Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டா அமெரிக்கா பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

அதான் பெரிய உடுப்பா போட்டு மறைச்சிருக்காங்க இல்ல. எப்படி தெரியும்?🤣

டுபாய்க்கு கிரிஸ்மஸ் சொப்பிங் போனதை, ஊடகங்களும், ஆய்வாளரும் சேர்ந்து அமெரிக்கா போறார், யுரேனஸ் போறார் எண்டு வசந்திய கிளப்பி விட்டிருக்கானுவோ?

கோத்தா, போன சமருக்கு... மாலதீவிலை, மாசிக் கருவாடு வாங்கிக் கொண்டு....  
டுபாய், சிங்கப்பூர் எல்லாம் போய்...  பெரிய ஷொப்பிங் செய்தவர்.
திரும்பவும் டுபாய்க்கு போறதை பார்க்க ஆளிட்டை நல்ல காசு புழங்குது போலை...
 😂

கோத்தா... சுவரில் எறிந்த பந்து மாதிரி, திரும்பி வருகிறார்.
சென்ற வருடம் கோத்தா பார்த்த நாடுகள். 🤣
1) மாலைதீவு.
2) டுபாய். 
3)  சிங்கப்பூர்.
4) இந்தோனேசியா.
5) ஸ்ரீலங்கா.
6) மீண்டும் டுபாய்.
7) - - - - - - - 

Edited by தமிழ் சிறி

  • Replies 70
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

இனப்படுகொலையாளி உல்லாச பயணம்! சிங்கள தேசம் ஒன்று சேர்ந்து காப்பாற்றியிருக்கிறது! தேசத்தின் மீதுள்ள இயற்கையின் சாபம் எப்படி தீரும்?

 

 

என்னவோ தெரியவில்லை... கோத்தாவின் மனைவியை பார்க்க பாவமாக உள்ளது. 
கோத்தா... ஜனாதிபதியாக செருக்குடன் வலம் வந்த போது கூட... 
அவர் அதிகம் வெளியில் தலை காட்டியதில்லை. 
இப்போ.... நாடு நாடாக அலையும் போது... 
"எள்ளுடன்  சேர்ந்த எலிப் புழுக்கையும் காயுற மாதிரி" 
தேவையில்லாமல் அலைய வேண்டிக் கிடக்கு.

இந்தக் காணொளியை... பலமுறை, இன்னும் ஆசை தீர பார்ப்பேன். 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

கோத்தா, போன சமருக்கு... மாலதீவிலை, மாசிக் கருவாடு வாங்கிக் கொண்டு....  
டுபாய், சிங்கப்பூர் எல்லாம் போய்...  பெரிய ஷொப்பிங் செய்தவர்.
திரும்பவும் டுபாய்க்கு போறதை பார்க்க ஆளிட்டை நல்ல காசு புழங்குது போலை...
 😂

கோத்தா... சுவரில் எறிந்த பந்து மாதிரி, திரும்பி வருகிறார்.
சென்ற வருடம் கோத்தா பார்த்த நாடுகள். 🤣
1) மாலைதீவு.
2) டுபாய். 
3)  சிங்கப்பூர்.
4) இந்தோனேசியா.
5) ஸ்ரீலங்கா.
6) மீண்டும் டுபாய்.
7) - - - - - - - 

ஆசியாவை சுற்றி வந்தால் ஞானப்பழம் கிடைக்கும் என நினைக்கிறாரோ?

ஆனால் நரி இருந்த இடத்தில் இருந்து பழத்தை ஆட்டையை போட்டு விட்டது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

ஆசியாவை சுற்றி வந்தால் ஞானப்பழம் கிடைக்கும் என நினைக்கிறாரோ?

ஆனால் நரி இருந்த இடத்தில் இருந்து பழத்தை ஆட்டையை போட்டு விட்டது 🤣

நரி நோகாமல்... நொங்கு எடுத்திருக்கு. 😂
இப்ப.... சந்தோசமாக அமெரிக்கா போன ஆளையும், 
இருந்த இடத்தில் இருந்து அமெரிக்காவுக்கு ஒரு 📞 தொலை பேசியுடன், ☎️
ஆளை நடு வழியில், "தொங்க" விட்டிருக்கலாம் என்றே நினைக்கின்றேன். 🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமை பெற மீண்டும் விண்ணப்பமா?

