Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னார் தீவு கடலுக்கு இரையாகும் அபாயம் : தடுத்து நிறுத்த ஒன்றுபடுவோம் - அருட்தந்தை ஞானப்பிரகாசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

By VISHNU

(தலைமன்னார் நிருபர்)

மன்னார் தீவில் நடைபெற்று கொண்டிருக்கும் காற்றாலை நிர்மானத்தாலும் கனியவள மணல் அகழ்வாலும் மிகவும் குறுகிய காலத்துக்குள் மன்னார் தீவு கடலுக்குள் அமிழப் போகும் அபாயம் தோன்றியுள்ளமையால் மக்களின் குரல் ஒலிக்க தொடங்கியுள்ளதால் மன்னார் பிரஜைகள் குழு இதற்கான தொடர் முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளது.

நாம் ஒன்றுபட்டு அழிவிலிருந்து தீவை காப்பாற்ற வேண்டும் என பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி அ.ஞானப்பிரகாசம் அடிகளார் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

IMG_5229.jpg

இது தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் 23 ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை பிரஜைகள் குழுவின் அலுவலகத்தில் இதன் தலைவர் அருட்பணி அ.ஞானப்பிரகாசம் அடிகளாரின் தலைமையில் ஆலோசனை கூட்டம் இடம்பெற்றது.

இவ் கூட்டத்தில் மன்னார் மாவட்டத்தின் பல அமைப்புக்களின் பிரதிநிதிகள் , கிராமங்களினதும் , மதத் தலங்களின் பிரதிநிதிகளும் , மதத் தலைவர்களும் என பலர் கலந்து கொண்டனர்.  

இவ் ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி அ.ஞானப்பிரகாசம் அடிகளார் உரையாற்றுகையில்,

மன்னார் தீவில் இடம்பெற்றுள்ளதும் தொடர்ந்து நிர்மானிக்கப்பட இருக்கும்  காற்றாலையாலும் கனியவள மணல் அகல்வாலும் எதிர்காலத்தில் சுமார் 15 வருடங்களுக்கு பிற்பாடு எமது எதிர்கால சந்ததியினர் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தீர்க்கும் சம்பந்தமாக நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிவர்களாக இருக்கின்றோம். அதற்காகவே நாம் இங்கு கூடியுள்ளோம்.

மன்னார் தீவானது 4 கிலோ மீற்றர் அகலமும் 28 கிலோ மீற்றரும் கொண்டதாக அமைந்துள்ளமையால் நாம் மதம் , இனம் , பிரதேச வேறுபாடுகளை மறந்து எமது மன்னார் தீவை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

மன்னார் தீவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இவ் செயல்பாட்டுக்கு எமது பகுதியில் ஆதரவாகவும் எதிராகவும் கொண்டவர்களும் இருக்கின்றார்கள் என்பது நாம் அறிவோம்.

இவ் செயல்பாட்டில் ஈடுபடுபவர்கள் பணத்தை இரைத்து தங்கள் வசம் வைத்திருக்கும் குழுவினர்களும் இருக்கின்றார்கள்.

இந்த நிலையில் மன்னாரையும் கிளிநொச்சியையும் இந்திய நாட்டு அதானிக்கு காற்றாலை அமைப்பதற்கு அரசு வழங்கிவிட்டது.

இலங்கை மின்சார சபையும் காற்றாலை மின் உற்பத்தியில் நிலவி வரும் பழுதுகளை சீர்செய்யும் போர்வையில் புதிய திட்டத்திலும் ஈடுபட்டு வருவது தெரிய வருகின்றது.

தூரநோக்கோடு செயல்படும் எமக்கு கைகொடுத்து உதவவோ அல்லது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனையை தீர்க்க முன்னெடுத்துச் செல்லக்கூடிய தகுந்த அரசியல் வாதிகள் யாரும் இங்கு கிடையாது என்பது மக்களின் குரலாக இருக்கின்றது.

ஆகவே எமது மக்களுக்காக சேவை புரியும் நாம்தான் மக்களின் எதிர்பார்ப்புக்களையும் இந்த மன்னார் தீவை காப்பாற்ற வேண்டிய நிலையிலும் இருக்கின்றோம்.

இங்கு காற்றில் காற்றாலை சுழலுவது தவறு அல்ல. காற்றாலை மூலம் மின்சாரம் பெறுவது தப்பும் அல்ல. ஆனால் இங்கு காற்றாலை அமைக்கப்பட்ட இடம்தான் எமக்கு பாரிய பிரச்சனையாக இருக்கின்றது.

இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கையையும் அழிக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் தீவில் ஆரம்பத்தில் இடம்பெற்ற காற்றாலை நிர்மானமும் கனியவள மணல் அகழ்வாலும் இதனால் ஏற்படும் தாக்கமும் மக்களுக்கு ஆரம்பத்தில் தெரியவில்லை. ஆனால் இப்பொழுதுதான் மக்களுக்கு இதன் தாக்கம் புரிந்து வருகின்றது.

இந்த செயல்பாட்டில் ஈடுபடுபவர்கள் மிகவும் சாதுரியமாக மக்களை அனுகி தங்கள் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஒரு காற்றாலை அமைக்க பத்து ஏக்கர் நிலம் தேவைப்படுகின்றது. மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் இந்த மன்னார் தீவிலேயே குடிகொண்டிருக்கின்றனர்.

ஆகவே மன்னார் தீவில் காற்றாலை நிர்மானத்தாலும் கனியவள மணல் அகழ்வாலும் இவ் தீவு எதிர்காலத்தில் அழிவுறுவுக்கு செல்லாது இருக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் மன்னார் மாவட்டத்தின் பல அமைப்புக்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் தீவு கடலுக்கு இரையாகும் அபாயம் : தடுத்து நிறுத்த ஒன்றுபடுவோம் - அருட்தந்தை ஞானப்பிரகாசம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு மன்னார் மீனவ சங்கங்கள் ஆதரவு

By VISHNU

26 AUG, 2022 | 08:05 PM
image

(மன்னார் நிருபர்)

மன்னார் மாவட்டம் முழுவதும் வருகின்ற திங்கட்கிழமை  பொது அமைப்புகள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்  இணைந்து மேற்கொள்ள இருக்கின்ற விழிப்புணர்வு கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தங்களுடைய முழு ஆதரவையும் வழங்குவதாக மீனவ சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக  மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலம். தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக இன்று 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் காற்றாலை மின் கோபுரங்களாலும் அதே நேரம் மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்து இடம்பெறும் கனிய வள மணல் அகழ்வு ஆய்வுக்காக இடம் பெறுவதாக சொல்லப்பட்டாலும் இன்று வரை 4000 துளைகளுக்கு மேல் போடப்பட்டுள்ளது.

 எனவே இவைகள் இரண்டு செயற்திட்டங்கள் தொடர்பாக மீனவ சமூகம் சார்ந்து தொடர்ச்சியாக போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் வெளிக்காட்டிய போதும் இந்த செயற்பாட்டை எங்களால் தடுத்து நிறுத்த முடியாத நிலையே இதுவரை காணப்படுகின்றது. 

அதன் அடிப்படையில் கடந்த வாரம் பிரஜைகள் குழுவினால் காற்றாலைக்கு எதிராக முன்னெடுத்து வருகின்ற போராட்டத்தை முழுமைக்கும் விதமாக காற்றாலை மின் செயற்திட்டத்தை நிறுத்தி செயற்திட்டத்தை தீவுக்கு அப்பால் கொண்டு செல்லும் படி வலியுறுத்தும்  முகமாக எதிர்வரும் 29ம் திகதி திங்கட்கிழமை மாபெரும் கண்டன பேரணி ஒன்றை நடத்துவதற்கு மாவட்டத்தில் உள்ள  அனைத்து சிவில் அமைப்புகளும் ஒன்றுகூடி தீர்மானித்துள்ளோம்.

 இந்த அடிப்படையில் மீனவ சமூகம் சார்ந்து அந்த மீனவ சமூகம் அன்றைய நாள் தங்கள் தொழில்களை நிறுத்தி இந்த பேரணிக்கு ஆதரவு தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 25 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ சங்கங்களையும் அழைத்து கருத்தறியும் நிகழ்வு இடம்பெற்றது.

 இதற்கமைய அனைத்து சங்கங்களும் இணைந்து குறித்த போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தனர். 

இதன் அடிப்படையில் வருகின்ற 29 திகதி முழுமையாக கடற்றொழில் நிறுத்தப்பட்டு அனைத்து மீனவர்களின் பங்களிப்போடு இந்த அமைதியான கண்டன பேரணி மன்னார் பேருந்து நிலையத்தில் நடைபெறும். 

