Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரைனுக்கு ஆதரவாக சண்டையிட்ட 3 பேருக்கு மரண தண்டனை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனுக்கு ஆதரவாக சண்டையிட்ட 3 பேருக்கு மரண தண்டனை!

spacer.png

உக்ரைனில் கிழக்கு பகுதியில் உக்ரைன் அரசுக்கு ஆதரவாக சண்டையிட்டதற்காக பிரிட்டனைச் சேர்ந்த 2 பேர் மற்றும் மொராக்கோவைச் சேர்ந்த ஒருவர் என 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டோனெட்ஸ்க் மக்கள் குடியரசு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கூலிப்படை நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத செயல்களுக்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் மேல்முறையீடு செய்ய ஒரு மாத காலம் அவகாசம் உள்ளது. இந்த மூன்று பேரும் கூலிப்படையினர் என்றும், போர்க் கைதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்கு அவர்கள் தகுதியற்றவர்கள் என்றும் பிரிவினைவாதிகள் கூறியுள்ளனர்.
 
https://akkinikkunchu.com/?p=211736

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு உக்ரைனில் இரு பிரித்தானியர்களுக்கு மரண தண்டனை!

கிழக்கு உக்ரைனில் இரு பிரித்தானியர்களுக்கு மரண தண்டனை!

கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய பினாமி நீதிமன்றத்தால் இரண்டு பிரித்தானியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் தனது உக்ரைனிய பிரதிநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ட்ரஸ், உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவுடன் தொலைபேசியில் பின்னர் நிலைமையை விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டிங்ஹாம்ஷையரில் உள்ள நெவார்க்கைச் சேர்ந்த 28 வயதான அஸ்லின் மற்றும் பெட்ஃபோர்ட்ஷையரைச் சேர்ந்த 48 வயதான பின்னர், இருவரும் ரஷ்ய படையெடுப்பின் போது ஏற்கனவே உக்ரைனில் வசித்து வந்தனர்.

முற்றுகையிடப்பட்ட நகரமான மரியுபோலைக் காக்கும் போது ஏப்ரல் மாதம் இவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர்.

கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய சார்பு பிரிந்த பகுதியான டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு என்று அழைக்கப்படும் ரஷ்ய ப்ராக்ஸி நீதிமன்றத்தால் மூன்றாவது நபரான மொராக்கோ நாட்டவரான சௌதுன் பிரஹிமினுடன் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

ஐடன் அஸ்லின் மற்றும் ஷான் பின்னர் ஆகியோர் கூலிப்படையினர் என ரஷ்ய ப்ராக்ஸி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மூன்று பேரும் கூலிப்படையினர், அதிகாரத்தை வன்முறையில் கைப்பற்றுதல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டனர்.

இந்த தண்டனைகள் ஜெனிவா உடன்படிக்கையை மீறுவதாக பிரித்தானிய அரசாங்கமும் உக்ரைனின் உயர்மட்ட வழக்குரைஞரும் கூறியுள்ளனர்.

அவர்கள் அனைவரும் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விரும்புவதாக அவர்களது வழக்கறிஞர் கூறினார்.

https://athavannews.com/2022/1286421

  • கருத்துக்கள உறவுகள்

தாம் வாழ்ந்த  மண்ணை விரும்பும் இவர்கள்  போற்றுதல்களுக்குரியவர்கள்

அரசுகள் உடனடியாக  தலையிட்டு இவ்வாறான மண்  பற்றாளர்களை  காக்க நடவடிக்கை  எடுக்கணும்

எடுப்பார்களா?? அல்லது அரசியல்  செய்வார்களா???

  • கருத்துக்கள உறவுகள்

"உக்ரேனுக்காக உயிரைக் கொடுக்க விரும்பியவர்களின் விருப்பம் நிறைவேற்றப்படுகிறது" என்று கருத்திட்டிருந்தார்கள்.

இவர்களை வைத்து பேரம் பேசப்படும் என நினைக்கிறேன். மொறொக்கோ நாட்டவரின் நிலைதான் பரிதாபத்திற்குரியது. 

War tourism / War adventure என்று போனால் விளைவுகள் இப்படித்தான்  இருக்கும்.

10 minutes ago, விசுகு said:

தாம் வாழ்ந்த  மண்ணை விரும்பும் இவர்கள்  போற்றுதல்களுக்குரியவர்கள்

அரசுகள் உடனடியாக  தலையிட்டு இவ்வாறான மண்  பற்றாளர்களை  காக்க நடவடிக்கை  எடுக்கணும்

எடுப்பார்களா?? அல்லது அரசியல்  செய்வார்களா???

தாம் வாழ்ந்த /வாழும் மண்ணுக்காகப் போராடிய விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள். தனது நாட்டைக் காக்கப் போராடிய தலிபான்கள் பயங்கரவாதிகள். குர்திஸ்தான் போராளிகள் பயங்கரவாதிகள்...........

ஆனால் தமது நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்காக சண்டையிடப் போனவர்கள் போற்றுதலுக்குரியவர்கள். 

முரண்நகை என்பது இதுதானோ ☹️

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kapithan said:

"உக்ரேனுக்காக உயிரைக் கொடுக்க விரும்பியவர்களின் விருப்பம் நிறைவேற்றப்படுகிறது" என்று கருத்திட்டிருந்தார்கள்.

