Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

317 இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் நடுக்கடலில் தத்தளிப்பு..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூர் கடற்பரப்பில் விபத்தில் சிக்கிய படகு – 303 இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை – வெளிவிவகார அமைச்சு!

சிங்கப்பூர் கடற்பரப்பில் விபத்தில் சிக்கிய படகு – 303 இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை – வெளிவிவகார அமைச்சு!

சட்டவிரோதமான முறையில் கனடாவுக்கு படகில் பயணித்த போது விபத்தில் சிக்கிய இலங்கையர்கள் விரைவில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

படகு ஆபத்தில் சிக்கியபோது அதில் இருந்த தொழிலாளர்கள் தப்பி ஓடியதாக முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

303 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற மியான்மரின் மீன்பிடிக் கப்பல் கடந்த திங்கட்கிழமை வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் கடற்பரப்பில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கரை ஒதுங்கியது.

இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பாக படகில் இருந்த ஒருவர் இலங்கை கடற்படைக்கு அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, வியட்நாம் சிங்கப்பூர் மற்றும் மலேசியா அரசாங்கங்களை தொடர்புகொண்டு குறித்த படகு தொடர்பான தகவல்களை இலங்கை பரிமாறிக்கொண்டது.

இதனையடுத்து, குறித்த படகுக்கு அருகில் பயணித்த ஜப்பானிய கப்பல் மூலம் இலங்கையர்கள் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1309935

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கப்பல் மூழ்கதொடங்கிய வேளை தலைமை மாலுமி வெளியேறிவிட்டார் - இலங்கையர்களின் கப்பல் குறித்து வியட்நாம் செய்தித்தாள்

By RAJEEBAN

11 NOV, 2022 | 10:39 AM
image

வியட்நாம் கடற்பரப்பில் 303 இலங்கையர்களுடன் தத்தளித்துக்கொண்டிந்த கப்பலின் தலைமை மாலுமி  கப்பல் மூழ்கத்தொடங்குவதற்கு சற்று முன்னர் கப்பலில் இருந்து வெளியேறி தப்பிதலைமறைவாகியுள்ளார் என  வியட்நாம் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ஜப்பானின் கார் கப்பலான ஹெலியோஸ் லீடர்காப்பாற்றி அவர்களை வியட்நாமின் வுங் டாவுவிற்கு கொண்டு சென்றது.

vietnam_srilanka.jpg

நவம்பர் ஆறாம் திகதி 303 இலங்கையர்கள் ஹெலியோஸ் லீடர் கப்பலால் காப்பாற்றப்பட்டனர் அவர்களின் கப்பல் 40 மணித்தியாலம் நகரமுடியாமல் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தது என வியட்நாமின் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

கப்பல் நகரமுடியாமல் திணறிய வேளை கப்பலின் தலைமை மாலுமி கப்பலில் இருந்து வெளியேறினார் அவர் திரும்பிவரவில்லை என வியட்நாம் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

கப்பலின் தலைமை மாலுமி எப்படி வெளியேறினார் என்பது தெரியவில்லை,வேண்டுமென்றே வெளியேறினாரா என்பது தெரியவில்லை கப்பலில் இருந்தவர்களின் இலக்காக கனடா  காணப்பட்டது எனவும்  வியட்நாம் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/139697

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை இலங்கைக்கு அனுப்பக்கூடாது -சீமான்

By RAJEEBAN

11 NOV, 2022 | 03:06 PM
image

கப்பல் விபத்தில் சிக்கி வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பக்கூடாது என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பிற்கு சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.

 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கப்பல் விபத்தில் சிக்கி வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. நாட்டைத் துறந்து அகதிலிகளாகச் சென்ற ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்புவதென்பது சிறிதும் மனச்சான்றற்ற பெருங்கொடுமையாகும்.

vietnam_srilanka.jpg

இனப்படுகொலை நாடான இலங்கையில் அந்நாட்டு ஆட்சியாளர்களின் தமிழர்கள் மீதான இனவெறி மிகுந்த தவறான ஆட்சி நிர்வாகத்தின் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் சீரழிந்து வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி அந்நாட்டு மக்கள் வறுமையில் தவித்து வருகின்றனர். சொந்த மண்ணில் வாழ வழியற்ற நிலையில் வேறுவழியின்றி அங்குள்ள தமிழ் மக்கள் இந்தியா உள்ளிட்ட அயல் நாடுகளுக்கு ஏதிலிகளாக அவ்வப்போது புலம்பெயர்ந்தும் வருகின்றனர்.

