Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரணில் அரசியல் அனுபவம் மிக்கவர், ஜனாதிபதி பதவிக்கும்.. அவரே சிறந்தவர் – ஆளும்கட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை இம்மாத இறுதியில் நிறைவடையும்- பிரதமர் ரணில்

ரணில் அரசியல் அனுபவம் மிக்கவர், ஜனாதிபதி பதவிக்கும்.. அவரே சிறந்தவர் – ஆளும்கட்சி

ஜனாதிபதி பதவிக்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஆளும்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்க இதுவரை தனது வேட்புமனுவை அறிவிக்காவிட்டாலும், நாட்டின் அடுத்த ஜனாதிபதிக்கான போட்டியில் அவர் களமிறங்குவார் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அந்தவகையில் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு புதன்கிழமை நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு நியமித்தால், சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் இலக்கை அடைய முடியாது என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நாடாளுமன்ற ஒருவர் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பொதுஜன பெரமுனவின் அடிப்படைக் கொள்கைக்கு இது ஒரு சவால் என சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

இருப்பினும் புதிய அபிவிருத்தியை கருத்தில் கொண்டு, அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில், பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அனுபவம், சர்வதேச உறவுகள் மற்றும் திறமைகளை கருத்திற்கொண்டு அவர் நாட்டை வழிநடத்துவதற்கு சரியானவர் என அவர்கள் கருதுவதாக அவர் கூறினார்.

நீண்ட கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1291289

  • கருத்துக்கள உறவுகள்

ஒழுங்கான அரசியல் சட்டம் இருந்தால் எந்த கழுதையும் ஆட்சி செய்யும்....
புத்தருக்கு தெரு தெருவாக சிலை வைப்பதை விட புத்தரின் சிந்தனையில் 10வீதமாவது சிங்கள ஆட்சியாளர்களுக்கு இருந்தால் போதுமானது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, தமிழ் சிறி said:

ரணில் அரசியல் அனுபவம் மிக்கவர், ஜனாதிபதி பதவிக்கும்.. அவரே சிறந்தவர் – ஆளும்கட்சி

அண்மையில் நடந்த போராட்டங்கள் அனைத்தும் நாம் சிங்களவர் என்பதையே  மீண்டும் உணர்த்தி நிற்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

ரணில் அரசியல் அனுபவம் மிக்கவர், ஜனாதிபதி பதவிக்கும்.. அவரே சிறந்தவர் – ஆளும்கட்சி

மக்கள் அப்படி நினைக்கவில்லை, அவரது கடந்தகால அரசியலும் அதனை நிரூபிக்கவுமில்லை. தமிழரின் முதுகில் குத்தியதைவிட அதையே தாங்களும் எதிர்பார்க்கிறீர்கள். ஒருவரை ஓடஓட விரட்டியாச்சு இனி அடுத்தவருக்கு சந்தர்ப்பம் அளிப்பதற்கு மாலை அணிவிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தெரிவில் ரணிலை ஆதரிக்க பொதுஜன பெரமுன தீர்மானிக்கவில்லை - அலிசப்ரி

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி தெரிவின்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த தீர்மானமும் எடுக்கவில்லை.

19ஆம் திகதியே அதுதொடர்பில் கலந்துரையாட இருக்கின்றோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதி அமைச்சருமான அலிசப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வு நிறைவடைந்த பின்னர் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பிலான வேட்புமனு எதிர்வரும் 19ஆம் திகதியே இடம்பெற இருக்கின்றது. வேட்புமனு செலுத்திய பின்னர் அதுதொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுப்போம்.

என்றாலும் ஜனாதிபதி தெரிவில் எந்த வேட்பாளலை தெரிவுசெய்வது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இதுவரை எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்றே நினைக்கின்றேன்.

அத்துடன் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தெரிவுசெய்ய தீர்மானித்திருப்பதாக கட்சியின் செயலாளர் தெரிவித்தமை தொடர்பில் எனக்கு தெரியாது.

கட்சிக்குள் இருப்பவர்களுக்கு தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கலாம். என்றாலும் கட்சியாக இதுவரை அவ்வாறானதொரு தீர்மானம் எடுத்திருப்பது குறித்து எனக்கு தெரியாது. 19ஆம் திகதியே இதுதொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கும் என நினைக்கின்றேன் என்றார்.
 

