Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தந்தை செல்வா சொன்னது இது தானோ.

  • Replies 89
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழில் மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் கைது!

யாழில் மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் கைது!

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை)பொலிசாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.

மல்லாகம் கோணப்புலம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேக நபர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://athavannews.com/2022/1307571

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 28/10/2022 at 16:08, ஏராளன் said:

தந்தை செல்வா சொன்னது இது தானோ.

 அவர் என்ன சொன்னார்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, satan said:

 அவர் என்ன சொன்னார்?

ஆண்டவன் தான் காப்பாற்றணும் என்று.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, ஏராளன் said:

ஆண்டவன் தான் காப்பாற்றணும் என்று.

செய்திகளை பார்த்தால் ஆண்டவன் டபிள் சிவிட்(,double shift)ஒவர் டைம்(over time) செய்தாலும் இந்த பிரச்சனையை தீர்க்க முடியாது....

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆண்டவர் தமிழரை காப்பாற்ற இந்த கோடரிக்காம்புகள் அவரை விட்டாற்தானே! முந்திரிக்கொட்டை மாதிரி அறிக்கை, திணிப்போட வெளிக்கிட்டுவிடுவார்கள்.

சிங்களத்தை காப்பாற்ற  எங்களில் குற்றம் கண்டுபிடித்து அறிக்கை விடுவார்கள்! ஆண்டவர் என்ன செய்வது? வேடிக்கை மட்டுந்தான் பாக்க முடியும் அவரால். முதலில் இவர்களை சங்காரம் செய்தபின்னே அவர் சுதந்திரமாய் செயற்பட முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ். மருத்துவபீட மாணவர்கள் இருவர் ஹெரோயினுக்கு அடிமை!

யாழ். மருத்துவபீட மாணவர்கள் இருவர் ஹெரோயினுக்கு அடிமை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் இருவர் ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நீதி அமைச்சர் விஜயதாச தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலையே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் 9 ஆயிரத்து 900 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உலகின் மிக மிக ஆபத்தான உயிர்கொல்லி கொக்கெய்ன் போதைப்பொருள் பாவனையாளராக ஒருவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மாணவர்களை இலக்கு வைத்தே போதைப்பொருள் வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த வாரம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள கலட்டி சந்திக்கு அண்மையாக அமைத்துள்ள மாணவர் விடுதி ஒன்றில் யாழ்.பல்கலைக்கழக கல்லூரி மாணவர் , கொழும்பு பல்கலைக்கழக மாணவர் உள்ளிட்ட மூவர் கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களுக்கு போதைப்பொருளை விநியோகித்த ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1308369

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போதையை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவர்களும் விற்பதாக குற்றச்சாட்டு!

போதையை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவர்களும் விற்பதாக குற்றச்சாட்டு!

மருத்துவ சிட்டை இல்லாவிடின் 25 ரூபாய் வலி நிவாரணி மாத்திரைகளை 250 ரூபாய்க்கு சில மருந்தகங்களில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நீதி அமைச்சர் விஜயதாச தலைமையில்  இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

சில வலி நிவாரணி மாத்திரைகளை அதிகளவில் உட்கொள்ளும் போது, அவை போதையை தர கூடியவை.

அவ்வாறான மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரை இன்றி உட்கொள்வது உயிராபத்தை ஏற்படுத்த கூடியது.

அதனால் அந்த மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரை சிட்டை இன்றி மருந்தகங்களில் விற்பனை செய்வது சட்டவிரோதமானதாகும்.

இவ்வாறான நிலையில் வடக்கில் உள்ள சில மருந்தகங்களில் 25 ரூபாய் பெறுமதியான குறித்த வலி நிவாரணி மாத்திரையை மருத்துவர்களின் பரிந்துரை சிட்டை இல்லாமல் வழங்குவதாயின் அதனை 250 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்கின்றனர் என தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை மருத்துவர்கள் சிலரும் இந்த மாத்திரைகளை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்து மொத்த விற்பனை நிலையத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மருத்துவர் மற்றும் வவுனியாவை சேர்ந்த மருத்துவர் ஆகிய இருவரும் பெருந்தொகையாக வலி.நிவாரணி மாத்திரைகளை கொள்வனவு செய்திருந்தமை தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1308362

  • கருத்துக்கள உறவுகள்
Posted

5 கோடி ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள் சுங்கத் திணைக்களத்தால் மீட்பு

By VISHNU

02 NOV, 2022 | 08:53 PM
image

வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் இன்று (2) கைப்பற்றப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுமார் 4,000 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/138984

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழில் 60 கிலோ கஞ்சா கைப்பற்றல்!