இவர்களை வைத்து பேரம் பேசப்படும் என நினைக்கிறேன். மொறொக்கோ நாட்டவரின் நிலைதான் பரிதாபத்திற்குரியது. 

War tourism / War adventure என்று போனால் விளைவுகள் இப்படித்தான்  இருக்கும்.

தாம் வாழ்ந்த /வாழும் மண்ணுக்காகப் போராடிய விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள். தனது நாட்டைக் காக்கப் போராடிய தலிபான்கள் பயங்கரவாதிகள். குர்திஸ்தான் போராளிகள் பயங்கரவாதிகள்...........

ஆனால் தமது நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்காக சண்டையிடப் போனவர்கள் போற்றுதலுக்குரியவர்கள். 

முரண்நகை என்பது இதுதானோ ☹️

அது எனது  நிலைப்பாடு மட்டுமே
மண்ணுக்காக  போராடுபவர்கள்  சார்ந்து  எனக்கு  ஒரே  கருத்தே...
ஆனால்  உங்களுக்கு  மாற்றுக்கருத்து  இருக்கலாம்
அதை  மதிக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இருவரும் ரஷ்ய படையெடுப்பின் போது ஏற்கனவே உக்ரைனில் வசித்து வந்தனர்.

பகிடி என்ன வெண்டால் - நாம் பிறந்த மண்ணில் சண்ட எண்டபோதும் ஓடி வந்து விட்டோம்.

பாவம் பார்த்து வாழவிட்ட மண்ணில் நாளைக்கு சண்டை எண்டாலும் - ஓடி விடுவோம் அல்லது எதிர்தரப்புக்கு ஆதரவாக வெட்டி நியாயம் பிளப்போம்🤣.

கேட்டால் - முள்ளிவாய்க்காலுக்கு மேற்கின் மீது பழி தீர்கிறார்களாம்🤣.

மேற்கை விடுங்கள், மிக முக்கிய வரலாற்று போர் நடக்கும் போது நாட்டை விட்டு ஓடிவந்த, போராட்டத்தை கைவிட்ட நம்மை யார், எப்படி பழி தீர்ப்பது 🤣.

நிச்சயமாக இந்தமனிதர்கள் போற்றுதலுக்குரியோர்ரெ.  

நாம் அவர்களை பற்றி பேச கூட தகுதியற்றவர்கள். 

நாம் செய்ய கூடியது எல்லாம் “போய் புள்ள குட்டிய படிக்க வைப்பதுதான்” அதுவும் மேற்கின் அனுசரணியில் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

ஆனால் நீங்க இங்க எதிர்பார்ப்பது  நடக்காது என்கிறேன்  நான்??🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
33 minutes ago, goshan_che said:

மேற்கை விடுங்கள், மிக முக்கிய வரலாற்று போர் நடக்கும் போது நாட்டை விட்டு ஓடிவந்த, போராட்டத்தை கைவிட்ட நம்மை யார், எப்படி பழி தீர்ப்பது 🤣.

ஓடி வந்தவர்களால் தான் ஈழ விடுதலைப்போராட்டம் தடைப்பட்டதா?

ஓடி வந்தவர்களால் ஈழ போராட்டத்திற்கு எவ்வித பிரயோசனமும் இல்லாமல் போனதா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அது எனது  நிலைப்பாடு மட்டுமே
மண்ணுக்காக  போராடுபவர்கள்  சார்ந்து  எனக்கு  ஒரே  கருத்தே...
ஆனால்  உங்களுக்கு  மாற்றுக்கருத்து  இருக்கலாம்
அதை  மதிக்கின்றேன்

உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். 

54 minutes ago, விசுகு said:

ஆனால் நீங்க இங்க எதிர்பார்ப்பது  நடக்காது என்கிறேன்  நான்??🤣

அதைத்தான் நானும் கூறுகிறேன். 

குசா அமைதி காக்கவும் 😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ஆனால் நீங்க இங்க எதிர்பார்ப்பது  நடக்காது என்கிறேன்  நான்??🤣

🤣 இல்லை. யதார்த்தத்தை எழுதினேன்.

ஓடி வந்தோர் கூட்டமைப்பு எண்டு ஒண்டு இல்லைத்தானே? அதாத்கு என ஒரு பேச்சாளரும் இல்லைத்தானே? நானும் கூட இப்படி ஓடி வந்தவந்தானே?

ஆனால் எங்களில் எத்தனை பேர் 3 வருடம் வாழ்ந்த நாட்டுக்காக போராடி (சரியோ, பிழையோ) மரண தாண்டனை வரைக்கும் போவோம்? 

அதைத்தான் குறிப்பிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஓடி வந்தவர்களால் தான் ஈழ விடுதலைப்போராட்டம் தடைப்பட்டதா?

ஓடி வந்தவர்களால் ஈழ போராட்டத்திற்கு எவ்வித பிரயோசனமும் இல்லாமல் போனதா?

ஆம். என்னை பொறுத்தவரை - இந்த குற்ற உணர்வு என் வாழ்க்கையின் கடைசி நாள் வரை இருக்கும். இந்த நாட்டில், கொழும்பில் எந்த ஒன்உகூடலுக்கு போய் 30-60 வரையானோரை, தொகையாக பார்க்கும் போதெல்ல்லாம் - அவர்களின் சந்ததி பெருக்கத்தை பார்க்கும் போதெல்லாம் - எல்லாரும் நிண்டிருந்தால் அவர்கள் - கட்டாயம் பயிற்ச்சிக்கு கூப்பிடாமலே காரியம் சாதித்து இருக்க கூடும் என நினைப்பேன்.

