Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போரிஸ் ஜான்சன் பதவி விலகல்: அடுத்த பிரிட்டன் பிரதமர் யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போரிஸ் ஜான்சன் பதவி விலகல்: அடுத்த பிரிட்டன் பிரதமர் யார்?

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ரிஷி சுனக்

பட மூலாதாரம்,REUTERS

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பதவி விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அடுத்த பிரதமர் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இனி கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன், இறுதி செய்யப்பட்ட இரண்டு வேட்பாளர்கள் தலைமைப் பொறுப்புக்கு போட்டியிடுவர். அவர்களிலிருந்து ஒரு தலைவர் உருவாவார். ஆனால், யார் அந்த இருவர்?

ரிஷி சுனக்

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக இவர் ஆவதற்கான எல்லா சாத்தியங்களும் உண்டு என்று முன்பே சொல்லப்பட்டது.

ஆனால், சில மாதங்களுக்கு முன்பு, ஊரடங்கு விதிகளை மீறியதற்காக இவர் அபராதம் செலுத்தினார். அதற்கு முன்னதாக, இவரது மனைவியின் வரி விவகாரங்கள் தொடர்பான பிரச்னைகளும் எழுந்ததையடுத்து இவரது நன்மதிப்பு குறைந்தது.

நார்த் யோர்க்-ஷைர் தொகுதியிலிருந்து 2015ஆம் ஆண்டுதான் இவர், நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வானார். அதற்கு முன்னதாக பொது வருவாயை கையாளும் அரசாங்க கருவூல அதிகாரியாகவும் இவர் பணியாற்றினார். மேலும், கொரோனா தொற்று பொதுமுடக்க காலத்தில் ஆற்றிய பணிகளால் இவர் பிரபலமானார்.

பிரிட்டன் அமைச்சர் சஜித் ஜாவித்துடன் இணைந்து, தானும் பதவி விலகிய இவரது முடிவைத் தொடர்ந்தே மற்ற அமைச்சர்களின் பதவி விலகலும் நடந்தது அதன் விளைவாகவே தற்போது போரிஸ் ஜான்சன் பதவி விலகலை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிறார்.

லீஸ் ட்ரஸ்

 

லீஸ் ட்ரஸ்

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

லீஸ் ட்ரஸ்

போரிஸ் ஜான்சனின் சுகாதாரச் செயலர் வெளியேறிய சமயத்தில், போரிஸுக்கு தன்ஆதரவை அளித்ததன் மூலம் கட்சி விசுவாசிகளிடையே தன் நிலையை உயர்த்திக்கொண்டவர் லீஸ் ட்ரஸ்.

பிரிட்டனின் வெளியுறவு அலுவலகத்துக்கு தலைமை தாங்கிய இரண்டாவது பெண்மணியான இவர், பிரிட்டிஷ்-இரானிய எழுத்தாளர் `நசானின் ஜகாரி-ராட்க்ளிஃப்` இன் விடுதலைக்காகவும், ரஷ்யா மீது விதித்த தடைகளுக்காகவும் பெரிதும் புகழ் பெற்றவர்.

2010ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக, சௌத் வெஸ்ட் நார்ஃபோக் தொகுதியிலிருந்து இவர் தேர்வானார். பொருளாதாரம், வர்த்தகம் தொடர்பாக இவர் வெளியிடும் சுதந்திரமான கருத்துகளுக்காக கன்சர்வேட்டிவ் கட்சியினரிடையே பிரபலமாக அறியப்படுகிறார்.

சஜித் ஜாவித்

 

சஜித் ஜாவித்

பட மூலாதாரம்,REUTERS

ப்ராம்ஸ்க்ரோவ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர்தான், போரிஸ் ஜான்சனுக்கு எதிராக முதலில் அடியெடுத்து வைத்தவர். ஒருமைப்பாட்டுக்கான அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்த இவர், தனது பதவி விலகலின்போது, "பிரச்னை மேலிடத்தில் இருந்து தொடங்குகிறது" என்று பேசியிருந்தார்.

2019ஆம் ஆண்டு தலைமைப் பொறுப்புக்காக முன்னிறுத்தப்பட்ட இவர், அப்போது நான்காம் இடத்தை பெற்றிருந்தார்.

