Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனின் கருத்தும் வியாக்கியானமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் கருத்தும் வியாக்கியானமும்

சுமந்திரனின் கருத்தும் வியாக்கியானமும் (வாக்கு மூலம் – 23) 

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 

எதிர்கால அரசை அமைக்கும் உரிமை ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணிக்குக் கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, 

ஜனாதிபதியாகப் பதவி வகித்த கோட்டபய ராஜபக்சே மக்கள் ஆணையை இழந்ததைப் போலவே அவரது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் மக்கள் ஆணையை இழந்துள்ளது. 

எனவே, நாட்டின் எதிர்கால அரசைஅமைப்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினருக்குத் தமது நாடாளுமன்றப் பெரும்பான்மையை உபயோகிக்கும் உரிமை கிடையாது’ (காலைக்கதிர் 15.07.2022 மின்னிதழ் மாலைப் பதிப்பு) 

இப்படி எந்தச் சட்டப் புத்தகத்தில் இருக்கிறது என்ற கேள்வியைச் சுமந்திரனிடம் எழுப்பும் அதேவேளை, சட்ட வரம்புகளுக்கு உட்படாத இப்படியான சுமந்திரனின் தன்னிச்சையான வியாக்கியானங்களால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மைகள் உண்டா? சுமந்திரன் சொல்வது எல்லாம் ‘வேத வாக்கு’ ஆகிவிடுமா? 

சுமந்திரனின் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் போக்குகளைப் பார்த்தால் தமிழ்த் தேசிய அரசியல் இலக்குகளை மறந்துவிட்டுத் தனது சொந்த அரசியல் எதிர்காலத்திற்கான அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்றினை வைத்துக்கொண்டு தன்னிச்சையாகச் செயல்படுவது மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் ‘முந்திரிக்கொட்டை’ போல் முந்திக்கொண்டு ‘வித்துவக் காய்ச்சல்’ காரணமாக ‘அவசரக் குடுக்கை’ யாகவும் ‘அதிகப் பிரசங்கித்தனம்’ ஆகவும் நடந்து கொள்வதாகவே படுகிறது. இவரைக் குறித்துத் தமிழ் மக்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது. இவர் மீதான கட்டுப்பாட்டைத் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இழந்துவிட்டன போல்தான் தெரிகிறது. 

கடந்த பத்திகள் பலவற்றில் அவ்வப்போது சுமந்திரனின் அரசியல் நடத்தைகளைக் குறிப்பிட்டு, சுமந்திரன் தமிழ் மக்களுக்காக அரசியல் செய்கிறாரா? அல்லது ஐக்கிய மக்கள் சக்திக்கு – அதன் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு அரசியல் செய்கிறாரா? என்ற கேள்வியும் எழுப்பியிருந்தேன். 

இதனை ஊர்ஜிதம் செய்வது போன்று ‘ஈழநாடு’ பத்திரிகை தனது 26.06.2022 வாரமலரில் ‘தமிழ் அரசியல்வாதி ஒருவரினால் ஐக்கிய மக்கள் சக்திக்குள் குழப்பம்!’ எனத் தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் அரசியல்வாதியின் பெயர் குறிப்பிடாமல் ஈழநாடு வெளியிட்டுள்ள செய்தியில் உள்ள முக்கியமான பகுதிகளை அதில் உள்ளபடி அப்படியே பதிவிடுகிறேன். 

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்திற்கு மாத்திரமன்றி, அந்தக் கட்சியின் முக்கிய உள்ளகக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளும் இந்த தமிழ்அரசியல்வாதி, அந்தக் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவை சிலமுக்கிய முடிவுகளை எடுக்க தூண்டுவதுடன், அந்தமுடிவுகளையே கட்சி செயல்படுத்தவும் வேண்டும் என கட்சியின் ஏனைய தலைவர்களை வற்புறுத்தி வருவதாகவும் மேற்படி தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன’ 

‘இதே போலவே கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்திலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமாக செயல்பட்ட இந்த அரசியல்வாதி, ஐக்கிய தேசியக்கட்சியின் உள் விவகாரங்களிலும் தலையிட்டு, பிரதமர் ரணில் மீது கடுமையாக செல்வாக்குச் செலுத்த முற்பட்டார் என்றும், அதன் விளைவாக ஐக்கிய தேசியக்கட்சியின் வீழ்ச்சிக்கே அவர் வழிவகுத்தார் என்றும் சுட்டிக்காட்டுகின்ற ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்கள், ஆனாலும் இறுதிகாலத்தில் சுதாகரித்துக் கொண்ட பிரதமர் ரணில் மேற்படி தமிழ் அரசியல்வாதியை ஓரங்கட்டினார் என்பதையும் தமது தற்போதைய தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இப்போது நினைவூட்டுவதாகவும் தென்னிலங்கைச் செய்திகள் மேலும் கசிகின்றன.’ 

 ‘ஈழநாடு’ பத்திரிகை குறிப்பிடும் மேற்படி அரசியல்வாதி சுமந்திரன்தான் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு வெகுநேரம் எடுக்காது. 

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் சிலவற்றை ஓரங்கட்டி- பங்காளிக் கட்சிகளைப் பகிரங்கமாக அரசியல் மேடைகளிலும் ஊடகங்களிலும் விமர்சித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியத்தைச் சிதறடிப்பதில் சுமந்திரனுக்குப் பாரிய பங்குண்டு என்றே தமிழ் அரசியல் பொது வெளியில் பரவலான கருத்துண்டு. 

