Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சௌதி அரேபியாவில் பெரும் பணத்துடன் புதிய வரலாறு படைக்கும் ரொனால்டோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சௌதி அரேபியாவில் பெரும் பணத்துடன் புதிய வரலாறு படைக்கும் ரொனால்டோ

ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

போர்ச்சுகல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சௌதி அரேபியாவின் அல்-நாசர் கால்பந்து கிளப்பில் இணைந்துள்ளார். வரும் 2025-ஆம் ஆண்டுவரை அந்த கிளப்பில் ஆடுவதற்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மான்செஸ்டர் யுனைட்டட் கிளப்பில் இருந்து சர்ச்சைக்குரிய வகையில் ஏற்கெனவே வெளியேறிவிட்ட ரொனால்டோ சௌதி அரேபிய கிளப்பில் இணைய இருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வந்து கொண்டிருந்தன.

சவுதி அரேபிய கிளப்பில் ஆடுவதற்காக கால்பந்து வரலாற்றில் இதுவரை யாரும் வாங்காத சம்பளத்தை ரொனால்டோவுக்கு தருவதற்கு முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

இதன்படி ரொனால்டோவுக்கு ஆண்டுக்கு ரூ.600 கோடிக்கும் அதிகமாகச் சம்பளம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. விளம்பர ஒப்பந்தங்களைச் சேர்த்தால் சுமார் 1,770 கோடி ரூபாய் அளவுக்கு அவரது வருமானம் இருக்கும் என்று தெரியவருகிறது. எனினும் இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

 

“புதிய கால்பந்து லீக்கில், வேறொரு நாட்டில் ஆடும் அனுபவத்தைப் பெறுவதற்கு ஆர்வமாக இருக்கிறேன்” என்று இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ரொனால்டோ கூறினார்.

"ஐரோப்பிய கால்பந்தில் நான் வெற்றிபெற நினைத்த அனைத்தையும் பெற்றது எனது அதிர்ஷ்டம். ஆசியாவில் எனது அனுபவத்தைப் பெற இது சரியான தருணம் என்று உணர்கிறேன்."

சௌதி ப்ரோ லீக் கால்பந்தில் அல் நாசர் அணி 9 முறை சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறது. ரொனால்டோவை தங்கள் அணியில் சேர்த்துக் கொண்டது பற்றி, “ஒரு வரலாறு படைக்கப்படுகிறது” என்று அந்த அணியின் நிர்வாகம் கூறியிருக்கிறது. 

"எங்கள் லீக், நாடு, வருங்கால சந்ததியினர், சிறுவர்கள் மற்றும் பெண்கள் தங்களை சிறப்பாக உருவாக்கிக் கொள்ள இது ஊக்கமளிக்கும்" என்று கிளப் நிர்வாகம் கூறியது.

முன்னதாக மற்றொரு சவுதி அணியான அல் ஹிலால், ரொனால்டோவுக்கு சுமார் 3,050 கோடி அளித்து தங்கள் அணியில் சேருமாறு கோரியது. ஆனால் அப்போது அவர் மான்செஸ்டர் யுனைட்டட் அணியில் மகிழ்ச்சியாக இருந்ததால் அந்த கோரிக்கையை நிராகரித்தார்.

ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக கடந்த நவம்பர் மாதத்தில் பியர்ஸ் மோர்கனுக்கு ஒரு பேட்டியளித்திருந்தார். அதில் மான்செஸ்டர் யுனைட்டட் அணியில் தனக்கு துரோகம் இழைக்கப்பட்டதாகவும், அணியில் இருந்து கட்டாயப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டதாகவும் கூறினார்.

யுனைடெட் அணிக்காக 346 போட்டிகளில் விளையாடி 145 கோல்களை அடித்த ரொனால்டோ, ரியல் மாட்ரிட் அணியில் சேர்ந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 2021 இல் மீண்டும் யுனைட்டட் அணியில் சேர்ந்தார்.

ரசிகர் ஒருவரின் செல்போனை தட்டி விட்டதாக இரு உள்ளூர் போட்டிகளில் விளையாட அவருக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. 

ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெருமையும் கவலையும் நிறைந்த உலகக் கோப்பை

ரொனால்டோ சமீபத்தில் கத்தாரில் நடந்த உலகக் கோப்பையில் போர்ச்சுகல் அணிக்காக விளையாடினார். கானாவுக்கு எதிரான தனது அணியின் தொடக்க போட்டியில் கோல் அடித்ததன் மூலம் 5 உலகக் கோப்பை தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றைப் படைத்தார்.

ஆனால், நாக்அவுட் சுற்றில் போர்ச்சுகல்ஆடிய இரு போட்டிகளிலும் தொடக்கத்திலேயே களமிறக்கப்படாமல் பெஞ்சில் அமர வைக்கப்பட்டதும், காலிறுதியில் போர்ச்சுகல் தோற்று வெளியேறியதும் பெரும் சோகமாக அமைந்தன.

உலகக்கோப்பையில் இருந்து போர்ச்சுக்கல் அணி வெளியேற்றப்பட்டதும் ரொனால்டோ கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. இந்த புகைப்படத்தை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்களின் வருத்தத்தை தெரிவித்தனர்.

தனது அணியின் பயிற்சியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதன் காரணமாக அவரது தகுதி குறைக்கப்பட்டு ஒரு மாற்று வீரராக அதாவது சப்ஸ்டியூட் ஆக ஆட்டத்தில் இறக்கப்பட்டார் ரொனால்டோ.

ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு சிறிதுகாலம் முன்பு யுனெடெட் கிளப்பில் இருந்து ரோனால்டோ வெளியேறினார். ஆனால், கத்தாரில் அவரது தொடக்க ஆட்டங்கள் சிறப்பாகவே இருந்தன.