அப்படி நிம்மதியாக வாழ இந்தப் பூமிப் பந்தில் ஒரு இடம் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன், ஊரையும், உடைமைகளையும், உறவுகளையும் இழந்து உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு ஆழ்கடலில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட தொப்புள்கொடி உறவுகளான 300க்கும் மேற்பட்ட ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் கனடா நாடு நோக்கிச் செல்லும் வழியில் கடந்த நவம்பர் 8 ஆம் நாளன்று புயலால் கப்பலில் ஏற்பட்ட பழுது காரணமாக நடுக்கடலில் சிக்கித் தவித்தனர். விரைந்து செயல்பட்ட சிங்கப்பூர் அரசு மனிதநேய அடிப்படையில் தமிழர்களை மீட்டு, அருகிலிருந்த வியட்நாம் நாட்டில் ஒப்படைத்த நிலையில், தற்போது அங்குத் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரையும் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப வியட்நாம் அரசு முடிவு செய்துள்ளதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனை அளிக்கிறது.

வறுமையின் காரணமாக இருந்த உடைமைகள் அனைத்தையும் விற்றுவிட்டு பெரும் பொருட்செலவில் நாட்டை விட்டு வெளியேறிய மக்களை மீண்டும், பொருளாதாரம் முற்றாகச் சீரழிந்துள்ள இலங்கைக்கே திருப்பி அனுப்புவதென்பது அவர்களின் நிலையை மேலும் மோசமாக்கி, வறுமையிலும், பசியிலும் வாடி சிறுக சிறுக அவர்கள் உயிரிழக்கவே வழிவகுக்கும்.

 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஏகாதிபத்திய பேரரசுகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி தீரத்துடன் போராடி அடிமைத்தளையை அறுத்தெறிந்து, விடுதலையை வென்றெடுத்த புரட்சிகர வியட்நாமிய நாடு, கடந்த அரை நூற்றாண்டு காலமாக ஈழத்தாயக விடுதலைக்காகப் போராடி வரும் தமிழர்கள், அடிமைத்தன அடக்குமுறைகளால் அனுபவித்த துன்ப துயரங்களையும், மன வலிகளையும் எளிதில் உணரும் என்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் முழுமையாக நம்புகின்றனர். எனவே ஈழத்தமிழ் மக்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் முடிவை உடனடியாக வியட்நாமிய அரசு கைவிட வேண்டுமென்று கோருகிறேன்.

வியட்நாமிலுள்ள ஈழத்தமிழ்ச் சொந்தங்களும் தாங்கள் கனடாவுக்குச் செல்ல விரும்புவதாகவும், தங்களை இலங்கைக்கு அனுப்பக்கூடாதென்றும், ஐநாவிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆகவே, ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு உடனடியாக வியட்நாம் அரசுடன் பேசி, அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் முடிவைக் கைவிடச் செய்வதோடு, அங்குத் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை அவர்கள் செல்ல விரும்பும் நாட்டிற்குத் தமது சொந்த பொறுப்பிலேயே பாதுகாப்பாக அனுப்பி வைப்பதோடு, வாழ்வாதார உதவிகள் கிடைக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

https://www.virakesari.lk/article/139747

  • கருத்துக்கள உறவுகள்

”ஐநா எங்களை பொறுப்பேற்க வேண்டும்”

கனடா நோக்கி சென்று கொண்டிருந்த போது, வியட்நாம் கடற்பரப்பில் விபத்துக்கு உள்ளான கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்ப மறுப்பு தெரிவித்துள்ளனர்.

தங்களை கனடாவுக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களில் 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் உள்ளனதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் வியட்நாம் அதிகாரிகளினால் இரண்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் பிபிசி ஊடகத்திற்கு தெரிவிக்கையில்,

”நாங்கள் வியட்நாம் அகதி முகாமில் இருக்கின்றோம். இலங்கையில் இருந்து வந்து நடுக்கடலில் தத்தளித்து கொண்டு இருந்தோம். எங்களை அழைத்து வந்தவன் எம்மை விட்டு விட்டு தப்பிச் சென்று விட்டான். நாங்கள் சர்வதேச கடலில் தத்தளித்த போது ஜப்பான் நாட்டு கப்பல் வந்து எங்களை காப்பாற்றியது. அவர்கள் எம்மை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைக்க இருந்த போது, வியட்நாம் கடற்படை எம்மை அழைத்து வந்துள்ளது. எங்களை எப்படியாவது காப்பாற்றவும். எமக்கு இலங்கை வேண்டாம். இலங்கையில் இருக்க முடியாது என்று காரணத்தால்தான் நாங்கள் வந்தோம். இலங்கைக்கு எமது ஆண் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு போகவே முடியாது. ஆகவே, அரசாங்கம் மற்றைய அனைத்து நாடுகளும் இணைந்து எம்மை காப்பாற்றவும்”

 

http://www.samakalam.com/ஐநா-எங்களை-பொறுப்பேற்க-வ/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வியட்நாமிலுள்ள 303 இலங்கையர்கள் குறித்து சர்வதேச சட்டங்களே தீர்மானிக்கும் : விரும்பினால் அழைத்துவருவோம் : வெளிவிவகார அமைச்சர்

By DIGITAL DESK 2

13 NOV, 2022 | 09:55 AM
image

(ஆர்.ராம்)

வியட்நாமில் உள்ள தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களை மீளவும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகவுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்தார்.

