Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனின்... வரலாற்று சிறப்புமிக்க, "கேம்டன் சந்தை" விற்பனைக்கு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனின் வரலாற்று சிறப்புமிக்க கேம்டன் சந்தை விற்பனைக்கு!

லண்டனின்... வரலாற்று சிறப்புமிக்க, "கேம்டன் சந்தை" விற்பனைக்கு!

லண்டனின் வரலாற்று சிறப்புமிக்க கேம்டன் சந்தை விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.

சந்தையின் பில்லியனர் உரிமையாளர், ஒரு ஒப்பந்தம் தனக்கு 1.5 பில்லியன் பவுண்டுகள் வரை கிடைக்கும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

முதலீட்டு வங்கியான ஸ்சைல்ட் அண்ட் கோ விற்பனை செயல்முறையை மேற்பார்வையிடுகிறது.

வடக்கு லண்டனில் 1,000க்கும் மேற்பட்ட நிலையகள், மதுபான சாலைகள், கடைகள் மற்றும் அருந்தகங்கள் கொண்ட 16 ஏக்கர் பேட்ச்வொர்க் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும்.

ஆனால், இது நீண்டகாலமாக எதிர்-கலாச்சார இயக்கங்களுடன் தொடர்புடையது, பங்க்கள் முதல் ஹிப்பிகள் வரை, புதிய தயாரிப்புகள், டிரிங்கெட்டுகள் மற்றும் கலை மற்றும் கைவினைப்பொருட்களை விற்கும் சுயாதீன சில்லறை விற்பனையாளர்களின் அகலத்தில் தன்னைப் பெருமைப்படுத்துகிறது.

1972ஆம் ஆண்டில் இரண்டு குழந்தை பருவ நண்பர்களால் வாங்கப்பட்ட மரக்கட்டை ஆலையிலிருந்து சந்தை முளைத்தது. இப்போது, இது ஆண்டுக்கு 28 மில்லியன் பார்வையாளர்களை ஈர்ப்பதாகக் மதிப்பிடப்படுகின்றது.

இது, கேம்டன் லாக் மார்க்கெட், ஸ்டேபிள்ஸ் மார்க்கெட் மற்றும் பக் ஸ்ட்ரீட் மார்க்கெட் ஆகிய மூன்று தனித்தனி மண்டலங்களால் ஆனது. இந்த பகுதியில் வீட்டுவசதி, வேலை செய்யும் இடங்கள் மற்றும் 35,000-சதுர-அடி, பாபிலோன் பார்க் எனப்படும் மூன்று-தள ஓய்வு மையம் ஆகியவை அடங்கும்.

https://athavannews.com/2022/1285402

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் ஆரும் பில்லியனர் இருந்தா வாங்குவினமே?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

தமிழர்கள் ஆரும் பில்லியனர் இருந்தா வாங்குவினமே?

 தமிழர் இலங்கைக்கு 52 பில்லியன் கொடுத்து நாட்டை வாங்கும் டீலில் பிசி. இலங்கையின் 1/3 நிலப்பரப்பும் அத்தனை கடல்வளமும் - லாபாய், லாபாய் - போனால் வராது, பொழுதுபட்டல் கிட்டாது 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

தமிழர்கள் ஆரும் பில்லியனர் இருந்தா வாங்குவினமே?

வாங்க பில்லியன் வங்கீல இருக்க தேவையில்லை, ஏராளன்....

வெட்டியாடும் அறிவும், துணிவும், அதுக்கு மேலே.... இதனால் லாபம் வரும் என்ற கணிப்பு தெரிந்தால் போதுமே.

உதாரணம் சொல்லவேண்டுமாயின்..... ஜேர்மன் கம் நகர, ஜரோப்பாவின் மிக உயரமான கோபுரம் கொண்ட ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில்.

ஸதாபகர்..... நான் அறிந்த வரை பிறப்பால் பிராமணர் இல்லை... வேலை செய்து கொண்டிருந்த பிள்ளையார் கோவிலில் வேலையில் இருந்து தூக்கி விட்டனர்.

தமிழகம் சென்று, ஈழத்து..... ஆக... சமஸ்கிருதம் பயின்று... திரும்பி... அப்பகுதி உள்ளுர் ஆட்சியாளரிடம் சென்று வருடம் குறைந்தது பத்தாயிரம் பயணிகளை, யாத்திரிகர்களாக வர வைப்பேன் என்று சொல்லி, கோவில் கட்ட, ஆத்துக்குப் பக்கத்தில் நீண்டகால குத்தகைக்கு இடமும்... பிள்ளையார் கோவில் கணக்கு வைத்திருந்த அதே வங்கிக் கிளைக்கு போய் லோனும் கேட்டார்.

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பதால்.... வங்கி மனேஜரும் மூன்று மில்லியன் டொஜ் மார்க் பணமுமாக..... மூவர் கூட்டணியில் கோவில்....

இன்று கடனையும் முடித்து, இடத்தையும் வாங்கி..... ரயில் நிலையம் வந்திறங்கும் பக்தர்களை ஏத்தி இறக்க.... கம் ஆலயம்/தேர்திருவிழா என்று தமிழில் போட்டுடன் பஸ் ... ஓடுது....

ஆகவே..... நம்ம பங்கர் நக்கல் பண்ணிணாலும்.... ஜம்பத்திரண்டு பில்லியன்..... நம்மால் முடியாததல்ல....

தனிமனிதனால் மூன்று மில்லியன்.... உலகத் தமிழர்களால்......?

மார்கமுண்டு....

*****

அதே வேளை இதே இலண்டன் தமிழர்களிடம்.... கூகிளுக்கு சவால் விடும் மென்பொருள் எழுதகிறேன்.... ஆளுக்கு ஆயிரம் போடுங்கள்.....

கூகிள் அந்த மென்பொருளை வாங்கும்.... உங்களுக்கு ஆயிரம், நாலாயிரமாக கிடைக்கும் என்று சொல்லி.... பல மில்லியன் ஆட்டையைப் போட்டு ஓடிய கதையும் நடந்தது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

வாங்க பில்லியன் வங்கீல இருக்க தேவையில்லை, ஏராளன்....