கானாவுக்கு எதிரான முதல் குழு போட்டியில் போர்ச்சுகல் அணியின் சர்ச்சைக்குரிய பெனால்டியில் அவர் வென்றார். ஃபிஃபா,  அது முழுமையான நுண்ணறிவுத் திறனுடன் அடிக்கப்பட்ட கோல் என்று பாராட்டியது. ஐந்து உலகக் கோப்பைகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சிறப்பையும் ரொனால்டோ பெற்றார்.

ஆனால் அவரது பாதை ஒரே சீராக செல்லவில்லை. அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் எந்த கோலையும் அடிக்கவில்லை. அதற்குள் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸுடன் அவருக்கு மோதல் ஏற்பட்டது. பின் தென் கொரிய அணியுடனான போட்டியில் மாற்று வீரராக பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.

அதன் பின் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 16ஆவது இடத்தில் அவரின் பெயர் இருந்தது. 2008ஆம் ஆண்டு ரொனால்டோ முக்கிய போட்டிகளை விளையாடத் தொடங்கிய காலத்தில் இருந்து அவ்வாறு அவர் அமர வைக்கப்பட்டது இதுவே முதல்முறை. அதேசமயம் அவருக்கு மாற்றாக களமிறக்கப்பட்ட கான்காலோ ரோமாஸ் ஹாட் ரிக் கோல் அடித்து அசத்தினார்.

 

ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதேபோலதான் மொராக்கோ அணியுடனான போட்டியிலும் நடத்தப்பட்டார் ரொனால்டோ. ஆனால் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் அதாவது 51ஆவது நிமிடத்தில் களமிறங்கினார் ஆனால் அப்போது ஏற்கெனவே மொராக்கோ அணி ஒரு கோல் அடித்து முன்னனியில் இருந்தது.

கோல் ஏதும் அடிக்கவில்லை என்றாலும் சர்வதேசப் போட்டிகளில் 196வது முறையாகத் தோன்றி குவைத் கால்பந்து வீரர் பதார் அல் முடாவாவின் சாதனையை சமன் செய்தார். ஆனால் இதை மறக்கமுடியாத ஒரு தருணமாக மாற்ற தவறவிட்டார் ரொனால்டோ. சர்வதேச அளவில் ஆண்களுக்கான கால்பந்து போட்டிகளில் 118 கோல் அடித்து சாதனை புரிந்திருந்தாலும் அந்த எண்ணிக்கையை அதிகரிக்க அவரால் முடியவில்லை.

இறுதி விசில் ஒலிக்கப்பட்டதும் எதிரணியில் இருந்த சிலருடன் கைகுலுக்கி விட்டு, மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

கண்ணீருடன் விடைபெற்ற அதே அரபு பிராந்தியத்தில் மற்றொரு புதிய அத்தியாயத்தை தொடங்கியிருக்கிறார் ரொனால்டோ.

https://www.bbc.com/tamil/articles/ckk6ypdyx96o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, ஏராளன் said:

கண்ணீருடன் விடைபெற்ற அதே அரபு பிராந்தியத்தில் மற்றொரு புதிய அத்தியாயத்தை தொடங்கியிருக்கிறார் ரொனால்டோ.

அரைக்கிழவனாகியும் இன்னும் விளையாட்டு வீரியம் குறையேல்லை :cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அரைக்கிழவனாகியும் இன்னும் விளையாட்டு வீரியம் குறையேல்லை :cool:

அவருடைய உடலை உறுதியாக வைத்திருப்பதால்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
46 minutes ago, ஏராளன் said:

அவருடைய உடலை உறுதியாக வைத்திருப்பதால்!

நாங்களும் தான் உறுதியாய் வைச்சிருக்கிறம் 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

நாங்களும் தான் உறுதியாய் வைச்சிருக்கிறம் 😎

உண்மை எனில் மகிழ்ச்சி அண்ணை.💪

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

நாங்களும் தான் உறுதியாய் வைச்சிருக்கிறம் 😎

என்னத்தை😄

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

அரைக்கிழவனாகியும் இன்னும் விளையாட்டு வீரியம் குறையேல்லை :cool:

த‌ல‌ எப்ப‌வும் கிங் தான் தாத்தா வ‌ய‌து ஆனாலும் துடியாட்ட‌மாய் விளையாடுகிறார்

வாழ்த்து சொன்னால் குறைந்தா போயிடுவிங்க‌ள்

 

இப்போது உள்ள‌ கால்ப‌ந்து வீர‌ர்க‌ளில் என‌க்கு ரொன‌ல்டோவை தான் அதிக‌ம் பிடிக்கும்

 

ப‌ல‌ கோடிய‌ ச‌ம்பாதிச்சாலும் அதில் காவாசி த‌ன்னும் ஏழை எளிய‌ ம‌க்க‌ளுக்கு போய் சேரும் ❤️🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சௌதி அரேபியாவில் அரங்கம் அதிர புதிய அவதாரம் எடுத்த ரொனால்டோ

ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

59 நிமிடங்களுக்கு முன்னர்

கால்பந்து வரலாற்றில் சாதனை அளவாக, உச்சபட்ச ஆண்டு ஊதியத்துடன் சௌதி அரேபிய அணியில் இணைந்துள்ள நட்சத்திர  வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஐரோப்பாவில் அனைத்தையும் சாதித்துவிட்டதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் இன்றும் பல அணிகள் தன்னை சேர்த்துக் கொள்ள  தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். 