 

https://www.virakesari.lk/article/131608

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் மக்களிடம் சென்றால் போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

இவை இப்படிச் சொல்லினம்..

பிபிசி இப்படிச் சொல்லுது..

A six-time prime minister who has never completed any of his terms, tainted by corruption scandals during his time in office, Mr Wickremesinghe has a flawed track record to say the least.

 

But Mr Wickremesinghe has vowed to follow the constitutional process, and will remain in power until parliament votes in a new president on Wednesday.

Many believe he could throw his hat in the ring and possibly win with the support of the Rajapaksas' ruling Sri Lanka People's Front party (SLPP).

ஆனால் போராட்டக்களத்தில் நிலைமை இப்படி..

Last Wednesday, thousands of Sri Lankans stormed the prime minister's office. At Galle Face Green, where the slogan "Gota Go Home" has dominated for months, the refrain is morphing to "Ranil Go Home".

https://www.bbc.co.uk/news/world-asia-62191735

  • கருத்துக்கள உறவுகள்
On 16/7/2022 at 15:32, தமிழ் சிறி said:

ரணில் அரசியல் அனுபவம் மிக்கவர், ஜனாதிபதி பதவிக்கும்.. அவரே சிறந்தவர் – ஆளும்கட்சி

ரணிலை பப்பா மரத்தில ஏத்தி, விழுத்தி, எழுந்திருக்க முடியாமல் முறிக்கிற திட்டம் போலத் தெரிகிறது!

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, satan said:

ரணிலை பப்பா மரத்தில ஏத்தி, விழுத்தி, எழுந்திருக்க முடியாமல் முறிக்கிற திட்டம் போலத் தெரிகிறது!

 

9 hours ago, satan said:

மக்கள் அப்படி நினைக்கவில்லை, அவரது கடந்தகால அரசியலும் அதனை நிரூபிக்கவுமில்லை. தமிழரின் முதுகில் குத்தியதைவிட அதையே தாங்களும் எதிர்பார்க்கிறீர்கள். ஒருவரை ஓடஓட விரட்டியாச்சு இனி அடுத்தவருக்கு சந்தர்ப்பம் அளிப்பதற்கு மாலை அணிவிக்கிறார்கள்.

ராஜபக்சேக்கள் இவரை நம்புகிற அளவுக்கு கயறு கொடுத்திருக்கிறார்.....

ஏறி உக்காந்ததும், அவர்களுக்கும் முதுகில் குத்துவார்....

கடந்த தேர்தலில் தோற்றுப் போன, போதும் அரசியல் என்று ஒதுங்கி இருந்த நரியாரை...... சீனாக்கார உள்நுழைவுடன், பல மாதங்களின் பின், இறக்கியது, இந்திய மேலை நாடுகள்.

நாம் நரியாரை நம்புகிறோமே, இல்லையோ, இந்தியாவை நம்புகிறோமே இல்லையோ, மேலை நாடுகளை நம்பலாம்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Nathamuni said:

ராஜபக்சேக்கள் இவரை நம்புகிற அளவுக்கு கயறு கொடுத்திருக்கிறார்.....

ஏறி உக்காந்ததும், அவர்களுக்கும் முதுகில் குத்துவார்....

இலங்கைக்கு என்றொரு தலைவிதி இருக்கு......அதை யாராலும் எதுவும் செய்ய முடியாது.

Ist möglicherweise ein Cartoon

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text that says 'Google sri lanka prime minister All News Images Google Videos Maps sri lanka president Book SriLanka All Prime Images News Videos Maps Books Sri Lanka President Ranil Wickremesinghe Since2022 Ranil Wickremesinghe lankans Google பிச்சமளி சோதிக்காதங்கடா MEME oglePly'

கூகிள்.... ஸ்ரீலங்காவின் பிரதமர் யார்?
ரணில் விக்கிரமசிங்க.

கூகிள்.... ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி யார்?
ரணில் விக்கிரமசிங்க.

கூகிள் மைண்ட் வாய்ஸ்: என்னை சோதிக்காதிங்கடா...  😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.