வெட்டியாடும் அறிவும், துணிவும், அதுக்கு மேலே.... இதனால் லாபம் வரும் என்ற கணிப்பு தெரிந்தால் போதுமே.

உதாரணம் சொல்லவேண்டுமாயின்..... ஜேர்மன் கம் நகர, ஜரோப்பாவின் மிக உயரமான கோபுரம் கொண்ட ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில்.

ஸதாபகர்..... நான் அறிந்த வரை பிறப்பால் பிராமணர் இல்லை... வேலை செய்து கொண்டிருந்த பிள்ளாயார் கோவிலில் வேலையில் இருந்து தூக்கி விட்டனர்.

தமிழகம் சென்று, ஈழத்து..... ஆக... சமஸ்கிருதம் பயின்று... திரும்பி... அப்பகுதி உள்ளுர் ஆட்சியாளரிடம் சென்று வருடம் குறைந்தது பத்தாயிரம் பயணிகளை, யாத்திரிகர்களாக வர வைப்பேன் என்று சொல்லி, கோவில் கட்ட, ஆத்துக்குப் பக்கத்தில் நீண்டகால குத்தகைக்கு இடமும்... பிள்ளையார் கோவில் கணக்கு வைத்திருந்த அதே வங்கிக் கிளைக்கு போய் லோனும் கேட்டார்.

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பதால்.... வங்கி மனேஜரும் மூன்று மில்லியன் டொஜ் மார்க் பணமுமாக..... மூவர் கூட்டணியில் கோவில்....

இன்று கடனையும் முடித்து, இடத்தையும் வாங்கி..... ரயில் நிலையம் வந்திறங்கும் பக்தர்களை ஏத்தி இறக்க.... கம் ஆலயம்/தேர்திருவிழா என்று தமிழில் போட்டுடன் பஸ் ... ஓடுது....

ஆகவே..... நம்ம பங்கர் நக்கல் பண்ணிணாலும்.... ஜம்பத்திரண்டு பில்லியன்..... நம்மால் முடியாததல்ல....

தனிமனிதனால் மூன்று மில்லியன்.... உலகத் தமிழர்களால்......?

மார்கமுண்டு....

*****

அதே வேளை இதே இலண்டன் தமிழர்களிடம்.... கூகிளுக்கு சவால் விடும் மென்பொருள் எழுதகிறேன்.... ஆளுக்கு ஆயிரம் போடுங்கள்.....

கூகிள் அந்த மென்பொருளை வாங்கும்.... உங்களுக்கு ஆயிரம், நாலாயிரமாக கிடைக்கும் என்று சொல்லி.... பல மில்லியன் ஆட்டையைப் போட்டு ஓடிய கதையும் நடந்தது.

நீங்கள் சொல்வதுதான் மெத்த சரி.

நாங்கள் எல்லாரும் சேர்ந்தால் 52 பில்லியன் பிச்சைக்காசு….

நான் இப்பவே தொடங்கீட்டன்….ஆளுக்கு ஒவ்வொரு பக்கமா சேக்காமல் ….வங்கி கணக்கு தகவல்களை பெற, உடான்ஸ்சாமியார்.டாட்கொம் ஐ அணுகவும்.

#காசு சேக்கிறம், #நாடு வாங்கிறம்

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

நீங்கள் சொல்வதுதான் மெத்த சரி.

நாங்கள் எல்லாரும் சேர்ந்தால் 52 பில்லியன் பிச்சைக்காசு….

நான் இப்பவே தொடங்கீட்டன்….ஆளுக்கு ஒவ்வொரு பக்கமா சேக்காமல் ….வங்கி கணக்கு தகவல்களை பெற, உடான்ஸ்சாமியார்.டாட்கொம் ஐ அணுகவும்.

#காசு சேக்கிறம், #நாடு வாங்கிறம்

உங்கள் பார்வை எப்படி இருந்தாலும்....

தனிநாடு ..... ஜம்பது இரண்டு பில்லியன் வேறு விடயம்....

ஆனால்..... நோக்கத்தில் தீர்க்கமான ஒருவருக்கு..... பல தடவை சிந்தனை செய்து புடம் போடப்பட்ட ஒரு திட்டத்துக்கு பணம் திரட்டுவது பிரச்சணை இல்லை என்பது நிதர்சனம்.

சிலிக்கன் பள்ளத்தாக்கில்..... முப்பது செக்கண்ட்...... டிராகன் டென்னில் மூன்று நிமிடங்கள்....

ஆயிரம் மைல் பயணமும்.... எடுத்து வைக்கும் முதல் அடியுடன் தானே ஆரம்பிக்கும்...

*****

இந்தா.... சாமானியன் பச்சை போட்டுவிட்டார் என்று செய்தி சொன்னது.....

இப்ப யாரெண்டு தெரியவில்லை .....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Nathamuni said:

சரி உங்கட ஆசையை நான் ஏன் கெடுப்பான்.

நீங்கள் கனகாலமா யாழில் சொன்ன ஐடியாதான் இது. இப்ப அதை இன்னும் கொஞ்ச பேர் சொல்லி அறிக்கை வரை போட்டினம்.

எனக்கு இது சுத்த பைத்தியகார, சிறு பிள்ளை வேளாண்மையாக தெரிந்தாலும், நான் குறுக்க விழுந்து யடுக்க விரும்பேல்ல.

பொதுவா பிரசேதங்கள்ளை நாடுகள் தமக்கிடையே விற்பது, வாங்குவது நடந்ததுண்டு (இப்போ இல்லை). அமெரிக்கா லூசியானாவை, கலிபோனியா, டெக்சஸ், அலாஸ்கா என பலதை வாங்கியுள்ளது.

ஆனால் ஒரு நாட்டை, பிரித்து ஒரு non state party க்கு விற்பது என்பது உலக ஒழுங்கு சம்பந்தமான பிரச்சினை.