நாட்டில் அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் தேசிய கடன்கள் குறித்தும் இவர் தொடர்ந்து எச்சரித்து வந்தார்.

பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்து வந்த முதல் தலைமுறை குடும்பத்தில் பிறந்த சஜித் ஜாவித்தின் தந்தை பேருந்து நடத்துநராக இருந்தவர். இப்படியான எளிய பின்னணியில் இருந்து வந்த இவர், 2010ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகும் முன்பு ஒரு வெற்றிகரமான தொழில் வாழ்வைக் கொண்டவராகவும் இருந்தார்.

ஜெர்மி ஹண்ட்

 

ஜெர்மி ஹண்ட்

பட மூலாதாரம்,UK PARLIAMENT

2019ஆம் ஆண்டு நடந்த தலைவர் தேர்தலின்போது, போரிஸ் ஜான்சனுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர். முன்னாள் வெளியுறவு செயலாராகவும் இருந்த இவருக்கு வெஸ்ட்மின்ஸ்டரில் இருந்த செல்வாக்கு அப்படியே நீடிக்கிறது.

(வெஸ்ட்மின்ஸ்டர்: பிரிட்டன் நாடாளுமன்றத்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்படும் சொல்)

கொரோனா பொது முடக்கத்தின்போது, பொது சுகதாரக் குழு ஒன்றின் தலைமையாக இருந்த இவர், அரசின் கொள்கைகளையே விமர்சித்தார்.

ஒரு அட்மிரலின் மகனான இவர், ஹாட்கோர்ஸ் என்ற இணையதளத்தையும் நடத்தி வந்தார். இது மாணவர்களையும் கல்வி நிறுவனங்களையும் இணைக்கும் விதமான இணையதளமாகும்.

2005ஆம் ஆண்டு முதல், சௌத் வெஸ்ட் சர்ரே தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் இவர், 2010அம் ஆண்டு அரசின் கலாசார செயலராகவும் சுகாதரத்துறையின் தலைமையாகவும் இருந்தார்.

மைக்கேல் கோவ்

 

மைக்கேல் கோவ்

பட மூலாதாரம்,PA MEDIA

2019ஆம் ஆண்டு நடந்த தலைவர் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தவர் இவர். ஆனால், ஐரோப்பிய யூனியன் வாக்கெடுப்பை முன்னிட்டு 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தலைமைக்கான தேர்தலின்போது அதிமுக்கியத்துவம் வாய்ந்தவராக இவர் பார்க்கப்பட்டார்.

போரிஸ் ஜான்சனுக்கான தனது ஆதரவை விலக்கிக்கொண்ட போது, "ஜான்சனால் தலைமைத்துவத்தை தர முடியாது" என்றும் "எதிரே உள்ள சவால்களுக்கான குழுவை அமைக்க முடியாது" என்றும் பேசியவர் இவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, பிபிசியின் முன்னாள் செய்தியாளர் மற்றும் டைம்ஸ் நாளிதழின் கட்டுரையாளரான இவர், அமைச்சரவையின் நீண்ட-கால உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2010ஆம் ஆண்டு கல்வி செயலராக பொறுப்பேற்ற இவர், அதைத்தொடர்ந்து சுற்றுச்சூழல் செயலாகவும் நீதி செயலராகவும் பணியாற்றியுள்ளார்.

நாடிம் ஸகாவி

 

நாடிம் ஸகாவி

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

நாடிம் ஸகாவி

கொரோனா பேரிடர்க்காலத்தில் தடுப்பூசிகள் துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டபோது தான் ஆற்றிய பணிகளால், தன் செல்வாக்கை பெருக்கிக்கொண்டவர்.

"நான் இதுவரை செய்ததிலேயே மிக முக்கியமான பணி இது" என்று அப்போது பேசினார். அதன் மூலம், அடுத்த கேபினட்டில் கல்வி செயலராக பதவி உயர்வும் பெற்றார்.

