Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணில் பதில் ஜனாதிபதியானார்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

புதிய பிரதமர் தேர்வாக. அதன் பின் ரணிலின் பதில் பதவியை இன்னொரு கெசெட் மூலம் நீக்கி விட்டு. கோட்ட பதவி விலகினால். 

புதிய பிரதமர் பதில் ஜனாதிபதி- பின்னர் வாக்கெடுப்பில் வென்றால் ஜனாதிபதி.

இதுதான் பிளான் என நினைக்கிறேன்.

ரணிலை நீக்கவேணும் எண்டால் எப்பவோ நீக்கி, விரும்பின ஒருத்தரை நியமித்திருக்கலாம் எல்லோ.... இந்த வினாடி கூட செய்யலாம்......

ஆனால்...... ரணில் அவர்களை பாதுகாக்க தேவை.... அதனால் தான் இழுக்கப்படுகிறது.....

  • Replies 68
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நரி எத்தனையோ வகையில் முயன்றும் கிடைக்காத பதவியை.. இப்ப தவிச்ச முயல் அடிச்சாவது பிடிப்பம் என்று நினைக்குது.

சிங்களத் தலைவர்களை எவ்வளவு கிரிமினல்களாகவும் பதவிப் பேராசை பிடித்தவர்களாகவும் சிங்கள மக்கள் ஆக்கி இருக்கினம் என்பதை இப்ப தான் அவையே விளக்கிக் கொள்ள ஆரம்பிச்சிருக்கினம். 

ஆனாலும் நரி தான் நினைச்சது போல்.. சொறீலங்காவின் இன்னாள்.. முன்னாள் சனாதிபதி ஆகிட்டுது. எனி அது செத்தாலும் முன்னாள் சனாதிபதி தானே. அது போதும் அதுக்கு. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தான் அங்கே ஒரு பிரஜையாக இருந்ததாலும், மனைவி, மகன் அங்கே இன்னும் பிரஜாவுரிமை கொண்டுள்ளதாலும், இலங்கை ஜனாதிபதியாக இருப்பதாலும் தனக்கும் இலகுவாக கிடைக்கும் என்று இருந்த கோத்தாவுக்கு, அமெரிக்க விசா நிராகரிக்கப்பட்டது எதிர்பார்க்கப்படாத ஒன்று. எங்கு போவது என்று தெரியாமல் சற்று குழம்பி விட்டார். போர் குற்றம் மட்டுமல்ல, அவர் அமெரிக்கா வந்தால், தமிழர், சிங்களவர்கள், இஸ்லாமியர் சகலரும், சேர்ந்தே வந்து போராட்டம் நிகழ்த்துவர் என்று ஒரு காரணமும்  உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

அதன் படி கோத்தா எந்த நியமனம், தேர்தல் தடுக்க முடியும் தானே?

கோத்தா பாவி விலகினால் ஒழிய, புதிய எவருக்கும் தேர்தல்  வழியாக  வழி இல்லை ?

ஓம் அவர் ஜனாதிபதியாக தொடரும் வரை, பதில் ஜனாதிபதி என்பது முழுக்க முழுக்க அவர் சொல்படி நடக்க வேண்டியவரே. அதுபோல் கோட்ட விரும்பிய சமயம் அவரை நீக்கவும் முடியும்.

அதே போல் இப்படி கோட்ட பதவி  விலகாமல் கொடுக்கும் பதில் ஜனாதிபதி பதவி கட்டாயம் பிரதமருக்குத்தான் கொடுக்க வேண்டியதில்லை இன்னொரு அமைச்சருக்கும் கொடுக்கலாம்.

கோட்ட பதவி விலகினால். பிரதமர் அவருக்கு முடியாவிடின் சபாநாயகர் பதில் ஜனாதிபதியாவர். 30 நாளுக்கு உள் ( அடுத்த நாளாகவும், அதே நாளாகவும் இருக்கலாம்) பாராளுமன்றம் புதிய ஜனாதிபதையை தம்மில் இருந்து தேரும். அவர் பதவி ஏற்க பதில் ஜனாதிபதி தானாக பதவி இழப்பார்.