இப்போ இலங்கை விற்க ஒத்து கொள்ளுது என வைப்பம் (பிக்குமார் விடவே மாட்டார்கள் - சரி பேச்சுக்கு வைப்பம்).

52 பில்லியனை தமிழர் சார்பில் திரு குமாரசாமி திரட்டி விட்டார் டொய்ச் வங்கியில் காசும் ரெடி என வைப்போம்.

இந்தியா 53 பில்லியனுக்கு கேட்டால்?

சீனா 54 க்கு கேட்டால்?

இலங்கையில் ஒரு தனிநாடு உருவாவது என்பது ஹம் கோவில்  நிலம் மோர்ட்கேஜ் போல அல்ல. 

அதில் பல நாடுகளின் நலன் சார்ந்துள்ளது.

ஆகவேதான் எனக்கு இந்த அணுகுமுறை ஒரு non starter ஆக தெரிகிறது.

ஆனால் இது வெறும் கேலிக்குரிய non starter idea மட்டும் அல்ல - ஒரு தேவையில்லாத distraction.

இதில் செலவிடும் நேரத்தை, சக்தியை, இலங்கை ஒரு நியாயமான சமஸ்டி தீர்வுக்கு போகவேண்டும், படை பல செலவீனத்தை குறைக்க வேண்டும், பிரசன்னத்தை குறைத்து, காணிகளை மீள சிவிலியன்களிடம் கொடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளுக்கு செலவிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

மன்னிக்க வேண்டும்.

உங்கள் பார்வை வேறு கோணத்தில் உள்ளது.

சிங்கப்பூர் பிரிந்தது, மலேசிய பாராளுமன்ற தீர்மானம் மூலம்....

செக்கோசிலோவாக்கியா..... செக், சிலோவாக்கியா ஆகியது..... உள்நாட்டு முடிவு.

இன்னும் பல உதாரணம் உள்ளன.

எனினும் பிக்குமார் எதிர்த்தால்....என்ற கேள்விக்கு பதிலை.... பசித்த சிங்கள வயிறுகள் கொடுக்கும்....

இது திமிர் பிடித்த, இனவாத சிங்களம் இல்லை...

பசி வதைக்கும்..... தமிழகத்தில் பிச்சை கேட்கும் சிங்களம்...

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

இல்லை நாதம். செக்கஸ்லொவாக்க்கியா என்பது 1ம் உலக யுத்த முடிவில் செக் தேசத்தையும், ஸ்லாவிக் தேசத்தையும் (nation) இணைத்து உருவாக்கி பின், பனிப்போர் முடிவில் செக், ஸ்லொவாக்கியா என இரண்டாக உடைந்து போன ஒரு நாடு.

இங்கே யாரும் எந்த non state party யிடமும் பணத்தை வாங்கி கொண்டு நாட்டை உருவாக்கவில்லை.

சிங்கப்பூரின் நிலமையும் இதுதான், சுருக்கமாக - பிரித்தானிய ஆதிக்கத்தின் கீழ் ஒரு நகர நாட்டுக்குரிய அம்சங்களோடு இருந்து பின்னர் 1963 Malaysia Agreement மூலம் Malaysian Federation இல் ஒரு தன்னாட்சி பிராந்தியமாக இணைந்து கொண்டது. 

1965 இல் மலேசியா பாராளுமன்றம் சிங்கபூரை Malaysian Federation (மலேசிய சமஸ்டி அரசு) இல் இருந்து வெளியேற்றியது.

ஆகவே செக்கஸ்லொவாகியா, சிங்கபூர் இரெண்டிலுமே காசை வாங்கி கொண்டு ஒரு non state party க்கு நாட்டை வித்து புது நாடு உருவாகவில்லை.

மாறாக மாற்றம் ஏற்பட்ட போது ஏலவே, autonomous regions ஆக இருந்த செக், ஸ்லொவாக்கிய, சிங்கபூர் அரசுகள் இறையாண்மை உள்ள நாடுகளாக தரமுயர்ந்தன. 
 
இப்படி இலங்கயின் வட-கிழக்கை தரமுயர்த்துவதாயின் அங்கே இருக்கும் ஒரு அரசுதான் அதை பொறுபேற்க முடியும் (மக்கள் பிரதி நிதிகள்) மாறாக டயஸ்போராவிடம் காசை வாங்கி கொண்டு நிலம் கொடுத்த கதை, உலக வரலாற்றில் நான் இதுவரை கேள்விபடாதது.

அப்படி வட-கிழக்கை தரமுயர்த்துவது கூட, முஸ்லீம்கள், இந்தியா, சீனா, மேற்கு என பலரின் நலன் சம்பந்தபட்ட விடயம். 

ஆகவே நடைமுறைக்கு துளியும் பொருந்தாதது. என்பது என் தாழ்மையான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

அப்ப இனிதான் கேள்விப்படுவியள்.

காசு, பணம்.... கதை..... ஒரு ஆரம்ப புள்ளி மட்டுமே....

அதன் நோக்கம்..... தனிநாடு என்பது உங்கள் வேறு பட்ட பார்வை.... மிக வித்தியாசம் கொண்ட கோணத்தில் இருந்து பார்க்கிறீர்கள்.

இவ்வளவு பணம் கிளப்பக் கூடிய பலம் மிக்க.... புலம் பெயர் தமிழர் உடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்து..... சமஸ்டிக்கு போனாலே... நமது வாழ்வும் மேம்படும் என்று சிந்திக்க வைப்பதே நோக்கம்....

தமிழரை, அவர்களது பிரச்சணையை உதாசீனம் செய்ய இனியும் முடியாது. முடிந்தால் நமக்கத் தான் நஸ்டம் என்பது தான் தரப்படும் செய்தி.....

பெட்டியில் ஜம்பத்திரண்டு பில்லியனுடன் வந்து நிற்போம் என்பதல்ல....

தவிர.... பணம்.....பலம் ..... வலு மிக்கது. அது பாதாளம் வரை பாயும்.

