Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கீரிமலையில்... அழிந்து கிடக்கும், சித்தர்களின் சமாதிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of tree and outdoors  
 
May be an image of outdoors and temple
 
May be an image of tree and outdoors
 
No photo description available.
 
May be an image of 2 people, tree and outdoors
 
May be an image of monument, tree and sky
 
May be an image of monument and outdoors
 
  
May be an image of monument and outdoors  May be an image of 1 person and outdoors
 
  May be an image of tree and outdoors
 
May be an image of 2 people, outdoors and temple
 
May be an image of monument, tree and outdoors
 
May be an image of ocean and nature
 
May be an image of outdoors
 
May be an image of 2 people, monument and outdoors
 
May be an image of outdoors
 
May be an image of monument, tree and outdoors
 
May be an image of tree and outdoors
 
May be an image of monument and outdoors
 
May be an image of monument and outdoors
 
May be an image of monument and outdoors
 
May be an image of tree and outdoors
 
கீரிமலையில்... அழிந்து கிடக்கும், சித்தர்களின் சமாதிகள்!
மற்றும் புராதன, வியக்க வைக்கும் சிற்பக்கலைகளுடன்... அமைந்துள்ள சிறாப்பர் மடம் .
 
கீரிமலையில் இதுவரை கேள்விப்பட்டவாறு கிட்டத்தட்ட 09 சித்தர்களின் சமாதிகள் இருப்பதாகவும்
இவற்றில் ஓரிரு சமாதிகளைத் தவிர, ஏனையவை கவனிப்பாரற்ற நிலையில் இருப்பதாகவும் தெரியவருகிறது!
நான் ஒரேயொரு சமாதியை மாத்திரம் பார்த்து பூசித்து வணங்கியிருக்கிறேன்!
அது சடையம்மா சமாதியாயிருக்கலாம்! அல்லது சங்கரி சுப்பையர் சமாதியாக இருக்கலாம்!
 
1980 – 1985 காலப்பகுதியில் கிருஷ்ணன் கோவிலுக்கருகிலிருந்த... கடற்கரையோடு சேர்ந்திருந்த சமாதி.
அருகில் ஒரு கிணறுடன் சிவலிங்கம் மாத்திரம் இருந்தது.
சடையம்மா மடம் என்று சொல்லியிருந்த கட்டடத்திற்கு அருகில் கிழக்காக இருந்தது.
இரு வாரங்களுக்கு முன் சின்மயாமிஷன்சுவாமிகளைச் சந்திக்கப் போயிருந்த சமயத்தில்..
பல கதைகளைக் கேட்டறிந்த பின்னர், இவற்றின்மீது ஒரு தனியான ஈடுபாடு ஏற்பட்டது.
 
கீரிமலையில் இருக்கின்ற சிவன்கோவில் தவிர்ந்த.. ஏனைய ஆலயங்களைப் பற்றியும் அறிய ஆர்வமிருந்தது.
காரணம் - சந்தியிலுள்ள ஸ்ரீ காசிவிஸ்வநாதர் சுவாமி கோவிலின் புனருத்தாரணம்.
இக்கோவிலை உடைத்துக் கட்டுவோர் பழைய கரப்பக்கிரகத்திலுள்ள சுவாமியின் சிலைகளை
அப்படியே இருக்கத்தக்கதாக எந்தவிதமான பாலஸ்தாபனமும் செய்யாமல் தம்பாட்டில் அமைத்து வருகிறார்கள்!
 
சமாதிகள் மற்றும் மடங்கள் - கோவில்கள் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள்
தயவுசெய்து அவற்றை தெரியப்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
மயிலங்கூடல் பண்டிதர் சி. அப்புத்துரை அவர்கள் எழுதிய... நகுலேஸ்வர ஆதீன வெளியீடான
நகுலேஸ்வரம் நூலில் 44, 45ஆம் பக்கங்களில் “சமாதிக் கோவில்கள்” என்ற தலையங்கத்தின் கீழ்
கீரிமலையில் 9 சமாதிகளின் குறிப்புக்கள் உள்ளன.
 