அமெரிக்க குடியுரிமை - கோட்டாபய ராஜபக்ஸ

பட மூலாதாரம்,PMD

 
படக்குறிப்பு,

கோப்புப் படம்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்க குடியுரிமைக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷ, 1971ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் இணைந்ததுடன், அவர் 90ஆம் ஆண்டு காலப் பகுதியில் ராணுவத்திலிருந்து விலகியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, 1998ம் ஆண்டு காலப் பகுதியில் அமெரிக்காவிற்கு சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, அங்கு குடியுரிமையை பெற்றுக்கொண்டார். 

2005ம் ஆண்டு காலப் பகுதியில் மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில், தனது சகோதரனான கோட்டாபய ராஜபக்ஷவை நாட்டிற்கு மீள அழைத்து, பாதுகாப்பு செயலாளர் பதவியை வழங்கியிருந்தார்.

 

அமெரிக்க குடியுரிமையுடன், பாதுகாப்பு செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷ பதவி வகித்திருந்தார்.

இந்த நிலையில், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த நிலையில், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற புதிய கட்சியை ஆரம்பித்து, கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினார்.

அமெரிக்க குடியுரிமை - கோட்டாபய ராஜபக்ஸ

பட மூலாதாரம்,PMD

2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரினால் அரசியலமைப்பின் 19வது திருத்தம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த திருத்தத்தின் பிரகாரம், வெளிநாட்டு குடியுரிமை கொண்ட ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது.

இதனால், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய கோட்டாபய ராஜபக்ஷ, தனது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்து கொண்டார்.

இதையடுத்து, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

 

அமெரிக்க குடியுரிமை - கோட்டாபய ராஜபக்ஸ

பட மூலாதாரம்,PMD

அதன்பின்னர், இலங்கை எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய ராஜபக்ஷவே காரணம் என கூறி, பாரிய போராட்டங்களின் ஊடாக கடந்த ஜூலை மாதம் இலங்கை மக்கள் அவரை பதவியிலிருந்து விரட்டியடித்திருந்தனர்.

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, பல்வேறு பிரச்னைகளை மக்கள் எதிர்நோக்கியிருந்தனர்.

இதையடுத்து, கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி, அவரது மிரிஹான பகுதியிலுள்ள வீட்டிற்கு அருகில் மக்கள் ஒன்று கூடி போராட்டங்களை ஆரம்பித்திருந்தனர்.

அதன் பின்னர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி, கொழும்பு - காலி முகத்திடல் பகுதியில் தன்னெழுச்சி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பம் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அதன்பின்னர், மே மாதம் 9ஆம் தேதி, காலி முகத்திடலில் நடத்தப்பட்ட தொடர் தன்னெழுச்சி போராட்டத்தின் மீது, ராஜபக்ஷ ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

 

அமெரிக்க குடியுரிமை - கோட்டாபய ராஜபக்ஸ

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதையடுத்து, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வன்முறைகள் வலுப்பெற்றன.

இந்த வன்முறைகளில் பலர் உயிரிழந்திருந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருந்தனர்.

அத்துடன், பல கோடி ரூபா சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தை அடுத்து, அப்போது பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார்.

மே மாதம் 9ஆம் தேதி, முழு அமைச்சரவையும் பதவி விலகியது.

மேலும், ஜூன் மாதம் 9ஆம் தேதி, பஷில் ராஜபக்ஷ, தனது நாடாளுமன்ற பதவியை துறந்தார்.

அதனைத் தொடர்ந்து, ஜுலை மாதம் 9ஆம் தேதி கொழும்பிற்குள் லட்சக்கணக்கான மக்கள் வருகைத் தந்து, கோட்டாபய ராஜபக்ஷவை வெளியேறுமாறு போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

அமெரிக்க குடியுரிமை - கோட்டாபய ராஜபக்ஸ

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதையடுத்து, நாட்டிலிருந்து ஜுலை மாதம் 9ஆம் தேதி மாலைத்தீவை நோக்கி தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, அங்கிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்திருந்தார்.