ஆனால் எல்லா இடத்திலும் பணம் வேலை செய்யாது நாதம். 

உங்கள் அதீத தன்னம்பிக்கையை மெச்சும் அதே வேளை.

விமானத்தில் 50,000 அடியில் இருந்து யாரும் பாய்ந்து உயிர்தப்பவில்லை - இனி பாப்பியள் - என்பதை ஏற்கவும் முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

@Nathamuni பொது வேலை ஒன்றிற்கு பாரிய அளவில் தமிழர்கள் ஒன்று சேர்வது இனி ஒருபோதும் நடவாது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரை அடித்துவெளியே திரத்தினார்கள் சிங்களவர்... அதே தமிழர்கள் புலம் பெயர்தேசத்தில் இருந்து பணத்துடன் வந்து... கொள்ளுப்பிட்டி முதல்.... கல்கிசை வரை ஆதனங்களை வாங்கி குவித்துள்ளனர்...

பாதுகாப்பு தருவது... முன்னாள் இராணுவ வீரர்கள்... உங்களுக்கு நிணைவு இருக்கும்.... நான் ஒரு இராணுவ அதிகாரியை கொழும்பில் சந்தித்தமை குறித்து சொல்ல...நீங்களும்அது குறித்து பதிவு செய்தீர்கள்.

ஓய்வு பெற்று ஒரு செக்கியூரிட்டி நிறுவனம் நடாத்துகிறார்..... தமிழர் வீடுகளுக்கு பாதுகாப்பு வேண்டுமானால் தனது நிறுவன பெயரை கொடுக்கு மாறு, மெயில் போடுகிறார்.

3 hours ago, goshan_che said:

ஆனால் எல்லா இடத்திலும் பணம் வேலை செய்யாது நாதம். 

உங்கள் அதீத தன்னம்பிக்கையை மெச்சும் அதே வேளை.

விமானத்தில் 50,000 அடியில் இருந்து யாரும் பாய்ந்து உயிர்தப்பவில்லை - இனி பாப்பியள் - என்பதை ஏற்கவும் முடியவில்லை.

3 hours ago, MEERA said:

@Nathamuni பொது வேலை ஒன்றிற்கு பாரிய அளவில் தமிழர்கள் ஒன்று சேர்வது இனி ஒருபோதும் நடவாது.

தெரியும். ஆனாலும்.... கொத்தாவிடினும்... சீறாமலும் இருக்கக் கூடாது அல்லவா...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, MEERA said:

@Nathamuni பொது வேலை ஒன்றிற்கு பாரிய அளவில் தமிழர்கள் ஒன்று சேர்வது இனி ஒருபோதும் நடவாது.

நிதர்சனம்

4 minutes ago, Nathamuni said:

தமிழரை அடித்துவெளியே திரத்தினார்கள் சிங்களவர்... அதே தமிழர்கள் புலம் பெயர்தேசத்தில் இருந்து பணத்துடன் வந்து... கொள்ளுப்பிட்டு முதல்.... கல்கிசை வரை ஆதனங்களை வாங்கி குவித்துள்ளனர்...

பாதுகாப்பு தருவது... முன்னாள் இராணுவ வீரர்கள்... உங்களுக்கு நிணைவு இருக்கும்.... நான் ஒரு இராணுவ அதிகாரியை கொழும்பில் சந்தித்தமை குறித்து சொல்ல...நீங்களும்அது குறித்து பதிவு செய்தீர்கள்.

ஓய்வு பெற்று ஒரு செக்கியூரிட்டி நிறுவனம் நடாத்துகிறார்..... தமிழர் வீடுகளுக்கு பாதுகாப்பு வேண்டுமானால் தனது நிறுவன பெயரை கொடுக்கு மாறு, மெயில் போடுகிறார்.

ம்ம்ம்….புலிக்கு வீடு வாடகை விட்டு சம்பாதிச்ச ஆமிகாரர், காசுக்கு உளவு சொன்ன ஆமி அதிகாரிகள் எல்லாம் உண்டு நாதம். ஆனால் அதுவே அரசியல் நிலைப்பாட்டு மாற்றம்மாகாது.

பார்ப்பம் எவராவது ஒரு  சிங்கள அரசியல்வாதியாவது இந்த ஐடியாவை வரவேற்கிறாரா எண்டு. இருக்காது என நான் நம்புகிறேன்.

இதை வரவேற்றால் அதை எந்த பசியில் இருந்தாலும் - மஹாவம்ச மனோநிலை ஏற்காது என்பதும் என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

BTW, 52billion முழு நாட்டுக்கமாம்... வசக்கு கிழக்குக்கு மட்டும் இல்லையாமே..🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

BTW, 52billion முழு நாட்டுக்கமாம்... வசக்கு கிழக்குக்கு மட்டும் இல்லையாமே..🤔

கச்சதீவை… இந்தியா, திருப்பி எடுக்க முதல்…
52 பில்லியனோடை, அக்ரீமெண்ட் எழுதிப் போட வேணும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இங்கே யாரும் எந்த non state party யிடமும் பணத்தை வாங்கி கொண்டு நாட்டை உருவாக்கவில்லை.

பங்கர்...

உங்களிடம் விவாதித்த பின் தேடிப்பார்த்தேன்....

நீங்களும் பாருங்கள்.

வரலாறில், கெயிற்றி, தனது சுதந்திரத்தை, பிரான்சிடம் இருந்து, விலை பேசி வாங்கியது.

விலை பேசியவர்கள்... புரட்ச்சி செய்த அடிமைகள்...

In 1825, Haiti Paid France $21 Billion To Preserve Its Independence -- Time For France To Pay It Back!

https://amp.theguardian.com/world/2010/aug/15/france-haiti-independence-debt

https://www.washingtonpost.com/news/worldviews/wp/2015/05/13/does-france-owe-haiti-reparations/

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இந்த கடனை பற்றி நான் இப்போதுதான் கேள்விபடுகிறேன் நாதம் (நன்றி) ஆனால் நீங்கள் தந்த லிங்கில் கூட இதை சுதந்திரத்தை “தக்க வைக்க” கொடுக்க பட்ட விலை என்றே குறுக்கபடுகிறது, காசு கொடுத்து வாங்கிய சுதப்திரம் என்று அல்ல.