அதைத்தொடர்ந்து, ரிஷி சுனக் ராஜிநாமாவுக்குப் பின் கருவூல பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டது. ஆனால், அடுத்த 24 மணி நேரத்துக்கு பிறகு, தானும் போய் வருவதாக, போரிஸ் ஜான்சனிடம் விடை கூறிவிட்டு புறப்பட்டு விட்டார்.

1967ஆம் ஆண்டு இராக்கில் பிறந்த ஸகாவியின் குடும்பம், சதாம் உசேன் ஆட்சி அமைத்தபோது, நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்

வேதிப்பொறியியல் படித்த இவர், யூ கவ் (YouGov) என்ற ஆன்லைன் வாக்கெடுப்பு நிறுவனத்தின் மூலம் சம்பாதித்து வந்தார். முன்னதாக இவர் பொம்மை வியாபாரமும் செய்து வந்தார்.

பென்னி மோர்டண்ட்

 

பென்னி மோர்டண்ட்

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

பென்னி மோர்டண்ட்

மேஜிக் ஷோக்கள் நடத்தும் ஒரு வித்தைக்காரரின் உதவியாளராக இருந்த இவர், அசாதரணமானவற்றை நிகழ்த்திக் காட்டுவதில் சிறந்தவர் என்று பெயர் பெற்றவர்.

ஏற்கனவே அப்படியொரு அதிசயத்தை நிகழ்த்தியும் காட்டியுள்ளார் பென்னி. அதாவதும் 2019ஆம் ஆண்டு பிரிட்டனின் முதல் பெண் பாதுகாப்பு செயலராக பொறுப்பேற்றார்.

வெஸ்ட்மின்ஸ்டருக்கு வெளியே, இவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக இவர் பெரிதும் அறியப்படுகிறார். போர்ட்ஸ்மௌத் தொகுதியின் உறுப்பினரான இவர், கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் இளைஞரணித் தலைவராகவும் இருந்தவர்.

டாம் டுகெந்தாட்

 

டாம் டுகெந்தாட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

போரிஸ் ஜான்சனின் பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பாணியை உடையவர் இவர்.

இனிவரும் காலங்களில், கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆற்றல்மிக்க தலைவராக இவர் இருப்பார் என்று, இவர் 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினரான சமயம் முதலே பேசப்பட்டு வந்தது.

நீங்கள் பிரதமர் ஆக விரும்புகிறீர்களா என்று 2017ஆம் ஆண்டு இவரிடம் கேட்கப்பட்டபோது, "கண்டிப்பாக, டிக்கட்டை வாங்க முடிந்த என்னால், ஏன் லாட்டரியை வெல்ல நான் நினைக்கக் கூடாது? என்று பதிலளித்தார்.

பென் வாலேஸ்

 

பென் வாலேஸ்

பட மூலாதாரம்,PA MEDIA

யுக்ரேனில் நடந்த ரஷ்ய படையெடுப்பின்போது பிரிட்டன் கீயவுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எடுக்கப்பட்ட விரைவான முடிவின் பின்னணியில் இருந்ததால் வெகுவாக கவனம் பெற்றவர் இவர். பாதுகாப்பு செயலரான இவர், முன்னாள் ராணுவ வீரராகவும் இருந்தார்.

கெர்மனி, சைப்ரிஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளில் பணியாற்றிய இவர், பிரிட்டிஷ் வீரர்களுக்கு எதிரான அயர்லாந்து குடியரசு ராணுவத்தின் வெடிகுண்டு முயற்சியை முறியடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இளவரசி டயானாவின் உடலை பாரிஸிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்ட முக்கியமான ராணுவ வீரரும் இவர் ஆவார்.

https://www.bbc.com/tamil/global-62082305

  • கருத்துக்கள உறவுகள்

கோவ் போட்டியில் இல்லை என அறிவித்து விட்டார். சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜோன்சனின் பதவி விலகலை வைச்சு ஜோன்சனை.. ரஷ்சியா எள்ளிநகையாடியுள்ளது. ஜோன்சன் குடியும் குட்டியுமா இருந்தது தான் மிச்சம். மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்ய தவறிவிட்டார் என்பது தான் பொதுக்கருத்து. ஆனாலும் எனி வருபவர்கள் தொடர்பிலும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை.