உலகமே கொண்டாடிய உலகக்கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் கோலாகலமாக நடந்து கொண்டிருந்த வேளையிலேயே, மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து ரொனால்டோ விலகப் போவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. மான்செஸ்டர் யுனைடெட்  அணியை விமர்சித்து அவர் அளித்த பேட்டியே இதற்குக் காரணம். 

எதிர்பார்க்கப்பட்டது போலவே, மான்செஸ்டர் அணியில் இருந்து விலகிய ரொனால்டோ, சௌதி அரேபியாவைச் சேர்ந்த அல்-நாசர் அணியில் இணைந்தார். 2025-ம் ஆண்டு வரை இரண்டரை ஆண்டு காலத்திற்கு ரொனால்டோவை ஒப்பந்தம் செய்துள்ள அல்-நாசர் அணி, விளம்பர ஒப்பந்தங்களையும் சேர்த்து ஆண்டுக்கு சுமார் 1,775 கோடி ரூபாயை ஊதியமாக தர முன்வந்திருப்பதாக தி கார்டியன் தெரிவித்துள்ளது.

 

 

அல்-நாசர் அணியில் ரொனால்டோவை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தும் விழா, சௌதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் சவுத் பல்கலைக் கழக ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அங்கே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களின் பெரும் ஆரவாரத்திற்கிடையே, அல்-நாசர் அணியின் ஜெர்சியை அணிந்தபடி கிறிஸ்டியானோ ரொனால்டோ தோன்றினார். அரங்கமே வண்ணமயமாக காட்சியளித்தது. 

சவுதி கிளப் ஜெர்சியில் ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் பாலன் டி ஓர் விருதை 5 முறை வென்றுள்ள ரொனால்டோ, ரசிகர்களின் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டார். பின்னர், அல்-நாசர் அணி நிர்வாகிகளின் கேள்விகளுக்கு மட்டும் அவர் பதிலளித்தார். 

"ஐரோப்பாவில் மிக முக்கியமான முன்னணி அணிகளுடன் விளையாடிவிட்டேன். அங்கு அனைத்தையும் வென்றுவிட்டேன். ஆசியாவில் இது புதிய சவால்" என்று அவர் கூறினார். 

"ஐரோப்பா, பிரேசில், ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் இருந்தும், என் தாய்நாடான போர்ச்சுகலில் இருந்தும் கூட எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன என்பது யாருக்கும் தெரியாது. பல அணிகள் என்னை ஒப்பந்தம் செய்ய முயன்றன" என்று அவர் மேலும் குறிப்பிட்டார். 

சவுதி ஜெர்சியில் ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

"ஆனால், இந்த அணிக்கு விளையாடுவதாக வாக்களித்துவிட்டேன்" என்று கூறிய ரொனால்டோ, "இந்த ஒப்பந்தம் தனித்துவமானது. ஆனால், நானும் தனித்துவமான வீரர் என்பதால் என்னைப் பொருத்தவரை இது சாதாரணமானதுதான்," என்றார். 

ரொனால்டோவை ஒப்பந்தம் செய்தது சிறப்பான ஒன்று என்று அல்-நாசர் அணி பயிற்சியாளர் ரூடி கார்சியா தெரிவித்தார். 

"ரொனால்டோ போன்ற சிறந்த வீரர்களை கையாள்வது எளிது என்பதை கண்டிருக்கிறேன். ஏனெனில், அவர்களுக்கு கற்றுக் கொடுக்க எதுவும் இல்லை" என்றார் அவர். 

அல்-நாசர் அணிக்கு ரொனால்டோ எவ்வளவு முக்கியம்?

தனது 37-வது வயதில் ரொனால்டோ, அல்-நாசர் அணிக்கு வந்துள்ளார். தொழில்முறை கால்பந்து வாழ்வில், 819 கோல்களை அடித்துள்ளார். அதில், 700 கோல்களை கிளப் போட்டிகளில் வந்தவை. கடந்த சீசனில் மேன்செஸ்டர் யுனைடெடின் முதன்மை கோல் ஸ்கோரராக 24 கோல்களை அடித்துள்ளார். அதில், 18 கோல்கள் ப்ரீமியர் லீக்கில் அடித்தவை.

 

இருப்பினும், அவருக்கும் மேன்செஸ்டர் யுனைடெட் கிளப்புக்குமான ஒப்பந்தம் முடிவுக்கு வருவதற்கு முன்பு, இங்கிலாந்தில் நடந்த போட்டிகளில் மொத்தமாகச் சேர்த்து மூன்று கோல்களையே அடித்துள்ளார்.

 

கத்தாரில் உலகக்கோப்பை போட்டியிலும், ரவுண்ட் ஆஃப் 16, காலிறுதி ஆகிய சுற்றுகளில் அவர் போர்ச்சுகலுக்கு பெரியளவிலான பங்களிப்பை வழங்கவில்லை.

அவர் தற்போது ஆசிய லீக் போட்டிகளின் பக்கம் வந்துள்ளது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த நிலையில், இது அவருக்கு நல்ல வாய்ப்பாக இருக்கலாம் என்றும் அல்-நாசர் அணிக்கும் இது நல்ல வலுவைச் சேர்க்கலாம் என்றும் கருதப்படுகிறது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

ரொனால்டோவின் புதிய கிளப் எப்படிப்பட்டது?

அல்-நாசர் கிளப் 1955ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சௌதி தலைநகரான ரியாத்தில் இது அமைந்துள்ளது. அந்நாட்டின் உச்சகட்ட பிரிவான சௌதி தொழில்முறை லீக் போட்டிகளில் ஆடும் 16 அணிகளில் இதுவும் ஒன்று. கடந்த சீசனில் அவர்கள் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.

