Jump to content

நேர்காணல்: வசீகரன்

Recommended Posts

ஈழத்து இளம் படைப்பாளியான வசீகரன் அண்ணாவுடனான நேர் காணல் யாழ்களதிற்காக அவர் தந்த விசேட செவ்வி.................

gsemultipart65636pq4.jpg

வணக்கம் தமிழ்வானம் அண்ணா (வசீகரன்) அண்ணா பல வேலை பளுவிற்கு மத்தியிலும் எமது அழைப்பர் ஏற்று வந்ததிற்கு டைகர்வானொலி மற்றும் டைகர்குடும்பத்தின் சார்பாக வணக்கத்துடனான நன்றிகள்..

பேட்டிக்கு செல்வோமா வசீகரன் அண்ணா.............

1)உங்களை பற்றிய சிறிய அறிமுகத்தை எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?அத்துடன் யாழ் இணையதளதிற்கு நீங்க வர ஏதுவா அமைந்த விசயம் என்ன?யாழ் இணையதளத்தை பற்றிய உங்கள் பார்வை என்ன?

வணக்கம் ஐமுனா(உங்கள் நிஐப்பெயர் இதுதானோ :) ) என் இனிய இணையத் தமிழ் வணக்கங்கள். முதலில் யாழ் இணைவலையை உருவாக்கிய திரு.மோகன் அண்ணாவிற்கும் மற்றும் அவருக்கு அன்று தொட்டு இன்றுவரை இந்த நற்பணிக்கு தங்களுடைய ஆத்மார்த்தமான உதவிகளையும், ஒத்துழைப்பையும் வழங்கும் அனைத்து முகமறியா, இணைபிரிய நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

நான் பிறந்தது வளர்ந்து எல்லாம் என் தாய்மண்ணாம் தமிழீழத்தில். இன்று வாழ்வது பனிக்குஞ்சுகள் விளையாடும் மலைநாடாம் நோர்வே மண்ணில். எனது யாழ்இணையப் பெயர் தமிழ்வானம். தாய்தந்தை வைத்த அழகுப்பெயர் வசீகரன் :) . என்ன என் பேரைக் கேட்டாலே சும்மாய் கவருதல்ல.. ஒரு பெரிய குடும்பம் எங்கள் குடும்பம். நல்லதோர் பல்கலைக் கழகம்.! நல்லதோர் வீணைசெய்தே பயன்பெற இந்தப் பூமியில் என் அன்னை பெற்றதால் கணனியோடு கைகோர்த்து...இன்று கலையுலகில் உங்கள் முன் நான்.

யாழ்களத்தில் இணையப் பல காரணங்கள் உண்டு. பாரதியின் கனவைப் பறைசாற்றி நிமிர்ந்து நிற்பது முதன்மைக் காரணம். அத்தோடு பலதரப்பட்ட தமிழ் உறவுகளை தரணி முழுவதும் தேடிப்பிடித்து வந்து ஒர் இணைப்புப் பாலமாக இருக்கின்றது இந்த இணையப்பாலம். இதனால் நான்காம் தமிழாய் இது புதுநடை போடுகின்றது. கணனியின் முன் உட்கார்ந்தால் மௌனம் கலைத்து மனதைத் தமிழால் நனைய வைக்கின்றது. ஊர்ப்புதினங்களை, உலகவிடயங்களை, உன்னதமான அறிவுப் பொக்கிசங்களை அள்ளி வந்து உள்ளங்கையில் அளிக்கிறது யாழ். இப்படி நான் சொல்லிக் கொண்டே இருப்பேன்.

2)நீங்கள் ஒரு கவிஞர் மற்றும் பாடலாசிரியர் என்ற முறையில் நீங்கள் குருவாக யாரை பின்பற்றி இருந்தீர்கள்?உங்கள் குடும்பமே கலைகுடும்பமா அல்லது நீங்கள் மட்டும் இதில் விரும்பி வந்தீர்களா?உங்களை விரும்பி வர விசேசமாக ஏதாவது காரணங்கள் இருந்தால் எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

நான் குருவாக நினைப்பவர்கள் என்று பலபேர் இருக்கிறார்கள். எனது முதற் குருவாக என் தாய் தந்தை அதன் பிறகு கவியுலகென்று பார்த்தால்... பாரதியார் அடுத்து பாரதிதாசன். ஆனால் இன்று எம்மோடு வாழும் கவிஞர்கள் என்று பார்த்தால் தமிழீழத்தில் இருந்து தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை, உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன். தமிழக்தில் இருந்து மூவரை குறிப்பிடுவேன். முதலில் கவிஞர் மு.மேத்தா, கவிப்பேரரசு வைரமுத்து, அண்ணன் அறிவுமதி அவர்கள். இவர்களால் நான் தமிழ்மொழியின் மீது அதீத காதல் கொண்டுள்ளேன்.

என் குடும்பம் ஒரு கலைக்குடும்பம் அல்ல. என் தந்தையார் ஒரு கணித ஆசிரியர். என் தாயார் ஒர் இனிய இல்லத்தரசி. ஆனால் என் தாய்வழியில் பார்த்தால் என் அம்பப்பா ஒர் சிறந்து ஆன்மீக பக்தி உள்ளவர், மிகவும் இனிமையாக தேவாரங்களை எங்கள் கோவிற்கடவைப் பிள்ளையார் திருவிழாக்களின் போது மெய்உருகிப் பாடுவார். அதே போன்றுதான் என் தாய்வழி சகோதரர்கள். எனது தந்தையின் உலகம் எண்ணில் தொடங்கும் எளிமையான உலகம். இன்று என்னுலகோ எண்ணும் எழுத்தோடும் தொடர்கிறது. இதுதான் என் குடும்பத்தினரின் கலையுலகப் பின்னணி.

இந்தக் கலையுலகிற்கு நான் விரும்பியே வந்தேன். எங்கள் தமிழீழ மக்கள் வாழ்க்கையில் ஒரு கலைப்புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது என் வாழ்நாள் இலட்சியம். எங்கள் கலையுலக வானம் ஒர் குறுகிய பாதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதன் விரிதளங்கள் கலைச் சொத்துக்களை பெருக்குவதிலும், ஆவணப்படுத்துவதிலும் பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. தமிழ் மண்ணுக்கே உரிய தமிழ்வாசனையோடு இந்த மேற்குலக நாடுகளில் விதைப்பதற்கு எங்களிடம் என்ன இருக்கிறது..? இதை ஆழமாக சிந்தித்தால் அதில் எஞ்சுவதை இவர்களுக்கு எங்களுடைய படைப்பென்று எப்படி பெருமையோடு வழங்கலாம் சொல்லுங்கள்.?

தாயகத்தில் இருக்கும் போர்ச்சூழலில் இருந்து வெளிவருகின்ற கலைப்படைப்புகள் பற்றிச் நான் இங்கு சொல்லவில்லை. அந்தப் போர்ச்சூழலிலும் அது புத்துணர்ச்சியோடு புதிய பாதை நோக்கிச் செல்கிறது. ஆனால் புலம்பெயர்ந்த உறவுகளின் கலைப்படைப்புகள் என்று பார்ப்பீர்கள் ஆனால் அது இன்னும ஆரோக்கியமான பாதையில் காலடி எடுத்து வைக்கவில்லை. இதை முறியடிப்பதற்கு என்ன செய்யலாம் என்ற எண்ணப்பாடுகளோடுதான் நான் இந்த கலையுலகில் நுழைந்துள்ளேன்.

3)"காதல் மொழி" இறுவெட்டை பற்றிய உங்கள் பார்வை என்ன?இந்த இசை தட்டை நீங்கள் வெளியிட ஏதாவது காரணங்கள் இருகின்றனவா?இந்த இசை தட்டை செய்து முடிக்க உங்களுக்கு எவ்வளவு காலம் சென்றது இதை செய்து முடிக்கும் வரை நீங்கள் பெற்ற சுவையான அநுபவங்களையும் மற்றும் கசப்பான அநுபவங்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

காதல் மொழி இறுவட்டை பற்றிய என்னுடைய பார்வையா..

இது எங்களுடைய இரண்டாவது படைப்பு. இந்த நேரத்தில் என் இனிய இணைய நண்பர் இசையமைப்பாளர் வி.எஸ்.உதயா பற்றி நான் குறிப்பிட வேண்டும். ஏன் என்றால் இசைப்பாடல் உலகில் என் வரிகளுக்கு அங்கிகாரம் அளித்த அதிசயமான மனிதர். இணைய நட்பின் மூலம்தான் எங்கள் கலைப்பயணமே தொடர்வது வேறு கதை அது இங்கே வேண்டாம். உங்கள் கேள்விக்குள் வருகின்றேன்.

இந்தப் படைப்பு எங்களுடைய வெற்றிப் பாதையில் இரண்டாவது படிக்கல். எங்கள் மக்களின் வாழ்வைப் பதிவு செய்வதற்கான ஓர் அடிக்கல் என்று சொல்லலாம். இதில் எட்டுப் பாடல்கள் எட்டுவிதமான சுழல்நிலைகளில் வருகிறது. நட்போடு பழகிய ஒரு தோழனும் தோழியும் காதல் உணர்வினால் தூண்டப்படும் போது தோழி முதலில் விண்ணப்பம் அனுப்புவதான சூழ்நிலை.

அடுத்து எத்தனையோ அம்மாப் பாடல்கள் வெளிவந்துள்ளது இருந்த போதிலும் புலம்பெயர் வாழ்வினில் எங்களுடைய ஈழத்துப் பிள்ளைகள் தாய்மாரைப் பற்றிப் பாடுவார்கள் என்ற சூழலைப் பிரதிபலிக்க ஒரு பாடல்.

பெண்கள் என்றுமே எங்கள் கண்கள் :) . அல்லவா அந்தப் பெண்கள் இல்லாத உலகத்தில் வாழ பேய்கூட விரும்பாதே என்ற வித்தியாசமான கண்ணோட்டத்தில். நான் கனடா நாட்டிற்கு சென்றிருந்த போது எங்களுடைய இளைஞர்கள் யுவதிகள் எப்படி நட்புப் பாரட்டுகிறார்கள். அல்லது காதலை வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதைக் குறிப்பிடும் பாடல்.

காதல் மொழியை பேசுங்கள் காதலை வாழ்த்துங்கள் காதலை நல்ல வயலில் விதையுங்கள் என்பதைச் சொல்லும் பாடல். காதல் மொழி இறுவட்டின் கருவிற்கேற்ற பாடல்.

நாங்கள் இந்த மேற்குலக நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வர பெரிய உதவியும பெரிய உபத்திரமும் கொடுத்த ஏஐன்சிமார்களுக்கான பாடல். இது நகைச்சுவையாகவும் இருக்கும் ஆனால் உள்மன ஆழத்தில் உங்கள் வெளிநாட்டுப் பயன அனுபவத்தை ஞாபகப்படுத்து படியாக அமைந்திருக்கும்.

எங்கள் மத்தியில் வளர்ந்து வரும் குழந்தைகளுக்கான பிறந்தநாள் வாழ்த்துப்பாடல். இதை நீங்கள் உங்கள் பிறந்தநாள் விழாக்களில் பயன்படுத்த என விசேடமாக உருவாக்கப்பட்டது. எத்தனை நாளைக்குத்தான் சினிமாப் பாடல்களை மட்டும் பிள்ளைகளுக்குப் போட்டு பிறந்தநாளைக் கொண்டாடுவீர்கள்..அதற்காக ஒரு சிறிய முயற்சி. மிக விரைவில் யாழில் கேட்கலாம்.

அடுத்து சுனாமி பற்றிய பாடல். இந்த ரணத்தை இதயங்கள் எப்படித்தான் தாங்கியதோ அது ஏற்படுத்திய வலி எத்தனை பிறப்பு எடுத்தாலும் மாறது. இதைப் பதிவுசெய்வதற்காகவே நான் சுனாமி ஏற்படுத்திய அனர்த்தச் செய்திகளை உள்வாங்கிக் கொண்டே உருகி எழுத உதயா அண்ணன் அவர்களும் தன் உணர்வுகளையும் உருக்கி இசையமைத்திருக்கிறார்.

என் தாயகத்தைவிட்டு வந்த வலியை..எங்கள் உறவுகள்கடல் கடந்து தமிழகத்திற்கு செல்லும் அவலப் பயனத்தை. நான் அனுபவித்தை மணித்தியாளங்களை ஞாபக அறைகளில் இருந் மீட்டிவந்து மனதில் இருத்தி மலர வைத்திருக்கிறேன். நீங்களும் கேட்கத்தானே போகிறீர்கள். கண்டிப்பாக கைக்குட்டை பாவிப்பிர்கள்..ஏன் என்றால் கண்ணீர் வழியும் தொண்டை கட்டும். இதில் இன்று கனடாவில் வாழும் உண்மையாக காதலித்த ஒரு அண்ணன் ஒரு அக்காவின் காதல் அனுபவங்களைச் சுமந்து வரும் பாடல்.

இந்த இறுவட்டை உருவாக்க கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் எடுத்திருக்கும். நான் இங்கிருந்த வண்ணம் பாடல்களை எழுதி மின்னஞ்சலில் அனுப்ப, உதயா அண்ணன் அங்கிருந்தவாறு மெட்டுப் போடுவார். பிறகு நான் தொலைபேசியில் அழைக்கும் போது பாடிக் காட்டுவார். இப்படியாகத்தான் எங்களுடைய எல்லாப் படைப்புகளையும் நாங்கள் உருவாக்குகின்றோம். இது கணனிக் காலம் பாருங்கோ இது எங்களுக் பெரிய உதவியாகவும் உள்ளங்கையில் உலகம் என்றுதான் சொல்வேன்.

எனது சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டால் அதை எழுதி முடிக்க என் கைகள் வலிக்கும். வேறு ஒரு சந்தர்பத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

4)"காதல் மொழி" இசைதட்டு வெளியாகி உள்ளது இந்த சந்தர்பத்தில் இந்த இறுவெட்டை தற்போது எங்கே பெற்று கொள்ளமுடியும் என்பதை எங்கள் நேஎயர்களிற்கு சொல்வதுடன் உங்களுடன் சேர்ந்து உழைத்த அத்தனை கலைஞர்களிற்கும் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

காதல் மொழி இறுவட்டை எந்த நாடுகளில் எங்கு பெற்றுக் கொள்ளலாம் என்பது பற்றிய விபரங்கள். எனது நிறுவனமான வி.என்.மியூசிக்றீம்ஸ் இணையத் தளத்தில் குறிப்பிட்டுள்ளேன். அதை மீட்டும் இங்கும் இணைக்கின்றேன்.

http://www.vnmusicdreams.com/page.html?lang=eng&catid=8

www.vnmusicdreams.com

தற்பொழுது எங்களது இறுவட்டு கிடைக்கும் நாடுகள். நோர்வே, பிரித்தாணியா, பிரான்ஸ், சுவிஸ் இல் பாசல் நகரில் மட்டும், மற்றும் கனடா ஆகிய நாடுகளில் கிடைக்கும். இலங்கையிலும், இந்தியாவிலும், தமிழீழத்தில் வெளியீடு செய்து வைக்கவும் எண்ணியுள்ளேன். ஆனால் இப் உள்ள சூழ்நிலை எப்படி உதவும் என்று தெரியவில்லை. ஆனால் இவை தவிர்ந்த ஏனைய நாடுகளில் வாழும் எங்கள் உறவுகள் யாரவது அழைத்து இந்த இறுவட்டுக்களை வெளியீடுசெய்ய உதவுவார்கள் என்றால் நான் தயாராக இருக்கின்றேன்.

என் பாடல் வரிகளுக்கு தனது உன்னதமான இசைப்பணியை செய்திருப்பவர் வி.எஸ்.உதயா அண்ணாவும், இதில் இணைந்து பங்கு பற்றியிருக்கும் ஏனைய கலைஞர்கள் ஒலிப்பதிவில் திரு.கிருபாகரன், சாமிநாதன்(இவர்கள் இருவரும் தமிழக உறவுகள்).

பாடல்களுக்கான தங்களுடைய இனிமையான குரல்களை வழங்கியவர்கள் மதுபாலகிருஷ்ணன், காஷ்மிரா, சாம்.பி.கீர்த்தன், சுதாஸ்(அறிமுகம், ஈழத்துப் பாடகர் நோர்வே), யக்சன் பொஸ்கோ(அறிமுகம் ஈழத்துப் பாடகர் லண்டன்), மேகா (அறிமுகம் தமிழகத்தின் புதியவரவு...தற்போது ஊ ல லா இசைநிகழ்வில் பங்கு பற்றியிருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் நடுவராக பணியாற்றுகிறார். இவர் பாவநாசம் சிவன் அவருடைய பேர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.)

உன்னிக்கிருஷ்ணன், வி.எஸ்.உதயா(முதன் முதலில் பாடியிருக்கிறார். பாடகராகவும் அறிமுகம்), கிருஷ்ணராஐ;, காஞ்சனா, மற்றும் பிரியங்கா என்னும் குழந்தைப் பாடகி.

இவர்கள் அனைவருக்கும் என்றும் நான் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டே இருப்பேன். உங்கள் கலைப்பயனம் சிறக்க வாழ்த்துகின்றேன். அவர்கள் அனைவரைப் பற்றியும் நான் இறுவட்டிலும் குறிப்பட்டையில் விரிவாகச் சொல்லியிருக்கின்றேன்.

5)ஈழத்து படைபாளி என்ற ரீதியில் புலத்தில் வாழும் ஈழத்து தமிழ மக்கள் உங்கள் படைபுகளிற்கு தரும் ஆதரவு பற்றியும் தமிழ் ஊடகங்கள் உங்களிற்கு வழங்கும் ஆதரவு பற்றியும் எங்களுக்கு சொல்ல முடியுமா?மக்களை கவர்ந்திழுக்க ஏதாவது புதிய முயற்சிகளிள் இறங்கி உள்ளீர்களா அதை பற்றியும் அறிய தரமுடியுமா?

என் தாய்த் தமிழின் ஈழத்து உறவுகள் தந்த, தருகின்ற ஒத்துழைப்பு மிகவும் பாரட்டக்கூடியது. எங்களுடைய மக்களின் வாழ்க்கையில் இருந்துதான் என் படைப்புகளின் ஆரம்பம். அந்த வகையில் இன்று ஈழத்து உறவுகள் எங்கு வாழ்ந்தாலும் எங்களுடைய படைப்புகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். காதல் கடிதம் இறுவட்டில் தொடங்கி என் மீதும் வி.எஸ்.உதயா அண்ணா மீதும் ஒரு புத்துணர்ச்சியான பார்வை விழுந்துள்ளது. பரவாயில்லை இவங்கள் இரண்டு பேரும் ஏதோ புதுமையாக செய்யிறாங்கள் என்ற கருத்து இருக்கு. இதனால் எங்கள் இருவருக்கும் பெரிய பொறுப்பும் இருக்கு.!

சினிமாப் பாடலில் இருந்து கொஞ்சம் விலகியே எங்கள் கலைப்பயணம் தொடர்கிறது. எங்கள் படைப்புக்கள் ஒவ்வொன்றும் எங்களை ஒரு கணம் திரும்பிப் பார்ப்பதற்காக மட்டுமில்லை! அவர்கள் வாழ்நாள் முழுவது கேட்டு கேட்டு மகிழ்ந்து. தங்கள் பிள்ளைகளுக்கும் இசைப்பாடல் மூலமாக தமிழை ஊட்ட வேண்டும் என்பது என் பெரிய ஆசை என்றுகூடச் சொல்லலாம்.

இந்தச் சின்னச் சின்ன முயற்சிகளால் எங்கள் வாழ்வின் விழுமியங்களைத் தேடி எடுத்து நம் தமிழ் மக்களுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கலாம். காலப் போக்கில் இந்தப் படைப்புகள் புலம்பெயர் மக்களின் கலைப் பொக்கிசங்கள் ஆகவும் வழியமைத்துக் கொடுக்குமல்லவா. ஆனால் இன்னும் எங்கள் மக்கள் எங்கள் கலைஞர்களை உற்சாகப் படுத்துவதில் விழிப்புணர்ச்சி கொள்ளவில்லை என்பது என் ஆழமான கருத்து. இந்த வெளிநாடுகளில் உள்ள மக்கள் அந்த மக்களின் கலைப்படைப்புகளை எப்படி மதிக்கின்றார்களோ..கலைஞர்களை பொருளாதார ரீதியாகவும் எப்படி ஊக்கப் படுத்துகிறார்களோ அதே மனோநிலை எங்கள மக்களுக்கும் மிகவிரைவில் வரவேண்டும். அப்போது எங்கள் கலைப் படைப்புக்கள் செழிப்படையும்.

தமிழ் ஊடகங்களை பொறுத்தவரையில் எங்களை எங்கள் கலைப் படைப்புகளைக் காவிச் செல்லும் காற்றலை வாகனங்கள். எங்கள முகவரிக்கு உரம் போட்ட உத்தம புருசர்கள் என்றுதான் சொல்லவேண்டும். நான் ஒன்று இரண்டு குறிப்பிட்டுக் கூறமுடியாது ஏனென்றால் ஒட்டுமொத்தமாக இன்று எல்லா வானொலிகள் தொலைகாட்சிகள் என்றுமே எங்களோடு இணைந்திருக்கிறார்கள். மக்கள் மனங்களில் நாங்கள் இடம்பிடிக்க எங்களுக்கு உயிரூட்டிகள். விசேடமாக நான் இணையப் பத்திரிகைள் சஞ்சிகைகளையும் குறிப்பிட வேண்டும். அந்த வகையில தமிழ்நாதமும், யாழ் இணையமும் உன்னதமான உதவிகளை எங்களுக்குச் செய்திருக்கின்றன.

மக்களைக் கவாந்திழுப்பதற்கான புதியமுயற்சிகள் பற்றி இப்போது நான் குறிப்பிட முடியாது. அது வெற்றியளிக்கும் போது இன்னுமொரு தருணத்தில் குறிப்பிடுகின்றேன்.

வியாபார உத்திகளை வளரும் நேரத்தில் குறிப்பிடுவதும் அழகல்ல வளர்ந்த பின்னர் பார்ப்போம். இந்த யாழ் இணைய மூலம் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்துவதற்கான சில எண்ணங்கள் என்னிடம் உள்ளது. நேரம் வரும்போது கூறுகின்றேன்..

6)காதல் மொழி இசை தட்டில் வந்த "பெண்கள் இல்லாத உலகில்" பாடல் மிகவும் இன்றைய இளம் சமுதாயத்தை கவர்திழுக்க கூடிய ஒரு பாடல் அத்துடன் ஆங்கில வசனங்களுடன் வந்து செல்கின்றன இவ்வாறான படைப்புகளை ஈழத்து கலைஞர்கள் படைப்பதன் மூலம் இளம் சமுதாயத்தின் மத்தியில் நல்லதொரு இடத்தை பிடிபார்கள் என்பது என்னுடைய சிந்தனை இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?அத்துடன் இவ்பாடலில் ஆங்கில பிரயோகங்கள் வந்ததால சில விமர்சங்களையும் நீங்கள் ஏற்று இருக்கலாம் என்று நினைகிறேன் இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

நீங்கள் சொல்லுகின்ற அதே கவர்ந்திழுக்கக் கூடிய அந்த நுட்ப சிந்தனையில் உதித்த பாடல் தான் இது :) அதே இளம் சமுதாயத்தை வேறு திசைகளில் செல்லாதிருக்க, அவர்களுக்குப் பிடித்த இசைவாள் உறையில் எங்கள் வாழ்வின் தருணங்களை உருகி ஊற்றி சிறந்த இசைவாளாக அவர்கள் விளையாடக் கொடுக்கும் முயற்சிதான் இது. உங்கள் சிந்தனைக்கும் கிடைத்த வெற்றிதான் இந்தப் பாடலின் வெற்றியும் கூட. ஆங்கிலப் பிரயோகம் என்பது எனக்குப் பிடிக்காத ஒன்று..

என் பாடல்களில் ஆங்கிலம் கலந்து எழுதக்கூடாது என்ற கொள்கையுடையவன் நான். ஆனால் நான் லண்டன் சென்றிருந்த போது ஒரு இளைஞன் கேட்டான் அண்ணா உங்கள் பாடல்கள் அருமை ஏன் நீங்கள் அடுத்த அல்பத்தில் எங்களுடைய விருப்பத்திற்கிணங்கவும் ஒரு பாடல் செய்யக்கூடாது என்று அவனைப் போன்ற பதின்மப் பருவத்து நம் பிள்ளைகளை இசையால் பத்தியப்படுத்தவே அந்தப் பாடல். இங்கே நோர்வேயில் வாழ்கின் என் இனிய நண்பன் சுதாஸ் அம்மாவைப் பற்றி தன்னுடைய உணர்வுகளையும் ஆங்கிலத்தில் எழுதி தானனே பாடியும் இருக்கிறார். அம்மாப் பாடலின் இடையிசையின் போது அதைக் கவனிக்கலாம்.

அது தவறு என்றும் நான் நினைக்கவில்லை. ஏன் என்றால் அவர்கள் வளர்ந்து வருவது வீட்டிலே தமிழும் வெளியிலே பலதரப்பட்ட புதிய மொழிச்சூழல். அவர்களின் கைகளைப் பிடித்து இரு தண்டவாளங்கள் போல் இரு மொழிகளையும் பூட்டி ஓட்டிச்செல்ல வேண்டியது எங்களின் கடமையென்று உணர்கிறேன். இந்தப் பாடலுக்கான பெரியவர்களின் விமர்சனங்களை இன்முகத்தோடு வரவேற்கிறேன். அதிலிருந்தும் சிந்திக்கின்றேன். விமர்சனங்கள் என்னை புதுப்பிக்கிறது.