சிங்கப்பூர் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, ஜுன் மாதம் 13ஆம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அனுப்பி வைத்ததன் ஊடான, அவர் பதவி விலகினார்.

அதன்பின்னர், நாடாளுமன்ற பெரும்பான்மையின் ஊடாக, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

சிங்கப்பூரில் சிறிதுகாலம் வசித்த அவர், அங்கிருந்து தாய்லாந்து நோக்கி பயணித்திருந்தார்.

நாட்டை விட்டு தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ஷவிற்கு, சர்வதேச நாடுகள் புகலிடம் வழங்க மறுப்பு தெரிவித்திருந்ததாக அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன.

சுமார் இரண்டு மாதங்களின் பின்னர், கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பினார்.

அமெரிக்க குடியுரிமை - கோட்டாபய ராஜபக்ஸ

பட மூலாதாரம்,PMD

இந்த நிலையில், இலங்கைக்கு வருகை தந்த கோட்டாபய, கடும் பாதுகாப்புக்கு மத்தியில் வீட்டில் வசித்து வருகின்றார்.

இவ்வாறான நிலையில், அவர் அமெரிக்க குடியுரிமைக்காக மீண்டும் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கோட்டாபய ராஜபக்ஷவினால் கைவிடப்பட்ட குடியுரிமையை, மீண்டும் வழங்குமாறு, அமெரிக்க அரசாங்கத்திடம் அவரது வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், அமெரிக்க அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் இதுவரை பரிசீலிக்கவில்லை என உள்ளுர் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது குடும்பத்தாருடன் தற்போது துபாய்க்கு சென்றுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c519grdd329o

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

என்னவோ தெரியவில்லை... கோத்தாவின் மனைவியை பார்க்க பாவமாக உள்ளது. 
கோத்தா... ஜனாதிபதியாக செருக்குடன் வலம் வந்த போது கூட... 
அவர் அதிகம் வெளியில் தலை காட்டியதில்லை. 
இப்போ.... நாடு நாடாக அலையும் போது... 
"எள்ளுடன்  சேர்ந்த எலிப் புழுக்கையும் காயுற மாதிரி" 
தேவையில்லாமல் அலைய வேண்டிக் கிடக்கு.

இந்தக் காணொளியை... பலமுறை, இன்னும் ஆசை தீர பார்ப்பேன். 

அயோமா ஏதோ வேலைக்காரியைப்போல பக்கத்தில் கூனிக்குறுகி அமர்ந்திருப்பார், பல்லை ஒருதடவை கூடக் காட்டியிருக்க மாட்டார். பாவம் பேசா மடந்தை! குரங்குக்கு வாழ்க்கைப்பட்டால் கொப்புக்கு கொப்பு தாவித்தானே ஆகவேண்டும். மஹிந்தவின் மனைவியோடு ஒப்பிடும்போது இவர் ஒரு அப்பிராணி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருட அரசியற் போராட்டத்தில், புடின் ஆஜன்டீனாவுக்கு தப்பியோடுவாரா, போராட்டக்காரரால் அடித்துக்கொல்லப்படுவாரா, அல்லது தற்கொலை செய்வாரா??? பலநாடுகளுக்கு பிரச்சனையான ஆண்டாக இருக்கப்போகிறது!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

என்னவோ தெரியவில்லை... கோத்தாவின் மனைவியை பார்க்க பாவமாக உள்ளது. 
கோத்தா... ஜனாதிபதியாக செருக்குடன் வலம் வந்த போது கூட... 
அவர் அதிகம் வெளியில் தலை காட்டியதில்லை. 
இப்போ.... நாடு நாடாக அலையும் போது... 
"எள்ளுடன்  சேர்ந்த எலிப் புழுக்கையும் காயுற மாதிரி" 
தேவையில்லாமல் அலைய வேண்டிக் கிடக்கு.

