Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதினின் அரை நிர்வாண படங்கள்: கிண்டல் செய்த தலைவர்கள் - என்ன செய்தார் ரஷ்ய அதிபர்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதினின் அரை நிர்வாண படங்கள்: கிண்டல் செய்த தலைவர்கள் - என்ன செய்தார் ரஷ்ய அதிபர்?

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

அரை நிர்வாண விளாதிமிர் புதின்

பட மூலாதாரம்,AFP

 

படக்குறிப்பு,

2009ஆம் ஆண்டில் மேலாடையின்றி குதிரையில் சவாரி செய்யும் புகைப்படம் எடுத்து தமது கட்டுமஸ்தான உடல்வாகை வெளிப்படுத்தினார் விளாதிமிர் புதின்.

தனது கட்டுமஸ்தான உடல்வாகு குறித்து இந்த வாரம் கிண்டல் செய்த மேற்கு நாடுகளின் தலைவர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எதிர்வினையாற்றியுள்ளார். உங்களின் ஆடையை இப்படிக் கழற்றினால் "பார்க்க சகிக்காது" என்று அவர் கூறியுள்ளார்.

தமது குதிரை சவாரியின்போது மேல் சட்டையின்றி படங்களுக்கு போஸ் கொடுத்த ரஷ்ய அதிபரின் போக்கை ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்ற சில மேற்கு நாடுகளின் தலைவர்கள் கேலி செய்தனர். இந்த நிலையில், அவர்களுக்குக் கடுமையான முறையில் எதிர்வினையாற்றியிருக்கிறார் ரஷ்ய அதிபர்.

மேலும், தமது சக தலைவர்களிடம் நீங்கள் எல்லோரும் உங்களுடைய மது அருந்தும் அளவைக் குறைத்துக் கொண்டு அதிக விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்றும் புதின் அறிவுறுத்தியுள்ளார்.

தாம் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் யுக்ரேனை புதின் ஆக்கிரமித்திருக்க மாட்டார் என்ற பிரிட்டன் போரிஸ் ஜான்சனின் கருத்துகளையும் புதின் நிராகரித்தார்.

இது குறித்து ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய புதின், "அந்தக் கூற்று சரியல்ல. மார்கரெட் தாட்சர் (பிரிட்டன் முன்னாள் பிரதமர்) பால்க்லாந்து போரிலேயே "பகையைத் தொடங்க முடிவு செய்துள்ளார்" என்று கூறினார்.

என்ன நடந்தது?

ரஷ்ய அதிபர் மேலாடையின்றி படங்களுக்கு காட்சி தருவது அந்நாட்டில் புதிதல்ல. அவர் இதற்கு முன்பும் பல தருணங்களில் குதிரை சவாரி செய்யும்போதும் வேட்டைக்குச் செல்லும்போதும் மீன்பிடிக்கும்போதும் மேல் சட்டையின்றி இருப்பதைக் காட்டும் படங்கள் அந்நாட்டு அரசு ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

ரஷ்யர்களை ஈர்க்கும் வகையிலான ஆண்மை உணர்வை அத்தகைய காட்சிகள் ஏற்படுத்த முயல்வதாக தமது படங்கள் குறித்து புதின் கூறினார்.

முன்னதாக, இந்த வார தொடக்கத்தில் ஜெர்மனியில் ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷ்ய அதிபர் புதின் தொடர்பாக நையாண்டி செய்தார். அப்போது அவர், "புதினை விட மற்ற தலைவர்கள் வலிமையானவர்கள் என்பதைக் காண்பிக்க வேண்டுமானால், அவர்கள் தங்களுடைய ஆடைகளைக் கழற்ற வேண்டும்," என்று கிண்டலாக பேசினார்.

பிரிட்டன் பிரதமர், "நாமும் கடுமையானவர்கள் என்பதைக் காட்டுங்கள்" என்று கூறினார். கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "அப்படியென்றால் திறந்த மார்புடன் குதிரை சவாரி செய்ய வேண்டும்" எனப் பேசினார்.

காணொளிக் குறிப்பு,

Watch: 'Show them our pecs' - G7 leaders mock Putin

இந்த நிலையில், துர்க்மெனிஸ்தானில் செய்தியாளர் சந்திப்பின் போது இது குறித்து புதினிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், "அவர்கள் இடுப்புவரை கழற்ற விரும்புகிறார்களா அல்லது இடுப்புக்கு கீழே கழற்ற விரும்பினார்களா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது எதுவாக இருந்தாலும் அது பார்க்க சகிக்க முடியாத காட்சியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்," என்று பதிலளித்தார்.