இந்த போராட்டத்திற்கு கடல் சார்ந்த சமூகமும் ஏனைய பொதுமக்களும் கலந்து கொண்டு தங்கள் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் செலுத்தி இந்த காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு செயற்திட்டம் ஆகிய இரண்டையும் மன்னார் தீவில் இருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து இன மக்களும் வழு சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். https://www.virakesari.lk/article/134466

  • கருத்துக்கள உறவுகள்

செல்வம் கூட்டமைப்பு தலைமையை பிடிக்க  இருக்கும் தீவிரத்தை இதிலும் காட்ட வேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, nunavilan said:

செல்வம் கூட்டமைப்பு தலைமையை பிடிக்க  இருக்கும் தீவிரத்தை இதிலும் காட்ட வேண்டும்.  

கூட்டமைப்பு தலைமையை… கைப்பற்ற எத்தனை பேர் போட்டியில் இருக்கிறார்கள்.
மாவை, செல்வம்,  சுமந்திரன்… இவர்களுடன் சித்தார்த்தனையும் சேர்க்கலாமா?
ஆள் இல்லாத கடையில்… எத்தனை பேர் “ ரீ “ ஆத்தப் போகிறார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

செல்வம் கூட்டமைப்பு தலைமையை பிடிக்க  இருக்கும் தீவிரத்தை இதிலும் காட்ட வேண்டும்.  

செல்வமா ..தலைமையா... சார் எந்த உலகத்தில் இருக்கீ..🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

செல்வமா ..தலைமையா... சார் எந்த உலகத்தில் இருக்கீ..🤣

சுமந், மாவை, சித்தார்த்தன் , சிறிதரன், சாணக்கியன் ஆகியோர் தலைமையை விரும்பலாம் என்றால் செல்வமும் விரும்பலாம் தானே.😃

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

சுமந், மாவை, சித்தார்த்தன் , சிறிதரன், சாணக்கியன் ஆகியோர் தலைமையை விரும்பலாம் என்றால் செல்வமும் விரும்பலாம் தானே.😃

அதிங் சரித்தான். 😀

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

சுமந், மாவை, சித்தார்த்தன் , சிறிதரன், சாணக்கியன் ஆகியோர் தலைமையை விரும்பலாம் என்றால் செல்வமும் விரும்பலாம் தானே.😃

தலைமை பதவி காலியில்லை என்கிறார்.

8 hours ago, Kapithan said:

செல்வமா ..தலைமையா... சார் எந்த உலகத்தில் இருக்கீ..🤣

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலையினால் எவ்வித பாதிப்பும் இல்லை - காதர் மஸ்தான்

By VISHNU

28 AUG, 2022 | 03:59 PM
image

மன்னார்  நிருபர்

காற்றாலை மின் நிலையம் சம்பந்தமாக மக்களுடைய எதிர்ப்புகளை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளோம்.  ஆனால் காற்றாலை  எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிற எந்த திட்டங்களையும் நாட்டுக்குள் கொண்டு வர மாட்டோம்.

 இலங்கையில் எங்கெங்கு காற்றாலை அமைக்க பொருத்தமான இடம் இருக்கிறதோ அந்த இடங்களை பார்த்து தான் காற்றாலைகளை அமைத்திருக்கிறோம் என்று தங்களுக்கு உயர் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர், பாராளுமன்ற உறுப்பினருமாகிய காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

காற்றாலை திட்டத்தின் விரிவுபடுத்த லுக்கு எதிராக மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல போராட்டங்கள் இடம் பெற்று வருகின்ற நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய காதர் மஸ்தானிடம் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொடர்ச்சியாக நான் மாத்திரமல்ல இங்குள்ள ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் நடக்கின்ற அதி உயர் கூட்டங்களில் இந்த காற்றாலை பிரச்சனை தொடர்பாக  தெரிவித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் எங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது இந்த காற்றாலை அமைக்கப்படுவதால் இப்பொழுதும் எதிர்காலத்திலும் பெரிய பாதிப்பு இல்லை என சொல்லப்படுகிறது. 

ஆனால் மக்கள் தொடர்ச்சியாக அதற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.

வரும் வாரத்தில் கூட பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக நான் அறிகிறேன். https://www.virakesari.lk/article/134556

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலையினால் எவ்வித பாதிப்பும் இல்லை - காதர் மஸ்தான்

By VISHNU

28 AUG, 2022 | 03:59 PM
image

மன்னார்  நிருபர்

காற்றாலை மின் நிலையம் சம்பந்தமாக மக்களுடைய எதிர்ப்புகளை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளோம்.  ஆனால் காற்றாலை  எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிற எந்த திட்டங்களையும் நாட்டுக்குள் கொண்டு வர மாட்டோம்.