அதுதான் உண்மையும் கூட. ஓடி வந்தவர்களை அவர்கள் ஒரு சக்தியாக வளர்த்தெடுத்தது அவர்களின் கெட்டித்தனம்.

ஆனால் நிச்சயம் போராட்டம் தோற்க மூல காரணிகளில் ஒன்று ஆட்பற்றாகுறை. ஓடி வந்து விட்டு நாம் உணர்வோடு இருந்தோம், பங்களித்தோம் என்பது இதை ஒரு போதும் மறைக்காது.

சுருங்க சொல்லின் - ஓடி வந்ததால் ஏற்பட்ட நன்மைகள் கணிசமானவை எனிலும், தோற்ப்பற்க்கான மிக முக்கிய காரணிகளில் ஒன்று என்றவகையில் போராட்டம் தோற்க ஓடி வந்தது ஒரு பெரும் காரணியாகிறது.

எம்மை நாமே எப்படி சமாதானம் சொல்லி தேற்றி கொள்ள விழைந்தாலும் - உண்மை என்பது இதுதான். 

1 hour ago, Kapithan said:

அமைதி காக்கவும்

ரசம் பூசிய கண்ணாடி

நிஜம் காட்டும் போது

முடியும்- அமைதி காக்க மட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ரசம் பூசிய கண்ணாடி

நிஜம் காட்டும் போது

முடியும்- அமைதி காக்க மட்டும். 

அது பார்ப்பவரைப் பொறுத்தது  😉

  • கருத்துக்கள உறவுகள்+
On 10/6/2022 at 10:34, குமாரசாமி said:

ஓடி வந்தவர்களால் தான் ஈழ விடுதலைப்போராட்டம் தடைப்பட்டதா?

தடைப்படவில்லை. ஆனால் எமது தோல்வியின் காரணங்களுக்கு ஒன்றானது. 

1995 திசம்பரில் யாழின் படலையில் ரத்வத்தையின் 40,000 சிங்களப் படைவெறியர் வந்து நின்று எக்களாமிட்டுக்கொண்டிருந்த போது அவர்களை விரட்டியடிக்க யாழுக்குள் வாழ்ந்த 8 இலட்சம் பேரில் 5,000 இளைஞர்களையே ஆயுதம் தூக்கி அடிபட வருமாறு தலைவர் மாமா அழைப்பிட்டார். ஆனால் இந்தப் பாணிகள் செய்தது என்னவோ?

தம்மை விட 20 மடங்கு சின்னஞ்சிறிய படை வந்து நின்ற போதும், அதைத் துரத்த வக்கில்லாமல் இதுதான் வாய்ப்பென்று யாழில் இருந்து பலர் வெளிநாடுகளுக்கு ஓட்டம் பிடித்தனர். புலியோடு போகிறேன் என்ற போர்வையில் வன்னி வந்தவர்களிலும் கொஞ்சப்பேர் அப்படியே ஓமந்தை வழியாக சிறிலங்காவிற்குள் ஓடி ஐரோப்பிய எல்லைகளை அடைந்தனர், அச்சமரையே காரணம் காட்டி!

ஏறத்தாழ 2,000 பேருக்கும் குறைவானவர்களே அந்த அழைப்பை ஏற்று புலியாகியிருந்தனர். அன்று இந்தப் படையினரை அவர்தம் நாயகம்போன்றே ஆக்கிவிட்டிருந்தால் புலி தோற்றேயிருக்காது. எமது விடுதலைப் போராட்டத்தின் கதியும் தலைகீழாகியிருக்கும். யாழ் போன்ற குடாநாட்டுப் பரப்பை முற்றுமுழுதாக எமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் எம்மை வென்றிருக்க இயலாது. ஏலவேண்டுமெனில் கடலால்தான் முயன்று வரவேண்டும். அப்போதைய சிங்களத்தின் படைவலுவிற்கு அது கடினமானது. (எமது கடற்படையும் வளர்ந்துவிட்டது, அக்கால கட்டத்தில்).

நாம் நன்றாக வாழ வேண்டும்; எமது புள்ளை குட்டிகள் செழிக்க வேண்டும், ஆனால் எமக்காக அடுத்தவர் சென்று சாக வேண்டுமென்ற எமது மக்களின் புத்தி ஒருகாலும் மாறப்போவதில்லை. இதுவே எமது தோல்வியின் முதற் காரணமென்று கூறுவேன். நாடென்று வாழாது நானென்று வாழ்ந்த தன்னல கோழைத் தமிழன் கடைசியில் முள்ளிவாய்க்காலில் கொத்தாக வீணாக மடிந்து போனான்/ இனப்படுகொலைக்கானான். 

அன்று எல்லோருமாக ஒரு கைபோட்டு மொத்தியிருந்தால் சிங்களவன் அன்றோடு ஓடியிருப்பான். சிலவேளை ரத்வத்தையும் அமரரூர்தியில் சென்றிருக்கக்கூடுமோ என்னமோ?