 சுமந்திரனின் அரசியலைப் பொறுத்தவரை அவரது அடுத்த இலக்கு தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவதும் மூப்படைந்துள்ள இரா.சம்பந்தனின் மரணத்திற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தையும் கைப்பற்றிப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலைத் தான் தனி நபர் குத்தகைக்கு எடுப்பதே என்பதைச் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. 

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை செய்யும் சுமந்திரன் போன்ற வாய்ச்சொல் வீரர்களையிட்டுத் தமிழ் மக்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருக்கவேண்டும். தற்போது தமிழ்த் தேசிய அரசியல் என்று கூறிக் கொண்டு இப்படியான வாய்ச்சொல் வீரர்களாகவே அதிகமானவர்கள் வலம் வருகிறார்கள். 

தமிழ்த் தேசிய அரசியலிலும்- தமிழர்களின் அரசியல் கலாசாரத்திலும் பாரிய ‘மாற்றம்’ நிகழும் வகையில் தமிழர்களின் அரசியல் சிந்தனைகள் இது காலவரையிலான மரபு வழித் தேர்தல் அரசியலிலிருந்து விடுபட்டுப் புதிய திசை நோக்கிச் செல்ல வேண்டும். அப்போதுதான் தமிழர் அரசியலில் சுமந்திரன் போன்ற ‘சுயநலமி’ கள் நுழைவது தடுக்கப்படும். தமிழ்த் தேசிய அரசியல் 180 பாகைக் கோணத்தினால் திசை திரும்ப வேண்டிய தருணம் இதுவாகும். புதியதோர் அரசியல் தலைமையையும் புதியதோர் அரசியல் கலாசாரத்தையும் தமிழர் அரசியல் வேண்டி நிற்கிறது. 
 
https://arangamnews.com/?p=7920

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

சுமந்திரனின் சுத்து மாத்துக்களை, கிழித்து  தொங்க விட்ட  நல்ல ஒரு கட்டுரை.
நேரம் ஒதுக்கி, கட்டாயம் இதனை படியுங்கள்.
இணைப்பிற்கு நன்றி...கிருபன் ஜீ. 

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையின் அடிநாதமே இதுதான். 👇

““”சுமந்திரனின் அரசியலைப் பொறுத்தவரை அவரது அடுத்த இலக்கு தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவதும் மூப்படைந்துள்ள இரா.சம்பந்தனின் மரணத்திற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தையும் கைப்பற்றிப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலைத் தான்தனி நபர் குத்தகைக்கு எடுப்பதே என்பதைச்சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. “”

சுமந்திரனை மூன்று  பகுதியினர் அறவே வெறுக்கின்றனர். 

1) இந்தியா 

இந்தியாவிற்கு சுமந்திரன் அமெரிக்காவின் முகவர், கிறீத்துவர் என்கின்ற காரணங்களுக்காக அவரை வெறுக்கின்றது

2) அதிதீவிர தமிழ்த் தேசியவாதிகள்.  

இவர்கள் சுமந்திரன் தமிழ்த் தேசிய உணர்வை சிதைத்துவிடுவார் என்கின்ற பயம்  காரணமாக அவரை வெறுக்கின்றனர். இந்தப் பகுதியினரில் மிக மிகப் பெரிய பங்கினர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர்.

3) அதி தீவிர, சாதி சமய பற்றாளர்கள். 

இவர்கள் சுமந்திரனை வெறுப்பதற்கான காரணத்தை புரியVAக்க வேண்டிய தேவை இல்லை.

சுமந்திரன் மட்டுமல்ல, யார் வந்தாலும் தமிழ்த் தேசிய அரசியல் முன்புபோல  எல்லோருடனும் முரண்டு பிடிப்பதாய் இனிமேலும் தொடர முடியாது. 

நாம் மாற்றத்திற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Kapithan said:

”சுமந்திரனின் அரசியலைப் பொறுத்தவரை அவரது அடுத்த இலக்கு தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவதும் மூப்படைந்துள்ள இரா.சம்பந்தனின் மரணத்திற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தையும் கைப்பற்றிப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலைத் தான்தனி நபர் குத்தகைக்கு எடுப்பதே என்பதைச்சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. “”

அத்துடன் தமிழரசு கட்சி அஸ்தமனமாகும். அதன் பின் பல புதிய முகங்களுடன் நல்ல திருப்பங்கள் ஏற்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

கட்டுரையின் அடிநாதமே இதுதான். 👇

““”சுமந்திரனின் அரசியலைப் பொறுத்தவரை அவரது அடுத்த இலக்கு தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவதும் மூப்படைந்துள்ள இரா.சம்பந்தனின் மரணத்திற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தையும் கைப்பற்றிப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலைத் தான்தனி நபர் குத்தகைக்கு எடுப்பதே என்பதைச்சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. “”

சுமந்திரனை மூன்று  பகுதியினர் அறவே வெறுக்கின்றனர். 

1) இந்தியா 

இந்தியாவிற்கு சுமந்திரன் அமெரிக்காவின் முகவர், கிறீத்துவர் என்கின்ற காரணங்களுக்காக அவரை வெறுக்கின்றது

2) அதிதீவிர தமிழ்த் தேசியவாதிகள்.  

இவர்கள் சுமந்திரன் தமிழ்த் தேசிய உணர்வை சிதைத்துவிடுவார் என்கின்ற பயம்  காரணமாக அவரை வெறுக்கின்றனர். இந்தப் பகுதியினரில் மிக மிகப் பெரிய பங்கினர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர்.

3) அதி தீவிர, சாதி சமய பற்றாளர்கள். 

இவர்கள் சுமந்திரனை வெறுப்பதற்கான காரணத்தை புரியVAக்க வேண்டிய தேவை இல்லை.

