Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் சிலாவத்துறை நோக்கி படையினர் முன்னகர்வு

Featured Replies

புலிகள் வசமிருந்த நகர் மீட்பு - ராஜபக்சே அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2007

கொழும்பு: மன்னார் மாவட்டத்தில் உள்ள சிலவத்துரை என்ற இடத்தை விடுதலைப் புலிகள் பிடியிலிருந்து ராணுவம் மீட்டுள்ளதாக இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே அறிவித்துள்ளார்.

இலங்கையின் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் தற்போது விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக நடந்து வரும் இந்த சண்டை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள சிலவத்துரை என்றஇடத்தில் நடந்த சண்டையின் இறுதியில் அந்த நகரை புலிகளிடமிருந்து ராணுவம் மீட்டுள்ளதாக அதிபர் ராஜபக்சே இன்று அறிவித்தார்.

இப்பகுதியில் கடல் மார்க்கமாகவும் இலங்கை படையினர் புலிகள் நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர். விமானத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது. இந்த சண்டையில் பல தமிழர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இலங்கையில் கடந்த ஆண்டு அமைதி ஒப்பந்தம் செயலிழந்த பின்னர் இதுவரை 5000க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1983ம் ஆண்டு இனக் கலவரம் வெடித்தது முதல் இதுவரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்

thatstamil

  • Replies 58
  • Views 8.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

map2bd8.jpg

இவைதான் விடுதலைப்புலிகளின் பூரண கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் - மகிந்த ஐயாவுக்கு உண்மை தெரியாது போல.

அதற்கிடையில் அவர் ஒருத்தர் வாகரை போல.. தந்திரமாம். ஒரு சூனியப் பிரதேசத்தைப் பிடிப்பதற்கு.. இராணுவ தந்திரம். சும்மா நடந்து போனாலே போயிடலாம்..! :lol:

இதிலிருந்து தெரிவதென்ன...???!

பிரேமதாசாவின் தந்திரம்..

கிழக்கை மீட்டு.. வடக்கைப் பிடிப்பது. அவரும் இதே நகர்வைத்தான் செய்தார்.

டி பி விஜேதுங்கா.. பிரேமதாசாவைத் தொடர்ந்தார்.

சந்திரிக்கா - ரத்வத்தை கூட்டும் இதைத்தான் செய்தன.

தற்போது ராகபக்சவும் இதைத்தான் செய்கின்றனர்.

சிலாவத்துறை பல தடவைகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த இடம் தான். அது சூனியப் பிரதேசமாக போர் நிறுத்த உடன்படிக்கைக்குப் பின்னர் இருந்தது. இப்போ.. இராணுவம் அதைப் பிடித்துவிட்டு.. நகரைப் பிடிச்சதாகச் சொல்கிறது.

ரத்வத்தையும் இதே போன்ற ஒரு இராணுவ நகர்வையே செய்து கொண்டிருந்தார்.

சிங்களத் தலைவர்களைப் பொறுத்தவரை தமது அரசியலுக்காக இராணுவ நடவடிக்கை என்பதாகிப் போயிட்டுது..! இவர்கள் எல்லாம் ஜனநாயக அரசுகளாம்.. அதை உலகின் கொடுமையான ஜனநாயகப் பயங்கரவாதி அமெரிக்கா உரக்கச் சொல்கிறதாம்.. அமெரிக்க ஜனநாயகமே அதன் இராணுவ இயந்திரத்தால் தான் உலகில் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்க ஜனநாயம் அப்படி ஒரு நிலைக்கு வந்திட்டுது..! :lol::D

பட உதவி: http://www.tamilnation.org/

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு 02-09-2007 17:30 மணி தமிழீழம் [தாயகன்]

சிலாவத்துறை, அரிப்பு பிரதேசங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக படையினர் அறிவிப்பு

மன்னார் சிலாவத்துறை, அரிப்பு பிரதேசங்கள் தமது படைகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக, சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிறிகேடியர் பிரசாத் சமரசிங்க இன்று அசோசியேட் பிறஸ் என்ற செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

சிலாபத்துறையில் இருந்த கடற் புலிகளின் படைத் தளம் ஒன்றும் தமது படைகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக, சமரசிங்க கூறினார்.

நேற்று காலை முதல் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள சிறீலங்காப் படையினரைத் தடுத்து நிறுத்தும் முறியடிப்புத் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் பொதுமக்களை சிறீலங்காப் படையினர் மனித கேடயங்களாகப் பயன்படுத்தி வருவதால், முறியடிப்புத் தாக்குலில் ஈடுபடும் விடுதலைப் புலிகளின் அணிகள், மக்களைப் பாதுகாக்கும் போர் உத்திகளில் ஈடுபடுவதாகத் தெரிய வந்துள்ளது.

சிலாவத்துறை, அரிப்பு பிரதேசங்களை தமது படைகள் கைப்பற்றியுள்ள சிறீலங்காப் படைகளின் கொழும்பு தலைமையகம் அறிவித்துள்ள போதிலும், இது தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவித்தல் எதனையும் விடுதலைப் புலிகள் இதுவரை வெளியிடவில்லை.

pathivu

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலாவத்துறை தாக்குதல் ஏன்?: சிறிலங்கா இராணுவம் விளக்கம்

[ஞாயிற்றுக்கிழமை, 2 செப்ரெம்பர் 2007, 12:48 ஈழம்] [கொழும்பு நிருபர்]

மன்னார் சிலாவத்துறையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்துவது ஏன் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியதாவது:

மன்னார் சிலாவத்துறைப் பகுதியில் நிலைகொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் வில்பத்து காட்டின் ஊடாக ஊடுருவி தாக்குல்களை நடத்துகின்றனர்.

சிலாவத்துறைப் பகுதியில் கடற்புலிகள் புதிய முகாம்களை அமைத்து தமது செயற்பாடுகளை விரிவுபடுத்தி வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கும் அவர்கள் துன்புறுத்தலாக உள்ளனர்.

