்கைதிகளுக்காக, தோல்வியை ஒப்புக்கொள்ளும் வகையில் முக்கியமான தீவிரவாதி ஒருவரை விடுவிக்க அரசு முடிவெடுப்பது கதையின் கனத்தை குறைத்திருக்கிறது. விஜய் மாலுக்குள் கார் ஓட்டுவது, ஒரே கத்தியை வைத்துக்கொண்டு தீவிரவாதிகளின் துப்பாக்கிளுக்கு டஃப் கொடுப்பது, இரண்டு இரும்புக் கதவில் ஒளிந்துகொண்டு எல்லா தீவிரவாதிகளையும் துவம்சம் செய்வது, சில காட்சிகளில் விஜய்க்கு உதவுவதற்காக தீவிரவாதிகள் துப்பாக்கிகள் இல்லாமல் கத்தியுடன் வந்து சண்டையிடுவது என கமர்ஷியலுக்கு லாஜிக் தேவையில்லை என்றாலும், காட்சிகளுடன் ஒட்ட முடியவில்லை.

அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தானுக்கு தனியாளாக சென்று தீவிரவாதியை மீட்டு, போர் விமானத்தில் நாடு திரும்வுது, இந்திய அரசாங்கமே விஜய் சொல்லுக்கு கட்டுப்படுவது, உள்துறை அமைச்சரை உள்ளூர் அரசியல்வாதி போல டீல் செய்வது... அவ்வ்வ்வ்... கொஞ்சம் கருணை காட்டியிருக்கலாமே நெல்சன்?!

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் தனித்து தெரிகின்றன. குறிப்பாக கத்தியால் விஜய் ஸ்கீரினை கிழிக்கும் ஃப்ரேம். பைக் ஓட்டும் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என கேமராவில் விருந்து படைத்திருக்கிறார். அனிருத் இசையில் பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. பின்னணி இசை ஓகே. ஜானி மாஸ்டரின் நடனம் பாடல்களுக்கு உயிரூட்டுகிறது.

மொத்ததில் கதையைத் தவிர்த்து, காமெடியின் துணையுடன் விஜய்யை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட'மாஸ் என்டர்டெயினர்' திரைப்படமாக எஞ்சி நிற்கிறது 'பீஸ்ட்'.

முதல் பார்வை | பீஸ்ட் - கனமில்லாத கதை... கைகொடுத்த காமெடி! | Beast movie review - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் மற்றும் அஜித்தின் படங்களை பார்ப்பதை நிறுத்தி 15 வருசம் ஆகுதெண்டு நினைக்கிறன்.. அதே வந்தான் சுட்டான் ரிப்பீட்டு கதைகள்தானே..

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் கூட சங்கி தான்.
எந்த இஸ்லாமியரால் பாதிக்கப்பட்டாரோ தெரியவில்லை!😊
தொடர்ந்து இஸ்லாமியர்களை இழிவு படுத்தும் சினிமாக்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.
ஆச்சர்யமான உண்மை என்னவென்றால் அஜித் இதுவரை விஜய் போல் வெறித்தனமாக இஸ்லாமியர்களை வெறுக்கும் கதைகளில்,படங்களில் நடிக்க வில்லை.
அதை விட கொடுமை என்னவென்றால்
சன் டிவி காரர்களின் அதீத இஸ்லாமிய வெறுப்பு.கலாநிதி மாறன் குரூப் தினகரன்  பேப்பர், டிவி எல்லாவற்றிலும் அது நன்றாக எதிரொலிக்கும்.
தீவிரவாதிகளை பற்றி படம் என்றால் இன்றைய தீவிரவாதம் மொத்தம் ஆர் எஸ் எஸ் ,இந்துத்துவ தீவிரவாதிகள் தானே செய்கிறார்கள்!
அவர்களை கண்டிப்பது போல்  படம் நடிக்க விஜய்க்கு ஆண்மை இல்லை.பயம்.உண்மை சொல்வதென்றால் அப்படி அல்லவா நடிக்க வேண்டும்? 
நெல்சன் சேவியர் (பத்திரிகையாளர் )
தமிழ்நாட்ல எப்ப கடைசியா தீவிரவாதிய பாத்தீங்க ? எந்த ஹைஜாக் நடந்துச்சு? பாகிஸ்தானுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்னய்யா சம்மந்தம்? விஜயகாந்தே Outdatedன்னு கிழிச்சுப் போட்ட ஸ்க்ரிப்ட்ய்யா இது.
இங்க ஒரு முஸ்லீம் நிம்மதியா கடை வைச்சு நடத்த முடியல, முஸ்லீம் புள்ளைங்க ஸ்கூல் காலேஜ்ல படிக்க போக முடியலைன்னு அந்த சமூகமே கதறிட்டு இருக்கு.

