Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செம்மணி பகுதியில் ஏழு அடி உயரமான  சிவலிங்கம் பிரதிஷ்டை!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, MEERA said:

எங்கள் சொந்த மண்ணுடன்  தொடர்பேயில்லாத மேரி மாதாவுக்கும் யேசு நாதருக்கும் வானளாவ தேவாயலங்கள் உள்ளனவே? என்ன செய்வதாக முடிவெடுத்துள்ளீர்கள்?

நாளுக்கு நாள் மூலை முடுக்கெல்லாம் முளைவிடும் அல்லேலூயா திருச்சபைகளை என்ன செய்வது?

சிறு தெய்வ வழிபாட்டில் ஆர்வம் / நாட்டம் உள்ள உங்களின் வாகிபாகம் யாது இது தொடர்பாக?

உள்ள இடம் முழுக்க புத்தர் சிலை எண்டால் வாயை மூடிக்கொண்டு இருப்பினம்.

  • Replies 50
  • Views 3.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

செல்லம்ஸ்,

#ஊதுறா விசிலை 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

நான் எந்த சமயம் என்பது உங்களுக்கு தேவையற்ற விடயம்.

சிறு தெய்வ வழிபாடு வெள்ளையர்களின், அன்நியர்களின் வருகையோடு சீரழிந்தது. 

சிறு தெய்வ வழிபாட்டோ சைவ சமய வழிபாடோ நிறுவன மயப்படுத்தப்பட்ட முறையில் இடம்பெறவில்லை.

ஆனால் நாடு விட்டு நாடு வந்த கொள்ளையர்கள் தமது சமய வழிபாட்டு இடங்களை அமைத்து அதனை சட்டரீதியாக பதிவு செய்து ( சட்டத்தை கொண்டு வந்ததே அவர்கள்) எமது நிலங்களை அபகரித்தர்கள்.

அதன் தொடர்ச்சியே  சைவ சமயமும் நிறுவன மயப்பட்டு இன்று இந்து சமயத்தால் ஆட்கொள்ளப்பட்டுள்ளது. இனியும் சிறு தெய்வ வழிபாடு என்று நீலிக் கண்ணீர் வடிக்காமல் காத்திரமாக ஏதாவது செய்யுங்கள்.

சிறு தெய்வங்களுக்கு இங்கே இடமில்லை. அழிந்துவிடக்கூடும் என்று கூறும்போது தங்களுக்கு ஏன்  கோபம் வருகிறது? 

அன்னிய மதங்களை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக உள்ள தாங்கள் ஏன்  சிறுதெய்வ வழிபாட்டை நிராகரிக்கிறீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உள்ள இடம் முழுக்க புத்தர் சிலை எண்டால் வாயை மூடிக்கொண்டு இருப்பினம்.

சாமியர், 

இஞ்ச எல்லா  இடமும் ஆஞ்சநேயருக்கும், ஐயப்பனுக்கும்  மிகப்பெரிய கோவில் கட்டுகிறார்கள். அதையிட்டு ஒருவரும் கவலை கொள்ளவில்லை. மக்கள் குடியிருக்கும், குடியேறும் எல்லா  இடங்களிலும் கோவில் கட்டுகிறார்கள், அதை ஒருவருமே கேள்விக்குட்படுத்துவதில்லை. 

கோவில் இல்லா இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் செம்மணியில் கட்டப்படுவது கொஞ்சம் ஓவர் 

 இடுகாட்டின் மீது கோவில் கட்டப்படும் வழமை தமிழரிடையே இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

சிறு தெய்வங்களுக்கு இங்கே இடமில்லை. அழிந்துவிடக்கூடும் என்று கூறும்போது தங்களுக்கு ஏன்  கோபம் வருகிறது? 

அன்னிய மதங்களை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக உள்ள தாங்கள் ஏன்  சிறுதெய்வ வழிபாட்டை நிராகரிக்கிறீர்கள்? 