சுமந்திரன் மட்டுமல்ல, யார் வந்தாலும் தமிழ்த் தேசிய அரசியல் முன்புபோல  எல்லோருடனும் முரண்டு பிடிப்பதாய் இனிமேலும் தொடர முடியாது. 

நாம் மாற்றத்திற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். 

உங்களின் ஒன்றும் மூன்றாவதும் ஒரே கருத்து திரும்ப திரும்ப சொல்லியும் விளங்காத ஆட்கள் போல் சமையத்தை இழுப்பது   சும் விசுவாசிகளின் கடைசி ஆயுதம் சமயம் ஒன்றுதான் அதை விட்டு வேறு ஏதாவது சும் செய்த நாலு நல்ல விடயம்களை சொல்லி கருத்தாடுவது நல்லது அது முடியாது தமிழர்களுக்கு ஒரு நல்ல விடயம் கூட சும்மால் செய்யப்படவில்லை என்பதே உண்மை .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

1) உங்களின் ஒன்றும் மூன்றாவதும் ஒரே கருத்து

2)திரும்ப திரும்ப சொல்லியும் விளங்காத ஆட்கள் போல் சமையத்தை இழுப்பது   சும் விசுவாசிகளின் கடைசி ஆயுதம்

3)சமயம் ஒன்றுதான் அதை விட்டு வேறு ஏதாவது சும் செய்த நாலு நல்ல விடயம்களை சொல்லி கருத்தாடுவது நல்லது அது முடியாது

4)தமிழர்களுக்கு ஒரு நல்ல விடயம் கூட சும்மால் செய்யப்படவில்லை என்பதே உண்மை .

பெருமாள் 

1)இந்தியாவும், இலங்கைத் தமிழர்களில் ஒரு பகுதியினரும் (மிகவும் சிறிய பகுதியினர்) ஒன்றல்ல. 

2) சாதாரண பொதுமக்கள் சமயத்தை இழுப்பதில்லை. எல்லா  சைவ/கிறீத்துவ சமயத்தவரும் சமய வேறுபாடு பார்ப்பவர்கள் என்றில்லை.  குறைவான ஆட்கள்தான் சமயத்தை இழுப்பவர்கள். சுமந்திரனுக்கு எதிராக சமயத்தை முன்வைப்பவர்கள் இந்தச் சிறுபான்மையினரே. அவர்களிடத்தில் அதிகார பலம், பண பலம் இருக்கிறது. இது உங்களுக்குத் தெரியாததல்ல. நீங்கள் விதண்டாவாதமாக இதை மறுக்கிறீர்கள்.

இவற்றை நான் 1990களிலிருந்து (பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நாட்களிலிருந்து) கண்கூடாகப் பார்த்தும் கேட்டும் , அனுபவப்பட்டும் வருகிறேன். இதை மறுக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

3+4) நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம். அதை நான் ஏற்கவோ மறுக்கவோ போவதில்லை. 

மேலே எழுதப்பட்டுள்ள கட்டுரை சமயத்தை அடிப்படையாகக் கொண்டு சுமந்திரனுக்கு எதிராக எழுதப்பட்டதாக நான் கருதவில்லை. 

இந்தியச் சார்பு நிலையில் நின்று, சுமந்திரனுக்கு எதிராக  எழுதப்பட்டுள்ளது எனக் கருதுகிறேன். 

2 hours ago, குமாரசாமி said:

அத்துடன் தமிழரசு கட்சி அஸ்தமனமாகும். அதன் பின் பல புதிய முகங்களுடன் நல்ல திருப்பங்கள் ஏற்படலாம்.

அஸ்தமனமாகும்.

புதிய சிந்தனைகள் இரு பகுதியினரிடம் இருந்தும் மேலெழ வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

பெருமாள் 

1)இந்தியாவும், இலங்கைத் தமிழர்களில் ஒரு பகுதியினரும் (மிகவும் சிறிய பகுதியினர்) ஒன்றல்ல. 

2) சாதாரண பொதுமக்கள் சமயத்தை இழுப்பதில்லை. எல்லா  சைவ/கிறீத்துவ சமயத்தவரும் சமய வேறுபாடு பார்ப்பவர்கள் என்றில்லை.  குறைவான ஆட்கள்தான் சமயத்தை இழுப்பவர்கள். சுமந்திரனுக்கு எதிராக சமயத்தை முன்வைப்பவர்கள் இந்தச் சிறுபான்மையினரே. அவர்களிடத்தில் அதிகார பலம், பண பலம் இருக்கிறது. இது உங்களுக்குத் தெரியாததல்ல. நீங்கள் விதண்டாவாதமாக இதை மறுக்கிறீர்கள்.

இவற்றை நான் 1990களிலிருந்து (பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நாட்களிலிருந்து) கண்கூடாகப் பார்த்தும் கேட்டும் , அனுபவப்பட்டும் வருகிறேன். இதை மறுக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

3+4) நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம். அதை நான் ஏற்கவோ மறுக்கவோ போவதில்லை. 

மேலே எழுதப்பட்டுள்ள கட்டுரை சமயத்தை அடிப்படையாகக் கொண்டு சுமந்திரனுக்கு எதிராக எழுதப்பட்டதாக நான் கருதவில்லை. 

இந்தியச் சார்பு நிலையில் நின்று, சுமந்திரனுக்கு எதிராக  எழுதப்பட்டுள்ளது எனக் கருதுகிறேன். 