அதாவது, ஹெயிட்டியின் அடிமைகள், புரட்சி ஒன்றின் மூலம் சுதந்திர அரசை ஸ்தாபித்த பின், அடிகைகள் இழப்பால் ஏற்பட்ட ஈடு செய்ய, அடிமைகளை வைத்திருந்த பிரென்ஞ்  நிலபிரபுகளுக்கு ஒரு குறித்த தொகையை compensation ஆக கொடுக்கும் படி பிரான்ஸ், ஹெயிட்டியை நிர்பந்தித்துள்ளது.

இதை கிட்டதட்ட, 1ம் உலக போரில் ஜேர்மனி மீது வசேயில்ஸ் உடன்படிக்கை மூலம் வென்ற நாடுகள் போட்ட compensation உடன் ஒப்பிடலாம்.

இவற்றுக்கும் நீங்கள் சொல்லும் பணத்தை கொடுத்து நிலத்தை/நாட்டை பெறும் முறையும் ஒன்றல்ல என்பது என் கருத்து.

இங்கே யுத்தம்/புரட்சி மூலம் சுதந்திர அரசு ஸ்தாபிக்கப்பட்டு விட்டது. அதன் பின் compensation எப்படி கொடுப்பது என்பதுதான் கடனில் முடிந்துள்ளது.

பிகு

இந்த “சுதந்திரத்தை தக்கவைக்க விலை கூறியது”  200 வருடங்கள் முந்திய, காலனிய நடைமுறை அது, சட்டபடி, நியாயப்படி, விழுமியபசி கேடானது, ஆகவே பிரான்ஸ் இந்த தொகையை திருப்பி தர வேண்டும் என்பதே நீங்கள் தந்துள்ள கட்டுரைகளின் சாரம்.

இதை நீங்கள் கூட ஏற்பீர்கள் என நம்புகிறேன். 

ஆகவே இந்த காலத்துக்கு ஒவ்வாத நடைமுறையில் நாமும் சுதந்திரத்தை விலை பேச முயன்றால் “ in which century are you guys living ?” என்பதே உலகின் கருத்தாக இருக்கும் என நான் நம்புகிறேன்.

4 hours ago, Nathamuni said:

BTW, 52billion முழு நாட்டுக்கமாம்... வசக்கு கிழக்குக்கு மட்டும் இல்லையாமே..🤔

யாரும் தரப்போறேல்லதானே நாதம் - மங்கோலியாவையும் சேர்த்தே, பாகிஸ்தான், பங்களாதேஸ், இந்தியா உள்ளிட்ட, பேசிபார்க்கலாம். என்ன குறையப்போது🤣.

4 hours ago, தமிழ் சிறி said:

கச்சதீவை… இந்தியா, திருப்பி எடுக்க முதல்…
52 பில்லியனோடை, அக்ரீமெண்ட் எழுதிப் போட வேணும். 🤣

பிந்தினாலும் காரியம் இல்லை. Bikini Island (அட அதான் நம்ம கச்ச தீவு) (கிருபன் ஜி ஆமையை தூக்கி கொண்டு வரப்போறார் - ஐயோ இது வேற ஆமை🤣) க்கு 25 மில்லியனை குறைச்சு பேச சொல்லி இருக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

இந்த கடனை பற்றி நான் இப்போதுதான் கேள்விபடுகிறேன் நாதம் (நன்றி) ஆனால் நீங்கள் தந்த லிங்கில் கூட இதை சுதந்திரத்தை “தக்க வைக்க” கொடுக்க பட்ட விலை என்றே குறுக்கபடுகிறது, காசு கொடுத்து வாங்கிய சுதப்திரம் என்று அல்ல.

அதாவது, ஹெயிட்டியின் அடிமைகள், புரட்சி ஒன்றின் மூலம் சுதந்திர அரசை ஸ்தாபித்த பின், அடிகைகள் இழப்பால் ஏற்பட்ட ஈடு செய்ய, அடிமைகளை வைத்திருந்த பிரென்ஞ்  நிலபிரபுகளுக்கு ஒரு குறித்த தொகையை compensation ஆக கொடுக்கும் படி பிரான்ஸ், ஹெயிட்டியை நிர்பந்தித்துள்ளது.

இதை கிட்டதட்ட, 1ம் உலக போரில் ஜேர்மனி மீது வசேயில்ஸ் உடன்படிக்கை மூலம் வென்ற நாடுகள் போட்ட compensation உடன் ஒப்பிடலாம்.

இவற்றுக்கும் நீங்கள் சொல்லும் பணத்தை கொடுத்து நிலத்தை/நாட்டை பெறும் முறையும் ஒன்றல்ல என்பது என் கருத்து.

இங்கே யுத்தம்/புரட்சி மூலம் சுதந்திர அரசு ஸ்தாபிக்கப்பட்டு விட்டது. அதன் பின் compensation எப்படி கொடுப்பது என்பதுதான் கடனில் முடிந்துள்ளது.

பிகு

இந்த “சுதந்திரத்தை தக்கவைக்க விலை கூறியது”  200 வருடங்கள் முந்திய, காலனிய நடைமுறை அது, சட்டபடி, நியாயப்படி, விழுமியபசி கேடானது, ஆகவே பிரான்ஸ் இந்த தொகையை திருப்பி தர வேண்டும் என்பதே நீங்கள் தந்துள்ள கட்டுரைகளின் சாரம்.

இதை நீங்கள் கூட ஏற்பீர்கள் என நம்புகிறேன். 

ஆகவே இந்த காலத்துக்கு ஒவ்வாத நடைமுறையில் நாமும் சுதந்திரத்தை விலை பேச முயன்றால் “ in which century are you guys living ?” என்பதே உலகின் கருத்தாக இருக்கும் என நான் நம்புகிறேன்.