தமிழர்களை யார்? அற்ப சொற்ப சலுகைகளுக்காக தங்கள் மண்ணுடன் தொடர்பே இல்லாத மதங்களுக்கு தாவியவர்களாச்சே! அவர்கள் அன்னிய மதங்களை ஏற்றவர்களாச்சே? இன்றும் மதம் மாறி வருகிறார்களே அவர்களிடம் உங்கள் சிறுதெய்வ வழிபாட்டை எடுத்து செல்லுங்கள்.0

1 minute ago, Kapithan said:

சாமியர், 

இஞ்ச எல்லா  இடமும் ஆஞ்சநேயருக்கும், ஐயப்பனுக்கும்  மிகப்பெரிய கோவில் கட்டுகிறார்கள். அதையிட்டு ஒருவரும் கவலை கொள்ளவில்லை. மக்கள் குடியிருக்கும், குடியேறும் எல்லா  இடங்களிலும் கோவில் கட்டுகிறார்கள், அதை ஒருவருமே கேள்விக்குட்படுத்துவதில்லை. 

கோவில் இல்லா இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் செம்மணியில் கட்டப்படுவது கொஞ்சம் ஓவர் 

 இடுகாட்டின் மீது கோவில் கட்டப்படும் வழமை தமிழரிடையே இல்லை. 

செம்மணியில் எங்கு இடுகாடு உள்ளது?

செம்மணி என்பது உங்களுக்கு கிருசாந்திக்கு பிறகு தான் தெரிய வந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

வடக்கு கிழக்கே இரத்த வரலாற்றைக் கொண்டது. அதற்காக கட்டடம் கட்டாமலா இருக்கிறீர்கள்? 

மேலும் கிருசாந்தி புதைக்கப்பட்ட இடம் மட்டுந்தான் செம்மணி அல்ல. 

கிருசாந்தி மட்டுமல்ல, அங்கே மேலும் 650 பேர் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். 

சிங்களவனே தேவையில்லை. நாங்களே எங்கள் வரலாற்றை மறைத்துவிடுவோம்.  பிறகு ஆய் ஊய் என்று  கத்துவோம்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

கிருசாந்தி மட்டுமல்ல, அங்கே மேலும் 650 பேர் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். 

சிங்களவனே தேவையில்லை. நாங்களே எங்கள் வரலாற்றை மறைத்துவிடுவோம்.  பிறகு ஆய் ஊய் என்று  கத்துவோம்

செம்மணியில் சுடலை கிருசாந்தியின் சம்பவத்திற்கு முன்னரே உள்ளது. அது கூட உங்களுக்கு தெரியவில்லை.

அந்த வரலாற்றிற்காக நீங்கள் இதுவரை ஒன்றும் புடுங்கியதல்லை இனியும் புடுங்க போவதும் இல்லை…

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

1) தமிழர்களை யார்? அற்ப சொற்ப சலுகைகளுக்காக தங்கள் மண்ணுடன் தொடர்பே இல்லாத மதங்களுக்கு தாவியவர்களாச்சே! அவர்கள் அன்னிய மதங்களை ஏற்றவர்களாச்சே? இன்றும் மதம் மாறி வருகிறார்களே அவர்களிடம் உங்கள் சிறுதெய்வ வழிபாட்டை எடுத்து செல்லுங்கள்.0

 2) செம்மணியில் எங்கு இடுகாடு உள்ளது?

செம்மணி என்பது உங்களுக்கு கிருசாந்திக்கு பிறகு தான் தெரிய வந்துள்ளது.

1) தற்போது  வெளிநாடுகளுக்கு பஞ்சம் பிழைக்க வந்ததுபோல அப்போதும் மக்கள் பஞ்சம் பிழைக்க சமயம் மாறியிருப்பார்கள் என நினைக்கிறேன். 

👇

தியாகி அறக்கட்டளை நிறுவுனரின் பிறந்தநாளில் அவரிடம் உதவி பெறுவதற்கா காத்திருந்த மக்கள். 

https://peoplenews.lk/article/24191

சிறு தெய்வ வழிபாடு என்றவுடன் ஏன் தங்களுக்கு கோபம் வருகிறது ? 

2) அப்போ, கொன்று புதைக்கப்பட்ட 650 ஆட்களின் புதைகுழிகளின் மீதும் சமதி கட்டலாம் என்கிறீர்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

1) தற்போது  வெளிநாடுகளுக்கு பஞ்சம் பிழைக்க வந்ததுபோல அப்போதும் மக்கள் பஞ்சம் பிழைக்க சமயம் மாறியிருப்பார்கள் என நினைக்கிறேன். 