 இலங்கையில் எங்கெங்கு காற்றாலை அமைக்க பொருத்தமான இடம் இருக்கிறதோ அந்த இடங்களை பார்த்து தான் காற்றாலைகளை அமைத்திருக்கிறோம் என்று தங்களுக்கு உயர் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர், பாராளுமன்ற உறுப்பினருமாகிய காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

காற்றாலை திட்டத்தின் விரிவுபடுத்த லுக்கு எதிராக மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல போராட்டங்கள் இடம் பெற்று வருகின்ற நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய காதர் மஸ்தானிடம் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொடர்ச்சியாக நான் மாத்திரமல்ல இங்குள்ள ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் நடக்கின்ற அதி உயர் கூட்டங்களில் இந்த காற்றாலை பிரச்சனை தொடர்பாக  தெரிவித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் எங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது இந்த காற்றாலை அமைக்கப்படுவதால் இப்பொழுதும் எதிர்காலத்திலும் பெரிய பாதிப்பு இல்லை என சொல்லப்படுகிறது. 

ஆனால் மக்கள் தொடர்ச்சியாக அதற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.

வரும் வாரத்தில் கூட பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக நான் அறிகிறேன். https://www.virakesari.lk/article/134556

கூவுடா, கூவு. 😏

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் தீவில் பெரும் இயற்கை அனர்த்தத்தை எதிர் கொள்ள நேரிடலாம் : மன்னார் அரச அதிபருக்கு அவசர கடிதம்

By VISHNU

28 AUG, 2022 | 03:22 PM
image

(மன்னார் நிருபர்)

மன்னார் தீவு பகுதியானது பெரும் இயற்கை அனர்த்தத்தை எதிர் கொள்ள நேரிடலாம். என துறைசார்ந்த நிபுணர்கள் எச்சரிப்பதால் மக்கள் மத்தியிலே அச்ச நிலை தோன்றியுள்ள நிலையில் காற்றாலை அமைத்தலும் கனிய மணல் அகழ்வும் தொடர்வதால் இது தொடர்பாக கலந்துரையாடலுக்கான நடவடிக்கையை  உடன் மேற்கொள்ள வேண்டும் என அரச அதிபருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு காற்றாலை மற்றும் கனிய மண் தொடர்பாக 27 ஆம் திகதி சனிக்கிழமை அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னார் தீவுப்பகுதியில் ஏலவே முப்பது காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

தற்போது 21 காற்றாலைகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளன.

பெருநிலப்பரப்பில் மாதிரி கிராமம் தொடக்கம் முள்ளிக்குளம் வரை முப்பத்தெட்டு காற்றாலைகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

இதற்கு அப்பால் அதானியின் நிறுவனமும் காற்றாலை அமைக்கும் பணியை தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் பரீட்சாத்திரமாக தொடங்கப்பட்ட கனிய மண் அகழ்வு பல ஆயிரக்கணக்காக துளையிட்டு மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாக அறிகின்றோம்.

மன்னார் தீவு பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து மிகவும் உயரம் குறைந்த நில அமைப்பை கொண்டதாகும்.

இவ்விதமான செயற்பாட்டால் மன்னார் தீவுப்பகுதியானது பெரும் இயற்கை அனர்த்தத்தை எதிர் கொள்ள நேரிடலாம். என துறைசார்ந்த நிபுணர்கள் எச்சரிப்பதால் மக்கள் மத்தியிலே அச்ச நிலை தோன்றியுள்ளது.

எனவே இவ் விடயம் தொடர்பாக துறை சார்ந்த திணைக்களங்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கி விரைவாக கலந்துரையாடலை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம் என இவ்வாறு அரச அதிபருக்கு 25 ஆம் திகதி வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மன்னார் மாவட்டத்தின் பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இக் கடிதத்தின் பிரதிகள் வட மாகாணம் ஆளுநர் , மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/134535

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அதானியின் காற்றாலை திட்டத்தை எதிர்க்கும் மக்கள் - கள நிலவரம்

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
50 நிமிடங்களுக்கு முன்னர்
 

மன்னார் போராட்டம்

இலங்கையின் மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்படும் கனிய வள மண் அகழ்வு மற்றும் உயர் வலுக் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு இந்த எதிர்ப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்திருந்தது.