 

சௌதி தொழில்முறை லீக் போட்டிகளில் 9 முறை அவர்கள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். அந்த லீக் போட்டியின் வரலாற்றில் இது இரண்டாவது அதிக வெற்றி எண்ணிக்கை. முதல் இடத்தில், 18 வெற்றிகளோடு அல்-நாசருக்கு நீண்டகால போட்டியாளராக இருக்கும் அல் ஹிலால் அணி உள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

2018-19 போட்டியின்போது கடைசியாக அல் நாசர் கடைசியாக சௌதி தொழில்முறை லீக் கோப்பையைக் கைப்பற்றியது. 1995ஆம் ஆண்டில் இரண்டாவது இடத்திற்கு வந்தபோது, அவர்கள் ஆசிய கால்பந்து லீக் போட்டியில் தங்களுடைய சிறந்த ஆட்டத்தைக் காட்டினார்கள்.

 

ஆசிய சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கான வடிவத்தை ஆசிய கால்பந்து சம்மேளனம் தற்போது மாற்றியுள்ளது. அல்-நாசர் 2022-23க்கான குரூப் சுற்றுக்குத் தகுதி பெற வேண்டுமெனில், அதற்கு சௌதி ப்ரீமியர் லீக்கில் வெற்றி பெற வேண்டும்.

இந்திய மண்ணில் ரொனால்டோ விளையாட வாய்ப்பு

2021-22 சௌதி ப்ரீமியர் லீக் சாம்பியனாக இருப்பதால், அல் ஹிலால் ஏற்கெனவே 2023-24 ஆசிய சாம்பியன்ஸ் லீக் குரூப் சுற்றுக்குள் நேரடியாக நுழையும்  தகுதியைப் பெற்றுள்ளது. சௌதி அரேபியாவிலிருந்து செல்லக்கூடிய மற்ற இரண்டு அணிகளுக்கான இடங்கள், 2022-23 ப்ரீமியர் லீக் சாம்பியன் மற்றும் கிங்ஸ் கோப்பை வெற்றியாளருக்குச் செல்லும்.

ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

ப்ளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு ஏற்கெனவே 2021-22 கிங்ஸ் கோப்பையை வென்ற அல் ஃபய்ஹாவுக்கு சென்றுள்ளது. அல்-நாசர் அணியைப் பொறுத்தவரை, 2022-23இல் மூன்று குரூப் சுற்றுகள் மற்றும் ஒரு ப்ளே-ஆஃபில் விளையாடவுள்ளார்கள். 2021-22, 2022-23 இந்தியன் சூப்பர் லீக் போட்டிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதைப் பொறுத்து ஆசிய சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு இந்திய அணிகள் தகுதி பெறுவது முடிவாகும்.

2021-22 லீக்கில் ஜாம்ஷெட்பூர் அணி வெற்றிபெற்று ப்ளே-ஆஃபில் தங்களுடைய இடத்தை உறுதி செய்துள்ளது. இந்நிலையில், அல்-நாசர் 2022-23 சௌதி ப்ரீமியர் லீக் அல்லது கிங்ஸ் கோப்பையை வென்றால், இந்திய கிளப்புகளோடு மோதும் வாய்ப்பு 2023-24 ஆசிய சாம்பியன்ஸ் லீக்கில் கிடைக்க வாய்ப்புள்ளது. அது நடந்தால், ரொனால்டோ இந்தியாவில் விளையாடும் வாய்ப்பு உருவாகும்.

https://www.bbc.com/tamil/articles/c3gn5jzyn53o

  • கருத்துக்கள உறவுகள்

த‌ல‌ க‌ள‌ம் இற‌ங்கிட்டு இனி கோல் ம‌ழை தான்..............அர‌பிய‌ ம‌க்க‌ள் ம‌ன‌ங்க‌ளில் த‌ல‌ பெரிய‌ இட‌ம் பிடிப்பார்............🙏🙏🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
26 minutes ago, பையன்26 said:

த‌ல‌ க‌ள‌ம் இற‌ங்கிட்டு இனி கோல் ம‌ழை தான்..............அர‌பிய‌ ம‌க்க‌ள் ம‌ன‌ங்க‌ளில் த‌ல‌ பெரிய‌ இட‌ம் பிடிப்பார்............🙏🙏🙏

கடைசி காலத்திலையும் பண மழை கொட்டப்போவுது   🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவில் அனைத்து சாதனைகளையும் முறியடித்துவிட்டேன்: சவூதியில் ரொனால்டோ 

By SETHU

04 JAN, 2023 | 06:32 PM
image

தான் ஒரு தனித்துவமான கால்பந்தாட்ட வீரர் என போர்த்துக்கல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறியுள்ளார். அத்துடன், ஐரோப்பாவில் அனைத்து சாதனைகளையும் தான் முறியடித்துள்ள நிலையில், சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகத்தில் இணைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

37 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ. இங்கிலந்தின் மென்செஸ்டர் யுனைடெட், ஸ்பெய்னின் றியல் மெட்றிட், இத்தாலியின் ஜுவென்டஸ் முதலான கழகங்களில் ரொனால்டோ விளையாடினார்.

பின்னர் மீண்டும் மென்செஸ்டர் யுனைடெட்டில் 2021 ஆம் ஆண்டு அவர் இணைந்தார். எனினும், அக்கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பயிற்றுநருடன் ஏற்பட்ட முரண்பாடுகளையடு;தது அவர் விலகினார். 