பிளேயரின் இரண்டாம் ஆட்சிக்காலத்தில் இருந்து.. பிரித்தானியாவின் ஒரு பிரதமரும் முழுசா தங்கள் பதவிக் காலத்தை அனுபவிக்கவில்லை. 

ஈழத்தில் தமிழ் மக்களின் தேச விடுதலைக்காகப் போராடிய விடுதலைப்புலிகள் மீது தடை கொண்டு வந்த லேபர் கட்சி பிளேயரின் ராசி அப்படி. 

  • கருத்துக்கள உறவுகள்

போரிஸ் ஜான்சன் தனக்கு தலைமைத்துவ போட்டி வரக்கூடாதென்று எடுத்திருக்கக்கூடிய ஒரு முடிவாயினும், பிரிட்டிஷ் வரலாறில், போரிஸ் ஆசிய வம்சாவளிகளுக்கு மிக அதிகமாக அமைச்சரவையில் இடம் கொடுத்து இருந்தார் என்பது உண்மையே.

ஆனாலும், அவரை பதவியில் இருந்து இறக்க, இரு ஆசிய வம்சாவளி அமைச்சர்களின் ராஜினாமாவே காரணமாக இருந்தது என்பதும் உண்மை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, Nathamuni said:

போரிஸ் ஜான்சன் தனக்கு தலைமைத்துவ போட்டி வரக்கூடாதென்று எடுத்திருக்கக்கூடிய ஒரு முடிவாயினும், பிரிட்டிஷ் வரலாறில், போரிஸ் ஆசிய வம்சாவளிகளுக்கு மிக அதிகமாக அமைச்சரவையில் இடம் கொடுத்து இருந்தார் என்பது உண்மையே.

ஆனாலும், அவரை பதவியில் இருந்து இறக்க, இரு ஆசிய வம்சாவளி அமைச்சர்களின் ராஜினாமாவே காரணமாக இருந்தது என்பதும் உண்மை.

என்னப்பா போற போக்கை பாத்தால்  கிரேட் பிரிட்டன்  லிட்டில் இன்டியா வாக மாறீடும் போல கிடக்கு :cool:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

என்னப்பா போற போக்கை பாத்தால்  கிரேட் பிரிட்டன்  லிட்டில் இன்டியா வாக மாறீடும் போல கிடக்கு :cool:

இவர் பிரெக்ஸிட் பத்தி முறுக்கிக் கொண்டு திரிஞ்ச ஆள்.

அவரையே வைத்து, பிரெக்ஸிட் அலுவல் முடிந்தவுடன், ஆளை கிளப்பி விடுவார்கள் என்று போரிஸ் வரும் போதே நான், இங்கே சொல்லி இருந்தேன்.

தட்சரையே கிளப்பி அனுப்பிய பழமைவாத கட்சி இவரை அனுப்ப வேண்டிய நேரத்தில் அனுப்பும் என்றும் சொல்லி இருந்தேன்.

ஆகவே வியப்பு இல்லை.

நம்ம நாடு போல, இவர்கள், ஒருவரை நம்பி இருப்பதில்லை.

சரிவராதா ?.... ஆளை தூக்கு கதை தான்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

என்னப்பா போற போக்கை பாத்தால்  கிரேட் பிரிட்டன்  லிட்டில் இன்டியா வாக மாறீடும் போல கிடக்கு :cool:

இவர்களின் அரசியலில் எனக்கு உடன்பாடில்லை. 

ஆனால் இது ஒரு நல்ல விடயம்தானே. நாதம் சொன்னது போல் இவர்கள் முன்னுக்கு வர பல காரணங்கள் இருப்பினும் - வர முடியுமான இடைவெளி இருந்தது என்பதே பழமைவாத கட்டிசியிற்கு பெருமைதான்.

ஆனால் அதே கட்சியில் இவர்கள் இருக்கும் போதுதான், சம காலத்தில்தான் நேரடியாகவும் மறைமுகமாகவும் சிறுபான்மையை ஒதுக்கும் சட்டங்கள் வந்தது என்பதும் உண்மையே.

