Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரஷ்ய இராணுவத்திற்கு மூன்று டன் மருந்து பொருட்களை அனுப்பி வைத்த ரஷ்ய-இந்திய நட்புறவு சங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா-இந்தியா நட்புறவு சங்கமான ‘திஷா’, மூன்று டன் அளவு பொருட்களை மனிதாபிமான உதவியாக ரஷ்யாவுக்கு அனுப்பியுள்ளது.

இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் ரஷ்ய தூதரகம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்தியாவில் இருந்து ரஷ்யாவிற்கு அனுப்பட்ட மருந்து பொருட்கள்

ரஷ்ய இராணுவத்திற்கு மூன்று டன் மருந்து பொருட்களை அனுப்பி வைத்த ரஷ்ய-இந்திய நட்புறவு சங்கம்

மனிதாபிமான உதவியாக மருந்துகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள், குர்ஸ்கில் உள்ள ரஷ்ய ஆயுதப்படைகளின் மருத்துவ நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

அதில் இந்திய மருந்து நிறுவனமான பன்பியோ பார்ம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மருந்துகள் அடங்கும்.

ரஷ்ய - உக்ரைன் மோதல் நடந்து வரும் சூழலில், பலதரப்பு கொள்கையின்படி இந்தியாவின் சமநிலையான நிலைப்பாட்டை மேற்கத்திய நாடுகள் விமர்சித்து வருகின்றன.

மறுபுறம், தற்போதைய நெருக்கடியில் இந்தியாவின் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்வதாக ரஷ்யா வெளிப்படுத்தியுள்ளது.

ரஷ்ய-உக்ரைன் மோதல் தொடர்பாக இந்தியா "மிகவும் சமநிலையான நிலைப்பாட்டை" எடுத்து வருவதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் சமீபத்தில் தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த உதவி, இரு நாட்டு மக்களையும் இணைக்கும் விடயமாக பார்க்கப்படுகிறது.  

https://tamilwin.com/article/russia-india-friendship-sent-medicine-russian-1653837824

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமான உதவி! அடிச்சான் பாரு சிக்ஸர். அங்கதான் சந்திரன் நிக்கிறான்!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வாலி said:

மனிதாபிமான உதவி! அடிச்சான் பாரு சிக்ஸர். அங்கதான் சந்திரன் நிக்கிறான்!😂

இந்த உக்ரென்காரனுக்கு தேவையில்லா வேலை அமைதியாக இருந்த ரைஸியா மேல் படையெடுத்து ரசியா மக்கள் துன்பப்ப டுகிறார்கள் அதற்கு இந்தியா உதவி செய்வது நியாயம்தானே ?😄

எல்லாம் விலை குறைந்த எண்ணெய்க்கு போடும் ஜால்ரா 

ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்  .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்யா-கிந்தியா நீண்டகால நட்பறவு நாடுகளாகும். அதைவிட வங்கதேசப் போரின்போது மிகப்பெரும் பலமாக ரஸ்யா உதவியதை இந்தியா தட்டிக்கழித்துவிடுமா? எமது அரசியல் இலக்கிலிருந்து எல்லாவிடயங்களையும் நோக்கமுடியுமா என்று தெரியவில்லை. 
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

ரஸ்யா-கிந்தியா நீண்டகால நட்பறவு நாடுகளாகும். அதைவிட வங்கதேசப் போரின்போது மிகப்பெரும் பலமாக ரஸ்யா உதவியதை இந்தியா தட்டிக்கழித்துவிடுமா? எமது அரசியல் இலக்கிலிருந்து எல்லாவிடயங்களையும் நோக்கமுடியுமா என்று தெரியவில்லை. 
 

இந்தியா என்றுமே ரஷ்ய சார்பு நாடு தான். மேலை கலாச்சாரத்தை கொஞ்சம் உள்ளே வர விட்டாலும் தன் கொள்கையையும் தன் கலாச்சாரத்தையும் விட்டுக்கொடுக்காத நாடு.

Coca Cola ,Fanta போன்ற மேற்குலக பானங்கள் இந்தியாவில் நீண்ட காலமாகவே தடையாக இருந்தது.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.