(அன்று யாழுக்குள் இருந்த மக்களைக் காக்கவும் சிங்களவரைத் துரத்தியடிக்கவும் மட்டக்களப்பில் இருந்து நடந்து வந்தனர், புலிகளின் தெந்தமிழீழ படையணியினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடைசியில் அவர்களை வலுவெதிர்ப்புச்(defensive) சமரிலேயே ஈடுபடவைத்தார், தலைவர் மாமா.)

இதுதான் தமிழீழன். இந்நிலையிலிருந்து திருந்தும் வரை எதுவும் மாறப்போவதில்லை. ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு, இல்லையேல் ஒருநாள் நல்லூர் கோவிலிலும் சித்தார்த்தன் சிரிப்பார். 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, goshan_che said:

ஆம். என்னை பொறுத்தவரை - இந்த குற்ற உணர்வு என் வாழ்க்கையின் கடைசி நாள் வரை இருக்கும். இந்த நாட்டில், கொழும்பில் எந்த ஒன்உகூடலுக்கு போய் 30-60 வரையானோரை, தொகையாக பார்க்கும் போதெல்ல்லாம் - அவர்களின் சந்ததி பெருக்கத்தை பார்க்கும் போதெல்லாம் - எல்லாரும் நிண்டிருந்தால் அவர்கள் - கட்டாயம் பயிற்ச்சிக்கு கூப்பிடாமலே காரியம் சாதித்து இருக்க கூடும் என நினைப்பேன்.

அதுதான் உண்மையும் கூட. ஓடி வந்தவர்களை அவர்கள் ஒரு சக்தியாக வளர்த்தெடுத்தது அவர்களின் கெட்டித்தனம்.

ஆனால் நிச்சயம் போராட்டம் தோற்க மூல காரணிகளில் ஒன்று ஆட்பற்றாகுறை. ஓடி வந்து விட்டு நாம் உணர்வோடு இருந்தோம், பங்களித்தோம் என்பது இதை ஒரு போதும் மறைக்காது.

சுருங்க சொல்லின் - ஓடி வந்ததால் ஏற்பட்ட நன்மைகள் கணிசமானவை எனிலும், தோற்ப்பற்க்கான மிக முக்கிய காரணிகளில் ஒன்று என்றவகையில் போராட்டம் தோற்க ஓடி வந்தது ஒரு பெரும் காரணியாகிறது.

எம்மை நாமே எப்படி சமாதானம் சொல்லி தேற்றி கொள்ள விழைந்தாலும் - உண்மை என்பது இதுதான். 

2 hours ago, நன்னிச் சோழன் said:

தடைப்படவில்லை. ஆனால் எமது தோல்வியின் காரணங்களுக்கு ஒன்றானது. 

ஈழத்தமிழனாக உங்களுக்குள்ள தலை குனிவு எனக்கும் உண்டு.

இருந்தாலும் உங்கள் இருவரிடமும் ஒரு கேள்வி.
இந்திரா காந்தி தொடக்கம் இன்றைய இந்திய அரசியல்வாதிகள் வரைக்கும்  ஈழத்தமிழர்களுக்கு ஒரு  தனி நாடு கிடைப்பதை விரும்பவில்லை/ விரும்பமாட்டார்கள் என்றொரு செய்தியும் உண்டு. இந்திய பிராந்திய  நலன்கருதி எக்காரணம் கொண்டு தனிநாட்டை அங்கீகரிக்காது என்ற செய்தியும் உண்டு.சிங்களம் நாட்டை பிரித்து கொடுக்க சம்மதித்தாலும் இந்தியா முட்டுக்கட்டை போட்டிருக்கும் என்றும் வாசித்திருக்கின்றேன்.

இது பற்றி உங்கள் இருவரின் கருத்து என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் வெப் ல் (?) இது தொடர்பான விரிவான   கட்டுரைகள் உண்டு. 

மிகவும் பயனுள்ளவை. 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

உண்மைதான் அண்ணை - ஆனால் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் ஓடி வந்தவர்களில் 99% பேர் இந்த காரணத்துக்காக தனிநாடு சாத்தியமில்லை என்றா ஒடி வந்தார்கள்?

ஓம் எண்டு சொல்லி ஜோக் அடிக்க மாட்டீங்கள் என நினைக்கிறேன்.

பலர் தாம் தப்பினால் போதும் என்ற ஒரே காரணத்தில்தான் ஓடி வந்தார்கள்.

தனி நாடு சாத்தியமில்லை என மிக தெளிவாக உணர்ந்து, நெருங்கிய வட்டத்தில் சொல்லி - அதன் பின்பும் சாகும் வரை இந்த மண்ணோடுதான் என - வெளிநாடு வர அத்தனை வாய்ப்புகள் இருந்தும் வராமல் இருந்த, போர்சூழலில் சேவை செய்த சிலரை எனக்கு தெரியும்.

17 minutes ago, Kapithan said:

அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் வெப் ல் (?) இது தொடர்பான விரிவான   கட்டுரைகள் உண்டு. 

மிகவும் பயனுள்ளவை. 

நடேசன் சத்தியேந்திரா எழுதியவை என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நடேசன் சத்தியேந்திரா எழுதியவை என நினைக்கிறேன்.

அதில் மிகத் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது... "இந்தியா எக்காரணம் கொண்டும் தமிழரின் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்காது"" என்று இந்திரா காந்தி அமிர்தலிங்கம் தலைமையிலான குழுவினரிடம் கூறியதாக. 