Ronaldo---Saudi-Al-Nassr-FC---AFP.jpg

AFP Photo

தற்போது சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகத்தில் ரொனால்டோ இணைந்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை,  ரொனால்டோவுக்கு அக்கழகம் நேற்றுமுன்தினம் விமர்சையான வரவேற்பு அளித்தது. றியாத் நகரிலுள்ள, அல் நாசர் கழகத்தின் மிர்சூல் பார்க் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் தனது மனைவி ஜோர்ஜியானா ரொட்றிகஸ் மற்றும் பிள்ளைகளுடன் ரொனால்டோ கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் ரொனால்டோ பேசுகையில், தனது கால்பந்தாட்ட வாழ்க்கை முடிந்துவிடவில்லை என்றார். 

'அங்கு (ஐரோப்பாவில்) அனைத்து சாதனைகளையும் நான் முறியடித்துவிட்டேன். இங்கே சில சாதனைகளை முறியடிக்க விரும்புகிறேன்' எனவும் ரொனால்டோ தெரிவித்தார்.

Cristiano-Ronaldo_s-partner-Georgina-Rod

AFP Photo

'எனது கால்பந்தாட்ட வாழ்க்கையின் முடிவில் நான் சவூதி அரேபியாவுக்கு வரவில்லை,  ஐரோப்பாவில் எனது வேலை செய்து முடிக்கப்பட்டு விட்டது. ஐரோப்பா, பிரேஸில், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, போர்த்துகலில் பல அழைப்புகள் எனக்கு கிடைத்தன. என்னை ஒப்பந்தம் செய்வதற்கு பல கழகங்கள் முயற்சித்தன. ஆனால் நான் இக்கழகத்துக்கு நான் சம்மதம் தெரிவித்தேன்' என ரொனால்டோ கூறினார்

Cristiano-Ronaldo-and--partner-Georgina-

மனைவி ஜோர்ஜியானா ரொட்றிகஸ் மற்றும் பிள்ளைகளுடன் ரொனால்டோ  kidAFP Photo

https://www.virakesari.lk/article/144982

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

கடைசி காலத்திலையும் பண மழை கொட்டப்போவுது   🤣

இர‌ண்டு ஆண்டுக்கு இந்தியா காசுக்கு 1500 கோடியாம் ஒப்ப‌ந்த‌ம் 

த‌ல‌ வேற‌ லெவ‌ல் தாத்தா ❤️🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பையன்26 said:

இர‌ண்டு ஆண்டுக்கு இந்தியா காசுக்கு 1500 கோடியாம் ஒப்ப‌ந்த‌ம் 

த‌ல‌ வேற‌ லெவ‌ல் தாத்தா ❤️🙏🙏🙏

அந்தக் காசை…. ஶ்ரீலங்காவுக்கே கடன் குடுத்து,
வட்டிக் காசை… சுளையாக வாங்கலாம் போலிருக்கே. 😂 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, பையன்26 said:

இர‌ண்டு ஆண்டுக்கு இந்தியா காசுக்கு 1500 கோடியாம் ஒப்ப‌ந்த‌ம் 

த‌ல‌ வேற‌ லெவ‌ல் தாத்தா ❤️🙏🙏🙏

தல எப்பவும் வேற லெவல் 😁

Brand Pills: What you can learn from Cristiano Ronaldo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, தமிழ் சிறி said:

அந்தக் காசை…. ஶ்ரீலங்காவுக்கே கடன் குடுத்து,
வட்டிக் காசை… சுளையாக வாங்கலாம் போலிருக்கே. 😂 🤣

எந்த விசரன் சிறிலங்காவுக்கு கடன் குடுப்பான்????? 😂

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

எந்த விசரன் சிறிலங்காவுக்கு கடன் குடுப்பான்????? 😂

ஶ்ரீலங்காவின் குணத்தைப் பற்றி தெரியாதர்கள் இன்னும் இருப்பினம் தானே… 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘சௌதி அரேபியாவை பாராட்டாதீர்கள்’ - ரொனால்டோவுக்கு அம்னெஸ்டி அறிவுரை  கூறுவது ஏன்?

ரொனால்டோவுக்கு அம்னெஸ்டியின் அறிவுரை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கிறிஸ்டியானோ ரொனால்டோ தனக்குக் கிடைத்திருக்கும் புதிய தளத்தைப் பயன்படுத்தி சௌதி அரேபியாவில் மனித உரிமைகள் பிரச்சனைகள் குறித்து பேச வேண்டும் என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் எனப்படும் சர்வதேச மன்னிப்பு சபை கேட்டுக் கொண்டிருக்கிறது. 

37 வயதான ரொனால்டோ, 2025 ஆம் ஆண்டு வரை சௌதி அரேபியாவின் அல் நாசர் கிளப்பில் ஆடுவதற்கு ஆண்டுக்கு 177 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் மதிப்புள்ள உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளார். இந்திய மதிப்பின்படி அவருக்கு ஆண்டுக்கு ரூ.1770 கோடிக்கும் அதிகமான பணம் கிடைக்கும்.

ரொனால்டோவின் ஒப்பந்தம் "அரசியலுக்காக விளையாட்டைப் பயன்படுத்தும் உத்தியின் (ஸ்போர்ட்ஸ் வாஷிங்)" ஒரு பகுதியாகும் என்று அம்னெஸ்டி கூறுகிறது.

செவ்வாயன்று அல் நாசரால் அறிமுகப்படுத்தப்பட்ட ரொனால்டோ சௌதி அரேபியாவை "அற்புதமான நாடு" என்று அழைத்தார்.

 

 

சௌதி அரேபியாவின் உத்தி என்ன?

சௌதி அரேபியா விளையாட்டு நிகழ்வுகளில் பெருமளவில் முதலீடு செய்துள்ளது. தனியாகப் பிரிந்த LIV கோல்ஃப் தொடருக்கு நிதி ஆதரவு அளித்தது. உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை, ஃபார்முலா ஒன் கிராண்ட்ப்ரீ ஆகியவற்றையும நடத்துகிறது.  