நிச்சயமாக கோட்டா பதவி விலகாதவரை இன்னொரு ஜனாதிபதி பதவி ஏற்க முடியாது. அதே போல் அவர் ஒரு கெசெட்டின் மூலம் பதில் ஜனாதிபதியை எங்கே இருந்தபடியும் நீக்கலாம். 

ஆனால் நடைமுறையில் கோட்ட, ரணிலின் அதிகாரம் இப்போ வெறும் பேப்பர் அளவில்தான் இருப்பதாக படுகிறது.

2 hours ago, Nathamuni said:

ரணிலை நீக்கவேணும் எண்டால் எப்பவோ நீக்கி, விரும்பின ஒருத்தரை நியமித்திருக்கலாம் எல்லோ.... இந்த வினாடி கூட செய்யலாம்......

ஆனால்...... ரணில் அவர்களை பாதுகாக்க தேவை.... அதனால் தான் இழுக்கப்படுகிறது.....

ரணிலை வைத்து தம் பாதுகப்பை உறுதி செய்ய விழைகிறார் என்பதில் மாற்று கருத்து இல்லை.

2 hours ago, nedukkalapoovan said:

ஆனாலும் நரி தான் நினைச்சது போல்.. சொறீலங்காவின் இன்னாள்.. முன்னாள் சனாதிபதி ஆகிட்டுது. எனி அது செத்தாலும் முன்னாள் சனாதிபதி தானே

இல்லை பதில் ஜனாதிபதியாக மட்டும் நரி இருந்து அடுத்து வேறு ஒருவர் பாரளுமன்றத்தால் தேர்வாகி வந்தால் - நரிக்கு இந்த ஆசை நிறைவேறாது. அவர் ஜனாதிபதிகள் வரிசையில் வரமாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

தான் அங்கே ஒரு பிரஜையாக இருந்ததாலும், மனைவி, மகன் அங்கே இன்னும் பிரஜாவுரிமை கொண்டுள்ளதாலும், இலங்கை ஜனாதிபதியாக இருப்பதாலும் தனக்கும் இலகுவாக கிடைக்கும் என்று இருந்த கோத்தாவுக்கு, அமெரிக்க விசா நிராகரிக்கப்பட்டது எதிர்பார்க்கப்படாத ஒன்று. எங்கு போவது என்று தெரியாமல் சற்று குழம்பி விட்டார். போர் குற்றம் மட்டுமல்ல, அவர் அமெரிக்கா வந்தால், தமிழர், சிங்களவர்கள், இஸ்லாமியர் சகலரும், சேர்ந்தே வந்து போராட்டம் நிகழ்த்துவர் என்று ஒரு காரணமும்  உள்ளது.

உண்மையில் கோட்டா விட்டு விட்டு அமெரிக்கா ஓடுவது என்ற முடிவில்தான் இருந்துள்ளார். 13 க்கு முன் வீசா வந்து விடும் என்று சொல்லி இருப்பார்கள். அதுதான் அமெரிக்கா போய் அங்கே இருந்து ரிசைன் பண்ண யோசித்து இருக்க கூடும்.

ஆனால் அமெரிக்கா ஏன் விசா மறுத்தது என்பது புதிர்தான்.

நீங்கள் சொல்வது போல் அமெரிக்கா ரணிலை ஜனாதிபதி ஆக்கும் வரை கோட்டாவின் விசாவை தாமதிக்கிறது எண்டால் - ரணிலிடம் கொடுங்கள் - விசா தாறோம் எண்டிருப்பார்கள். 

உண்மையில் அமெரிக்கா ரணில் வருவதை விரும்புகிறது எண்டால் - இப்போ இருக்கும் நிலை (ரணில், கோட்ட இருவரும் செயலற்ற தலைவர்கள்) அமெரிக்காவின் எண்ணத்துக்கு விரோதமாக இருக்கிறதல்லவா?