அப்படியானால் எந்த அடிப்படையில் தமிழ் அரசியல்வாதிகள் தனி நாட்டுக் கோரிக்கையை முன் வைத்தார்கள் ? ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவளித்தார்கள் ? 

😡

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்+
On 10/6/2022 at 18:07, குமாரசாமி said:

ஈழத்தமிழனாக உங்களுக்குள்ள தலை குனிவு எனக்கும் உண்டு.

மன்னிக்கவும் ஐயனே, நான் ஓடவும் இல்லை; எனக்கு எந்தத் தலைகுனிவும் இல்லை. 

On 10/6/2022 at 18:07, குமாரசாமி said:

இருந்தாலும் உங்கள் இருவரிடமும் ஒரு கேள்வி.

தொடக்கம் இன்றைய இந்திய அரசியல்வாதிகள் வரைக்கும்  ஈழத்தமிழர்களுக்கு ஒரு  தனி நாடு கிடைப்பதை விரும்பவில்லை/ விரும்பமாட்டார்கள் என்றொரு செய்தியும் உண்டு. இந்திய பிராந்திய  நலன்கருதி எக்காரணம் கொண்டு தனிநாட்டை அங்கீகரிக்காது என்ற செய்தியும் உண்டு.சிங்களம் நாட்டை பிரித்து கொடுக்க சம்மதித்தாலும் இந்தியா முட்டுக்கட்டை போட்டிருக்கும் என்றும் வாசித்திருக்கின்றேன்.

இது பற்றி உங்கள் இருவரின் கருத்து என்ன?

ஓமோம், என்னைப் பொறுத்தவரை இது மெய்யாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் இந்திரா காந்தி தெளிவாக தான் தனிநாட்டிற்கு ஆதரவு இல்லை எனச் சொன்னதாக ஏதோ ஒரு நாளேட்டில் வாசித்த ஞாபகம் எனக்குள்ளது. அவரின் மகன் அதை நேரடியாகவே செயற்படுத்த எண்ணி சில்லகோலமாகிப் போனார்.

மேலும், இந்தியா எமக்கு ஒரு நாட்டைப் பெற்றுக்கொடுக்க விரும்பினால்/ நினைத்திருந்தால் அதுவால் 1987 இலேயே அதைச் செய்திருக்க இயலும். பூமாலை போட்ட இந்தியாவால் இதைச் செய்திருக்க இயலாதா என்ன? 

ஆனால் அது எமது சிக்கலை தன்னலத்திற்குப் பயன்படுத்த எண்ணியது; பண்ணியது. இந்தியாவின் இந்த தன்னலத்தை தனது நரித்தனத்தால் சிங்களம் தனக்குச் சார்பாக பயன்படுத்திக்கொண்டது. அதன் ஒரு பகுதியாக எம்மை அடக்க முயன்ற இந்தியா எம்மிடம் அடியும் வாங்கியது; நாமும் 640 மாவீரர்களையும் 10,000+ அப்பாவி பொதுமக்களையும் இந்தியாவின் அடக்குமுறையிலிருந்து விடுதலைபெற விலையாகக் கொடுத்தோம். அதன் விளைவாக அவர்களின் முதன்மை அமைச்சரின் உயிரும் பிடுங்கப்பட்டது. 

பின்னாளிலாவது இந்தியா திருந்தும் என நினைத்தால், அதன் பின்னரும் தனது எம்மினம் மீதான அழிவு வேலைகளைத் தொடர்ந்தது. தனது உளவுத்துறையின் ஓட்டை மூளையைப் பயன்படுத்த எண்ணி தனது உளவாளிகள் பலரின் உயிரை 90களின் நடுவில் இழந்தது.

ஆயினும், பின்னாளிலும் பற்பல உருவில் தனது எம்மினம் மீதான நாசவேலைகளைத் தொடர்ந்தது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வரை தொடர்ந்தது. அந்த அமைதி ஒப்பந்தம் வந்தபோதும் அதை நீர்க்க வைக்க எவ்வளவு இந்தியன் முயன்றான் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இந்தியா தனது கோட்ட (பிராந்திய) நலனாக எண்ணுவது நாம் தனிநாடாகிவிட்டால் இந்தியாவிற்கு எதிரான வேற்று நாடுகளோடு கூட்டணி வைத்து விடுவோமென்று. ஆனால் தலைவர் மாமா நாங்கள் எக்காலத்திலும் இந்தியாவிற்கு எதிரானான ஆக்களோடு கூட்டணி வைக்க மாட்டோம் என எவ்வளவோ உறுதியளித்தும் இந்தியன் எம்மை அழிக்கவே துடித்தான்; துடிக்கிறான். இனியும் துடிப்பான். 

மற்றொரு காரணம் இந்தியத் தரப்பால் கூறப்படுவது, இந்தியா தமிழ்நாடு தன்னிடம் இருந்து பிரிந்துவிடும் என்பது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள மக்களில் 90வீதத்திற்கும் அதிகமானோர் இந்தியர் என்ற மனநிலையில்தான் உள்ளனர். தனிநாடு என்றெல்லாம் அவர்கள் எண்ணியதில்லை. இதை நான் எனது இந்திய நண்பர் வட்டத்தில் உள்ள தீவிர தமிழ்த்தேசியர்களிடம்  மெதுவாக வாய்புடுங்கிப் பார்த்துள்ளேன்.  