7)காதல் கடிதம் என்ற இறுவட்டை 2.08.2003 ஓஸ்லோவில் வெளியிட்டு இருந்தீர்கள் பாரியளவு வெற்றியை பெற்றது என்று நினைகிறேன் எல்லா பாடல்களும் நன்றாகவே இருந்தன அதிலும் யாழ்தேவி பாடல் மிகவும் நன்றாக இருந்தது,காதல்கடிதம் பாடலிறக்கா திரைகாவியமாக்கபட்டது என்று அறிந்தேன் இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?காதல் கடிதம் பற்றி நீங்கள் கூற விருப்புவது?

நன்றிகள். யாழ்தேவிப் பாடல் எங்கள் மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துவிட்டு ஒன்று. 1986 முன்பாக என்று நினைக்கின்றேன். அப்போதிருந்த வாழ்க்கை முறை இன்று இல்லை. அந்த ரயில் பயனத்தை அனுபவித்தவர்களுக்கு அதன் அர்த்தங்கள் புரியும். ஆனால் இதையொரு புதிய உத்தியாக நாங்கள் திட்டமிட்டு உருவாக்கினோம்.

ஒரு பிரயாணத்தை மக்களின் கண்முன் காதுவழியாகக் கொண்டு செல்லும் முறையை முயற்சி செய்து பார்த்தோம். அது மிகுந்த வெற்றி பெற்றுவிட்டது. அதே பாணியிலும் எங்கள் படைப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இது நாங்கள் உருவாக்கிய புதிய முறை வருங்காலங்களில் பிரபல்யமாகலாம். ஒரு பாடல் என்றால் தொகையறா, அனுபல்லவி பல்லவி, இரண்டு அல்லது மூன்று என்ற சரணங்கள் என்று பழக்கப்பட்ட விதிமுறையை மீறியிருக்கின்றோம். நவீனம் என்பது மரபைச் சீரழிக்காமல் மீறுவதும் அதில் இருந்து ஒரு புதியவடிவத்தைக் கொடுப்பதும் தானே இசைக்கும் இனிமை. கவிக்கம் அழகு! இப்போது உள்ள புதுக்கவிதைகள் மாதிரி.

காதல் கடிதம்: ஒரு தொலைபேசி உரையாடல் வாயிலாக உருவான நட்பின் மூலம் உருவாக்கப்பட்ட ஓர் இசைத்தொகுப்பு திரைப்படமாவதை எண்ணி எல்லோரும் அதிசயிக்கும் வண்ணம் இத்திரைப் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் காதல் கடிதம் திரைப்பட விழாவின் வெற்றிக்கு பின் போட்டி போட்டுக் கொண்டு தமிழ் சினிமா தயாரிப்பில் ஈடுபடப்போவது நிச்சயமாகும்.

உங்கள் வாழ்வை திரையில் பார்த்து மகிழ காத்திருங்கள். காதுகளுக்கு விருந்து படைத்தோம் உங்கள் கண்களுக்கும் விருந்து படைக்க மிக விரைவில் வருவோம்! என்கிறார்கள் காதல் கடிதம் திரைப்படக் குழுவினர்.

இத்திரைப்படத்தை தயாரிக்க பெரிய உதவி வழங்கிய தயாரிப்பாளரின் பதிலுக்காக காத்திருக்கின்றோம். திரைப்படம் திரையிடுவதற்கான தயார் நிலையில் உள்ளது. மிக விரைவில் என எதிர்பார்க்கின்றேன். இதை சந்தைப்படுத்துவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. தடங்கல்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை என்று பாடத் தோன்றுகிறது எனக்கு.. :)

8)கடந்த கிழமை யாழ் இணையதளத்தில் ஒருவர் ஈழத்துபடைப்பாளிகளிற்கு இங்குள்ள கள உறவுகள் உற்சாகம் அளிபதில்லை என்று குறிபிட்டு இருந்தார் இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?அத்துடன் இங்கு அதாவது யாழ் இணையத்தில் வளர்ந்து வரும் கலைஞர்களிற்கு அல்லது படைபாளிகளிற்கு இவர்கள் உற்சாகம் வழங்குவதில்லை என்பது மனவருத்தமான விடயம் அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

அவருடைய கருத்து அவருடைய அனுபவத்தில் மலர்ந்ததாக இருக்கலாம். அது உண்மையாகக் கூட இருக்கலாம். ஏன் ஆரம்பத்தில் எனது படைப்புகள் கூட கவனிக்கப்படாமல் தான் இருந்தது. சரி இவங்கள் கவனிக்கிறாங்க்ள் இல்லை எண்டு போட்டுத்தான் நான் பாடல்களை இணைத்தேன். பாடல்களைக் கேட்டாவது நம் உறவுகள் கருத்துச் சொல்கிறார்களா என்று பரிசோதித்துப் பார்த்தேன். அது மிகவும் நன்றாகப் வேலைசெய்துவிட்டது.

உங்களுக்கு உண்மையைச் சொன்னால் என்ன... எங்கடை ஆட்கள சிலவேளை உசுப்பி விடவேணும் பாருங்கோ. இல்லையெண்டால் சரியான கஸ்டம் பாருங்கோ என்றுதான் சொல்வேன். நான் இங்கு கவனிக்கப் பட்டு உங்களுக்கு இந்த செவ்வியை வழங்குவதற்கு என் பாடல்கள் தான் காரணம்.

அந்த ரீதியில் அவருடைய கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் அதுதான் சரியென்று என்னால் சொல்லமுடியாது. யாழ்இணைய நிர்வாகிகளுக்குத்தான் இதன் உண்மை தெரியும். ஆனால் பொதுவாக நான் இங்குள் படைப்புகளை உற்று நோக்கும் போது அப்படி அவருடைய கருத்துப பிழையாக இருக்குமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. என்ன குழப்புகிறேனா..குழப்பத்தில் தானே நல்ல தெளிவு வரும். மனது இலகுவாகும்.

ஆனால் என்னைப் போன்ற எத்தனை கலைஞர்கள் உற்சாகப்படுத்தப் படுவதற்கு என்னுடைய இந்தச் செவ்வியையும் உதாரணமாகக் கூறாலாம். யாழ் இணையத்திற்கு நன்றிகள்.

9)ஈழத்து படைபாளி என்று கருதும் இடத்தில் இரு தரபட்ட படைபாளிகள் அதாவது ஒரு பிரிவினர் மறைந்த படைபாளிகள் மற்றவர்கள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் படைபாளிகள் மறைந்த படைபாளிகளிகளை கெளரவிக்க வேண்டும் இல்லை என்று சொல்லவில்லை ஆனாலும் தொடர்ந்து அவர்களை பற்றி எழுதியும் அவர்களை பற்றி செய்திருந்தால் நல்லது அவர்களை பற்றி புகழ்பாடுவது அதிகம் தவிர தற்போது இருக்கும் கலைஞர்களை பேசுவது குறைவு யாழ் இணையதளத்திலும் இந்த குறை காணபடுகிறது இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?அத்துடன் மறைந்த கலைஞர்களை இளையசமூகத்தில் இருப்பவர்களிடம் திணிப்பதால் எதுவித பயனுமில்லை என்பது என் பார்வை இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

ஈழத்துப் படைப்பாளிகளை, அல்லது கலைஞர்களைக் கௌரவிப்பதில் என்றைக்குமே நான் பின்நிற்பவன் அல்ல. அந்த வகையில் மறைந்த எங்கள் கலைஞர்களை அவர்கள் பிறந்த தினத்தில் அல்லது அவர்களுடைய மறைந்த நாட்களில் அவர்களை நினைவு கூர்ந்து அவர்களை பற்றிப் பேசுவதும், வாழ்த்துவதும், பாரட்டுவதும் மனித பண்புள்ள நல்ல மக்களுக்கு என்றுமே அழகு. ஆனால் நெடுக அவர்களைப் பற்றியே புகழ்பாட வேண்டிய தேவையில்லை, அவசியமும் இல்லை. கலைஞர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே பாராட்ட வேண்டும், வாழ்த்தவேண்டும் அவர்களை என்றுமே மனம் சலிக்காது உற்சாகப் படுத்த வேண்டும்.

எங்கள் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஒரு குறைபாடு என்னவென்றால் கலைஞனுடைய படைப்புகளைப் பற்றிப் பேசாது. அவர் தனிபட்ட வாழ்க்கை பற்றியும், அவருடைய தவறான அனுகுமுறைகள் பற்றியே வசைபாடுவது. இதற்காகவே அவர்களை எடுத்த எடுப்பிலேயே ஒதுக்கித்தள்ளுவது. இதனால் எத்தனை திறமையுள்ள பல முதிய கலைஞர்களும், புதிய கலைஞர்கள் வெளிச்சத்திற்கு வராமல் தத்தளிக்கிறார்கள்.

இந்த வசைபாடுதல், குறைகூறுதல் போன்ற கிழ்த்தனமான பழக்கத்தில் இருந்து எங்கள் புதிய சமுதாயம் விடுபட்டு, அனைத்துக் கலைஞர்களையும ஊக்குவித்து ஆரோக்கியமான பாதையில் அழைத்துச் செல்லவேண்டும். திணிப்பு என்பது எனக்கு என்றுமே பிடிக்காத விடயம். அது எந்தத் துறை சார்ந்ததோ, கல்வி சார்ந்ததோ..எதுவானாலும் களையப்படவேண்டிய ஒன்று.

10)அடுத்த ஒரு குறையாக நம் படைபாளிகளிடம் காணுவது மக்களின் ரசணை மட்டம் காலதிற்கு காலம் மாறி வருகிறது,உங்களுக்கே தெரியும் வேகமான இந்த உலகில் காலதிற்கேற்ப சூழலிற்கு ஏற்ப மக்களின் ரசணை மட்டம் மாறிவருகிறது இதை எங்கள் படைபாளிகள் கண்டு கொள்வதில்லை இதனால் தான் தென்னிந்திய படைப்புகளுடன் எமது படைப்புகள் போட்டி போடுவதில் சிரமமாக இருகிறது,ஆனால் உங்கள் படைப்புகள் சற்று வித்தியாசமானது என்பது என்பார்வை இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

நீங்கள் மிகவும் அழமான கேள்விகளை என்னிடம் கேட்பது எனக்கு மகிழ்வைத் தருகிறது. நியைக் கேள்விகளை ஒரு கேள்விக்குள் மறைத்து தலைப்பின்னல் போல் பின்னிப் பின்னிக் கேட்கின்றீர்கள். நீங்கள் குறிப்பிடுவது முற்றிலும் உண்மை. பழையன கழிதலும் புதியன புகுதலும் நல்லதே என்று சொல்லுவார்கள்.

ஆனால் பழமையிலேயே ஊறிக் கிடப்பதையே விரும்புவார்கள். மக்களின் ரசணை மாற்றத்தை உணராத அல்லது உள்வாங்காத எந்தக் கலைஞனும் பேசப்படுவதற்கான வாய்ப்பே இல்லை. கலை வந்து மக்களுக்காகவே ஒழிய கலைக்காக மக்களில்லையே என்ற சூட்சுமத்தை, முதலில் நாங்கள் புரிந்துகொள்ள மறுக்கின்றோம்.

இந்த இதயந்திரமயமான வாழ்க்கையின் வேகத்தைப் புரிந்து கொண்டு அதன் வேகத்தோடு தமிழகக் கலைஞர்கள் ஓடுவதால் தான் அவர்களை எண்ணி நாங்கள் வியக்கின்றோம். அவர்களின் படைப்புகளிலேயே இன்னும் தங்கியிருக்கின்றோம்.

அண்மையில் வெளிவந்து பெரிய அலையை உருவாக்கிய சிவாஐp திரைப்படத்தை எடுத்துக் கொள்வோம். ரஐpனிக்காந்தை இந்தக் கால ரசனை மாற்றத்திற்கேற்ப இயக்குனர் சங்கர் அவர் வெளிக்கொண்டு வந்தபடியால்தான் நாங்கள் இன்னும் அவரை ரசிக்கின்றோம். அவர் ஒப்பனைகள் ஏதும் இல்லாத கதாநாயகனாக நடித்தால் அந்தக் கதாநாயகியோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவருக்கு அப்பா போல்தான் தெரிவார். அதை நாங்கள் எப்படி உள்வாங்க முடியும்.

உண்மையிலேயே அவர் அப்பா போல்த்தான் இருக்கிறார் என்பது வேறு கதை. காலம் செய்த கலைக் கோலங்கள் என்றும் இதைச் சொல்லலாம். அது ரஐpனிக்காந் என்பவரின் தனித்திறமையும்கூட.

இதே போலத்தான் எங்களின் படைப்பாளர்களும் மக்களின் ரசனை மாற்றத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப படைப்புகளை உருவாக்க வேண்டும். இல்லையேல் ஓரு சிறிய வட்டத்திற்குள் தான் அவர்களின் கலைப்படைப்புச் சுற்றும்.

அவர்களோடு போட்டி போட எங்களைப் பொறுத்த வரை என்ன உண்டு...? இத்தனை வருடமும் எங்களால் ஒரு சினிமாத்துறையை கட்டியெழுப்பி எத்தனை படங்களைத் தயாரிக்க முடிந்தது. சினிமா என்ற அற்புதமான ஊடகத்தை கையில் எடுத்து அழகாக வைத்திருக்கின்றோம். அதை அழகாக இன்னும் பயன்படுத்த தொடங்கவே இல்லையே. நான் அறிந்த வகையில் ஒரு பத்துப் படங்கள் தான் கொஞ்சம் சினிமாப் படம என்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு வெளிவந்திருக்கும்.

நாங்கள் தமிழ்ச்சினிமா, பற்றியும் தமிழக உறவுகளைப் பற்றியும் விமர்சிக்கவும், அவர்களைக் குறைகூறிக் கொண்டு அவர்களிடமே மகிழ்கலைக்காக தவம் கிடக்கின்றோம். அவர்களை அரவணைத்துக் கொண்டு அவர்களிடம் இருந்து ஏதாவது கற்றுக் கொள்ள முயல்கிறோமா..? அல்லது அதற்கான முயற்சியில் இதயசுத்தியோடுதான் இணைந்திருக்கிறோமா..? எங்கே ஓசியாப் படம் வரும் இறக்கிப் பார்க்கலாம். அல்லது அவர்களின் படைப்புகளில் இருந்து திருட்டுத்தனமாக உழைக்கலாம் என்றுதானே பார்க்கிறோம்.

என்னைப் பொறுத்த மட்டில் அவர்களோடு நாங்கள் போய் போட்டி போடுவது என்ற ஒரு எண்ணமே தவறானது. அதற்கு முதல் நாங்கள் எங்களை அதிவேகத்தோடு சினிமாக்களைத் தயாரிக்க வேண்டும். அதற்கு மக்கள் மத்தியில் பலவிதமான வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தப்படவேண்டும்..

11)இரண்டு நாளைக்கு முன் யாழ்கள உறுப்பினர் சன்டீவியை நம் மக்கள் அதிகமாக பார்கிறார்கள் என்று விசனபட்டிருந்தார் ஆனால் அதில் விசனபட எதுவுமில்லை அவர்கள் கால மாற்றதிற்கேற்ப நிகழ்ச்சிகளை வழங்கிறார்கள் எமது ஊடகங்கள் இன்னும் 1960,1970 காலபகுதியில் தாங்கள் வாழ்ந்த யாழ்பாணத்து முறையில் நிகழ்ச்சிகளை சித்தரித்து கொண்டிருகிறார்கள்.இந்த பாணியை அந்த காலபகுதியில் வாழ்ந்தவர்கல் ரசிபார்கள் தவிர தற்போது இளம்சமூகம் இதை பார்வை இட விரும்பமாட்டார்கள்,இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

சன் தொலைக்காட்சியை அதிகம் பார்ப்பதும், பார்க்காமல் விடுவதும் ஒவ்வொரு தனிப்பட்ட உறவுகளின் ரசனையைப் பொறுத்தது. எங்களுடைய மக்கள் ஒவ்வொருவரும் பொழுது போக்காக தங்கள் நேரங்களைச் செலவழிப்பதற்கு துடிப்பது ஒன்றும் தப்பில்லை.

ஏன் என்றால் இந்த கணனியுகத்தில் அவர்களுக்கு நிறைய ஓய்வு தேவை அதைப் போக்க இன்று அவர்கள் வீடுகளை ஆக்கிரமித்திருப்பது தொலைக்காட்சிகள். அதிலும் இந்த தமிழகத்தில் இருந்து வரும் அனைத்துத் தொலைக்காட்சிகளும் தமிழக மக்கள் ரசனையையும், அத்தோடு எங்கள் மக்கள் ரசனையும் சேர்த்துத்தான் சீரழிக்கிறது. ஆனால் இந்தத் தொலைக்காட்சிகளில் வருகின்ற மனிதவளர்ச்சிக்கு ஆரோக்கியம் தருகிற நிகழ்ச்சிகளைத் தெரிவுசெய்து பார்க்கலாம்.

ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் ஒரு தனித்தன்மையுண்டு. அதன் வளர்ச்சியும் மக்களைக் கவரும் வகையில் நிகழ்ச்சிகளை தயாரிப்பதில் அவர்கள் முன்னிலையில் இருக்கின்றார்கள். ஆனால் தமிழகத்தில் இருந்த ஒளிபரப்படுகின்ற மக்கள் தொலைக்காட்சி கொஞ்சம் வேறுபட்டு நிற்கிறது. இது தரிசனம் தொலைக்காட்சி வாயிலாகப் பார்க்க கிடைப்பது பெருமகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் மத்தியிலும் எத்தனை தொலைக்காட்சிகள் உள்ள அவற்றுக் முன்னுரிமை கொடுக்கவேண்டியது எங்கள் கடமை. எங்கள் தொலைக்காட்சிகளை ஊக்குவித்து வளர்க்க வேண்டியது எங்களுடைய தேவையும்கூட.

ஆனால் சன் தொலைக்காட்சியில் எனக்குப் பிடித்த நான் விரும்ப் பார்க்கும் ஒரே நிகழ்ச்சி அதாங்க அசத்தப் போவது யாரு.! உண்மையிலேயே நான் இதற்காக சன்தொலைக்காட்சி குழுமத்தை வாழ்த்துகிறேன். இந்த நிகழ்வை எங்கள் மக்கள் தாரளமாக விரும்பிப் பார்க்கலாம் என்பது என் கருத்து.

எங்கள் தொலைக்காட்சிகளில் முந்திவந்த படலைக்குப் படலை. ரி.வி.ஐ தொலைக்காட்சியில் ரி.வைத்திலிங்கம் நிகழ்ச்சி என்னைக் கவாந்தவை. எங்களுடைய தொலைக்காட்சிகளின் பெரும் பாலான படைப்புகள் சிறப்பாக இருக்கின்றன. இன்னும் இன்னும் நிகழ்ச்சித் தயாரிப்புகளில் வளர்வதற்கும் நிறைய இடமிருக்கிறது. வளர்வார்கள் என்பது என் நம்பிக்கை. நிகழ்ச்சிகளின் ரசனை மாற்றம் பற்றி நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கின்றேன். அதே போன்ற காலத்திற்கேற்ப்ப மாற்றம் கண்டிப்பாகத் தேவை என்பதும் என் கருத்து.

12)தமிழ ஊடகங்கள் உங்கள் படைப்புகளிற்கு தரும் ஆதரவை பற்றி நீங்கள் கூறுவது என்ன?யாழில் நீங்கள் குறீபிட்டு இருந்தீர்கள் உங்கள் படைப்புகள் பல ஊடகங்கள் வாங்கி சென்றன என்று ஆனால் ஒரு தமிழ ஊடகம் மட்டும் தான் பணத்தை தந்தது என்று இவர்களிற்கு நீங்கள் கூறுவது?

எதுவிதமான தயக்கமும் இன்றி அவர்கள் முழுமனதோடு எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள். ஆனால் எங்களுடைய தமிழ் ஊடகத்துறை வளர்ந்த அளவுக்கு எங்கள் மத்தியில் கலைசார்ந்த படைப்புகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இல்லாதது எனக்கு பெரிய கவலை தருகின்றது. தனியார் நிறுவனங்கள் கலைப்படைப்புக்களை உருவாக்க முன்வரவேண்டும்.

நான் முதன் முதலாக என் படைப்புகளில் இருந்து ஒரு பிரபல்யமான பனங்காய்ப் பணியாரமே என்ற பாடலைக் காணொளி வடிவில் தயாரித்திருந்தேன். அந்த பாடலை வெளியீடு செய்வதற்காக எங்கள் மத்தியில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் அனுப்பி வைத்தேன்.

ஒரு தொலைக்காட்சியைத் தவிர ஏனைய தொலைக்காட்சிகள் சொன்ன பதில் நாங்கள் சினிமாப் பாடல்களை ஒளிபரப்புவதற்கே பணம் வழங்குவதில்லை பிறகு எப்படி உங்களுக்கு வழங்கமுடியும் என்று. அவர்களுடைய பொருளாதார ரீதியான பிரச்சனைகளை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு ஒரு சிறிய ஊக்கத் தொகை கொடுத்து ஒளிபரப்பி வளர்த்தால் எத்தனையோ படைப்புகளை மிகவும் தரமாக எங்களால் உருவாக்க முடியும் என்பது என் கருத்து.

தமிழீழ மக்களும் ஒன்றை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். மகிழ்கலை என்பது இலவசமாகப் படைக்கப்படுவதில்லை. அதைத் தயாரிக்கும் கலைஞர்கள் எத்தனையோ போரட்டங்களையும் கஸ்டங்களையும் தாங்கிக் கொண்டுதான் இவற்றைத் தயாரிக்கின்றார்கள். தமிழகத்தில் இருந்து வெளிவருகின்ற சினிமாப் பாடல்களோடு எங்கள் பாடல்களை ஒப்பிட்டு அதே போன்று ஒளிபரப்பக் காத்திருப்பது தவறான பாதையாகும். இந்த விடயம் தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப் படவேண்டியது எங்களுடைய அனைத்து தமிழ் ஊடகங்களின் பொறுப்பு என்பதை நான் இந்தத் தருணத்தில் மிகவும் தாழ்மையோடு குறிப்பிடுகின்றேன்.

முக்கியமான விடயம் ஒன்று அனைத்து வானொலிகளும் புலம்பெயர்நாடுகளில் இருந்து எங்கள் கலைஞர்;கள் படைப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து தினமும் பாடல்களை ஒலிபரப்ப வேண்டும். உதாரணத்திற்கு இலங்கையில் சக்தி எப்.எம், கனடாவில் உள்ள கனேடியத் தமிழ், சீ.எம்.ஆர், கீதவானி போன்ற வானொலிகள் செய்வதை பின்பற்றினால் எங்கள் கலைஞர்கள் வளர்ச்சியடைய வசதியாக இருக்கும். நான் அறிந்தவகையில் இந்த வானொலி தினமும் எங்கள் பாடல்களை ஒலிபரப்புகின்றார்கள். அதற்காக நான் மற்ற வானொலிகளை குறை சொல்கிறேன் என்று மட்டும் எண்ணாதீர்கள்..

13)அடுத்த பிரச்சினை நம் கலைஞர்களிற்கு சந்தைபடுத்தல் மற்றும் விளம்பரம் செய்வதில் உள்ள பிரச்சினை இதை நிவர்த்தி செய்ய ஏதாவது திட்டங்கள் வகுத்துள்ளீர்களா?

என்னிடம் நிறையத் திட்டங்கள் இருக்கின்றது. இன்று ஐரோப்பாவில் பத்து நாடுகளில் நான்கு இலட்சத்திற்கு அதிகமாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் மக்கள் இருக்கின்றார்கள். கனடாவில் மட்டும் நான்கு இலட்சத்திற்கு மேல். இங்கெல்லாம் எத்தனை தமிழ் அமைப்புக்கள் இருக்கின்றன?. இந்த அமைப்புகளின் ஊடாக எங்கள் கலைஞர்;களின் படைப்புகளை எங்கள் மக்களிடம் கொண்டு செல்லலாம். இந்தத் தமிழ் அமைப்புகள் அது எதுவாக இருந்தாலும் கலைப்படைப்புகளை வெளிக்கொண்டு வருவதற்கான, அல்லது கலைஞர்களின் படைப்புகள் தொடர்பான விளம்பரங்களை அந்த நிகழ்வுகளில் வழங்க முன்வரவேண்டும்.

ஒவ்வொரு கலைநிகழ்வுகள், பொதுக்கூட்டங்களின் ஊடாகவும் கலைப்படைப்புகள் பற்றிய செய்திகளைப் பரப்புவதை ஒரு தார்மீகப் பணியாக மேற்கொள்ள வேண்டும். இங்கு உள்ள கலைபண்பாட்டுக் கழகங்கள் ஒவ்வொரு வருடமும் தங்கள் நாடுகளில் நடக்கின்ற நிகழ்வுளுக்கு எங்களைப் போன்ற கலைஞர்களை அழைத்து அறிமுகப்படுத்தலாம். தமிழகத்தில் மட்டுமிருந்து அழைக்கவேண்டிய அவசியமில்லையே! எங்கள் படைப்புகள் பற்றிப் பேசலாம். இங்குள்ள கலைபண்பாட்டுக் கழங்கள் தாயகம் சார்ந்த படைப்புகளுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுப்பதாக எனக்குப் படுகின்றது.