சுருக்கமாக ஒரே ஒரு கேள்வி சுமத்திரன் அரசியலுக்கு வந்து இதுவரை தமிழர்களுக்கு செய்த நன்மை என்ன  என்று சொல்ல முடியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, பெருமாள் said:

சுருக்கமாக ஒரே ஒரு கேள்வி சுமத்திரன் அரசியலுக்கு வந்து இதுவரை தமிழர்களுக்கு செய்த நன்மை என்ன  என்று சொல்ல முடியுமா ?

இதில் தமிழருக்கு  என்பதை  தவிர்த்து பார்த்தால்...?

சிங்களத்தின் வண்டி 2009க்கு  பின்னர்  ஒட இவரின் பங்கு  மிக மிக முக்கியம்  அவசியம்

  • கருத்துக்கள உறவுகள்
Parliament of Sri Lanka - Sivagnanam Shritharan    ஊவா மாகாண முதலமைச்சரை நீக்கக் கோரி ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டம்! | Seithy.com  - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil  breaking news,tamilclassifieds,tamil entertainment ...   ம. ஆ. சுமந்திரன் - தமிழ் விக்கிப்பீடியா
 
ஒரு விடயத்தை கூற மறந்துவிட்டேன். மறந்து விட்டேன் என்று கூறுவதை விட அதனை தவிர்த்திருந்தேன் என்பதே உண்மை. நேற்று ஒருவர் தமிழ் உள்ளூராட்சி அரசியல்வாதி ஒருவரின் பதிவில் என்னை Tag செய்திருந்தார். அந்த பதிவில் அவருக்கு வழங்கிய பதிலில் நான் மறந்த / தவிர்த்த விடயத்தை எழுத நேர்ந்தது.
 
அதன் பின் அந்த விடயத்தை இங்கே பொது வெளியில் குறிப்பிடாமல் இருப்பதில் அர்த்தமில்லை.
 
சில நாட்களுக்கு முன் கிளிநொச்சி நகரில் TNA நண்பர் ஒருவரை எதேச்சையாக சந்தித்திக்க நேர்ந்தது. பேச்சுவாக்கில் அவர் கூறியது இதுதான். " எங்கட ஆள் அதுக்கு சரிபட்டு வரமாட்டார்"
 
இதில் எங்கட ஆள் என்பது பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிறிதரன் அவர்கள்.
அதுக்கு என்பது TNAயின் தலைமை பதவி.
 
அவருடைய கருத்தில் பிரதிபலிப்பது திரு. சிறிதரன் அவர்கள் TNAக்கு தலைமை தாங்கும் அளவுக்கு Competent Politician அல்ல என்பதுதான். அப்படியென்றால் யார் அந்த Competent அரசியல்வாதி என்கின்ற கேள்வி எழும்?
 
அது ஒன்றும் ஒழிவு மறைவான விடயம் அல்ல.
பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. சுமந்திரன் அவர்களும், திரு. சாணக்கியன் அவர்களுமே அந்த தகுதிவாய்ந்த அரசியல்வாதிகளாக இருக்க முடியும்.
 
திரு. சிறிதரன் அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் திரு. சாணக்கின் அவர்களை விட எந்த விதத்திலும் குறைந்தவர் அல்ல. திரு. சாணக்கியன் அவர்களுக்கு மும்மொழி ஆற்றல் உண்டு. ஒருவர் ஆங்கிலம் பேசினால் அவர் தகுதியான ஆள் என்று அர்த்தம் கிடையாது.
 
ஆங்கிலம் தெரிந்தவர் எல்லோரும் அறிவாளிகளும் கிடையாது.
உலகின் அரசியலில் தலைமை தாங்கிய பலருக்கு ஆங்கிலம் தெரியாது. எனவே மொழியாற்றலை வைத்து திரு.சிறிதரன் அவர்களை குறைத்து மதிப்பிடுவது ஏற்புடையது அல்ல.
 
அதே போன்று திரு.சிறிதரன் அவர்களை விட பாராளுமன்ற உறுப்பினர் திரு. சுமந்திரன் அவர்கள் தகுதியானவர் என்று கூறவும் முடியாது. திரு. சுமந்திரன் அவர்கள் சட்டபுலமை மிக்கவர் தொழிற்சார் நிபுணத்துவம் மிக்கவும். அது அவரது தொழிலில் அவர் அடைந்த சிறப்பு தேர்ச்சி. அதே போன்று திரு. சிறிதரன் அவர்களும் தனது ஆசிரியர் தொழிலில் சிறப்பு தேர்ச்சியுடையவராக இருக்கலாம்.
 
திரு.சுமந்திரன் அவர்கள் போன்று இவருக்கு சட்டம் தெரியாமல் இருக்கலாம். அதே போன்று அவருக்கு இவரை பேன்று Art of Teaching தெரியாமல் இருக்கலாம். ஒருவருடைய தொழிலுடன் ஒப்பிட்டு மற்றைமவரை குறைத்து மதிப்பிடுவது தவறானது. ஏற்புடையதும் அல்ல.
 
திரு. சுமந்திரனின் அவர்களின் சட்ட புலமை அவர் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழர்களை விட சிங்களவர்களுக்கும், தேசிய அரசியலுக்குமே அதிகம் பயன்படுகின்றது.
 
திரு. சுமந்திரன் அவர்கள் அரசியலுக்கு அறிமுகமாகி கிட்டதட்ட 10 ஆண்டுகளில் தமிழர்களின் தேசிய பிரச்சினை தொடர்பில் அவர் எதனையும் தனது சட்டப்புலமை மூலம் செய்தது கிடையாது.
 