இந்தக் காணொளியை... பலமுறை, இன்னும் ஆசை தீர பார்ப்பேன். 

 

1 hour ago, satan said:

அயோமா ஏதோ வேலைக்காரியைப்போல பக்கத்தில் கூனிக்குறுகி அமர்ந்திருப்பார், பல்லை ஒருதடவை கூடக் காட்டியிருக்க மாட்டார். பாவம் பேசா மடந்தை! குரங்குக்கு வாழ்க்கைப்பட்டால் கொப்புக்கு கொப்பு தாவித்தானே ஆகவேண்டும். மஹிந்தவின் மனைவியோடு ஒப்பிடும்போது இவர் ஒரு அப்பிராணி.

கெடு குடி சொல்லு கேளாது என்பது போல, கோத்தா ஒரு போதுமே யாராலுமே அடக்கப்பட முடியாதவராக இருந்தார். 

கூட இருக்கும் ஒருவர், அதுவும் மனைவி, நல்லது, கெட்டதுகளை சொல்லி இருக்க வேண்டும். 

சசிகலா ஊரை அடித்து, உலையில் போடும்போது, கூட இருந்து தடுக்காமல் ரசித்துக்கொண்டிருந்த ஜெயலலிதாவும் சிறை போக நேர்ந்தது.

இப்படி பண்ணாதீங்க, சாபம் வம்சத்துக்கே வந்தே தீரும் என்று அயோமா சொல்லி இருக்க வேண்டும். நீதியையும், கவுதம புத்தர் போதித்த தர்மத்தினையும் சொல்லி திருத்தி இருக்க வேணும். படித்த மகன், அமெரிக்காவில் சிறந்த வேலை செய்யும் நிலையில், தாயகத்தில் என்ன கூத்தினை தகப்பன் காட்டிக் கொண்டு இருக்கிறார் என்று ஊகிக்க முடியாத நிலையில் இருந்திருக்க மாட்டார். அப்பா, இந்த அரசியலே வேண்டாம், பேசாமல் இங்கே இருந்து விடுங்கள். சித்தப்பாமார், உங்களை பாவித்து விட்டு, நடுத்தெருவில் அலைய விடுவார்கள் என்று சொல்லி இருக்க வேண்டும்.

சரி தமிழரைத் தான் புலிகள் என்று சொல்லி புத்தருக்கே அல்வா கொடுக்கலாம். ஆனால் லசந்தா, தஜுடீன் கொலைகளுக்கு காரணம் சொல்ல முடியாதே.

அதுக்கான பலனை அயோமா அனுபவிக்கிறார். இதில் இரக்கப்பட்டு பிரயோசனம் இல்லை.

ருமேனியா நாட்டின் சர்வாதிகாரியும் அவர் மனைவியும் ராணுவ நீதிமன்ற விசாரணையின் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.

காரணம், அவரது சர்வாதிகாரத்துக்கு இணையாக, மனைவியும் அதிகாரங்களை பிரயோகித்தமை என்று நினைக்கிறேன்.

சதாம் ஹுசேன், கடாபி கொல்லப்படும்போது அவர்களது மனைவிமார் கொல்லப்படவில்லை.

ஆக, இவருக்கு கோத்தாவின் அட்டுழியத்தில் பங்கு இருக்காது என்றாலும், கோத்தாவுக்கு வரப்போகும் பிரச்சனைகளை முகம் கொடுக்க வேண்டி இருக்கும்.

செர்பியாவின், யுத்த குற்றவாளி ,மறைந்து வாழ்ந்த நிலையில், அந்த நாட்டு அரசே பிடித்து, நெதர்லாந்து நாட்டு சர்வதேச நீதிமன்றுக்கு அனுப்பியது.

