Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் குளிர்கால வானிலை எச்சரிக்கை இன்றும் நீடிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் குளிர்கால வானிலை எச்சரிக்கை இன்றும் நீடிப்பு!

பிரித்தானியாவில் குளிர்கால வானிலை எச்சரிக்கை இன்றும் நீடிப்பு!

பிரித்தானியா முழுவதும் வீதி, ரயில் மற்றும் விமானப் பயணத் தடையை ஏற்படுத்திய குளிர்கால வானிலை இன்றும் (செவ்வாய்கிழமையும்) தொடரும் என முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்காலிக வானிலை அலுவலக புள்ளிவிபரங்கள், டிசம்பர் 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரித்தானியாவில் திங்கள்கிழமை மிகவும் குளிரான நாள் என்று காட்டுகின்றன,

அபெர்டீன்ஷையரின் பிரேமரில் -9.3 செல்சியஸ் (15F) காணப்பட்டது.

வடக்கு ஸ்கொட்லாந்து, ஓர்க்னி, ஷெட்லேண்ட் மற்றும் வடகிழக்கு இங்கிலாந்தில் பனி மற்றும் பனிக்கட்டிக்கான மஞ்சள் எச்சரிக்கைகள் உள்ளன. தென்கிழக்கு இங்கிலாந்தில் பனிப்பொழிவுக்கான மஞ்சள் எச்சரிக்கையும் உள்ளது.

வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் மூன்று சிறுவர்கள் இறந்ததையடுத்து, குளிர்ச்சியான பனிப்பொழிவு தொடர்வதால், உறைந்த ஏரிகளுக்கு அருகில் விளையாடுவதால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் அறிவுறுத்துமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை கிங்ஷர்ஸ்டில் உள்ள பாப்ஸ் மில் பூங்காவில் உள்ள ஏரியில் விழுந்து 8, 10 மற்றும் 11 வயதுடைய சிறுவர்கள் இறந்தனர். ஆறு வயதுடைய நான்காவது சிறுவன் தண்ணீரில் இருந்து இழுக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார்.

பிரிட்டனின் சில பகுதிகளில் செவ்வாய்கிழமை மீண்டும் கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என்றும், உயரமான நிலங்களில் 15-20cms (6-8ins) வரை குவியும் என்றும் வானிலை அலுவலக செய்தித் தொடர்பாளர் ஒலி கிளேடன் தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1315213

@goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

மகனை பள்ளியில் விட்டு வர - ஆதி முதல் அந்தம் வரை விறைத்து விட்டது 🤣.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு நான் இருக்கும் இடத்தில் காலை 6 மணியளவில் வெளியே சென்ற போது பல வருடங்களுக்கு பின் மைனஸ் 21ல் குளிர் இருந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

மகனை பள்ளியில் விட்டு வர - ஆதி முதல் அந்தம் வரை விறைத்து விட்டது 🤣.

இன்று இங்கு.... -8 பாகை.

Just now, குமாரசாமி said:

இங்கு நான் இருக்கும் இடத்தில் காலை 6 மணியளவில் வெளியே சென்ற போது பல வருடங்களுக்கு பின் மைனஸ் 21ல் குளிர் இருந்தது.

ஓ....  உங்களுக்கு -28 பாகையா?
நான் அறிந்தவரையில்... இங்கு -15´ஐ தாண்டிப் போனதில்லை.
இந்த வருடம் அதிக குளிரை எதிர் பார்க்கும் படி கூறி உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, தமிழ் சிறி said:

இன்று இங்கு.... -8 பாகை.

ஓ....  உங்களுக்கு -28 பாகையா?
நான் அறிந்தவரையில்... இங்கு -15´ஐ தாண்டிப் போனதில்லை.
இந்த வருடம் அதிக குளிரை எதிர் பார்க்கும் படி கூறி உள்ளார்கள்.

நான் இருக்கிற இடம் மலையும் மலை சார்ந்த இடமெல்லோ...
சினோ முதல் கொட்டி கடைசியாய் கரையிற இடம்.

- 21 பாகை 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

நான் இருக்கிற இடம் மலையும் மலை சார்ந்த இடமெல்லோ...
சினோ முதல் கொட்டி கடைசியாய் கரையிற இடம்.

