Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

விட்டுக்கொடுப்புக்கு இம்மியும் இடமில்லை! – சம்பந்தன் திட்டவட்டம்

IMG-20221213-142711.jpg

“தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காணும் நோக்குடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அவரின் அழைப்புக்கிணங்க இன்று பேச்சை ஆரம்பிக்கின்றோம். எமது நிலைப்பாட்டில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. நாம் ஏமாறவும் தயாரில்லை.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும் சர்வகட்சிக் கூட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி தெரிவித்துள்ள விடயங்கள் தொடர்பில் நாங்கள் பேச்சை முன்னெடுப்பதாக இருந்தால் அவரின் வாக்குறுதியின் பிரகாரம் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

அந்தப் புதிய அரசமைப்பில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இந்த நோக்கத்துடன்தான் ஜனாதிபதியுடன் பேச்சை ஆரம்பிக்கின்றோம்.

எங்களுடைய முதல் கவனமும் தமிழர் பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பானதே.

இந்த நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகின்ற போதிலும் தமிழ் மக்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை.

நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வுக்காக எம்மாலான அனைத்துப் பங்களிப்புக்களையும் வழங்கி வருகின்றோம். ஆனால், தமிழர்களுக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை.

அந்தத் தீர்வைக் காணும் நோக்குடன்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சை ஆரம்பிக்கின்றோம். எமது நிலைப்பாட்டில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. நாங்கள் ஏமாறவும் தயாரில்லை” – என்றார்.

https://vanakkamlondon.com/world/srilanka/2022/12/180540/

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

விட்டுக்கொடுப்புக்கு இம்மியும் இடமில்லை! – சம்பந்தன் திட்டவட்டம்

இந்த முறை சம்பந்தன் ஐயா... சிங்களவனை  வெட்டி ஆடுவது என்று  
ஒரு முடிவுடன்தான் இருக்கிறார் போலை.
அது சரி.... எத்தினை வருசம் தான், ஏமாந்த சோணகிரி மாதிரி இருக்கிறது.
ஐயாவின்.... மற்றப்  பக்கத்தை, இனித்தான் பார்க்கப் போகிறீர்கள்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எமது நிலைப்பாட்டில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. நாங்கள் ஏமாறவும் தயாரில்லை” –

இனி என்னத்தை விட வைச்சிருக்கிறார்? தேசியக்கொடி ஆட்டேக்கை உந்த யோசனை ஏன்வரவில்லை ஐயா.

சிறிலங்கா தேசியக் கொடியை..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காணாமல்போனோரை நீங்கள் கொன்று விட்டீர்கள் : பொறுப்புக்கூறல் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும் - சம்பந்தன்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரையும் நீங்கள் கொன்றுவிட்டீர்கள் என்பது எமக்குத் தெரியும். ஆனால் என்ன நடந்ததென்ற உண்மை கண்டறியப்பட்டு பொறுப்புக்கூறல் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்ததார்.

 

இந்தக் கூட்டத்தை தலைமை தாங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சி ல நிமிடங்கள் உரையாற்றினார். இனப்பிரச்சினை தீர்வுக்கான அவசியத்தை தெரிவித்தார்.

இனப்பிரச்சினைக்கான தீர்விற்காக ஜனாதிபதி அழைத்த சர்வகட்சி கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (13)  ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்றது.

பின்னர் அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ச, அலி சப்ரி ஆகியோர் உரையாற்றினர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம், அரசியல் கைதிகள் விவகாரத்தில் அரச தரப்பினால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அவர்கள் விபரித்தனர். 

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அலிசப்ரி தெரிவித்தார்.