எங்களுடைய படைப்புகள் தாயகம் சார்ந்த பாடுபொருள் இல்லையென்றால் தட்டிக்கழித்து, கண்டுகொள்ளாமல் விடுவதுகூட எங்கள் புலம்பெயாந்த நாடுகளில் உள்ள குறைபாடு. கலைப்படைப்புகளை வெளிக்கொண்டு வருவதற்கான நிகழ்வுகளையும் நிகழ்த்த வேண்டும். தமிழ் ஈழத்தில் இருந்து வருகின்ற படைப்புகள் மட்டும்தான் படைப்புகள் என்றில்லையே, அதே ஈழத்தில் பிறந்து வளர்ந்து, இங்கே புலம்பெயர்நாடுகளில் வாழ்கின்ற நாங்கள் ஈழத்தின் பிள்ளைகள் இல்லையா...? எங்களைத் தேடிப்பிடித்து இனங்காட்ட வேண்டியதும் இங்குள்ள தமிழர் கலைபண்பாட்டுக் கழகங்களுக்கு உள்ள பொறுப்பல்லவா..? இப்படி இங்குள்ள ஒவ்வொரு தமிழ் அமைப்புகளும் எண்ணவேண்டும்.

அப்போது தான் எங்கள் படைப்புகளை சந்தைப்படுத்த என ஒரு சந்தை உருவாக வாய்பிருக்கிறது. சரி எங்கள் தாயகத்தில் இருந்து வருகின்ற கலைப் படைப்புகள்கூட எங்கள் தமிழ் வியாபார நிலையங்களில் காட்சிப் பொருட்களாக தூசி படிந்து தூங்கிக் கொண்டுதானே இருக்கிறது. இங்கே நாங்களே படைக்க வேண்டும் நாங்களே எங்கள் படைப்புகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லவேண்டிய இக்கட்டான சுழ்நிலையில் இருக்கின்றோம்.

இதையெல்லாம் கடந்துதான் நான் எனக்கொரு நிறுவனம் நிறுவி என் படைப்புகளைக் மக்களிடம் கொண்டு செல்ல முயற்சி செய்தேன். அது ஓரளவிற்கு எனக்குத் திருப்தியைத் தருகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம் சந்தைப்படுத்தல் தொடர்பாக எங்கள் மக்கள் மத்தியில் எப்படிப் பட்ட மாற்றங்கள் ஏற்படுகிறது... என்று.

14)உங்களிடம் படைபாளி என்ற ரீதியில் கேட்கிறேன் ஏன் நம்மவர்கள் படைப்புகள் ஈழத்து தமிழர்களை மட்டும் மையமாக கொண்டு எடுக்கபடுகிறது தென்னிந்திய தமிழர்களையும் கவரு, விதமாக எடுத்தால் ஈழத்து படைபாளர்களின் ஆதரவு அதிகரிக்கும் தானே?

எங்களுடைய ஈழத்து மக்கள் வாழ்கையை மையமாக வைத்துத்தான் நாங்கள் படைப்புகளை உருவாக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் எதிர்பார்ப்பும்கூட. நான் அண்மையில் தமிழகம் சென்று பலதரப்பட்ட தமிழகக் கலைஞர்களை, பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கும் போதும் என்னிடம் இதை;தான் வலியுறுத்துகிறார்கள்.

அவர்களும் எங்களுடைய படைப்புகளை மதிக்கிறார்கள். எங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்கின்றார்கள். எங்கள் மத்தியில் உள்ள கலைஞர்களைப் பற்றி அறிந்தும் வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் நாங்கள் அவர்களுக்கும சேர்த்துப் படைப்பதற்கும் தயாரகவும், அவர்களுக்கு விளங்கக்கூடிய வகையிலும் படைப்புகளை உருவாக்க வேண்டும்.

உதாரணத்திற்கு என்னுடைய காதல் மொழி இசைத்தொகுப்பில் உள்ள "தாளையடியில் வள்ளம் எடுத்து தாய்நாட்டை விட்டு போகின்றோம்" என்ற பாடலை ஒலிப்பதிவு கூடத்தில் பதிவுசெய்யும் போது பாடகர் கிருஸ்ணராஐ; அண்ணன் அவர்களுக்கு வள்ளம் என்ற சொல் புரியவில்லை என்றார். அப்போது அங்கிருந்த உதயா அண்ணா வள்ளம் என்றால் படகு என்று விளங்கப்படுத்த வேண்டிய தேவையிருந்தது. இது போன்ற பல சிக்கல்கள் எங்கள் படைப்புகள் அவர்களைப் போய்ச் சேரும் போது உருவாகும். அந்த வகையில் நாம் மிகவும் சிரத்தை எடுத்து படைப்புகளை உருவாக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.

அவர்களுடைய படைப்பை எங்களால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அவர்கள் பழக்கப் படுவதற்கு எங்களிடம் நிறையப் படைப்புகள் உருவாக வேண்டுமே. எத்தனை வருடங்கள் தான் இப்படியே எங்களுக்குள் இவை பற்றி விவாதித்துக் கொண்டே இருக்கப் போகின்றோம் என்று எனக்குத் தெரியவில்லை.?

15)யாழ் இணையதளம் பற்றியும் கள உறவுகள் பற்றியும் நீங்கள் கூறி கொள்ள விரும்புவது என்ன?அத்துடன் யாழ் இணையதளம் உங்கள் படைபுகளிற்கு எவ்வாறு உறுதுணை புரிந்தது ஏனைய இணையதளங்களிள் இருந்து வேறுபட்டு என்பதை கூறமுடியுமா?

யாழ்கள உறவுகளில் எத்தனையோ அற்புதமான நண்பர்கள் இருப்பதை என்னால் உணரமுடிகிறது. ஆனால் என்ன அவர்களைப் பார்க்க முடியாது, பேச முடியாது, நட்புப் பாராட்ட முடியாது. ஆனால் ஏதோ ஒரு வகையில் ஒர் இனம் புரியாத நட்புரீதியான அலைவரிசை இருப்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

மோகன் அண்ணாவை நல்லாய்த் தெரியும். அவருடன் பலமுறை கதைத்திருக்கிறேன். மிகவும் அமைதியானவர் தான் உண்டு தனது வேலை உண்டு இருப்பவர் போல் தோற்றமளிப்பார். ஆனால் அவரின் அமைதிக்குப்பின் புயல் போல் ஒர இணைவலை பூத்துக் கொண்டிருப்பதை எண்ணும் போது மிகவும் மகிழ்வாக இருக்கிறது.

உங்களையும் இந்த யாழ்களத்தின் ஊடாகத்தான் தெரியும். இந்த பேட்டிக்குப் பின் நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள் என நம்புகின்றேன். உலகெல்லாம் இணையமூலம் இணைந்த நண்பர்கள் தான் எனக்கு அதிகம்.

இந்த நேரத்தில் என்னுடைய பாடல்களைக் கேட்டு உங்களுடைய இனிமையான, சுவையான சூடான கருத்துக்களை முன்வைத்த அனைவருக்கும். தொடர்ந்து கருத்துக்களை வழங்கி என்னையும், என்னோடு இணைந்த எங்கள் கலைஞர்களையும் ஊக்கப்படுத்தும் அனைத்து தோழர்கள், தோழிகளுக்கும் எனது நன்றிகள்.

லண்டனில் நடைபெறும், கனடாவில் நடைபெறும் யாழ்கள ஒன்றுகூடல்கள் வேறு எந்த நாட்டில் நடந்தாலும் நான் கலந்து கொள்ள ஆர்வமாய் இருக்கின்றேன். தமிழ் இளையோர் அமைப்புக்கள் ஊடாகவும் நான் மேற்குறிப்பிட்ட கலை தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப் படலாம்.

அதற்கு யாழ்களம் ஒரு தளமாக அமையும் என நம்புகின்றேன்.

ஏன் என்றால் இளைஞர்கள் தான் அதிகம் கணனியை பயன்படுத்துவார்கள் இல்லையா..?

யாழ் இணையத்தளத்தில் என் கவிதைகள், பாடல்கள், தற்போது, சிறுகதையும் வெளிவர உறுதுணையாக இருப்பதில் பெரு மகிழ்ச்சி. இந்த ஒத்தழைப்பு என்னுடைய அடுத்த படைப்புகளுக்கும் என்று நம்புகின்றேன்.

ஏனைய இணையத்தளங்களில் இருந்து பார்க்கும் போது தனித்தமிழோடு, எத்தனையோ விதமான விடயங்களைத்தாங்கி முன்னிலை பெறுகிறது. ஆனால் வேறு தளங்களில் இருந்து வருகின்ற செய்திகளை இணைப்பதில் முன்நிற்ப்பது ஒரு குறையாகத் தெரிகிறது.

நாங்கள் ஏற்கனவே படித்த செய்திகயை மீட்டும் இங்கேயும் வாசிக்க முடிகிறது. ஆனால் கருத்துக்களம், ஒளித்தடம், விம்பகம் போன்றவை அருமையான பதிவுகள். பலதரப்பட்ட விடயங்களைப் பிரித்து வௌ;வேறு தலைப்புகளைப்புகளின் கிழ் தந்திருப்பது புதுமையாக இருக்கிறது. ஒரு சிறிய மின்நூலகம் போல் மிளிர்வதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

16)நீங்கள் ஒரு கவிஞர் என்ற வகையில் காசிஆனந்தன்,கவிஞர் புதுவை இரத்தினம் என்பவர்கள் பற்றிய உங்கள் பார்வையில் அத்துடன் மறைந்த தேசத்தின் குரல் அன்டன்பாலசிங்கம் பற்றிய உங்கள் கருத்து என்ன?

தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அண்ணன் தமிழீழத்தில் எங்களுக்குக் கிடைத்த பாரதி என்றால். உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் பாரதிதாசனை விஞ்சிய கவிதைக் கூர்வாள். தாயகக் கவிஞரை நான் சந்தித்தில்லை. ஆனால் காசிஆனந்தன் அண்ணனை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. அவரோடு பேசிக் கொண்டிருந்தால் உணர்வுகள் கொப்பளிக்கும், அவரின் கவிதை வீச்சும் எனக்கு தொற்றிக் கொள்வதைப் போல் உணர்ந்தேன். தமிழகத்தில் வாழ்ந்தாலும் எத்தனையோ இடையூறுகளுக்கு மத்தியில் எங்கள் விடுதலைப் போராட்டத்திற்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். மிகவும் ஒர் அருமையான, என்றுமே போற்றப் பட வேண்டிய கவிஞர்கள் இவர்கள். இவர்களுடைய கவிதைப் புத்தகங்கள் புலம்பெயர்ந்த எங்கள் தமிழ் வீடுகளில் இருந்தால். அந்த வீட்டில் வளரும் தமிழ்ப் பிள்ளைகள் தழிழைத் தமிழாகவும். அந்த நாட்டு மொழியை அந்த நாட்டு மொழியாகவே பேசுவார்கள். அவர்களுக்கு தமிழ் படி என்று தாய் தந்தையர் திணிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

எனது குருவாக இவர்களை இருவரையும் வணங்குகின்றேன். அவர்களின் தமிழ்ப் பணிப் பாதையில் தமிழைப் உலககெல்லாம் எடுத்துச் செல்லக் காத்திருக்கின்றேன். அவர்களுடைய அனைத்துப் படைப்புகளையும் தேடிப் பிடித்துப் படிக்கின்றேன்.

கவிஞர் புதுவை இரத்தினதுரை அண்ணன் கவிதை படிக்கும் பாணி எனக்குப் பிடிக்கும்.

ஈழப் போரட்டத்தில் உள்ள அனைத்துப் போரளிகளுக்கும் இவரின் பாடல்கள் புதுவேகத்தைக் கொடுக்கும் சக்திமிக்க கவிதைகள்.

இவரின் கவிதைகளைப் படிக்கும் போது தாய்மடி மீது படுத்துக் கொண்டு, அம்மாவின் முகம் பார்த்தால் ஒரு பூ புக்கும் அல்லவா அந்த மகிழ்வு கிடைக்கும். ஆனால் காசி அண்ணன் கவிதைகள் ஒரு தகப்பன் தன் பிள்ளைகளை உரிமையோடு உணர்ச்சி பொங்க தட்டிக் கொடுப்பது போல் இருப்பது எனக்குப் பிடிக்கும்.

http://www.yarl.com/articles/node/934

http://www.yarl.com/articles/node/932

அன்ரன் பாலசிங்கம் அண்ணனைப் பற்றி என் கவிதைகள் சொல்லும்.

17)நீங்கள் தற்போது புலத்தில் உள்ளீற்கள் உங்கள் ஈழத்து வாழ்கை,பள்ளி அநுபவங்கள் என்பனவற்றையும் புலதிற்கும் ஈழதிற்கும் நீங்கள் காணும் வித்தியாசங்களை கூறமுடியுமா?

தமிழ் ஈழத்தில் அந்த வயல்வெளியில், பனைமரக் காடுகளில், தென்னம் தோப்புகளில், மாமரங்களில், நல்லதண்ணீர்க் கிணற்றடியில் மண்வாசனை தூவும் மழையின் மடியில் மகிழ்ந்து கிடந்த காலங்கள் மறக்கமுடியாது. அந்த ஈழத்து வாழ்க்கை உண்மையிலேயே ஒர் பொற்காலம். மித்தில் வயல் என்ன? கைக்குள் வயல் என்ன? எங்கள் விளையாட்டுப் பசிக்குத் தீர்த்த மண்தரைகள்.

கரவெட்டி துன்னாலையில் உள்ள கோவிற்கடவைப் பிள்ளையார் கோவில் தேரடிதான். என் நண்பர்களுக்கும் (சத்தியமா எனக்கில்லை) தேவதைகள் பற்றிய கனவுகளைத் தேடித் தந்த இடம். அங்க இருந்துதான் திருவிழாக்களின் போது கச்சான் கொறிப்போம். இவையெல்லாம் என் படைப்புகளாய் வரும் இப்பவே சொல்லி விட்டால் பிறகு உங்களுக்கு சுவாரசியம் குறைந்துவிடும்

எனது ஆரம்பகால பாடசாலை ஞானசாரியார் கல்லூரி. இங்கு படித்த நாட்களை மறக்கவே முடியாது. நாங்கள் விக்கா திருடப் போக அங்க எங்களுக்கு படிப்பிக்கும் வாத்தியார் திருடித் தன் சட்டைப்பையில் போட அதப் பார்த்து நாங்கள் நையாண்டி பண்ண.. பிறகென்ன வகுப்பறையில வரிசையாய் நிற்பாட்டி பூசை செய்வார். இப்படி ஆரம்பக் கல்வி அங்கே கழிந்த இனிமையான நாட்கள். பிறகு காட்லிக் கல்லூரிதான் என் உலக அறிவுக்கு வித்திட்ட கல்வி மையம். இன்று உலகெல்லாம் வாழுகின்ற எத்தனையோ புத்திஐPவிகளை உருவாக்கிய அதே கல்லூரிதான் என்னையும் செதுக்கியது. அங்கு பத்தாம் வகுப்பு வரையும்தான் படித்தேன்.

தமிழில் ஆர்வம் ஏற்பட கந்தசாமி வாத்தியாரும். கணிதத்தில் கணக்குப் போட்டு விளையாட கணேசலிங்கம் மாஸ்ரர் தான் எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர்கள். அங்கே என்னோடு படித்த இனிய நண்பர்கள் எத்தனை போ இருந்தார்கள். சிலரோடு இன்னும் தொடர்பு உண்டு. ஆனால் ஏனைய நண்பர்கள் எங்கிருக்கிறார்கள், எப்படி வாழ்கிறார்கள் என்றே தெரியாது. நான் 1990 ஆண்டு ஆவணி மாதம் என் தாய்மண்ணின் வேர்பிடிங்கி தமிழகம் சென்று அங்கிருந்து இந்த நோர்வே நாட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

ஆனால் புலத்திற்கும், ஈழத்திற்கும் நிறைய வேறுபாடுகள். இந்தப் பதினாறு வருட வாழ்க்கையில் எத்தனை மாற்றங்கள். புதிய திருப்பங்கள் புதிய நண்பர்கள், புதிய வாழ்க்கை இந்த இயந்திரமயமான வாழ்க்கையையும் நேசிக்கப் பழகிவிட்ட மனிதனாகிவிட்டேன். இந்த பனித்தேசம் கொடுத்த புதிய வாழ்க்கையை உள்வாங்கிக் கொண்டு என் தாய்மண்ணிற்கு என்ன செய்யலாம் என்ற நோக்கத்தில் இந்த கலையுலகிற்குள் நுழைந்திருக்கின்றேன்.

புதிய மொழிச் சூழலில் என் அன்னைத் தமிழையும் வளர்த்து, கலைகளைப் படைத்து எங்கள் தமிழினத்தின் புகழைப் பரப்ப இங்கு பேராடுவேன். இந்த புலப்பெயர்ந்த நாட்டில் இருந்து கிடைக்கின்ற அனுபவங்களைச் சுமந்து என் படைப்புகள் உங்களோடு பேசவரும் அப்போதுதான் நான் என்ன வித்தியாசங்களை உணர்கிறேன் என்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

மற்றும்படி என்னதான் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தாய்மண்ணின் நினைவோடுதான் வாழ்கிறேன், வாழுவேன் என்பது உறுதி. அந்த வகையில் பெரிய வித்தியாசம் இல்லை. நினைவுகள் என்னேரமும் என்னவோ தாயகம் நோக்கித்தானே. அதற்காக நாடு கிடைத்தவுடன் அங்கே ஓடிப்போன் என்று பொய்யும் சொல்ல மாட்டேன். என் தாயகக் காற்று என் சுவாசமாக இருக்கும் போது நான் எங்கு வாழ்ந்தாலும் அது எனக்கு நிறைவைத்தரும். அந்த நிறைவு போதும். இயல்பாய் இருப்பது என் சுபாவம்..

18)காதல் பற்றிய உங்கள் பார்வை என்ன இதை பற்றி இளம் சமுதாயதிற்கு சொல்ல விரும்புவது என்ன?உங்கள் குடும்பத்தை பற்றி எங்கள் நேயர்களிற்கு கூறமுடியுமா?

என்னிடம் காதலைப் பற்றிக் கேட்கிறீங்களா..சத்தியாம ஒண்டுமே தெரியாது என்று பொய் சொல்லமாட்டன். ஆனால் காதலித்து திருமணம் செய்தவன். திருமணத்தின் பின்பும் என் மனைவியைத்தான் தினமும் காதலிக்கிறேன். ஏன் என்றால் அவள் ஒரு நதியின் பெயரோடு பிறந்தவள். என்னை இந்தக் கலையுலகத்திற்குள் அழைத்துச் செல்ல அத்திவாரம் போட்டவள். அவளுக்காக எழுதிய காதல் கடிதத்தைத் தானே நீங்களும் கேட்கும் வண்ணம் செய்திருக்கிறேன்.

காதலை தினமும் போற்றுகின்றவன் நான். எல்லாருக்கும் வாழ்க்கையில்தான் காதல் வரும் போகும் கல்யாணத்தில் முடியும். ஆனால் என் வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் காதலிக்கின்றேன். வாழ்வின் ஒவ்வொரு நிமிடங்களையும் காதலிக்கின்றேன். என் தாயகத்தை காதலிக்கின்றேன். இரு இதயங்களை ஒருமனம் எனும் புள்ளியில் இணைக்கும் புனிதமான உணர்வுப் பாலம் காதல் என நம்பிக்கையுள்ளவன். அதைப் புண்படுத்த நினைப்பது துரோகம் என்றே சொல்வேன்.

ஆகையால்தான் காதல் என்றே என்னுடைய படைப்புகளும் வெளிவர இருக்கிறது. காதல் கடிதம், காதல் மொழி, காதல் ------ ? இதைக் கண்டு பிடித்துச் சொல்பவருக்கு வெளியீட்டு விழாவில் அந்த இறுவட்டை உங்களுக்குப் பரிசாக வழங்குவதாக அறிவித்து, பின் அனுப்பி வைப்பேன். எங்கே பார்ப்போம்...கார்த்திகை 19 திகதி வரை பொறுத்திருங்கள்.!

இளம் சமுதாயத்தை வசீகரிப்பது காதல். ஆனால் இந்த அவசர உலகில் காதல் காதல் என்று அலைந்து உங்கள் வாழ்க்கையைத் தொலைக்காதீர்கள். காதல் பூக்கும் தக்க தருணம் வரும் வரை காத்திருங்கள். காதலுக்காக தொண்டு செய்யக் காத்திருங்கள் அப்போது தான் பெண்களுக்கு உங்கள் மேல் ஒர் ஈர்ப்பு வரும். கனவுகளை நனவாக்க முயற்சி செய்யுங்கள். இதுதான் என் அறிவுரை அல்ல அனுபவ முத்துக்கள். இதுக்கு மேல நான் காலைப் பற்றி சொல்லப் போனால் என் மனைவி நக்கல் அடிப்பால் அப்ப எனக்கு முதல் எத்தனை பேரைக் காதலிச்சனீங்கள் எண்டு.?

எனது குடும்பம் ஒரு பெரிய குடும்பம். அம்மா, அப்பா, சகோதரங்கள் ஆறுபேர், என் மனைவி, மாமா மாமி என இங்கே என்னோடு வாழ்கிறார்கள். ஆனால் உலகெல்லாம் அம்மா, அப்பா வழியிலும், என் மனைவி வழிச் சொந்தங்களும் நிறைய உண்டு. வேறு என்ன சொல்ல...என் அறையில் இருக்கும் நிறையப் புத்தங்கள் என் கவித் தோழர்கள். இசைத் தோழன் என்று சொல்லிக் கொள்ள வி.எஸ்.உதயா அண்ணா. இங்கே நோர்வேயில் நிறைய நண்பர்கள் இருக்கின்றார்கள். இப்ப யாழ்கள உறவுகளாகிய நீங்கள்.

19)அடுத்து "விமர்சனம்" அதாவது நிறைகளை ஏற்கும் நாம் குறைகளை யாரும் சொன்னால கோபபடும் நிலை நம் சமூகத்தில் இருகிறது,நீங்கள் விமர்சனங்களை எவ்வாறு ஏற்று கொள்வீர்கள்?

விமர்சனங்களை ஏற்பதும் அந்த விமர்சனங்களில் இருந்து மீண்டும் நல்ல விதைகளை விதைப்பதும் எனக்குப் பிடிக்கும். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சமூகம் சார்ந்த கோபங்களைக் வெளியில் யாருக்கும் பயப்படாமல் துணிந்து கொட்டித்தீர்ப்பேன். ஆனால் அதில் உண்மை புதைந்திருக்கும் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் என் வீட்டார் என்னை திட்டுவார்கள் உனக்கேன் உந்த வேலை என்று. ஆனால் அதற்காக நான் என் இயல்பை மாற்ற முடியாது.

குறைந்த பட்சம் ஒரு தனிநபரையும் பாதிக்காத வண்ணம் கருத்து ரீதியாக மோதுவேன். எங்கள் படைப்பு ரீதியாக இதுவரை யாரும் மோசமான விமர்சனங்களை வைக்கவில்லை. காதல் கடிதம் பற்றியோ, காதல் மொழி பற்றியோ அல்லது என் கவிதைகள் பற்றி ஆக்கபூர்வமான விமர்சனங்கள் வந்தன அவற்றை நான் திருத்தியிருக்கின்றேன்.

காதல் கடிதம் இறுவட்டு வெளியாகிய போது ஒரு பெரிய விமர்சனம் எழுந்தது. நீங்கள் ஏன் எங்கள் கலைஞர்களை இணைக்கவில்லை என்று. நான் சொன்னேன் முதலில் என்னை ஒரு கலைஞனாக நான் முன்நிறுத்த இந்தப் படைப்பு, பின் எங்கள் கலைஞர்களையும் இணைப்பேன் என்று.

அதற்கு உதாரணம் தமிழ்நாதம் இணையத்தளத்தில் காதல் மொழி இறுவட்டிற்கு நாங்கள் கொடுத்த விளம்பரம். அதைப் பார்த்துவிட்டுதான் லண்டனில் வசிக்கும் யக்சன் பொஸ்கோ எம்மோடு இணைந்தார். அவர் ஒரு சிறந்த பாடகர். இந்த கேள்வி கேட்கப்பட்டது எங்கள் ஐபிசி தமிழ் வானொலியில் இருந்து. நாங்கள் வாய்ப்பு வழங்கிய பாடகராகத் தெரிவு செய்யப்பட்டவரும் அதே ஐபிசி தமிழ் இன்னிசைக் குரல் 2003 இன் சிறந்த பாடகராக வந்த யக்சன் பொஸ்கோ தான்.

அந்த வகையில் ஐபிசி தமிழ் எங்களுக்கு பெரிய உதவி செய்துள்ளது. எங்களுடைய அடுத்த இறுவட்டிலும் டென்மாக்கில் உள்ள ஒரு சிறந்த பாடகிக்கு சந்தர்ப்பம் வழங்கியிருக்கிறோம். இவர்கூட ஐபிசி தமிழ் வானொலி இன்னிசைக் குரல் தெரிவுதான். அந்த வகையில் விமர்சனங்களை நான் முழுமனதோடு எற்றுக் கொள்ளும் பக்குவத்தோடுதான் உள்ளேன்..