இதன் காரணமாகவே சிலாவத்துறையில் இருந்து புலிகளை வெளியேற்றி அப்பகுதி மக்களை மீட்கும் மனிதாபிமான இராணுவ நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கோண்டுள்ளனர் தெரிவித்தார்.

வாகரையில் கைக்கொண்டது போல புதிய வகையான தாக்குதல் உத்தியையே மன்னாரிலும் இராணுவத்தினர் கைக்கொண்டனர். இதற்கு சிறந்த பலன் கிடைத்திருக்கிறது. இராணுவத்தினருக்கோ மக்களுக்கோ இந்த நடவடிக்கையில் எதுவித இழப்புகளும் ஏற்படவில்லை.

மன்னார் மோதலில் புலிகளின் சடலங்கள் சிலவற்றை படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த சடலங்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக புலிகளிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

சிலாவத்துறையை புலிகளிடம் இருந்து மீட்கும்வரை இந்த நடவடிக்கை தொடரும் என்றார் அவர்.

புதினம்

சரி சமதாணத்து புயல் எல்லாம் ஓய்ந்து விட்டது இனி பூகம்பமா இல்லை வேறு ஏதுமா என்று காத்து தான் இருக்கவேண்டும்.. அவசரப்பட்டு கருத்துக்களை எழுதுவதை விட யதார்த்தம் என்று ஒன்று இருப்பதை உண்ர்வோம்..

நான் கூட தான் சில ஆண்டுக்கு முன் தினக்குரலில் ஒரு ஆய்வுக்கட்டுரை வந்த போது அன்றில் இருந்து எதிர்பார்ப்புடன் காத்து இருக்கிறேன் ஆனா அதுக்கான பதில் இன்றுவரை கிடைக்கவில்லை..........

அந்தக் கட்டுரையை எழுதியவர் கூறி இருந்தால் 4வது ஈழப்போர் ஆரமிந்தால் புலிகளின் இலக்கு மனலாற்ரில் இருந்து திருமலையை கைப்பற்றி கிழக்குக்கு பாதை திறப்பது என்று ஆனாதுக்கான சாத்தியப்படுகள் இதுவரை தெரியவில்லை( அந்த கட்டுரை எழுதியவர் யார் என்று கண்டு பிடித்து அவரின் முகவரி தரமுடியுமா?)

அப்படி ஆளுக்கு ஒரு கட்டுரை

அருள் கவசபடையனி என்று ஒன்று யாழில் ஆரம்பித்து இருபதாகவும் அதை முறியடிக்க தேவையான ஆயுதங்கள் வாங்கி கொடுத்தவர் போலவும் ஆய்வுக்கட்டுரை எழுதி இருந்தார் இவர்களின் நோக்கம் என்ன?

நாங்கள் பலமாக இருக்கிறோம் என்று எங்களுக்குள்ளேயே கூறி பெருமைப்பட்டு கொள்ளுவதா?

இல்லை பயம் வேண்டாம் நாங்கள் பலமாக இருக்கிறோம் என்று மக்களை சந்தோசப்பாத்துவதா?

இல்லை இப்படி எழுதி கடைசியில் சிறு சிறு பின்னடைவுகள் ஏற்படும் போது மக்கள் மனதில் சோர்வினை ஏற்படுத்துவதா?????????

கடைசியில் அருளும் ஒரு பேனாவால் பலர் மனதை சோர்வடைய வைக்கிறார் ஆனாலும் போராட்ட ஆதரவு வெறும் வெற்றி தோல்வியில் அல்ல அது எமது விடுதலை மீது கொண்ட தாகத்தின் மீதும் தேவையின் மீதுமே இருக்கவேண்டும் இருந்து கொண்ட்டே இருக்கும் .

பல போராளி குழுக்கள் இருக்கும் போதே விடுதலை புலிகளால் மட்டும் தான் நேர்மையாகவும் வழிமாறாத கொள்கையாகவும் எமது போராட்டத்தை கொண்டு செல்ல முடியும் என்று நம்பியவர்கள் தமிழ்மக்கள் அவர்களுக்கு அவர்களுக்கு ஆய்வுக்கடுரை முலம் பலம் பலவினம் சொல்ல வேண்டிய நிலையில் இந்த ஆய்வாளர்கள்க்கு தேவை இல்லை மாறாக போராட்டத்தின் தேவை அதை விட அடுத்து என்ன செய்யலாம் என்ற தை பற்றி ஆய்வுகள் எழுதுங்கள்.

தயவு செய்து இராணுவ ஆயுவ்கள் செய்ய கூடிய( அதுவும் புலிகள் பற்றி) அலவுக்கு இன்று இந்த உலகியல் யாருமே இல்லை அது தான் உண்மை, அதை விடுத்து எதிர்பார்ப்புகள் கேட்டவை அறிந்தவை இப்படி இருக்கொமோ அப்படி இருக்குமோ என்ற கற்பனைகளுடன் ஆய்வுகள் எழுதவேண்டாம் நீங்கள் எழுதும் ஆய்வுகள் கட்டுரைகள் சிங்களவர்களை பலப்படுத்தவே உதவும் தவிர அது எமக்கு ஒரு பலனையும் தராது..

அடுத்து அருஸ்( வேல்ஸ்) அவர்களின் ஆய்வு என்னவாக இருக்கும்?

தமிழ்நாதத்தில் வரும்

மன்னாரில் நடந்த்து என்ன?

திரு.அருஸ் (வேல்ஸ்)

மன்னாரி...........................................................

................................................................................

................................................................................

................................................................................

................................................................................

................................................................................

................................................................................

................................................................................

...

மேலும்..............................................................

................................................................................

...........

நன்றி:வீரேகேசரி வாரவெளியீடு (00-09-2007)

ஆனால் பொதுமக்களை சிறீலங்காப் படையினர் மனித கேடயங்களாகப் பயன்படுத்தி வருவதால், முறியடிப்புத் தாக்குலில் ஈடுபடும் விடுதலைப் புலிகளின் அணிகள், மக்களைப் பாதுகாக்கும் போர் உத்திகளில் ஈடுபடுவதாகத் தெரிய வந்துள்ளது.

