Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டோன்பாஸில்... நிலைமை, மிகவும் மோசமாகவுள்ளது: கனரக ஆயுதங்களை கோரும் உக்ரைன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே. 

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் கிறிக்கட் போட்டி லெவலுக்கு போட்டினம்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

நல்ல கற்பனைக் கதை.

நேட்டோவின் பல்லை தலிபான்களே புடுங்கி வீசிட்டாங்க.. இதில ரஷ்சியா..

அதுபோக.. சிரியாவில் நேட்டோ வெட்டி விழுத்தினது தெரிந்ததே.

நேட்டோ நேரடியாக சிரியாவில் ரஷ்சியாவிடம் அடிவாங்கினது பத்தல்ல..

பின்லாந்து... சுவீடன் நேட்டோவில் இணைவதால்.. நேட்டோவின் பலம் அதிகரிக்காது.. சுமை தான் அதிகரிக்கும்.. காரணம்.. பின்லாந்து.. சுவீடன் எல்லாம் பெரும் இராணுவ வல்லரசுகள் கிடையாது. அதுதான் ரஷ்சியா இவர்கள் இணைவதால்.. ரஷ்சியாவுக்கு எதுவும் ஆகப்போவதில்லை என்று கூறிவிட்டது. மாறாக.. ஐரோப்பிய எல்லைகளில் அணு ஏவுகணைகளை ரஷ்சியா நிறுத்தும். எப்பவும் அணு ஆயுத அச்சுறுத்தலோடு ஐரோப்பா அமைதியற்ற பூமியாக.. முன்னொரு காலத்தில் கியூபா போல்.. ஐரோப்பா அமெரிக்காவின் விளையாட்டுப் பொம்மையாகும். இது ஐரோப்பிய பிராந்தியத்தில் அதிக காலம் நடக்க முடியாது. நேட்டோ உடைவதே நிகழும். மிக விரைவில் அந்தக் காட்சிகளை காணலாம்.

ஏலவே ஐரோப்பிய ஒன்றியத்தால்.. ரஷ்சியா மீது முழு பொருளாதார தடை போட முடியாத சூழல். 

புட்டின் எல்லாக் கணக்கையும் போட்டுத்தான் செயல்படுகிறார்.

புட்டின் யுத்தத்தின் ஆரம்பத்திலேயே சொல்லிட்டார்.. உக்ரனை ஆக்கிரமிப்பதல்ல ரஷ்சியாவின் நோக்கம்.

உக்ரைனின் இராணுவ இலக்குகளை பலவீனப்படுத்தவே முதற்கட்ட இராணுவ நடவடிக்கை. இன்றேல்.. ஆக்கிரமிப்பு நோக்கமென்றால்.. யுத்தத்தின் முதல் வாரத்திலேயே உக்ரைன் தலைநகரம் ரஷ்சியப் படைகள் வசமாகி இருக்கும்.

அதன் பின்னரும்.. பேச்சு வார்த்தையின் பின்னரே ரஷ்சியா வலிந்து படை விலக்கிக் கொண்டதே தவிர.. உக்ரைன் படைகள் சண்டையிட்டு போனதல்ல.

ரஷ்சியாவின் இலக்கு உக்ரைனை துண்டாடுவது. மேற்கு விசுவாச உக்ரனை மீது எப்போதும் ஒரு நெருக்கடி அவசியம்.. அதனை டான்பாஸ்.. மற்றும் தெற்கு உக்ரைன் பகுதிகளை தனிநாடுகளாக்கி ரஷ்சியா சாதிக்கும். 