"நீங்கள் ஒரு புத்திசாலியாக இருக்கலாம். உங்கள் நகங்களின் அழகைப் பற்றியும் சிந்திக்கலாம் என ரஷ்ய கவி அலெக்சாண்டர் புஷ்கினின் வரியை மேற்கோள் காட்டிப் பேசிய புதின், "நான் அந்தக் கருத்துடன் நிச்சயமாக உடன்படுகிறேன்; ஒருவர் தமது உடல் மற்றும் ஆன்மாவுடன் இணக்கமாக உணர்வுபூர்வமாக தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், எல்லாவற்றிலும் அப்படி இருக்க விரும்பினால் முதலில் நீங்கள் போதைக்கு அடிமையாவதிலும் பிற பழக்கங்களில் இருந்தும் விடுபட வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும், விளையாட்டில் ஈடுபட வேண்டும்," என்று தெரிவித்தார்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

"நீங்கள் குறிப்பிடும் நபர்கள் அனைவரையும் நான் தனிப்பட்ட முறையில் அறிவேன் - எங்கள் உறவுகள் சிறப்பானதாக இல்லை. இது புரிந்துகொள்ளத்தக்கது. ஆனாலும், அவர்கள் அனைவரும் தலைவர்கள். அதாவது அவர்களுக்கு எனத் தனி குணம் உள்ளது. விருப்பம் கொண்டிருந்தால் அவர்கள் நிச்சயமாக விரும்பிய முன்னேற்றத்தை அடைவார்கள். ஆனால் அதற்கு அவர்கள் உழைக்க வேண்டும். அதைப் பற்றிப் பேசுவது கூட ஒருவகையில் நல்லதுதான். இதற்காக நான் அவர்களைப் போற்றுவேன்," என்று புதின் கூறினார்.

இந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற நேட்டோ செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போரிஸ் ஜான்சனிடம் புதின் கூறிய இந்தக் கருத்துக்கள் காண்பிக்கப்பட்டன. ஆனால், அதற்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த போரிஸ், யுக்ரேன் மீதான ஆக்கிரமிப்புக்கு மேற்கு நாடுகள் ஒன்றாகச் சேர்ந்து அப்படி எதிர்வினையாற்றியதாகத் தெரிவித்தார்.

 

விளாதிமிர் புதின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சைபீரியாவில் மேல் சட்டையின்றி மீன்பிடிக்கும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

ஒரு பெண்ணாக இருந்திருந்தால் ரஷ்ய அதிபர் யுக்ரேனை ஆக்கிரமித்திருக்க மாட்டார் என்று போரிஸ் ஜான்சன் இந்த வாரம் தெரிவித்த கருத்துகள் குறித்தும் புதினிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

ஜெர்மன் செய்தி நிறுவனமான ZDF உடனான ஒரு நேர்காணலில் ஜான்சன் "யுக்ரேன் மீதான பைத்தியக்காரத்தனமான, ஆடம்பரமான ரஷ்ய படையெடுப்பு 'நச்சு ஆண்மைக்கு சரியான எடுத்துக்காட்டு" என்று கூறினார். மேலும் "அதிகாரப் பதவிகளில் அதிகமான பெண்கள் வர வேண்டும்" என்றும் போரிஸ் அழைப்பு விடுத்தார்.

அவரது இந்தக் கூற்றுக்கு எதிர்வினையாற்றிய புதின், "1982ஆம் ஆண்டு பால்க்லாந்து தீவுகள் தொடர்பாக பிரிட்டன் மற்றும் அர்ஜென்டீனா இடையே ஏற்பட்ட மோதலை மேற்கோள்காட்டி பதிலளித்தார்.

அப்போது அவர், "ஃபால்க்லாந்து தீவுகளுக்காக அர்ஜென்டீனாவுக்கு எதிராக மார்கரெட் தாட்சர் ராணுவ ரீதியில் குரோரத்தைத் தொடங்க முடிவு செய்த சமீபத்திய வரலாற்றின் நிகழ்வுகளை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். அப்படியென்றால் ஒரு பெண் விரோதத்தைத் தொடங்க முடிவு செய்திருக்கிறார். அந்த பால்க்லாந்து தீவுகள் எங்கே? பிரிட்டன் எங்கே? அது ஏகாதிபத்திய லட்சியங்கள் மற்றும் ஏகாதிபத்திய நிலையை உறுதிப்படுத்திய மனப்போக்கே தவிர வேறு எதுவும் இல்லை," என்று கூறினார்.

"எனவே, இன்று என்ன நடக்கிறது என்பதற்கு இது மிகவும் சரியான உவமை அல்ல என்று நான் நினைக்கிறேன். அதுவும் கிரேட் பிரிட்டனின் தற்போதைய பிரதமரிடமிருந்து அது சொல்லப்படுவது சரியல்ல," என்றார் புதின்.