முந்தியும் இப்படி யாழ்ப்பாணத்தில் இராணுவம் செய்த போது அதை வெளியில் தெரிவித்த ஒரு ஊடகவியாளரை படுகொலைசெய்த்தாக கேள்விப்பட்டு இருக்கேன் ( பெயர் ஞாபகத்துக்குவரவில்லை)......

சமர்களில் பெறப்படும் வெற்றிகள் யுத்தங்களின் வெற்றிகள் அல்ல.

களமெலாம் சிவக்குமடா

கனவுகள் பலிக்குமடா

நாளை நமதே என

நம்பிக்கை கொள்வாயடா

பத்தாண்டுகள் செல்லாதடா

சில புத்தாண்டுகள் போதுமடா

இராணுவ ரீதியில் அரிப்பு பறிபோனது முக்கியமன்று. அதைக்காப்பாற்ற சண்டை செய்யவும் முடியாத தரைத்தோற்றம்தான் உண்டு.

ஆனால் பொருளாதார ரீதியில் மிகப்பெரிய இழப்பாக இருக்குமென்று கருதுகிறேன். வன்னிக்குரிய முக்கிய வழங்கற்பாதையாக அரிப்பு இருந்ததென்பது மட்டும் உண்மை.

பொருளாதாரத்தில் அரிப்பு முக்கியதுவதை வேறு இடங்களுக்கு மாற்ற முடியும்.....!

ஆனால் இராணுவ ரீதியில் கிழக்கை விட வடக்கின் மன்னார் மாவட்டம் மிக முக்கியமானது... அது தமிழர் தரப்பாக இருந்தால் என்ன.. இல்லை இராணுவமாக இருந்தால் என்ன... அதில் மிகவும் முக்கியமானது யாழ் குடா நாட்ட்க்கான வாழங்கல்கள்... மன்னாரை மத்திய படுத்தியே காரைதீவு (எல்லோரா) கடற்படை தளமும், நெடுந்தீவு படை தளமும் இயங்குகிறது.... அது யழ் குடாவுக்கான பலதை அதிகரிக்கிறது...

இன்னும் ஒண்று நானாட்டான் முதல் முசக்குத்தி வரையான கடற்பகுதி புலிகளின் கட்டுக்குள் இருப்பது இலங்கையின் தலைநகர் கொழும்புக்கான பாதுக்காப்பை நிலை குலைய செய்யவல்லது.... அதிலும் தமிழர் தரப்பிடம் உள்ள படகுகளின் வேகம் என்பது தலைமன்னார் கடற்படையால் தடுக்க முடியாதது... இந்தபகுதிகள் மீட்க்கபடுவதில் மூலம் இலங்கை படைகள் பலப்படுத்த படும் என்பதில் சந்தேகம் இல்லை...

அதையும் இரண்டு நன்மைகளை சொல்ல முடியும்... மன்னார் படைகளுக்காக தரை வளியாக வழங்கல் பாதை ஒண்றை திறக்க முடியும்.. அதனால் யாழ்ப்பாணத்து படைகளுக்கான உணவு, வெடிபொருள் வழங்கல்களை இலகு படுத்த முடியும்... இதனால் யாழ்ப்பாண இராணுவ அணிகள் பலப்படும்.. அதில் சந்தேகமே வேண்டாம்...

இரண்டாவது மண்டைதீவு முதல் மன்னார் தீவுக்கு இடையில் கடற்புலிகளின் நடமாட்டதை கண்காணிப்பதை சுலமாக்கலாம்... காரணம் இந்திய மீனவர்களின் மீதான கண்காணிப்பு கூட மன்னார் நெடுந்தீவு மண்டைதீவு ராடர்களால் கண்காணிக்க முடியும்...

இதனால் தமிழர் தரப்பு பலவீனப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் எண்றால்.. இளப்புக்களை கூடிய அளவில் குறைத்து பின் வாங்க வேண்டும்... கூடிய அளவான இராணுவத்தை காயப்படுத்த வேண்டும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேசிய சபையினை தோற்கடிப்பதற்க்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும் ஜனாதிபதி அழைப்பு; சிலாவத்துறையினை கைப்பற்றிவிட்டதாகவும் அறிவிப்பு

வீரகேசரி நாளேடு

மன்னார் சிலாவத்துறையினைக் கைப்பற்றி மக்கள் சுதந்திரக்காற்றினை சுவாசிக்கும் நிலைமையை படையினர் ஏற்படுத்தியுள்ளனர். நிலையான ஸ்திரமான அரசாங்கம் ஆட்சியில் இருந்தால்தான் பயங்கரவாதிகளை தோற்கடித்து நாட்டைப்பாதுகாக்க முடியும். எனவே மக்களுக்கு எதிரான துரோகச் செயலில் ஈடுபடும் தேசிய சபையினை தோல்வியுறச் செய்வதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் தலைதூக்கியதாக சரித்திரமே கிடையாது. அவர்கள் அரசியல் அனாதைகளாகியமையே சரித்திரமாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 56 ஆவது வருடாந்த மாநாடு நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது:

கிழக்கு மாகாணத்தை முழுமையாக எமது படையினர் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டுவந்துள்ளதோடு அங்கு கிழக்கின் உதயம் என்ற பெயரில் அபிவிருத்திப்பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை மன்னாரின் மேற்கே பயங்கரவாதிகளை தோல்வியடைச் செய்துள்ள எமது படையினர் சிலாவத்துறையையும் கைபற்றியுள்ளனர். அந்த வெற்றித்திருநாளில் கட்சியின் மாநாடு இடம்பெறுவது பெருமைக்குரியதாகும். இன்று அப்பிரதேச மக்களுக்கு சுவாசிப்பதற்கு சுதந்திரம் கிடைத்துள்ளது.