பரந்த ரஷ்சியாவை ஐரோப்போவோ..அமெரிக்காவோ ஒன்றும் பண்ண முடியாது. ஆனால்.. ரஷ்சியா உந்த யுத்தத்தை சாட்டாக வைச்சு.. 1990 க்குப் பின் செய்யப்பட்ட ஒப்பந்தங்களை மீறி அமெரிக்கா செய்து வந்த நேட்டோ விரிவாக்கத்தை வெளிப்படையாகக் காட்டிவிட்டது. எனி அதை வைத்தே ஐரோப்பா மீதான தனது சகல அழுத்தங்களையும் ரஷ்சியா பிரயோக்கிக்கும். அது நேட்டோ உடைவுக்கு ஒருவகையில் வழி வகுக்கும்.. ஐரோப்பியர்கள் பொருண்மிய ரீதியில் கஸ்டத்தை உணரும் போது.. நேட்டோவின் தேவை இல்லாமல் போகும். 

இதில் புட்டின் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கிறார். 

நேட்டோவின்... பழைய தோல்விகளையும், 
புட்டினின்... தற்போதைய வெற்றிகளையும்,
தரவுககளுடன் எழுதப் பட்ட கட்டுரை. 
நன்றி நெடுக்ஸ். 👍 👏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon of one or more people and text that says 'RUSSIAN MAN BAD Iraq Libya Syria Vietnam Afghanistan'

 

May be an image of 2 people

 

May be a cartoon

 

May be a cartoon of one or more people, people standing and text

பேசும் படம். 😂
புரிஞ்சவன்...  பிஸ்தா. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

பேசும் படம். 😂
புரிஞ்சவன்...  பிஸ்தா. 🤣

கருத்துள்ள கேலிச்சித்திரம். அதிலும் தேன் கூடு பிரமாதம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, goshan_che said:

ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே. 

மேலைத்தேய நாடுகளில்/முதலாளித்துவ நாடுகளில் விலைவாசி உயர்வுகளையும், போராட்டங்களையும்,அழிவுகளையும் ஓரளவிற்கு தான் தாங்குவார்கள். அளவிற்கு மிஞ்சினால் வீதிக்கு இறங்கி விடுவார்கள்.கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு போராட்டங்களில் இறங்கி அழிவுகளை எற்படுத்தி விடுவார்கள். அதனாலேயே ஜேர்மனியில் போக்குவரத்து கட்டண குறைப்பு,குழந்தைகளுக்கான  பிரத்தியேக உதவிப்பணம்,குடும்பங்களுக்கான உதவிப்பணம் மற்றும் எரி பொருள் விலை குறைப்பு என அதிரடி நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. அத்தியவசிய உணவு பொருள்களுக்கான வரி குறைப்பும் பேச்சுவார்த்தையில் உள்ளதாக கேள்வி. மேற்குலகு ஏதாவது  பொய் சொல்லி போரை தொடர்ந்தாலும் அது நீடிக்காது.

ஆனால் ரஷ்யாவில் நிலைமை அப்படியல்ல. மக்கள்  வீதிக்கு இறங்கி  போராட முடியாது. அரசு தான் நினைத்ததை எப்போதும் என்னவும் செய்யலாம்.மக்கள் அழிந்தாலும்  மொஸ்கோ தான் நினைத்த தனது பிராந்திய வலிமையை கட்டுப்பாட்டை நிறுவியே தீரும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

மேலைத்தேய நாடுகளில்/முதலாளித்துவ நாடுகளில் விலைவாசி உயர்வுகளையும், போராட்டங்களையும்,அழிவுகளையும் ஓரளவிற்கு தான் தாங்குவார்கள். அளவிற்கு மிஞ்சினால் வீதிக்கு இறங்கி விடுவார்கள்.கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு போராட்டங்களில் இறங்கி அழிவுகளை எற்படுத்தி விடுவார்கள். அதனாலேயே ஜேர்மனியில் போக்குவரத்து கட்டண குறைப்பு,குழந்தைகளுக்கான  பிரத்தியேக உதவிப்பணம்,குடும்பங்களுக்கான உதவிப்பணம் மற்றும் எரி பொருள் விலை குறைப்பு என அதிரடி நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. அத்தியவசிய உணவு பொருள்களுக்கான வரி குறைப்பும் பேச்சுவார்த்தையில் உள்ளதாக கேள்வி. மேற்குலகு ஏதாவது  பொய் சொல்லி போரை தொடர்ந்தாலும் அது நீடிக்காது.