குறித்த கூட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இரா . சம்பந்தன்,

சந்திப்பு மிகவும் அருமையான கூட்டமாக  இடம்பெற்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்ததார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரையும் நீங்கள் கொன்றுவிட்டீர்கள் என்பது எமக்குத் தெரியும். ஆனால் என்ன நடந்ததென்ற உண்மை கண்டறியப்பட்டு பொறுப்புக்கூறல் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்களின் பின்னர் தான் நல்லிண்ணக்க கூட்டத்தை கூடுகின்றீர்கள் . இதற்கு நாங்கள் ஒத்துழைப்புகளை வழங்கத் தயார் என சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும். காணாமல்போனோர் தொடர்பில் இனி கதைக்க வேண்டாம். காணாமல் போனவர்களை கொன்றது நீங்கள். அதனால் இதைப் பற்றி கதைப்பதில் பிரியோசனம் இல்லை. அதனால் இந்த விடயத்திற்கு முடிவு கொடுப்பதைப் பற்றி யோசனை செய்யுங்கள். காணாமல்போனோர் காணாமல் போனோர் என்று தெரிவித்து காலத்தை நீடிக்கவேண்டாம்.

தற்போது சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும் விடுவியுங்கள் என்று எடுத்துக்கூறியுள்ளேன். 

அரசியல் தீர்வு, காணி தொடர்பான பிரச்சினை, அனைத்து மாவட்டங்களிலும் காணிகள் இராணுவத்தினர், வனவளத்திணைக்களம், தொல்லியல் திணைக்களம் , மகாவலி திட்டத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ளன. 

எதிர்வரும் மாசி மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர் முழுக் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தனர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுமந்திரன், ஆகியோர் கலந்துகொண்டனர்.

காணாமல்போனோரை நீங்கள் கொன்று விட்டீர்கள் : பொறுப்புக்கூறல் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும் - சம்பந்தன் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜனாதிபதி அழைத்த கூட்டம் இன்று(13/12/2022) மாலை நடந்தது இதுதான்..!

இனப்பிரச்சினை தீர்விற்காக ஜனாதிபதி அழைத்த சர்வகட்சி கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை நடந்தது.
மாலை 6 மணி தொடக்கம் 7.30 மணிவரை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தை தலைமை தாங்கிய ரணில் சில நிமிடங்கள் உரையாற்றினார். இனப்பிரச்சினை தீர்வுக்கான அவசியத்தை தெரிவித்தார்.
பின்னர், அமைச்சர்கள் விஜேதாச ராஜபக்ச, அலி சப்ரி ஆகியோர் உரையாற்றினர். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம், அரசியல் கைதிகள் விவகாரத்தில் அரச தரப்பினால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அவர்கள் விபரித்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அலி சப்ரி தெரிவித்தார்.
அரசியல் கைதிகள் விவகாரத்தில் உள்ள சட்ட விவகாரங்களை விபரித்த விஜேதாச ராஜபக்ச, அரசியல்கைதிகளை படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
பின்னர் கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன், க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர், தமிழ் கட்சிகள் ஏற்கெனவே கூடி எடுத்த முடிவை தெரிவித்தனர்.
வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு நிறுத்தப்பட்டு, அபகரிக்கப்பட்ட காணிகள் மீளளிக்கப்பட வேண்டும்.
அதிகார பகிர்வு சம்பந்தமாக அரசியலமைப்பு மற்றும் சட்டங்களிலுள்ள அம்சங்களை உடனடியாக அமுலாக்குவதுடன், மகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும்.
உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்கள் சரித்திரரீதியாக வாழ்ந்த வந்த வடக்கு கிழக்கு பிரதேசத்தில் சமஸ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகார பகிர்வுடனான புது அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் பொறுப்புக்கூறல் விடயங்கள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினர்.
இதில், காணி, அரசியல் கைதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரங்கள் உடனடியாக கையாளலாம் என சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், இவை தொடர்பான ஆக்கபூர்வமாக நடவடிக்கைகள் ஜனவரி 31ஆம் திகதிக்குள் செயற்படுத்த ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றார்.
அரசியலமைப்பில் உள்ள, 13ஆம் திருத்தத்தை முதலில் அமுல்படுத்த வேண்டுமென்றும் தெளிவாக வலியுறுத்தினர்.
பின்னர் உரையாற்றிய ரவூப் ஹக்கீம், டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பலரும் இதை ஆதரித்தனர். 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்தி விட்டு, பின்னர் படிப்படியாக முன்னோக்கி நகரலாமென்றனர்.
1987ஆம் ஆண்டு முதல் 13வது திருத்தத்தை தான் வலியுறுத்தி வருவதாகவும், கூட்டமைப்பிலுள்ள தலைவர்கள் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் போன்வர்கள் அதை ஆதரித்து வருவதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இரா.சம்பந்தன் உரையாற்றிய போது, “காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரையும் நீங்கள் கொன்றுவிட்டீர்கள் என்பது எமக்கு தெரியும். ஆனால், என்ன நடந்ததென்ற உண்மை கண்டறியப்பட்டு, பொறுப்புக்கூறல் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும்“ என்றார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கருத்து தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு மக்களின் இனப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும், 13வது திருத்தத்தை அமுல்ப்படுத்தி படிப்படியாக முன்னேறலாம் என தெரிவித்ததுடன், மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளிற்கும் தீர்வு காணப்பட வேண்டுமென்றார்.
அதிகார பரவலாக்கல் விவகாரத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித்தும் ஆதரித்து உரையாற்றினார். 13வது திருத்தத்தை அமுல்ப்படுத்த வேண்டுமென குறிப்பிட்ட சஜித், ஒருமித்த நாட்டுக்குள் ஒற்றையாட்சிக்குள்  (ஏக்கிய ராஜ்ஜிய) தீர்வை காண்போம் என்றார்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் 13வது திருத்தத்தை அமுல்ப்படுத்த வேண்டுமென்றார்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் அதே சமயம், அபிவிருத்தி பணிகளும் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றார்.
அமைச்சர் ஹாபீர் நசீர் அஹமட், வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிராக கருத்து தெரிவித்தார். மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்த முடியாதென்றும், தேர்தல்களை நடத்தி உடனடியாக வடக்கு கிழக்கை இணைக்கப் போகிறீர்களா என கேட்டு, இணைந்த வடக்கு கிழக்கில் தாம் துன்பப்பட்டதாக கூறினார்.
இதை தொடர்பில் எந்த தெளிவான கருத்தையும் ஜனாதிபதி ரணில் தெரிவிக்காத போதும், சாதகமாக அணுகலாம் என்ற சாரப்பட பதிலளித்ததுடன், தமிழ் தரப்புடன் விரைவில் கலந்துரையாடல் நடத்துவதாக தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் மஹிந்த ராஜபக்ச,  செயலாளர் காரியவசம் ஆகியோர் கருத்து தெரிவிக்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

