Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில், 15 வயதான சிறுமியை திருமணம் செய்து வைக்காததால், வன்முறை கும்பலால் வீடொன்று தீக்கிரை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில். வன்முறை கும்பலால் வீடொன்று தீக்கிரை!

யாழில்,  15 வயதான சிறுமியை  திருமணம் செய்து வைக்காததால்,  வன்முறை கும்பலால் வீடொன்று தீக்கிரை!

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்றினால் வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டள்ளது.

குறித்த வீட்டினுள் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) உட்புகுந்த நால்வர் அடங்கிய வன்முறை கும்பல் வீட்டில் இருந்தோரை அச்சுறுத்தி வீட்டுக்கு தீ வைத்துள்ளனர்.

தீ வீடு முழுவதும் பரவியதில் வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை உட்பட பெறுமதியான பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

குறித்த வீட்டில் வசிக்கும் 15 வயதான சிறுமியை தனக்கு திருமணம் செய்து தருமாறு இளைஞன் ஒருவர் வற்புறுத்தி வந்ததாகவும் , அதற்கு வீட்டார் சம்மதிக்காத நிலையில் , இளைஞனின் குழுவால் அவர்களுக்கு அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வந்த நிலையில் , அந்த குழுவினரே வீட்டினுள் நுழைந்து வீட்டுக்கு தீ வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://athavannews.com/2022/1310060

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா, 15 வயது சிறுமியை திருமணம் செய்தால் உள்ள போகவேணும் என்று தெரியாதோ?!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஏராளன் said:

அடப்பாவிகளா, 15 வயது சிறுமியை திருமணம் செய்தால் உள்ள போகவேணும் என்று தெரியாதோ?!

இவர்கள் செய்த வேலையால்…. அந்தக் குடும்பமே வீட்டை இழந்து விட்டது.
குற்றம்  செய்தவர்களிடம் இருந்தே, பணத்தை அறவிட்டு
அந்தக் குடும்பத்திற்கு,  புது வீட்டை கட்டிக் கொடுக்க வேண்டும்.

இவர்களிடம் பணம் இல்லா விட்டால்… இவர்களின்  உடல் உறுப்புகளான
ஒரு  கிட்னி, ஒரு கண் போன்றவற்றை அகற்றி… வெளி நாட்டுக்கு டாலரில் விற்று,
வரும் பணத்தில் இவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, தமிழ் சிறி said:

தண்டனைகள் கடுமையாகும் போது குற்றங்கள் குறையும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

5 hours ago, ஏராளன் said:

அடப்பாவிகளா, 15 வயது சிறுமியை திருமணம் செய்தால் உள்ள போகவேணும் என்று தெரியாதோ?!

இப்போ யாழ் குடா நாட்டில் ஏழாலைப் பகுதிதான் முண்ணணியில் நின்று செஞ்சரி அடிக்குது. 

இங்கேதான் கசிப்புக்காச்சல் கஞ்சா கடத்தல் பவுடர் மாவா ஐஸ் போன்றவைகளின் கையாள்கையும் பாவனையும் அதிகமாக இருக்குது.

ஏழாலைப்பகுதியில் வெதுப்பகத்தில் வேலை செய்யும் ஒருவர் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில்படிக்கும் பதின் நாஙு வயதுச் சிறுமியுடன் பழகி சிறுமி இப்போது கற்பமாகி இருக்குது. தவிர திருமணத்துக்கு வெளியேயான தொடர்புகளும் இப்போது அதிகமாக இப்பகுதியில் காணப்படுகிறது. 

பெண்பிள்ளைகளுக்கோ அல்லது ஆண்களுக்கோ திருமணப்பேச்சுவார்த்தை வந்தால் மிகவும் வன்முறைக்கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதால் பேச்சுக்காலின் இறுதியில் எல்லோரும் தலைதெறிக்க ஓடுறாங்கள்.

இப்போ இந்தப்பகுதியில் ஒரு பெண் புதிதாக வழக்குரைஞராக வந்திருக்கிறா அவரது காட்டில் நல்ல மழையாம், அவரது தகப்பனாரிடம் ஒருவர் இதுபற்றி கூறியபோது சட்டத்தில இதுக்கெல்லம் இடமிருக்கு என அவரே சட்டம் கதைக்கிறாராம்.

யாழ் இந்துக்கல்லூரியில் பள்ளிக்கூடத்தில் சேர்க்க கையூட்டு வாங்கிய ஒரு  அதிபர் இப்ப இன்னுமொரு பிரச்சனையில் மாட்டுப்பட்டிருக்கிறார் கல்லுண்டாயில ஒரு காணியை ஒரு பிரக்கிராசியோடு சேர்ந்து வியாபாரி ஒருவருக்கு கள்ளமாக எழுதியதில் சிக்கலில மாட்டுப்பட்டுபோனார்.