யாரும் தரப்போறேல்லதானே நாதம் - மங்கோலியாவையும் சேர்த்தே, பாகிஸ்தான், பங்களாதேஸ், இந்தியா உள்ளிட்ட, பேசிபார்க்கலாம். என்ன குறையப்போது🤣.

மிக முக்கிய பத்திரிகைகளின் செய்தி தலைப்பு, விடயத்தை சொல்லி நிற்கிறது.

அதனுள்ளே போய் ஆய்வு செய்யும் அளவுக்கு நமக்கு அனுபவ அறிவில்லை அய்யா.

1805ம் ஆண்டு போராடிய அடிமைகளால்.... பேரம் பேசி தமது சுதந்திரத்தை வாங்க முடிந்துள்ளது என்பதே எனக்குப் புரிந்த செய்தி.

விடயம்.... வெரி சி்ம்பிள்..... உங்களுக்கு பண முடை.... உங்கள் உறவினர்கள் அயலவர்கள் கை விரித்து விட்டது மட்டுமல்லாமல், முன்னர் தந்ததை திருப்பித் தா அல்லது உங்கள் வீட்டில், காணியில் பகுதிகளை தருமாறு கோருகின்றர்.

போர்ட் சிற்றி, கம்பாந்தோட்டை என்று கொடுத்து விட்டீர்கள்.

உங்கள் பணமுடையும் தீரவில்லை. அவர்களும் இன்னும் கேட்கிறார்கள்.

இப்போது, நீங்கள் வீட்டை விட்டு முன்னரே திரத்திய தம்பியர் வருகிறார் ....

அண்ணா..... என்னாச்சு.... நம்ம தலைமுறை  சொத்து..... வெளில போக கூடாது....

நான் பணத்தை பிரட்டிக் கொண்டு வாறன்... முதலில் அடகை மீட்போம்....

பிறகு நமக்குள் பங்கு பிரிக்கலாம்.... என்கிறார்.

என்ன சொல்வீர்கள்?

கடன் தந்தவர்கள், அயலவர்கள் கூட.... ஏன் உங்கள் குடும்பத்தவர் கூட.... தம்பியுடன் சமாதானமாகப் போவதே புத்திசாலித்தனமானது என்பார்களா, இல்லையா?

நீங்கள் அவ்வளவு பணம் திரட்டுவது சாத்தியம் இல்லை என்ற கருத்தியலுடன் தான் பதிவு செய்கிறீர்கள் என நிணைக்கிறேன்.

நான் உங்கள் சங்கட நிலையில் இருந்தால் இதைத்தானே சொல்வேன்;  தம்பி..... உன்னால..... அவ்வளவு பிரட்ட முடியுமா...... உண்மையாயின்.... வா இருந்து பேசுவோம்.

தம்பியை திரத்திய போது..... அண்ணணக்கு பணமுடை இல்லை..... தலைக்கொழுப்பே அதிகமாக இருந்தது.

இன்று தம்பியை திரத்த ஏற்பாடு செய்த அடியாட்கள் செலவினால், அண்ணணுக்கு பணமுடை.

தம்பியிடம் பணமுள்ளது.... 👌

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அரசுக்கள் தமக்கு இடையே வாங்கி, விற்று இருக்கின்றன.  அலாஸ்கா வை ரஷ்யா us இற்கு விற்றது  சிறந்த உதாரணம்.

தனிப்பட்ட அமைப்புக்கள்,  நபர்கள் சொத்து வாங்குவது இதனுடன் ஒத்து வராது. பல  இடங்களில் முரண்படுகிறது.

இறைமை, வான் பரப்பு, இயற்கை வளம், தொல்பொருள் மற்றும் வரலாற்று  உரிமை, பிரதேசத்தின் சந்ததி தொன்மை போன்றவை தனியார் சொத்து பரிவர்த்தனையில் ஒருபோதுமே சிந்திக்கப்படுவது இல்லை. அவை அந்த அரசின் உரிமைகளாக இயற்கையாகவே கருதப் பழகிவிட்டோம்.

(புவி பிரதேசத்தை உரிமை கொண்டாடுவது இறைமை அல்ல.) 

வெளியாக பிரச்னை, மற்ற நாடுகள், குறிப்பாக கிந்தியா இதில் உள்ள அக்கறை. ஏனெனில், இப்படி ஓர் ஐடியா  ஐ பிரஸ்தாபிப்பது, மற்ற பிரச்னைகளும்  (உ.ம். காஸ்மீர், சீன - கிந்தியா) இவ்வாறு தீர்பதற்கு அணுகப்படலாம்   எனும் முன்னேற்றப்பாட்டை (precedent) ஏற்படுத்தி விடும். முக்கியமாக, பணம் உள்ளவரின் விருப்புக்கு பெரும்பாலும் உகந்தபடி தீர்ப்பதற்கு  அணுகப்படலாம் எனும் யதார்த்தத்தை கொண்டு வந்து விடும்.  கிந்தியா, பாகிஸ்தான் இதை ஒரு போதும் விரும்பாது.

transitional justice, remedial justice, creating conducive environment for permanent forgiving and healing, conflict resolution, closure and peace building என்பது போன்ற கட்டமைபுக்குள் ஓர் அங்கமாக, வடகிழக்கை  political status ஐ படிப்படியாக தரம் உயர்த்துவதற்கு, ஓர் பேரமாக வைக்கலாம்.            

அதனால், அங்கு உள்ள மக்களால் ஓர் அங்கீகாரம் கொண்ட (மற்றவர்களால் அங்கீகரிக்கப்பட்டு இருக்க தேவை இல்லை ) ஓர் அரச அமைப்பும், ஆக குறைந்தது கோரிக்கையும் இருக்க வேண்டும்.

இந்த எண்ணம் கூட அங்கு உள்ள கட்சிகளால் / பொது அமைப்புகள்  வெளியிடப்பட்டு இருந்தால், ஓர் மக்கள் அங்கீகார வலு இருக்கிறது.