சிலவேளை எகிப்தின் ஆரம்ப புரட்சியில் செய்ததை போல், இப்போ குழப்பத்தை மட்டும் உண்டு பண்ணுவோம், பின்னர் தேறி வரும் ஒரு குதிரையில் நல்ல குதிரையை வளைப்போம் என நினைகிறார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

தான் அங்கே ஒரு பிரஜையாக இருந்ததாலும், மனைவி, மகன் அங்கே இன்னும் பிரஜாவுரிமை கொண்டுள்ளதாலும், இலங்கை ஜனாதிபதியாக இருப்பதாலும் தனக்கும் இலகுவாக கிடைக்கும் என்று இருந்த கோத்தாவுக்கு, அமெரிக்க விசா நிராகரிக்கப்பட்டது எதிர்பார்க்கப்படாத ஒன்று. எங்கு போவது என்று தெரியாமல் சற்று குழம்பி விட்டார். போர் குற்றம் மட்டுமல்ல, அவர் அமெரிக்கா வந்தால், தமிழர், சிங்களவர்கள், இஸ்லாமியர் சகலரும், சேர்ந்தே வந்து போராட்டம் நிகழ்த்துவர் என்று ஒரு காரணமும்  உள்ளது.

அமெரிக்கா விசா நிராகரிக்கப்பட்டுள்ளது என்து ஊர்ஜிதமில்லாத செய்தி.

ஒரு நாட்டு ஜனாதிபதிக்கு அமெரிக்க விசா தேவையா?

அவர் ஏற்கனவே மல்ரிப்பிள் விசா எடுத்து வைத்திருக்கலாம்.

ஜனாதிபதிக்கு விசா தேவையாக இருந்தால் முன்னரேயே எடுத்திருக்கலாம்.

கடைசி நேரத்தில் ஓடிப்போய் விசா கேட்பாரா?

6 minutes ago, goshan_che said:

ஆனால் அமெரிக்கா ஏன் விசா மறுத்தது என்பது புதிர்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒரு நாட்டு ஜனாதிபதிக்கு அமெரிக்க விசா தேவையா?

ஓம்

https://travel.state.gov/content/travel/en/us-visas/other-visa-categories/visas-diplomats.html

  • கருத்துக்கள உறவுகள்

With the exception of a Head of State or Government -- who qualifies for an A visa regardless of the purpose of travel -- your position within your country’s government and your purpose of travel determine whether you need an A-1 or A-2 visa.

👆 இதில் கோட்ட A visa கேட்டிருக்க கூடும். 

கொடுப்பதில்லை என்று முறிவானல் சாட்டு கண்டுபிடிப்பது கஸ்டமா என்ன🤣.

இதுவரை A visa வில் போய் வந்த மிதப்பில் வேறு விசாக்களை எடுக்காமல் இருந்திருக்கலாம்.

இனி அவற்றுக்கு அப்பிளை பண்ணினால் கிடைக்கவும் கூடும்.

Edited by goshan_che
தவறான வியாகியானம் நீக்கம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்கா விசா நிராகரிக்கப்பட்டுள்ளது என்து ஊர்ஜிதமில்லாத செய்தி.

ஒரு நாட்டு ஜனாதிபதிக்கு அமெரிக்க விசா தேவையா?

அவர் ஏற்கனவே மல்ரிப்பிள் விசா எடுத்து வைத்திருக்கலாம்.

ஜனாதிபதிக்கு விசா தேவையாக இருந்தால் முன்னரேயே எடுத்திருக்கலாம்.

கடைசி நேரத்தில் ஓடிப்போய் விசா கேட்பாரா?

27 minutes ago, goshan_che said:

இந்த விசா நிராகரிப்பு விசயத்தில் ஊகம் தான் கூட அடிபடுகிறது.

போன செப்டெம்பரில் அமெரிக்கா போட்டு வந்தார்.... அது ஐநாவுக்கு....நியூயார்க் மட்டுமே..... ஈரான் அதிபருக்கு கூட கொடுத்திருக்கிறார்களே என்றார்கள்.

இல்லையே... அவர் கலிபோர்னியா போய் பேத்தியை பார்த்து வந்தாரே என்றவுடன்.... ஓமோம் என்றார்கள்.

ஆகவே.... விசா நிராகரிக்க சந்தர்ப்பம் குறைவு. மேலும் விசா விடயங்களில், தனிப்பட்ட கேசுகளை வெளியே சொல்வது தடை என்று தூதரகம் சொல்லி உள்ளது.