👇

வெளிநாட்டில் பஞ்சம் பிழைத்துக் கொண்டு அங்குள்ள மக்களுக்கு பாடம் எடுக்க சிலர் முயல்வது வேடிக்கை

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

செம்மணியில் சுடலை கிருசாந்தியின் சம்பவத்திற்கு முன்னரே உள்ளது. அது கூட உங்களுக்கு தெரியவில்லை.

அந்த வரலாற்றிற்காக நீங்கள் இதுவரை ஒன்றும் புடுங்கியதல்லை இனியும் புடுங்க போவதும் இல்லை…

கதையை மாற்றாதீர்கள் 🤣

இதுவரை நான் ஒன்றுமே புடுங்காதபடியால் நீங்கள்  வரலாற்றை மறைப்பீர்களோ 

குற்ற உணர்வு கோபத்தை உண்டுபண்ணுகிறது 

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு உண்மையில் செம்மணியின் விஸ்தீரணமும் தெரியவில்லை படுகொலை நடந்த இடமும் தெரியவில்லை. மேலும் எத்தனையோ இடுகாடுகளில் சைவ சமய அடையாளங்கள் உள்ளன.

மேலும் இன்றையை சூழலில் உதவி செய்வதாக விளம்பரம் செய்தால் இவ்வாறு தான் சனம் அலை மோதும்.

காரில் வந்து சமூர்த்தி பணம் பெறும் ஏழைகளையும் நேரடியாக கண்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

வெளிநாட்டில் பஞ்சம் பிழைத்துக் கொண்டு அங்குள்ள மக்களுக்கு பாடம் எடுக்க சிலர் முயல்வது வேடிக்கை

உங்கள் தாராள மனதுக்கு வாழ்த்துக்கள். 

நாங்கள் எல்லோரும் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்பதையும் ஏற்றுக்கொள்கிறீர்கள், வரலாற்றை மறைப்பதயும் ஏற்றுக்கொள்கிறீர்கள், சிறுதெய்வ வழிபாட்டு முறைகள்  அழிந்துபோவதையும் ஏற்றுக்கொள்கிறீர்கள், அன்னிய மதங்களின் வருகையையும் ஏற்றுக்கொள்கிறீர்கள், கோபமும் கொள்கிறீர்கள். 

வாழ்த்துக்கள். நன்றி  🙏

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சாத்தியமற்ற ஒன்றிற்கு போகுமாறு தாயக மக்களுக்கு அறவுரை சொல்லும் நிலையில் நீங்களும் இல்லை உங்கள் அறிவுரையை கேட்கும் நிலையில் அவர்களும் இல்லை.

அன்னிய மதம் வந்து தான் மாதாவிற்கும் யேசுநாதருக்கும் வழிபாட்டு இடங்கள் உள்ளன. இதை யார் மறைத்தார்கள்?

1 minute ago, Kapithan said:

உங்கள் தாராள மனதுக்கு வாழ்த்துக்கள். 

நாங்கள் எல்லோரும் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்பதையும் ஏற்றுக்கொள்கிறீர்கள், வரலாற்றை மறைப்பதயும் ஏற்றுக்கொள்கிறீர்கள், சிறுதெய்வ வழிபாட்டு முறைகள்  அழிந்துபோவதையும் ஏற்றுக்கொள்கிறீர்கள், அன்னிய மதங்களின் வருகையையும் ஏற்றுக்கொள்கிறீர்கள், கோபமும் கொள்கிறீர்கள். 

வாழ்த்துக்கள். நன்றி  🙏

உங்களுக்கு வேண்டுமானால் படுகொலை செய்யப்பட்ட 650 நினைவாக ஓர் நினைவுக் கல்லையாவது நடுங்கள். செம்மணியில் இடம் தாராளமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

1) உங்களுக்கு உண்மையில் செம்மணியின் விஸ்தீரணமும் தெரியவில்லை படுகொலை நடந்த இடமும் தெரியவில்லை. மேலும் எத்தனையோ இடுகாடுகளில் சைவ சமய அடையாளங்கள் உள்ளன.

2) மேலும் இன்றையை சூழலில் உதவி செய்வதாக விளம்பரம் செய்தால் இவ்வாறு தான் சனம் அலை மோதும்.