எம்மவர்களின் ஆரவா கோளாறும், தமிழ் இணைய செய்தி தளங்களின் செய்தி வற்றலும், ஓர் வாய்ப்பை பறித்து விட்டதோ என்றே யோசிக்க தோன்றுகிறது.

அனால், வரலாற்றில் மற்ற பக்கத்தையும் பார்க்க வேண்டும், அதாவது ஆயுதத்தால் உள்நாட்டு அரசு உடைந்ததை விட, பணத்தினால் உடைந்த நிகழ்தகவு கூட.

குறிப்பு: செக்கோஸ்லோவோக்கியாவில் கூட, தேசிய பாராளுமன்றமே ஸ்லோவோக்கியா விட்டு அகலுவதற்கு அங்கீகாரம் கொடுத்தது.  

ஹெய்ட்டி இலும், சுதந்திரம் அடைந்த பின், பிரான்ஸ் அரசு அந்த பணத்தை அரசுக்கு கேட்கவில்லை, அடிமைகளின் உரிமையாளருக்கு நட்ட ஈடாகவே கேட்டது. பிரித்தானிய அரசும் அப்படி செய்தே உள்ளது, அடிமைகளை விடுவிக்க, அடிமை உரிமையாளருக்கு நட்ட ஈடாக பணம் கொடுத்தது.  

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Kadancha said:

நல்ல கருத்துப்பதிவு.

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இந்தியா உள்பட பல நாடுகள் சுதந்திரம் அடைந்த போது.... அந்த நாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவு தொடர்பில் பிரிட்டன்... குறி்த்த காலத்துக்கு ஒப்பந்தம் போட்டிருந்தது.

கியூபெக்... ஸகொட்லாந்தில்.... மக்களிடையே குடியொப்பம் நடாத்தப்பட்டது. அது வென்றிருந்தால்.... நடாத்திய கனேடிய, பிரிட்டிஸ் அரசுகள்... எப்படி நடந்திருக்கும்?

குடியொப்பம்.... பிரிவினையை விரும்பும் என்பதால்.... கற்றலான் பகுதியில்.... நடாத்த மறுக்கிறது... ஸ்பெயின்....

மேற்கு திமோர், தென் சூடான், கொசோவா, எரித்திரியா.... ஜநா மேற்பார்வையில் குடியொப்பம் நடாத்தி..... தனியே சென்றன.

பங்களாதேஸ் பிரிவினை, இந்திய அரசின் உதவியுடன் நடந்தாலும்.... பங்களாதேஸ் மக்கள் அதனை முழுவதுமாக ஏற்றுக்கொண்டனர்.

ஆக.... ஜநா மேற்பார்வையில் குடியொப்பம் வையுங்கோ... தமிழ் மக்கள் விருப்பம் போல செய்யலாம் என்ற நிலைப்பாடு குறித்து உங்கள் கருத்து ?

இதனையே.... தமிழகத்தில்.... சிறிய கட்சிகள் அழுத்தமாக கேட்கின்றன. பெரிய கட்சிகளும் கேட்கலாம்.

முடிவாக.... எந்த ஒரு மக்கள் கூட்டத்துக்கும் சுயநிர்ணய உரிமை.... உள்ளது. அதை அண்டை நாடுகள் நிராகரிக்கும் தார்மீக  உரிமை கிடையாது.

இலங்கை அரசை.... அது இருக்கும் கடன் சுமையால்.... வேறு வகையில் சிந்திக்க வைக்கவே... இந்த அறிவிப்பின் நோக்கமாக இருக்கலாம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Nathamuni said:

ஆக.... ஜநா மேற்பார்வையில் குடியொப்பம் வையுங்கோ... தமிழ் மக்கள் விருப்பம் போல செய்யலாம் என்ற நிலைப்பாடு குறித்து உங்கள் கருத்து ?

பங்களாதேஷ் ஐ தவிர, எல்லாவற்றிலும் வாக்கெடுப்புக்கு அந்த பிரதேச இறைமை அரசு சட்ட அடிப்படையில் ஏற்றுக் கொண்டன. 

மிகவும் தாராள தன்மை உள்ளதாக கருதப்படும் eu இன் போக்கும், கற்றலனில் spain மத்திய அரசு உடன்பட வேண்டும் என்பதே.

சிங்களம் சட்ட அடிப்படையில் உடன் பட்டால், எல்லாமே நல்லம்.  அதற்கு அழுத்தம் தேவை.

ஹிந்தியா அந்த நிலைமை வந்துவிடக் கூடாது என்ற ஓர் முக்கிய நோக்கத்திலேயே இந்த உதவி போர்வை.   
 
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kadancha said:

1971ல் பங்களாதேஸ் பிரிந்தாலும்..... 1973 தேர்தலில் அவாமி லீக்ஸ் கட்சியின் மகத்தான வெற்றியே மக்களின் குடியொப்ப முடிவாக கருதப்பட்டது.

இலங்கைக்குரிய சிறப்பான தீர்வு Confederation என்பதே என்று நான் நிணைக்கிறேன்.....

இது சுவிஸ் மொடலாக இருக்கலாம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Nathamuni said:

1971ல் பங்களாதேஸ் பிரிந்தாலும்..... 1973 தேர்தலில் அவாமி லீக்ஸ் கட்சியின் மத்தான வெற்றியே மக்களின் குடியொப்ப முடிவாக கருதப்பட்டது.

இதை பற்றி சட்டம் தெரிந்தவர்களோடு உரையாடிய அறிவில், அனுபவத்தில் நான் அறிந்தது,

1) சர்வதேச ஒழுங்கில், possession is law .

2) மற்றது, சர்வதேச ஒழுங்கில், ஒன்றில் (பறித்து) எடுத்து கொள்வது  அல்லது தருவதை பெற்றுக்கொள்வது என்பது.   

மிகுதி எல்லாமே சம்பிரதாய பூர்வமானது என்பதே நான் அறிந்தது.