20)ஈழத்து இளம் கலைஞர் என்ற வகையில் வளர்ந்து வரும் கலைஞர்களிற்கு,கவிஞர்களிற்கு?r />?் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?அத்துடன் படைபாளி என்ற ரீதியில் யாழ்கள உறவுகளிற்கு நீங்க சொல்ல விரும்புவது என்ன?

வளர்ந்து வரும் கலைஞர்கள் எந்தத் துறையில் இருந்தாலும். நீங்கள் நிறைய வாசிக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் இருந்தே பல விடயங்களைத் தேடிப்பிடித்து குறித்து வையுங்கள். ஒரு நாள் அந்த விடயம் உங்களை வந்து உசுப்பும் அப்போது ஒரு பேனா எடுங்கள் ஒரு வெள்ளைத்தாள் இருந்தால் போதும் உங்கள் மனக்கடலில் இருந்து நீங்கள் முத்து எடுக்கலாம் அல்லது முத்துக் குளிக்கலாம்.

நீங்கள் படைப்பாளராக விரும்பினால் உங்களுக்கு எந்த நேரமும் உங்கள் மூளையின் ஒரு ஓரத்தில் ஞாபக அறை எப்போதுமே திறந்திருக்க வேண்டும். அங்கு பலதரப்பட்ட நிகழ்வுகளையும் அத்தருணத்திலேயே சேமித்து விடவேண்டும். நல்லவற்றை அல்லது சமூகத்திற்கு முரணான ஒரு பொறி உங்களைத் தட்டினால் அல்லது தீண்டினால் அந்தப் பொறிகளைச் சேமியுங்கள்.

ஏதோ ஒரு பொறியல் அல்லது ஒரு புள்ளியில் இருந்துதான் நான் ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட நான் இந்த இலக்கிய வாழ்வோடு என்னை இணைத்து பன்னிரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போது தான் நான் தேடிச் சேமித்த என் முத்தான வாழ்வியல் அனுபவங்களை, எங்கள் இனத்திற்குத் தேவையான விடயங்களை, கடந்த கால, நிகழ்கால, எதிர்கால பதிவுகளைத் தேடிப் பிடித்து புதிய வடிவில் இந்தக் காலத்திற்கேற்ற மாதிரி வடித்தெடுக்கின்றேன்.

இந்தக் கலைவடிவங்களை வடித்தெடுக்கும் போது மனச்சுமைகள் அதிகரிக்கும், மனம் சோர்வடையும், என்னால் இது முடியுமா என்ற கேள்விகள் தோன்றும், இடைஞ்சல்கள் வரும் பொருளாதார ரீதியான சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும். குடும்பத்தைச் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டி கடமையிருக்கும். இவற்றையெல்லாம் எதிர்நீச்சல் போட்டு தோற்கடித்து நீங்கள் வெற்றி பெற்றால் சிறந்த கலைஞனாக மக்கள் மனதில் இடம் பிடிப்பீர்கள்.

அதற்கு உங்கள் இலக்கியப் பயணத்தின் எல்லையை நோக்கி வீறுநடை போட உங்களை தீட்டிக் கொண்டே இருக்க வேண்டும். இவையெல்லாவற்றையும் ஒருங்கிணைத்த செய்ய உங்களுக்கு முக்கியமாக அதீதமான தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிவரும். என்பவைதான் என்னுடைய அழ்மன அனுபவங்களில் இருந்து நான் உங்களுக்குச் சொல்லக்கூடியது.

யாழ்கள உறவுகளுக்கு உங்கள் ஒவ்வொருவருடைய உற்சாகமான வருகையைப் பார்க்கும் போது தமிழை உயிராய் நேசிப்பது புரிகிறது. தமிழ்மொழியைக் காப்பதற்கு நீங்கள் அனைவரும் இணைந்து அரும்பெரும் பணியைச் செய்கின்றீர்கள். ஆனால் அரட்டையென்ற பெயரில் மட்டும் உங்கள் நேரங்களைச் செலவிடாதீர்கள்.

நீங்கள் இங்கே வந்து போகின்ற ஒவ்வொரு நிமிடமும் உங்கள் வாழ்வின் பொன்னான நிமிடங்கள். ஆகவே அது உங்களுக்கும், உங்களால் இங்குள்ளவர்களுக்கும், எங்கள் தமிழ் சமூகத்திற்கும் என்றைக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் செயற்படுங்கள். தேவையில்லாத விரோதங்களை வளர்க்காதீர்கள். கருத்து ரீதியாக மோதுங்கள் நான் ஏற்கனவே சொன்னது போல் தனிப்பட்ட ரீதியில் எவரையுமே புண்படுத்தாதீர்கள்.

நாங்கள் பலதரப்பட்ட வலிகளைச் சுமந்து கொண்டு, தாயகம் சார்ந்த நினைவுகளச் சுமந்து கொண்டு வேறு நாட்டவர் மத்தியில் வாழும் போது ஒருவருக்கு ஒருவர் உதவியாக வாழ்வோம் என்று உறுதியெடுங்கள். இங்கே எத்தனையோ அற்புதமான படைப்பாளிகளை என்னால் அடையாளம் கானக்கூடியதாக இருக்கின்றது. உங்களுடைய படைப்புகளை வெளிக்கொண்டுவர என்னால் ஆன உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கமுடியம். தமிழகத்தில் உள்ள பலருடன் எனக்குத் தொடர்புகள் இருப்பதால் சொல்கின்றேன். உங்களுடைய ஆக்கங்களை இங்கே பதிவு செய்யும் போது நீங்களும் ஒரு பிரதியெடுத்து உங்கள் கணனியில் சேமியுங்கள். ஒருநாள் திரும்பிப் பார்க்கும் போது அது பல புத்தகங்கள் உருவாக உறுதுணையாக இருக்கும்.

மிகவும் பொறுமையோடு என் செவ்வியை வாசித்த உங்களுக்கும், யாழ்கள மூலம் சிறந்த ஒரு பத்திரிக்கையாளருக்கே உரித்தான நேர்த்தியோடு பேட்டியெடுத்த ஐமுனாவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள். வணக்கம். வாழ்க வளமுடன்

என்றும்

அன்புடன்

உங்கள் உறவு

வசீகரன் .. :)

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply

தொடரும்..............

சிறிய இடைவேளைக்கு பின் பேட்டி தொடரும்.

பேட்டிக்கு பிரதான அநுசரணையாளர் -

1)யாழ்கவி ஓடியோ அன்ட் வீடியோ

2)சோனா பியூட்டி பாலர்

3)குட்டிதம்பி நகைகடை

4)யாழ்ரவி சைபர் கவே

5) சகி தங்கமாளிகை

6)மாப்பிள்ளை புத்தககடை

7)நிலா துணிகடை

8)ஜனனி சுரித்தாகடை

9)குமாரசுவாமி வயின்சொப்

10)பொன்னி ஸ்பைஸ்

பேட்டிக்கு இணை அணுசரணை

1)யானைவில் குளிர்பானம்

2)சித்து பூகடை

3)இவர்களுடன் ஆத்மீக ஒளிகிடைக்க நாடவேண்டிய ஒரெ இடம் சத்திஞானந்த குருஜி

புத்து

மக்கள் தொடர்பாடல் 1)விசால்

2)லீசன்

ஊடக அநுசரனை

1)நெடுக்ஸ்வானொலி

பேட்டி எடுத்தவருக்கு மேக்கப்

1)சோனாபியூட்டிபாலர்

பேட்டிக்கு பிரதான ஊடக அனுசரனை வழங்குவோர்

டைகர் வானொலியின் உத்தியோக பூர்வ இணையத்தளம்

http://www.yarltigerfm.tk

இடைவேளையின் பின் பேட்டி மீண்டும் தொடர்கிறது

Link to comment
Share on other sites

11)இரண்டு நாளைக்கு முன் யாழ்கள உறுப்பினர் சன்டீவியை நம் மக்கள் அதிகமாக பார்கிறார்கள் என்று விசனபட்டிருந்தார் ஆனால் அதில் விசனபட எதுவுமில்லை அவர்கள் கால மாற்றதிற்கேற்ப நிகழ்ச்சிகளை வழங்கிறார்கள் எமது ஊடகங்கள் இன்னும் 1960,1970 காலபகுதியில் தாங்கள் வாழ்ந்த யாழ்பாணத்து முறையில் நிகழ்ச்சிகளை சித்தரித்து கொண்டிருகிறார்கள்.இந்த பாணியை அந்த காலபகுதியில் வாழ்ந்தவர்கல் ரசிபார்கள் தவிர தற்போது இளம்சமூகம் இதை பார்வை இட விரும்பமாட்டார்கள்,இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

12)தமிழ ஊடகங்கள் உங்கள் படைப்புகளிற்கு தரும் ஆதரவை பற்றி நீங்கள் கூறுவது என்ன?யாழில் நீங்கள் குறீபிட்டு இருந்தீர்கள் உங்கள் படைப்புகள் பல ஊடகங்கள் வாங்கி சென்றன என்று ஆனால் ஒரு தமிழ ஊடகம் மட்டும் தான் பணத்தை தந்தது என்று இவர்களிற்கு நீங்கள் கூறுவது?

13)அடுத்த பிரச்சினை நம் கலைஞர்களிற்கு சந்தைபடுத்தல் மற்றும் விளம்பரம் செய்வதில் உள்ள பிரச்சினை இதை நிவர்த்தி செய்ய ஏதாவது திட்டங்கள் வகுத்துள்ளீர்களா?

14)உங்களிடம் படைபாளி என்ற ரீதியில் கேட்கிறேன் ஏன் நம்மவர்கள் படைப்புகள் ஈழத்து தமிழர்களை மட்டும் மையமாக கொண்டு எடுக்கபடுகிறது தென்னிந்திய தமிழர்களையும் கவரு, விதமாக எடுத்தால் ஈழத்து படைபாளர்களின் ஆதரவு அதிகரிக்கும் தானே?

15)யாழ் இணையதளம் பற்றியும் கள உறவுகள் பற்றியும் நீங்கள் கூறி கொள்ள விரும்புவது என்ன?அத்துடன் யாழ் இணையதளம் உங்கள் படைபுகளிற்கு எவ்வாறு உறுதுணை புரிந்தது ஏனைய இணையதளங்களிள் இருந்து வேறுபட்டு என்பதை கூறமுடியுமா?

16)நீங்கள் ஒரு கவிஞர் என்ற வகையில் காசிஆனந்தன்,கவிஞர் புதுவை இரத்தினம் என்பவர்கள் பற்றிய உங்கள் பார்வையில் அத்துடன் மறைந்த தேசத்தின் குரல் அன்டன்பாலசிங்கம் பற்றிய உங்கள் கருத்து என்ன?

17)நீங்கள் தற்போது புலத்தில் உள்ளீற்கள் உங்கள் ஈழத்து வாழ்கை,பள்ளி அநுபவங்கள் என்பனவற்றையும் புலதிற்கும் ஈழதிற்கும் நீங்கள் காணும் வித்தியாசங்களை கூறமுடியுமா?

18)காதல் பற்றிய உங்கள் பார்வை என்ன இதை பற்றி இளம் சமுதாயதிற்கு சொல்ல விரும்புவது என்ன?உங்கள் குடும்பத்தை பற்றி எங்கள் நேயர்களிற்கு கூறமுடியுமா?

19)அடுத்து "விமர்சனம்" அதாவது நிறைகளை ஏற்கும் நாம் குறைகளை யாரும் சொன்னால கோபபடும் நிலை நம் சமூகத்தில் இருகிறது,நீங்கள் விமர்சனங்களை எவ்வாறு ஏற்று கொள்வீர்கள்?

20)ஈழத்து இளம் கலைஞர் என்ற வகையில் வளர்ந்து வரும் கலைஞர்களிற்கு,கவிஞர்களிற்கு

Link to comment
Share on other sites

gsemultipart65636pq4.jpg

தமிழ்வாணண் அண்ணா (வசீகரன்) இன்னும் கொஞ்ச நேரத்தில் கலையகத்துக்கு வந்து பேட்டி அளிப்பார் காணதவறாதீர்கள்

இங்கே இடம்பெறும் பேட்டிகளை டைகர்வானொலி மற்றும் டைகர்குடும்பத்தின் அனுமதி இன்றி பிரயோகிப்பது சட்டத்துக்கு எதிரானது,அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும்.

டைகர் குடும்பத்தின் டைகர் வானொலியின் வெளியீடே இது.

:P :mellow: :P

Link to comment
Share on other sites

வணக்கம் தமிழ்வானம் அண்ணா (வசீகரன்) அண்ணா பல வேலை பளுவிற்கு மத்தியிலும் எமது அழைப்பர் ஏற்று வந்ததிற்கு டைகர்வானொலி மற்றும் டைகர்குடும்பத்தின் சார்பாக வணக்கத்துடனான நன்றிகள்.. :)

பேட்டிக்கு செல்வோமா வசீகரன் அண்ணா.............

1)உங்களை பற்றிய சிறிய அறிமுகத்தை எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?அத்துடன் யாழ் இணையதளதிற்கு நீங்க வர ஏதுவா அமைந்த விசயம் என்ன?யாழ் இணையதளத்தை பற்றிய உங்கள் பார்வை என்ன?

வணக்கம் ஐமுனா(உங்கள் நிஐப்பெயர் இதுதானோ:)) என் இனிய இணையத் தமிழ் வணக்கங்கள். முதலில் யாழ் இணைவலையை உருவாக்கிய திரு.மோகன் அண்ணாவிற்கும் மற்றும் அவருக்கு அன்று தொட்டு இன்றுவரை இந்த நற்பணிக்கு தங்களுடைய ஆத்மார்த்தமான உதவிகளையும், ஒத்துழைப்பையும் வழங்கும் அனைத்து முகமறியா, இணைபிரிய நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

நான் பிறந்தது வளர்ந்து எல்லாம் என் தாய்மண்ணாம் தமிழீழத்தில். இன்று வாழ்வது பனிக்குஞ்சுகள் விளையாடும் மலைநாடாம் நோர்வே மண்ணில். எனது யாழ்இணையப் பெயர் தமிழ்வானம். தாய்தந்தை வைத்த அழகுப்பெயர் வசீகரன்.:) என்ன என் பேரைக் கேட்டாலே சும்மாய் கவருதல்ல.. ஒரு பெரிய குடும்பம் எங்கள் குடும்பம். நல்லதோர் பல்கலைக் கழகம்.! நல்லதோர் வீணைசெய்தே பயன்பெற இந்தப் பூமியில் என் அன்னை பெற்றதால் கணனியோடு கைகோர்த்து...இன்று கலையுலகில் உங்கள் முன் நான்.

யாழ்களத்தில் இணையப் பல காரணங்கள் உண்டு. பாரதியின் கனவைப் பறைசாற்றி நிமிர்ந்து நிற்பது முதன்மைக் காரணம். அத்தோடு பலதரப்பட்ட தமிழ் உறவுகளை தரணி முழுவதும் தேடிப்பிடித்து வந்து ஒர் இணைப்புப் பாலமாக இருக்கின்றது இந்த இணையப்பாலம். இதனால் நான்காம் தமிழாய் இது புதுநடை போடுகின்றது. கணனியின் முன் உட்கார்ந்தால் மௌனம் கலைத்து மனதைத் தமிழால் நனைய வைக்கின்றது. ஊர்ப்புதினங்களை, உலகவிடயங்களை, உன்னதமான அறிவுப் பொக்கிசங்களை அள்ளி வந்து உள்ளங்கையில் அளிக்கிறது யாழ். இப்படி நான் சொல்லிக் கொண்டே இருப்பேன்.

2)நீங்கள் ஒரு கவிஞர் மற்றும் பாடலாசிரியர் என்ற முறையில் நீங்கள் குருவாக யாரை பின்பற்றி இருந்தீர்கள்?உங்கள் குடும்பமே கலைகுடும்பமா அல்லது நீங்கள் மட்டும் இதில் விரும்பி வந்தீர்களா?உங்களை விரும்பி வர விசேசமாக ஏதாவது காரணங்கள் இருந்தால் எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

நான் குருவாக நினைப்பவர்கள் என்று பலபேர் இருக்கிறார்கள். எனது முதற் குருவாக என் தாய் தந்தை அதன் பிறகு கவியுலகென்று பார்த்தால்... பாரதியார் அடுத்து பாரதிதாசன். ஆனால் இன்று எம்மோடு வாழும் கவிஞர்கள் என்று பார்த்தால் தமிழீழத்தில் இருந்து தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை, உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன். தமிழக்தில் இருந்து மூவரை குறிப்பிடுவேன். முதலில் கவிஞர் மு.மேத்தா, கவிப்பேரரசு வைரமுத்து, அண்ணன் அறிவுமதி அவர்கள். இவர்களால் நான் தமிழ்மொழியின் மீது அதீத காதல் கொண்டுள்ளேன்.

என் குடும்பம் ஒரு கலைக்குடும்பம் அல்ல. என் தந்தையார் ஒரு கணித ஆசிரியர். என் தாயார் ஒர் இனிய இல்லத்தரசி. ஆனால் என் தாய்வழியில் பார்த்தால் என் அம்பப்பா ஒர் சிறந்து ஆன்மீக பக்தி உள்ளவர், மிகவும் இனிமையாக தேவாரங்களை எங்கள் கோவிற்கடவைப் பிள்ளையார் திருவிழாக்களின் போது மெய்உருகிப் பாடுவார். அதே போன்றுதான் என் தாய்வழி சகோதரர்கள். எனது தந்தையின் உலகம் எண்ணில் தொடங்கும் எளிமையான உலகம். இன்று என்னுலகோ எண்ணும் எழுத்தோடும் தொடர்கிறது. இதுதான் என் குடும்பத்தினரின் கலையுலகப் பின்னணி.

இந்தக் கலையுலகிற்கு நான் விரும்பியே வந்தேன். எங்கள் தமிழீழ மக்கள் வாழ்க்கையில் ஒரு கலைப்புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது என் வாழ்நாள் இலட்சியம். எங்கள் கலையுலக வானம் ஒர் குறுகிய பாதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதன் விரிதளங்கள் கலைச் சொத்துக்களை பெருக்குவதிலும், ஆவணப்படுத்துவதிலும் பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. தமிழ் மண்ணுக்கே உரிய தமிழ்வாசனையோடு இந்த மேற்குலக நாடுகளில் விதைப்பதற்கு எங்களிடம் என்ன இருக்கிறது..? இதை ஆழமாக சிந்தித்தால் அதில் எஞ்சுவதை இவர்களுக்கு எங்களுடைய படைப்பென்று எப்படி பெருமையோடு வழங்கலாம் சொல்லுங்கள்.?

தாயகத்தில் இருக்கும் போர்ச்சூழலில் இருந்து வெளிவருகின்ற கலைப்படைப்புகள் பற்றிச் நான் இங்கு சொல்லவில்லை. அந்தப் போர்ச்சூழலிலும் அது புத்துணர்ச்சியோடு புதிய பாதை நோக்கிச் செல்கிறது. ஆனால் புலம்பெயர்ந்த உறவுகளின் கலைப்படைப்புகள் என்று பார்ப்பீர்கள் ஆனால் அது இன்னும ஆரோக்கியமான பாதையில் காலடி எடுத்து வைக்கவில்லை. இதை முறியடிப்பதற்கு என்ன செய்யலாம் என்ற எண்ணப்பாடுகளோடுதான் நான் இந்த கலையுலகில் நுழைந்துள்ளேன்.

3)"காதல் மொழி" இறுவெட்டை பற்றிய உங்கள் பார்வை என்ன?இந்த இசை தட்டை நீங்கள் வெளியிட ஏதாவது காரணங்கள் இருகின்றனவா?இந்த இசை தட்டை செய்து முடிக்க உங்களுக்கு எவ்வளவு காலம் சென்றது இதை செய்து முடிக்கும் வரை நீங்கள் பெற்ற சுவையான அநுபவங்களையும் மற்றும் கசப்பான அநுபவங்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

காதல் மொழி இறுவட்டை பற்றிய என்னுடைய பார்வையா..

இது எங்களுடைய இரண்டாவது படைப்பு. இந்த நேரத்தில் என் இனிய இணைய நண்பர் இசையமைப்பாளர் வி.எஸ்.உதயா பற்றி நான் குறிப்பிட வேண்டும். ஏன் என்றால் இசைப்பாடல் உலகில் என் வரிகளுக்கு அங்கிகாரம் அளித்த அதிசயமான மனிதர். இணைய நட்பின் மூலம்தான் எங்கள் கலைப்பயணமே தொடர்வது வேறு கதை அது இங்கே வேண்டாம். உங்கள் கேள்விக்குள் வருகின்றேன்.

இந்தப் படைப்பு எங்களுடைய வெற்றிப் பாதையில் இரண்டாவது படிக்கல். எங்கள் மக்களின் வாழ்வைப் பதிவு செய்வதற்கான ஓர் அடிக்கல் என்று சொல்லலாம். இதில் எட்டுப் பாடல்கள் எட்டுவிதமான சுழல்நிலைகளில் வருகிறது. நட்போடு பழகிய ஒரு தோழனும் தோழியும் காதல் உணர்வினால் தூண்டப்படும் போது தோழி முதலில் விண்ணப்பம் அனுப்புவதான சூழ்நிலை.

அடுத்து எத்தனையோ அம்மாப் பாடல்கள் வெளிவந்துள்ளது இருந்த போதிலும் புலம்பெயர் வாழ்வினில் எங்களுடைய ஈழத்துப் பிள்ளைகள் தாய்மாரைப் பற்றிப் பாடுவார்கள் என்ற சூழலைப் பிரதிபலிக்க ஒரு பாடல்.

பெண்கள் என்றுமே எங்கள் கண்கள்.:) அல்லவா அந்தப் பெண்கள் இல்லாத உலகத்தில் வாழ பேய்கூட விரும்பாதே என்ற வித்தியாசமான கண்ணோட்டத்தில். நான் கனடா நாட்டிற்கு சென்றிருந்த போது எங்களுடைய இளைஞர்கள் யுவதிகள் எப்படி நட்புப் பாரட்டுகிறார்கள். அல்லது காதலை வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதைக் குறிப்பிடும் பாடல்.

காதல் மொழியை பேசுங்கள் காதலை வாழ்த்துங்கள் காதலை நல்ல வயலில் விதையுங்கள் என்பதைச் சொல்லும் பாடல். காதல் மொழி இறுவட்டின் கருவிற்கேற்ற பாடல்.

நாங்கள் இந்த மேற்குலக நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வர பெரிய உதவியும பெரிய உபத்திரமும் கொடுத்த ஏஐன்சிமார்களுக்கான பாடல். இது நகைச்சுவையாகவும் இருக்கும் ஆனால் உள்மன ஆழத்தில் உங்கள் வெளிநாட்டுப் பயன அனுபவத்தை ஞாபகப்படுத்து படியாக அமைந்திருக்கும்.

எங்கள் மத்தியில் வளர்ந்து வரும் குழந்தைகளுக்கான பிறந்தநாள் வாழ்த்துப்பாடல். இதை நீங்கள் உங்கள் பிறந்தநாள் விழாக்களில் பயன்படுத்த என விசேடமாக உருவாக்கப்பட்டது. எத்தனை நாளைக்குத்தான் சினிமாப் பாடல்களை மட்டும் பிள்ளைகளுக்குப் போட்டு பிறந்தநாளைக் கொண்டாடுவீர்கள்..அதற்காக ஒரு சிறிய முயற்சி. மிக விரைவில் யாழில் கேட்கலாம்.

அடுத்து சுனாமி பற்றிய பாடல். இந்த ரணத்தை இதயங்கள் எப்படித்தான் தாங்கியதோ அது ஏற்படுத்திய வலி எத்தனை பிறப்பு எடுத்தாலும் மாறது. இதைப் பதிவுசெய்வதற்காகவே நான் சுனாமி ஏற்படுத்திய அனர்த்தச் செய்திகளை உள்வாங்கிக் கொண்டே உருகி எழுத உதயா அண்ணன் அவர்களும் தன் உணர்வுகளையும் உருக்கி இசையமைத்திருக்கிறார்.

என் தாயகத்தைவிட்டு வந்த வலியை..எங்கள் உறவுகள்கடல் கடந்து தமிழகத்திற்கு செல்லும் அவலப் பயனத்தை. நான் அனுபவித்தை மணித்தியாளங்களை ஞாபக அறைகளில் இருந் மீட்டிவந்து மனதில் இருத்தி மலர வைத்திருக்கிறேன். நீங்களும் கேட்கத்தானே போகிறீர்கள். கண்டிப்பாக கைக்குட்டை பாவிப்பிர்கள்..ஏன் என்றால் கண்ணீர் வழியும் தொண்டை கட்டும். இதில் இன்று கனடாவில் வாழும் உண்மையாக காதலித்த ஒரு அண்ணன் ஒரு அக்காவின் காதல் அனுபவங்களைச் சுமந்து வரும் பாடல்.

இந்த இறுவட்டை உருவாக்க கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் எடுத்திருக்கும். நான் இங்கிருந்த வண்ணம் பாடல்களை எழுதி மின்னஞ்சலில் அனுப்ப, உதயா அண்ணன் அங்கிருந்தவாறு மெட்டுப் போடுவார். பிறகு நான் தொலைபேசியில் அழைக்கும் போது பாடிக் காட்டுவார். இப்படியாகத்தான் எங்களுடைய எல்லாப் படைப்புகளையும் நாங்கள் உருவாக்குகின்றோம். இது கணனிக் காலம் பாருங்கோ இது எங்களுக் பெரிய உதவியாகவும் உள்ளங்கையில் உலகம் என்றுதான் சொல்வேன்.