ஆனால் ரஷ்யாவில் நிலைமை அப்படியல்ல. மக்கள்  வீதிக்கு இறங்கி  போராட முடியாது. அரசு தான் நினைத்ததை எப்போதும் என்னவும் செய்யலாம்.மக்கள் அழிந்தாலும்  மொஸ்கோ தான் நினைத்த தனது பிராந்திய வலிமையை கட்டுப்பாட்டை நிறுவியே தீரும்.

இது உண்மைதான். இதுதான் ஒப்பீட்டளவில் ஜனநாயகம் உள்ள நாடுகளின் வீக் பொயிண்ட்.

ஆனால் அங்கேயும் (ரஸ்யா/இலங்கை) வீதிக்கு இறங்கும் வரைக்கும்தான் பயம் இறங்கி விட்டால் - புரட்சியில்தான் முடியும்.

இந்த பிணக்கு இழுபடுவதால் ஒரு பிரிதானிய சாதாரண சிட்டிசனாக எனக்கு பொருளாதார இழப்பே.

உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும்.

ஆகவேதான் இது வட-தென் கொரியா பாணியில் முடிந்தால் நல்லம் என்பது என் எதிர்பார்ப்பு.

ஆனால் நம் விருப்பத்தை, நடக்கும் விடயங்களை அலசுவதில் கலக்க கூடாது அல்லவா.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

போர் நீண்டால் சிறிலங்காவின் பொருளாதார நிலைக்கு உலகின் பல நாடுகள் செல்லும் என்பது மிக கசப்பான உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, nunavilan said:

போர் நீண்டால் சிறிலங்காவின் பொருளாதார நிலைக்கு உலகின் பல நாடுகள் செல்லும் என்பது மிக கசப்பான உண்மை.

ஓம். இந்த போர் இல்லாமலே ஒரு உணவு, நீர் பஞ்சத்தை நோக்கி உலகு நகர்கிறது என சிலர் முன்னரே கூறினார்கள். ஆனால் இப்போ கிட்டதட்ட இப்படி ஒரு நிலமை தவிர்க முடியாதது என்றே படுகிறது.

பாதிக்கப்படபோவது ஆபிரிக்க, ஆசிய நாடுகள்தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, nunavilan said:

போர் நீண்டால் சிறிலங்காவின் பொருளாதார நிலைக்கு உலகின் பல நாடுகள் செல்லும் என்பது மிக கசப்பான உண்மை.

வெள்ளைக்காரர்… உக்ரேனுக்கு ஆயுதம் கொடுக்கிறதை நிற்பாட்டினால்,
எப்பவோ… போர் நின்றிருக்கும். ஆனால் அதை செய்ய மாட்டார்கள்.

புட்டினும்… உக்ரைனுக்கு அவர்கள் கொடுத்த ஆயுதத்தை அழிக்க,
போரை தொடர வேண்டிய… நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார்.

உண்மையில் இது, உக்ரேனின் ஆயுதத்தை களைந்து…
சமாதானத்தை கொண்டு வருவதே, ரஷ்யாவின் நோக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தமிழ் சிறி said:

வெள்ளைக்காரர்… உக்ரேனுக்கு ஆயுதம் கொடுக்கிறதை நிற்பாட்டினால்,
எப்பவோ… போர் நின்றிருக்கும். ஆனால் அதை செய்ய மாட்டார்கள்.

புட்டினும்… உக்ரைனுக்கு அவர்கள் கொடுத்த ஆயுதத்தை அழிக்க,
போரை தொடர வேண்டிய… நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார்.

உண்மையில் இது, உக்ரேனின் ஆயுதத்தை களைந்து…
சமாதானத்தை கொண்டு வருவதே, ரஷ்யாவின் நோக்கம்.

நீங்க வேற, புட்டினை உசுபேத்தி உக்ரேன் மீது அடிக்க வைத்ததே அமெரிக்காதான். அவர்கள் ஏன் இப்போ ஆயுத சப்ளையை நிப்பாட்ட போகிறார்கள்.