அதேநேரம் குறித்த இலங்கையர்கள் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கனடா நோக்கி பயணிக்க முயற்சித்திருந்த நிலையில் மீண்டும் நாடுதிரும்ப விரும்பாதிருப்பார்களாயின் அவர்கள் தொடர்பில் வியநட்நாம் குடிவரவு குடியகல்வு சட்டங்களும் சர்வதேச புலம்பெயர்தல் சட்டங்களே தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சிங்கப்பூரில் இருந்து மீன்பிடிப் படகொன்றின் மூலம் சட்டவிரோதமாக கனடா செல்வதற்கு 303 இலங்கையர்கள் முயன்றிருந்த நிலையில் படகுக் கோளாறு காரணமாக தத்தளித்தவர்களை வியட்நாமிற்கு பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டு தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் தம்மை நாட்டுக்கு மீண்டும் அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும் தம்மை ஐ.நா.பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://island.lk/wp-content/uploads/2022/05/ali-sabry.jpg

இவ்வாறான நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் வீரகேசரியிடத்தில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி ஆபத்தான படகுப்பயணத்தில் பாதிக்கபட்டு வியட்நாமில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதுவர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பாக அவர்களுக்கு தற்காலிக கடவுச்சீட்டுக்கள் மற்றும் விமானச் சீட்டுக்களை வழங்கி மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாடுதிரும்ப மறுத்தால்?

எனினும் நாட்டில் காணப்படுகின்ற பொருளதார நெருக்கடிகளை மையப்படுத்தியே படகு மூலம் கனடாவுக்குச் செல்வதற்கு முயற்சிகளை குறித்த நபர்கள் மேற்கொண்டுள்ளார்கள். அவர்கள் மீண்டும் தம்மை நாட்டுக்கு அழைத்து வருவதை மறுப்பார்காளாக இருந்தால் அதன் பின்னர் சதேசச் சட்டங்களும் வியநட்நாமின் குடிவரவு குடியகல்வுச் சட்டங்களும் தான் அவர்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும்.

குறிப்பாக ஐ.நா.வின் புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் உள்ளிட்ட தரப்பினரே தீர்மானங்களை எடுக்கவுள்ளனர் என்றார்.

https://www.virakesari.lk/article/139843

  • கருத்துக்கள உறவுகள்

வியட்நாமிலுள்ள 303 இலங்கையர்களுக்கு அவசியமான மனிதாபிமான உதவிகளை வழங்கல் குறித்து விரிவான கலந்துரையாடல்

By Digital Desk 2

16 Nov, 2022 | 09:36 AM
image

(நா.தனுஜா)

 

 

வியட்நாமில் உள்ள 303 இலங்கைக் குடியேற்றவாசிகளுக்கு அவசியமான மனிதாபிமான உதவிகளை வழங்கவிருப்பதாக புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு அறிவித்துள்ள நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் அவ்வமைப்பின் பிரதிநிதிகளுக்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான விரிவான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றுள்ளது.

வியட்நாம் கடற்பகுதியில் கடந்த 8 ஆம் திகதி மீட்கப்பட்ட 303 இலங்கைக் குடியேற்றவாசிகளுக்கு அவசியமான மனிதாபிமான உதவிகளை வழங்கவிருப்பதாக புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு நேற்று முன்தினம் திங்கட்கிழமை அறிவித்திருந்தது.

ஹனோயிலுள்ள இலங்கைத்தூதரகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கை மற்றும் வியட்நாம் அரசாங்கங்கள், இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளிலுள்ள புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் முகவரகங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்கள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைவை ஏற்படுத்தி சர்வதேச சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் ஏற்ப இலங்கைக் குடியேற்றவாசிகளுக்கு அவசியமான உதவிகளும் பாதுகாப்பும் வழங்கப்படுமென அவ்வமைப்பு தெரிவித்திருந்தது.