ஃபால்க்லாந்து மோதல் என்பது என்ன?

தென் அட்லான்டிக் பெருங்கடலில் உள்ள பிரிட்டிஷ் காலனியான ஃபால்க்லாந்து தீவுகளை அர்ஜென்டீனாவின் துருப்புகள் 1982ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆக்கிரமித்தபோது, 10 வார ஃபாக்லாந்து மோதல் தொடங்கியது.

அர்ஜென்டீனா 1800களில் ஸ்பெயினிடம் இருந்து அந்தத் தீவுகளைப் பெற்றதாகவும் அவற்றை மீட்டெடுக்க விரும்புவதாகவும் கூறியது.

அந்தத் தீவுகளை ஆங்கிலேயர்கள் 150 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். மேலும் தீவுகளை மீண்டும் கைப்பற்ற கடல் வழியாக ஆயுதப்படைகளை அனுப்பினர். ஜூன் 14ஆம் தேதி அர்ஜென்டீனாவின் படைகள் சரணடைந்தன.

https://www.bbc.com/tamil/global-62000140

  • கருத்துக்கள உறவுகள்

Vladimir Putin's Workout - AskMen

Political heavyweight: Vladimir Putin working out in a gym – in pictures |  World news | The Guardian

Kremlin releases pictures of President Putin and Prime Minister Dmitry  Medvedev working out at the gym | The Independent | The Independent

 

 

 

 

புட்டினின்... கட்டுமஸ்தான உடலை பார்த்து,
வயித்தெரிச்சலில்... மேற்குலகம்,  விழல் கதை கதைச்சுக்  கொண்டிருக்கு. 😎
புட்டின்... ஓங்கி அடிச்சால், ஒன்றரை தொன் என்று, இவர்களுக்கு  தெரியாது. 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

புட்டினின்... கட்டுமஸ்தான உடலை பார்த்து,
வயித்தெரிச்சலில்... மேற்குலகம்,  விழல் கதை கதைச்சுக்  கொண்டிருக்கு. 😎
புட்டின்... ஓங்கி அடிச்சால், ஒன்றரை தொன் என்று, இவர்களுக்கு  தெரியாது. 😂

அடிபாட்டிலை தோல்வியெண்டால் ஏலாவளித்தனமாய் அங்கங்களை வைச்சு நக்கல் நையாண்டி பண்ணுறது எல்லாம் மூண்டாம் வகுப்பிலையே பாத்திட்டம் :cool:

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்ய அதிபரை அரசியலுக்கு அப்பால் சென்று தனிப்பட்ட ரீதியில் விமரிசனம் செய்ய முயற்சித்து மூக்குடைபட்டிருக்கின்றனர்.

மல்லாந்து படுத்துக்கொண்டு, வானத்தைப்  பார்த்து எச்சிலைத்  துப்பக்கூடாது என்பது இதற்காகத்தான்.  

( தனி மனிதன் ஒருவனின் உடல் ரீதியிலான  நிறை குறைகளை எள்ளி நகையாடுதல் நாகரீகமான செயலாக கருதப்படுவதில்லை. ஆனால் தற்போதைய லிப்றல் வேள்ட் எதனை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறது என்பதனை வெளிப்படுத்தும் சம்பவமாக இந்த அரசியல் தலைவர்களின் பேச்சைக் கொள்ளலாம். )

Edited by Kapithan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Kapithan said:

ரஸ்ய அதிபரை அரசியலுக்கு அப்பால் சென்று தனிப்பட்ட ரீதியில் விமரிசனம் செய்ய முயற்சித்து மூக்குடைபட்டிருக்கின்றனர்.

மல்லாந்து படுத்துக்கொண்டு, வானத்தைப்  பார்த்து எச்சிலைத்  துப்பக்கூடாது என்பது இதற்காகத்தான்.  

ஒரு சில சனம் இப்பவும் Rocky,Rambo  படங்கள் பார்த்த பீலிங்ல திரியினம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

th?id=OIP.DAVQTuhDnmHcdJ7EIynVAgHaFD&pid=Api&P=0&w=263&h=180  th?id=OIP.avf5a9vHpgnSwmUFZBrQggHaEK&pid=Api&P=0&w=316&h=177

இவர் தலையைப் பார்த்ததும் எனக்குக் காகக்கூடு ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. 😆

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

அடிபாட்டிலை தோல்வியெண்டால் ஏலாவளித்தனமாய் அங்கங்களை வைச்சு நக்கல் நையாண்டி பண்ணுறது எல்லாம் மூண்டாம் வகுப்பிலையே பாத்திட்டம் :cool:

ஊரில இன்னொண்டு சாதியை இழுப்பது.