எனது சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டால் அதை எழுதி முடிக்க என் கைகள் வலிக்கும். வேறு ஒரு சந்தர்பத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

4)"காதல் மொழி" இசைதட்டு வெளியாகி உள்ளது இந்த சந்தர்பத்தில் இந்த இறுவெட்டை தற்போது எங்கே பெற்று கொள்ளமுடியும் என்பதை எங்கள் நேஎயர்களிற்கு சொல்வதுடன் உங்களுடன் சேர்ந்து உழைத்த அத்தனை கலைஞர்களிற்கும் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

காதல் மொழி இறுவட்டை எந்த நாடுகளில் எங்கு பெற்றுக் கொள்ளலாம் என்பது பற்றிய விபரங்கள். எனது நிறுவனமான வி.என்.மியூசிக்றீம்ஸ் இணையத் தளத்தில் குறிப்பிட்டுள்ளேன். அதை மீட்டும் இங்கும் இணைக்கின்றேன்.

http://www.vnmusicdreams.com/page.html?lang=eng&catid=8

www.vnmusicdreams.com

தற்பொழுது எங்களது இறுவட்டு கிடைக்கும் நாடுகள். நோர்வே, பிரித்தாணியா, பிரான்ஸ், சுவிஸ் இல் பாசல் நகரில் மட்டும், மற்றும் கனடா ஆகிய நாடுகளில் கிடைக்கும். இலங்கையிலும், இந்தியாவிலும், தமிழீழத்தில் வெளியீடு செய்து வைக்கவும் எண்ணியுள்ளேன். ஆனால் இப் உள்ள சூழ்நிலை எப்படி உதவும் என்று தெரியவில்லை. ஆனால் இவை தவிர்ந்த ஏனைய நாடுகளில் வாழும் எங்கள் உறவுகள் யாரவது அழைத்து இந்த இறுவட்டுக்களை வெளியீடுசெய்ய உதவுவார்கள் என்றால் நான் தயாராக இருக்கின்றேன்.

என் பாடல் வரிகளுக்கு தனது உன்னதமான இசைப்பணியை செய்திருப்பவர் வி.எஸ்.உதயா அண்ணாவும், இதில் இணைந்து பங்கு பற்றியிருக்கும் ஏனைய கலைஞர்கள் ஒலிப்பதிவில் திரு.கிருபாகரன், சாமிநாதன்(இவர்கள் இருவரும் தமிழக உறவுகள்).

பாடல்களுக்கான தங்களுடைய இனிமையான குரல்களை வழங்கியவர்கள் மதுபாலகிருஷ்ணன், காஷ்மிரா, சாம்.பி.கீர்த்தன், சுதாஸ்(அறிமுகம், ஈழத்துப் பாடகர் நோர்வே), யக்சன் பொஸ்கோ(அறிமுகம் ஈழத்துப் பாடகர் லண்டன்), மேகா (அறிமுகம் தமிழகத்தின் புதியவரவு...தற்போது ஊ ல லா இசைநிகழ்வில் பங்கு பற்றியிருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் நடுவராக பணியாற்றுகிறார். இவர் பாவநாசம் சிவன் அவருடைய பேர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.)

உன்னிக்கிருஷ்ணன், வி.எஸ்.உதயா(முதன் முதலில் பாடியிருக்கிறார். பாடகராகவும் அறிமுகம்), கிருஷ்ணராஐ;, காஞ்சனா, மற்றும் பிரியங்கா என்னும் குழந்தைப் பாடகி.

இவர்கள் அனைவருக்கும் என்றும் நான் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டே இருப்பேன். உங்கள் கலைப்பயனம் சிறக்க வாழ்த்துகின்றேன். அவர்கள் அனைவரைப் பற்றியும் நான் இறுவட்டிலும் குறிப்பட்டையில் விரிவாகச் சொல்லியிருக்கின்றேன்.

5)ஈழத்து படைபாளி என்ற ரீதியில் புலத்தில் வாழும் ஈழத்து தமிழ மக்கள் உங்கள் படைபுகளிற்கு தரும் ஆதரவு பற்றியும் தமிழ் ஊடகங்கள் உங்களிற்கு வழங்கும் ஆதரவு பற்றியும் எங்களுக்கு சொல்ல முடியுமா?மக்களை கவர்ந்திழுக்க ஏதாவது புதிய முயற்சிகளிள் இறங்கி உள்ளீர்களா அதை பற்றியும் அறிய தரமுடியுமா?

என் தாய்த் தமிழின் ஈழத்து உறவுகள் தந்த, தருகின்ற ஒத்துழைப்பு மிகவும் பாரட்டக்கூடியது. எங்களுடைய மக்களின் வாழ்க்கையில் இருந்துதான் என் படைப்புகளின் ஆரம்பம். அந்த வகையில் இன்று ஈழத்து உறவுகள் எங்கு வாழ்ந்தாலும் எங்களுடைய படைப்புகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். காதல் கடிதம் இறுவட்டில் தொடங்கி என் மீதும் வி.எஸ்.உதயா அண்ணா மீதும் ஒரு புத்துணர்ச்சியான பார்வை விழுந்துள்ளது. பரவாயில்லை இவங்கள் இரண்டு பேரும் ஏதோ புதுமையாக செய்யிறாங்கள் என்ற கருத்து இருக்கு. இதனால் எங்கள் இருவருக்கும் பெரிய பொறுப்பும் இருக்கு.!

சினிமாப் பாடலில் இருந்து கொஞ்சம் விலகியே எங்கள் கலைப்பயணம் தொடர்கிறது. எங்கள் படைப்புக்கள் ஒவ்வொன்றும் எங்களை ஒரு கணம் திரும்பிப் பார்ப்பதற்காக மட்டுமில்லை! அவர்கள் வாழ்நாள் முழுவது கேட்டு கேட்டு மகிழ்ந்து. தங்கள் பிள்ளைகளுக்கும் இசைப்பாடல் மூலமாக தமிழை ஊட்ட வேண்டும் என்பது என் பெரிய ஆசை என்றுகூடச் சொல்லலாம்.

இந்தச் சின்னச் சின்ன முயற்சிகளால் எங்கள் வாழ்வின் விழுமியங்களைத் தேடி எடுத்து நம் தமிழ் மக்களுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கலாம். காலப் போக்கில் இந்தப் படைப்புகள் புலம்பெயர் மக்களின் கலைப் பொக்கிசங்கள் ஆகவும் வழியமைத்துக் கொடுக்குமல்லவா. ஆனால் இன்னும் எங்கள் மக்கள் எங்கள் கலைஞர்களை உற்சாகப் படுத்துவதில் விழிப்புணர்ச்சி கொள்ளவில்லை என்பது என் ஆழமான கருத்து. இந்த வெளிநாடுகளில் உள்ள மக்கள் அந்த மக்களின் கலைப்படைப்புகளை எப்படி மதிக்கின்றார்களோ..கலைஞர்களை பொருளாதார ரீதியாகவும் எப்படி ஊக்கப் படுத்துகிறார்களோ அதே மனோநிலை எங்கள மக்களுக்கும் மிகவிரைவில் வரவேண்டும். அப்போது எங்கள் கலைப் படைப்புக்கள் செழிப்படையும்.

தமிழ் ஊடகங்களை பொறுத்தவரையில் எங்களை எங்கள் கலைப் படைப்புகளைக் காவிச் செல்லும் காற்றலை வாகனங்கள். எங்கள முகவரிக்கு உரம் போட்ட உத்தம புருசர்கள் என்றுதான் சொல்லவேண்டும். நான் ஒன்று இரண்டு குறிப்பிட்டுக் கூறமுடியாது ஏனென்றால் ஒட்டுமொத்தமாக இன்று எல்லா வானொலிகள் தொலைகாட்சிகள் என்றுமே எங்களோடு இணைந்திருக்கிறார்கள். மக்கள் மனங்களில் நாங்கள் இடம்பிடிக்க எங்களுக்கு உயிரூட்டிகள். விசேடமாக நான் இணையப் பத்திரிகைள் சஞ்சிகைகளையும் குறிப்பிட வேண்டும். அந்த வகையில தமிழ்நாதமும், யாழ் இணையமும் உன்னதமான உதவிகளை எங்களுக்குச் செய்திருக்கின்றன.

மக்களைக் கவாந்திழுப்பதற்கான புதியமுயற்சிகள் பற்றி இப்போது நான் குறிப்பிட முடியாது. அது வெற்றியளிக்கும் போது இன்னுமொரு தருணத்தில் குறிப்பிடுகின்றேன்.

வியாபார உத்திகளை வளரும் நேரத்தில் குறிப்பிடுவதும் அழகல்ல வளர்ந்த பின்னர் பார்ப்போம். இந்த யாழ் இணைய மூலம் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்துவதற்கான சில எண்ணங்கள் என்னிடம் உள்ளது. நேரம் வரும்போது கூறுகின்றேன்..

6)காதல் மொழி இசை தட்டில் வந்த "பெண்கள் இல்லாத உலகில்" பாடல் மிகவும் இன்றைய இளம் சமுதாயத்தை கவர்திழுக்க கூடிய ஒரு பாடல் அத்துடன் ஆங்கில வசனங்களுடன் வந்து செல்கின்றன இவ்வாறான படைப்புகளை ஈழத்து கலைஞர்கள் படைப்பதன் மூலம் இளம் சமுதாயத்தின் மத்தியில் நல்லதொரு இடத்தை பிடிபார்கள் என்பது என்னுடைய சிந்தனை இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?அத்துடன் இவ்பாடலில் ஆங்கில பிரயோகங்கள் வந்ததால சில விமர்சங்களையும் நீங்கள் ஏற்று இருக்கலாம் என்று நினைகிறேன் இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

நீங்கள் சொல்லுகின்ற அதே கவர்ந்திழுக்கக் கூடிய அந்த நுட்ப சிந்தனையில் உதித்த பாடல் தான் இது:) அதே இளம் சமுதாயத்தை வேறு திசைகளில் செல்லாதிருக்க, அவர்களுக்குப் பிடித்த இசைவாள் உறையில் எங்கள் வாழ்வின் தருணங்களை உருகி ஊற்றி சிறந்த இசைவாளாக அவர்கள் விளையாடக் கொடுக்கும் முயற்சிதான் இது. உங்கள் சிந்தனைக்கும் கிடைத்த வெற்றிதான் இந்தப் பாடலின் வெற்றியும் கூட. ஆங்கிலப் பிரயோகம் என்பது எனக்குப் பிடிக்காத ஒன்று..

என் பாடல்களில் ஆங்கிலம் கலந்து எழுதக்கூடாது என்ற கொள்கையுடையவன் நான். ஆனால் நான் லண்டன் சென்றிருந்த போது ஒரு இளைஞன் கேட்டான் அண்ணா உங்கள் பாடல்கள் அருமை ஏன் நீங்கள் அடுத்த அல்பத்தில் எங்களுடைய விருப்பத்திற்கிணங்கவும் ஒரு பாடல் செய்யக்கூடாது என்று அவனைப் போன்ற பதின்மப் பருவத்து நம் பிள்ளைகளை இசையால் பத்தியப்படுத்தவே அந்தப் பாடல். இங்கே நோர்வேயில் வாழ்கின் என் இனிய நண்பன் சுதாஸ் அம்மாவைப் பற்றி தன்னுடைய உணர்வுகளையும் ஆங்கிலத்தில் எழுதி தானனே பாடியும் இருக்கிறார். அம்மாப் பாடலின் இடையிசையின் போது அதைக் கவனிக்கலாம்.

அது தவறு என்றும் நான் நினைக்கவில்லை. ஏன் என்றால் அவர்கள் வளர்ந்து வருவது வீட்டிலே தமிழும் வெளியிலே பலதரப்பட்ட புதிய மொழிச்சூழல். அவர்களின் கைகளைப் பிடித்து இரு தண்டவாளங்கள் போல் இரு மொழிகளையும் பூட்டி ஓட்டிச்செல்ல வேண்டியது எங்களின் கடமையென்று உணர்கிறேன். இந்தப் பாடலுக்கான பெரியவர்களின் விமர்சனங்களை இன்முகத்தோடு வரவேற்கிறேன். அதிலிருந்தும் சிந்திக்கின்றேன். விமர்சனங்கள் என்னை புதுப்பிக்கிறது.

7)காதல் கடிதம் என்ற இறுவட்டை 2.08.2003 ஓஸ்லோவில் வெளியிட்டு இருந்தீர்கள் பாரியளவு வெற்றியை பெற்றது என்று நினைகிறேன் எல்லா பாடல்களும் நன்றாகவே இருந்தன அதிலும் யாழ்தேவி பாடல் மிகவும் நன்றாக இருந்தது,காதல்கடிதம் பாடலிறக்கா திரைகாவியமாக்கபட்டது என்று அறிந்தேன் இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?காதல் கடிதம் பற்றி நீங்கள் கூற விருப்புவது?

நன்றிகள். யாழ்தேவிப் பாடல் எங்கள் மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துவிட்டு ஒன்று. 1986 முன்பாக என்று நினைக்கின்றேன். அப்போதிருந்த வாழ்க்கை முறை இன்று இல்லை. அந்த ரயில் பயனத்தை அனுபவித்தவர்களுக்கு அதன் அர்த்தங்கள் புரியும். ஆனால் இதையொரு புதிய உத்தியாக நாங்கள் திட்டமிட்டு உருவாக்கினோம்.

ஒரு பிரயாணத்தை மக்களின் கண்முன் காதுவழியாகக் கொண்டு செல்லும் முறையை முயற்சி செய்து பார்த்தோம். அது மிகுந்த வெற்றி பெற்றுவிட்டது. அதே பாணியிலும் எங்கள் படைப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இது நாங்கள் உருவாக்கிய புதிய முறை வருங்காலங்களில் பிரபல்யமாகலாம். ஒரு பாடல் என்றால் தொகையறா, அனுபல்லவி பல்லவி, இரண்டு அல்லது மூன்று என்ற சரணங்கள் என்று பழக்கப்பட்ட விதிமுறையை மீறியிருக்கின்றோம். நவீனம் என்பது மரபைச் சீரழிக்காமல் மீறுவதும் அதில் இருந்து ஒரு புதியவடிவத்தைக் கொடுப்பதும் தானே இசைக்கும் இனிமை. கவிக்கம் அழகு! இப்போது உள்ள புதுக்கவிதைகள் மாதிரி.

காதல் கடிதம்: ஒரு தொலைபேசி உரையாடல் வாயிலாக உருவான நட்பின் மூலம் உருவாக்கப்பட்ட ஓர் இசைத்தொகுப்பு திரைப்படமாவதை எண்ணி எல்லோரும் அதிசயிக்கும் வண்ணம் இத்திரைப் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் காதல் கடிதம் திரைப்பட விழாவின் வெற்றிக்கு பின் போட்டி போட்டுக் கொண்டு தமிழ் சினிமா தயாரிப்பில் ஈடுபடப்போவது நிச்சயமாகும்.

உங்கள் வாழ்வை திரையில் பார்த்து மகிழ காத்திருங்கள். காதுகளுக்கு விருந்து படைத்தோம் உங்கள் கண்களுக்கும் விருந்து படைக்க மிக விரைவில் வருவோம்! என்கிறார்கள் காதல் கடிதம் திரைப்படக் குழுவினர்.

இத்திரைப்படத்தை தயாரிக்க பெரிய உதவி வழங்கிய தயாரிப்பாளரின் பதிலுக்காக காத்திருக்கின்றோம். திரைப்படம் திரையிடுவதற்கான தயார் நிலையில் உள்ளது. மிக விரைவில் என எதிர்பார்க்கின்றேன். இதை சந்தைப்படுத்துவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. தடங்கல்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை என்று பாடத் தோன்றுகிறது எனக்கு.:).

8)கடந்த கிழமை யாழ் இணையதளத்தில் ஒருவர் ஈழத்துபடைப்பாளிகளிற்கு இங்குள்ள கள உறவுகள் உற்சாகம் அளிபதில்லை என்று குறிபிட்டு இருந்தார் இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?அத்துடன் இங்கு அதாவது யாழ் இணையத்தில் வளர்ந்து வரும் கலைஞர்களிற்கு அல்லது படைபாளிகளிற்கு இவர்கள் உற்சாகம் வழங்குவதில்லை என்பது மனவருத்தமான விடயம் அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

அவருடைய கருத்து அவருடைய அனுபவத்தில் மலர்ந்ததாக இருக்கலாம். அது உண்மையாகக் கூட இருக்கலாம். ஏன் ஆரம்பத்தில் எனது படைப்புகள் கூட கவனிக்கப்படாமல் தான் இருந்தது. சரி இவங்கள் கவனிக்கிறாங்க்ள் இல்லை எண்டு போட்டுத்தான் நான் பாடல்களை இணைத்தேன். பாடல்களைக் கேட்டாவது நம் உறவுகள் கருத்துச் சொல்கிறார்களா என்று பரிசோதித்துப் பார்த்தேன். அது மிகவும் நன்றாகப் வேலைசெய்துவிட்டது.

உங்களுக்கு உண்மையைச் சொன்னால் என்ன... எங்கடை ஆட்கள சிலவேளை உசுப்பி விடவேணும் பாருங்கோ. இல்லையெண்டால் சரியான கஸ்டம் பாருங்கோ என்றுதான் சொல்வேன். நான் இங்கு கவனிக்கப் பட்டு உங்களுக்கு இந்த செவ்வியை வழங்குவதற்கு என் பாடல்கள் தான் காரணம்.

அந்த ரீதியில் அவருடைய கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் அதுதான் சரியென்று என்னால் சொல்லமுடியாது. யாழ்இணைய நிர்வாகிகளுக்குத்தான் இதன் உண்மை தெரியும். ஆனால் பொதுவாக நான் இங்குள் படைப்புகளை உற்று நோக்கும் போது அப்படி அவருடைய கருத்துப பிழையாக இருக்குமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. என்ன குழப்புகிறேனா..குழப்பத்தில் தானே நல்ல தெளிவு வரும். மனது இலகுவாகும்.

ஆனால் என்னைப் போன்ற எத்தனை கலைஞர்கள் உற்சாகப்படுத்தப் படுவதற்கு என்னுடைய இந்தச் செவ்வியையும் உதாரணமாகக் கூறாலாம். யாழ் இணையத்திற்கு நன்றிகள்.

9)ஈழத்து படைபாளி என்று கருதும் இடத்தில் இரு தரபட்ட படைபாளிகள் அதாவது ஒரு பிரிவினர் மறைந்த படைபாளிகள் மற்றவர்கள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் படைபாளிகள் மறைந்த படைபாளிகளிகளை கெளரவிக்க வேண்டும் இல்லை என்று சொல்லவில்லை ஆனாலும் தொடர்ந்து அவர்களை பற்றி எழுதியும் அவர்களை பற்றி செய்திருந்தால் நல்லது அவர்களை பற்றி புகழ்பாடுவது அதிகம் தவிர தற்போது இருக்கும் கலைஞர்களை பேசுவது குறைவு யாழ் இணையதளத்திலும் இந்த குறை காணபடுகிறது இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?அத்துடன் மறைந்த கலைஞர்களை இளையசமூகத்தில் இருப்பவர்களிடம் திணிப்பதால் எதுவித பயனுமில்லை என்பது என் பார்வை இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

ஈழத்துப் படைப்பாளிகளை, அல்லது கலைஞர்களைக் கௌரவிப்பதில் என்றைக்குமே நான் பின்நிற்பவன் அல்ல. அந்த வகையில் மறைந்த எங்கள் கலைஞர்களை அவர்கள் பிறந்த தினத்தில் அல்லது அவர்களுடைய மறைந்த நாட்களில் அவர்களை நினைவு கூர்ந்து அவர்களை பற்றிப் பேசுவதும், வாழ்த்துவதும், பாரட்டுவதும் மனித பண்புள்ள நல்ல மக்களுக்கு என்றுமே அழகு. ஆனால் நெடுக அவர்களைப் பற்றியே புகழ்பாட வேண்டிய தேவையில்லை, அவசியமும் இல்லை. கலைஞர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே பாராட்ட வேண்டும், வாழ்த்தவேண்டும் அவர்களை என்றுமே மனம் சலிக்காது உற்சாகப் படுத்த வேண்டும்.

எங்கள் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஒரு குறைபாடு என்னவென்றால் கலைஞனுடைய படைப்புகளைப் பற்றிப் பேசாது. அவர் தனிபட்ட வாழ்க்கை பற்றியும், அவருடைய தவறான அனுகுமுறைகள் பற்றியே வசைபாடுவது. இதற்காகவே அவர்களை எடுத்த எடுப்பிலேயே ஒதுக்கித்தள்ளுவது. இதனால் எத்தனை திறமையுள்ள பல முதிய கலைஞர்களும், புதிய கலைஞர்கள் வெளிச்சத்திற்கு வராமல் தத்தளிக்கிறார்கள்.

இந்த வசைபாடுதல், குறைகூறுதல் போன்ற கிழ்த்தனமான பழக்கத்தில் இருந்து எங்கள் புதிய சமுதாயம் விடுபட்டு, அனைத்துக் கலைஞர்களையும ஊக்குவித்து ஆரோக்கியமான பாதையில் அழைத்துச் செல்லவேண்டும். திணிப்பு என்பது எனக்கு என்றுமே பிடிக்காத விடயம். அது எந்தத் துறை சார்ந்ததோ, கல்வி சார்ந்ததோ..எதுவானாலும் களையப்படவேண்டிய ஒன்று.

10)அடுத்த ஒரு குறையாக நம் படைபாளிகளிடம் காணுவது மக்களின் ரசணை மட்டம் காலதிற்கு காலம் மாறி வருகிறது,உங்களுக்கே தெரியும் வேகமான இந்த உலகில் காலதிற்கேற்ப சூழலிற்கு ஏற்ப மக்களின் ரசணை மட்டம் மாறிவருகிறது இதை எங்கள் படைபாளிகள் கண்டு கொள்வதில்லை இதனால் தான் தென்னிந்திய படைப்புகளுடன் எமது படைப்புகள் போட்டி போடுவதில் சிரமமாக இருகிறது,ஆனால் உங்கள் படைப்புகள் சற்று வித்தியாசமானது என்பது என்பார்வை இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

நீங்கள் மிகவும் அழமான கேள்விகளை என்னிடம் கேட்பது எனக்கு மகிழ்வைத் தருகிறது. நியைக் கேள்விகளை ஒரு கேள்விக்குள் மறைத்து தலைப்பின்னல் போல் பின்னிப் பின்னிக் கேட்கின்றீர்கள். நீங்கள் குறிப்பிடுவது முற்றிலும் உண்மை. பழையன கழிதலும் புதியன புகுதலும் நல்லதே என்று சொல்லுவார்கள்.

ஆனால் பழமையிலேயே ஊறிக் கிடப்பதையே விரும்புவார்கள். மக்களின் ரசணை மாற்றத்தை உணராத அல்லது உள்வாங்காத எந்தக் கலைஞனும் பேசப்படுவதற்கான வாய்ப்பே இல்லை. கலை வந்து மக்களுக்காகவே ஒழிய கலைக்காக மக்களில்லையே என்ற சூட்சுமத்தை, முதலில் நாங்கள் புரிந்துகொள்ள மறுக்கின்றோம்.

இந்த இதயந்திரமயமான வாழ்க்கையின் வேகத்தைப் புரிந்து கொண்டு அதன் வேகத்தோடு தமிழகக் கலைஞர்கள் ஓடுவதால் தான் அவர்களை எண்ணி நாங்கள் வியக்கின்றோம். அவர்களின் படைப்புகளிலேயே இன்னும் தங்கியிருக்கின்றோம்.

அண்மையில் வெளிவந்து பெரிய அலையை உருவாக்கிய சிவாஐp திரைப்படத்தை எடுத்துக் கொள்வோம். ரஐpனிக்காந்தை இந்தக் கால ரசனை மாற்றத்திற்கேற்ப இயக்குனர் சங்கர் அவர் வெளிக்கொண்டு வந்தபடியால்தான் நாங்கள் இன்னும் அவரை ரசிக்கின்றோம். அவர் ஒப்பனைகள் ஏதும் இல்லாத கதாநாயகனாக நடித்தால் அந்தக் கதாநாயகியோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவருக்கு அப்பா போல்தான் தெரிவார். அதை நாங்கள் எப்படி உள்வாங்க முடியும்.

உண்மையிலேயே அவர் அப்பா போல்த்தான் இருக்கிறார் என்பது வேறு கதை. காலம் செய்த கலைக் கோலங்கள் என்றும் இதைச் சொல்லலாம். அது ரஐpனிக்காந் என்பவரின் தனித்திறமையும்கூட.

இதே போலத்தான் எங்களின் படைப்பாளர்களும் மக்களின் ரசனை மாற்றத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப படைப்புகளை உருவாக்க வேண்டும். இல்லையேல் ஓரு சிறிய வட்டத்திற்குள் தான் அவர்களின் கலைப்படைப்புச் சுற்றும்.

அவர்களோடு போட்டி போட எங்களைப் பொறுத்த வரை என்ன உண்டு...? இத்தனை வருடமும் எங்களால் ஒரு சினிமாத்துறையை கட்டியெழுப்பி எத்தனை படங்களைத் தயாரிக்க முடிந்தது. சினிமா என்ற அற்புதமான ஊடகத்தை கையில் எடுத்து அழகாக வைத்திருக்கின்றோம். அதை அழகாக இன்னும் பயன்படுத்த தொடங்கவே இல்லையே. நான் அறிந்த வகையில் ஒரு பத்துப் படங்கள் தான் கொஞ்சம் சினிமாப் படம என்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு வெளிவந்திருக்கும்.

