Jump to content

யாழ்ப்பாணத்து சமையல்கள் - கதைப்பம் வாங்க.

Recommended Posts

வணக்கம், இங்க கன பேருக்கு Yarl samayal எண்டு ஒரு யூடியூப் பக்கம் வச்சு இருக்க தெரியும், அந்த பக்கத்தில இது வரைக்கும் 250 க்கும் மேல உணவுகள் போட்டு இருக்கம்,  அதுல பெரும்பான்மையா யாழ்ப்பாணத்தில செய்யிற உணவுகளை எங்கட பாட்டி எப்பிடி செய்து காட்டிதந்தாவோ அதே மாதிரி செய்து காட்டிற வழக்கம். அத தனி தனி திரட்டுக்களா போடாம, ஒரு திராட்டா போடுறதுக்கு தான் இது. அதோட மட்டும் இல்லாம, உங்களுக்கு இருக்குற சந்தேகங்கள், அடுத்ததா நாங்க என்ன உணவுகள் செய்து காட்டலாம் எண்டு எல்லாம் நீங்க சொல்ல முடியும். அதே மாதிரி ஏதும் பிழைகள் விட்டாலும்  நீங்க இதுல சொல்ல முடியும், 

வாங்க ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல செய்வம்

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் சிவரதன்.
ஒரே இடத்தில்.. எல்லா செய்முறையும்  இருக்கும் போது,  
சமையல் குறிப்பை தேடி வருபவர்களுக்கு சுலபமாக கண்டுபிடிக்கக் கூடியதாக இருக்கும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலந்துரையாடலாமே..........!   😁

  • Thanks 1
Link to comment
Share on other sites

" ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!"
 
ஆடிக்கூழ் செய்முறை
 
தேவையான பொருட்கள்
 
200g பச்சை அரிசி மா - 200g Raw Rice flour
100g உழுத்தம் மா - 100g Plow flour
1 மேசைக் கரண்டி வறுத்து அரைத்த மிளகு சீரக தூள் - 10g True cardamom with sugar
1/2 மூடி தேங்காய் பால் - 1/2 coconut milk
1/4 தேங்காய் சொட்டு - 1/4 Coconut drops
150g பனங்கட்டி - 150g Panankatti
10g ஏலக்காய் வறுத்து சீனியுடன் அரைத்த - 1 Table spoon Pepper Cumin powder
100g பயறு - 100g Green gram
உப்பு - Salt
 
செய்முறை
 
1. பச்சை அரிசி மாவுடன் உளுத்தம் மாவினையும், சிறிதளவு உப்பு என்பவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
2. கலந்த கலவையில், கொஞ்சத்தினை தனி பாத்திரத்துக்குள் மாற்றவும், அதில் கொதிக்கும் தண்ணியினை விட்டு புட்டு மா பதத்திற்கு எடுக்கவும்.
3. கையில் சிறிது எண்ணெய் தடவி, குழைத்த மாவினை சிறிது சிறிது உருண்டைகளாக பிடிக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரினை கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்கும் போது வறுத்த பயறு, அதற்க்கு ஏற்ற உப்பு என்பவற்றை போட்டு மூடி நன்றாக அவிய விடவும்
5. 1 ஆம் படிமுறையில் கலந்து வைத்த கலவையில், 2,3 ஆம் தேங்காய் பாலினை விட்டு நன்றாக கலந்து கொள்ளவும். ( எந்த கட்டியும் இல்லமால் )
6. பயறு நன்றாக அவிந்த பின், சிறு சிறு உருண்டைகளை ( படிமுறை 3 ) அதனுள் போட்டு நன்றாக அவியுமட்டும் மூடி விடவும்.
7. அடுப்பினை குறைத்து விட்டு, கலந்து வைத்த மாவினை கொஞ்சம் கொஞ்சமாக பாத்திரத்தில் விட்டு கை விடாமல் கிளறவும். நாங்கள் விட்ட மா நன்றாக அவியுமட்டும் கை விடாமல் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.
8. நன்றாக அவிந்த பின் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்த தேங்காய் சொட்டினையும், பனங்கட்டியையும் உள்ளே போட்டு நன்றாக கலக்கவும்.
9. நன்றாக கலந்த பின், முதலாம் பாலினை விட்டு நன்றாக கலக்கவும். அத்துடன் மிளகு சீரக தூள், ஏலக்காய் வறுத்து சீனியுடன் அரைத்த கலவை என்பவற்றை சேர்க்கவும்.
10. மெல்லிய ஒரு கொதி வந்ததும் அடுப்பை நிறுத்தவும்.
 
