Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருங் கடலில் உள்ள... ரஷ்ய போர்க்கப்பலை, அழித்துவிட்டதாக... உக்ரைன் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருங்கடலில் உள்ள ரஷ்ய போர்க்கப்பலை அழித்துவிட்டதாக உக்ரைன் அறிவிப்பு

கருங் கடலில் உள்ள... ரஷ்ய போர்க்கப்பலை, அழித்துவிட்டதாக... உக்ரைன் அறிவிப்பு

கருங்கடலை பாதுகாக்கும் நெப்டியூன் ஏவுகணைகள் ரஷ்யக் கப்பலுக்கு மிகக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக உக்ரைன் ஆளுநர் மக்சிம் மார்சசென்கோ தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா 50-வது நாளாக போர் தொடுத்து வருகிறது.

உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் இராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.

மேலும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன.

இந்நிலையில், கருங்கடலில் உள்ள ரஷ்ய போர்க்கப்பலை அழித்துவிட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

எனினும், குறித்த விடயத்தில் ரஷ்யா தொடர்ந்தும் அமைதியாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://athavannews.com/2022/1276544

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யப் போர்க்கப்பல் மூழ்கியது: யுக்ரேன் தாக்கியதா? இந்த பிரம்மாண்ட கப்பலின் பலம் என்ன?

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

Image shows Moskva ship

பட மூலாதாரம்,MAX DELANY/AFP

 

படக்குறிப்பு,

மத்தியத் தரைக்கடலில் சிரியா அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மோஸ்க்வா

புதன்கிழமை ஏற்பட்ட வெடிப்பால் சேதமடைந்த ரஷ்யப் போர்க்கப்பல் ஒன்று கடலில் மூழ்கிவிட்டது என்று ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மோஸ்க்வா என்றப் பெயருள்ள இந்தக் கப்பல் கருங்கடல் பகுதியில் உள்ள ரஷ்யக் கடற்படைக் கப்பல் தொகுப்பின் கொடிதாங்கிக் கப்பல்.

சேதமடைந்த நிலையில் இந்தக் கப்பலை துறைமுகத்துக்கு இழுத்து வந்தபோது கடல் கொந்தளிப்பாக இருந்த காரணத்தால் அது மூழ்கிவிட்டதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் ராணுவ பலத்தின் அடையாளமாகத் திகழ்ந்த இந்தக் கப்பல் யுக்ரேன் மீதான கடற்படைத் தாக்குதலை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தது. 510 பணியாளர்களோடு இயங்கிவந்த கப்பல் இது.

யுக்ரேன் தாக்குதலா?

தங்களுடைய ஏவுகணையே இந்தக் கப்பலைத் தாக்கியதாக யுக்ரேன் கூறுகிறது. ஆனால், தாக்குதல் ஏதும் நடக்கவில்லை என்றும், தீப்பற்றி எரிந்தே கப்பல் மூழ்கியதாகவும் கூறுகிறது ரஷ்யா.

இந்த தீ பரவியதால்தான் கப்பலில் இருந்த வெடிபொருள்கள் வெடித்ததாகவும், உடனடியாக அருகில் இருந்த ரஷ்ய கப்பல்கள் உதவியோடு சேதமடைந்த கப்பலின் பணியாளர்கள் அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாகவும் ரஷ்யா குறிப்பிடுகிறது. மேற்கொண்டு வேறு தகவல்கள் எதையும் ரஷ்யா கூறவில்லை.

"வெடிபொருள்கள் வெடித்ததால் கப்பலின் வெளிக்கட்டமைப்பில் ஏற்பட்ட சேதத்தாலும், கடல் கொந்தளிப்பாலும், துறைமுகத்துக்கு இழுத்துச் செல்லப்படும்போது சமநிலை தவறி கப்பல் மூழ்கியது," என்று ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி அரசு செய்தி நிறுவனமான டாஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

 

line

ஆனால், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நெப்டியூன் ஏவுகணைகளைக் கொண்டு தாங்கள்தான் மோஸ்க்வா கப்பலைத் தாக்கியதாக யுக்ரேன் ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

 

The Moskva missile cruiser. File photo

பட மூலாதாரம்,REUTERS

2014ல் கிரைமியாவை ரஷ்யா பலவந்தமாக இணைந்துக்கொண்ட பிறகு கருங்கடல் பகுதியில் யுக்ரேனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்த நிலையில் இந்த ஏவுகணையை உருவாக்கியது யுக்ரேன். தாக்குதல் நடந்தபோது இந்த கப்பலில் 510 பேர் இருந்திருக்கலாம் என்று மூத்த யுக்ரேன் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தக் கப்பலின் பலம் என்ன?