மன்னார் மாவட்ட மக்கள், மீனவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சர்வமதத் தலைவர்கள், அரசியல்வாதிகள் என பலரும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துக்கொண்டிருந்தனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மன்னார் நகர் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன், தனியார் பேருந்து போக்குவரத்து நடவடிக்கைகளும் இடை நிறுத்தப்பட்டிந்தன.

 

கனிய மணல் அகழ்வு காரணமாக மன்னார் தீவு பகுதியில் பல்வேறு அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும், காற்றாலை மின் உற்பத்தி திட்டம் காரணமாக எதிர்காலத்தில் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் கோரியே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த இரண்டு திட்டங்களையும் உடனடியாக மன்னார் தீவு பகுதியில் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்து, எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்ணொருவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

 

இலங்கை அதானி திட்டம்

''இந்த இடத்தில் இவ்வளவு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள். எதற்காக? தீவை நாசப்படுத்துவதற்கு அபிவிருத்திகளை காட்டி, எங்களை ஏமாற்றி மண் வளம் நாசமாகிக் கொண்டு போகின்றது. காலப் போக்கில் இந்த தீவு அழிந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் இருப்போமோ தெரியாது. எங்களுடைய தீவு விற்கப்படுகின்றது. எங்களுடைய தீவை இழப்பதற்கு நாங்கள் விட்டு விட மாட்டோம். மண் அகழ்விலிருந்தும், காற்றாலை திட்டத்திலிருந்தும் விடுபடத் தக்கதாக எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். தீர்வை காணாமல் இந்த இடத்தை விட்டு நாங்கள் போக மாட்டோம்" என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் கருத்து தெரிவித்தார்.

''எங்களுடை மன்னார் மாவட்டத்தில் காற்றாலை அமைக்கின்றமையினால், ஏற்படுகின்ற பிரச்சினைகள் குறித்து நாங்கள் பல இடங்களில் பல தடவைகள் சொல்லியிருக்கின்றோம். ஆனால் மீண்டும் அது பற்றிய பேச்சுக்கள் நடந்துக்கொண்டிருக்கின்றது. எங்களுடைய கரைவலைப்பாடு இடங்களில் இந்த காற்றாலை மின்சாரம் அமைக்கின்றமையினால், எங்களுடைய 7 தொடக்கம் 10 கிலோமீற்றர் இடம் பறிப் போகின்றது. எங்களுடைய தொழிலுக்கும் இடைஞ்சலாக இருக்கின்றது. எங்களுடைய தொழிலை முடக்குகின்ற செயற்பாடாகவே நாங்கள் இதனை பார்க்கின்றோம்" என ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட ஒருவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது, பொதுமக்கள் கையெழுத்து பெறும் நடவடிக்கையொன்றை ஆரம்பித்திருந்தனர்.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

அரசாங்க அதிபரிடம் கோரிக்கை மனு

 

இலங்கை போராட்டம்

கனிய வள மண் அகழ்வு மற்றும் உயர் வலுக் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றுக்கொள்ளப்பட்ட கையெழுத்துடனான மகஜரொன்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான அதிகாரம் தனக்கு இல்லாமையினால், இது தொடர்பில் தான் மேலிடத்திற்கு அறிவிப்பதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மக்களினால் கையளிக்கப்பட்ட இந்த மகஜரை, தான் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.

 

இலங்கை போராட்டம்

வடக்கின் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை, இந்தியாவிற்கு சொந்தமான அதானி நிறுவனத்திற்கு வழங்க இலங்கை அரசாங்கம் கடந்த 16ஆம் தேதி தீர்மானித்திருந்தது.

இலங்கையின் வடப் பகுதியிலுள்ள மன்னார் மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு அதானி நிறுவனத்திற்கு அனுமதியை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதானிக்கு வாய்ப்பு கொடுத்த அரசாங்கம்

 

அதானி போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு இந்த அனுமதி தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளதாக மின்வலு, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, கடந்த 16ம் தேதி டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்திருந்தார்.

மன்னார் பிரதேசத்தில் 286 மெகா வாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் பூநகரி பிரதேசத்தில் 234 மெகா வாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றை ஸ்தாபிப்பதற்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த திட்டத்திற்காக அதானி நிறுவனம் 500 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்படவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிக்கின்றார்.

இவ்வாறான நிலையில், காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், கனிய வள மண் அகழ்விற்கும் மன்னார் மாவட்டத்தில் எதிர்ப்புகள் ஆரம்பமாகியுள்ளன.

https://www.bbc.com/tamil/sri-lanka-62724031

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.