தெற்கிலுள்ளவருக்கு

வலி எடுக்கிறது இவ்வாறு பிரபாகரனுக்கு அடிமேல் அடிவிழும் போது தெற்கிலுள்ள ஒருவருக்கு தான் அதிகம் வலியயெடுக்கின்றது. அதனால், வங்கிகளுக்கு கடிதம் எழுதுகிறார். இலங்கை அரசாங்கம் ஸ்திரநிலையில் இல்லை, பிரபாகரன் மிகவும் பலசாலி. எந்த நேரத்திலும், எங்கும் தாக்குதலை நடத்தக்கூடும் என்றேல்லாம் பயமுறுத்துகிறார். வெளிநாட்டவர்களின் ஆலோசனைகளைப் பெற்று பௌத்த குருமாரை அவமானப்படுத்துகிறார். அதுமட்டுமா செய்தார் புலிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டு எமது உளவுப்பிரிரிவினர் எத்தனை பேரை பலியெடுத்தார். தேசத்துரோகிகள்

இன்றைய அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு கடன் கொடுக்க கூடõதென கூச்சலிடுபவர்கள் அவர்களது இரண்டு வருடகால ஆட்சியின் போது என்ன செய்தார்கள். செல்வந்தர்களுக்கு வரிவிலக்கு வழங்கி அரசாங்கத்திற்கு சேர வேண்டிய நிதியை நிறுத்தினர். இன்று அபிவிருத்திக்கு பணம் கொடுக்க வேண்டாமென வங்கியினருக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இவ்வாறு செயற்படுபவர் யாரென்பது நான் சொல்லித்தெரியவேண்டிய அவசியமில்லை. அதனை நாடே அறியும். இவர்கள் இனத்துரோகிகள் மட்டுமல்ல தேசத்துரோகிகள், மதத்துரோகிகள் என்றுதான் வர்ணிக்க வேண்டும். ஊழல் மோசடிக்கு இடமில்லை

நிறுவனங்கள் தொடர்பான ஊழல் மோசடிகளை ஆராய்வதற்காக ஆணைக்குழுவை (கோப்) எமது அரசாங்கம் தான் அமைத்து அதில் ஆளும்தரப்பில் 16 எம்பிக்கள் அங்கம் வகிக்கின்றனர். எதிர்தரப்பில் 17 பேர் அங்கம் வகிக்கின்றனர். இரண்டு வருடம் ஆட்சியிலிருந்தவர்களின் ஊழல் மோசடிகளை ஆராய்வதற்கே அமைக்கப்பட்டது' எனவே இதுதொடர்பில் ஊடகங்கள் செய்தி வெளியிடும் போது உண்மையை வெளியிட வேண்டும். இதனை மறைக்கவே ஐ.தே. கட்சி பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. எனவே, மக்கள் ஏமாந்து விடக்கூடாது. ஊழல், மோசடிகளுக்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டோம். அதற்கெதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

ஜனாதிபதித் தேர்தலின் போது ஜே.வி.பி. உட்பட பலர் ஆதரவளித்தனர். அதன் மூலம் வெற்றி பெற்றேன். துரதிஷ்டவசமாக ஜே.வி.பி. அரசிலிருந்து வெளியேறியது. மீண்டும் இணையுமாறு அழைப்பு விடுத்தோம் வரவில்லை. என்னசெய்வது தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கம் ஸ்திரமானதாக இருக்க வேண்டும். எனவே ஐ.தே.கட்சியின் 18 உறுப்பினர்களின் ஆதரவினை பெற்றுக்கொண்டோம்.

இன்று ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டோர் 42 பேர் எம்மோடு உள்ளனர். எதிர்க்காலத்தில் மேலும் பலர் வரலாம். நிலையாõன ஸ்திரமான அரசாங்கம் ஆட்சியில் இருந்தால் தான் பயங்கரவாதிகளை தோல்வியடையச் செய்து நாட்டை பாதுகாக்க முடியும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி

மக்களின் கட்சி 1956 இல் அரசியல் புரட்சிக்கு விதிட்ட மக்களின் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை காட்டிக்கொடுக்க எவருக்கும் இடமளிக்க முடியாது. அதேநேரம் எம்மவர்கள் அதற்கு இடமளிக்கவும் மாட்டார்கள். இது மக்களின் கட்சி பண்டாரநாயக்காக்களினதோ,ராஜபக

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலாவத்துறை படையினர்வசம் தேடுதல் நடவடிக்கை தொடர்கிறது இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க கூறுகிறார்

வீரகேசரி நாளேடு

மன்னார் சிலாவத்துறையினை இராணுவ நடவடிக்கை மூலம் படையினர் கைப்பற்றியுள்ளனர். 24 மணிநேரத்தில் படையினர் தமது இலக்கை அடைந்துள்ளனர் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். சிலாவத்துறை, கொக்குபடையான், சவேரியார்புரம், பொற்கேணி, முசலி, பண்டாரவெளி, கொண்டச்சி, பிச்சவாணிபன்குளம் ஆகிய பிரதேசங்கள் படையினர் முழுமையான கட்டுப்பாட்டினுள் வந்துள்ளன. இப்பகுதிகளில் அதிகாலை முதல் பாரிய தேடுதல் நடத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது:

மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்த

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்கால போவாரே, என்னோட தனகுறதெண்டே நிக்கிறீர்கள்.

ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா இஞ்சால வாறவனை இப்பிடி சொறிஞ்சா ஒரேயடியா ஒடிப்போடுவன். நல்லதோர் ஆய்வாளரை இழந்திட்டம் எண்டு பிறகு ஃபீல் பண்ணக்கூடாது.

இராணுவரீதியில் முக்கியமற்றதென்று நான் சொன்னது உங்களுக்கு வேறுமாதிரி விளங்கிவிட்டது. அது எனது தவறுதான். நான் சொல்லவந்தது, எதிர்ச்சமர் செய்து காப்பாற்ற முடியாமற்போனதால் இதுவொரு இராணுவத் தோல்வியென்ற முடிபுக்கு வரக்கூடாதென்பதே.

கைப்பற்ற வேண்டுமென்று எதிரி தீர்மானித்துவிட்டால் இப்பகுதிகள் தக்கவைக்க முடியாதவையே.