இதுவரை நாடுகள் உருவான நிலைகளிலும், அதுவே அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

மிக முக்கிய பத்திரிகைகளின் செய்தி தலைப்பு, விடயத்தை சொல்லி நிற்கிறது.

அதனுள்ளே போய் ஆய்வு செய்யும் அளவுக்கு நமக்கு அனுபவ அறிவில்லை அய்யா.

1805ம் ஆண்டு போராடிய அடிமைகளால்.... பேரம் பேசி தமது சுதந்திரத்தை வாங்க முடிந்துள்ளது என்பதே எனக்குப் புரிந்த செய்தி.

விடயம்.... வெரி சி்ம்பிள்..... உங்களுக்கு பண முடை.... உங்கள் உறவினர்கள் அயலவர்கள் கை விரித்து விட்டது மட்டுமல்லாமல், முன்னர் தந்ததை திருப்பித் தா அல்லது உங்கள் வீட்டில், காணியில் பகுதிகளை தருமாறு கோருகின்றர்.

போர்ட் சிற்றி, கம்பாந்தோட்டை என்று கொடுத்து விட்டீர்கள்.

உங்கள் பணமுடையும் தீரவில்லை. அவர்களும் இன்னும் கேட்கிறார்கள்.

இப்போது, நீங்கள் வீட்டை விட்டு முன்னரே திரத்திய தம்பியர் வருகிறார் ....

அண்ணா..... என்னாச்சு.... நம்ம தலைமுறை  சொத்து..... வெளில போக கூடாது....

நான் பணத்தை பிரட்டிக் கொண்டு வாறன்... முதலில் அடகை மீட்போம்....

பிறகு நமக்குள் பங்கு பிரிக்கலாம்.... என்கிறார்.

என்ன சொல்வீர்கள்?

கடன் தந்தவர்கள், அயலவர்கள் கூட.... ஏன் உங்கள் குடும்பத்தவர் கூட.... தம்பியுடன் சமாதானமாகப் போவதே புத்திசாலித்தனமானது என்பார்களா, இல்லையா?

நீங்கள் அவ்வளவு பணம் திரட்டுவது சாத்தியம் இல்லை என்ற கருத்தியலுடன் தான் பதிவு செய்கிறீர்கள் என நிணைக்கிறேன்.

நான் உங்கள் சங்கட நிலையில் இருந்தால் இதைத்தானே சொல்வேன்;  தம்பி..... உன்னால..... அவ்வளவு பிரட்ட முடியுமா...... உண்மையாயின்.... வா இருந்து பேசுவோம்.

தம்பியை திரத்திய போது..... அண்ணணக்கு பணமுடை இல்லை..... தலைக்கொழுப்பே அதிகமாக இருந்தது.

இன்று தம்பியை திரத்த ஏற்பாடு செய்த அடியாட்கள் செலவினால், அண்ணணுக்கு பணமுடை.

தம்பியிடம் பணமுள்ளது.... 👌

உங்களுக்குக்கான பதிலை கீழே கடஞ்சா தந்திருக்கிறார் அதில் திருப்தி அடைந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

தலையங்கம் எப்போதும் கருத்தை கவர எழுதப்படுவதுதானே நாதம் - ஆனால் விசயம் உள்ளேதான் இருக்கும். 

முன்பே கூறி உள்ளேன் சர்வதேச சட்டம் என்பதும் மிக பெரும்பாலும் state parties ஆல் உருவாக்கப்பட்டு, அவர்களாலேயே கண்காணிக்கவும் படுவது.

ஆனால் புதிய நாட்டை எப்படி உருவாக்குவது என்பதற்கு ஒரு சர்வதேச சட்ட வரையறையும், how to do it handbook உம் இல்லை.

உதாரணமாக சோவியத் - உடைந்த போது - பல காலமாக இறையந்ண்மை அற்ற சோவியத் குடியரசுகளாக இருந்த லத்வியா போன்ற தேசங்கள் தமது இறையாண்மையை வெளிபடுத்தி - தனி நாடுகளாகின. அவற்றை தடுக்கும் வலு மொஸ்கோவுக்கு அப்போ இருக்கவில்லை, அதை தடுக்கும் எண்ணம் அமெரிக்கா உட்பட்ட ஏனைய வலுவான நாடுகளுக்கும் இருக்கவில்லை என்பதால் இது சாத்தியமாயிற்று.

ஆனால் யூகோஸ்லாவியா உடைவின் பின் யுத்தம் மூலமே குரோசியா தனி நாடாக முடிந்தது. அதன் பின், பாரம்பரியமாக சேர்பிய பகுதியாக இருந்த கொசோவோ, சேர்பியாவில் இருந்து தனியே வலுகட்டாயமாக நேட்டோவால் பிரித்து நாடாக்கப் பட்டது.

இதை போலவே தெற்கு ஒச்சேசியாவை ஜோர்ஜியாவில் இருந்து பிரித்து தனிநாடாக்கியது ரஸ்யா.

ஆனாலும் இதுவரைக்கும் கொசோவோ, சவுத் ஒசேசியாவை எல்லா நாடுகளும் ஏற்றுகொள்ளவில்லை.

ஆகவே உலகில் சர்வதேச சட்டபடி இதுவரைக்கும் தனிநாடுகள் இருவகையில்தான் உருவாகியுள்ளன

1. பெரிய நாடொன்றின் அனுசரணை + ஆயுத போராட்டம்

2. மேலே கடஞ்சா சொன்ன படி பிரியும், பிரிக்கும் நாடுகள் இடையில் உடன்படிக்கை மூலம்

நீங்கள், தமிழ்ஸ் போர் பிடன் கேட்பது போல் நாட்டை பணத்தை வாங்கி கொண்டு பிரிப்பது இதுவரையில் நடைமுறை இல்லை.

இனியும் இல்லை -காரணம் இறையாண்மை என்பது விலைக்கு விற்கும் பொருள் அல்ல (கடஞ்சா அழகாக விளக்கியுள்ளார்).

Edited by goshan_che

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.