Jump to content

அமெரிக்காவின் 1.66 டிரிலியன் வரவுசெலவு திட்டம் நிறைவேறியது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் 2023 ம் ஆண்டுக்கான 1.66 டிரிலியன் வரவுசெலவு திட்டம் செனேட், காங்கிரஸ் இரு சபைகளிலும் நிறைவேறியுள்ளது.

இதில் உக்ரேனிற்கான யுத்த நிதி உதவியாக 45 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் பாதுகாப்பு செலவீனம் கடந்த வருடத்தின் 740 பில்லியனில் இருந்து, 858 பில்லியனாக உயர்ந்துள்ளது.

இரு சபைகளிலும் இந்த திட்டமானது சகல ஜனநாயக கட்சி உறுப்பினர்கள், மற்றும் சில குடியரசு கட்சி உறுப்பினர் ஆதரவோடு நிறைவேறியுள்ளது.

https://www.reuters.com/world/us/us-house-vote-166-trillion-funding-bill-shutdown-deadline-nears-2022-12-23/

டிஸ்கி

@ஈழப்பிரியன்அண்ணா நீங்கள் @Justinஅண்ணாவிடம் வேறு ஒரு திரியில் வினவியதற்கான பதில் கிடைதுள்ளது என நினைக்கிறேன்.

2023 டிசம்பர் வரையாவது அமெரிக்காவின் உக்ரேன் உதவி தொடரும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

டிஸ்கி

@ஈழப்பிரியன்அண்ணா நீங்கள் @Justinஅண்ணாவிடம் வேறு ஒரு திரியில் வினவியதற்கான பதில் கிடைதுள்ளது என நினைக்கிறேன்.

2023 டிசம்பர் வரையாவது அமெரிக்காவின் உக்ரேன் உதவி தொடரும்.

இன்னும் கொஞ்ச நாட்களில் குடியரசுக் கட்சி தான் காங்கிரசில் ஆட்சி.

புதியதொரு மசோதாவைக் கொண்டுவந்து இப்போதுள்ளதையும் ரத்தாக்குகிறார்களோ?

பணம் அடித்து அடித்து வெளியிட்டதன் பலன் அடுத்த வருடம் தெரிய வரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்னும் கொஞ்ச நாட்களில் குடியரசுக் கட்சி தான் காங்கிரசில் ஆட்சி.

புதியதொரு மசோதாவைக் கொண்டுவந்து இப்போதுள்ளதையும் ரத்தாக்குகிறார்களோ?

பணம் அடித்து அடித்து வெளியிட்டதன் பலன் அடுத்த வருடம் தெரிய வரலாம்.

அப்படி மசோதா கொண்டு வந்து நிறைவேறிய வரவு செலவு திட்டத்தை மாற்ற முடியாது என்றே நினைக்கிறேன்.

காங்கிரஸ் குழுக்கள் செலவை மேற்பார்வை செய்யும் ஆனால் மாற்றாது.

பண வீக்கம் எல்லா நாட்டுக்கும்தான் ஆனால் 2023 இல் குறையும் என நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

பணம் அடித்து அடித்து வெளியிட்டதன் பலன் அடுத்த வருடம் தெரிய வரலாம்.

உலகம் முழுவதும் அமெரிக்க டொலரின் தேவை இருப்பதால் பெரிதாக பாதிப்பு வராது என்கிறார்கள். சீனா,இந்தியா,ரஷ்யா மற்றும் அரபு நாடுகள் ஒன்று சேர்ந்து  கசமுசா செய்தால் அமெரிக்க அண்ணனுக்கு பெரும் கஷ்டம்......எனவே பெரியண்ணன் உக்ரேன் பிரச்சனையையும் சேர்த்து கம்பி மேல் நடக்கின்றார் என எடுத்துக்கொள்ளலாம்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

சீனா,இந்தியா,ரஷ்யா மற்றும் அரபு நாடுகள் ஒன்று சேர்ந்து  கசமுசா செய்தால் அமெரிக்க அண்ணனுக்கு பெரும் கஷ்டம்.......

இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகள் எல்லாம் ஒன்றாகி, ஒரு தீர்வு திட்டத்தை முன்வைத்த மறுகணமே மேலே சொன்னதும் நடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

உலகம் முழுவதும் அமெரிக்க டொலரின் தேவை இருப்பதால் பெரிதாக பாதிப்பு வராது என்கிறார்கள். சீனா,இந்தியா,ரஷ்யா மற்றும் அரபு நாடுகள் ஒன்று சேர்ந்து  கசமுசா செய்தால் அமெரிக்க அண்ணனுக்கு பெரும் கஷ்டம்......எனவே பெரியண்ணன் உக்ரேன் பிரச்சனையையும் சேர்த்து கம்பி மேல் நடக்கின்றார் என எடுத்துக்கொள்ளலாம்.😂

உக்கிரேனுக்கு உதவுரம் என்று பழைய ஆயுதங்களை சிறிது மேம்படுத்தி மிஷேல்  என்று போயிங் கொம்பனி இன்னும் ஒரு சில மாதம்களில் உக்கிரேனுக்கு அனுப்ப போகின்றது ஆனால் போர் வெறியில் ஜெலஞ்சி  இஸ்ரேலின் இரும்பு கவசத்தை கூட தங்களுக்கு தர சொல்லி கேட்டு மூக்குடைந்து  போயுள்ளார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாதீட்டில் எவ்வளவு பற்றாக்குறை ஏற்படுகிறது என யாருக்காவது தெரியுமா?

வரி அதிகரிப்பு ஏற்படலாம், பணவீக்க அதிகரிப்பு ஏற்பட்டு வேலை இழப்பு ஏற்படலாம், ஆனால் 3.7 வேலையின்மை விகிதம் மிகவும் நல்ல ஒரு  நிலையில் இருப்பதால் பெரிதாக பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாது, பாதுகாப்பிற்காக செலவழிக்காமல் பொது சேவைகளில் செலவழித்தால் நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லது.

https://www.investopedia.com/terms/k/keynesianeconomics.asp

கீன்சியன் கொள்கையினை பொதுவாக வலது சாரி ஆட்சியாளர்கள் விரும்புவதில்லை, ஆனால் 90 களின் பிற்பகுதியில் மலேசியா பொருளாதார சரிவினை சந்தித்த போது மகதீர் முகமட்  இந்த முறைமையினையே பின்பற்றினார்.

ஆனால் வலதுசாரிகள் (ட்ரம்ப்), நிறுவனங்களின் வரிகளை குறைத்து பாதீட்டினை பற்றாக்குறை பாதீடாக்கும் போது அது பொருளாதாரத்திற்கு ந்ல்லது என வாதிடுவார்கள் (உண்மைதான்).

ஆனால் கடன் வாங்கி செலவு செய்யும்போது மட்டும் குறைகூறுவார்கள், ஆனால் அதுவும் பொருளாதாரம் இப்போதுள்ள நிலையில் அவசியம்தான்.