சுவையான ஆடிக்கூழ் தயார், நீங்களும் இதே போல செய்து குடும்பத்துடன் சுவைத்து மகிழ்ந்திடுங்கள்.
 
யாரெல்லாம் ஆடி கூழ் செய்தீங்க.. காணொளி விளக்கம். .
 
  • Like 2
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாரம்பரிய யாழ்ப்பாணத்து மண் சட்டி ஒட்டி மீன் குழம்பு | Traditional jaffna style clay pot fish curry

யாரெல்லாம் இப்பிடி மீன் குழம்பு செய்து சாப்பிட்டு இருக்கீறீங்க.. சொல்லுங்க பாப்பம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/7/2022 at 09:56, sivarathan1 said:

பாரம்பரிய யாழ்ப்பாணத்து மண் சட்டி ஒட்டி மீன் குழம்பு | Traditional jaffna style clay pot fish curry

யாரெல்லாம் இப்பிடி மீன் குழம்பு செய்து சாப்பிட்டு இருக்கீறீங்க.. சொல்லுங்க பாப்பம். 

இப்படித்தான் எங்கள் வீட்டில் அம்மா செய்வது. அந்த ருசி இப்பவும் நினைவுகளில் இருக்குது. 

ஆனால்.. இப்ப எல்லாம் என்னென்னவோ முறையில் வெளிநாட்டில் சமைக்கினம் (இந்திய முறையை யு ரியுப்பில் பார்த்து).. ஆனால்... ஊர் உருசி வருகுதே இல்லை.

மேலும்.. அண்மையில் ஊருக்கு வந்த போது உங்கள் உணவகத்திற்கு வரனும் என்று இருந்தது. பின்னர் சரியான வேளை அமையவில்லை.

உங்கள் உணவகம் திருநெல்வேலி சிவன் கோவிலுக்கு அண்மையில் உள்ளது தானே..?! மக்களில் அநேகர் இதனை அறிந்திருக்கவில்லை இன்னும். அறிந்தவர்கள் நிச்சயம் போகச் சொன்னார்கள். உங்களை கொஞ்சம் அதிகம் மக்களுக்கு அறிமுகம் செய்வது நல்லம். 

  • Like 1
Link to comment
Share on other sites

On 3/8/2022 at 01:48, nedukkalapoovan said:

மிக்கநன்றி , யாழ்ப்பாண பக்கம் வந்தா எல்லாரும் கட்டாயம் வாங்கோ. . எனக்கு முதலே  சொல்லுங்கோ,, எல்லாரையும் சிறப்பா கவனித்து அனுப்ப முடியும். ❤️❤️

செய்து உடனடியாவே சாப்பிட கூடிய பச்சை மிளகாய் ஊறுகாய் எப்பிடி செய்யிற எண்டு தான் இண்டைக்கு நாம பாக்க போறம், நீங்களும் இப்பிடி செய்து மரக்கறி சாப்பாட்டோட சாப்பிடுங்க, விடவே மாட்டீங்க. இத மாதிரி செய்து பாத்து சொல்லுங்கோ எப்பிடி வந்த எண்டு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்து உடனேயே சாப்பிடும் ஊறுகாய் இணைப்புக்கு நன்றி சிவரதன்.....!  👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இண்டைக்கு நாம இன்னொரு ஊறுகாய் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க, உள்ளி வச்சு உள்ளி ஊறுகாய். 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, sivarathan1 said:

இண்டைக்கு நாம இன்னொரு ஊறுகாய் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க, உள்ளி வச்சு உள்ளி ஊறுகாய். 

உள்ளி, மருத்துவ குணம் நிறைந்தது.
ஊறுகாயும், பார்க்க... அழகாக உள்ளது. 
ஒரு முறை செய்து பார்க்க வேண்டும்.
பகிர்விற்கு... நன்றி சிவரதன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  @sivarathan1
சிவப்பு /  வெள்ளை...  இடியப்பம் லேசாக பிழிய, 
மா... என்ன பதத்தில்  குழைக்க வேண்டும் என்று ஒரு பதிவை போடுங்கள்.
நாங்கள் குழைக்கிற இடியப்ப மா... பிழிய, fitness  செய்தால்தான்... பிழிய முடியும்.

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

  @sivarathan1
சிவப்பு /  வெள்ளை...  இடியப்பம் லேசாக பிழிய, 
மா... என்ன பதத்தில்  குழைக்க வேண்டும் என்று ஒரு பதிவை போடுங்கள்.
நாங்கள் குழைக்கிற இடியப்ப மா... பிழிய, fitness  செய்தால்தான்... பிழிய முடியும்.