மேலும், சொந்த இனத்தைச் சேர்ந்த மக்களாகிய நாங்கள் கொத்துக் கொத்தாக செத்த போதே அவர்களது பொல்லுகளோடு மட்டும் சுற்றும் தமிழ்நாடு காவல்துறையை எதிர்த்து முரட்டான போராட்டங்கள் ஏதும் செய்யாத அந்த மக்கள் இந்தியாவிற்கு எதிராக ஆயுதம் தூக்குவர் என்பது சற்று நகைப்பான விடையம், என்னைப் பொறுத்தவரை.

அவ்வளவு மக்கள் - தனது நாட்டில் வாழும் அதே இனத்தைச் சேர்ந்த மக்கள் (தமிழர்கள்) - சாகும் போது அவர்களை இனப்படுகொலை செய்துகொண்டிருந்த நாட்டிற்கு இன்னும் செய்யென அனைத்து உதவிகளையும் முன்னின்று செய்த நாடு எமக்கு உதவும் அ எம்மைக் காப்பாற்றும் என்று நான் எண்ணவில்லை.

இனியும் எமக்கொரு விடிவையோ அ தனிநாட்டுத் தீர்வையோ அது பெற்றுத்தருமென யாரேனும் நம்பினால் - எங்கட நாட்டிலை ஒரு பழமொழி சொல்லுவாங்கள், இவங்களைப் பார்த்து. இவ்விடத்தில் அதை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

இவை எனது இந்தியா நோக்கியதான கண்ணோட்டங்கள்.

மற்றது, சிங்களவன் எமக்கொரு நாட்டைத்தர தானாக முன்வர மாட்டான். அதைப் புலிகளே தெளிவாகச் சொல்லிவிட்டனர். அது வெறும் இலவு காத்த கிளியின் கதையே. நாமே அரசியல் அரசதந்திரம் மூலம் எமக்கானவற்றைப் பெற்றாலொழிய வேறு வழியில்லை. 

அறிவுதான் கடைசி ஆயுதம்!

Edited by நன்னிச் சோழன்
எழுத்துப்பிழை நீக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

அதில் மிகத் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது... "இந்தியா எக்காரணம் கொண்டும் தமிழரின் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்காது"" என்று இந்திரா காந்தி அமிர்தலிங்கம் தலைமையிலான குழுவினரிடம் கூறியதாக. 

அப்படியானால் எந்த அடிப்படையில் தமிழ் அரசியல்வாதிகள் தனி நாட்டுக் கோரிக்கையை முன் வைத்தார்கள் ? ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவளித்தார்கள் ? 

😡

இங்கே அர்ஜூன் அண்ணா (புளட் சார்பாக டெல்லியில் பேச்சுவ்ஃஅர்த்தையில் பங்கெடுத்தவர்) என்பவர் முந்தி எழுதி இருந்தார்.

அவர்கள் (இந்தியா) எதையும் நேரடியாக சொல்லவே மாட்டார்கள். மிகவும் சுத்தி வளைத்து “தனி நாட்டை நாம் ஒரு போதும் ஆதரிக்க போவதில்லை” என்பதை தமக்கு கூறியதாகவும். கூட்டணி உட்பட பலருக்கும் இது சொல்லப்பட்டு அவர்கள் அதை கிரகித்து கொண்டதாயும்.

இலங்கை போரளிகள், (கட்சி தலைவர்களுக்கு சொல்லவா வேண்டும்) கூட கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருந்துள்ளது இந்தியாவின் அணுகுமுறை - ஆனால்  1987 ஒப்பந்தம் எழுதிய போது புலிகள் உட்பட எல்லாருக்கும் இந்தியாவின் இந்த நிலைப்பாடு ஐயம் திரிபுரா விளங்கி விட்டது என்றே கொள்ளலாம் என நினைக்கிறேன்.

77 தேர்தலில் கூட்டணி எடுத்த நிலைக்கும்,  78-87 இடையில் அமிர் உட்பட்ட தலைவர்களின் சுருதி மாற்றத்துக்கும் தனியே ஜப்பான் ஜீப்பும், எதிர்கட்சி தலைவர் பதவியும், கொழும்பு பிளட்டும் மட்டும் காரணி அல்ல, மிக பெரிய காரணி இந்தியாவின் அழுத்தம் என நான் நம்புகிறேன்.

ஆனால் இதில் மிக பெரிய சோகம் என்னவெனில் - 77 இல் மக்கள் முன் பெற்று கொண்ட ஆணையை ஏன் செயல்படுத்த முடியாது (தேர்தலின் பின்னான இந்திய அழுத்தம், நிலைப்பாட்டு விளக்கம்) என்பதை transparent ஆக மக்களிடம் எடுத்து சொல்லி, மன்னிப்பு கேட்கும் திராணி இந்த தலைவர்களுக்கு இல்லாமல் இருந்தது.

ஆகவே  வட்டு கோட்டையை அப்படியே அந்தரத்தில் விட்டு விட்டு ஒற்றை ஆட்சி, மாவட்ட சபை, மாகாண சபை என லைன் மாறினார்கள். 

இயக்கங்கள் கூட இந்த காரணத்தை மக்கள் முன் விளக்காமல், விலை போய்விட்டார்கள், எட்டபன்கள், ஜப்பான் ஜீப் என அவர்கள் முன்னர் கூறிய அதே கதைகளை கூறி அவர்களை அவர்கள் உசுப்பேத்திய பாணியிலே போட்டு தள்ளுவதில்தான் கவனம் செலுத்தி உள்ளார்கள் போலுள்ளது (எனது அவதானம்).

