Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
Picture1.png
சென்னை : பிரபல நடிகை, தனது கணவருக்கு பாத பூஜை செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார். 🤭
 
"கல்லானாலும் கணவன்.. புல்லானாலும் புருசன்...(?😛)" என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. இந்தக் காலத்தில் ஆணுக்குச் சமநிலையில் பெண்களும் இருக்கின்றனர். ஆனால் இன்றும் கணவனுக்குப் பயப்படும் மனைவியையும், மனைவிக்குப் பயப்படும் கணவனையும் பார்க்க முடிகிறது. கணவனுக்குப் பயப்படும் மனைவியைப் பார்ப்பது இக்காலத்தில் அரிதாக இருந்தாலும், மனைவிக்குப் பயப்படும் கணவனை அனைத்து இடங்களிலும் பார்க்க முடிகிறது.
 
ஆனால், மார்டன் பெண்கள் என்று சொல்லிக் கொள்ளும் பிரபல நடிகையே கணவனுக்கு பாத பூஜை செய்ததை பார்த்து பல பெண்களே வாய்பிளந்து நிற்கிறார்கள்.
 
கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை பிரணிதா, 'உதயம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் தனது அறிமுகத்தை தொடுத்தார். இதையடுத்து,கார்த்தியுடன் 'சகுனி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். சூர்யாவுடன் 'மாஸ்', ஜெய்யுடன் 'எனக்கு வாய்த்த அடிமைகள்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமில்லை தெலுங்கு, கன்னடம் மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர், போன வருடம் நித்தின் ராஜு என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். இன்ஸ்டாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் பிரணிதா சில மாதங்களுக்கு முன்பு தனது கணவரின் பிறந்த நாளில் கர்ப்பாக இருப்பதாக அறிவித்தார். இதையடுத்து, ஜூன் மாதம் பிரணிதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்து இருந்தார்.

295403028-147335914629154-1353315080094119569-n1-1659112355.jpg 

   295770126-174955161683604-6517404762602708506-n1-1659112344.jpg

295925532-1220816568752073-8237410579743432707-n1-1659112334.jpg

இந்த நிலையில் நேற்று, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது கணவனுக்கு பாத பூஜை செய்யும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். நேற்று தென்னிந்தியா முழுவதும் பீமா அமாவாசை தினம் கொண்டாடப்பட்டது. அதாவது, பார்வதி தேவிக்கு சிவபெருமான் அவருடைய பக்தியை புரிந்துகொண்டு ஆசீர்வதித்த நாள் தான் பீமா அமாவாசை தினம். இந்த தினத்தில் கணவருக்கு பாத பூஜை செய்யும் மனைவி நீண்ட ஆயுள் கூடி எல்லா வளமும் பெற்று வாழ்வார்கள் என்றும் நம்பிக்கை உள்ளது.

தென்னிந்தியாவில் உள்ள பல பெண்கள், பீமா அமாவாசை தினத்தை கொண்டாடி வரும் நிலையில் நடிகை பிரணிதாவும் தனது கணவருக்கு பாதபூஜை செய்து கொண்டாடியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை பார்த்த பல பெண்கள், 'அட இப்படி ஒரு விஷயம் இருக்கா..? இது தெரியாம போச்சே..!' என்று புலம்பி வருகின்றனர்.
 
அவர் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்பிலிம்பீட்

***************************

கொடுமையடா சாமி..! 😛

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்பிடி என்ன மருந்து மாயத்தை வைச்சிருக்கிறானோ???? 🤫

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, குமாரசாமி said:

அப்பிடி என்ன மருந்து மாயத்தை வைச்சிருக்கிறானோ???? 🤫

ஆளின்ரை…. முகத்தை காட்ட மாட்டேங்குறாங்க. 😜

  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, தமிழ் சிறி said:

ஆளின்ரை…. முகத்தை காட்ட மாட்டேங்குறாங்க. 😜

'அந்தாளு' இவர்தான்..!

Pranitha-Subhash-1.jpeg

pranitha.insta_278207345_154222463735519_696354694912742334_n.jpg

கருவுற்றதை சாம்பிள் காட்டுகிறார்களாம்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கடை, உங்கடை வீடுகளில, மறந்தும் காட்டிப் போடாதீங்க....

ஒண்டு .... அடி செருப்பால... எண்டு பதில் வரும்...

அல்லது....

இரண்டொரு மணித்தியாலம் இருத்தி வைச்சு..... நெருப்பை காட்டி பயமுறுத்தப் படிவியள்......

அப்புறம், தனிய...யாத்திரை கிளம்பிரன் எண்டு போறது கஸ்டமாயிடும்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, ராசவன்னியன் said:

கருவுற்றதை சாம்பிள் காட்டுகிறார்களாம்..!

அப்படி என்றால், இவர்கள் அசல் விளம்பர பிரியர்கள்தான்.
குழந்தை பிறப்பதையும்... நேரலை, நிகழ்ச்சியாக காட்டக் கூடிய தம்பதிகள். 

34 minutes ago, Nathamuni said:

உங்கடை, உங்கடை வீடுகளில, மறந்தும் காட்டிப் போடாதீங்க....

ஒண்டு .... அடி செருப்பால... எண்டு பதில் வரும்...

அல்லது....

இரண்டொரு மணித்தியாலம் இருத்தி வைச்சு..... நெருப்பை காட்டி பயமுறுத்தப் படிவியள்......

அப்புறம், தனிய...யாத்திரை கிளம்பிரன் எண்டு போறது கஸ்டமாயிடும்...

வாய்ப்பில்ல ராஜா - Photos | Facebook 

சிலோன்காரனிடம்...  வாய்ப்பில்லை  இல்லை ராஜா. 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பேராசிரியை பர்வீன் சுல்தானா அவர்கள் குறிப்பிட்டது போல் 60 வயதுக்கு முன் நீங்கள் என்ன விதைக்கிறீங்களோ அது தான் 60 வயதின் பின் ஓய்வு காலங்களில் உங்களுக்கு கிடைக்கும்! இதை இல்லறத்தில் ஈடுபடும் ஆண்கள் உங்கள் மனதில் ஆழமாக பதிய வைத்துக்கொள்ளுங்கோ.🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, ஏராளன் said:

பேராசிரியை பர்வீன் சுல்தானா அவர்கள் குறிப்பிட்டது போல் 60 வயதுக்கு முன் நீங்கள் என்ன விதைக்கிறீங்களோ அது தான் 60 வயதின் பின் ஓய்வு காலங்களில் உங்களுக்கு கிடைக்கும்! இதை இல்லறத்தில் ஈடுபடும் ஆண்கள் உங்கள் மனதில் ஆழமாக பதிய வைத்துக்கொள்ளுங்கோ.🤔

அப்போ அறுபது வயதுக்கு மேல் விதைக்க ஐ மீன், பெண்களின் மனதை கவர முடியாதா? 🤔 😭 😛

senior-couple-picture-id1030661702?k=20&m=1030661702&s=612x612&w=0&h=DCfsn0SmKZhKCFwgkDapuHYOEnTuWHfmwqQf7mD3LcA=

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, ராசவன்னியன் said:

அப்போ அறுபது வயதுக்கு மேல் விதைக்க ஐ மீன், பெண்களின் மனதை கவர முடியாதா? 🤔 😭 😛

senior-couple-picture-id1030661702?k=20&m=1030661702&s=612x612&w=0&h=DCfsn0SmKZhKCFwgkDapuHYOEnTuWHfmwqQf7mD3LcA=

அது அவரவர் திறமையைப் பொறுத்தது!🙂

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.