இவருக்காகவும் பிரக்கிராசிக்காகவும் வழக்காடியது ரெலோ சிறீகாந்தா அதாவது அனியாயத்தை எதிர்த்து சிறீசபாரத்தினத்துடன் போராடப்போனவர் இப்போ கள்ளருக்கு மல்லுக்கட்டுறார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Elugnajiru said:

கண்டபடி எழுதினா வெட்டுவிழும் என்று சொல்றீங்க?
யாழ்ப்பாணத்தில கிரிமினல் வழகக்கு பேசி உடைப்பதில் நீங்க சொன்ன பிறக்கிறாசி தானாம் முதல்வர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

கண்டபடி எழுதினா வெட்டுவிழும் என்று சொல்றீங்க?
யாழ்ப்பாணத்தில கிரிமினல் வழகக்கு பேசி உடைப்பதில் நீங்க சொன்ன பிறக்கிறாசி தானாம் முதல்வர்.

முதலில் யாழ் மாநகரசபை அங்கத்தவர் றெமீடிசியஸ், அடுத்தது சிறீகாந்தா, மல்லாகத்தில் கீர்தனா, ஏழாலையில் கீதா, இப்படிப் பல வகையறாக்கள் திரியினம். இதைத் தவிர கனக்கப்பேர் இருக்கினம் எனக்குத் தெரிந்தவகையில் இவர்கள். 

என்ன எனது சட்டைப்பையில் ஒரு ரூபாய்க்காசு இருந்தாலும் அதில் வியர்வை வாசனை வரும் ஆனால் அவர்களிடம் மில்லியஙணக்கில் இருந்தாலும் இரதவாடையும் வன்முறை வாசமுமே. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தோட பேரன் ஜி ஜி பொன்னரும் இப்பசிச் சம்பாதிச்சவர்தான் ஆனால் அவருக்கு காரைதீவில கலியானம் முடிச்சவகையில் பெரும்தொகை சொத்து வந்து சேர்ந்தது கஜன் இப்போது வாழும் குயின் ஸ்ரீச் வீடு சேர் பொன் அருணாசலத்தினது ஆகும். பின்பு அவர்கள் விலைக்கு வாங்கிவிட்டார்கள் வீட்டில் பழையகாலத்து பிறாண்டட் கார்கள் அழகுக்காக இப்போதும் நிற்பாடி வைத்திருகினம் அதைவிட கொம்மேர்சல் வங்கியின் பங்குகளில் கணிசமான அளவு கஜனது தாயாருக்குச் சொந்தம். கஜனது தாயால் முன்னர் உதவி அரசாங்க அதிபராக இருந்த முருகேசம்பிள்ளையின் மகளாவார் அவர் ஒரு வைத்தியர் அந்த வழியிலும் பெரும்தொகை சொத்து வந்து சேர்ந்தது.

உண்மையாய் 16,18 வயதிலும் இரவில் தனியாய் பெண்கள் திரிந்தது ஒரு பொற்காலம். அது இப்ப போர்க்காலமாய் தெரியவில்லை .
வாழ்க்கையில் பிரச்சினை இல்லாவிடடாலும் பிரச்சினை தான்.இது எனது கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்பிடியிருந்த பூமி இப்பிடியாகீட்டுது. வீட்டுக்கு வீடு பிரபாகரன்கள் அவசியம் தேவைப்படுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஏராளன் said:

அடப்பாவிகளா, 15 வயது சிறுமியை திருமணம் செய்தால் உள்ள போகவேணும் என்று தெரியாதோ?!

அவர் சிறுமியை திருமணம் செய்தால் என்ன, செய்யாவிட்டால் என்ன? அவர் சிறைக்கு போகவேண்டியவரே என்று அவரது தலையெழுத்து!

  • கருத்துக்கள உறவுகள்

சமூகச் சீர்கேடில் இப்போது யாழ் குடாநாடுதான் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இது ஏதோ சாபம் போல் தெரிகிறது,

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் வந்தால் தலைநகர் கொழும்பில் சமாளிக்கமுடியாத பிரச்சனைகளோ அன்றேல் அனர்த்தங்களோ நடைபெறுகின்றன. 

எதிர்வரும் சுதந்திர தினத்தை சிங்களம் இவ்வளவு கடஙளுக்கும் மத்தியில் மிக விமர்சையாகக் கொண்டாடத் திட்டமிடுகிறது, அ அனால் அவர்கள் நினைப்பதுபோல் நடக்குமா என்பது கேள்விக்குறியே, 

அறத்தோடு வாழ்ந்த ஒருவனது ஆன்மா தப்புச்செய்தவர்களை ஏதோ செய்கிறது என்பதில் எனக்குச் சிறிதளவு நம்பிக்கை ஏற்படுகிறது.

முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தபோது யாழ் குடாநாட்டில் சொக்கட்டான் பந்தல் போட்டுக் கொண்டாட்டங்கள் செய்ததை யாரும் மறுக்க முடியாது, இதேபோல் விஜை ஆண்டனியையும் விஜையது அம்மாக்கரி சோபா சந்திரசேகரையும் சிங்களம் கூட்டிவந்து அந்த வேளையில் புத்துணர்ச்சி இசைக்கச்சேரி என யாழ் குடாநாடு எங்கும் நடாத்தியது அந்த இசைக்கச்சேரி நடக்கும் அதே நேரத்தில் சில பகுதியில் பல்குழல் ஏவுகணைகள் இசைக்கச்சேரி மேடைக்கு மேலாகவே சென்றதை அவதானித்தவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன் அப்படியிருந்தும் விஜை ஆண்டனியில் நாக்க மூக்க பாடலுக்கு குஞ்சு குருமானிலிருந்து கிழடுகட்டைகள் வரைக்கும் வைலா ஆடியதக்கேள்விப்பட்டிருக்கிறேன்.