மக்கள் கோத்தாவை திரத்தியதை வைத்து பார்க்கும் போது, விரைவில், இலங்கை அரசே அவரை கையளிக்கும் நிலையினை அந்த நாட்டின் பொருளாதார நிலை உருவாக்கும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ம்...ம் அவர்களைப்பொறுத்தவரையில்; தமிழர் தீண்டத்தகாதவர், அவர்கள் அழிக்கப்படும்வரை தங்கள் வீட்டுப்பிள்ளைகள் போரில் சாவதை யாரும் பொருட்படுத்தவில்லை, உண்மைகள் மறைக்கப்பட்டதும் ஒரு காரணமாயிருக்கலாம். ஆனால்  கோத்தாவின் மகனைப்பொறுத்தவரை புலிக்கு பிறந்தது பூனையாகாது இருந்தாலும் நிலைமை இவ்வளவு மோசமடைவதற்கு முதல் எல்லாவற்றையும் விட்டு வந்து விடுங்கள் என்று மகன் அழைத்ததாகவும் ஆனால் இந்த விறைச்ச மண்டை மறுத்து விட்டதாகவும் செய்திகள் வந்தன. அயோமா இறந்தால் கோத்தா அம்போ தான். பெற்றவர்கள் பெற்ற கடன் பிள்ளைகளை சேரும். இவரின் திருமண கொண்டாடங்களுக்காக அலங்கரிப்புக்கு  வெளிநாட்டிலிருந்து விமானத்தில் பூக்கள் தருவிக்கப்பட்டதும் இவர் சொந்தப்பணமா அனுபவித்தவர்தானே?  அயோமா சொல்வதை கோத்தா கேட்டிருப்பாரா என்பது சந்தேகமே. அவரும் அரச வெறி பிடித்த கூட்டத்தில் தன் வாக்கு செல்லாது என நினைத்து வாயை பொத்திக்கொண்டு இருந்திருக்கலாம். துரியோதனனுக்கு சொல்லாத அறிவுரையா? அவனுக்காக சகோதரர் கும்பகர்ணன் உயிர் விட்டதுபோல அயோமா கதி! 

21 minutes ago, Nathamuni said:

விரைவில், இலங்கை அரசே அவரை கையளிக்கும் நிலையினை அந்த நாட்டின் பொருளாதார நிலை உருவாக்கும்.

இராணுவமே செய்யலாம், அதனாலேயே கோத்தா நாட்டில் இருந்து தப்பியோட முயன்றார், முயல்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

மல்லாக்கப் படுத்து முதுகெலும்பின் பல்லாயிரமாண்டு கால அழுத்தத்தை அந்த முதல் குரங்கு நீக்கியிருக்கவில்லையெனில் மனித வரலாறும் உயிர் வாழ்க்கையும் வேறு மாதிரியாக இருந்திருக்கும்... விலங்குகளோடு விலங்குகளாக ஒன்றை ஒன்று கொன்று புசித்துக்கொண்டு காடுகளிலும் மலைகளிலும் தவழ்ந்து கொண்டிருக்கவேண்டியவர்கள் நாங்கள்.. மனிதசமூகம் அற்புதமானது! மனிதர்கள் அதிசயமானவர்கள்! மானுடராய் பிறத்தல் என்பது பேரண்ட இயக்கத்தின் மகத்தான அனுபவம்...  ஏனெனில் நாம் வாழும் பூமியும் அதனை உள்ளடக்கிய பால்வெளியும் அதன் பிரம்மாண்டத்தை மனித மனத்தின் வழியாகத்தான் கண்டறிந்து கொள்ள முடிந்தது.... மனிதர்களால் மட்டும்தான் உலகின் பிற உயிர்களை நேசிக்கிற இயக்கத்தை நேர்த்தியாக நிகழ்த்த முடிகிறது...  பேரிடர்கள் பிணி மூப்பு துயரம் என்று மானுடர்களை இருத்தலின் வாதை வதைத்தாலும் நாம் அன்பாலும் கருணையாலும் பிற உயிர்களை அரவணைத்துக் கொள்கிற வரம் பெற்றவர்கள்... அதுதான் நமது தனிச்சிறப்பும் கூட...