1. சடையம்மா சமாதி
2. சங்கரிசுப்பையர் சமாதி
3. குழந்தைவேல் சுவாமி சமாதி
4. குமாரசாமிக்குருக்கள் சமாதி
5. கேணிக்கரைப் பிள்ளையார் கோவிலுக்கு தென்மேற்கிலுள்ள சமாதி
6. சேந்தாங்குளம் வீதியில் சந்தியிலிருந்து 100 மீற்றர் தொலைவில் தெருவின் வடக்கிலுள்ள சமாதி
7. அந்தியேட்டி மடத்தின் கிழக்கில் வீர சைவர்களின் மயானத்திலுள்ள 3 சமாதிகள்.
 
மேலும் இந்நூலில் 82ஆம் பக்கத்தில் இணைப்பு 1 என்ற குறிப்பில் 2003.08.11 இல்
தெல்லிப்பழை ஸ்ரீ சரவணமுத்து சோமாஸ்கந்தர் நினைவாக வெளியாய இந்த நூலின்
முதலாம் பதிப்பில் சமாதிக் கோயில்கள் என்னுங் கட்டுரையின் இறுதியில் குறிப்பு என்று
காட்டப்பட்ட கருத்துச் சார்பாகச் சில செய்திகள் கிடைத்துள்ளன.
 
1.குழந்தைவேற்சுவாமி சமாதி கீரிமலை மாரியம்மன் கோயிலுக்கு முன்புறம்
சிறிதளவு தென்கிழக்காக உள்ளதென்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு அண்மையிலுள்ளவை ஒன்று குழந்தைவேற்சுவாமியின் குரு பரமகுரு சுவாமியினுடையது என்பர்.
மற்றையது மகாகவி பாரதியாரின் யாழ்ப்பாணத்துக் குரு அருளம்பலவனாருடையதென்பர்.
 
2. அந்தியேட்டி மடத்தின் கிழக்கே வீரசைவர்களின் மயானம் எனப்படும்
தென்னந் தோட்டப் பாங்கான பிரதேசத்தில் உள்ளவை.
அ. அம்பனை நீலகண்டருடையது.
ஆ. அம்பனை நீலகண்டர் மகன் இராசலிங்கத்தினுடையது.
இ. கீரிமலை சிவஸ்ரீ ச. தற்பரானந்தக்குருக்கள் நினைவானது.
ஈ. கீரிமலை நல்லையர் நினைவானது.
 
3. சேந்தாங்குளம் நோக்கிய வீதியில் சந்தியிலிருந்து சுமார் நூறு மீற்றர் மேற்கே
தெருவின் வடக்கிலுள்ளது. இது கோப்பாய் கோமான் வன்னியசிங்கத்தின்
உறவினர் சுப்பிரமணிய சுவாமியினுடையது என்பர்.
 
இதே போல மடங்கள் பற்றியும் சுவாரஸ்யமான கதைகள் இருக்கின்றன.
 
1. சிறாப்பர் மடம்.
2. வைத்திலிங்கம் மடம்
3. கிருஷ்ணபிள்ளை மடம்
4. செகராசசிங்கம் மடம்
5. பெயர் தெரியாத கேணிக்குத் தெற்காக ஒரு மடம்
6. ரேணுகாச்சாரிய ஆச்சிரமம்
7. சேந்தாங்குளம் வீதியில் அடங்காத்தமிழன் சுந்தரலிங்கம் வீட்டுக்கு வடக்காக ஒரு மடம்
 
நன்றி: 'தங்க. முகுந்தன்'
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவல்கள், தந்ததற்கு நன்றி சிறியர்.......சமாதிகளைப் பார்க்க கவலையாக இருக்கின்றது......!  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, suvy said:

நல்ல தகவல்கள், தந்ததற்கு நன்றி சிறியர்.......சமாதிகளைப் பார்க்க கவலையாக இருக்கின்றது......!  

May be an image of monument and outdoors

சுவியர்,
சிலதுகள்... தங்கடை காதலையும், கல்வெட்டு மாதிரி... எழுதி இருக்குதுகள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

May be an image of monument and outdoors

சுவியர்,
சிலதுகள்... தங்கடை காதலையும், கல்வெட்டு மாதிரி... எழுதி இருக்குதுகள்.