நாங்கள் தமிழ்ச்சினிமா, பற்றியும் தமிழக உறவுகளைப் பற்றியும் விமர்சிக்கவும், அவர்களைக் குறைகூறிக் கொண்டு அவர்களிடமே மகிழ்கலைக்காக தவம் கிடக்கின்றோம். அவர்களை அரவணைத்துக் கொண்டு அவர்களிடம் இருந்து ஏதாவது கற்றுக் கொள்ள முயல்கிறோமா..? அல்லது அதற்கான முயற்சியில் இதயசுத்தியோடுதான் இணைந்திருக்கிறோமா..? எங்கே ஓசியாப் படம் வரும் இறக்கிப் பார்க்கலாம். அல்லது அவர்களின் படைப்புகளில் இருந்து திருட்டுத்தனமாக உழைக்கலாம் என்றுதானே பார்க்கிறோம்.

என்னைப் பொறுத்த மட்டில் அவர்களோடு நாங்கள் போய் போட்டி போடுவது என்ற ஒரு எண்ணமே தவறானது. அதற்கு முதல் நாங்கள் எங்களை அதிவேகத்தோடு சினிமாக்களைத் தயாரிக்க வேண்டும். அதற்கு மக்கள் மத்தியில் பலவிதமான வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தப்படவேண்டும்..

11)இரண்டு நாளைக்கு முன் யாழ்கள உறுப்பினர் சன்டீவியை நம் மக்கள் அதிகமாக பார்கிறார்கள் என்று விசனபட்டிருந்தார் ஆனால் அதில் விசனபட எதுவுமில்லை அவர்கள் கால மாற்றதிற்கேற்ப நிகழ்ச்சிகளை வழங்கிறார்கள் எமது ஊடகங்கள் இன்னும் 1960,1970 காலபகுதியில் தாங்கள் வாழ்ந்த யாழ்பாணத்து முறையில் நிகழ்ச்சிகளை சித்தரித்து கொண்டிருகிறார்கள்.இந்த பாணியை அந்த காலபகுதியில் வாழ்ந்தவர்கல் ரசிபார்கள் தவிர தற்போது இளம்சமூகம் இதை பார்வை இட விரும்பமாட்டார்கள்,இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

சன் தொலைக்காட்சியை அதிகம் பார்ப்பதும், பார்க்காமல் விடுவதும் ஒவ்வொரு தனிப்பட்ட உறவுகளின் ரசனையைப் பொறுத்தது. எங்களுடைய மக்கள் ஒவ்வொருவரும் பொழுது போக்காக தங்கள் நேரங்களைச் செலவழிப்பதற்கு துடிப்பது ஒன்றும் தப்பில்லை.

ஏன் என்றால் இந்த கணனியுகத்தில் அவர்களுக்கு நிறைய ஓய்வு தேவை அதைப் போக்க இன்று அவர்கள் வீடுகளை ஆக்கிரமித்திருப்பது தொலைக்காட்சிகள். அதிலும் இந்த தமிழகத்தில் இருந்து வரும் அனைத்துத் தொலைக்காட்சிகளும் தமிழக மக்கள் ரசனையையும், அத்தோடு எங்கள் மக்கள் ரசனையும் சேர்த்துத்தான் சீரழிக்கிறது. ஆனால் இந்தத் தொலைக்காட்சிகளில் வருகின்ற மனிதவளர்ச்சிக்கு ஆரோக்கியம் தருகிற நிகழ்ச்சிகளைத் தெரிவுசெய்து பார்க்கலாம்.

ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் ஒரு தனித்தன்மையுண்டு. அதன் வளர்ச்சியும் மக்களைக் கவரும் வகையில் நிகழ்ச்சிகளை தயாரிப்பதில் அவர்கள் முன்னிலையில் இருக்கின்றார்கள். ஆனால் தமிழகத்தில் இருந்த ஒளிபரப்படுகின்ற மக்கள் தொலைக்காட்சி கொஞ்சம் வேறுபட்டு நிற்கிறது. இது தரிசனம் தொலைக்காட்சி வாயிலாகப் பார்க்க கிடைப்பது பெருமகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் மத்தியிலும் எத்தனை தொலைக்காட்சிகள் உள்ள அவற்றுக் முன்னுரிமை கொடுக்கவேண்டியது எங்கள் கடமை. எங்கள் தொலைக்காட்சிகளை ஊக்குவித்து வளர்க்க வேண்டியது எங்களுடைய தேவையும்கூட.

ஆனால் சன் தொலைக்காட்சியில் எனக்குப் பிடித்த நான் விரும்ப் பார்க்கும் ஒரே நிகழ்ச்சி அதாங்க அசத்தப் போவது யாரு.! உண்மையிலேயே நான் இதற்காக சன்தொலைக்காட்சி குழுமத்தை வாழ்த்துகிறேன். இந்த நிகழ்வை எங்கள் மக்கள் தாரளமாக விரும்பிப் பார்க்கலாம் என்பது என் கருத்து.

எங்கள் தொலைக்காட்சிகளில் முந்திவந்த படலைக்குப் படலை. ரி.வி.ஐ தொலைக்காட்சியில் ரி.வைத்திலிங்கம் நிகழ்ச்சி என்னைக் கவாந்தவை. எங்களுடைய தொலைக்காட்சிகளின் பெரும் பாலான படைப்புகள் சிறப்பாக இருக்கின்றன. இன்னும் இன்னும் நிகழ்ச்சித் தயாரிப்புகளில் வளர்வதற்கும் நிறைய இடமிருக்கிறது. வளர்வார்கள் என்பது என் நம்பிக்கை. நிகழ்ச்சிகளின் ரசனை மாற்றம் பற்றி நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கின்றேன். அதே போன்ற காலத்திற்கேற்ப்ப மாற்றம் கண்டிப்பாகத் தேவை என்பதும் என் கருத்து.

12)தமிழ ஊடகங்கள் உங்கள் படைப்புகளிற்கு தரும் ஆதரவை பற்றி நீங்கள் கூறுவது என்ன?யாழில் நீங்கள் குறீபிட்டு இருந்தீர்கள் உங்கள் படைப்புகள் பல ஊடகங்கள் வாங்கி சென்றன என்று ஆனால் ஒரு தமிழ ஊடகம் மட்டும் தான் பணத்தை தந்தது என்று இவர்களிற்கு நீங்கள் கூறுவது?

எதுவிதமான தயக்கமும் இன்றி அவர்கள் முழுமனதோடு எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள். ஆனால் எங்களுடைய தமிழ் ஊடகத்துறை வளர்ந்த அளவுக்கு எங்கள் மத்தியில் கலைசார்ந்த படைப்புகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இல்லாதது எனக்கு பெரிய கவலை தருகின்றது. தனியார் நிறுவனங்கள் கலைப்படைப்புக்களை உருவாக்க முன்வரவேண்டும்.

நான் முதன் முதலாக என் படைப்புகளில் இருந்து ஒரு பிரபல்யமான பனங்காய்ப் பணியாரமே என்ற பாடலைக் காணொளி வடிவில் தயாரித்திருந்தேன். அந்த பாடலை வெளியீடு செய்வதற்காக எங்கள் மத்தியில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் அனுப்பி வைத்தேன்.

ஒரு தொலைக்காட்சியைத் தவிர ஏனைய தொலைக்காட்சிகள் சொன்ன பதில் நாங்கள் சினிமாப் பாடல்களை ஒளிபரப்புவதற்கே பணம் வழங்குவதில்லை பிறகு எப்படி உங்களுக்கு வழங்கமுடியும் என்று. அவர்களுடைய பொருளாதார ரீதியான பிரச்சனைகளை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு ஒரு சிறிய ஊக்கத் தொகை கொடுத்து ஒளிபரப்பி வளர்த்தால் எத்தனையோ படைப்புகளை மிகவும் தரமாக எங்களால் உருவாக்க முடியும் என்பது என் கருத்து.

தமிழீழ மக்களும் ஒன்றை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். மகிழ்கலை என்பது இலவசமாகப் படைக்கப்படுவதில்லை. அதைத் தயாரிக்கும் கலைஞர்கள் எத்தனையோ போரட்டங்களையும் கஸ்டங்களையும் தாங்கிக் கொண்டுதான் இவற்றைத் தயாரிக்கின்றார்கள். தமிழகத்தில் இருந்து வெளிவருகின்ற சினிமாப் பாடல்களோடு எங்கள் பாடல்களை ஒப்பிட்டு அதே போன்று ஒளிபரப்பக் காத்திருப்பது தவறான பாதையாகும். இந்த விடயம் தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப் படவேண்டியது எங்களுடைய அனைத்து தமிழ் ஊடகங்களின் பொறுப்பு என்பதை நான் இந்தத் தருணத்தில் மிகவும் தாழ்மையோடு குறிப்பிடுகின்றேன்.

முக்கியமான விடயம் ஒன்று அனைத்து வானொலிகளும் புலம்பெயர்நாடுகளில் இருந்து எங்கள் கலைஞர்;கள் படைப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து தினமும் பாடல்களை ஒலிபரப்ப வேண்டும். உதாரணத்திற்கு இலங்கையில் சக்தி எப்.எம், கனடாவில் உள்ள கனேடியத் தமிழ், சீ.எம்.ஆர், கீதவானி போன்ற வானொலிகள் செய்வதை பின்பற்றினால் எங்கள் கலைஞர்கள் வளர்ச்சியடைய வசதியாக இருக்கும். நான் அறிந்தவகையில் இந்த வானொலி தினமும் எங்கள் பாடல்களை ஒலிபரப்புகின்றார்கள். அதற்காக நான் மற்ற வானொலிகளை குறை சொல்கிறேன் என்று மட்டும் எண்ணாதீர்கள்..

13)அடுத்த பிரச்சினை நம் கலைஞர்களிற்கு சந்தைபடுத்தல் மற்றும் விளம்பரம் செய்வதில் உள்ள பிரச்சினை இதை நிவர்த்தி செய்ய ஏதாவது திட்டங்கள் வகுத்துள்ளீர்களா?

என்னிடம் நிறையத் திட்டங்கள் இருக்கின்றது. இன்று ஐரோப்பாவில் பத்து நாடுகளில் நான்கு இலட்சத்திற்கு அதிகமாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் மக்கள் இருக்கின்றார்கள். கனடாவில் மட்டும் நான்கு இலட்சத்திற்கு மேல். இங்கெல்லாம் எத்தனை தமிழ் அமைப்புக்கள் இருக்கின்றன?. இந்த அமைப்புகளின் ஊடாக எங்கள் கலைஞர்;களின் படைப்புகளை எங்கள் மக்களிடம் கொண்டு செல்லலாம். இந்தத் தமிழ் அமைப்புகள் அது எதுவாக இருந்தாலும் கலைப்படைப்புகளை வெளிக்கொண்டு வருவதற்கான, அல்லது கலைஞர்களின் படைப்புகள் தொடர்பான விளம்பரங்களை அந்த நிகழ்வுகளில் வழங்க முன்வரவேண்டும்.

ஒவ்வொரு கலைநிகழ்வுகள், பொதுக்கூட்டங்களின் ஊடாகவும் கலைப்படைப்புகள் பற்றிய செய்திகளைப் பரப்புவதை ஒரு தார்மீகப் பணியாக மேற்கொள்ள வேண்டும். இங்கு உள்ள கலைபண்பாட்டுக் கழகங்கள் ஒவ்வொரு வருடமும் தங்கள் நாடுகளில் நடக்கின்ற நிகழ்வுளுக்கு எங்களைப் போன்ற கலைஞர்களை அழைத்து அறிமுகப்படுத்தலாம். தமிழகத்தில் மட்டுமிருந்து அழைக்கவேண்டிய அவசியமில்லையே! எங்கள் படைப்புகள் பற்றிப் பேசலாம். இங்குள்ள கலைபண்பாட்டுக் கழங்கள் தாயகம் சார்ந்த படைப்புகளுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுப்பதாக எனக்குப் படுகின்றது.

எங்களுடைய படைப்புகள் தாயகம் சார்ந்த பாடுபொருள் இல்லையென்றால் தட்டிக்கழித்து, கண்டுகொள்ளாமல் விடுவதுகூட எங்கள் புலம்பெயாந்த நாடுகளில் உள்ள குறைபாடு. கலைப்படைப்புகளை வெளிக்கொண்டு வருவதற்கான நிகழ்வுகளையும் நிகழ்த்த வேண்டும். தமிழ் ஈழத்தில் இருந்து வருகின்ற படைப்புகள் மட்டும்தான் படைப்புகள் என்றில்லையே, அதே ஈழத்தில் பிறந்து வளர்ந்து, இங்கே புலம்பெயர்நாடுகளில் வாழ்கின்ற நாங்கள் ஈழத்தின் பிள்ளைகள் இல்லையா...? எங்களைத் தேடிப்பிடித்து இனங்காட்ட வேண்டியதும் இங்குள்ள தமிழர் கலைபண்பாட்டுக் கழகங்களுக்கு உள்ள பொறுப்பல்லவா..? இப்படி இங்குள்ள ஒவ்வொரு தமிழ் அமைப்புகளும் எண்ணவேண்டும்.

அப்போது தான் எங்கள் படைப்புகளை சந்தைப்படுத்த என ஒரு சந்தை உருவாக வாய்பிருக்கிறது. சரி எங்கள் தாயகத்தில் இருந்து வருகின்ற கலைப் படைப்புகள்கூட எங்கள் தமிழ் வியாபார நிலையங்களில் காட்சிப் பொருட்களாக தூசி படிந்து தூங்கிக் கொண்டுதானே இருக்கிறது. இங்கே நாங்களே படைக்க வேண்டும் நாங்களே எங்கள் படைப்புகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லவேண்டிய இக்கட்டான சுழ்நிலையில் இருக்கின்றோம்.

இதையெல்லாம் கடந்துதான் நான் எனக்கொரு நிறுவனம் நிறுவி என் படைப்புகளைக் மக்களிடம் கொண்டு செல்ல முயற்சி செய்தேன். அது ஓரளவிற்கு எனக்குத் திருப்தியைத் தருகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம் சந்தைப்படுத்தல் தொடர்பாக எங்கள் மக்கள் மத்தியில் எப்படிப் பட்ட மாற்றங்கள் ஏற்படுகிறது... என்று.

14)உங்களிடம் படைபாளி என்ற ரீதியில் கேட்கிறேன் ஏன் நம்மவர்கள் படைப்புகள் ஈழத்து தமிழர்களை மட்டும் மையமாக கொண்டு எடுக்கபடுகிறது தென்னிந்திய தமிழர்களையும் கவரு, விதமாக எடுத்தால் ஈழத்து படைபாளர்களின் ஆதரவு அதிகரிக்கும் தானே?

எங்களுடைய ஈழத்து மக்கள் வாழ்கையை மையமாக வைத்துத்தான் நாங்கள் படைப்புகளை உருவாக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் எதிர்பார்ப்பும்கூட. நான் அண்மையில் தமிழகம் சென்று பலதரப்பட்ட தமிழகக் கலைஞர்களை, பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கும் போதும் என்னிடம் இதை;தான் வலியுறுத்துகிறார்கள்.

அவர்களும் எங்களுடைய படைப்புகளை மதிக்கிறார்கள். எங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்கின்றார்கள். எங்கள் மத்தியில் உள்ள கலைஞர்களைப் பற்றி அறிந்தும் வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் நாங்கள் அவர்களுக்கும சேர்த்துப் படைப்பதற்கும் தயாரகவும், அவர்களுக்கு விளங்கக்கூடிய வகையிலும் படைப்புகளை உருவாக்க வேண்டும்.

உதாரணத்திற்கு என்னுடைய காதல் மொழி இசைத்தொகுப்பில் உள்ள "தாளையடியில் வள்ளம் எடுத்து தாய்நாட்டை விட்டு போகின்றோம்" என்ற பாடலை ஒலிப்பதிவு கூடத்தில் பதிவுசெய்யும் போது பாடகர் கிருஸ்ணராஐ; அண்ணன் அவர்களுக்கு வள்ளம் என்ற சொல் புரியவில்லை என்றார். அப்போது அங்கிருந்த உதயா அண்ணா வள்ளம் என்றால் படகு என்று விளங்கப்படுத்த வேண்டிய தேவையிருந்தது. இது போன்ற பல சிக்கல்கள் எங்கள் படைப்புகள் அவர்களைப் போய்ச் சேரும் போது உருவாகும். அந்த வகையில் நாம் மிகவும் சிரத்தை எடுத்து படைப்புகளை உருவாக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.

அவர்களுடைய படைப்பை எங்களால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அவர்கள் பழக்கப் படுவதற்கு எங்களிடம் நிறையப் படைப்புகள் உருவாக வேண்டுமே. எத்தனை வருடங்கள் தான் இப்படியே எங்களுக்குள் இவை பற்றி விவாதித்துக் கொண்டே இருக்கப் போகின்றோம் என்று எனக்குத் தெரியவில்லை.?

15)யாழ் இணையதளம் பற்றியும் கள உறவுகள் பற்றியும் நீங்கள் கூறி கொள்ள விரும்புவது என்ன?அத்துடன் யாழ் இணையதளம் உங்கள் படைபுகளிற்கு எவ்வாறு உறுதுணை புரிந்தது ஏனைய இணையதளங்களிள் இருந்து வேறுபட்டு என்பதை கூறமுடியுமா?

யாழ்கள உறவுகளில் எத்தனையோ அற்புதமான நண்பர்கள் இருப்பதை என்னால் உணரமுடிகிறது. ஆனால் என்ன அவர்களைப் பார்க்க முடியாது, பேச முடியாது, நட்புப் பாராட்ட முடியாது. ஆனால் ஏதோ ஒரு வகையில் ஒர் இனம் புரியாத நட்புரீதியான அலைவரிசை இருப்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

மோகன் அண்ணாவை நல்லாய்த் தெரியும். அவருடன் பலமுறை கதைத்திருக்கிறேன். மிகவும் அமைதியானவர் தான் உண்டு தனது வேலை உண்டு இருப்பவர் போல் தோற்றமளிப்பார். ஆனால் அவரின் அமைதிக்குப்பின் புயல் போல் ஒர இணைவலை பூத்துக் கொண்டிருப்பதை எண்ணும் போது மிகவும் மகிழ்வாக இருக்கிறது.

உங்களையும் இந்த யாழ்களத்தின் ஊடாகத்தான் தெரியும். இந்த பேட்டிக்குப் பின் நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள் என நம்புகின்றேன். உலகெல்லாம் இணையமூலம் இணைந்த நண்பர்கள் தான் எனக்கு அதிகம்.

இந்த நேரத்தில் என்னுடைய பாடல்களைக் கேட்டு உங்களுடைய இனிமையான, சுவையான சூடான கருத்துக்களை முன்வைத்த அனைவருக்கும். தொடர்ந்து கருத்துக்களை வழங்கி என்னையும், என்னோடு இணைந்த எங்கள் கலைஞர்களையும் ஊக்கப்படுத்தும் அனைத்து தோழர்கள், தோழிகளுக்கும் எனது நன்றிகள்.

லண்டனில் நடைபெறும், கனடாவில் நடைபெறும் யாழ்கள ஒன்றுகூடல்கள் வேறு எந்த நாட்டில் நடந்தாலும் நான் கலந்து கொள்ள ஆர்வமாய் இருக்கின்றேன். தமிழ் இளையோர் அமைப்புக்கள் ஊடாகவும் நான் மேற்குறிப்பிட்ட கலை தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப் படலாம்.

அதற்கு யாழ்களம் ஒரு தளமாக அமையும் என நம்புகின்றேன்.

ஏன் என்றால் இளைஞர்கள் தான் அதிகம் கணனியை பயன்படுத்துவார்கள் இல்லையா..?

யாழ் இணையத்தளத்தில் என் கவிதைகள், பாடல்கள், தற்போது, சிறுகதையும் வெளிவர உறுதுணையாக இருப்பதில் பெரு மகிழ்ச்சி. இந்த ஒத்தழைப்பு என்னுடைய அடுத்த படைப்புகளுக்கும் என்று நம்புகின்றேன்.

ஏனைய இணையத்தளங்களில் இருந்து பார்க்கும் போது தனித்தமிழோடு, எத்தனையோ விதமான விடயங்களைத்தாங்கி முன்னிலை பெறுகிறது. ஆனால் வேறு தளங்களில் இருந்து வருகின்ற செய்திகளை இணைப்பதில் முன்நிற்ப்பது ஒரு குறையாகத் தெரிகிறது.

நாங்கள் ஏற்கனவே படித்த செய்திகயை மீட்டும் இங்கேயும் வாசிக்க முடிகிறது. ஆனால் கருத்துக்களம், ஒளித்தடம், விம்பகம் போன்றவை அருமையான பதிவுகள். பலதரப்பட்ட விடயங்களைப் பிரித்து வௌ;வேறு தலைப்புகளைப்புகளின் கிழ் தந்திருப்பது புதுமையாக இருக்கிறது. ஒரு சிறிய மின்நூலகம் போல் மிளிர்வதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

16)நீங்கள் ஒரு கவிஞர் என்ற வகையில் காசிஆனந்தன்,கவிஞர் புதுவை இரத்தினம் என்பவர்கள் பற்றிய உங்கள் பார்வையில் அத்துடன் மறைந்த தேசத்தின் குரல் அன்டன்பாலசிங்கம் பற்றிய உங்கள் கருத்து என்ன?

தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அண்ணன் தமிழீழத்தில் எங்களுக்குக் கிடைத்த பாரதி என்றால். உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் பாரதிதாசனை விஞ்சிய கவிதைக் கூர்வாள். தாயகக் கவிஞரை நான் சந்தித்தில்லை. ஆனால் காசிஆனந்தன் அண்ணனை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. அவரோடு பேசிக் கொண்டிருந்தால் உணர்வுகள் கொப்பளிக்கும், அவரின் கவிதை வீச்சும் எனக்கு தொற்றிக் கொள்வதைப் போல் உணர்ந்தேன். தமிழகத்தில் வாழ்ந்தாலும் எத்தனையோ இடையூறுகளுக்கு மத்தியில் எங்கள் விடுதலைப் போராட்டத்திற்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். மிகவும் ஒர் அருமையான, என்றுமே போற்றப் பட வேண்டிய கவிஞர்கள் இவர்கள். இவர்களுடைய கவிதைப் புத்தகங்கள் புலம்பெயர்ந்த எங்கள் தமிழ் வீடுகளில் இருந்தால். அந்த வீட்டில் வளரும் தமிழ்ப் பிள்ளைகள் தழிழைத் தமிழாகவும். அந்த நாட்டு மொழியை அந்த நாட்டு மொழியாகவே பேசுவார்கள். அவர்களுக்கு தமிழ் படி என்று தாய் தந்தையர் திணிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

எனது குருவாக இவர்களை இருவரையும் வணங்குகின்றேன். அவர்களின் தமிழ்ப் பணிப் பாதையில் தமிழைப் உலககெல்லாம் எடுத்துச் செல்லக் காத்திருக்கின்றேன். அவர்களுடைய அனைத்துப் படைப்புகளையும் தேடிப் பிடித்துப் படிக்கின்றேன்.

கவிஞர் புதுவை இரத்தினதுரை அண்ணன் கவிதை படிக்கும் பாணி எனக்குப் பிடிக்கும்.

ஈழப் போரட்டத்தில் உள்ள அனைத்துப் போரளிகளுக்கும் இவரின் பாடல்கள் புதுவேகத்தைக் கொடுக்கும் சக்திமிக்க கவிதைகள்.

இவரின் கவிதைகளைப் படிக்கும் போது தாய்மடி மீது படுத்துக் கொண்டு, அம்மாவின் முகம் பார்த்தால் ஒரு பூ புக்கும் அல்லவா அந்த மகிழ்வு கிடைக்கும். ஆனால் காசி அண்ணன் கவிதைகள் ஒரு தகப்பன் தன் பிள்ளைகளை உரிமையோடு உணர்ச்சி பொங்க தட்டிக் கொடுப்பது போல் இருப்பது எனக்குப் பிடிக்கும்.

http://www.yarl.com/articles/node/934

http://www.yarl.com/articles/node/932

அன்ரன் பாலசிங்கம் அண்ணனைப் பற்றி என் கவிதைகள் சொல்லும்.

17)நீங்கள் தற்போது புலத்தில் உள்ளீற்கள் உங்கள் ஈழத்து வாழ்கை,பள்ளி அநுபவங்கள் என்பனவற்றையும் புலதிற்கும் ஈழதிற்கும் நீங்கள் காணும் வித்தியாசங்களை கூறமுடியுமா?

தமிழ் ஈழத்தில் அந்த வயல்வெளியில், பனைமரக் காடுகளில், தென்னம் தோப்புகளில், மாமரங்களில், நல்லதண்ணீர்க் கிணற்றடியில் மண்வாசனை தூவும் மழையின் மடியில் மகிழ்ந்து கிடந்த காலங்கள் மறக்கமுடியாது. அந்த ஈழத்து வாழ்க்கை உண்மையிலேயே ஒர் பொற்காலம். மித்தில் வயல் என்ன? கைக்குள் வயல் என்ன? எங்கள் விளையாட்டுப் பசிக்குத் தீர்த்த மண்தரைகள்.