மனித வாழ்வின் கடைசி விளிம்பில் அமையும் இந்த கொடிய தனிமையான முதுமைக்காலத்திலாவது கோத்தபாயாவுக்கு அன்பையும் கருணையையும் இயற்கை கற்றுக்கொடுக்கட்டும்.. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

மக்கள் கோத்தாவை திரத்தியதை வைத்து பார்க்கும் போது, விரைவில், இலங்கை அரசே அவரை கையளிக்கும் நிலையினை அந்த நாட்டின் பொருளாதார நிலை உருவாக்கும்.

தங்கள் பரம்பரை அரசியல் செல்வாக்கை சரித்தவர், நாமலின் அரசியல் எதிர்காலத்தை  சிதைத்தவர்  என்கிற ஆத்திரம் கோத்தாமேல் மகிந்த குடும்பத்துக்குண்டு. அரசியல் செல்வாக்கில் தாங்கள் ஆடிய ஆட்டத்தை இவரின் தவறில் மறைத்துக்கொள்கிறார்கள். மொத்தத்தில் தனிமையும் கோத்தாவை ஒதுங்க செய்கிறது, விரட்டுகிறது. நாலும் நடந்து முடிந்த பின்தான் நல்லதும் கெட்டதும் புரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பழமொழி சொல்வார்கள் "அழுவாரெல்லாம் திருவான் பெண்டிலுக்காக  அழுகிறார்களாம் இழந்தவன் பெண்டிலுக்காக  அழுவாரில்லையாம்" தங்கள் முதுமையில் தங்களை  தாங்க, கொள்ளிபோட பிள்ளையில்லையே அவர்களுக்கு என்ன நடந்தது என்ற ஏக்கத்தோடு தெருவில் அலையும் நம் தொலைந்த உறவுகளின் பெற்றோருக்கு அழுவாரில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/1/2023 at 19:12, தமிழ் சிறி said:

"கற்றவனுக்கு... சென்ற இடம் எல்லாம் சிறப்பு, 
கோத்தாவுக்கு.. சென்ற இடம் எல்லாம் செருப்பு."

அமெரிக்க விஷாவுக்கு விண்ணப்பித்து நேரத்தை வீணாக்க வேண்டாமென்று அமெரிக்கத் தூதுவர் வீடு தேடிச்சென்று அறிவித்துள்ளாராமெல்லே, எடுத்த ரிக்கெற் வீணாக வேண்டாமேயென்று துபாய்க்கு போய் புலிக்குட்டிக்கு பால் பருக்குகிறார் என்றால் பாருங்கோவேன் அவருக்குள்ள சிறப்பை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Former President Gotabaya Rajapaksa who is currently on a holiday in UAE, had visited the Fame Park by Saif Belhasa. Pics from Raash Malhardeen

  • கருத்துக்கள உறவுகள்
On 3/1/2023 at 22:44, தமிழ் சிறி said:

நரி நோகாமல்... நொங்கு எடுத்திருக்கு. 😂
இப்ப.... சந்தோசமாக அமெரிக்கா போன ஆளையும், 
இருந்த இடத்தில் இருந்து அமெரிக்காவுக்கு ஒரு 📞 தொலை பேசியுடன், ☎️
ஆளை நடு வழியில், "தொங்க" விட்டிருக்கலாம் என்றே நினைக்கின்றேன். 🙂

ஆளை அவசரமாய் தேடினீங்களே! வந்துட்டாராம். சந்திக்கேல்லையே? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

ஆளை அவசரமாய் தேடினீங்களே! வந்துட்டாராம். சந்திக்கேல்லையே? 

ஆளுக்கு... வெளிநாட்டுப் பயணம் ஒத்துக் கொள்ளுதில்லை. 😂

 

அரசாங்கம் பணத்தை செலவிடவில்லை, தனது சொந்தப்பணமே என்கின்றார் கோட்டா !!

மீண்டும் நாட்டை வந்தடைந்தார் கோட்டா!

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தனிப்பட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (வியாழக்கிழமை) இலங்கை வந்தடைந்தார்.

அதன்படி இன்று காலை ராஜபக்சவும் அவரது மனைவியும் டுபாயில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததனர்.