சமூகத்துல சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாம எதுக்குய்யா படம் எடுக்குறீங்க ? முஸ்லீம்ன்னா தீவிரவாதின்னு பொது புத்திய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு இவ்ளோ செலவு? பேப்பர், டிவில நியூஸ்லாம் பாப்பீங்களா இல்லையா?
ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி ஜாலியா ஒரு படம்ன்னு சொன்னாங்க. இது ஜாலியா எடுத்த படம் இல்லை. திரைப்படமா பார்த்தா கூட எந்த பொறுப்புணர்வும் கலை அம்சமும் இல்லாம ஏனோதானோன்னு பண்ணிருக்க ப்ராஜெக்ட். சிரிச்ச நாலு சீன்தான் படம்னா லொள்ளுசபா பெட்டர்.
பொறுப்புள்ள நடிகர்ன்னு ஃபையர் விடுறப்போ அந்த பொறுப்பை காப்பாத்திக்கிறதும் அதை தக்கவைக்கிறதும் ரொம்ப முக்கியம்.

இயக்குநரை குறை சொல்றது இங்க பொருந்தாது. ஏன்னா அடுத்தது தளபதியா தலைவரான்னு மக்கள் முடிவு பண்ணுவாங்கன்னு விஜய் சொன்னாரு. 

இந்த கதைய இப்போ இருக்க சூழ்நிலைல முழுசா கேட்டுட்டு நடிக்கிறார்னா அது ஒரு தலைவனோட முடிவா இருக்காது. இருக்கவும் கூடாது.
நெல்சன் திலீப் குமார் இயக்குனர் .
இந்த ஆள் தினசரி நடப்புகளை படிக்கிறானா இல்லையா தெரியவில்லை😊

மொத்தத்தில் விஜயின் சுயரூபம் வெளிவந்து விட்டது இந்த படத்தின் மூலம்.
இனி சங்கீகள் கொண்டாடலாம் விஜயை.
அப்படியே அண்ணா அறிவாலயம் எச்சரிக்கையாக இருக்கணும் சன் டிவி ஒனர்களிடம்.
திமுகவை உயிராய் ஆதரிக்கும் சிறுபான்மை மக்களை திமுகவிடம் இருந்து பிரிக்கும் செயலில் தீவிரமாக வேலை செய்கிறார்கள் சன் டிவி ஓனர்கள்.
சன் டிவி ஆட்களை விட தினமலர்,துக்ளக்,மற்றும் சங்கீகள் நல்லவர்கள் போல் இருக்கிறது.அவர்கள் செயலில் சரியாக இருக்கிறார்கள்.
சன் டிவி ஒனர்கள் தான் துரோகிகளாகி ஆதரிக்கும் மக்கள் முதுகில் குத்துகிறார்கள்.
இஸ்லாமிய கட்சி தலைவர்களும் ஏனோ வேடிக்கை பார்த்து கொண்டு வாய் மூடி இருக்கிறார்கள்.
சாமர்த்தியமாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என்று போர்வை போத்தி விட்டு படம் எடுத்து இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம்?
சங்கியநுழைய விடாமல் தடுக்கும் தமிழக மக்கள்,பாகிஸ்தான் முட்டாள்களை நுழைய விடுவார்களா?
எப்படியோ முதல்வர் அவர்கள் சன் டிவி சங்கீகளிடமும்,விஜய் என்னும் சங்கியிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சன்டிவி பேட்டியில்  விஜய் தலைவனாக வருவேன் என்று சொல்கிறார்.அதை சன் டிவி ஒனர்கள் ஒளிபரப்பு செய்கிறார்கள்.
இதன் அர்த்தம் என்ன?
முதல்வர் மு.க.ஸ்டாலின்
அவர்களுக்கு எதிராக விஜயை கொம்பு சீவுகிறார்கள் சன் டிவி ஓனர்கள்.
💐ராஜேந்திரன்💐