அவர்கள் ஆர்வக்கோளாறில் எழுதுகினம்.......சிதைந்து கொண்டிருக்கும் சிற்பத்தில் காதலை எழுதுவது எவ்வளவு அறிவீனம் தெரியுமா.......சிகிரியா சிற்பத்தில் எழுதினாலாவது ஏதோ ஒரு மறுமொழி உடனே கிடைக்கும்.......!   😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

அவர்கள் ஆர்வக்கோளாறில் எழுதுகினம்.......சிதைந்து கொண்டிருக்கும் சிற்பத்தில் காதலை எழுதுவது எவ்வளவு அறிவீனம் தெரியுமா.......சிகிரியா சிற்பத்தில் எழுதினாலாவது ஏதோ ஒரு மறுமொழி உடனே கிடைக்கும்.......!   😂

சமாதி என்பது.... ஒரு வகையில்.. மயானம் என்பது,
அந்தவிலிகளுக்கு தெரிய நியாயம் இல்லை.
அங்கு போய்... காதலை, மனுசன் தெரிவிப்பானா?
முட்டாள் பசங்க. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:
கீரிமலையில்... அழிந்து கிடக்கும், சித்தர்களின் சமாதிகள்!
மற்றும் புராதன, வியக்க வைக்கும் சிற்பக்கலைகளுடன்... அமைந்துள்ள சிறாப்பர் மடம் .

இணைப்புக்கு நன்றி. பலரும் அறிய வேண்டிய பயனுள்ள பதிவு. குறிப்பாக இளையவர்கள் அறியவேண்டியது. இவையும் தமிழினத்தினது படிமங்கள். பாதுகாக்கப்பட்டுப் பாராமரிக்கப்பட வேண்டியவை. 
யாழ்.பல்கலைக் கழகம் ஒரு சில புதைபொருளாய்வு போன்றவற்றை முன்னெடுத்தபோலல்லாது, இப்படிப் புதையாது இருப்பவற்றை பாதுகாத்து அவற்றின் வரலாற்று மூலங்களை ஆவணப்படுத்தி மக்களது பார்வைக்குக் கொண்டுவருவதோடு, உல்லாசப் பயணிகளும் பார்க்கும் வகையில் வடமாகாணசபை ஆவண செய்யவேண்டும். திருவண்ணாமலைச் சித்தர்கள் பற்றியே அதிகளவில் உரையாடக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், எமது ஈழவளநாட்டிலும் இவளவு சித்தர்கள் இருந்திருப்பதே சிறப்பு. சைவமும் தமிழும் தளைத்தோங்கிய ஈழநாடு இன்று திரும்பும் இடமெல்லாம் புத்தனின் சிலைகள். வள்ளமேற்றித் தண்டனையாய் கடலில் இறக்கிவிட வந்துகரையொதுங்கி இனமாக உருவாகி இன்று பூர்வீக இனத்தையே அழித்துவருகிறது. எமது முன்னோர் ஒரு வரலாற்றுப் பின்னணியோடுதான் அந்தியேட்டிக் கிரியைக்கான இடமாக அமைத்திருக்கிறார்கள். 
மத மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத் தலமான இதனைக் கீரிமலை நகரசபையும், வடமகாணசபையும் ஒன்றிணைந்த  வேலைத்திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட வரலாற்று எச்சங்களாகப் பிரகடணப்படுத்திச் செம்மையாக்குவதோடு, வட மாகாண உல்லாசப்பயண வழித்தடத்தில் முழுமையான தகவற்கொட்டையும் பதிவுசெய்ய வேண்டும். 

இவற்றைச் சரியாகக் கையாண்டால் உல்லாசப் பணத்துறையோடு நேரடியாகவும், இணைப்பாகவும் பல்வேறு வேலைவாய்ப்புகளும் உருவாகக்கூடிய வாய்ப்புகளும் உள்ளதோடு, அப்பகுதிவாழ் உறவுகளுக்குக் கணிசமான பொருண்மிய வளத்தையும் வழங்க ஏதுவாக அமையும்.
நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு குருந்தூர் மலைதான் முக்கியம். இவை  எல்லாமே செல்லாக் காசு.

☹️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

எங்களுக்கு குருந்தூர் மலைதான் முக்கியம். இவை  எல்லாமே செல்லாக் காசு.