பாதுகாப்பிற்காக செலவழிப்பதுதான் இங்கு பிரச்சினையாகவுள்ளது.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • செந்தமிழன் சீமான் அண்ணாவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்து! அண்ணன் 2025 சட்டசபைத் தேர்தலில் தன்னுடைய தொகுதியில் கட்டுக்காசை பெற முப்பாட்டன் முருகன் அருள் கிடைக்கட்டும்!
    • அவரும் தோற்கடிக்கப்படவேண்டியவரே. நான் அவருக்கும் வாக்கு போட்டிருக்க மாட்டேன். நிச்சயம் சிங்கபூரில் இருந்து டிக்கெட் போட்டு போய் அவருக்கு பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டிருக்க மாட்டேன். தவிரவும் அவரும் மட்டகளப்பு, அவர் வன்கொடுமை செய்ய பெண்ணும், மட்டகளப்பு, அவரை ஆதரித்த உள்ளூர் கட்சியினரும் மட்டகளப்பு  வாக்களித்த வாக்காளரும் மட்டகளப்பு எனும் போது இதில் பிரதேசவாதம், மையவாதம் என்ற கோணமே எழவில்லை. இல்லையே…அப்பட்டமாக பிரதேசவாதம் கக்காத தமிழ் தேசிய அரசியலும் செய்யாத பலர் அங்கே தேர்தலில் நின்றார்களே. தமிழ் தேசியத்தில் நம்பிக்கை இல்லை, சரி வேறு ஒரு தெரிவை எடுக்கலாமே? தென்னிலங்கை கட்சியில் கேட்ட ஒரு தமிழருக்கு போட்லாலாமே? நான் இன்றும் மேடைக்கு மேடை பிரதேசவாதம் கக்குபவருக்குதான் வாக்கு போடுவேப் ஆனால் நான் பிரதேசவாதி இல்லை என்பது நம்பும்படியாகவா இருக்கு? தெரியும். மட்டகளப்பு மாவட்டமும் பெரும்பான்மை தமிழர் பகுதிதான்.    பிரதர், நான் தமிழ் தேசிய வடையை நியாப்படுத்தவில்லை. அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை . நீங்கள் நன்னா டிரக்கை மாத்த வேண்டாம். தமிழ் தேசிய அரசியல் உதவாது என்ற நிலைப்பாடு = பிரதேசவாதம் என நான் எங்கும் எழுதவில்லை. ஆனால் அப்பட்டமாக செயலில், சொல்லில் இன்றுவரை பிரதேசவாதத்தை எழுப்புவரை, அவரின் கொள்கையை ஆதரிப்பது, இறங்கி வேலை செய்வது, நிச்சயம் பிரதேசவாதம்தான். இது நான் ஹிட்லரின் அனுதாபி, அவருக்கு வாக்கு போடுகிறேன், அவருக்கு வாக்கு போடுமாறு பிரச்சாரமும் செய்கிறேன் ஆனால் நான் நாஜி இல்லை என்பது போல ஒரு நிலைப்பாடு.
    • சங்கி ஆனந்தம் சொன்னது சம்பந்தமாக, மெதடிஸ்ட் (CSA, CoE, American Mission) இப்படி ஊருக்குள் போய் மதம் மாற்றுகிறார்களா? நான் அறிய 5ம் வேதம் என கூறப்படும், யெஹோவா சாட்சிகள், பெந்திகோஸ்த் ஆட்கள்தான் இப்படி செய்வது.
    • இதே போன்ற ஒன்றை மட்டக்களப்பு பெண்ணிற்கு இழைத்து இழைத்தவர் கூத்தமைப்பில் மட்டக்களப்பில் பா. ஊ வாக இருந்தார். ஒரு வேளை அவர் இதனை யாழில் செய்திருந்தால் கூத்தமைப்பில் நிறுத்தப்பட்டிருப்பாரா...? ஆகவே யாழ் மையவாதிகள் ஒன்றும் திறம் கிடையாது அடுத்தவனுக்கு பாடம் எடுக்க. ஆக என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்களும் நானும் பவுன்ஸிலும் டாலர்களிலும்  பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டு நம்ம அடுத்த வேலையை பார்க்கப்போக அங்கே இருக்கும் மட்டக்களப்பார்கள் மட்டும் யாழ் தேசியவாதிகளை நம்பி அடுத்த வேளை சோற்றுக்கு பிச்சையெடுக்க வேண்டும் அப்பிடியா...? முக்கால் வாசி தேசிய வியாதிகள் எல்லாம் ஒன்று புலம் பெயர், இல்லை தமிழர் பெரும்பான்மை பிரதேசத்தில் மட்டும் ஏன் இருக்கிறார்கள் என்று தெரியுமா..? சோற்றுக்கு வயிறு காயும் போதுதான் தெரியும் தேசியத்தின் பெருமை. தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களில் தேசியவாதிகள் சிறுபான்மை ஆகும் போது தெரியும் தேசியத்தின் பெருமை அதுவரை தேசியவாதிகள் வாயால் நன்னா வடை சுடலாம்
    • ""எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்"" என்பது உந்தக் கரடிக்குத் தெரியாதோ?  😁
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.