6 minutes ago, Paanch said:

th?id=OIP.DAVQTuhDnmHcdJ7EIynVAgHaFD&pid=Api&P=0&w=263&h=180  th?id=OIP.avf5a9vHpgnSwmUFZBrQggHaEK&pid=Api&P=0&w=316&h=177

இவர் தலையைப் பார்த்ததும் எனக்குக் காகக்கூடு ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. 😆

இப்படி தலையை வைத்திருக்க எவ்வளவு ஜெலி எல்லாம் பூசி எவ்வளவு பணத்தைக் கொட்டுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புட்டினோ, ஜோன்சனோ ஆம்பிளை சேர்ட்டை கழட்டி விட்டு  நிண்டால் அதையும் ரசிக்கும் ஆண்களும் உள்ளார்கள்தான்.

சிலருக்கு புட்டினின் கடுமஸ்தான உடலும், சிலருக்கு ஜான்சனின் டாடி டைப்பும் பிடிக்கும் போல இருக்கு🤣.

அழகான இளம் பெண்க்ந்ளை அரசியலுக்கு வர சொல்லுங்கள் என்றால் யார் கேட்கிறார்கள்🤣.

ஆயிரம்தான் புட்டின் சேர்ட்டை கழட்டி போட்டு மலையாள பிட்டு பட போஸ்டர் மாரி வந்தாலும்,

எனது வோட்டு எப்போதும் சீலையில் போராடப்போகும் ஹிருணிக்காவுக்கே🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

புட்டினோ, ஜோன்சனோ ஆம்பிளை சேர்ட்டை கழட்டி விட்டு  நிண்டால் அதையும் ரசிக்கும் ஆண்களும் உள்ளார்கள்தான்.

சிலருக்கு புட்டினின் கடுமஸ்தான உடலும், சிலருக்கு ஜான்சனின் டாடி டைப்பும் பிடிக்கும் போல இருக்கு🤣.

அழகான இளம் பெண்க்ந்ளை அரசியலுக்கு வர சொல்லுங்கள் என்றால் யார் கேட்கிறார்கள்🤣.

ஆயிரம்தான் புட்டின் சேர்ட்டை கழட்டி போட்டு மலையாள பிட்டு பட போஸ்டர் மாரி வந்தாலும்,

எனது வோட்டு எப்போதும் சீலையில் போராடப்போகும் ஹிருணிக்காவுக்கே🤣.

பிறந்த இடத்தை நாடுதே பேதைமட நெஞ்சம் கிருணிக்காவை நாடுதே கண்.😍

இலங்கையில் பெண்களின் கறந்த இடமும் அரையாகவோ அன்றி முழுமையாகவோ மூடித்தான் இருக்கும் கோசான் அவர்களே,! அதனால்தான் பட்டினத்தாரின் மொழிபை உங்களுக்காகச் சிறிது மாற்றினேன்.😋

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, goshan_che said:

அழகான இளம் பெண்க்ந்ளை அரசியலுக்கு வர சொல்லுங்கள் என்றால் யார் கேட்கிறார்கள்🤣.

வந்தால் அமைதியாய் பொலிற்ரிக் பண்ண விடுறியள் இல்லையே....:cool:

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வந்தால் அமைதியாய் பொலிற்ரிக் பண்ண விடுறியள் இல்லையே....:cool:

 

பொலிடிக்ஸ யாரு சார் பாக்கிறாங்க இப்பெல்லாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வந்தால் அமைதியாய் பொலிற்ரிக் பண்ண விடுறியள் இல்லையே....:cool:

 

கனடாவில் நடந்தது போல இருக்கிறது ?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

பிறந்த இடத்தை நாடுதே பேதைமட நெஞ்சம் கிருணிக்காவை நாடுதே கண்.😍

இலங்கையில் பெண்களின் கறந்த இடமும் அரையாகவோ அன்றி முழுமையாகவோ மூடித்தான் இருக்கும் கோசான் அவர்களே,! அதனால்தான் பட்டினத்தாரின் மொழிபை உங்களுக்காகச் சிறிது மாற்றினேன்.😋

🤣 அவரும் எல்லாம் நாடி முடிந்த பின் தானே எழுதினவர் ஐயா🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

🤣 அவரும் எல்லாம் நாடி முடிந்த பின் தானே எழுதினவர் ஐயா🤣.

மன்னிக்கவேண்டும் பெரியவரே. நான் உங்கள் எழுத்தைப் பார்த்து துள்ளுவது இளமை என்று எண்ணிவிட்டேன். பழம் தின்று கொட்டைபோட்ட முதுபெரும் முதியவர் என்று எண்ணவில்லை.🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Kapithan said:

கனடாவில் நடந்தது போல இருக்கிறது ?

அப்ப உங்களுக்கு கன விசயங்கள் தெரியாது 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.