☹️

வெய்ட் பண்ணுங்க சார், அவன் வந்து இந்த சமாதிகள் எல்லாம் பவுத்த துறவிகளின் சமாதிகள் என்று சொல்லி வல்வளைப்பு செய்யுமட்டும் நாங்கள் கவனிக்க மாட்டோம்!

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவையும் சிங்களம் புத்தம் என்று சொல்லாமல் விட்டது, தலை  தப்பினது தம்பிரான் புண்ணியம். 

சடையம்மா அமைத்த மடம்  கீரிமலையில் உள்ளது.

கதிர்காமத்திலும் சடையம்மா  மடம்  அமைத்துள்ளார். கதிர்காமத்திலேயே  சித்தி வந்ததாக சொல்லப்படுகிறது.  சிங்களம் கதிர்காமத்தில் இருந்த  சடையம்மா  மடத்தை இடித்து அல்லது எடுத்து வேறு ஒன்றாகி வைத்து இருக்கிறது என்று நினைக்கிறன். 

திருச்செந்தூர் என்று நினைக்கிறேன் சடையம்மா மடம்  அமைத்துள்ளார். மற்றது நகுலகிரி என்று சொல்லப்படும் இடத்தில் சடையாம மேடம் அமைத்ததாக  , அது இலங்கைத் தீவிலா?

நல்லூரில், தேரடியில்,  63 நாயன்மார் குருபூசை மடம் என்பது, சடையம்மாவால் நிர்மாணிக்கப்பட்டு, சடையம்மா  மடம் என்றே வழங்கியது.  (நல்ல காலம் இது எனக்கு நினைவு வந்தது மற்ற திரியில் பதிந்து விடுகிறேன்). இந்த மடம், பொதுவாக சாமி, சித்து  போக்கு உள்ளவர்களே தங்கி இருந்ததாக, பவித்ததாக என்ற கதையும் இருக்கிறது. சாதாரண பொதுமக்களால் இதற்குள் தங்கி நின்று பிடிக்க முடியாது என்ற கதையும் இருந்தாக இப்போதும் அறியப்படுகிறது. 

சடையம்மா எனது அம்மாவின் வழி உறவு. அனால், அதன் அடையாளம், சுவடு தெரியாமல் போய்விட்டது.

எவ்வளவு தூரத்தில் உறவு என்று தெரியாது.

அம்மம்மா மற்றும் அம்மாவின் அப்பாவிடம் சடையம்மா அடிக்கடி வந்து  சென்றதாகவும்  அவரகள் சொன்னதாகவும் , எனது அம்மாவின் 5- 10 வயதில் சில தடவை வந்து சென்றதாகவும்   எனது அம்மா  சொல்லி இருக்கிறார். எனது அம்மா வழிக்கு, மிகவும் கிட்ட உறவு என்றே எனது அம்மா சொன்னது, அப்பாவின் வழி க்கும் இருக்கலாம். 

நல்லூருக்கு  கொடி தேரில்  கொண்டுவருபவர்களுக்கு, நெருங்கிய உறவாகவும் சடையம்மா இருப்பார் என்றே  நினைக்கிறன். 

மற்றது, நல்லூர் வாய் வழிக்கதையில் எழுத இருக்கிறேன் சடையயம்மா வழி முன் சந்ததி,  நல்லூர் முடிகாரர் (இதை பற்றி எழுத இருக்கிறேன்) இப்போதைய வழி  பெரும்பகுதி ஆகும்.  

சடையம்மாவை, விக்ரமாகவே வெள்ளைப் பிள்ளையார் கோயிலில் பிரதிஸ்டி செய்யப்பட்டு இருக்கிறது என்று  நினைக்கிறன். 

உங்களுக்கும் எவருக்காவது மற்ற சித்தரை பற்றி தெரிந்தால் பதியவும். வாய் வழி வரலாறையும் பதியவும்.

வெள்ளை அண்ணை எனப்படும் சித்தர் - அனால் அவர் மிகவும் மற்றவர்களோடு பழகுவார் என்று அறிந்துள்ளேன். யோகர் வெள்ளை அன்னையின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றதாக. இதை பிறிம்பாக எழுதுகிறேன். யோகரின் சமாதிக்கு கிட்டத்தில் வெள்ளை அன்னை சுமதியும் இருக்கிறது என்று நினைக்கிறன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.