பிப்ரவரி 24ம் தேதி யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பைத் தொடங்கியபோது கருங்கடலில் உள்ள பாம்புத் தீவில் இருந்த சிறிய யுக்ரேனிய எல்லைப் பாதுகாப்பு வீரர்களை சரணடையுமாறு உத்தரவிட்டது இந்தக் கப்பல்தான். அதற்கு மறுத்து அவர்கள் அனுப்பிய செய்தி பிரபலமாக பேசப்பட்டது நினைவிருக்கலாம்.

சோவியத் யூனியன் காலகட்டத்தில் கட்டப்பட்ட இந்தக் கப்பல் 1980களில் கடற்படைப் பணியில் சேர்ந்தது. யுக்ரேனின் தெற்கத்திய நகரமான மைகோலைவ் நகருக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்தது. கடந்த சில நாள்களில் இந்த நகரம் மிக மோசமான ரஷ்ய குண்டு வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தது.

வழிநடத்தவல்ல ஏவுகணைகளை ஏவும் திறன் படைத்த இந்தக்கப்பல் சிரியாவில் நடந்த மோதலில் ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்டது. சிரியாவில் இருந்த ரஷ்யப் படையினருக்கு கடல் சார்ந்த பாதுகாப்பை இந்தக் கப்பல் வழங்கிவந்ததது.

கப்பல்களைத் தாக்குதல் வல்கன் ஏவுகணைகள் பதினாறும், நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கும் ஆயுதங்களும், நீருக்கடியில் வெடிக்கும் ஆயுதங்களும் இந்தக் கப்பலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தக் கப்பலின் எடை 12,490 டன். யுக்ரேன் தாக்குதலில்தான் இது மூழ்கியது என்பது உண்மையாக இருக்குமானால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எதிரியின் நடவடிக்கையால் மூழ்கடிக்கப்பட்ட மிகப்பெரிய கப்பலாக இது இருக்கும்.

யுக்ரேன் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்யா பெரிய கப்பல் ஒன்றை இழப்பது இது இரண்டாவது முறை.

அசோவ் கடலில் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட யுக்ரேனின் பெர்ட்யான்ஸ்க் துறைமுகத்தில் மார்ச் மாதம் யுக்ரேன் நடத்திய தாக்குதலில் ரஷ்யக் கப்பலான சாரடோவ் அழிக்கப்பட்டது.

 

https://www.bbc.com/tamil/global-61115838

Graphic

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

நேட்டோவின் தத்துப் பிள்ளைதான், உக்ரேன்.
அதுதான்... முதலாவதாக, இருந்து பால் குடிக்குது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க நாசகாரி.. மத்தியதரைக்கடலில் வைத்து அல்குவைடா.. தற்கொலை தாக்குதலுக்கு இலக்காகிய போது அமெரிக்க படையினர் பலர் கொல்லப்பட்டனர். ஆனால் கப்பல் மூழ்கவில்லை.

இந்த 40 வருட பழைய கப்பல்.. குறைந்த ஏவுகணை எதிர்ப்பு திறன் கொண்ட கப்பல்..  மூழ்குவதற்கான தடுப்பு தொழில்நுட்பம் குறைந்த இந்தக் கப்பல் சோவியத் காலப் பழசு என்பதுடன் இது சோவியத் உக்ரைனில் கட்டப்பட்ட ஒன்று. இது தொடர்பான சகல விபரங்களும் உக்ரைனிடம் இருக்க வாய்ப்புள்ளதால்.. அதன் பலவீனம் அறிந்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்குது. அதுவும் ரஷ்சியப் படைகளிடம் உக்ரைன் நாசகாரி படைப்பிரிவு முழுவதுமாக சரணடைந்த செய்தி வந்து கொண்டிருந்த நிலையில்... அதனை மறைக்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்குது.

