Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரஞ்சன் ராமநாயக்க நாளை விடுதலை….

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சன் ராமநாயக்க நாளை விடுதலை….

 
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாளை (26ஆம் திகதி ) அல்லது நாளை மறுநாள் சனிக்கிழமை (29ஆம் திகதி) விடுதலை செய்யப்படுவார் என்பதை தான் உறுதியாக நம்புவதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
 
“எனது மற்றும் மனுஷாவின் கோரிக்கையை நிறைவேற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும், இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என அமைச்சர் ஹரீன் மேலும் தெரிவித்துள்ளார்.
 
 
 
காவியன்
 
  • கருத்துக்கள உறவுகள்

அவர் நன்றி கூறுவதற்காக  நேராக ரணில் VIட்டுக்கே செல்கிறாராம்....😉

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோ கோத்தா,ஆட்சி மாற்றம் எல்லாம் இதுக்குத்தானோ ராசா?  🧐

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலையானார் ரஞ்சன் ராமநாயக்க

By T. SARANYA

26 AUG, 2022 | 03:48 PM
image

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு  தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (26) விடுதலையானார்.

அவருக்கு, வரும் காலத்தில், நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் எந்தவொரு கருத்தை தெரிவிக்கவோ செயற்படவோ கூடாது என்ற நிபந்தனையுடன் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

300588525_450861980421439_20487587703063

இந்நிலையில், வெலிக்கடை சிறைச்சாலைக்கு வெளியே விடுதலையான ரஞ்சன் ராமநாயக்கவை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள்  வரவேற்றனர்.

https://www.virakesari.lk/article/134444

299701277_1461517197646045_8810360387593

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை: ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு பொதுமன்னிப்பு வழங்கிய ரணில் விக்ரமசிங்க

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

ரஞ்ஜன் ராமநாயக்க

பட மூலாதாரம்,RANJAN RAMANAYAKE

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சரும், இலங்கையின் பிரபல திரைப்பட நடிகருமான ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு, பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொது மன்னிப்பு ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) முற்பகல் கையெழுத்திட்டிருந்தார்.

இதையடுத்து, குறித்த ஆவணங்கள் நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், நீதி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேராவினால், அந்த ஆவணங்கள் சிறைச்சாலை திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில், முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.

 

பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு வெளியில், 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி நீதித்துறையை அவமதிக்கும் வகையில் ரஞ்ஜன் ராமநாயக்க கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த கருத்தை சவாலுக்கு உட்படுத்தி, உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

 

ரஞ்ஜன் ராமநாயக்க

பட மூலாதாரம்,RANJAN RAMANAYAKE

இந்த நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணைகளை நடத்திய உயர்நீதிமன்றம், 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு 4 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து, உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில், ரஞ்ஜன் ராமநாயக்கவை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும், ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு விடுதலை வழங்காத பின்னணியில், கொலை குற்ற வழக்கில் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இந்த செயற்பாட்டிற்கு பலரும் எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தனர்.

இவ்வாறான நிலையில், புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க, ரஞஜன் ராமநாயக்கவிற்கு மன்னிப்பு வழங்கியுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக மன்னிப்பு கோரி, ரஞ்ஜன் ராமநாயக்க சத்தியக் கடதாசி ஒன்றை நீதிமன்றத்தில் நேற்றைய தினம் சமர்ப்பித்திருந்தார்.

தான் தெரிவித்த கருத்துக்கள் முற்றிலும் பிழையானவை எனவும் அந்த கருத்துக்களினால் பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதித்துறையினர் அனைவருக்கும் அகௌரவம் ஏற்பட்டமைக்காக மன்னிப்பு கோருவதாகவும் சத்தியக் கடதாசி மூலம் அவர் தெரிவித்துள்ளார்.