 

அதே நேரத்தில் பிரீமியர் லீக் கிளப்பான நியூகேஸில் யுனைடெட்டை கையகப்படுத்த சௌதி அரேபிய பொது பொது முதலீட்டு நிதியம் நிதி உதவி அளித்தது.

 

விளையாட்டுத்துறையில் ஆர்வம் காட்டும் சௌதி அரேபியாவும் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. பெண்ணுரிமை பேசுவோர்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவது உள்ளிட்ட சீர்திருத்தங்கள், பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மானின் நிர்வாகத்தின் கீழ் நடந்தாலும், குற்றச்சாட்டுகளும் நீடித்திருக்கின்றன.

 

2018 இல் பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை கொலை செய்ய பட்டத்து இளவரசர் உத்தரவிட்டார் என்று மேற்கத்திய உளவுத்துறை அமைப்புகள் நம்புகின்றன. இந்தக் குற்றச்சாட்டை முகமது பின் சல்மான் தொடர்ந்து மறுக்கிறார்.

 

செளதியில் தீவிரமாகும் கால்பந்து மோகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அம்னெஸ்டியின் அறிவுரை

"சௌதி அரேபியாவை விமர்சனம் செய்யாமல் பாராட்டுகளை மட்டும் வழங்குவதற்கு பதிலாக, ரொனால்டோ தனது கணிசமான பொது தளத்தை பயன்படுத்தி நாட்டின் மனித உரிமைகள் பிரச்னைகளை கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்" என்று அம்னெஸ்டியின் மத்திய கிழக்கு ஆய்வாளர் டானா அகமது கூறினார்.

"கொலை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக சௌதி அரேபியா தொடர்ந்து மரண தண்டனையை நிறைவேற்றுகிறது. கடந்த ஆண்டு ஒரே நாளில், 81 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பலருக்கு நியாயமான விசாரணை நடக்கவில்லை”.

"கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது புகழையும் பிரபலம் என்கிற அந்தஸ்தையும் சௌதியின் ‘விளையாட்டு உத்திக்கான’ கருவியாக மாற்ற அனுமதிக்கக் கூடாது. நாட்டில் உள்ள எண்ணற்ற மனித உரிமைப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசுவதற்கு அல் நாசரில் இருக்கும் நேரத்தை அவர் பயன்படுத்த வேண்டும்." என்று டானா அகமது கோரியிருக்கிறார்.

செளதியில் தீவிரமாகும் கால்பந்து மோகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

செளதியில் தீவிரமாகும் கால்பந்து மோகம்

உலக கோப்பையில் செளதி அரேபியா அணி தனது முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த அர்ஜெண்டினாவை தோற்கடித்து ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 

நவம்பர் 22ஆம் தேதியன்று போட்டியைக் காண வசதியாக,  அந்த நேரத்தில் சவுதி அரேபியாவில் அமைச்சகங்கள், அரசுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 

அர்ஜென்டீனாவை சவுதி அரேபியா வென்ற உற்சாக மிகுதியில், அடுத்த நாளை தேசிய விடுமுறை தினமாக மன்னர் சல்மான் அறிவித்தார். 

இந்த வெற்றியை சவுதி அரேபியா மட்டுமின்றி, ஒட்டுமொத்த அரபு உலகமும் கொண்டாடி மகிழ்ந்தது. சமூக வலைதளங்களில் அரபு நாடுகளைச் சேர்ந்த மக்கள் செளதியின் வெற்றியை தங்களது வெற்றியாகவே கருதி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். 

இந்த வெற்றி ஒன்றும் தற்செயலானது அல்ல. இந்த தருணத்திற்காக செளதி அரேபிய அணி 3 ஆண்டுகளாக கடுமையாக தயாராகி வந்ததாக அந்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சரும், இளவரசருமான அப்துல் அஜிஸ் பின் துர்கி அல் ஃபெய்சல் தெரிவித்தார். கால்பந்துக்கு செளதி விளையாட்டு அமைச்சகம்  தரும் ஊக்கம், அதன் பாதை மற்றும் நோக்கங்களை தெளிவாக உணர்த்துகிறது. 

செளதியில் தீவிரமாகும் கால்பந்து மோகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

செளதியின் தொலைநோக்குத் திட்டம்

கத்தாரில் உலகக்கோப்பை நடந்தேறிய போது, உலக கால்பந்து கூட்டமைப்பு (FIFA) தலைவர் இன்ஃபான்டினோவுடன் செளதி பட்டத்து இளவரசர் பின் சல்மான் ஒன்றாக பலமுறை தென்பட்டார். 2016-ல் வெளியிடப்பட்ட அவரது தொலைநோக்குத் திட்டம் 2030-ல் விளையாட்டுத் துறைக்கு பிரதான இடம் தரப்பட்டுள்ளது. 

அதன் பிறகு, செளதி அரேபியாவின் விளையாட்டு உலகில் மிகப்பெரிய மாற்றங்களைக் காண முடிந்தது. 

2030-ம் ஆண்டிற்குள் விளையாட்டில் மக்களின் பங்களிப்பை 40 சதவீதமாக உயர்த்துவது, சர்வதேச அரங்கில் சவுதி விளையாட்டு வீரர்களின் செயல்பாட்டை மேம்படுத்துவது, விளையாட்டு சார்ந்த பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவது ஆகிய 3 முக்கிய நோக்கங்களை இந்த தொலைநோக்குத் திட்டம் கொண்டுள்ளது. 

பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பேசிய வீடியோ ஒன்றை கால்பந்து பத்திரிகையாளரான யூரி லெவி பகிர்ந்திருக்கிறார்.