ஆகவே... அவர் பாதுகாப்பாக தான் சேருமிடம் அடையும் வரை, ராஜினாமா செய்ய மாட்டார் என்பதே சரியான நிலைப்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Nathamuni said:

ஓம் ஊகம்தான்.

ஆனால் விசா இருந்தால் ஏன் மாலைதீவு, சிங்கபூர் என அலைகிறார்?

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் இருக்கலாம்.

இன்றைக்கு அறகளையின் போக்கு கொஞ்சம் மாறுகிறது போல படுகிறது.

தேவையில்லாமல் ரூபவாகினிக்குள் புகுந்து பின்னர் வெளி வந்துள்ளனர். அதேபோல பாராளுமன்றம், சபாநாயகர் வீடு முற்றுகை முயற்சிக்கும் உள்ளேயே இருந்து எதிர்ப்பு. அதே போலத்தான் இன்று காலிமுக திடலில் நடந்த கைக்கலப்பும். ஹர்சடி சில்வா அம்பூலன்ஸ் தாக்கபட்டுள்ளது.

அறகளை பணமுள்ளோர்/பணமற்றோர் வலதுசாரி/இடதுசாரி என பிரிகிறது அல்ல பிரிக்கப்படுகிறது.

இப்படியே அதை ஒரு வன்முறை களமாக மாற்றி - ரணிலை கீரோவக்கி அவரை ஜனாதிபதியாக்கும் திட்டமாய் இருக்கலாம்.

அல்லது கோட்டவே திரும்பியும் வரலாம் (வாய்ப்பு குறைவுதான்). இதுவே அவர் ஆசிய நாடுகளில் வட்டமிட காரணமாய் இருக்கலாம்.

இதை உணர்ந்து கொண்டுதான் இன்றைய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முப்படை தளபதிகளும் கலந்து கொண்டு, அதில் ரணில் விலகவேண்டும் என்ற தீர்மானம் வந்துள்ளது.

அறகளை காரார் பாராளுமன்றை கைப்பற்றினால் - மக்கள் ஆதரவு அப்படியே படுத்துவிடும் என நினைக்கிறேன். இதை செய்யும் படி அவர்களில் ஒரு குழுவை தூண்டுவதும் அரசாக இருக்கலாம்:

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

ஓம் ஊகம்தான்.

ஆனால் விசா இருந்தால் ஏன் மாலைதீவு, சிங்கபூர் என அலைகிறார்?

தான் எங்கு போகிறார் என்பதை நாம் ஊகிக்க முடியாதவாறு, போக்கு காட்டுகிறார் என்று நினைக்கிறேன்.

அமெரிக்க விசா நிராகரிப்பு கதையும் அத்தகைய ஒன்றாக இருக்க கூடும்.

அவர் இருக்கும் இடம் தெரிந்தால், நாலு எட்டு போய் கத்தி விட்டு வரலாம் எண்டு, கட்டு சோத்துடன் கிளம்பி போவோமா இல்லையா?

எனது ஊகம், இவர், சிங்கப்பூர் போக்கு காட்டியபடி, அமெரிக்கா ரகசியமாக போய், மகன் ஒழுங்கு செய்திருக்கும் ரகசிய இடத்தில், அமெரிக்க அரசு ஒத்துழைப்புடன் ஒளிந்து வாழப்போகிறார். அதுவே அமேரிக்க - கோத்தா டீல் ஆக இருக்க கூடும்.

4 minutes ago, goshan_che said:

இப்படியும் இருக்கலாம்.

இன்றைக்கு அறகளையின் போக்கு கொஞ்சம் மாறுகிறது போல படுகிறது.

தேவையில்லாமல் ரூபவாகினிக்குள் புகுந்து பின்னர் வெளி வந்துள்ளனர். அதேபோல பாராளுமன்றம், சபாநாயகர் வீடு முற்றுகை முயற்சிக்கும் உள்ளேயே இருந்து எதிர்ப்பு. அதே போலத்தான் இன்று காலிமுக திடலில் நடந்த கைக்கலப்பும். ஹர்சடி சில்வா அம்பூலன்ஸ் தாக்கபட்டுள்ளது.