மறுவழமாக ஒப்பீட்டளவில் தொழிற்கட்சியில் இன்னும் வெள்ளையினத்தவர் அதிகாரமே அதிகம். ஆட்கள் இல்லாமல் இல்லை, லீசா நந்தி, தங்கம் டெபனார் (தந்தை இலங்கை தமிழ்) இன்னும் சில அரை ஆசிய முகங்கள் இருந்தாலும், முழு ஆசியர்கள் முக்கியமான பதவிகளில் இல்லை.

சுனாக் (டாக்டரின் மகன்), ஜாவித் (பஸ் ஓட்டுனர்/ கடைக்காரர் மகன்), பட்டேல் (கடைகாரர்/ அகதியின் மகள்), ஷகாவி (11 வயதில் நாட்டுக்கு வந்த அகதி) இவர்கள் அரசின்  முன்வரிசையில் இருக்கும் நிலை, பிரித்தானியாவை தவிர வேறு எந்த மேற்கு நாட்டிலாவது நடக்குமா?

நீங்கள் அடிக்கடி ஏன் ஜெர்மனியை விட்டு தமிழர்கள் லண்டன், லண்டன் என ஓடுகிறார்கள் என்ற கேள்விக்கான பதிலின் ஒரு பகுதி இதில் உள்ளது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, goshan_che said:

சுனாக் (டாக்டரின் மகன்), ஜாவித் (பஸ் ஓட்டுனர்/ கடைக்காரர் மகன்), பட்டேல் (கடைகாரர்/ அகதியின் மகள்), ஷகாவி (11 வயதில் நாட்டுக்கு வந்த அகதி) இவர்கள் அரசின்  முன்வரிசையில் இருக்கும் நிலை, பிரித்தானியாவை தவிர வேறு எந்த மேற்கு நாட்டிலாவது நடக்குமா?

 ஒவ்வொரு நாடுகளின் வரலாறுகளும் வேறுபட்டது. ஆசியா ஆபிரிக்காவை கட்டியாண்டவர்களுக்கு வேற்றினத்தவர்களை உள்வாங்குவதில் பிரச்சனை இல்லை. இருந்தாலும் பிரான்ஸ் இல் இப்படி இருக்கா என தெரியவில்லை. ஆனால் ஜேர்மனியிலும் தற்போது வேற்றினத்தவர்களும் அரசியலுக்குள் நுழைகின்றார்கள். துருக்கியர்கள் அதிகமாக நுழைந்து விட்டனர். ஈரானிய அகதியொருவர் பசுமைக்கட்சியில் ஒரு தலைவராக உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

 ஒவ்வொரு நாடுகளின் வரலாறுகளும் வேறுபட்டது. ஆசியா ஆபிரிக்காவை கட்டியாண்டவர்களுக்கு வேற்றினத்தவர்களை உள்வாங்குவதில் பிரச்சனை இல்லை. இருந்தாலும் பிரான்ஸ் இல் இப்படி இருக்கா என தெரியவில்லை. ஆனால் ஜேர்மனியிலும் தற்போது வேற்றினத்தவர்களும் அரசியலுக்குள் நுழைகின்றார்கள். துருக்கியர்கள் அதிகமாக நுழைந்து விட்டனர். ஈரானிய அகதியொருவர் பசுமைக்கட்சியில் ஒரு தலைவராக உள்ளார்.

உண்மைதான். ஒவ்வொரு நாட்டின் அணுகுமுறையும் வேறுதான். 

இங்கே நூறு வருடங்களுக்கு முன்பே டிஸ்ரேலி என்ற யூதர் பிரதமராக இருந்துள்ளார். காரணம் அப்போதே வெளிநாட்டார் பிரசன்னம் இங்கே பெரிய விடயமல்ல (ஆனால் ஒதுக்கல் இருந்தது).

பிரான்சிலும் 80களில் ஒரு யூதர் ஜனாதிபதியாக அல்ல ஆனால் பிரதமராக இருந்துள்ளார் என விசுகு அண்ணை முன்னர் கூறியவர்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஐக்கிய இராச்சியத்தில் கூட பிறக்கவில்லை.

அவர் நியூயார்க் நகரில் பிறந்தார் மற்றும் அவரது வாழ்க்கையின் முதல் சில மாதங்கள் அங்கு வாழ்ந்தார். 