காரில் வந்து சமூர்த்தி பணம் பெறும் ஏழைகளையும் நேரடியாக கண்டுள்ளேன்.

ஐயா, 

1) நான் யாழ் நகரைச் சேர்ந்தவன். 

2) மக்கள் தேவைகளுடன் இருக்கிறார்கள் என்பதைக் கூறினால் அதைக்கூட நேர்மையாக ஏற்றுக்கொள்ள மனம் வராதோ

24 minutes ago, MEERA said:

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, MEERA said:

உங்களுக்கு வேண்டுமானால் படுகொலை செய்யப்பட்ட 650 நினைவாக ஓர் நினைவுக் கல்லையாவது நடுங்கள். செம்மணியில் இடம் தாராளமாக உள்ளது.

அதாகப்பட்டது, நான் படுகொலைக்கான சான்றுகளை மறைப்பேன். நீ வேண்டுமானால் நினைவுக்கல் நாட்டு. 

சூப்பரப்பூ 👏

☹️

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kapithan said:

ஐயா, 

1) நான் யாழ் நகரைச் சேர்ந்தவன். 

2) மக்கள் தேவைகளுடன் இருக்கிறார்கள் என்பதைக் கூறினால் அதைக்கூட நேர்மையாக ஏற்றுக்கொள்ள மனம் வராதோ

1. ஆனால் செம்மணியின் விஸ்தீரணம் தெரியாது உங்களுக்கு.

2. மக்கள் எப்போது தேவைகள் இன்றி இருந்தார்கள். நீங்கள் வசிக்கும் நாட்டிலேயே ஆயிரக்கணக்கானவர்கள் தேவைகளுடன் உள்ளனர். உங்களதும் அங்குள் அரச மத நிறுவனங்களனதும் வகிபாகம் யாது?

12 minutes ago, Kapithan said:

அதாகப்பட்டது, நான் படுகொலைக்கான சான்றுகளை மறைப்பேன். நீ வேண்டுமானால் நினைவுக்கல் நாட்டு. 

சூப்பரப்பூ 👏

☹️

இங்கு படுகொலைக்கான சான்றை யார் அழித்தது. 

கோசானின் கூற்றுப்படி இரண்டிற்குமான தூரம் 500 மீட்டர்கள்.

இடம் தாராளமாகவே உள்ளது.

மேலும் இந்த செயற்பாட்டினால் சான்றுகள் மறைக்கப்டுமாக இருந்தால் இராணுவம் இவ்வளவு கெடுபிடிகளை கொடுத்திருக்காது.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

அதாகப்பட்டது, நான் படுகொலைக்கான சான்றுகளை மறைப்பேன். நீ வேண்டுமானால் நினைவுக்கல் நாட்டு. 

சூப்பரப்பூ 👏

☹️

அதாகப்பட்டது பஞ்சம்பிழைக்க வெளிநாட்டில் வசதியாக இருந்து கொண்டு அங்குள்ளவர்களை சிறுதெய்வ வழிபாடு செய்.

சூப்பரப்பு 👏👏👏👏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

அதாகப்பட்டது பஞ்சம்பிழைக்க வெளிநாட்டில் வசதியாக இருந்து கொண்டு அங்குள்ளவர்களை சிறுதெய்வ வழிபாடு செய்.

சூப்பரப்பு 👏👏👏👏

நாங்கள் தமிழரை பஞ்சப்பராரிகளாக வைத்தொருப்போம. அதற்கு எங்களுக்கு வெட்கமே  வராது”. அவர்கள்  பஞ்சம் பிழைப்பதற்காக் மதம் மாறுவார்கள், நாடுநாடாய்ப்போய் பிச்சை எடுப்பார்கள. அந்தக் காசில் நாங்கள் இடுகாட்டின் மீது சமாதிகள் கட்டி இனப்படுகொலையை மறைப்போம். ஆனால் இதற்கெல்லாம் பஞ்சம் பிழைக்கப்போனவர்களின் காசு வேண்டும். 🤣

கோட்டபாயவைக் கொண்டுதான் திறப்பு விழாவோ⁉️

🤣

1 hour ago, MEERA said:

1. ஆனால் செம்மணியின் விஸ்தீரணம் தெரியாது உங்களுக்கு.