- 21 பாகை 

அது எந்த இடம்? “கைலாயமா?” 🤭😜

ஏனெனில் பல திரைப்படக்களில் பனிமலைகள் நடுவே சிவனும், பார்வதியும் குந்தியிருப்பது போல காட்டுவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, ராசவன்னியன் said:

அது எந்த இடம்? “கைலாயமா?” 🤭😜

ஏனெனில் பல திரைப்படக்களில் பனிமலைகள் நடுவே சிவனும், பார்வதியும் குந்தியிருப்பது போல காட்டுவார்கள்.

ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில எங்கை வாறியள் எண்டு விளங்குது......😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ராசவன்னியன் said:

அது எந்த இடம்? “கைலாயமா?” 🤭😜

ஏனெனில் பல திரைப்படக்களில் பனிமலைகள் நடுவே சிவனும், பார்வதியும் குந்தியிருப்பது போல காட்டுவார்கள்.

1 minute ago, குமாரசாமி said:

ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில எங்கை வாறியள் எண்டு விளங்குது......😁

Thread by @Itishree001: Mount Kailash,the Kingdom of Lord Shiva is the  Abode of Shiva-Parvati with their Sons & Daughter. The Vedas have mention  Mount Kailash a…

ஜேர்மனியில்... கைலாயம் இல்லை என்று தெரிந்தும்,
வன்னியர்... நூல் விட்டுப் பார்க்கிறார். 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
41 minutes ago, தமிழ் சிறி said:

Thread by @Itishree001: Mount Kailash,the Kingdom of Lord Shiva is the  Abode of Shiva-Parvati with their Sons & Daughter. The Vedas have mention  Mount Kailash a…

ஜேர்மனியில்... கைலாயம் இல்லை என்று தெரிந்தும்,
வன்னியர்... நூல் விட்டுப் பார்க்கிறார். 😂

Nithyananda PFP - Nithyananda Profile Pics

ராசவன்னியருக்கு  என்ரை வழித்தோன்றல் தான் நித்தியானந்தம் எண்டது எப்பதான் விளங்கப்போகுதோ தெரியேல்ல 😁

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில எங்கை வாறியள் எண்டு விளங்குது......😁

இடத்தை தெரிந்து நான் என்ன செய்யபோறேன் சாமி..?

குஜராத்தி மோடியிடம் சொன்னால் ஒருவேளை “சிவலிங்கம்” அங்கே இடத்துக்கு பொருத்தமாக வைக்கலாம்..!

ஏனெனில் சுவிஸ் இண்டர்லாகனில் ஒரு பார்க்கில் இந்தி இயக்குனர் ஒருவரின் (some ‘Chopra’ name)சிலை நிறுவப்பட்டு இருந்ததை சென்ற வருடம் பார்த்தேன்.

அந்தாளு பேரு “யாஷ் சோப்ரா”.

சிலைக்கு அருகில் நின்று போட்டோ எடுத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

லண்டனில் திருவள்ளுவர் சிலை படும் பாடு .

May be an image of 3 people and outdoors

  • கருத்துக்கள உறவுகள்

இதே மாதிரி ஒரு பெரிய சர்சுக்கு முன்னர் உள்ள பூங்காவில் காந்தி சிலையை கூட பார்த்த ஞாபகம் உள்ளது. அங்கிருந்து பிங் பென் கட்டிடம் நடை தூரம்தான்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 14/12/2022 at 01:54, ராசவன்னியன் said:

இதே மாதிரி ஒரு பெரிய சர்சுக்கு முன்னர் உள்ள பூங்காவில் காந்தி சிலையை கூட பார்த்த ஞாபகம் உள்ளது. அங்கிருந்து பிங் பென் கட்டிடம் நடை தூரம்தான்.

ஓம் பார்லிமெண்ட் சதுக்கத்தில் உள்ளது. அருகே மண்டேலாவும், சற்று பின்னே, வீதிக்கு மறுபுறம், உச்ச நீதிமன்ற வாயிலருகில் லிங்கனும் உள்ளார்கள்.

வள்ளுவர் சிலை படம் தெரியவில்லை.யூனிவர்சிட்டி ஒவ்  லண்டனின் SoAOS வளாகத்தில் உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.