பின்லாந்து, சுவீடன் - பனிபோர் காலத்தில் கூட நடுநிலையாக நின்றவர்கள். சோவியத் சிதறிய போதும் அசையவில்லை. ஹெல்சிங்கி-சென் பீடர்ஸ் பேர்க் கிட்டதட்ட இரட்டை நகர்கள் போல, ரயில், கப்பல், வர்த்தக தொடர்பு எல்லாம் உண்டு.

அத்தனையையும் உடைத்து இன்று பால்டிக் கடலில் சில பகுதிகளை தவிர மிகுதியை நேட்டோ வசமாக்கி விட்டது அமேரிக்கா.

ஒரு இழப்பும் இல்லாமல் அமெரிக்கா பல அனுகூலங்களை அடையும் இந்த போர் தொடர வேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடாக இருக்கும்.

இழப்பு எல்லாம், உக்ரேன், ரஸ்யா, ஐரோப்பிய நாடுகள், யூகே, மற்றும் சம்பந்தபடாத ஆசிய, ஆபிரிக்க வறிய நாடுகளுக்குத்தான்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

அத்தனையையும் உடைத்து இன்று பால்டிக் கடலில் சில பகுதிகளை தவிர மிகுதியை நேட்டோ வசமாக்கி விட்டது அமேரிக்கா.

கொஞ்சம் பொறுங்கள் அடுத்த வல்லரசு சீனா என சொல்கிறார்கள். அதன் பின் வேறு தொடர் கதைகள் வரலாம்.

ரஷ்யா உலகில் பெரிய நிலப்பரப்பை கொண்ட நாடு மட்டுமல்லவே? அதிக கனிவளங்களை கொண்ட நாடு என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. தானும் தன் பாடும் என இருந்தாலே பூமி அழியும் மட்டும் சுகமாக இருக்கலாம். ஆனால் ஐரோப்பா அப்படியல்ல.ஆசியா தொடக்கம் ஆபிரிக்கா வரைக்கும் பலவிடயங்களில் தங்கியிருக்கும் பூமி.

ஐரோப்பாவிற்கு பஞ்சம் வந்தால் அமெரிக்காவில் குரல்வளையை கடித்து காறித்துப்பவும் தயங்க மாட்டார்கள்.

தற்போதைய சுவீடன் பின்லாந்து நேட்டோ இணைப்பு மற்றும் ரஷ்ய எரிவாயு பகிஷ்கரிப்புக்கான முட்டுக்கட்டைகளை பார்த்தாலே அடுத்த ஆண்டுக்கான அரசியல் நிலமைகள் ஒடி விளங்குமென நினைக்கின்றேன் 😄

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2022 at 00:38, தமிழ் சிறி said:

The Lion King Simba GIF - The Lion King Lion King Simba - Discover & Share  GIFs  

Lion King GIF - Lion King - Discover & Share GIFs  Vladimir Putin Schmunzelt GIF - Putin Vladimir Putin Schmunzel - Discover &  Share GIFs

"கண்ணா..... பன்னிங்க தான், கூட்டமாக வரும்.  
சிங்கம்... சிங்கிளாக வரும்." என்று, ரசனி சொன்ன மாதிரி... 😂

புட்டின்... 30 நாடுகளுக்கு எதிராக போரிட்டு,  
உக்ரைனின் 20 % மான இடங்களை ரஷ்யா பிடித்துள்ளதை...
வசதியாக மறந்து விட்டு, ரஷ்யா தோல்வி என்று சப்பைக் கட்டு, கட்ட வேண்டாம். 🙂

"மெயின் பிலிம்".... இனித்தான் வரும். இதுவரை  பாத்தது, முன்னோட்டம் கண்ணா. 🤣

சிறி அண்ணா  இப்பயும் லயன் கிங் கார்ட்டூன் போடுற ரேஞ்சிலதான் சிந்திக்கிறீங்கள் போல   😉 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.