இன்னும் விளக்கமாகச் சொன்னால், எதிரி மடுப்பகுதியையோ வெடிவைத்த கல்லையோ அல்லது அந்த அச்சில் ஏதேனும் ஒரு பகுதியையோ கைப்பற்றினால் அதை இராணுவ ரீதியில் புலிகளுக்குத் தோல்விதான் என்று சொல்வேன். காரணம் அதை எதிர்க்கவும் முறியடிக்கவும் ஏதுவான நிலையில்தான் தமிழர்படையணி உள்ளது. ஆனால் தற்போது கைப்பற்றப்பட்ட பகுதிகள் அப்படியானவையல்ல. எனவேதான் அவை விடுபட்டது இராணுவத் தோல்வியன்று எனச் சொல்லவந்தேன்@ ஆனால் வேறு பொருள் தந்துவிட்டது.

மற்றும்படி தாயகப்பகுதியில் எந்தவொரு நிலப்பரப்பும் முக்கியமானதுதான். எதிர் அகலக்கால் வைக்கிறான், இந்தா வெட்டப் போறம் புடுங்கப்போறம் என்று நான் ஒருபோதும் சமாளிப்பதில்லை.

வலிந்த தாக்குதல்களின்றி வன்னிப்பகுதியைத் தவிர வேறெவற்றையும் நீண்டகாலம் தக்கவைத்திருக்க முடியாதென்பது கள யதார்த்தம். மன்னார்ப் பகுதியை மீட்பதற்கு புலிகள் வலிந்த தாக்குதல் மேற்கொண்டால் இப்போது பறிபோன இடங்கள் கைவசமிருப்பது மிக இலகுவான வெற்றிகளைத் தரும். ஆனால் அதுவரைக்கும் எதிரி விட்டுவிட்டு இருப்பானா? அதுதான் நடந்தது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~

அதுசரி, வழங்கற்பாதையை மாற்றுவதென்பது எனக்கு விளங்கவில்லை. நேரடியாக நாச்சிக்குடாவுக்கு மாற்றுவதா? அது சுகமென்றால் பிறகேன் இவ்வளவுகாலமும் அரிப்பு பயன்பட்டது? சுண்டங்காய் கால்பணம் சுமைகூலி முக்கால்பணமென்பதுபோல் சுத்திவளைச்சு வராமல் நேரடியாக நாச்சிக்குடாவுக்கோ பூநகரிக்கோ வழங்கலைச் செய்திருக்கலாமே?

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

அரசுப் படைகள் வசம்சிலாவத்துறை கடும் சமரின் பின் வீழ்ந்ததாக அறிவிப்பு

மன்னாருக்குத் தெற்கேயுள்ள கடற்கரையோரப் பிரதேசங்களான அரிப்பு மற் றும் சிலாவத்துறையை கடந்த சனி, ஞாயிற் றுக்கிழமைகளில் இடம்பெற்ற கடும் சண் டையின் பின்னர் புலிகளிடமிருந்து தாங் கள் மீட்டிருக்கின்றனர் என அரசுப் படை யினர் அறிவித்திருக்கின்றனர்.

வவுனியா மன்னார் வீதியில் உள்ள முருங்கன் இராணுவ முகாமிலிருந்தும், புத் தளத்துக்கு வடக்கே உள்ள கஜுபாம் இரா ணுவ முகாமிலிருந்தும் சனியன்று ஆரம் பிக்கப்பட்ட பெரும் படை நகர்வை அடுத்தே கடற்புலிகளின் தளம் அமைந்திருந்த சிலாவத்துறையை அரசுப் படைகள் கைப்பற் றின என்று அறிவிக்கப்படுகின்றது.

கடற்புலிகளின் தளத்திலிருந்து மூன்று படகுகளையும், ஆள்களுக்கு எதிரான மிதி வெடிகள் பலவற்றையும் படைத்தரப்பு மீட்டது என்றும் அறிவிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட புதிய பிரதேசத்தில் தங்களின் நிலைகளை ஸ்திரப்படுத்து வதில் படையினர் ஈடுபட்டிருக்கின்றனர் என்று கொழும்பில் தெரிவிக்கப்பட்டது.

புலிகள் பிரதேசத்துடன்

நேரடித் தொடர்புடையதல்ல

படையினர் புதிதாகக் கைப்பற்றியிருக் கின்றனர் என்று கூறப்படும் சிலாவத்துறை மற்றும் அரிப்புப் பகுதிகள் வன்னியில் மன்னார் மாவட்டத்தில் புலிகளின் கட் டுப்பாட்டில் உள்ள பிரதான நிலப்பரப்பு டன் நேரடியாகத் தொடர்புபட்டனவல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிர தான தளப்பரப்பையும் இதுவரை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிலாவத்துறை மற் றும் அதை அண்டிய பகுதியையும் தெளி வாகப் பிரித்து ஊடறுக்கும் வகையில் அரச படைகளில் கட்டுப்பாட்டுப் பிரதேசம் இருந்து வருகிறது. இந்தப் பகுதி ஊடா கவே அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா மன்னார் வீதி செல் கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆக, தமது வன்னிப் பெரு நிலப் பரப்பி லிருந்து தெளிவான தரைவழி வீதியோரப் பாதை இல்லாத ஒரு பிரதேசத்தின் மீதான கட்டுப்பாட்டையே புலிகள் இழந்திருக் கின்றார்கள் என்று புலிகள் தரப்பு வட்டா ரங்கள் தெரிவித்தன.

கடற்புலிகளின் இறங்குதுறை

கைப்பற்றப்பட்டுள்ளது

சிலாவத்துறையைக் கைப்பற்றும் படை நடவடிக்கையின் போது இராணுவத்தின ருக்கு உதவியாக விமானப்படையினரும் கடற்படையினரும் தாக்குதல் நடத்தினர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் படை நடவடிக்கையின் இடையே சிக்கி, சுமார் ஏழாயிரம் பொதுமக்கள் இப் பிரதேசத்தல் இடம்பெயர்ந்திருக்கின்றனர்.