அந்த வீடியோவில், ரொனால்டோவின் செளதி அரேபிய வருகை மிகப்பெரிய மாற்றத்திற்கான அறிகுறி என்று பட்டத்து இளவரசர் கூறியிருக்கிறார். அரபு பிராந்தியம் புதிய ஐரோப்பாவாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

https://www.bbc.com/tamil/articles/cz9wyrk5925o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரொனால்டோவுக்காக சௌதி அரேபியாவின் திருமணம் குறித்த கடுமையான சட்டம் வளைக்கப்படுகிறதா?

கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அவருடைய காதலி ஜார்ஜினா ரோட்ரிகஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அவருடைய காதலி ஜார்ஜினா ரோட்ரிகஸ்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சௌதி அரேபிய சட்டப்படி திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வது சட்டவிரோதம் என்றாலும், அங்கு ரொனால்டோ தனது காதலியோடு லிவ்-இன் உறவில் இருப்பது பேசுபொருளாகியுள்ளது.

இது ஒருபுறமிருக்க, நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சௌதி அரேபியாவின் அல்-நாசர் கிளப்புக்கான தனது முதல் போட்டியில் விளையாடுவதற்கு இன்னும் காத்திருக்க வேண்டியுள்ளது.

இங்கிலாந்து கால்பந்து சம்மேளனம், ரொனால்டோ இரண்டு போட்டிகளில் விளையாடத் தடை விதித்துள்ளது. அவர் சௌதிக்கான தனது முதல் போட்டியை சௌதி ப்ரோ லீக் கிளப்பான அல்-தாய்க்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவிருந்தார்.

ஆனால், அவர் விளையாடவில்லை. சுமார் 1700 கோடி ரூபாய் சம்பளத்தோடு, 2025ஆம் ஆண்டு வரை சௌதியுடன் ரொனால்டோ ஒப்பந்தம் செய்துள்ளார். அவ்வளவு சம்பளத்திற்கு ஒப்பந்தமாகியும் அவர் ஏன் விளையாடவில்லை?

 

ரொனால்டோ முன்பு மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் விளையாடி வந்தார்.

கடந்த திங்கட்கிழமையன்று, சௌதி அரேபியாவின் தலைநகர் ரியாத் சென்றடைந்த அவருக்கு அங்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள், அல்-நாசர் கிளப்பின் மைதானத்திலும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரொனால்டோ தனது புதிய கிளப்பை சேர்ந்த வீரர்களுடன் பயிற்சியில் பங்கேற்றார். அவர் ஜனவரி 6ஆம் தேதி முதல் போட்டியில் விளையாடுவார் என்று அல்-நாசர் முழு நம்பிக்கையுடன் இருந்தது. இந்தப் போட்டிக்காக சுமார் 28,000 டிக்கெட்டுகள் வரை விற்பனையானது.

ஆனால், நவம்பர் மாதம் இங்கிலாந்து கால்பந்து சம்மேளனத்தால் அவர் இரண்டு போட்டிகளில் விளையாடக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டதாக அதற்குப் பிறகு தான் அல்-நாசர் கிளப்புக்கு தெரிவிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஒரு போட்டியில் நிகழ்ந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரொனால்டோ அவருடைய ரசிகர்களில் ஒருவருடைய கைபேசியைத் தட்டிவிட்டது அதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது.

தடை விதிக்கப்பட்டது ஏன்?

ரொனால்டோ கைபேசியைத் தட்டிவிட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர் ஆட்டிசம் குறைபாடு கொண்டவர். ஆட்டிசம் குறைபாடு இருக்கும் ஒருவருடைய கைபேசியைத் தட்டிவிட்டதற்கு ரொனால்டோ மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனால், அந்த ரசிகர் மன்னிப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

மான்செஸ்டர் யுனைடெட் அணி, அந்தப் போட்டியில் 0-1 என்ற கனக்கில் தோல்வியடைந்தது. போட்டி முடிந்த பிறகு ரொனால்டோ, கால்பந்து வீரர்கள் செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு சிறுவனின் கையிலிருந்த கைபேசியை, சிறுவனின் கைகளைக் கடுமையாகத் தட்டியதன் மூலம் கீழே விழ வைத்தார்.

இந்தச் சம்பவத்திற்காக ரொனால்டோவை போலீசாரும் எச்சரித்தனர். அதற்குப் பிறகு அவர் சமூக ஊடகத்தில் மன்னிப்பும் கேட்டார். ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடந்த ஒரு போட்டியைக் காண்பதற்கு அந்த ரசிகருக்கு அழைப்பும் விடுத்தார்.

இந்தச் சம்பவம் குறித்து அவர் பேசியபோது, “இக்கட்டான சூழ்நிலையில் நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எளிதல்ல. ஆனால், இதையெல்லாம் மீறி இந்த அழகான விளையாட்டை விரும்பும் இளைஞர்களுக்காக மரியாதயான வழியைக் கடைபிடித்து நாம் முன்மாதிரியாக இருக்க வேண்டும்,” என்று கூறினார்.

ஆட்டிசம் குறைபாடுடைய 14 வயதான ஜாக், ரொனால்டோவின் வாய்ப்பை நிராகரித்தார். அவர் தெரிவித்த மன்னிப்பைக்கூட ஏற்கவில்லை.

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் காரணமாக அவரைத் தடை செய்ய முடியவில்லை. அதனால்தான் இப்போது அவர் தனது புதிய கிளப்பில் அந்தத் தடையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஃபிஃபா விதிகள் கூறுவது என்ன?