2.jpg

இவ்வாறானதொரு பின்னணியிலேயே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் இலங்கைக்கிளையின் தலைவர் மற்றும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் பணிப்பாளர் நாயகத்தின் இந்தியா, பூட்டான் ஆகிய நாடுகளுக்கான விசேட பிரதிநிதி ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது வியட்நாமில் உள்ள 303 இலங்கைக் குடியேற்றவாசிகள் விவகாரத்திற்குத் தீர்வுகாணல், அதில் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் ஒத்துழைப்பு மற்றும் இலங்கைக் குடியேற்றவாசிகளுடன் நிகழ்நிலை முறைமையின் ஊடாகத் தொடர்புகொள்ளல் ஆகிய விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

1.jpg

 

 

https://www.virakesari.lk/article/140158

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கப்பலில்  பயணித்தவர்களில் அரசாங்க உத்தியோகத்தர்களும் அடங்குவதாக செய்தி ஒன்று சொல்கிறது, அவர்களும் மனிதர்கள்தான். ஆனால் .....இலங்கை கடற்படையினரும் இருக்கக்கூடும் என நான் சந்தேகிக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka Refugees: 'இலங்கைக்கு திருப்பி அனுப்பினால் உயிரை மாய்ப்போம்' கண்ணீரில் அகதிகள்

வியட்நாமில் உள்ள 306 இலங்கை அகதிகள். கனடாவுக்கு செல்ல இருந்தபோது விபத்தில் சிக்கிய இலங்கை மக்கள். மீண்டும் நாடு திரும்பமாட்டோம் என கண்ணீர்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழர்களே காப்பாற்றுங்கள் என்று கேட்கின்றனர். இவர்களுக்கு உலகத் தமிழர்கள் எவ்வாறு இந்த விடயத்தில் உதவிசெய்ய முடியும். 

எனக்கு தெரிந்த வரையில் கனடா இவர்களை ஏற்றுக்கொள்ளாது, இவர்களுக்கு எம்மால் என்ன செய்யமுடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

உயிராபத்தான  கடற் பயணம்மூலம் புலம் பெயருவது கண்டிப்பாக ஏற்க முடியாது . அதி ஊக்குவிக்கவும் கூடாது .ஆனாலும் மனிதபிமான அடிப்படையிலும் , கனடாவுக்கு மக்கள்தேவை இருப்பதாலும்  அவர்களது நிலை கருதியும் கனடா லங்கவுக்கு நடபு நாடு (?)   என்பதாலும் கவனத்திலெடுக்க  இங்கு வாழும் புலம் பெயர்மக்கள் சார்பாக  கேட்டுப்பார்க்கலாம்  என்பதில் தவறில்லை. ஏற்கனவே அகதிகள் ஏற்றுக் கொண்ட ஒரு நாடு . இவர்கள் கோரிக்கைக்கு   காரணம்  உண்மையானதாய் இருந்தால்  பரிசீலிப்பது தற்போதையஅவர்களின் நிலைமை கருதி அகதிகளின் அபலைக் குரலுக்கு   பரிசீலிக்கலாம்.அடுத்த எம் பி  யாக என்னை   தெரிவு செய்தால் நிச்சயம் இவர்களுக்கு வாதாடுவேன். 😀

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிலாமதி said:

அவர்களது நிலை கருதியும் கனடா லங்கவுக்கு நடபு நாடு (?)   என்பதாலும் கவனத்திலெடுக்க  இங்கு வாழும் புலம் பெயர்மக்கள் சார்பாக  கேட்டுப்பார்க்கலாம்  என்பதில் தவறில்லை.

சிறி லங்காவுக்கு ரஷ்யா தான் நட்பு நாடு. ரஷ்ய புரினுக்கு வலது கரமாக  ரஷ்ய தொலைகாட்சியாக பல புலம் பெயர் தமிழர்கள் இருப்பதனால் அவர்களை கொண்டு  புரினிடம கேட்டுப்பார்க்கலாம் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அகதிகள் இருவர் வியட்நாமில் தற்கொலை முயற்சி!

இலங்கை அகதிகள் இருவர் வியட்நாமில் தற்கொலை முயற்சி!

வியட்நாமில் அகதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளில் இருவர் தற்கொலை முயற்சி மேற்கொள்ள முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் நேற்றிரவு தற்கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளதாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், மற்றுமொருவரின் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த 306 இலங்கையர்கள் உரிய விஸா நடைமுறைகளின் பிரகாரம் மியன்மார் சென்று அங்கிருந்து கப்பல் ஒன்றின் மூலம் சட்டவிரோதமான முறையில் அகதிகளாக கனடா நோக்கி செல்ல முயற்சித்திருந்தனர்.

இதேவேளை தங்களை இலங்கைக்கு மீள அனுப்பும்  முயற்சிகள் மேற்கொண்டு வருகின்ற நிலையில் தாம் அங்கு செல்ல தயார் இல்லை என தெரிவித்தே தற்கொலை முயற்சியை மேற்கொண்டமை குறிப்பிடதக்கது.

https://athavannews.com/2022/1311228

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.