யாழில் 60 கிலோ கஞ்சா கைப்பற்றல்!

யாழ்ப்பாணம் சேந்தாங்குளம் கடற்கரைப் பகுதியில் இருந்து, 60 கிலோ கஞ்சா இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தியாவின் தொண்டிப் பகுதியில் இருந்து ஓர் இரகசிய படகு வருவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா தொகுதி கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதியினை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக இளவாலை பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர்.

https://athavannews.com/2022/1308844

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழில்.கடந்த மாதம் மட்டும் போதைக்கு அடிமையான 183 பேர் அடையாளம்

யாழில்.கடந்த மாதம் மட்டும் போதைக்கு அடிமையான 183 பேர் அடையாளம்

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதத்தில் மாத்திரம் 183 பேர் ஹெரோயினுக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகளில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டவர்களில் 155 பேரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை நீதிமன்றங்களினால் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டவர்களில் 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக என யாழ்.போதனா தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2022/1309315

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடந்த மாதத்தில் யாழில் போதைக்கு அடிமையான 183 பேர் அடையாளம்!

By VISHNU

07 NOV, 2022 | 03:10 PM
image

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 183 பேர் ஹெரோயின் போதைப்பொருளை அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சிறைச்சாலைகளில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டவர்களில் 155 பேர் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையானர்வர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

அதேவேளை நீதிமன்றங்களினால் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டவர்களில் 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. 

https://www.virakesari.lk/article/139358

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கள் முன்னோர் விதைத்தவற்றை எங்கள் தலைமுறை அறுவடை செய்கிறது. 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழி திருடிய 5 மாணவர்கள் கைது !

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது!

யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் வடமராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த நால்வர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 126 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நெல்லியடி பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி பகுதிகளைச் சேர்ந்த 25 மற்றும் 30 வயதுக்குட்பட்ட நால்வரே கைது செய்யப்பட்டனர்.

https://athavannews.com/2022/1309394

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிளிநொச்சியில் ஹீரோயின் மற்றும் ஊசி மருந்துகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சியில் ஹீரோயின் மற்றும் ஊசி மருந்துகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனுர் பகுதியில் தருமபுரம் போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக உழவனூர் பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறு போதியில் மறைத்து வைக்கப்பட்ட கெரோயின், ஊசி மருந்துகள், மருத்து வில்லைகள் 720 மற்றும் 20 லீற்றர் கசிப்பு என்பனவற்றை மறைத்து வைத்திருந்த நிலையில் சந்தேக நபர் ஒருவரும் தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் 08.11.2022 இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்

https://athavannews.com/2022/1309456

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 458 கிலோ கஞ்சா கஞ்சா மீட்பு!

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 458 கிலோ கஞ்சா கஞ்சா மீட்பு!

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 458 கிலோ கஞ்சா நெடுந்தீவுக் கடலில் இன்று (புதன்கிழமை) காலை கடற்படையினரால கைப்பற்றப்பட்டது.

நெடுந்தீவுக் கடலில சந்தேகத்திற்கிடமாக பயணித்த படகை வழிமறித்த கடறபடையினர் அதில் எடுத்துச் சென்ற 458 கிலோ கஞ்சாவினையும் கைப்பற்றினர். இதனபோது கஞ்சாவை எடுத்து வந்த இரு படகோட்டிகளையும கைது செய்துள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் மன்டைதீவைச் சேர்ந்தவர் எனவும் மற்றையவர் நாச்சிக்குடாவைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகின்றது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபர்களுடன் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

https://athavannews.com/2022/1309627

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/11/2022 at 15:55, தமிழ் சிறி said:

மாணவர்களை இலக்கு வைத்தே போதைப்பொருள் வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்