கோட்டாபய ராஜபக்ஷ, மனைவி அயோமா ராஜபக்ஷ, மகன் தமிந்த ராஜபக்க்ஷ, மருமகள் எஸ்.டி.ராஜபக்ஷ மற்றும் அவரது பேரக்குழந்தையுடன், கடந்த டிசம்பர் 26ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

முன்னதாக, டுபாயின் தனியார் ‘ஃபேம் பார்க்’ இல் உரிமையாளர் சைஃப் அஹமட் பெல்ஹாசா மற்றும் பல விலங்குகளுடன் கோட்டாபய எடுத்த புகைப்படங்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1318874

###############   ################   ###########

 

 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and people standing

தோல்வியின் வலியை விட,  அவமானத்தின் வலியே கொடுமையானது.

Shanmuganathan puviraj

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

ஆளுக்கு... வெளிநாட்டுப் பயணம் ஒத்துக் கொள்ளுதில்லை. 😂

 

அரசாங்கம் பணத்தை செலவிடவில்லை, தனது சொந்தப்பணமே என்கின்றார் கோட்டா !!

மீண்டும் நாட்டை வந்தடைந்தார் கோட்டா!

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தனிப்பட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (வியாழக்கிழமை) இலங்கை வந்தடைந்தார்.

அதன்படி இன்று காலை ராஜபக்சவும் அவரது மனைவியும் டுபாயில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததனர்.

கோட்டாபய ராஜபக்ஷ, மனைவி அயோமா ராஜபக்ஷ, மகன் தமிந்த ராஜபக்க்ஷ, மருமகள் எஸ்.டி.ராஜபக்ஷ மற்றும் அவரது பேரக்குழந்தையுடன், கடந்த டிசம்பர் 26ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

முன்னதாக, டுபாயின் தனியார் ‘ஃபேம் பார்க்’ இல் உரிமையாளர் சைஃப் அஹமட் பெல்ஹாசா மற்றும் பல விலங்குகளுடன் கோட்டாபய எடுத்த புகைப்படங்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1318874

###############   ################   ###########

 

 

சுற்றித் திரிந்தாரா, புகலிடம் தேடி அலைந்து திரிந்தாரா? அன்று வெற்றிக்கதைகளை பேசினார், சுற்றியிருந்து கைதட்டிக்கேட்டார்கள், அவரது துயரக்கதையை கேட்க சுற்றமும் இல்லை, தூர விலகிவிட்டார்கள் இன்று. அன்று எல்லாவற்றையும் துறந்து பறந்து வந்தார் நாட்டுக்கு, இன்று எல்லாவற்றயும் இழந்து அலைந்து திரிகிறார் கவலையோடு நாட்டை விட்டோட. இது தான் வாழ்க்கை! புத்தமதம் இதை நிறைய போதிக்கிறது ஆனால் இவர்கள் அந்த மதத்தின் பேரால் எதையோ சாதிக்க துடிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration of snake

 

May be a cartoon of standing

இவரால்.... சனம்  நாட்டிலை, பிச்சை எடுக்குது. 
துபாய்க்கு  போய்... மிருகங்களுக்கு சாப்பாடு போடுகிறார். 

🤨

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text that says '### யோவ்... என்னய்யா பழத்தை அந்த கையில வச்சிக்கிட்டு வெறும் கையை நக்க கொடுக்குற? Sir MEME SIYA ரெண்டு வருஷமா என் நாட்டு மக்களுக்கே இதைதான் பண்ணேன் சத்தம் போடாம நக்கு'

 

May be a meme of 3 people and text that says 'FEW MINUTES LATER *ஸ'

  • கருத்துக்கள உறவுகள்
 

புளோரிடாவில்... சுற்றித்  திரியும் முன்னாள் பிரேசில் அதிபரும்,
 துபாயில்... சுற்றித்  திரியும் முன்னாள் ஸ்ரீலங்கா அதிபரும்... 
ஒரே மாதிரியான  நீல சேட்டும், கறுப்பு காற் சட்டை, சப்பாத்துடன் திரிவதன் மர்மம் என்ன.  

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.