2. மக்கள் எப்போது தேவைகள் இன்றி இருந்தார்கள். நீங்கள் வசிக்கும் நாட்டிலேயே ஆயிரக்கணக்கானவர்கள் தேவைகளுடன் உள்ளனர். உங்களதும் அங்குள் அரச மத நிறுவனங்களனதும் வகிபாகம் யாது?

இங்கு படுகொலைக்கான சான்றை யார் அழித்தது. 

கோசானின் கூற்றுப்படி இரண்டிற்குமான தூரம் 500 மீட்டர்கள்.

இடம் தாராளமாகவே உள்ளது.

மேலும் இந்த செயற்பாட்டினால் சான்றுகள் மறைக்கப்டுமாக இருந்தால் இராணுவம் இவ்வளவு கெடுபிடிகளை கொடுத்திருக்காது.

குண்டுச் சட்டிக்குள் இருந்துகொண்டு குதிரை ஓடுங்கோ 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

1. ஏற்கனவே திறந்தாச்சு. மேலும் இதை யார் எப்போது திறந்தார்கள் என்பது செய்தியில் தெளிவாக உள்ளது.

16 minutes ago, Kapithan said:

நாங்கள் தமிழரை பஞ்சப்பராரிகளாக வைத்தொருப்போம. அதற்கு எங்களுக்கு வெட்கல் வராது”. அவர்கள்  பஞ்சம் பிழைப்பதற்காக் மதம் மாறுவார்கள், நாடுநாடாய்ப்போய் பிச்சை எடுப்பார்கள. அந்தக் காசில் நாங்கள் இடுகாட்டின் மீது சமாதிகள் கட்டி இனப்படுகொலையை மறைப்போம். ஆனால் இதற்கெல்லாம் பஞ்சம் பிழைக்கப்போனவர்களின் காசு வேண்டும். 🤣

கோட்டபாயவைக் கொண்டுதான் திறப்பு விழாவோ⁉️

🤣

குண்டுச் சட்டிக்குள் இருந்துகொண்டு குதிரை ஓடுங்கோ 

2. உங்கள் குதிரை எங்கே ஓடுகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, MEERA said:

1. ஏற்கனவே திறந்தாச்சு. மேலும் இதை யார் எப்போது திறந்தார்கள் என்பது செய்தியில் தெளிவாக உள்ளது.

2. உங்கள் குதிரை எங்கே ஓடுகிறது?

நன்றி வணக்கம் 🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kapithan said:

சாமியர், 

இஞ்ச எல்லா  இடமும் ஆஞ்சநேயருக்கும், ஐயப்பனுக்கும்  மிகப்பெரிய கோவில் கட்டுகிறார்கள். அதையிட்டு ஒருவரும் கவலை கொள்ளவில்லை. மக்கள் குடியிருக்கும், குடியேறும் எல்லா  இடங்களிலும் கோவில் கட்டுகிறார்கள், அதை ஒருவருமே கேள்விக்குட்படுத்துவதில்லை. 

கோவில் இல்லா இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் செம்மணியில் கட்டப்படுவது கொஞ்சம் ஓவர் 

 இடுகாட்டின் மீது கோவில் கட்டப்படும் வழமை தமிழரிடையே இல்லை. 

ஆஞ்சநேயரையும் ஐயப்பனையும் ஏற்கனவே யாழ்பகுதியில் ஒரு சில இடங்களில்  வழிபடுகின்றார்கள்.

On 8/12/2022 at 13:50, ஈழப்பிரியன் said:

பள்ளி மாணவி கிருசாந்தியை மறக்க முடியுமா?

இறந்தவர்களின் நினைவுத்தூபியாக அந்த சிவன் சிலை இருக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

இறந்தவர்களின் நினைவுத்தூபியாக அந்த சிவன் சிலை இருக்கட்டும்.

பயிண்ட் 👏🏾. மாவீரரை கூட ஒரு முகாமின் முகப்பை வைத்து நினைவுகூறுவதை போல (கோப்பாய், விளாங்குளம், தரவை).

  • கருத்துக்கள உறவுகள்+

"இனி எதையும் சிங்களவன் மறைக்க வேண்டியதில்லை. நாங்களே எல்லாவற்றையும் மறந்து, மறைத்து வருகிறோம்."

குறித்த கள உறுப்பினரை மட்டும் பொருட்படுத்தாமல் எல்லோருக்குமாக...