சிலாவத்துறையில் கடற் புலிகளின் இறங்குதுறைப் பகுதி கைப்பற்றப்பட்டி ருப்பதால் மேற்குக் கடலில் கடற் புலிகளின் பிரசன்னத்தை ஓரளவு குறைக்க முடியும் என்று கொழும்பில் படை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்தன.

-உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிக்குளம் பகுதியைச் சேர்ந்த 200 குடும்பங்கள் பற்றி தகவலில்லை

சிலாவத்துறை பிரதேசத்தை நோக்கி படையினர் மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கையையடுத்து அப்பகுதியிலுள்ள முள்ளிக்குளம் பிரதேச மக்களுக்கு என்ன நடந்துள்ளதென்ற எந்தவொரு தகவலையும் பெறமுடியாதுள்ளதாக மன்னார் மாவட்ட செலயக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தப் பாரிய இராணுவ நடவடிக்கைகள் காரணமாக சிலாவத்துறை பிரதேசத்தை அண்மித்த ஏனைய கிராம மக்கள் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு இடம்பெயர்ந்துள்ள போதும் முள்ளிக்குளம் மக்கள் இடம்பெயர முடியாத நிலைமையேற்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

முள்ளிக்குளம் பிரதேசத்தில் 200 க்கும் மேற்பட்ட தமிழ் மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இதேவேளை, முள்ளிக்குளம் பிரதேசத்தில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

சனிக்கிழமை மாலை இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் சடலம் முருங்கன் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, படை நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் அரிப்பு பகுதியிலுள்ள தேவாலயங்களில் தங்கியிருந்த கன்னியாஸ்திரிகள், மதகுருமார்கள் ஆகியோர் முருங்கன் வழியாக படைத்தரப்பினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருப்பியனுப்பப்பட்டுள்ளனர

அதுசரி, வழங்கற்பாதையை மாற்றுவதென்பது எனக்கு விளங்கவில்லை. நேரடியாக நாச்சிக்குடாவுக்கு மாற்றுவதா? அது சுகமென்றால் பிறகேன் இவ்வளவுகாலமும் அரிப்பு பயன்பட்டது? சுண்டங்காய் கால்பணம் சுமைகூலி முக்கால்பணமென்பதுபோல் சுத்திவளைச்சு வராமல் நேரடியாக நாச்சிக்குடாவுக்கோ பூநகரிக்கோ வழங்கலைச் செய்திருக்கலாமே?

உங்களுக்கு விருப்பம் எண்றால் முழங்காவில் பள்ளிக்குடாவுக்கே மாற்றலாம்... தேவை எண்றால் எங்கு வேண்டும் எண்றாலும் கொண்ட்டு செல்லலாம்... கொண்டு வருவது என்பது பிரச்சினையானது அல்ல... ஆனால் கடைற் படையால் கிடைக்க கூடிய எதிர் விளைவுகள்தான் கடினமானது...

கிழக்கை விடவும் மன்னார் பிரதேசம் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது... தமிழீழ மண் எல்லாமே முக்கியமானது எண்று பூசிமெழுக எல்லாம் கூடாது...!

கிழக்கில் விழுப்புண் அடையும் போராளியில் மருத்துவ வசதிக்கும் வடக்கில் காயம் அடையும் போராளிக்கு கிடைக்க கூடிய வசதியையும் பொறுத்துதான் இந்த முக்கியதுவத்தை நண்றாக பிரித்து அறிய முடியும்...

30 வருட போரில் இடங்களை விட்டதை தவிர என்னத்தை சாதித்து விட்டார்கள் எண்றோ எவ்வலவுகாலத்துக்கு இந்த போர் இழுபட போகிறதோ என்னும் கேள்வி இங்கு எழுவதை தவிர்க்க முடியவில்லை... சிங்கள மக்களை இந்த போரின் தாக்கம் எங்கு கொண்டு செண்று நிறுத்த போகிறது என்பதில்தான் எங்களது முழுமையான வெற்றி தங்கி உள்ளது... சீச்சீ இந்த பழம் புளிக்கும் என்னும் நிலைக்கு சிங்கள மக்களை கொண்டு செல்ல முடியுமா இல்லையா என்பதுதான் இதற்கான பதில் தங்கி இருக்கிறது...

ஆய்வாளர் நல்லவன்

நான் தனகேல்லையுங்கோ விளங்காததை ஒளிவு மறைவின்றி கேக்கிறன். விளக்முள்ளனீங்கள் விளங்கமா எழுதுறது கடமையெல்லே.

இப்ப நாங்கள் இனி புதிசா என்னத்தை அறிமுகப்படுத்தப் போறம் எப்ப எண்டது பற்றி கொஞ்சம் எழுதுங்கோவன்? கனபேருக்கு செரியான கவலை வான்புலிகள் பற்றி ஏன் ஒருவராலும் முதலே எதிர்வு கூறமுடியவில்லை எண்டு.

கவிதையில ஆவது பூடகமாவது எழுதலாம் தானே?

இராமாயணம் மகாபாரதங்கள் அப்பிடித்தானே

இராமாயணம், மகாபாரத கதை சொன்ன நீதியையும் வாழ்கையையும் புரிந்து கொண்ட விதம் மெய்சிலிர்க்கிறது....

யாரையாவது எங்கையாவது சொறிய வேணும் எண்டே திரியுறவர்களின் பாங்கு யாழில் சிறப்பானது... இதுக்கு மேலே உள்ள கருத்து நல்ல உதாரணம்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்கால போவாரே,

நீங்கள் தற்கால நிலைமை விளங்காமல் தனகிறியள். பாருங்கோ, தயா எனக்கு சப்போட் பண்ணிற நிலை வந்திட்டுது. அதுமட்டுமில்லை, நான் சிலருக்குப் பயந்து, அரிப்பு விட்டது இராணுவப் பின்னடைவில்லை எண்டு சமாளிக்க வெளிக்கிட்டா, தயா அது இராணுவரீதியில முக்கியத்துவம் வாய்ந்த இடம்தான் எண்டு விளக்கம் நடக்குது. எனக்கெண்டா கனவா நனவா எண்டு தெரியாமல் ஒரே அதிர்ச்சி.