குறைந்த பட்சம் தமிழர்களுக்கு தேவையான Devolution Packageஐ கூட அவர் தயாரித்து முன்மொழியவில்லை. கடநத சில ஆண்டுகளாக இயங்காமல் இருக்கின்ற மாகாணசபையை கூட இயங்க வைக்க அவரால் முடியவில்லை.
 
அவரும் ஏனைய அரசியல் வாதிகள் போன்றே வெட்டி பேச்சுக்களுடன் கடந்து செல்கின்றார். அவர் இப்போதெல்லாம் தமிழர்களின் தேசிய பியச்சினை தொடர்பில் பேசுவது கூட இல்லை. தேசிய அரசியல் அல்லது புலிகளின் பாணியில் கூறுவதானால் தென்னிலைங்கை சிங்கள பேரினவாத அரசியலில் மட்டுமே ஈடுபடுகின்றார்.
 
திரு. சுமந்திரன் அவர்களும் திரு. சிறிதரன் அவர்களும் அரசியலில் சமகாலத்தில் பிரவேசித்தவர்கள்.
 
இன்று திரு.சுமந்திரன் அவர்கள் அதிகம் பேசும் மக்கள் ஆணையில்லா பின்கதவு வழியின் ஊடாகவே அவரும் அரசியலில் நுழைந்து பாராளுமன்ற உறுப்பினராகினார். ஆனால் திரு. சிறிதரன் அவர்கள் மக்களால தெரிவு செய்யப்பட்டு தனது அரசியலை ஆரம்பித்தவர்.
 
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் எப்போது தேர்தல் நடந்தாலும் நிரந்தர வெற்றியை கையில் வைத்திருக்கும் இருவரில் திரு. சிறிதரன் அவர்களும் ஒருவர். தனக்கான உறுதியான வாக்கு வங்கியை கைவசம் வைத்திருக்கின்றார். ஆனால் திரு. சுமந்திரன் அவர்களின் நிலை அவ்வாறனது அல்ல. கடந்த தேர்தலில் திரு.சிறிதரன் அவய்களின் ஆதரவிலேயே கணிசமான வாக்குகளை தனதாக்கி இருந்தார்.
 
சமீபத்தையை ராஜதந்திர மட்டங்களில் திரு.சுமந்திரன் அவர்கள் தனது சொந்த விருப்பின் பெயரில் ஏற்படுத்தும் குளறுபடிகள் காரணமாக அடுத்த தேர்தலில் அவரின் வெற்றி கேள்விக்குறியாக மாறியுள்ளது. அநேகமாக அவர் மக்கள் ஆணையை இழந்த தேசிய பட்டியல் MPயாகவே பாராளுமன்றத்தில் எதெர்காலத்தில் வீற்றிருக்க கூடும்.
 
ஆனால் திரு. சிறிதரன் அவர்கள் உறுதியான தேர்தல் வெற்றியை பதிவு செய்யக்கூடிய நிலையில் இருப்பவர்.
 
எனவே திரு. சிறிதரன் அவர்கள் TNAயின் தலைமை பதவிக்கு திரு.சுமந்திரன் அவர்களை விட குறைந்தவராகவோ Incompetent Politician ஆகவோ இல்லை என்பதே உண்மை.
 
தனிப்பட்ட விமர்சனங்கள், விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று சிந்தித்தால் திரு. சம்மந்தன் அவர்களுகாகு பின் ஏற்படும் தலைமைத்துவ வெற்றிடத்துக்கு திரு. சிறிதரன் அவர்களும் பொருத்தமான ஒரு அரசியல்வாதியாகவே உள்ளார். அவர் அதுக்கு சரிபட்டு வரக்கூடியவர்தான்.
 
பிற்குறிப்பு: இந்த உண்மையை கூறியதற்காக எனக்கு TNA முத்திரை குத்தி திரு. சிறிதரன் அவர்களின் ஆதரவாளர் என்று நீங்களை கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமந்திரனை தமிழர்களின் பிரதிநிதி ஆக்கினால் தமிழினத்தின் தற்கொலைக்கு சமம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

சுமந்திரனை தமிழர்களின் பிரதிநிதி ஆக்கினால் தமிழினத்தின் தற்கொலைக்கு சமம்.

ஆளை கட்சிக்குள் கொண்டு வந்து, வில்லங்கமாக சேர்த்தது சம்பந்தனாம்.
இந்த இருவரும் சேர்ந்து... நொந்த தமிழ் இனத்தை, படு குழியில் தள்ளி விட்டார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனைப்பற்றி தெரியாது அனுபவமில்லை

ஆனால்  சிறிதரன்???

இவர்  தலமை  தாங்கினால் இந்திய  அல்லது  தமிழக அரசியல்  தான்  செய்வார் 

பல  தலைமுறைக்கு எமது  தேசம்  பின் தள்ளப்பட்டு  விடும்???

(இந்திய தமிழக  உறவுகள்  மன்னிக்கவும்)

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, தமிழ் சிறி said:

ஆளை கட்சிக்குள் கொண்டு வந்து, வில்லங்கமாக சேர்த்தது சம்பந்தனாம்.
இந்த இருவரும் சேர்ந்து... நொந்த தமிழ் இனத்தை, படு குழியில் தள்ளி விட்டார்கள்.  

அங்காலை விசுகரும் ஏதோ சொல்லுறார். ஆர் வந்தால் திறம் எண்டொருக்கால் கேட்டுப்பாருங்கோ? 😎

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

சுமந்திரனைப்பற்றி தெரியாது அனுபவமில்லை

ஆனால்  சிறிதரன்???

இவர்  தலமை  தாங்கினால் இந்திய  அல்லது  தமிழக அரசியல்  தான்  செய்வார் 

பல  தலைமுறைக்கு எமது  தேசம்  பின் தள்ளப்பட்டு  விடும்???