ஃபிஃபா விதிகளின்படி, ஒரு வீரருக்கு நான்கு போட்டிகள் அல்லது மூன்று மாதங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்து, அவரது இடமாற்றம் நிகழும் வரை அதைச் செயல்படுத்த முடியாமல் இருந்தால், அந்த வீரர் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு புதிய கிளப்பில் சேர்ந்த பிறகு அதைச் செயல்படுத்துவது கட்டாயம்.

ரொனால்டோவுக்கும், அவர் அதே கிளப்பில் நீடித்தாலும், வேறு கிளப்புக்கு மாறினாலும், அவர் மீதான தடை அமல்படுத்தப்படும் என்று அப்போதே தெரிவிக்கப்பட்டது.

அல்-நாசர் கிளப்பின் அடுத்த போட்டி ஜனவரி 14, 21 ஆகிய தேதிகளில் நடக்கும். ஆனால், ரொனால்டோ தனது புதிய கிளப்புக்கான முதல் போட்டியை ஜனவரி 21 அன்று தான் விளையாட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினத்தில், அல்-நாசர் இட்ஃபாக் கிளப்புக்கு எதிராக விளையாடுகிறது.

ரொனால்டோவுக்காக சட்டத்தை வளைக்கிறதா சௌதி அரேபியா?

கிறிஸ்டியானோ ரொனால்டோவும் அவருடைய காதலி ஜார்ஜினா ரோட்ரிகஸும் திருமணம் செய்துகொள்ளாமல் லிவி-இன் உறவில் வாழ்ந்து வருகின்றனர். சௌதி அரேபிய சட்டப்படி இது தவறு. அந்நாட்டுச் சட்டப்படி, ஒரே வீட்டில் திருமனம் செய்துகொள்ளாமல் வாழ்வது சட்டவிரோதமானது.

இருப்பினும், ரொனால்டோவும் அவருடைய காதலியும் இதற்காக அதிகாரிகளால் தண்டிக்கப்படப் போவதில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பானிய செய்தி நிறுவனமான இஎஃப்இ, ரொனால்டோ உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும் வெளிநாட்டவராகவும் இருப்பதால் அவர் தண்டிக்கப்பட வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரொனால்டோவுக்கும் ரோட்ரிகஸுக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் ரொனால்டோவுக்கு இரட்டையர்கள் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இரண்டு சௌதி வழக்கறிஞர்களை மேற்கோள் காட்டி அந்தச் செய்தி தெரிவித்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது. அதன்படி, ரொனால்டோவின் இந்தச் சூழ்நிலைக்குள் அதிகாரிகள் ஈடுபட மாட்டார்கள் என்று சட்ட வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஒரு வழக்கறிஞர், “திருமண ஒப்பந்தம் இல்லாமல் இணைந்து வாழ்வதை சட்டம் தடை செய்தாலும், அதிகாரிகள் யாரையும் துன்புறுத்தாமல் இருக்கத் தொடங்கியுள்ளனர். இந்த சட்டங்கள், நிச்சயமாக பிரச்னையோ குற்றமோ நிகழும்போது பயன்படுத்தப்படுகின்றன,” எனத் தெரிவித்ததாக அந்தச் செய்தி கூறுகிறது.

மற்றொரு வழக்கறிஞர், “சௌதி அரேபிய அதிகாரிகள், வெளிநாட்டவர்கள் விஷயத்தில் இதுபோன்றவற்றில் தலையிடுவதில்லை. ஆனால், சட்டம் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வதைத் தடை செய்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c4nkkl9wx2qo

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ரொனால்டோவின் எதிர்காலத்தை சிதைப்பதற்கு முயற்சிக்கிறார்கள் போல ........!   😢

  • கருத்துக்கள உறவுகள்

 

பயிற்சியாளர் எரிக் டென் ஹாக் மற்றும் பெயரிடப்படாத நிர்வாகிகள் அவரை மான்செஸ்டர் யுனைடெட்டில் இருந்து கட்டாயப்படுத்த ஆர்வமாக இருப்பதாக கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறுகிறார். சீசனின் தொடக்கத்தில் அவர் வந்ததிலிருந்து மூத்த ஸ்ட்ரைக்கர் டச்சுக்காரருடன் கடினமான உறவைக் கொண்டிருந்தார்.

கிளப்பின் கட்டமைப்பையும் ரொனால்டோ தாக்கினார். 2013 இல் சர் அலெக்ஸ் பெர்குசன் வெளியேறியதில் இருந்து யுனைடெட் ஒரு கிளப்பாக முன்னேறவில்லை என்று டாக்டிவி வெளியிட்டது மற்றும் புதன் மற்றும் வியாழன் அன்று ஒளிபரப்பப்பட உள்ள பேட்டியின் மேலும் கிளிப்புகள், ரொனால்டோ கூறினார்.

'நான் காட்டிக் கொடுக்கப்பட்டதாக உணர்ந்தேன்': ரொனால்டோ டென் ஹாக் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் ஆகிய இரு அணிகளை இலக்காகக் கொண்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2023 at 20:46, suvy said:

இவர்கள் ரொனால்டோவின் எதிர்காலத்தை சிதைப்பதற்கு முயற்சிக்கிறார்கள் போல ........!   😢

ரொனால்டொவுக்கு இனி என்ன‌ எதிர் கால‌ம் த‌லைவ‌ரே
இன்னும் இர‌ண்டு வ‌ருட‌ம் விளையாடி விட்டு ஓய்வை அறிவிப்பார்............இந்த‌ வ‌ய‌திலும் அதிக‌ ச‌ம்ப‌ள‌ம் எடுத்த‌ பெருமை ரொனால்டோவுக்கு தான்............❤️🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.