இதில் முக்கிய விடயம்.. இதில் பணியாற்றிய 510 ரஷ்சிய கடற்படையினரும் பத்திரமாக மீட்கப்பட்ட பின்.. கப்பல் துறைமுகம் ஒன்றுக்கு இழுத்துவரப்படும் நிலையில் கடல் கொந்தளிப்பினால்.. கடல்நீர் உட்புக ஆரம்பித்த நிலையில் கப்பல் மூழ்கி உள்ளது. இந்தக் கப்பல் தாக்குதல் நடத்தப்பட்ட உடன் மூழ்கவில்லை. மேலும். எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

ஆனாலும்.. இந்த இழப்பு ரஷ்சியாவுக்கு நிறையப் பாடங்களைக் கற்றுக்கொடுப்பதோடு.. ரஷ்சியா செய்யும் இந்த யுத்தம்.. ரஷ்சியாவை அதன் எல்லைகளை நேட்டொ விரிவாகத்திடம் இருந்து பாதுகாப்பது அவசியம் என்பதை ரஷ்சியர்கள் உணரச் செய்யும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்திய ஊடகங்கள் சினிமா பாணி செய்தி தலைப்பிடுவதிலும் செய்தி வடிப்பதிலும் வல்லவை..

1. The Moskva didn't itself fire missiles at Ukrainian land targets, but military experts told the BBC that it offered crucial support to other vessels that did.

2.the fire extinguishing systems on board the forty-year-old warship were out of date and inefficient but several writers agree that the development won't change the course of war.

3. The Moskva was the only ship in the fleet which had long-range air defences on board," said Sidharth Kaushal, a sea power expert at the Royal United Services Institute. "While smaller vessels were conducting bombardments of Ukrainian cities, the Moskva was providing them with wide-area air cover."

https://www.bbc.co.uk/news/world-europe-61114843

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

 

தலையங்கம் சூப்பரப்ப..🤣

  • கருத்துக்கள உறவுகள்

 மோஸ்க்வா கப்பல் தாழ்க்கப்படவில்லை. அது பத்திரமாக ரஷ்யாவின் ராட்சத நீர்மூழ்கிக் கப்பலுக்குள் இறக்கி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது! - பூட்டினின் உக்கிரேனிய விஷேட நடவடிக்கையை ஆதரிக்கும் யாழ் கள ஆ(வா)ய்வாளர்கள்😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

 மோஸ்க்வா கப்பல் தாழ்க்கப்படவில்லை. அது பத்திரமாக ரஷ்யாவின் ராட்சத நீர்மூழ்கிக் கப்பலுக்குள் இறக்கி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது! - பூட்டினின் உக்கிரேனிய விஷேட நடவடிக்கையை ஆதரிக்கும் யாழ் கள ஆ(வா)ய்வாளர்கள்😁

கிருபன்

எப்போதும் பிழையான/பக்கச்சார்பான தகவல்களைத்தான் தெரிந்தெடுத்து வாசிப்பீர்களோ ? 

 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கிருபன் said:

 மோஸ்க்வா கப்பல் தாழ்க்கப்படவில்லை. அது பத்திரமாக ரஷ்யாவின் ராட்சத நீர்மூழ்கிக் கப்பலுக்குள் இறக்கி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது! - பூட்டினின் உக்கிரேனிய விஷேட நடவடிக்கையை ஆதரிக்கும் யாழ் கள ஆ(வா)ய்வாளர்கள்😁

நீங்களும் உங்களை போன்றோரும் யாழ்களத்தில் எழுதினால் அல்லது செய்திகளை இணைத்தால் உண்மை செய்திகள்,நிதர்சனமான கருத்துக்கள்.

உங்களைப்போல் மற்றவர்கள் எழுதினால் இராணுவ ஆய்வாளர்கள்,அரசியல் ஆய்வாளர்கள் நக்கல் நளினங்கள்.

"வா வந்து சிரச்சு பார்" என நாகரீகமாக எழுதிய உங்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? 😋

மன்னிக்கவும் நிர்வாகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.