(இந்திய தமிழக  உறவுகள்  மன்னிக்கவும்)

2 minutes ago, குமாரசாமி said:

அங்காலை விசுகரும் ஏதோ சொல்லுறார். ஆர் வந்தால் திறம் எண்டொருக்கால் கேட்டுப்பாருங்கோ? 😎

இப்போது... இருப்பவர்களில், 
அடுத்த தலைமைக்கு தகுதியானவர் யார் என்று  நினைக்கின்றீர்கள்? 

அடுத்த தலைமைக்கு... சரியான இளையவர்களை  
நாம் தயார் படுத்தவில்லை என்பதே, கசப்பான உண்மை.

குறுகிய காலம்தான் உள்ளது. அதற்குள்... ஒரு சிலரையாவது 
தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் உள் வாங்கப் பட வேண்டும்.

அதே நேரம்... 10 வருடத்துக்கு மேல், தமிழர்களுக்கு எதனையுமே 
பெற்றுக்  கொடுக்காத அரசியல் வாதிகள் ஒய்வு பெற வேண்டும்.

அப்படி... இனியும், போட்டி போட்டால், தலை நிமிர முடியாத அளவிற்கு 
வாக்குச் சீட்டின் மூலம்  பதிலடி கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

கட்சிகளுக்குள் இல்லை என்பதே  கசப்பான  உண்மை

இளையவர்கள்

அந்த  மக:களை  நேசிப்பவர்கள்

தாயகப்பற்றாளர்கள்

முன்  வரணும்

ஆனால் தேச இளையர்கள் அரசியலில்  ஆர்வமற்றவர்களாக (தோல்வி மற்றும் சுயநலம்?) மாறி  வருகிறாரகள்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சுருக்கமாக ஒரே ஒரு கேள்வி சுமத்திரன் அரசியலுக்கு வந்து இதுவரை தமிழர்களுக்கு செய்த நன்மை என்ன  என்று சொல்ல முடியுமா ?

உங்களிடம் அதே கேள்வியை கொஞ்சம் அகலமாக முன்வைக்கிறேன. பதிலளியுங்கள். 

தமிழ் அரசியல்வாதிகள் அரசியலுக்கு வந்து தமிழருக்குச் செய்த நன்மைகள் என்ன ?

தமிழருக்கு நன்மை செய்த ஒரு தமிழ் அரசியல்வாதியைக் காட்டுங்கள் , சுமந்திரன் என்ன செய்தாரென்று நான் கூறுகிறேன். 

1 hour ago, குமாரசாமி said:

சுமந்திரனை தமிழர்களின் பிரதிநிதி ஆக்கினால் தமிழினத்தின் தற்கொலைக்கு சமம்.

இப்ப மட்டும் என்ன வாழுதாம் ? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:
Parliament of Sri Lanka - Sivagnanam Shritharan    ஊவா மாகாண முதலமைச்சரை நீக்கக் கோரி ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டம்! | Seithy.com  - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil  breaking news,tamilclassifieds,tamil entertainment ...   ம. ஆ. சுமந்திரன் - தமிழ் விக்கிப்பீடியா
 
ஒரு விடயத்தை கூற மறந்துவிட்டேன். மறந்து விட்டேன் என்று கூறுவதை விட அதனை தவிர்த்திருந்தேன் என்பதே உண்மை. நேற்று ஒருவர் தமிழ் உள்ளூராட்சி அரசியல்வாதி ஒருவரின் பதிவில் என்னை Tag செய்திருந்தார். அந்த பதிவில் அவருக்கு வழங்கிய பதிலில் நான் மறந்த / தவிர்த்த விடயத்தை எழுத நேர்ந்தது.
 
அதன் பின் அந்த விடயத்தை இங்கே பொது வெளியில் குறிப்பிடாமல் இருப்பதில் அர்த்தமில்லை.
 
சில நாட்களுக்கு முன் கிளிநொச்சி நகரில் TNA நண்பர் ஒருவரை எதேச்சையாக சந்தித்திக்க நேர்ந்தது. பேச்சுவாக்கில் அவர் கூறியது இதுதான். " எங்கட ஆள் அதுக்கு சரிபட்டு வரமாட்டார்"
 
இதில் எங்கட ஆள் என்பது பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிறிதரன் அவர்கள்.
அதுக்கு என்பது TNAயின் தலைமை பதவி.
 
அவருடைய கருத்தில் பிரதிபலிப்பது திரு. சிறிதரன் அவர்கள் TNAக்கு தலைமை தாங்கும் அளவுக்கு Competent Politician அல்ல என்பதுதான். அப்படியென்றால் யார் அந்த Competent அரசியல்வாதி என்கின்ற கேள்வி எழும்?
 
அது ஒன்றும் ஒழிவு மறைவான விடயம் அல்ல.
பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. சுமந்திரன் அவர்களும், திரு. சாணக்கியன் அவர்களுமே அந்த தகுதிவாய்ந்த அரசியல்வாதிகளாக இருக்க முடியும்.
 
திரு. சிறிதரன் அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் திரு. சாணக்கின் அவர்களை விட எந்த விதத்திலும் குறைந்தவர் அல்ல. திரு. சாணக்கியன் அவர்களுக்கு மும்மொழி ஆற்றல் உண்டு. ஒருவர் ஆங்கிலம் பேசினால் அவர் தகுதியான ஆள் என்று அர்த்தம் கிடையாது.
 