அமிர்தலிங்கத்தை அருகில் இருந்து பார்த்து, அப்படி, இப்படி, பெரிய ஆளுமை என்றெல்லாம் பேசுபவர்களிடம் நான் கேட்பது எல்லாம், இந்திராவின் சந்திப்பு, மற்றும் அறிவிறுத்தலுக்கு பின், ஊருக்கு வந்து நிலைமையை மக்களிடம் விளங்கபடுத்தி, 77 ஆணை நடைமுறை சாத்தியமற்றது என தெளிவுபடுத்த அவர் ஏன் தவறினார் என்பதுதான்.

தலைவர் என்பவர் எப்போதும் populist ஆன மக்கள் நிலைப்பாட்டின் பின்னால் ஓடுபவர் அல்ல, சில சகயங்களில் மக்களுக்கு நிலைமையை தெளிவுபடுத்தி அவர்கள் நிலைப்பாட்டை, தன் நிலைப்பாட்டுக்கு மாற்றுவதும் தலைமைதுவம்தான்.

 A leader takes people where they want to go. A great leader takes people where they don't want to go, but ought to be.
என்பார்கள்.

ஒரு தலைவர் என்பவர் மக்கள் போகும் இடத்துக்கு அவர்களை இட்டுச் செல்பவர்.

ஒரு பெருந்தலைவர் என்பவர் மக்கள் போக விரும்பாத, ஆனால் போக வேண்டிய இடத்துக்கு அவர்களை இட்டுச்செல்பவர்.

பிகு

ஆனால் இதில் இந்த தலைவர்கள் மக்களிடம் உள்ளதை உள்ளபடி கூறி இருந்தாலும் அது வரலாற்றை அதன் போக்கை மாற்றி இருக்குமா என்பது சந்தேகமே.

எனெனெனில் 87 க்கு முன் சில இயக்கங்களும், 87க்கு பின் ஒரு இயக்கமும், இந்தியாவின் நிலைப்பாடு எப்படி இருந்தாலும், தம் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்ற உறுதியான முடிவுக்கு வந்திருந்தன.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நன்னிச் சோழன் said:

இந்தியா தனது கோட்ட (பிராந்திய) நலனாக எண்ணுவது நாம் தனிநாடாகிவிட்டால் இந்தியாவிற்கு எதிரான வேற்று நாடுகளோடு கூட்டணி வைத்து விடுவோமென்று.

நீங்கள் கூறியவை எல்லாவற்றுடனும் ஒத்து போனாலும் - இந்தியாவின் பயம் தமிழர் இந்தியாவுக்கு எதிராக போவோம் என்பதை விட, தமிழர் பிரிந்த பின் எஞ்சும் இலங்கை இந்தியாவிற்கு எதிரான ஒரு நிரந்தர தளம் ஆகிவிடும் என்பதுதான்.

அவர்கள் நலன் (அவர்கள் அப்படித்தானே பார்ப்பார்கள்) என்ற கோணத்தில் இருந்து பார்த்தால் - இது நியாயமான பயம்தான்.

இன்றைக்கு கூட இலங்கைக்கு உதவும் நாடுகளில் முதலிடம் இந்தியா எடுப்பதும் இதே பயத்தினால்தான்.

ஒரு கட்டத்தில் யாழ்கள நோக்கர்கள் பலர் இந்தியாவுக்கு இலங்கை பெப்பே காட்டி விட்டது, புலிகளின் அருமை இனித்தான் தெரியும் என்றெல்லாம் எழுதியதையும் தாண்டி, சீனாவே வரவேற்கும் அளவுக்கு இந்தியாவின் அணுகுமுறை (மேற்கின் அனுசரணையோடு) இலங்கையில் வென்று வருவதாக நான் உணர்கிறேன்.

78 ஜே ஆர் ஆட்சியின் பின் , இலங்கை எங்கே இருக்க வேண்டும் என இந்தியா விரும்பியதோ அந்த நிலைக்கு இலங்கையை கொண்டு வந்து விட்டது போல படுகிறது.

இப்போது இலங்கையில் அத்தனை தரப்பும் இந்தியாவில் தங்கி இருக்கும் நிலைதான்.

இது நீண்டகால நோக்கில் இந்தியாவின் இலங்கை அணுகுமுறைக்கு (அவர்கள் கோணத்தில்) கிடைத்த வெற்றி என கருத இடமுண்டு.

இனியும் இதே நிலைய தக்க வைக்க இந்தியா இலங்கயில் “உழைக்கும்” என எதிர்பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்+
24 minutes ago, goshan_che said:

ஓம், ஓரளவிற்கு உந்தப் பயம் நியாயம்தான். ஆனால் தன்னைத்தானே ஒரு வல்லரசு என்று சொல்லும் இந்தியாவால் அதற்கு ஏற்றாற்போல சிறிலங்காவில் தமக்குச் சார்பான அரசியல் தலைவர்களை அங்கு உருவாக்கி இந்தியா விளையாடலாம் அல்லவா, மற்ற நாடுகளைல் செய்வது போன்று. சுற்றியிருக்கும் நாடுகளில் அவ்வளவு நாச வேலைகளை செய்யும் இந்தியாவால் இதைச் செய்ய இயலாதா? பக்கதுணைக்கு எங்கட புலனாய்வுத்துறையும் உறுதுணையாக இருந்திருக்கும். இந்தியாவிற்கு எதிரான ஆட்களை களையெடுத்திருக்கலாம்.