  • கருத்துக்கள உறவுகள்

Super screen 📺  இல் பார்க்க book பண்ணியுள்ளேன்..😎

 

  • கருத்துக்கள உறவுகள்
On 14/4/2022 at 04:42, கிருபன் said:

Super screen 📺  இல் பார்க்க book பண்ணியுள்ளேன்..😎

 

காசையும் நேரத்தையும் வீணாக்கப் போகிறீர்கள். அப்புறம் உங்கள் இஷ்டம் கிருபன்!

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ரஞ்சித் said:

காசையும் நேரத்தையும் வீணாக்கப் போகிறீர்கள். அப்புறம் உங்கள் இஷ்டம் கிருபன்!

இரண்டையும் வீணாக்கியாயிற்று. குழந்தைகளை அனுமதிக்க பல கொலைக் காட்சிகளை சென்ஸார் பண்ணியிருந்தனர். யார் செத்தார்கள் என்றே தெரியவில்லை! 

போதாதற்கு பின்வரிசையில் ஒரு குழந்தை ஒன்று தொடர்ந்து கத்தி அழுதுகொண்டிருந்தது! 

  • கருத்துக்கள உறவுகள்
On 17/4/2022 at 15:19, கிருபன் said:

இரண்டையும் வீணாக்கியாயிற்று. குழந்தைகளை அனுமதிக்க பல கொலைக் காட்சிகளை சென்ஸார் பண்ணியிருந்தனர். யார் செத்தார்கள் என்றே தெரியவில்லை! 

போதாதற்கு பின்வரிசையில் ஒரு குழந்தை ஒன்று தொடர்ந்து கத்தி அழுதுகொண்டிருந்தது! 

 நானும் தான்

யோகிபாபுவின் கூர்க்கா பாத்தால் இது பாக்க தேவையில்லை. கூர்க்கா இதை விடநல்ல படம்

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் எந்த மொழியில் தேசபக்தி படம் எடுத்தாலும் 90 வீதமானவை ஊத்தி  கொள்ளும் அதுவழமையானது காரணம் பலநாடுகளை இணைத்து இந்தியா என்று வெள்ளைக்காரர் பெயர் சூட்டி மகிழ்ந்தாலும் ஹிந்தியை விட்டு மற்ற மொழிகளில் எடுக்கப்படும் தேசபக்தி படங்கள் சக்கை அடிவாங்கும் அதே போல் ஓவரா தேசபக்தி கொண்டாடுகிறவர்களும் தமிழில் அர்ஜுன் போன்றவர்கள் திறமை இருந்தும் சோபிக்க முடியாது விஜய்க்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் நடிக்கிறாராம் நடிப்பு அதுவும் ரோ ஆளாம்  கிழக்கு ஆசியாவில் தமிழர்களின் எழுச்சியை சிதைக்கும் கிந்தியர்களின் அமைப்பு .

இதெல்லாம் மினக்கெட்டு தியேட்டரில் போய் பார்க்க முடியாது படம் ஊத்திக்கொண்டு விட்டது என்று விமரிசனத்தில் சொன்னால் காணும் தமிழ் ரொக்கர்ஸ்சில்  கிளியர் கொப்பிக்கு  வெயிட் பண்ணவேண்டியதுதான் .

  • கருத்துக்கள உறவுகள்
On 17/4/2022 at 15:19, கிருபன் said:

குழந்தைகளை அனுமதிக்க பல கொலைக் காட்சிகளை சென்ஸார் பண்ணியிருந்தனர். யார் செத்தார்கள் என்றே தெரியவில்லை! 

இப்போது நெற்ஃபிளிக்ஸில் வந்துள்ளது. சென்ஸாரால் திரையில் தவறவிட்ட கொலைகள், கொடூரமான காட்சிகள் எல்லாவற்றையும் பார்க்கக்கூடியதாக இருந்தது!

ஒரு விழல்ப்படம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.