4 minutes ago, Nathamuni said:

 
அமைச்சர் ஹாபீர் நசீர் அஹமட், வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிராக கருத்து தெரிவித்தார். மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்த முடியாதென்றும், தேர்தல்களை நடத்தி உடனடியாக வடக்கு கிழக்கை இணைக்கப் போகிறீர்களா என கேட்டு, இணைந்த வடக்கு கிழக்கில் தாம் துன்பப்பட்டதாக கூறினார்.

சிங்களவன், தருறானோ இல்லை.... உந்த காக்கா படுற பாடு.

இலங்கையில் ஜஎஸ் குண்டு வெடிப்புக்கள் நடந்த நிலையில், இவர்களது தனிமாகாண கோரிக்கைகள் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள் என்பதே நிதர்சனம்.

ரவுப் கக்கீம் புரிந்தது, இவருக்கு புரியவில்லையோ.🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடுத்த தீவாவளிக்கு தீர்வுதான் 
சம்மந்தம் ஐயா சிங்களவர்களுக்கு பெட்டி அடித்துவிடடார் 
இனி ஒரு இஞ்சு கூட நகர முடியாது. 

சும்மா தெரிந்துகொள்ள கேட்க்கிறேன் 
ஐயாவுக்கு உந்த கொலெஸ்ட்ரோல் டயபெட்ரிக் அதுகள் ஒன்றும் இல்லையோ ? 

தமிழருக்கென்றே கடவுள் ஸ்பெஷலா படைச்சிருக்கிறார் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எமது நிலைப்பாட்டில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. நாம் ஏமாறவும் தயாரில்லை.”

ஐயாவின் பதவிக்கு உலை வந்துவிட்டது துள்ளி குதிக்கிறார் அவ்வளவுதான் அடங்கிவிடும் வந்த வேகத்தில்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.