கரவெட்டி துன்னாலையில் உள்ள கோவிற்கடவைப் பிள்ளையார் கோவில் தேரடிதான். என் நண்பர்களுக்கும் (சத்தியமா எனக்கில்லை) தேவதைகள் பற்றிய கனவுகளைத் தேடித் தந்த இடம். அங்க இருந்துதான் திருவிழாக்களின் போது கச்சான் கொறிப்போம். இவையெல்லாம் என் படைப்புகளாய் வரும் இப்பவே சொல்லி விட்டால் பிறகு உங்களுக்கு சுவாரசியம் குறைந்துவிடும்

எனது ஆரம்பகால பாடசாலை ஞானசாரியார் கல்லூரி. இங்கு படித்த நாட்களை மறக்கவே முடியாது. நாங்கள் விக்கா திருடப் போக அங்க எங்களுக்கு படிப்பிக்கும் வாத்தியார் திருடித் தன் சட்டைப்பையில் போட அதப் பார்த்து நாங்கள் நையாண்டி பண்ண.. பிறகென்ன வகுப்பறையில வரிசையாய் நிற்பாட்டி பூசை செய்வார். இப்படி ஆரம்பக் கல்வி அங்கே கழிந்த இனிமையான நாட்கள். பிறகு காட்லிக் கல்லூரிதான் என் உலக அறிவுக்கு வித்திட்ட கல்வி மையம். இன்று உலகெல்லாம் வாழுகின்ற எத்தனையோ புத்திஐPவிகளை உருவாக்கிய அதே கல்லூரிதான் என்னையும் செதுக்கியது. அங்கு பத்தாம் வகுப்பு வரையும்தான் படித்தேன்.

தமிழில் ஆர்வம் ஏற்பட கந்தசாமி வாத்தியாரும். கணிதத்தில் கணக்குப் போட்டு விளையாட கணேசலிங்கம் மாஸ்ரர் தான் எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர்கள். அங்கே என்னோடு படித்த இனிய நண்பர்கள் எத்தனை போ இருந்தார்கள். சிலரோடு இன்னும் தொடர்பு உண்டு. ஆனால் ஏனைய நண்பர்கள் எங்கிருக்கிறார்கள், எப்படி வாழ்கிறார்கள் என்றே தெரியாது. நான் 1990 ஆண்டு ஆவணி மாதம் என் தாய்மண்ணின் வேர்பிடிங்கி தமிழகம் சென்று அங்கிருந்து இந்த நோர்வே நாட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

ஆனால் புலத்திற்கும், ஈழத்திற்கும் நிறைய வேறுபாடுகள். இந்தப் பதினாறு வருட வாழ்க்கையில் எத்தனை மாற்றங்கள். புதிய திருப்பங்கள் புதிய நண்பர்கள், புதிய வாழ்க்கை இந்த இயந்திரமயமான வாழ்க்கையையும் நேசிக்கப் பழகிவிட்ட மனிதனாகிவிட்டேன். இந்த பனித்தேசம் கொடுத்த புதிய வாழ்க்கையை உள்வாங்கிக் கொண்டு என் தாய்மண்ணிற்கு என்ன செய்யலாம் என்ற நோக்கத்தில் இந்த கலையுலகிற்குள் நுழைந்திருக்கின்றேன்.

புதிய மொழிச் சூழலில் என் அன்னைத் தமிழையும் வளர்த்து, கலைகளைப் படைத்து எங்கள் தமிழினத்தின் புகழைப் பரப்ப இங்கு பேராடுவேன். இந்த புலப்பெயர்ந்த நாட்டில் இருந்து கிடைக்கின்ற அனுபவங்களைச் சுமந்து என் படைப்புகள் உங்களோடு பேசவரும் அப்போதுதான் நான் என்ன வித்தியாசங்களை உணர்கிறேன் என்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

மற்றும்படி என்னதான் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தாய்மண்ணின் நினைவோடுதான் வாழ்கிறேன், வாழுவேன் என்பது உறுதி. அந்த வகையில் பெரிய வித்தியாசம் இல்லை. நினைவுகள் என்னேரமும் என்னவோ தாயகம் நோக்கித்தானே. அதற்காக நாடு கிடைத்தவுடன் அங்கே ஓடிப்போன் என்று பொய்யும் சொல்ல மாட்டேன். என் தாயகக் காற்று என் சுவாசமாக இருக்கும் போது நான் எங்கு வாழ்ந்தாலும் அது எனக்கு நிறைவைத்தரும். அந்த நிறைவு போதும். இயல்பாய் இருப்பது என் சுபாவம்..

18)காதல் பற்றிய உங்கள் பார்வை என்ன இதை பற்றி இளம் சமுதாயதிற்கு சொல்ல விரும்புவது என்ன?உங்கள் குடும்பத்தை பற்றி எங்கள் நேயர்களிற்கு கூறமுடியுமா?

என்னிடம் காதலைப் பற்றிக் கேட்கிறீங்களா..சத்தியாம ஒண்டுமே தெரியாது என்று பொய் சொல்லமாட்டன். ஆனால் காதலித்து திருமணம் செய்தவன். திருமணத்தின் பின்பும் என் மனைவியைத்தான் தினமும் காதலிக்கிறேன். ஏன் என்றால் அவள் ஒரு நதியின் பெயரோடு பிறந்தவள். என்னை இந்தக் கலையுலகத்திற்குள் அழைத்துச் செல்ல அத்திவாரம் போட்டவள். அவளுக்காக எழுதிய காதல் கடிதத்தைத் தானே நீங்களும் கேட்கும் வண்ணம் செய்திருக்கிறேன்.

காதலை தினமும் போற்றுகின்றவன் நான். எல்லாருக்கும் வாழ்க்கையில்தான் காதல் வரும் போகும் கல்யாணத்தில் முடியும். ஆனால் என் வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் காதலிக்கின்றேன். வாழ்வின் ஒவ்வொரு நிமிடங்களையும் காதலிக்கின்றேன். என் தாயகத்தை காதலிக்கின்றேன். இரு இதயங்களை ஒருமனம் எனும் புள்ளியில் இணைக்கும் புனிதமான உணர்வுப் பாலம் காதல் என நம்பிக்கையுள்ளவன். அதைப் புண்படுத்த நினைப்பது துரோகம் என்றே சொல்வேன்.

ஆகையால்தான் காதல் என்றே என்னுடைய படைப்புகளும் வெளிவர இருக்கிறது. காதல் கடிதம், காதல் மொழி, காதல் ------ ? இதைக் கண்டு பிடித்துச் சொல்பவருக்கு வெளியீட்டு விழாவில் அந்த இறுவட்டை உங்களுக்குப் பரிசாக வழங்குவதாக அறிவித்து, பின் அனுப்பி வைப்பேன். எங்கே பார்ப்போம்...கார்த்திகை 19 திகதி வரை பொறுத்திருங்கள்.!

இளம் சமுதாயத்தை வசீகரிப்பது காதல். ஆனால் இந்த அவசர உலகில் காதல் காதல் என்று அலைந்து உங்கள் வாழ்க்கையைத் தொலைக்காதீர்கள். காதல் பூக்கும் தக்க தருணம் வரும் வரை காத்திருங்கள். காதலுக்காக தொண்டு செய்யக் காத்திருங்கள் அப்போது தான் பெண்களுக்கு உங்கள் மேல் ஒர் ஈர்ப்பு வரும். கனவுகளை நனவாக்க முயற்சி செய்யுங்கள். இதுதான் என் அறிவுரை அல்ல அனுபவ முத்துக்கள். இதுக்கு மேல நான் காலைப் பற்றி சொல்லப் போனால் என் மனைவி நக்கல் அடிப்பால் அப்ப எனக்கு முதல் எத்தனை பேரைக் காதலிச்சனீங்கள் எண்டு.?

எனது குடும்பம் ஒரு பெரிய குடும்பம். அம்மா, அப்பா, சகோதரங்கள் ஆறுபேர், என் மனைவி, மாமா மாமி என இங்கே என்னோடு வாழ்கிறார்கள். ஆனால் உலகெல்லாம் அம்மா, அப்பா வழியிலும், என் மனைவி வழிச் சொந்தங்களும் நிறைய உண்டு. வேறு என்ன சொல்ல...என் அறையில் இருக்கும் நிறையப் புத்தங்கள் என் கவித் தோழர்கள். இசைத் தோழன் என்று சொல்லிக் கொள்ள வி.எஸ்.உதயா அண்ணா. இங்கே நோர்வேயில் நிறைய நண்பர்கள் இருக்கின்றார்கள். இப்ப யாழ்கள உறவுகளாகிய நீங்கள்.

19)அடுத்து "விமர்சனம்" அதாவது நிறைகளை ஏற்கும் நாம் குறைகளை யாரும் சொன்னால கோபபடும் நிலை நம் சமூகத்தில் இருகிறது,நீங்கள் விமர்சனங்களை எவ்வாறு ஏற்று கொள்வீர்கள்?

விமர்சனங்களை ஏற்பதும் அந்த விமர்சனங்களில் இருந்து மீண்டும் நல்ல விதைகளை விதைப்பதும் எனக்குப் பிடிக்கும். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சமூகம் சார்ந்த கோபங்களைக் வெளியில் யாருக்கும் பயப்படாமல் துணிந்து கொட்டித்தீர்ப்பேன். ஆனால் அதில் உண்மை புதைந்திருக்கும் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் என் வீட்டார் என்னை திட்டுவார்கள் உனக்கேன் உந்த வேலை என்று. ஆனால் அதற்காக நான் என் இயல்பை மாற்ற முடியாது.

குறைந்த பட்சம் ஒரு தனிநபரையும் பாதிக்காத வண்ணம் கருத்து ரீதியாக மோதுவேன். எங்கள் படைப்பு ரீதியாக இதுவரை யாரும் மோசமான விமர்சனங்களை வைக்கவில்லை. காதல் கடிதம் பற்றியோ, காதல் மொழி பற்றியோ அல்லது என் கவிதைகள் பற்றி ஆக்கபூர்வமான விமர்சனங்கள் வந்தன அவற்றை நான் திருத்தியிருக்கின்றேன்.

காதல் கடிதம் இறுவட்டு வெளியாகிய போது ஒரு பெரிய விமர்சனம் எழுந்தது. நீங்கள் ஏன் எங்கள் கலைஞர்களை இணைக்கவில்லை என்று. நான் சொன்னேன் முதலில் என்னை ஒரு கலைஞனாக நான் முன்நிறுத்த இந்தப் படைப்பு, பின் எங்கள் கலைஞர்களையும் இணைப்பேன் என்று.

அதற்கு உதாரணம் தமிழ்நாதம் இணையத்தளத்தில் காதல் மொழி இறுவட்டிற்கு நாங்கள் கொடுத்த விளம்பரம். அதைப் பார்த்துவிட்டுதான் லண்டனில் வசிக்கும் யக்சன் பொஸ்கோ எம்மோடு இணைந்தார். அவர் ஒரு சிறந்த பாடகர். இந்த கேள்வி கேட்கப்பட்டது எங்கள் ஐபிசி தமிழ் வானொலியில் இருந்து. நாங்கள் வாய்ப்பு வழங்கிய பாடகராகத் தெரிவு செய்யப்பட்டவரும் அதே ஐபிசி தமிழ் இன்னிசைக் குரல் 2003 இன் சிறந்த பாடகராக வந்த யக்சன் பொஸ்கோ தான்.

அந்த வகையில் ஐபிசி தமிழ் எங்களுக்கு பெரிய உதவி செய்துள்ளது. எங்களுடைய அடுத்த இறுவட்டிலும் டென்மாக்கில் உள்ள ஒரு சிறந்த பாடகிக்கு சந்தர்ப்பம் வழங்கியிருக்கிறோம். இவர்கூட ஐபிசி தமிழ் வானொலி இன்னிசைக் குரல் தெரிவுதான். அந்த வகையில் விமர்சனங்களை நான் முழுமனதோடு எற்றுக் கொள்ளும் பக்குவத்தோடுதான் உள்ளேன்..

20)ஈழத்து இளம் கலைஞர் என்ற வகையில் வளர்ந்து வரும் கலைஞர்களிற்கு,கவிஞர்களிற்கு?r />?் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?அத்துடன் படைபாளி என்ற ரீதியில் யாழ்கள உறவுகளிற்கு நீங்க சொல்ல விரும்புவது என்ன?

வளர்ந்து வரும் கலைஞர்கள் எந்தத் துறையில் இருந்தாலும். நீங்கள் நிறைய வாசிக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் இருந்தே பல விடயங்களைத் தேடிப்பிடித்து குறித்து வையுங்கள். ஒரு நாள் அந்த விடயம் உங்களை வந்து உசுப்பும் அப்போது ஒரு பேனா எடுங்கள் ஒரு வெள்ளைத்தாள் இருந்தால் போதும் உங்கள் மனக்கடலில் இருந்து நீங்கள் முத்து எடுக்கலாம் அல்லது முத்துக் குளிக்கலாம்.

நீங்கள் படைப்பாளராக விரும்பினால் உங்களுக்கு எந்த நேரமும் உங்கள் மூளையின் ஒரு ஓரத்தில் ஞாபக அறை எப்போதுமே திறந்திருக்க வேண்டும். அங்கு பலதரப்பட்ட நிகழ்வுகளையும் அத்தருணத்திலேயே சேமித்து விடவேண்டும். நல்லவற்றை அல்லது சமூகத்திற்கு முரணான ஒரு பொறி உங்களைத் தட்டினால் அல்லது தீண்டினால் அந்தப் பொறிகளைச் சேமியுங்கள்.

ஏதோ ஒரு பொறியல் அல்லது ஒரு புள்ளியில் இருந்துதான் நான் ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட நான் இந்த இலக்கிய வாழ்வோடு என்னை இணைத்து பன்னிரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போது தான் நான் தேடிச் சேமித்த என் முத்தான வாழ்வியல் அனுபவங்களை, எங்கள் இனத்திற்குத் தேவையான விடயங்களை, கடந்த கால, நிகழ்கால, எதிர்கால பதிவுகளைத் தேடிப் பிடித்து புதிய வடிவில் இந்தக் காலத்திற்கேற்ற மாதிரி வடித்தெடுக்கின்றேன்.

இந்தக் கலைவடிவங்களை வடித்தெடுக்கும் போது மனச்சுமைகள் அதிகரிக்கும், மனம் சோர்வடையும், என்னால் இது முடியுமா என்ற கேள்விகள் தோன்றும், இடைஞ்சல்கள் வரும் பொருளாதார ரீதியான சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும். குடும்பத்தைச் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டி கடமையிருக்கும். இவற்றையெல்லாம் எதிர்நீச்சல் போட்டு தோற்கடித்து நீங்கள் வெற்றி பெற்றால் சிறந்த கலைஞனாக மக்கள் மனதில் இடம் பிடிப்பீர்கள்.

அதற்கு உங்கள் இலக்கியப் பயணத்தின் எல்லையை நோக்கி வீறுநடை போட உங்களை தீட்டிக் கொண்டே இருக்க வேண்டும். இவையெல்லாவற்றையும் ஒருங்கிணைத்த செய்ய உங்களுக்கு முக்கியமாக அதீதமான தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிவரும். என்பவைதான் என்னுடைய அழ்மன அனுபவங்களில் இருந்து நான் உங்களுக்குச் சொல்லக்கூடியது.

யாழ்கள உறவுகளுக்கு உங்கள் ஒவ்வொருவருடைய உற்சாகமான வருகையைப் பார்க்கும் போது தமிழை உயிராய் நேசிப்பது புரிகிறது. தமிழ்மொழியைக் காப்பதற்கு நீங்கள் அனைவரும் இணைந்து அரும்பெரும் பணியைச் செய்கின்றீர்கள். ஆனால் அரட்டையென்ற பெயரில் மட்டும் உங்கள் நேரங்களைச் செலவிடாதீர்கள்.

நீங்கள் இங்கே வந்து போகின்ற ஒவ்வொரு நிமிடமும் உங்கள் வாழ்வின் பொன்னான நிமிடங்கள். ஆகவே அது உங்களுக்கும், உங்களால் இங்குள்ளவர்களுக்கும், எங்கள் தமிழ் சமூகத்திற்கும் என்றைக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் செயற்படுங்கள். தேவையில்லாத விரோதங்களை வளர்க்காதீர்கள். கருத்து ரீதியாக மோதுங்கள் நான் ஏற்கனவே சொன்னது போல் தனிப்பட்ட ரீதியில் எவரையுமே புண்படுத்தாதீர்கள்.

நாங்கள் பலதரப்பட்ட வலிகளைச் சுமந்து கொண்டு, தாயகம் சார்ந்த நினைவுகளச் சுமந்து கொண்டு வேறு நாட்டவர் மத்தியில் வாழும் போது ஒருவருக்கு ஒருவர் உதவியாக வாழ்வோம் என்று உறுதியெடுங்கள். இங்கே எத்தனையோ அற்புதமான படைப்பாளிகளை என்னால் அடையாளம் கானக்கூடியதாக இருக்கின்றது. உங்களுடைய படைப்புகளை வெளிக்கொண்டுவர என்னால் ஆன உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கமுடியம். தமிழகத்தில் உள்ள பலருடன் எனக்குத் தொடர்புகள் இருப்பதால் சொல்கின்றேன். உங்களுடைய ஆக்கங்களை இங்கே பதிவு செய்யும் போது நீங்களும் ஒரு பிரதியெடுத்து உங்கள் கணனியில் சேமியுங்கள். ஒருநாள் திரும்பிப் பார்க்கும் போது அது பல புத்தகங்கள் உருவாக உறுதுணையாக இருக்கும்.

மிகவும் பொறுமையோடு என் செவ்வியை வாசித்த உங்களுக்கும், யாழ்கள மூலம் சிறந்த ஒரு பத்திரிக்கையாளருக்கே உரித்தான நேர்த்தியோடு பேட்டியெடுத்த ஐமுனாவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள். வணக்கம். வாழ்க வளமுடன்

என்றும்

அன்புடன்

உங்கள் உறவு

வசீகரன் :)..

* நீங்கள் யாழ்கள நிர்வாகதிற்கு ஏதாவது கூற இருந்தா கூறவும் நிர்வாகம் நிச்சயம் கவனத்தில் கொள்ளும்?

Link to comment
Share on other sites

மிகவும் சுவாரசியாமன முறையில் பேட்டியை தந்து கொண்டிருக்கும் வசீகரன் அண்ணாவிற்கு நன்றிகள்............ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நல்ல கேள்விகளைக் கேட்டமைக்கு யமுனாவுக்கு பாராட்டுக்கள். எங்களது கலைஞர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

இதில் ஜமுனாவின் திறமை மேலோங்குவதை உணரக்கூடியதாகவுள்ளது.

பாராட்டுகளும் நன்றிகளும்.வசீகரன்.உங்களின் குரலை

நான் வசிக்கும் நாட்டில் வானொலி மூலம் அடிக்கடி கேட்டு மகிழக்கூடியதாக இருக்கின்றது...

உங்களுடைய இந்த நேர்காணலில் உங்களின் பதில்கள் உங்களின் திறமையை மேலும் உயர்த்துகின்றது..பாராட்டுகள்

..

Link to comment
Share on other sites

கேள்விகளும் பதிகளும் சூப்பர்.

வசியண்னா உங்களின் பதில்களில் இருந்து நிறைய விடயங்கள் அறியக்கூடியதாக இருக்கு, எவ்வளவோ தடங்கல்களை தாண்டி வளர்ந்து வருகின்ற உங்களுக்கு யாழ்கள சார்பாக வாழ்த்துகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யமுனா முயற்சிக்கு முதல் வாழ்த்துகள்.

அழகாக, விறுவிறுப்பான பேட்டி.. வசீகரனின் நேர்த்தியான பதில்கள் அனைத்தும் நன்றாய் இருக்கின்றது.

ஒரு சிறு அபிப்பிராயம் யமுனா,

பேட்டியை குரல் வழி பதிவு செய்து youtube ஆக போட்டிருந்தால் , இடையிடையே வசீகரனின் குரலின் சிறப்பு பாடலாகவும், உரையாடலுமாக வந்து மேலும் சிறப்பு பெற்று இருக்கும்.

யாழ்களத்தின் சிறப்பு பதிவாக, வசீகரனின் சேமிப்புக்குள்ளும் ஒன்றாய் மலர்ந்திருக்கும் என்பதே.

Link to comment
Share on other sites

வணக்கம்

ஜம்முவிற்கு இப்படி ஒரு அருமையான எண்ணம் ஏற்பட்டதற்கு முதலில் நன்றிகள்.

வசீகரனின் பேட்டி வாசித்தேன். தடைகள் தாண்டி தரணியெங்கும் புகழ் பரப்பும் உங்களிற்கு வாழ்த்துக்கள். இன்னும் இன்னும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

நன்றி

Link to comment
Share on other sites

என்னுடைய செவ்வி தொடர்பாக கருத்துக்கள் அளித்த அனைத்து அன்புறவுகளுக்கும் என் இதயபூர்வமான நன்றிகள். ஒரே வார்த்தையில் நல்ல இருக்கென சொல்லமால் என்னுடைய பதில்களில் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தால் என்னோடு வாதாடலாம். மீண்டும் ஐமுனா,கலைஞன், கந்தப்பு, வல்வைநை;தன், வெண்ணிலா, கறுப்பி அக்கா, பரணீ உங்களை ஒரு நாள் சந்திக்கலாம் என நினைக்கின்றேன். இனிய வணக்கங்கள்.

அன்புடன்

எப்பவும் நான்

வசீகரன்:lol: இனிதான் எல்லாம் தெரிஞ்சு போச்சே... வெண்ணிலா சொன்னமாதிரி....:(

Link to comment
Share on other sites

வணக்கம் நேயர்களே............. :huh:

பல வேலைகளுக்கும் மத்தியிலும் நாம் கேட்டு கொண்டதிற்கிணங்க மகிழ்ச்சியாக வந்து பேட்டி தர ஓப்பு கொண்டு மிகவும் சுவாரசியாமான முறையில் பேட்டியை தந்த தமிழ்வாணண் என்று யாழில் அழைக்கபடும் ஈழத்துபடைபாளியான சீ.வசீகரன் அண்ணாவிற்கு நன்றிகளை டைஅக்ர்வானொலி மற்றும் டைகர் குடும்பத்தின் சார்பாக தெரிவித்து கொண்டு..........இன்னும் பல படைப்புகளை அவர் எம் மக்களிற்காக தரவேண்டும் ..........எம்மவர்களும் எம் கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது யாழ்கள சார்பாக நாங்கள் கேட்டுகொள்வது............. :lol:

இதுவரை நேரமும் நடந்த பேட்டியை கண்டு இரசித்து இருப்பீர்கள் என்று நினைகிறேன் மீண்டு மற்றுமொரு வெள்ளிமாலை பொழுதில் பல சுவைகளை தாங்கி உங்கள் முன் வருவோம் என்று கூறி விடை பெறும் நான் என்றும் உங்கள் ஜம்முபேபி..........

பி.கு- டைகர்பமிலி என்றைக்கு பேச்சளவில் எதுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பது யாவருக்கும் தெரியும் ஆகவே...........வெறும் வாயால் மட்டும் கலைஞர்களை அது செய்யவில்லை என்று முக்கியத்துவம் கொடுக்காம........எம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்பது நாங்கள் சொல்லி கொள்ள விரும்புவது..........

நன்றி :)

டைகர் பமிலி

&

டைகர்வானொலி

Link to comment
Share on other sites

கருத்துகளை கூறிய குருவிற்கும்,கந்தப்பு தாத்தாவிற்கும்,வல்வை அண்ணாவிற்கும்,நிலா அக்காவிற்கும்,கறுப்பி அக்காவிற்கும்,பரணி அண்ணாவிற்கும்..........அத்துடன் பொறுமையாக இவ்வளவு கேள்விகளிற்கும் பதில்களை தந்த வசீகரன் அண்ணாவிற்கும் மிக்க நன்றிகள்........... :huh:

Link to comment
Share on other sites

வசீகரன்/யாழ்வானம் யாழ் களத்தில் ஒரு அன்பருக்கு அளித்த மேலே உள்ள பேட்டியில் - நான் ஜூலை 31ந் திகதி "யாழ் களத்தின் செல்வங்களுக்கு " என்ற கருத்தில் குறிப்பிட்டதை அடிப்படையாகக் கொண்டு கேள்வி எழுப்பப்பட்டதினால் அதை இங்கு இணைப்பதோடு இது சம்பந்தமான வேறு சில இணைப்புகளையும் தந்து விடை தரவேண்டியது என் கடமையாகிறது.

கேள்வி -

கடந்த கிழமை யாழ் இணையதளத்தில் ஒருவர் ஈழத்துபடைப்பாளிகளிற்கு இங்குள்ள கள உறவுகள் உற்சாகம் அளிபதில்லை என்று குறிபிட்டு இருந்தார் இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?அத்துடன் இங்கு அதாவது யாழ் இணையத்தில் வளர்ந்து வரும் கலைஞர்களிற்கு அல்லது படைபாளிகளிற்கு இவர்கள் உற்சாகம் வழங்குவதில்லை என்பது மனவருத்தமான விடயம் அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில் -

அவருடைய கருத்து அவருடைய அனுபவத்தில் மலர்ந்ததாக இருக்கலாம். அது உண்மையாகக் கூட இருக்கலாம். ஏன் ஆரம்பத்தில் எனது படைப்புகள் கூட கவனிக்கப்படாமல் தான் இருந்தது. சரி இவங்கள் கவனிக்கிறாங்க்ள் இல்லை எண்டு போட்டுத்தான் நான் பாடல்களை இணைத்தேன். பாடல்களைக் கேட்டாவது நம் உறவுகள் கருத்துச் சொல்கிறார்களா என்று பரிசோதித்துப் பார்த்தேன். அது மிகவும் நன்றாகப் வேலைசெய்துவிட்டது.