அமெரிக்காவின் ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் களமிறங்கலாம்.

உண்மையில், அவர் 40 ஆண்டுகளாக அமெரிக்க குடியுரிமையை வைத்திருந்தார், அவர் பிரிட்டிஷ் கருவூலத்திற்கு வரி செலுத்த வேண்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அமெரிக்க குடியுரிமையை நிராகரித்தார்.

காமன்வெல்த் எல்லைக்கு வெளியே பிறந்த ஒரே பிரதமர் ஜான்சன் மட்டுமே.

இங்கிலாந்துக்கு வெளியே பிறந்த ஒரே பிரதமர் ஆண்ட்ரூ போனார் லா, கனடாவில் பிறந்தவர்.

மேலும், போரிஸ் ஜான்சனின் தாத்தா அலி கெமல், 1922 இல் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவதற்கு முன்பு ஒட்டோமான் பேரரசில் அரசாங்க அதிகாரியாக இருந்தார்.

சுவாரஸ்யமானது, இல்லையா?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

உண்மைதான். ஒவ்வொரு நாட்டின் அணுகுமுறையும் வேறுதான். 

இங்கே நூறு வருடங்களுக்கு முன்பே டிஸ்ரேலி என்ற யூதர் பிரதமராக இருந்துள்ளார். காரணம் அப்போதே வெளிநாட்டார் பிரசன்னம் இங்கே பெரிய விடயமல்ல (ஆனால் ஒதுக்கல் இருந்தது).

பிரான்சிலும் 80களில் ஒரு யூதர் ஜனாதிபதியாக அல்ல ஆனால் பிரதமராக இருந்துள்ளார் என விசுகு அண்ணை முன்னர் கூறியவர்.

முன்னரெல்லாம் ஜேர்மனிய உதைபந்தாட்ட குழுக்களில் கறுப்பினத்தவரை மருந்திற்கும் காணமுடியாது. இன்று நிலை மாறி நாட்டின் தேசிய விளையாட்டு குழுக்களிலேயே கறுப்பினத்தவரின் பங்கும் ஆதிக்கமும் கூடிக்கொண்டு வருகின்றது.

இதற்குள் சிலோன் ரமில்ஸ்????????..... அவையளைப்பற்றி வாயே திறக்க மாட்டன்.😷

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

முன்னரெல்லாம் ஜேர்மனிய உதைபந்தாட்ட குழுக்களில் கறுப்பினத்தவரை மருந்திற்கும் காணமுடியாது. இன்று நிலை மாறி நாட்டின் தேசிய விளையாட்டு குழுக்களிலேயே கறுப்பினத்தவரின் பங்கும் ஆதிக்கமும் கூடிக்கொண்டு வருகின்றது.

இதற்குள் சிலோன் ரமில்ஸ்????????..... அவையளைப்பற்றி வாயே திறக்க மாட்டன்.😷

காலமாற்றம் என்ற காட்டாறு அதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஜேர்மனியும் மாறும். 

இங்கேயும் எமது மக்கள் அரசியல் என்பது வெறும் நாட்டு விடயங்களை முன் நிறுத்துவது என்பதோடு நிற்கிறது. அடுத்த தலைமுறையை கூட அரசியலில் காண்பது அபூர்வம்.

இந்த நிலை மாற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

என்னப்பா போற போக்கை பாத்தால்  கிரேட் பிரிட்டன்  லிட்டில் இன்டியா வாக மாறீடும் போல கிடக்கு :cool:

அவர்கள் ஆசைப்படலாம்.. ஆனால் ஆட்சிக்கு வர முடியாது. அதற்குள் வெளியேற்றிவிடுவார்கள்.. வெள்ளையர்கள். பிரித்தானிய வெள்ளையர்கள் பலே கில்லாடிகள்.. தங்களின் தேவையை இப்படியான பதவி ஆசைக்கார தெற்காசியக்காரர்களை வைச்சே சாதித்திடுவார்கள். 

How the Conservative Party elects a new leader (short)

இந்த தடைதாண்டல் போட்டியில்.. இவையை சரியான இடத்தில் வைச்சு தட்டிடுவாங்கள். 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.