இப்போது சோபா சந்திரசேகரன் பெத்த மகனாலேயே கலைக்கப்பட்டு புத்திர சோகத்துடன் வேறு வீட்டில் வாழ்கிறார்.

மிருதங்க வித்துவான் கண்ணதாசனுக்கு எதிராக ஒரு தாயார் தனது பிள்ளையை கட்டாயப்படுத்தி அடிபாட்டுக்குக் கூட்டிச்சென்றார் எனச் சாட்சி சொல்லி (அந்தத் தாயாரில் வேதனையை நான் மலினப்படுத்தவில்லை மன்னிக்கவும்) கண்ணதாசனுக்குச் சிறைத்தண்டனை பெற்றுக்கொடுத்தார். ஆனால் சுண்ணாகத்தில் இரண்டு தாய்மார் தங்கள் பிள்ளைகளை சிங்களக் காவல் துறையில் ஒப்படைத்து இந்தபிள்ளை திருந்தாவிட்டால் இனிமேல் எனக்கு வேண்டாம் எனக்கூறியதை யாராலும் மறுக்க முடியாது.

தவிர வன்முறையையும் சீர்கேட்டையும் கட்டுப்படுத்த எந்தத் தரப்புக்கும் சுமார் நாற்பத்தி எட்டு மணி நேரம் போதுமானது ஆனால் அப்படிச்செய்யக்கூடியவர்களே இதுவரை ஒரு அறிக்கைகூட வெளியிடவில்லை என்பது அனுபவியுங்கோடா எனப் பார்த்துக்கொண்டிருப்பதுபோல் இருக்கிறது.

புலம்பெயர் தேசத்தில் பெயர் சொல்ல விரும்பாத ஒருபகுதி எந்த எந்த இடங்களில் யார் யார் போதவஸ்து வினியோகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் அவர்களுக்கும் வடக்குக் கிழக்கில் வாழும் முஸ்லீம்களுக்கும் என்ன தொடர்பு எனப் பல புள்ளிவிபரங்களை அடுக்குகிறார்கள் அவர்களிடம் கேட்டால் எங்கள் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன எனக் கூறுகிறார்கள்.

அவர்களை மீறி ஒரு நாட்டிலுள்ள பொறுப்பாளர் ஒருவர் செயற்படப்போய் அதன் காரணமாக ஒரு வைத்தியர் உட்பட கொஞ்சப்பேர் உள்ளுக்குள்ள போயிருக்கினம் காரணம் இந்தியாவும் காங்காங்கிலிருந்து செயற்படும் சீன உளவு நிறுவனமுமாகும்.

ஆனால்

"அறம் நின்று கொல்லும்"

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Elugnajiru said:

"அறம் நின்று கொல்லும்"

👌👍

வார்த்தை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Elugnajiru said:

சமூகச் சீர்கேடில் இப்போது யாழ் குடாநாடுதான் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இது ஏதோ சாபம் போல் தெரிகிறது,

ஆனால்

"அறம் நின்று கொல்லும்"

மீராவுக்குக் கெட்ட கோபம் வரப்போகிறது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Elugnajiru said:

அதோட இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்! நாம் எல்லாம் சொந்த இடங்களை விட்டோடி வன்னியில் தஞ்சம் அடைந்தபோதும், கிளிநொச்சியில் சமர் நடந்தபோதும், இழப்புகளை கொடுமைகளை திசை திருப்ப சிங்களம் பயன்படுத்தியது கிரிக்கெற், மக்களை அதிலே திளைக்க விட்டு அந்த வெற்றிக்கொண்டாட்டங்களில் எங்கள் துயர் அடிபட்டுப்போனது. ஏன் இந்தப்பொருளாதார நெருக்கடியில் கூட விளையாட்டு வெற்றிகளால் தன்னை மறைத்துக்கொண்டது சிங்களம்? வெற்றியாளரை கவுரவிப்பதை நான் தவறு சொல்லவில்லை ஆனால் தனது குறைகளை மறைக்க இவற்றைப்பயன்படுத்தி தன்னை  உயர்த்தி காட்டியது சிங்களம். இன்று அந்தகிரிக்கெற்றின் லட்ஷணத்தை உலகமே அறியும்!

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, satan said:

மேலதிகமாக இறுதிப்போரின்போது கருனாநிதியினது மகள் கனிமொழியைக் கைது செய்து அவரது வாய அத்கியது மட்டுமல்லாது 

இந்தியன் பிரீமியர் லீக்கின் துடுப்பாட்டப்போட்டிகளை சென்னையில் ஒழுங்குசெய்து தமிழ்நாட்டு மக்களை ரீ வி பெட்டியைவிட்டு நகரமுடியால் செய்தவிடையமும் இருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.