தனது கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை எனவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு தான் வெளியிட்ட கருத்துக்களை மீளப் பெற்றுக்கொள்வதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன் என முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க நீதிமன்றத்திடம் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் காலத்தில் நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவோ, செயற்படவோ கூடாது என்ற நிபந்தனையுடுன் பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இவ்வாறான உறுதிமொழிகளுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட நிலையில், ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்குள் மீண்டும் ரஞ்ஜன்

ரஞ்ஜன் ராமநாயக்கவை மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் உள்வாங்க பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்து வருகின்றது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

நாடாளுமன்றத்தில் ஏற்படும் வெற்றிடத்தின் முதலாவது சந்தர்ப்பத்தில், தேசிய பட்டியல் ஊடாக ரஞ்ஜன் ராமநாயக்கவை நாடாளுமன்றத்திற்குள் உள்வாங்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

 

ரஞ்ஜன் ராமநாயக்க

பட மூலாதாரம்,RANJAN RAMANAYAKE

இலங்கை சிங்கள திரைப்படத்தில் சுப்பர் ஸ்டார் என கருதப்படும் ரஞ்ஜன் ராமநாயக்க, 2008ம் ஆண்டு சபரகமுவ மாகாண சபையின் ஊடாக அரசியலுக்குள் பிரவேசித்தார்.

அதன்பின்னர், 2010ம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக நாடாளுமன்ற பிரவேசித்தை பெற்றார்.

இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்றார்.

இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு, கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதன் ஊடாக, நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டது.சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதன் ஊடாக, அவருக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என மூத்த சட்டத்தரணி இளையதம்பி தம்பையா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-62687552

  • கருத்துக்கள உறவுகள்
On 25/8/2022 at 22:33, குமாரசாமி said:

கோ கோத்தா,ஆட்சி மாற்றம் எல்லாம் இதுக்குத்தானோ ராசா?  🧐

கோத்தா இருந்திருந்தால் இவருக்கு பதிலாக இன்னும் பல கொலைகாறர் வெளியே வந்திருக்கக்கூடும், இருந்தாலும் கோத்தா நாடு திரும்ப முதல் இவர் தன்னை பலப்படுத்துகிறார்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, satan said:

கோத்தா இருந்திருந்தால் இவருக்கு பதிலாக இன்னும் பல கொலைகாறர் வெளியே வந்திருக்கக்கூடும், இருந்தாலும் கோத்தா நாடு திரும்ப முதல் இவர் தன்னை பலப்படுத்துகிறார்!

இவரால் இனப்பிரச்சனைக்கு விமோசனம் உண்டா? 😁

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

இவரால் இனப்பிரச்சனைக்கு விமோசனம் உண்டா? 😁

🤣அவரே அடுத்த 7 வருடத்துக்கு அரசியல் செய்யமுடியாது.

நரியா கொக்கா🤣

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சனுக்கு முழு மன்னிப்பு இல்லை : சஜித் ஏமாற்றம்

 

-சி.எல்.சிசில்-

முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பூரண மன்னிப்பு வழங்கப்படவில்லை என்பதை அறிந்து தாம் ஏமாற்றமடைந் துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Ranjan-saji-300x225.jpg
“ராமநாயக்கவை பார்த்ததில் மகிழ்ச்சி! அரசியலமைப்பின் 34 (1) (d) இன் கீழ் அவர் விடுவிக்கப்பட்டார் என்பதை அறிந்து ஏமாற்றமடைந்தேன். இது 34 (2) இன் கீழ் அவரது குடிமை மற்றும் அரசியல் உரிமைகளுடனான முழு மன்னிப்பைக் காட்டிலும் அவரது தண்டனையை நீக்குவதாகும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் டுவீட் செய்துள்ளார்.

இதன் பொருள் அவர் அரசியல் பதவியை வகிக்கத் தகுதியற்றவர். முற்றிலும் ஏமாற்றம்! ”  என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/203522

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

ரஞ்சன் தேர்தலில் போட்டியிடலாம் :நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

-சி.எல்.சிசில்-

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு
ஏழு வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

wijedasa-300x170.jpg
ராமநாயக்கவுக்கு ஜனாதிபதியின் மன்னிப்பு முழுமையாக கிடைக்கவில்லை எனத்  தெரிவித்துள்ள அவர், தேவைப்பட்டால் அவரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

முன்னதாக சரத் பொன்சேகாவுக்கு இரண்டு தடவைகள் முழு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டதாகவும், முதல் தடவையாக தண்டனை இரத்து செய்யப்பட்டு பின்னர் அவருக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்த அமைச்சர், ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் அவ்வாறே நடக்கலாம் எனவும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/203545

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.