ஆங்கிலம் தெரிந்தவர் எல்லோரும் அறிவாளிகளும் கிடையாது.
உலகின் அரசியலில் தலைமை தாங்கிய பலருக்கு ஆங்கிலம் தெரியாது. எனவே மொழியாற்றலை வைத்து திரு.சிறிதரன் அவர்களை குறைத்து மதிப்பிடுவது ஏற்புடையது அல்ல.
 
அதே போன்று திரு.சிறிதரன் அவர்களை விட பாராளுமன்ற உறுப்பினர் திரு. சுமந்திரன் அவர்கள் தகுதியானவர் என்று கூறவும் முடியாது. திரு. சுமந்திரன் அவர்கள் சட்டபுலமை மிக்கவர் தொழிற்சார் நிபுணத்துவம் மிக்கவும். அது அவரது தொழிலில் அவர் அடைந்த சிறப்பு தேர்ச்சி. அதே போன்று திரு. சிறிதரன் அவர்களும் தனது ஆசிரியர் தொழிலில் சிறப்பு தேர்ச்சியுடையவராக இருக்கலாம்.
 
திரு.சுமந்திரன் அவர்கள் போன்று இவருக்கு சட்டம் தெரியாமல் இருக்கலாம். அதே போன்று அவருக்கு இவரை பேன்று Art of Teaching தெரியாமல் இருக்கலாம். ஒருவருடைய தொழிலுடன் ஒப்பிட்டு மற்றைமவரை குறைத்து மதிப்பிடுவது தவறானது. ஏற்புடையதும் அல்ல.
 
திரு. சுமந்திரனின் அவர்களின் சட்ட புலமை அவர் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழர்களை விட சிங்களவர்களுக்கும், தேசிய அரசியலுக்குமே அதிகம் பயன்படுகின்றது.
 
திரு. சுமந்திரன் அவர்கள் அரசியலுக்கு அறிமுகமாகி கிட்டதட்ட 10 ஆண்டுகளில் தமிழர்களின் தேசிய பிரச்சினை தொடர்பில் அவர் எதனையும் தனது சட்டப்புலமை மூலம் செய்தது கிடையாது.
 
குறைந்த பட்சம் தமிழர்களுக்கு தேவையான Devolution Packageஐ கூட அவர் தயாரித்து முன்மொழியவில்லை. கடநத சில ஆண்டுகளாக இயங்காமல் இருக்கின்ற மாகாணசபையை கூட இயங்க வைக்க அவரால் முடியவில்லை.
 
அவரும் ஏனைய அரசியல் வாதிகள் போன்றே வெட்டி பேச்சுக்களுடன் கடந்து செல்கின்றார். அவர் இப்போதெல்லாம் தமிழர்களின் தேசிய பியச்சினை தொடர்பில் பேசுவது கூட இல்லை. தேசிய அரசியல் அல்லது புலிகளின் பாணியில் கூறுவதானால் தென்னிலைங்கை சிங்கள பேரினவாத அரசியலில் மட்டுமே ஈடுபடுகின்றார்.
 
திரு. சுமந்திரன் அவர்களும் திரு. சிறிதரன் அவர்களும் அரசியலில் சமகாலத்தில் பிரவேசித்தவர்கள்.
 
இன்று திரு.சுமந்திரன் அவர்கள் அதிகம் பேசும் மக்கள் ஆணையில்லா பின்கதவு வழியின் ஊடாகவே அவரும் அரசியலில் நுழைந்து பாராளுமன்ற உறுப்பினராகினார். ஆனால் திரு. சிறிதரன் அவர்கள் மக்களால தெரிவு செய்யப்பட்டு தனது அரசியலை ஆரம்பித்தவர்.
 
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் எப்போது தேர்தல் நடந்தாலும் நிரந்தர வெற்றியை கையில் வைத்திருக்கும் இருவரில் திரு. சிறிதரன் அவர்களும் ஒருவர். தனக்கான உறுதியான வாக்கு வங்கியை கைவசம் வைத்திருக்கின்றார். ஆனால் திரு. சுமந்திரன் அவர்களின் நிலை அவ்வாறனது அல்ல. கடந்த தேர்தலில் திரு.சிறிதரன் அவய்களின் ஆதரவிலேயே கணிசமான வாக்குகளை தனதாக்கி இருந்தார்.
 
சமீபத்தையை ராஜதந்திர மட்டங்களில் திரு.சுமந்திரன் அவர்கள் தனது சொந்த விருப்பின் பெயரில் ஏற்படுத்தும் குளறுபடிகள் காரணமாக அடுத்த தேர்தலில் அவரின் வெற்றி கேள்விக்குறியாக மாறியுள்ளது. அநேகமாக அவர் மக்கள் ஆணையை இழந்த தேசிய பட்டியல் MPயாகவே பாராளுமன்றத்தில் எதெர்காலத்தில் வீற்றிருக்க கூடும்.
 
ஆனால் திரு. சிறிதரன் அவர்கள் உறுதியான தேர்தல் வெற்றியை பதிவு செய்யக்கூடிய நிலையில் இருப்பவர்.
 
எனவே திரு. சிறிதரன் அவர்கள் TNAயின் தலைமை பதவிக்கு திரு.சுமந்திரன் அவர்களை விட குறைந்தவராகவோ Incompetent Politician ஆகவோ இல்லை என்பதே உண்மை.
 
தனிப்பட்ட விமர்சனங்கள், விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று சிந்தித்தால் திரு. சம்மந்தன் அவர்களுகாகு பின் ஏற்படும் தலைமைத்துவ வெற்றிடத்துக்கு திரு. சிறிதரன் அவர்களும் பொருத்தமான ஒரு அரசியல்வாதியாகவே உள்ளார். அவர் அதுக்கு சரிபட்டு வரக்கூடியவர்தான்.
 