அறகளை பணமுள்ளோர்/பணமற்றோர் வலதுசாரி/இடதுசாரி என பிரிகிறது அல்ல பிரிக்கப்படுகிறது.

இப்படியே அதை ஒரு வன்முறை களமாக மாற்றி - ரணிலை கீரோவக்கி அவரை ஜனாதிபதியாக்கும் திட்டமாய் இருக்கலாம்.

அல்லது கோட்டவே திரும்பியும் வரலாம் (வாய்ப்பு குறைவுதான்). இதுவே அவர் ஆசிய நாடுகளில் வட்டமிட காரணமாய் இருக்கலாம்.

இதை உணர்ந்து கொண்டுதான் இன்றைய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முப்படை தளபதிகளும் கலந்து கொண்டு, அதில் ரணில் விலகவேண்டும் என்ற தீர்மானம் வந்துள்ளது.

அறகளை காரார் பாராளுமன்றை கைப்பற்றினால் - மக்கள் ஆதரவு அப்படியே படுத்துவிடும் என நினைக்கிறேன். இதை செய்யும் படி அவர்களில் ஒரு குழுவை தூண்டுவதும் அரசாக இருக்கலாம்:

நான் முன்னர் சொன்ன பிரேமதாச காலத்து, தும்முள்ள சந்தி போராட்டம் பிசுபிசுப்பு போலவே, இன்று நடந்த மோதல் தெரிகிறது. இப்படியே உள்ளே புகுந்து தமக்குள் அடிபட்டு, கதையை முடித்து விடுவார்களோ தெரியவில்லை.

கோத்தா ராஜினாமா கடித்தை வெளியிடுவேன் என்று, சபாநாயகரும் குழப்ப, ரணில் அடுத்து போக வேண்டும் என்று  எதிரிகட்சிகள், முப்படை தளபதிகள் தீட்டிய கத்தி.... கோத்தா ராஜினாமா செய்யாததால் அப்படியே மொட்டையாகி, உறைக்குள் போய் இருப்பது போலவே தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

ஒரு நாட்டு ஜனாதிபதிக்கு அமெரிக்க விசா தேவையா?

பொதுவாக ஓர் நாட்டுக்கு (அமெரிக்கா), இன்னோர் நாட்டில் இருந்து (சொறி லங்கா) தேவை என்றால், அது என்ன விசா வகை என்பதே.

இந்த  விசாவை  diplomatic visa என்று பொதுவாக அழைக்கப்படும். அதிலும், வகைப் படுத்தல் executive (கோசன் சொல்லிய A 1 அல்லது 2 போல), diplomatic, officials, நாட்டுக்கு நாடு சில வேறுபாடுகள் வகைப்படுத்தலில்.

இது நான் அறிந்ததில், league of nations க்கு முதலே இருந்துள்ளது. ஏன் முடியாட்சியிலும் இருந்துள்ளது.

ஏனெனில், ஒரு காலத்தில் ஓர் அரசில் இருந்து இன்னோர் அரசுக்கு, அரச பிரசாதிநிதியாக (diplomatic or official representative)  சென்றவர்கள், உணவு, சமையல் காரரையும் கூட்டி சென்றனர், ஏனெனில், சாப்பாட்டில் நஞ்சு கலக்கும் பிரச்னை இருந்த படியால். 

4 hours ago, ஈழப்பிரியன் said:

அவர் ஏற்கனவே மல்ரிப்பிள் விசா எடுத்து வைத்திருக்கலாம்.

ஜனாதிபதிக்கு விசா தேவையாக இருந்தால் முன்னரேயே எடுத்திருக்கலாம்.

பொதுவாக அரச பிரதிநிதிகளுக்கு இப்படி கொடுப்பதில்லை.

ஏனெனில், எந்த நாடு எப்போது குறிப்பிட்ட நாட்டுக்கு எதிரான போக்கு எடுக்கும், உளவு போன்ற பல பிரச்சனைகள் இருக்கிறது.