இது ரெம்ப அநியாயம் சிறியர்.....ஏற்கனவே உங்களுக்கு இது சம்பந்தமாக விளக்கமும் தந்து வீடியோவும் போட்டு நீங்களும் செய்துபார்த்து சரியாய் இருக்கு என்று சொன்னீர்கள்.....அதற்குள் மறந்துவிட்டதா........!  🤔

சிவராதன் சொல்லாதையுங்கோ.......சே.....இவருக்கு எங்க தெரியப்போகுது.......ஆச்சி சொல்ல வேண்டாம்........!  😂

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, suvy said:

இது ரெம்ப அநியாயம் சிறியர்.....ஏற்கனவே உங்களுக்கு இது சம்பந்தமாக விளக்கமும் தந்து வீடியோவும் போட்டு நீங்களும் செய்துபார்த்து சரியாய் இருக்கு என்று சொன்னீர்கள்.....அதற்குள் மறந்துவிட்டதா........!  🤔

சுவியர்... இந்தப் பதிவை போடும் போது, உங்களைத்தான் நினைத்தனான். 😁
நாங்கள், எப்பவாவது இருந்திட்டு இடியப்பம் அவிப்பதால்..
நீங்கள் சொல்லித் தந்த... பதத்தையும், பதிவையும் மறந்து போனோம்.  🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, suvy said:

சிவராதன் சொல்லாதையுங்கோ.......சே.....இவருக்கு எங்க தெரியப்போகுது.......ஆச்சி சொல்ல வேண்டாம்........!  😂

சுவியர்...  நீங்கள் முன்பு சொன்னமாதிரி, சுட்டு ஆறிய... நகச் சூட்டு  நீரில்,
இடியப்பத்துக்கு மா குளித்தோம், அந்த மாதிரி இலேசாக இடியப்பம் புளியக் கூடியதாக உள்ளது.
வாழ்க்கையில்... சிரமப் படாமல், இடியப்பம் புளிந்தது.. இண்டைக்குத் தான்.  👍 🥰

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சிரமப் படாமல், இடியப்பம் புளிந்தது.. இண்டைக்குத் தான்.

கனடா இடியப்பம் மாதிரி நல்ல மென்மையாக இருக்குமா சிறித்தம்பி?  😁
(soft idiyappam):cool:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 25/8/2022 at 15:27, தமிழ் சிறி said:

  @sivarathan1
சிவப்பு /  வெள்ளை...  இடியப்பம் லேசாக பிழிய, 
மா... என்ன பதத்தில்  குழைக்க வேண்டும் என்று ஒரு பதிவை போடுங்கள்.
நாங்கள் குழைக்கிற இடியப்ப மா... பிழிய, fitness  செய்தால்தான்... பிழிய முடியும்.

அதுக்கு என்ன மிக விரைவில பதிவேற்றி விடுறம்.. 

On 25/8/2022 at 15:40, suvy said:

இது ரெம்ப அநியாயம் சிறியர்.....ஏற்கனவே உங்களுக்கு இது சம்பந்தமாக விளக்கமும் தந்து வீடியோவும் போட்டு நீங்களும் செய்துபார்த்து சரியாய் இருக்கு என்று சொன்னீர்கள்.....அதற்குள் மறந்துவிட்டதா........!  🤔

சிவராதன் சொல்லாதையுங்கோ.......சே.....இவருக்கு எங்க தெரியப்போகுது.......ஆச்சி சொல்ல வேண்டாம்........!  😂

On 26/8/2022 at 16:59, குமாரசாமி said:

கனடா இடியப்பம் மாதிரி நல்ல மென்மையாக இருக்குமா சிறித்தம்பி?  😁
(soft idiyappam):cool:

அட ஒரு உள்ளூர் கலகத்த உருவாக்கி விட்டம் போல... நாராயணா நாராயணா... 🤣

எங்க பாட்டி சம்பியா நாட்டுக்கு போய் இருந்த போது அங்க பழகி எங்களுக்கு காட்டி தந்த ஒரு சம்பல் இது. புட்டு சோறு ஓட சாப்பிட நல்லா இருக்கும். என்க வீட்ட பழுத்த மிளகாய் இருந்தா இப்பிடி செய்து நல்ல கண்ணாடி போத்தலுக்கிள்ள போட்டு வைப்பம். 2 வாரம் மட்டும் இருக்கும். நீங்களும் செய்து பாருங்க. பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, sivarathan1 said:

எங்க பாட்டி சம்பியா நாட்டுக்கு போய் இருந்த போது அங்க பழகி எங்களுக்கு காட்டி தந்த ஒரு சம்பல் இது. புட்டு சோறு ஓட சாப்பிட நல்லா இருக்கும். என்க வீட்ட பழுத்த மிளகாய் இருந்தா இப்பிடி செய்து நல்ல கண்ணாடி போத்தலுக்கிள்ள போட்டு வைப்பம். 2 வாரம் மட்டும் இருக்கும். நீங்களும் செய்து பாருங்க. பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.