உங்களுக்கு உண்மையைச் சொன்னால் என்ன... எங்கடை ஆட்கள சிலவேளை உசுப்பி விடவேணும் பாருங்கோ. இல்லையெண்டால் சரியான கஸ்டம் பாருங்கோ என்றுதான் சொல்வேன். நான் இங்கு கவனிக்கப் பட்டு உங்களுக்கு இந்த செவ்வியை வழங்குவதற்கு என் பாடல்கள் தான் காரணம்.

அந்த ரீதியில் அவருடைய கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் அதுதான் சரியென்று என்னால் சொல்லமுடியாது. யாழ்இணைய நிர்வாகிகளுக்குத்தான் இதன் உண்மை தெரியும். ஆனால் பொதுவாக நான் இங்குள் படைப்புகளை உற்று நோக்கும் போது அப்படி அவருடைய கருத்துப பிழையாக இருக்குமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. என்ன குழப்புகிறேனா..குழப்பத்தில் தானே நல்ல தெளிவு வரும். மனது இலகுவாகும்.

ஆனால் என்னைப் போன்ற எத்தனை கலைஞர்கள் உற்சாகப்படுத்தப் படுவதற்கு என்னுடைய இந்தச் செவ்வியையும் உதாரணமாகக் கூறாலாம். யாழ் இணையத்திற்கு நன்றிகள்.

அடுத்த கேள்வி -

ஈழத்து படைபாளி என்று கருதும் இடத்தில் இரு தரபட்ட படைபாளிகள் அதாவது ஒரு பிரிவினர் மறைந்த படைபாளிகள் மற்றவர்கள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் படைபாளிகள் மறைந்த படைபாளிகளிகளை கெளரவிக்க வேண்டும் இல்லை என்று சொல்லவில்லை. ஆனாலும் தொடர்ந்து அவர்களை பற்றி எழுதியும் அவர்களை பற்றி செய்திருந்தால் நல்லது அவர்களை பற்றி புகழ்பாடுவது அதிகம் தவிர தற்போது இருக்கும் கலைஞர்களை பேசுவது குறைவு. யாழ் இணையதளத்திலும் இந்த குறை காணபடுகிறது இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?அத்துடன் மறைந்த கலைஞர்களை இளையசமூகத்தில் இருப்பவர்களிடம் திணிப்பதால் எதுவித பயனுமில்லை என்பது என் பார்வை இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில் -

ஈழத்துப் படைப்பாளிகளை, அல்லது கலைஞர்களைக் கௌரவிப்பதில் என்றைக்குமே நான் பின்நிற்பவன் அல்ல. அந்த வகையில் மறைந்த எங்கள் கலைஞர்களை அவர்கள் பிறந்த தினத்தில் அல்லது அவர்களுடைய மறைந்த நாட்களில் அவர்களை நினைவு கூர்ந்து அவர்களை பற்றிப் பேசுவதும், வாழ்த்துவதும், பாரட்டுவதும் மனித பண்புள்ள நல்ல மக்களுக்கு என்றுமே அழகு. ஆனால் நெடுக அவர்களைப் பற்றியே புகழ்பாட வேண்டிய தேவையில்லை, அவசியமும் இல்லை. கலைஞர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே பாராட்ட வேண்டும், வாழ்த்தவேண்டும் அவர்களை என்றுமே மனம் சலிக்காது உற்சாகப் படுத்த வேண்டும்.

எங்கள் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஒரு குறைபாடு என்னவென்றால் கலைஞனுடைய படைப்புகளைப் பற்றிப் பேசாது. அவர் தனிபட்ட வாழ்க்கை பற்றியும், அவருடைய தவறான அனுகுமுறைகள் பற்றியே வசைபாடுவது. இதற்காகவே அவர்களை எடுத்த எடுப்பிலேயே ஒதுக்கித்தள்ளுவது. இதனால் எத்தனை திறமையுள்ள பல முதிய கலைஞர்களும், புதிய கலைஞர்கள் வெளிச்சத்திற்கு வராமல் தத்தளிக்கிறார்கள்.

இந்த வசைபாடுதல், குறைகூறுதல் போன்ற கிழ்த்தனமான பழக்கத்தில் இருந்து எங்கள் புதிய சமுதாயம் விடுபட்டு, அனைத்துக் கலைஞர்களையும ஊக்குவித்து ஆரோக்கியமான பாதையில் அழைத்துச் செல்லவேண்டும்.

பேட்டியினொரு பகுதி இது. இனி இதற்கு முதல் நடந்த இத்தோடு தொடர்புடைய இரண்டு இணைப்புகளையும், நான் முன் வைத்த கருத்தையும் தருகிறேன். பின்னர் எனது நிலை விளக்கம் தருகின்றேன்..

குமாரசாமி, இலக்கியன் உங்கள் இருவரினதும் ஆழமான கருத்துக்களுக்கு எனது நன்றிகள். இதுவரை தொடர்ந்து 260 பேருக்கு மேல் பாட்டு கேட்டிருக்கிறார்கள். ஆனால் பாருங்கள் ஐந்து களஉறவுகள் மட்டும் தான் தங்கள் கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். என்ன கொடுமை ஐயா இது...?

அன்புடன்

தமிழ்வானம்

யாழில் உங்கள் பாடல்களை இணைத்து அவற்றை நாம் கேட்டு மகிழ்வதற்கு சந்தர்ப்பம் அளித்த உங்களுக்கு மிக்க நன்றி!

உங்கள் படைப்புக்களை ஒன்லைனில் வாங்குவதற்கு வசதி இருந்தால் அறியத்தரவும்.

நன்றி!

உங்கள் கலை ஆர்வம் இந்தியக் கலை, கலைஞர்கள் சார்ந்ததாகவே இருக்கிறது. சிவாஜி (நடிகரல்ல - படம்), விவேக், அஜித் (தலயாம்) என்று சொல் அபிசேகங்கள் பக்கம் பக்கமாக செய்கிறீர்கள். அரட்டை அடிக்கிறீர்கள். பரவாயில்லை. எங்கள் கலைஞர்கள் பக்கமும் சற்று கடைக்கண் பாருங்கள். அவர்கள் பற்றி, அவர்கள் படைப்புக்கள் பற்றிய குறிப்புகள் இட்டால் திரும்பியே பார்க்காதவர்கள் அனேகர். அவர்கள் படைப்புகளை இணைப்புகள் இட்டால் மாத்திரம் சந்தோசம் அடைகிறீர்கள்.

படலைக்கு படலை டிவிடி வந்தது. இணைப்பு தரமுடியுமா என்று கேட்கிறீர்கள் வெட்கம் .

காதல் மொழி இணைப்பு தந்தால் தான் கேட்பீர்கள். என்ன.?

கோடிகள் பெறுபவர்களுக்கு தொடர்ந்தும் கோடிகள் சேர்க்க வழி பார்க்கிறீர்கள். நம்மவர்களுக்கு 10 டொலர். 10 ஈரோ கொடுத்தால் குறைந்தா போய் விடும். உங்களுக்கு சொந்த நாட்டின் மீது அபிமானம் என்பது வெறும் வார்த்தை ஜாலங்கள் தானா ? இதுக்கு மேல் சொல்வதற்கொன்றுமில்லை.

மேலே உள்ளதுதான் நான் எழுப்பிய அவலக்குரல். ஆத்திரக்குரல் என்றும் வைத்துக்கொள்ளலாம்.

இதை நான் முன் வைத்ததிற்கு தமிழ் வானம் அதே ஜூலை 31ந்திகதி இணைத்த ஆற்றாமையின் வெளிப்பாடு (மேலே இருக்கிறது) மாத்திரமல்ல, நான், கானப்பிரபா, சின்னக்குட்டி மாதிரி பலர் இணைத்த பல கலைஞர்கள் (எல்லோரும் கேள்வி எழுப்பியவர் சொன்னது போல இறந்து போனவர்கள் அல்ல) பற்றிய குறிப்புகளுக்கு யாருமே பின்னூட்டம் இடவில்லை என்ற கவலையும்தான் காரணம்.

எனது இணைப்பின் பின்னர் கலைஞனின் ஓகஸ்ற் 2ந் திகதிய வெளிப்பாடும் (மேலே இருக்கிறது) இன்னும் பலரின் ஆர்வமும் தென்படத் தொடங்கியது என்னளவில் சந்தோசமே.

ஆனால் இதில் சுவையான திருப்பம் என்னவென்றால் வசிகரன்/தமிழ்வானம் இப்படியும் தன் பதிலில் சொல்லி யிருக்கிறார்.

ஆனால் பொதுவாக நான் இங்குள் படைப்புகளை உற்று நோக்கும் போது அப்படி அவருடைய கருத்துப பிழையாக இருக்குமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

அதாவது மற்றவர்களின் படைப்புகளை சற்றே குறைத்து விமர்சனம் செய்கிறார். படைப்பாளி விமர்சனம் செய்யப்புறப்படுவதில் ஆபத்து இருக்கிறது என்பதைஅவர் உணர்ந்தால் சரி.

கள அன்பர்கள் மேல் உள்ளவற்றை சற்று கவனித்தால் நான் சொல்வது புரியும். நன்றி

:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பேட்டி ஈழத்து கலைஞர் வசீகரனை ஜம்மு அழகாக பேட்டி கண்டு இருந்தா அவரும் சுவாரசியமான முறையில் பேட்டியை அளித்திருந்தார் இருவருக்கும் வாழ்த்துகள்,பேட்டியை சுவையாக எடுத்த ஜம்முவிற்கு ஒரு ஓ போடு. :( :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது மற்றவர்களின் படைப்புகளை சற்றே குறைத்து விமர்சனம் செய்கிறார். படைப்பாளி விமர்சனம் செய்யப்புறப்படுவதில் ஆபத்து இருக்கிறது என்பதைஅவர் உணர்ந்தால் சரி.

குறைத்தாவது விமர்சனம் செய்கிறார் சிலர் அதுவும் செய்வதில்லை படைப்பாளி ஏன் விமர்சனதிற்கு பயப்பிட வேண்டும் அவர் சாதாரண மனிதர் தானே,என்ன மூளைக்கு கொஞ்சம் வேலை கொடுகிறார்,படைப்பாளி விமர்சனம் செய்யும் போது என்ன ஆபத்து இருகிறது? :(

நான், கானப்பிரபா, சின்னக்குட்டி மாதிரி பலர் இணைத்த பல கலைஞர்கள் (எல்லோரும் கேள்வி எழுப்பியவர் சொன்னது போல இறந்து போனவர்கள் அல்ல) பற்றிய குறிப்புகளுக்கு யாருமே பின்னூட்டம் இடவில்லை என்ற கவலையும்தான் காரணம்.

கானபிரபா,சின்னகுட்டி போன்றோரின் படைப்புகளை நான் படித்து வாழ்த்தியும் இருகிறேன்,ஆனால் நான் என்று குறிபிட்டு இருந்தீர்கள் ஆனால் உங்கள் படைப்புகளை நான் வாசிக்கவில்லை தயவு செய்து நீங்க படைத்த சொந்த ஆக்கங்களை தந்தீர்கள் என்றா நான் நிச்சயமாக கருத்துகளை கூறுவேன்,அத்தோட யாழ் இணையதிற்காக உங்கள் படைப்புகள் தந்தீர்கள் என்றால் நிச்சயமாக எல்லா உறவுகளும் வாழ்த்துவார்கள் என்று நினைக்கிறேன்.கானபிரபா இப்பொழுது யாழில் படைப்புகளை தருவதில்லை ஏனோ தெரியவில்லை யாழில் நீங்கள் கூறுவது போல ஊக்கங்கள் கிடைக்கவில்லையோ தெரியவில்லை.

அத்துடன் நாங்கல் படைப்புகளை தரும் போது மற்றவர்கள் கருத்து எழுதவில்லை குறை கூறமுடியாது நாங்கள் மற்றவர்களின் படைப்புகளிற்கு கருத்துகளையும் ஊக்கத்தையும் வழங்கினா அவர்கள் நிச்சயமாக உங்கள் படைப்புகளை வாழ்த்துவார்கள்,ஊரில பழைய காலத்தில் படைப்பாளி என்றா தூக்கி பிடித்து கொண்டு இருந்தனாங்கள் ஆனால் இப்போதும் அதையே எதிர்பார்பது தவறு,கணணியும் வந்துவிட்டது என்ன மாதிரி(புத்தனை மாதிரி) குளியல் அறை படைப்புகள் சிந்தனைகள் எல்லாம் வர தொடங்கிவிட்டது,வீதியால ஆட்கள் என்னை கண்டவுடன் என்னை பார்த்து நீங்களும் கவிதை,கதை எல்லாம் எழுதுறீங்க என்று கேட்கும் அளவிற்கு இருகிறது,அவை நக்கலா தான் கேட்பீனம் ஆனா எனக்கு மனசுகுள்ள நானும் ஒரு சிறிய படைபாளி என்று ஒரு சந்தோசம், :P :huh::o

Link to comment
Share on other sites

பொன்னியின்செல்வன் உங்கள் பின்னோட்டங்களுக்கும், முன்மொழிந்த கருத்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். என்னுடைய செவ்வி முழுமை பெறுவதற்கு உங்கள் ஆதங்கமும், உரத்த குரலும் யாழ்களத்திற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பது மகிழ்வைத் தருகின்றது.

புத்தனுக்கு போதி மரம் மட்டுமில்லை, யாழ்களம்கூட புத்துணர்ச்சி தரும் களமாக இருப்பதை எண்ணி மகிழ்கின்றேன். உங்களுடை இனிய கருத்துக்களுக்கும் எனது நன்றிகளை இத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

அருமையான பேட்டி பேட்டி அளித்த வசீகரன் அண்ணாவுக்கும் பேட்டி எடுத்த ஜமுனாவுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்

Link to comment
Share on other sites

குறைத்தாவது விமர்சனம் செய்கிறார் சிலர் அதுவும் செய்வதில்லை படைப்பாளி ஏன் விமர்சனதிற்கு பயப்பிட வேண்டும் அவர் சாதாரண மனிதர் தானே,என்ன மூளைக்கு கொஞ்சம் வேலை கொடுகிறார்,படைப்பாளி விமர்சனம் செய்யும் போது என்ன ஆபத்து இருகிறது? :lol:

கானபிரபா,சின்னகுட்டி போன்றோரின் படைப்புகளை நான் படித்து வாழ்த்தியும் இருகிறேன்,ஆனால் நான் என்று குறிபிட்டு இருந்தீர்கள் ஆனால் உங்கள் படைப்புகளை நான் வாசிக்கவில்லை தயவு செய்து நீங்க படைத்த சொந்த ஆக்கங்களை தந்தீர்கள் என்றா நான் நிச்சயமாக கருத்துகளை கூறுவேன்,

அத்துடன் நாங்கல் படைப்புகளை தரும் போது மற்றவர்கள் கருத்து எழுதவில்லை குறை கூறமுடியாது நாங்கள் மற்றவர்களின் படைப்புகளிற்கு கருத்துகளையும் ஊக்கத்தையும் வழங்கினா அவர்கள் நிச்சயமாக உங்கள் படைப்புகளை வாழ்த்துவார்கள்,

புத்தன் நன்றி.. நீங்கள் இந்தக் கருத்தாடலின் இடையில் ஆரம்பித்து இருக்கிரீர்கள். நான் விட்ட வேண்டுகோள் தென்னிந்தியக்கலைஞர்களின் பற்றி படைப்புகள் பற்றி பக்கம் பக்கமாக அரட்டை அடிக்கிறீர்கள் பரவயில்லை. நம்ம கலைஞர்கள் பக்கமும் திரும்பிப் பாருங்கள் அவர்கள் பற்றிய குறிப்புகள் அவர்களின் ஆக்கங்கள் பற்றிய செய்திகள் வந்தால் என்ன ஏதென்று விசாரியுங்கள். ஆதரவு கொடுங்கள் என்பதே. என் முதல் குறிப்பை பார்த்தால் புரியும்.

QUOTE(Ponniyinselvan @ Jul 31 2007, 10:03 AM)

உங்கள் கலை ஆர்வம் இந்தியக் கலை, கலைஞர்கள் சார்ந்ததாகவே இருக்கிறது. சிவாஜி (நடிகரல்ல - படம்), விவேக், அஜித் (தலயாம்) என்று சொல் அபிசேகங்கள் பக்கம் பக்கமாக செய்கிறீர்கள். அரட்டை அடிக்கிறீர்கள். பரவாயில்லை. எங்கள் கலைஞர்கள் பக்கமும் சற்று கடைக்கண் பாருங்கள். அவர்கள் பற்றி, அவர்கள் படைப்புக்கள் பற்றிய குறிப்புகள் இட்டால் திரும்பியே பார்க்காதவர்கள் அனேகர். அவர்கள் படைப்புகளை இணைப்புகள் இட்டால் மாத்திரம் சந்தோசம் அடைகிறீர்கள்.

படலைக்கு படலை டிவிடி வந்தது. இணைப்பு தரமுடியுமா என்று கேட்கிறீர்கள் வெட்கம் .

காதல் மொழி இணைப்பு தந்தால் தான் கேட்பீர்கள். என்ன.?

கோடிகள் பெறுபவர்களுக்கு தொடர்ந்தும் கோடிகள் சேர்க்க வழி பார்க்கிறீர்கள். நம்மவர்களுக்கு 10 டொலர். 10 ஈரோ கொடுத்தால் குறைந்தா போய் விடும். உங்களுக்கு சொந்த நாட்டின் மீது அபிமானம் என்பது வெறும் வார்த்தை ஜாலங்கள் தானா ? இதுக்கு மேல் சொல்வதற்கொன்றுமில்லை

இதில் வசீகரனின் காதல்மொழிக்கும் ஆதரவு கொடுங்கள் என்றுதான் கேட்டிருந்தேன்.

ஆனால் வசிகரனிடம் "இப்படி நம்மவர்களின் படைப்புகளுக்கு (யாழ் களத்தில் படைக்கப்படுவது மட்டுமல்ல) ஒருவர் ஆதரவு கொடுக்கச்சொல்கிறாரே " என்று என்னைப் பற்றி கேட்கப்படும்போது அவர் சொன்னதுதான் சுவையானது.

அவர் சொல்கிறார். " அவர் சொன்னது ஓரளவு சரிதான். ஆனால் மற்றவர்களின் படைப்புகளைப் பார்க்கும்போது அவர் சொல்வது பிழையாக இருக்குமோ என்று தோன்றுகிறது" என்கிறார்.

அதாவது மற்ற சிலரின் படைப்புகள் தரமில்லை. நீங்கள் ஆதரவு கொடுக்கவேண்டியதில்லை என்றமாதிரி சொல்கிறார். இதன் ஆபத்து என்ன தெரியுமா ? மற்ற படைப்பாளிகள் இவரை திருப்பி கேட்க புறப்படலாம்.உம்முடையது மாத்திரம்தான் திறமா என்று. ஏன் எங்களுக்குள்ளேயே நீ பெரிதா நான் பெரிதா என்று பிளவு வரவேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் அப்படிச் சொன்னேன்.

இப்படிக்கருத்து சொல்லும் சுதந்திரம் அவருக்கும் தனி மனிதனாக இருக்கிறதுதான். நீங்கள் சொன்னது போல மூளைக்கும் வேலை கொடுத்து புத்தியாக பதில் சொன்னால் நல்லது. குளவிக்கூட்டிற்குள் வெறுங்கையை விடக் கூடாது.

ஆக்கங்கள் படைப்பது எனக்கு இயலாத காரியம். ஞானசூன்யம் என்று வைத்துக்கொள்ளுங்கள். நான் இணைப்பதெல்லாம் இறந்த, இருக்கின்ற எமது கலைஞர்கள் பற்றிய குறிப்புகள்தான்.

கவிதை, கதை, ஆய்வுக்கட்டுரை எனக்கு சுட்டுப்போட்டாலும் வராது. சுட்டுப்போடுவதும் வராது. மன்னியுங்கள்.

:o

Link to comment
Share on other sites

நேர்காணல் மூலம்

வசீகரனிடமிருந்து வந்திருக்கும் பதில்கள்

புலம் பெயர் தமிழர்களால் சிந்திக்க வேண்டியவை.

தேவையறிந்து கேட்கப்பட்ட ஜமுனாவின் கேள்விகளுக்கு

அனுபவத்தோடு பதில் கொடுத்திருக்கும் அல்லது

மனம் திறந்திருக்கும் வசீகரனுக்கு பாராட்டுகளும்

நன்றியும் உரித்தாகட்டும்.

உங்கள் பாடல்களை கேட்க முடிந்தது.

இசையோடு பாடல்களை இணைப்பது எளிது

அநேக பாடல்கள்

பாடலுக்கே இசையமைக்கப்பட்டுள்ளது

அந்த விதத்தில் இசையமைப்பாளர் உதயாவின்

திறமை

உதயம் மகிழ்வாயிருக்கிறது.

பாராட்டுகள்

திரைப்படத்தின்

தேவையறிந்து வரும் பாடல்கள்தான்

தமிழர்களுக்கு பரீட்சயம்.

இசை அல்பங்கள் தமிழில் வெளியாவது

திரைப்பட பாடல் தொகையோடு ஒப்பிட்டுப் பார்த்தால்

மிக மிக குறைவுதான்

ஆங்கில பாடல்கள் அநேகமானவை

அல்பங்களாய்தான் வருகின்றன.

தமிழர்கள் பெரும்பாலும்

தமிழ் ஆல்பங்களோடு பரீட்சயப்படாதவர்கள்

இசை ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமே

இப்படியான

இசை ஆல்பங்களை கண்டு வாங்குகிறார்கள்

புலம் பெயர் நாடுகளில்

இசை அல்ப முறையை கொண்டு வரலாம்.

வியாபார ரீதியாக பல அடிகளை வாங்க வேண்டியே உள்ளது?

வசீகரன்

புலம் பெயர் ஊடகங்கள் மேல் கூறியவை உண்மை.

அவரது அனுபவம்

மனம் திறக்க வைத்திருக்கிறது.

அது பேசி அலுத்துப் போன விடயம்?

இன்னும் இன்னும் புதியவர்கள் உதயமாக வேண்டும்

இல்லாவிடில்

இலங்கை தமிழ் பொப் பாடல்கள் போல

இவை கூட

வேகமாக வளர்ந்து

வேகமாக உதிர்ந்து போகலாம்.

அடுத்த புலம் பெயர் தலை முறைக்கு

அவர்களது ரசனைக்கான இசையோடு கூடிய

பாடல்கள் உருவாக வேண்டும்.

காலத்துக்கு ஏற்றவற்றை

படைப்பாளிகள் கொடுக்க வேண்டும்.

நல்ல முயற்சிகள் தொடர வேண்டும்.

அனைத்து கலைஞர்களுக்கும்

பாராட்டுகள்

வாழ்த்துகள்

நன்றி

Link to comment
Share on other sites

இதில் வசீகரனின் காதல்மொழிக்கும் ஆதரவு கொடுங்கள் என்றுதான் கேட்டிருந்தேன்.

ஆனால் வசிகரனிடம் "இப்படி நம்மவர்களின் படைப்புகளுக்கு (யாழ் களத்தில் படைக்கப்படுவது மட்டுமல்ல) ஒருவர் ஆதரவு கொடுக்கச்சொல்கிறாரே " என்று என்னைப் பற்றி கேட்கப்படும்போது அவர் சொன்னதுதான் சுவையானது.

அவர் சொல்கிறார். " அவர் சொன்னது ஓரளவு சரிதான். ஆனால் மற்றவர்களின் படைப்புகளைப் பார்க்கும்போது அவர் சொல்வது பிழையாக இருக்குமோ என்று தோன்றுகிறது" என்கிறார்.

அதாவது மற்ற சிலரின் படைப்புகள் தரமில்லை. நீங்கள் ஆதரவு கொடுக்கவேண்டியதில்லை என்றமாதிரி சொல்கிறார். இதன் ஆபத்து என்ன தெரியுமா ? மற்ற படைப்பாளிகள் இவரை திருப்பி கேட்க புறப்படலாம்.உம்முடையது மாத்திரம்தான் திறமா என்று. ஏன் எங்களுக்குள்ளேயே நீ பெரிதா நான் பெரிதா என்று பிளவு வரவேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் அப்படிச் சொன்னேன்.

அன்புள்ள பொன்னியின்செல்வனுக்கு,

உங்களுடைய அனைத்துக் கருத்துக்களையும், நான் தற்போது முழுமையாக வாசித்தேன். நான் கூறியிருந்த கருத்தை நீங்கள் பிழையான முறையில் மேற்கோள் காட்டி. மற்றைய கலைஞர்கள் பற்றி நான் தவறான கணிப்பீடு கொண்டதாக குறிப்பிட்டிருக்கின்றீர்கள

Link to comment
Share on other sites

அன்புள்ள பொன்னியின்செல்வனுக்கு,

உங்களுடைய அனைத்துக் கருத்துக்களையும், நான் தற்போது முழுமையாக வாசித்தேன். நான் கூறியிருந்த கருத்தை நீங்கள் பிழையான முறையில் மேற்கோள் காட்டி. மற்றைய கலைஞர்கள் பற்றி நான் தவறான கணிப்பீடு கொண்டதாக குறிப்பிட்டிருக்கின்றீர்கள

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.