மற்றது, அரச பிரதிதகள் பாவிப்பது, vip, diplomatic, officials passports, அவை சாதரண கடவு சீட்டில்   இருந்து சலுகைகளில் மிகவும் வேறுபட்டவை. இந்த    passports,ஐ பதவியில் இருக்கும் போதே வலுவுள்ளது.

முக்கியமாக, எந்த ஓர் அரச பிரதிநிதிக்கும், தொடர்ந்த உத்தியோக பூர்வ அலுவல்கள் வேற்று அரசில்  இல்லை. 

அனால், US சரத் பொன்சேகாவிற்கு கிறீன் CARD கொடுத்ததாக ஓர் செய்தி இருக்கிறது. அது தனிப்பட்டதாக (சாதாரண கடவு சீட்டில்)  இருக்கலாம்.

4 hours ago, Nathamuni said:

இல்லையே... அவர் கலிபோர்னியா போய் பேத்தியை பார்த்து வந்தாரே என்றவுடன்.... ஓமோம் என்றார்கள்.

ஓவொரு முறையும் ஒவ்வொரு நிபந்தனைகள். 

vip, diplomatic, official business இல் தனிப்பட்ட அலுவலை சேர்ப்பதில் பிரச்னை இல்லை, அவை ஒன்றுக்கு முரண்படமால் இருந்தால்.

ஆனால் மற்ற வளம் செய்ய முடியாது என்பது வெளிப்படை. 

ஒரு காலத்தில், வெள்ளை அல்லாத ராஜதந்திரிகள் செல்வற்கு ஒரு வீதி, வெள்ளை  ராஜதந்திரிகள் செல்வதற்கு ஒரு வீதி என்று அமெரிக்கா வைத்து இருந்தது. 

ஆரிய வாதம் கதைத்த UK இல் இப்படி  இருக்கவில்லை.

இவை உதாரணங்கள்.

4 hours ago, Nathamuni said:

ஆகவே... அவர் பாதுகாப்பாக தான் சேருமிடம் அடையும் வரை, ராஜினாமா செய்ய மாட்டார் என்பதே சரியான நிலைப்பாடு.

அனால், கோத்த தனி நபராக விண்ணப்பிக்கலாம்.

அனால், அது கோதாவுக்கு பிரச்சனை என்பது வேறுவிடயம் (முக்கியமாக மனித உரிமைகள் மீறிய, யுத்த குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றம் மற்றும் அதன்  வழியாக இனப்படுகொலை சட்ட அடிப்படையில் சாத்திய கூறாவது என்ற பிரச்சனைகள்)

இதன்  மூலம் இழுக்கப்படும் சாத்தியக்கூறுகள், கிந்தியா, சோனியா க்கு அதிகம். 

அதனால், (நான் நினைக்கிறன்) கோத்தாவை பின்னின்று நடத்துவது / பாதுகாப்பது கிந்தியா. சும்மா இருந்த சோனியா வாய் திறக்க  வேண்டிய அவசியம் என்ன?  

  • கருத்துக்கள உறவுகள்

யோசித ராஜபக்‌ஷ மெல்பேர்ன் வந்த பொழுது diplomatic immunity வந்ததாக கூறப்பட்டது.. அப்ப இவர்களுக்கு ஒருத்தரும் அது கூட தரமுடியாது என்று சொல்லிவிட்டார்களா?

இல்லை இப்படி ஆசியாவிற்குள்ளேயே சுற்ற வேண்டியதா?எதுக்கும் நித்தியானந்தாவின் கைலாச நாட்டையும் கேட்டுப் பார்க்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

யோசித ராஜபக்‌ஷ மெல்பேர்ன் வந்த பொழுது diplomatic immunity வந்ததாக கூறப்பட்டது.. அப்ப இவர்களுக்கு ஒருத்தரும் அது கூட தரமுடியாது என்று சொல்லிவிட்டார்களா?