நல்லாத் தான் இருக்கு.

செய்முறைக்கும் இணைப்புக்கும் நன்றி @sivarathan1.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டுக்கு போனால் அந்த நாட்டு உணவு வகை ஒன்றை செய்யப் பழகிக் கொண்டு வரவேண்டும்......நல்லாய் இருக்கு......நன்றி சிவரதன் ......!   👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, sivarathan1 said:

அதுக்கு என்ன மிக விரைவில பதிவேற்றி விடுறம்.. 

அட ஒரு உள்ளூர் கலகத்த உருவாக்கி விட்டம் போல... நாராயணா நாராயணா... 🤣

எங்க பாட்டி சம்பியா நாட்டுக்கு போய் இருந்த போது அங்க பழகி எங்களுக்கு காட்டி தந்த ஒரு சம்பல் இது. புட்டு சோறு ஓட சாப்பிட நல்லா இருக்கும். என்க வீட்ட பழுத்த மிளகாய் இருந்தா இப்பிடி செய்து நல்ல கண்ணாடி போத்தலுக்கிள்ள போட்டு வைப்பம். 2 வாரம் மட்டும் இருக்கும். நீங்களும் செய்து பாருங்க. பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.

வித்தியாசமான மொரீசியஸ் சம்பல். மிளகாய்ப் பழம் கிடைத்தால் செய்து பார்க்க வேண்டும்.
இணைப்பிற்கு நன்றி சிவரதன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

கருவாடு குழம்பு வாசத்துக்கும் சுவைக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாலமே இருக்கு, நாங்க இண்டைக்கு இந்த கிராமத்தில செய்யிற மாதிரி இந்த கருவாடு வச்சு ஒரு குழம்பு எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க. நீங்களும் இத மாதிரி செய்யுங்க. உங்க தெருவுக்கே இந்த வாசம் வீசும். செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, sivarathan1 said:

கருவாடு குழம்பு வாசத்துக்கும் சுவைக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாலமே இருக்கு, நாங்க இண்டைக்கு இந்த கிராமத்தில செய்யிற மாதிரி இந்த கருவாடு வச்சு ஒரு குழம்பு எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க. நீங்களும் இத மாதிரி செய்யுங்க. உங்க தெருவுக்கே இந்த வாசம் வீசும். செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க.

இணைப்பிற்கு… நன்றி சிவரதன். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

2, 3 வயசு பிள்ளைகள் இருந்தா அவர்களுக்கு ஆரோக்கியமான ஒரு கறி எப்பிடி செய்வம் எண்டு பாப்பம் வாங்க. இப்பிடி செய்தா அவர்களும் விரும்பி சாப்பிடுவதோட உடம்புக்கும் நல்ல சத்தும் கிடைக்கும். நீங்களும் செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க. இத மாதிரி வேற குழந்தைகளுக்கு குடுக்கிற உணவுகள் எப்பிடி செய்யணும் எண்டா கீழ சொல்லுங்கோ.

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, sivarathan1 said:

2, 3 வயசு பிள்ளைகள் இருந்தா அவர்களுக்கு ஆரோக்கியமான ஒரு கறி எப்பிடி செய்வம் எண்டு பாப்பம் வாங்க. இப்பிடி செய்தா அவர்களும் விரும்பி சாப்பிடுவதோட உடம்புக்கும் நல்ல சத்தும் கிடைக்கும். நீங்களும் செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க. இத மாதிரி வேற குழந்தைகளுக்கு குடுக்கிற உணவுகள் எப்பிடி செய்யணும் எண்டா கீழ சொல்லுங்கோ.

குழந்தைகளுக்கு சமைக்கிற மாதிரி.... 
பல்லுப் போன, கிழவர்களுக்கு எப்படி சமைப்பது... 
என்ற, சமையல்  குறிப்பையும் தாருங்களேன். 
அவங்களும்... பாவமில்லையா....
(சும்மா பகிடிக்கு, கோவிக்காதேங்கோ, சிவரதன்.)   😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.