அப்ப நாங்கள் எவ்வளவு கதைக்க வேண்டிக்கிடக்கும்?

அதுசரி, கொஞ்சம் சூடான 'மேட்டர்' ஒண்டு எழுதிக்கொண்டு வந்தன். ஆனா புது இடுகை எழுத யாழ்.களம் விடுதில்லை. என்ன கோதாரிப் பிரச்சினை எண்டு தெரியேல.

அடுத்த புதுசு எண்டால், ஆய்வாளர் இதயச்சந்திரன் சொன்ன 'அக்னி' ஏவுகணையாத்தான் இருக்கும். ஒருத்தருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் ஒருநாள் பலாலி காங்கேசன்துறையெல்லாம் தூள்தூளாப் பறக்கும். 'சூசை மக்களோடு வாழ்கிறார்' எண்ட தகவலை எப்பிடியோ தேடிக்கண்டுபிடிச்சு வெளியிடுற வல்லமை இருக்கிற மனுசன் சொன்னா உண்மையாத்தான் இருக்கும்.

நாங்கள் இங்கு இருந்து கொண்டு தமிழர் படை என்ன செய்யுது, இப்படித்தான் எல்லா இடத்தையும் விட்டிட்டினம் என்று சலிப்படைவதில் எந்த பிரயோசனமும் இல்லை, எங்களுடைய வாய்ச் சவாடால் எல்லாத்தையும் வெல்லலாம்ங்க ஆனா உயிரை துச்சமென நினைத்து களத்தில நின்று போராடுகிற போராளிகளை நினைத்து பாருங்கோ கொஞ்சம், அங்கு நிற்க்கும் தளபதிகள் இதை எல்லாம் யோசிக்காமலா இருப்பினம் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்கால போவாரே,

நீங்கள் தற்கால நிலைமை விளங்காமல் தனகிறியள். பாருங்கோ, தயா எனக்கு சப்போட் பண்ணிற நிலை வந்திட்டுது. அதுமட்டுமில்லை, நான் சிலருக்குப் பயந்து, அரிப்பு விட்டது இராணுவப் பின்னடைவில்லை எண்டு சமாளிக்க வெளிக்கிட்டா, தயா அது இராணுவரீதியில முக்கியத்துவம் வாய்ந்த இடம்தான் எண்டு விளக்கம் நடக்குது. எனக்கெண்டா கனவா நனவா எண்டு தெரியாமல் ஒரே அதிர்ச்சி.

அப்ப நாங்கள் எவ்வளவு கதைக்க வேண்டிக்கிடக்கும்?

நல்லவன் ஐயா

நீங்கள் என்னவோ குடும்பச் சண்டை பிடிக்கின்ற ஆள் மாதிரிக் கதைக்கின்றியளே ஒழிய, கருத்துக்களுக்கு அமைவாகக் கதைக்கின்ற ஆளு மாதிரித் தெரியல்ல. தல உங்களுக்குச் சப்போட் பண்ணுறதோ, குறுக்காலபோவன் எதிராக எழுதுறதோ பிரச்சனையான விடயம் மாதிரித் தெரியல்ல. அவங்கள் தலைப்புக்களுக்கு ஏற்ற மாதிரித் தான் கருத்தெழுதிற மாதிரித் தோணுது. அதை நீங்கள் ஏதோ முந்திப் பிடிச்ச சண்டைகளுக்கமைவாக தொடர்ந்து எழுதணும் என்று அர்த்தப்பட்டால், நநீங்கள் ஆய்வாளர் என்று வாய் நிறையப் புகழ்கின்ற குறுக்காலபோவானின் சொல்லு வெறும் வார்த்தைப் புகழ்ச்சியாகத் தான் இருக்கும்..... என்ன நான் சொல்லுறது....

குறுக்கால போவாரே,

நீங்கள் தற்கால நிலைமை விளங்காமல் தனகிறியள். பாருங்கோ, தயா எனக்கு சப்போட் பண்ணிற நிலை வந்திட்டுது. அதுமட்டுமில்லை, நான் சிலருக்குப் பயந்து, அரிப்பு விட்டது இராணுவப் பின்னடைவில்லை எண்டு சமாளிக்க வெளிக்கிட்டா, தயா அது இராணுவரீதியில முக்கியத்துவம் வாய்ந்த இடம்தான் எண்டு விளக்கம் நடக்குது. எனக்கெண்டா கனவா நனவா எண்டு தெரியாமல் ஒரே அதிர்ச்சி.

அப்ப நாங்கள் எவ்வளவு கதைக்க வேண்டிக்கிடக்கும்?

இங்கை ஒண்டும் ஊர் சண்டை நடக்கவில்லை...

மன்னார் பகுதியின் முக்கியத்துவம் என்ன எண்று மறைந்த வடபிராந்திய தளபதியாக இருந்த லெப் ஜெனரல் கொப்பேகடுவ தீர்க்கமாக விளக்கி இருக்கிறார்... பலமுறை A14 அனுராதபுரம் (மதவாச்சி) வீதியை திறக்க வன்னி விக்கிரம படை எடுத்தவர்... அவரின் மறைவுக்கு அமையில் சிலாவத்துறை, கொண்டச்சி, படை தளங்கள் அகற்றபட்டு யாழ் படை எடுப்புக்காய் திரட்டப் பட்டன... அதுக்கு காரணம் தமிழர் தரப்பின் மன்னார் மாவட்ட தளபதி சுமன் அண்ணா தலைமையில் தொடர்ச்சியாக கொடுக்க பட்ட அடிகள்...

இராணுவம் விலகிய காலப்பகுதியில் கடற்புலிகளை விட இலங்கை கடற்படையினர் பலமான நிலையில் இருந்தனர்... கடற்புலிகளின் வளர்ச்சியை அடுத்து கடற்கரைகளை கட்டுக்குள் வைத்தால்தான் கடற்புலிகளை சமாளிக்க முடியும் என்னும் நிலையில் இலங்கை படைகள் இருக்கின்றன...