ஒரு வியாபாரம், வேண்டத் தகுதியுள்ளோரிடமே நடத்தப்படும். இங்கு மாணவர்கள் நலிந்தவர்கள், தங்கள் தேவைகளுக்கு பெற்றோரிடத்தில் தங்கியுள்ளவர்கள், அவர்களை இலக்கு வைத்து வியாபாரம் செய்வது யார்? இதானால் அவர்களின் எதிர்பார்ப்பு என்ன? என்பது எல்லோருக்கும் புரியும். கல்வியில், பொருளாதாரத்தில், உழைப்பில்,  பண்பாட்டில் உயர்ந்து நின்ற சமுதாயத்தை வேரோடு சாய்க்கும் வேலை. அவர்களது நிலங்களை பறித்து,கல்வியை சிதைத்து, தொழிலை முடக்கி,  பண்பாடடை சீரழித்து கையேந்த வைக்கும் சூழ்நிலை. தன் இனம் சீரழியுது அதுபற்றி கவலையில்லை, தங்க விருது வேண்டிக்கிடக்கு தலைவருக்கு! 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/11/2022 at 11:21, Kapithan said:

எங்கள் முன்னோர் விதைத்தவற்றை எங்கள் தலைமுறை அறுவடை செய்கிறது. 

☹️

எங்கள் முன்னோர் எதை விதைத்தார்கள், அறுவடை செய்வதற்கு? கஞ்சா விதைத்ததாக அறியவில்லை! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒன்பது மாதங்களில் போதைப்பொருளிற்கு அடிமையான 81மாணவர்கள் புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர் - அமைச்சர் அதிர்ச்சி தகவல்

By RAJEEBAN

09 NOV, 2022 | 02:18 PM
image

கடந்த 9 மாதங்களில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 81 பாடசாலை மாணவர்கள் புனர்வாழ்வு முகாம்களில் சேர்க்கப்பட்டுள்ளனர் என  கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இவர்களில் மூவர் ஒரு வயது முதல் 14 வயதிற்கு உட்பட்டவர்கள் 78 பேர் 15 முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Susil.jpg

ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் இவர்கள் போதைப்பொருளிற்கு அடிமையானவர்களிற்கான புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஐஎஸ் போன்ற மிகவும் ஆபத்தான போதைப்பொருள்களிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு  தற்போதைய சட்டங்கள் போதுமானவை இல்லை,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/139540

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, satan said:

எங்கள் முன்னோர் எதை விதைத்தார்கள், அறுவடை செய்வதற்கு? கஞ்சா விதைத்ததாக அறியவில்லை! 

கஞ்சா மட்டும்தான் விதைக்கவில்ல. ஆனால் மிகுதிப் பாவங்கள் அத்தனையையும் விதைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்களே ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, satan said:

எங்கள் முன்னோர் எதை விதைத்தார்கள், அறுவடை செய்வதற்கு? கஞ்சா விதைத்ததாக அறியவில்லை! 

கபிதனின் முன்னோர்கள் விதைத்து விட்டுச் சென்ற அனைத்து பாவங்களும் கஞ்சாவாக இன்று விளைந்துள்ளது

  • Haha 1
Posted
3 hours ago, ஏராளன் said:

இவர்களில் மூவர் ஒரு வயது முதல் 14 வயதிற்கு உட்பட்டவர்கள்

ஒரு வயதுடையவர் போதை பொருளை பாவிக்க வைக்கப்பட்டுள்ளார்.😙

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, nunavilan said:

ஒரு வயதுடையவர் போதை பொருளை பாவிக்க வைக்கப்பட்டுள்ளார்.😙

இல்லை நுணா, தவறான மொழி பெயர்ப்பாக இருக்கும்.

 

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, nunavilan said:

ஒரு வயதுடையவர் போதை பொருளை பாவிக்க வைக்கப்பட்டுள்ளார்.😙

குழந்தை நித்திரை கொள்ளாமல் அழுது அடம் பிடித்திருக்கும்,
நித்திரை கொள்ள வைக்க போதை மருந்தை கொடுத்திருப்பார்கள்.

இரண்டு கிழமை  தொடர்ந்து சில வகையான போதைப் பொருளை பாவித்தால்,
அதற்கு அடிமையாகி விடுவார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, MEERA said:

கபிதனின் முன்னோர்கள் விதைத்து விட்டுச் சென்ற அனைத்து பாவங்களும் கஞ்சாவாக இன்று விளைந்துள்ளது

நீங்கள் சொல்வதுகூட சரியாக  இருக்கலாம்  மீரா. ஏனெனில் எல்லா விதைகளிற்கும் தாய் விதை என்று ஒன்று உண்டல்லவா 😀 

(நான் கூறியதன் உட்பொருளை புரிந்துகொண்டு, விடயத்தில் முந்த நினைக்கிறீர்கள். ஆனாலும் வாய்மையே வெல்லும் 😉)




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.