ஆனால் தனது நாட்டை பாதுகாக்க இன்னொரு நாட்டின் மக்களை இலட்சக் கணக்கில் கொன்றொழிக்க துணைநின்ற இந்தியாவின் இந்தக் கேடுகெட்ட செயலை என்னவென்று சொல்வது. 

இந்தச் செயலால் ஈழத்தமிழன் கடைசி வரை இந்தியாவ பகையாகத்தான் பார்ப்பான். இனிவருங்காலங்களிலும் இதுதான் அவனது நிலைப்பாடாக இருக்குமென நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

உண்மைதான். ஆனால் அவர்களுக்கு அது வீண் சோலி என நினைக்கிறார்கள் என நான் நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்+
11 hours ago, goshan_che said:

உண்மைதான். ஆனால் அவர்களுக்கு அது வீண் சோலி என நினைக்கிறார்கள் என நான் நினைக்கிறேன்.

உதை ஆமோதிக்கிறேன்.

சொந்த இன மக்களைக் காப்பது அ காப்பாற்றுவதே அரசின் கடமை.

ஆனால், தன்னாட்டில் வாழும் அதே இனத்தைச்சேர்ந்த மக்கள்கூட்டம் அரசில்லாமல் அருகிலுள்ள நாட்டில் வதையுறும்போது அதைத் தடுக்காமல் அவர்களை மேலும் அழித்த இந்தியாவின் செயல் எக்காலத்திலும் மறக்கப்பட அ மன்னிக்கப்பட முடியாச் செயலாகும். இது தன்னாட்டில் வாழும் தமிழர்கள் மீதுதானும் இந்திய அரசிற்குப் பற்றில்லை என்பதையே காட்டுகிறது.

இச்செயலானது சிலவேளை கறுவியத்திற்குக் கூட இட்டுச்செல்லலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
Quote

நீங்கள் கூறியவை எல்லாவற்றுடனும் ஒத்து போனாலும் - இந்தியாவின் பயம் தமிழர் இந்தியாவுக்கு எதிராக போவோம் என்பதை விட, தமிழர் பிரிந்த பின் எஞ்சும் இலங்கை இந்தியாவிற்கு எதிரான ஒரு நிரந்தர தளம் ஆகிவிடும் என்பதுதான்.

அவர்கள் நலன் (அவர்கள் அப்படித்தானே பார்ப்பார்கள்) என்ற கோணத்தில் இருந்து பார்த்தால் - இது நியாயமான பயம்தான்.

அதி சக்தி வாய்ந்த சீனா, நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகளை விட சிறிலங்காவில் பயம் என்பது ஏற்க கூடிய மாதிரியாக இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nunavilan said:

அதி சக்தி வாய்ந்த சீனா, நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகளை விட சிறிலங்காவில் பயம் என்பது ஏற்க கூடிய மாதிரியாக இல்லை.

சீனாவும், பாகிஸ்தானும் பரம வைரிகள். அங்கே ஏலவே இருப்பது இந்தியாவுக்கு எதிரான நிரந்தர தளம்தான். அங்கே இலங்கை போல புதிதாக ஒரு பகைத்தளத்தை உருவாக்கும் ஆபத்து இல்லை.

நேபாளத்தில் இலங்கை போல் நாடு பிரியும் நிலை இருக்க இல்லை, கம்யூனிஸ்டுகள், பழமைவாதிகள் இரு தரப்பும் நாட்டின் ஒட்டு மொத்த ஆளுகைக்குத்தான் போராடினார்கள். இருப்பினும் அங்கே கூட இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்து பார்த்தால் “ அங்காலேம் பாடி, இங்காலேம் பாடி” என்பதாகவே இருந்தது.

அதேபோல் 1987 இல்  இலங்கையோடு செய்த ஒப்பந்தம் போன்றதொரு ஒப்பந்தத்தை 1950 லேயே நேப்பாளோடு இந்தியா செய்து விட்டிருந்தது.

ஆகவே நேப்பாள், இலங்கையில் இந்தியா நடக்கும் முறைக்கு என்னால் அதிக வேறுபாட்டை காண முடியவில்லை.

ஆனாலும் - பூட்டான், சீனா, ஆப்கானிஸ்தான், மாலைதீவு, சீனா, பங்காலதேஸ், பாகிஸ்தான் என ஒவ்வொரு அண்டை நாட்டோடும் இந்திய தனி தனியான அயலுறவு கொள்கைகளை கொண்டிருப்பதும் உண்மையே ஆகவே, நேப்பாளோடு செய்த, பங்களாதேசில் எடுத்த அணுகுமுறையை இலங்கையிலும் கட்டாயம் அச்சொட்ட எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் நாம் இருக்க முடியாது.

இந்தியாவின் அயலுறவு கொள்கை country specific but with certain common themes என நான் நினைக்கிறேன்.

அந்த வகையில் அமிருக்கு 83-84 இல் பார்த்தசாரதி, இந்திரா கூறியதே அவர்களின் இலங்கைக்கான கொள்கை.

என்பது என் கருத்து. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.