பிற்குறிப்பு: இந்த உண்மையை கூறியதற்காக எனக்கு TNA முத்திரை குத்தி திரு. சிறிதரன் அவர்களின் ஆதரவாளர் என்று நீங்களை கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.

கொடுப்புக்குள் சிரிக்கப்போகின்றார்கள். பதிவை நீக்கிவிடுங்கள் 🤣

யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் தர விரும்பாத சிறீதரன் TNA யின் தலைமைப் பொறுப்பிற்குத் தகுதியானவர் ? 

ஒருவன் முடவன் என்பதற்காக தலைமை தாங்க முடியாதென்றால் இன்னொரு குருடன் எப்படி வழிகாட்டியாக முடியும் ? 

🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kapithan said:

கொடுப்புக்குள் சிரிக்கப்போகின்றார்கள். பதிவை நீக்கிவிடுங்கள் 🤣

யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் தர விரும்பாத சிறீதரன் TNA யின் தலைமைப் பொறுப்பிற்குத் தகுதியானவர் ? 

ஒருவன் முடவன் என்பதற்காக தலைமை தாங்க முடியாதென்றால் இன்னொரு குருடன் எப்படி வழிகாட்டியாக முடியும் ? 

🤣

நெத்தியடி...

இனி  கருத்துக்களை  வைப்பது???😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

இப்போது... இருப்பவர்களில், 
அடுத்த தலைமைக்கு தகுதியானவர் யார் என்று  நினைக்கின்றீர்கள்? 

2 hours ago, Kapithan said:

இப்ப மட்டும் என்ன வாழுதாம் ? 

இது வரைக்கும் ஒரு சல்லிக்கும் உதவாத உந்த கட்சியையே கலைத்து விட்டால் என்ன?
அந்த பெயரை வைத்து தானே இவ்வளவு ஆட்டம் போடுகின்றார்கள்.
நாட்டுக்கும் மக்களுக்கும் எதுவித பிரயோசனமும் இல்லாமல் அந்தந்த உறுப்பினர்களின் வீடுகளுக்கும் சிங்கள இனவாத கட்சிகளுக்கும் உதவினதுதான் மிச்சம்.

சுமந்திரன் நாட்டுக்கு சேவைசெய்ய விரும்பினால் அம்பன்/குடத்தனையில் சுயேட்சையாக போட்டியிடட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

TNA யில் உள்ள மிகுதி ? 

கட்சியைக் கலைப்பது நல்ல யோசனை  😀

கவைப்படாதீர்கள், சம்பந்தர் படுக்க உங்கள்/எங்கள் விருப்பம் இனிதே நிறைவேறும். 🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

TNA யில் உள்ள மிகுதி ? 

கட்சியைக் கலைப்பது நல்ல யோசனை  😀

கவைப்படாதீர்கள், சம்பந்தர் படுக்க உங்கள்/எங்கள் விருப்பம் இனிதே நிறைவேறும். 🤣

இப்ப மட்டும் உங்க  சம்பந்தர் என்ன  செய்கிறாராம்?😂

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விசுகு said:

இப்ப மட்டும் உங்க  சம்பந்தர் என்ன  செய்கிறாராம்?😂

நான் பாடையில் படுப்பதை கொஞ்சூண்டு நாகரீகமாகச் சொன்னேன். அதையும் காட்டிக் கொடுக்கிறீங்களே.. இது உங்களுக்கே அடுக்குமா ?

🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

நான் பாடையில் படுப்பதை கொஞ்சூண்டு நாகரீகமாகச் சொன்னேன். அதையும் காட்டிக் கொடுக்கிறீங்களே.. இது உங்களுக்கே அடுக்குமா ?

🤣

நானும்  கொஞ்சூண்டு நாகரீகமாகச் சொல்ல  முயற்சித்தேன்?

மாட்டிக்கொண்டேனா?🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

உங்களிடம் அதே கேள்வியை கொஞ்சம் அகலமாக முன்வைக்கிறேன. பதிலளியுங்கள். 

தமிழ் அரசியல்வாதிகள் அரசியலுக்கு வந்து தமிழருக்குச் செய்த நன்மைகள் என்ன ?

தமிழருக்கு நன்மை செய்த ஒரு தமிழ் அரசியல்வாதியைக் காட்டுங்கள் , சுமந்திரன் என்ன செய்தாரென்று நான் கூறுகிறேன். 

பல தடவை யாழில் கருத்துக்களை வைத்து விட்டேன் இளைய அரசியல்வாதிகளுக்கு வழிவிட்டு சிறியண்ணா சொல்வது போல் 1௦ வருடங்களுக்கு மேல் தமிழருக்கு எதையும் பெற்று கொடுக்காத அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் ஓய்வுக்கு போவது நல்லது சைக்கிள் கூட்டம் உள்ளடங்கலாக .

செய்வார்களா ? பெட்டி வாங்கி குவிப்பதுக்கு தமிழர் பிரச்சனையை சாட்டாக வைத்து தமிழரின் ரத்தம் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள் உண்மையில் இவர்களுக்கு எங்கள் பிரச்சனை தீர்வது பிடித்தமான ஒன்றல்ல .

  • கருத்துக்கள உறவுகள்

2 முறைக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினர் ஆக இருக்க முடியாது என சட்டம் இயற்றப்பட வேண்டும்.

65 வயதுக்கு மேற்பட்டோர் நேரடி அரசியலில் ஈடுபடக்கூடாது, ஆலோசகர்களாக செயற்படலாம் எனவும் சட்டம் இயற்றப்பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.