யாழ்களத்தில் நாமெல்லோரும் எழுதுவது பலராலும் படியெடுக்கப்பட்டு தாந்தாம் சொந்தமாக எழுதியதாக ஏனைய வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதை நான் பலதடவை கண்ணுற்றிருக்கிறேன். இம்முறை ஒருவர் துவிட்டரில் தன் திருவுருவப்படத்தோடோன கணக்கிலிருந்து அவ்வாறாக, இத்திரியில் ஒரு கள உறுப்பினர் எழுதியதை, அவரது அனுமதியில்லாமல் பதிவிட்டுள்ளார். அதை இங்கே பதிவிட்டுள்ளேன்.

துவிட்டரில் இவ்வாறாக செய்தவருக்கு நான் சொல்வதென்னவென்றால் - நீங்கள் யாழ்களத்தில் இத்திரியை வாசிப்பவர் என்பதால், தமிழில் காப்புரிமை என்பது அறவேயில்லை. எவரும் எவருடையதையும் எடுத்துப் பயன்படுத்தலாம் என்ற இழிநிலையே உள்ளது! அதை விளங்கி எமது மொழியிலும் காப்புரிமை & புரவு(credit) என்பதை மக்கள் நாமாக உணர்ந்து செயற்படுத்துவோமாக. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

சைவ சமயமும் நிறுவன மயப்பட்டு இன்று இந்து சமயத்தால் ஆட்கொள்ளப்பட்டுள்ளது.

சைவசமயம் நிறுவன மயப்படுத்த பட்டு விட்டதா? எப்போதிருந்து? அப்படியானால் இனி சைவ பாடசாலைகளில் கல்விகற்று சைவர்களாக உள்ள அனைத்து மக்களும் உரிய பயிற்சி பெற்று யாழ்பாணத்திலுள்ள அனைத்து கோவில்களிலும் எந்த வேறுபாடும் இன்றி தலைமை அர்சகர்களாக இருக்கலாம். திருமணம் போன்ற மத சடங்குகளை செய்துவைக்கலாம். பிறப்பினால் குறிப்பிட்ட சாதியில் பிறந்தவர்கள மட்டும் தான் தலைமை அர்சகர்களாகலாம் என்ற ஏக போகம் ஒழியப்போகிறது. இறைவனின் முன்னால் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை  ஏற்றுக்கொண்டு இனியாவது இந்து மதம் பயணிக்க வேண்டும். 

அதுவே சரியான ஆன்மீகம் ஆகும். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

இறந்தவர்களின் நினைவுத்தூபியாக அந்த சிவன் சிலை இருக்கட்டும்.

ஆமாம் இது ஒரு சிறப்பு வாய்ந்த கருத்து....இறைவன் துணிலுமிருக்கிறான்.  துறும்பிலுமிருக்கிறான்.   அதாவது இறைவன் இல்லாத இடமில்லை  ...சுடலையிலும் கூட இறைவன் இருக்கிறார்....பிரேதத்திலுமிருக்காறார்.   .....இறந்துபோன உடலிலும். இறைவன் உண்டு”    ஆகவே சிவலிங்கம் எங்கேயும் நிறுவலாம்.    இந்த....செம்மணியில். நிறுவிய சிவலிங்கம்   கிருசாந்தியின்  அடையாளம் ஆகும்   ....எப்படியென்றால்   கிருசாந்தி புதைக்கப்பட்ட இடத்தில் தான்   சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது  என்று   சொல்லுவார்கள்.  ஆமாம் கிருசாந்தி   மறக்காமுடியாது  அவள்  இறந்துபோன இடத்தில் சிவலிங்கம் குடியிப்பது     அவளை மேலும் நினைவு கூர முடியும்    கிருசாந்தி இறந்துபோன இடத்தில் சிவலிங்கம் இருக்கிறது என்று சொல்வதான் மூலம் நினைவு கூரப்படும்.    நான் கைதடியை பிறப்பிடமாக கொண்டவன்   கிருசாந்தி குடும்பம் நன்கு தெரிந்தவர்களே உறவினர்கள் கூட    அவரது அம்மா நான் படித்த பள்ளியில் ஆசிரியர்   ...பேபி ரீச்சர். என்பார்கள் 😆

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.