இல்லை இப்படி ஆசியாவிற்குள்ளேயே சுற்ற வேண்டியதா?எதுக்கும் நித்தியானந்தாவின் கைலாச நாட்டையும் கேட்டுப் பார்க்கலாம்

ஒரு அரசுத் தலைவரோ அல்லது வெளிவிவகார உயரதிகாரிகளோ, தாம் அதிகாரத்தில் இருக்கும்பொழுது, சர்வதேசப் பயணங்களின்போது தமக்கெதிராக அந்த நாடுகளில் பதிவுசெய்யப்படும் பொதுமக்கள், பொலீஸ் வழக்குகளிலிருந்து அவர்களை இந்தச் சட்டம் பாதுகாக்கிறது. ஆனால், இவர்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர், இந்தப் பாதுகாப்பும் இல்லாமல்ப் போய்விடுகிறது.

தனது நாட்டு மக்களால் வெறுக்கப்பட்டு, திரத்தப்படும் ஒரு தலைவரை பல நாடுகளும் ஏற்றுக்கொள்ளத் தயங்கவே செய்வார்கள். அப்படியில்லாமல், தமது கைப்பொம்மைகளாக (நீங்கள் கூறிய மார்க்கோஸ் அல்லது வரதராஜப்பெருமாள்) இருந்தவர்களுக்கு அவர்களை இயக்கிய நாடுகள் தஞ்சம் அளித்தே வருகின்றன.  

கோத்தா விடயத்தில் மாலைதீவு உதவிசெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும்கூட, சாதாரண மாலைதீவு மக்களின் எதிர்ப்பினால் அரசும் கோத்தாவைக் கைவிடவேண்டியதாயிற்று. ஆகவேதான் சர்வதேசச்சட்டங்கள் பாயமுடியாத நாடுகளில் ஒன்றைத் தெரிவுசெய்யவேண்டிய தேஎவை இவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இனிவரும் நாட்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கப்போகின்றன என்பது மட்டும் உண்மை.

ஆனால், இவை எதுவுமே நாட்டில் அல்லல்ப்படும் மக்களின் வாழ்விற்கு உதவப்போவதில்லை என்பது மட்டும் உறுதி.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரஞ்சித் said:

அப்படியில்லாமல், தமது கைப்பொம்மைகளாக (நீங்கள் கூறிய மார்க்கோஸ் அல்லது வரதராஜப்பெருமாள்) இருந்தவர்களுக்கு அவர்களை இயக்கிய நாடுகள் தஞ்சம் அளித்தே வருகின்றன.  

எனக்கும் விளங்கவில்லை. எல்லோரும் சேர்ந்தே இவர்கள் பதவிக்கு வர உதவினார்கள்.. ஆனாலும் தாங்கள் நினைத்தபடி ராஜபக்சாக்கள் நடக்கவில்லை என்றவுடன் கைவிட்டுவிட்டார்கள்.. அல்லது நாடகமாடுகிறார்கள்.. 

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா ரணில் யாப்பா 3 பேரும் சேர்ந்து நாடகமாடிக்கொண்டிருக்கிறார்கள்.ரணில் சொன்னபடி பதவி விலகியிருந்தால் போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை சுற்றி வளைத்திருக்க மாட்டார்கள்.ஒருவேளை நாடாளுமன்றம் தாக்கப்பட்டு வன்முறைகள் இடம்பெற்றால் அதற்கு ரணிலே பொறுப்பு. ரணிலிற்குப் பின்னால் அமெரிக்கா போன்ற சக்தி இருக்கின்ற காரணத்தினால் ரணில் பதவி விலகாமல் பின்னடிக்கிறார். அதேவேளை பேராட்க்காரர்களும் திசை மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. அவர்களுக்கு இடையிலும் ஏதோ ஒரு வெளிச்க்தி புகுந்துள்ளது போல்தான் தெரிகிறது. இந்தப் போராட்டங்களின் முடிவில் பொருளாதாரம் சரிலிலிருந்து மீளுமா?

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, புலவர் said:

இந்த சந்தேகம் எனக்கு நாட்கள் போக போக மிக வலுக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி வௌியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. 

குறித்த வர்த்தமானி அறிவித்தலில், தான் நாட்டில் இருந்து வௌியேறியுள்ள காலப்பகுதியில் ஜனாதிபதி பதவியில் செயற்படுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒருவரை பிரதமர் பதவிக்கு பெயரிடுமாறு பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். 

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிற்கு அவர் இதனை அறிவித்துள்ளார். 

பிரதமர் ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.