ஆனால் இந்த பகுதியை கையுக்குள் வைத்திருக்க இலங்கை படைகளால் முடியுமா என்பதோடு அதுக்கான விலை என்னவாக இருக்கும் எண்றும் ஒரு கேள்வியை கேட்டு வையுங்கள்... பழைய பாணியில் புலிகள் தாக்குதல் நடாத்தினார் அதை சமாளிக்க அதிரடி படைகளை தான் இராணுவம் நம்பி இருக்க வேண்டுமா...??

கிழக்கில் விரைவில் பதில் தாக்குதல்: சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமைஇ 13 ஏப்ரல் 2007இ 19:26 ஈழம்

கிழக்குப் பிரதேசத்தில் விரைவில் பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார்.

அனைத்துலக ஊடகமான ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்துக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் அளித்துள்ள நேர்காணல்:

இலங்கையின் கிழக்குப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் முன்னேறியுள்ள பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்துவர். இந்தப் பதில் தாக்குதல் விரைவில் மேற்கொள்ளப்படும். ஒரு உத்தியாகத்தான் கிழக்கில் சில நகர்வுகளை நாம் மேற்கொண்டிருக்கிறோமே தவிர கிழக்கிலிருந்து நாம் விலகிவிடவில்லை.

சிறிலங்காவின் பரப்புரைகளுக்கு எதிர்வரும் காலங்களில் நாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளே பதிலளிக்கும். கிழக்கில் சிறிலங்கா ஆக்கிரமிப்புப் படையானது இனப்படுகொலைகளை நடத்தி வருகின்றது என்றார் தமிழ்ச்செல்வன்.

இதே வகையில் வடக்கிலும் பாரிய தாக்குதலையும் அத்துடன் இதுவரை காலமும் தமிழ் மக்கள் மட்டுமே அனுபவித்த போரின் அவலத்தiயும் சிங்கள மக்களும் அனுபிவிக்க போகின்றார்கள் அத்துடன் குறிப்பாக தென் பகுதியிலும் கொழும்பிலும் பொருளாதாரத்தை குழப்பும் வகையிலான தாக்குதலையும் நடாத்தப்ப இருக்கினறது.( சிறிய புன்கையுடன்)

Edited by puthijavan

ஒரு சின்னக் கேள்வி.

அதெப்படி சம்பூர், வாகரையெல்லாம் முக்கியமற்றதாகப் போய், அரிப்பு, சிலாவத்துறை முக்கியமா வந்ததெண்டு விளங்கேல. வன்னியில இருக்கிறதாலயோ?

ஒப்பீட்டளவில பார்;த்தால் முல்லைத்தீவுக்கு அடுத்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் சம்பூர்தான். கிளிநொச்சிகூட இல்லை.

சம்பூரோடு ஒப்பிடும் போது மணலாறு கொக்கு தொடுவாய், நாயாறு, செம்மலை கூட கேந்திர முக்கியத்துவமான பிரதேசம் ஆகிறது...

சம்பூருகோ இல்லை கிழக்கு பகுதிகளுக்கோ வளங்கல்களுக்கு இந்த கடற்கரைகள் மிகவும் அவசியம்... பலமாக்க பட்டு போராட்டத்தின் மத்திய பகுதியாக இருக்கும் வன்னியில் இருந்து மற்றவற்றுக்கு ஆதரவு வளங்கும் வண்ணம்தான் வன்னி தளமாக்க பட்டு இருக்கிறது... மிக முக்கியமாக கிழக்கின் பகுதிகள் எல்லாமே இராணுவத்தின் எறிகணை வீச்சு எல்லைக்குள் இருக்கிறது... ஆனால் வன்னியின் பெரும்பகுதி அந்த எல்லைகளுக்குள் இருக்கவில்லை... மக்களுக்கு பாதுகாப்பான பிரதேசம் எண்று பல இடங்கள் இருக்கிறது அல்லது ஏற்படுத்த பட்டு இருக்கிறது... இதன் மூலம் வன்னி போராட்டதின் முக்கிய இடம் ஆகிறது... தொல்லைகள் இல்லாது மக்களாலும் போராளிகளாலும் செயற்பட கூடிய பகுதி ஆகிறது...

மன்னார் என்பது எப்படி முக்கியமானது எண்று இதே பகுதியில் சொனேன் வேண்டுமானால் திரும்பவும் சொல்கிறேன்... மசகு எண்ணை என்னும் இலங்கையின் சர்வதேசத்தை நோக்கிய வலை விரிப்பு ஒரு புறம் எண்டாலும் அதை புலிகளின் பலமான கட்டுப்பாட்டுக்கு அண்மையில் என்பதின் மூலம் அதுவும் காரணமாகிறது...

முக்கியமாக

முதலாவதாய் அரிப்பு முதல் முசக்குத்தி வரையான கடற்கரை இலங்கை தலைநகர் கொழும்பின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்... கடல்புலிகளால் மட்டும் அல்ல , வான் புலிகள் கூட இந்த பகுதியால்தான் பறந்து வந்ததாக இலங்கை படைகள் நம்புகிறது... அதொடு கொழும்பு துறைமுகம் இந்த பகுதியில் இருந்து வேக படகுகளில் ஆகக்கூடியது ஒரு மணிநேர பயண தூரத்துள் வருகிறது... ஆகவே இந்த பகுதியை கைப்பற்றுவதின் மூலம் பலமாக்கிவிட்டோம் புலிகளால் தாக்குதல் நடாத்த முடியாது எனும் பிரச்சாரங்களால் இலங்கை பொருளாதாரதை பெருக்க முடியும்.....

இரண்டவதாய் யாழ் குடா நாட்டுக்கான ஆதரவினை மன்னாரில் இருந்தே செய்ய வளி வகை செய்ய முடியும்.... மன்னார் துறைகளில் இருந்து காரைநகர் துறைக்கு தரை இறங்கு கலம் மூலம் மெதுவாகவே செய்ய முடியும்... காரணம் கொழும்பு துறை முகத்தில் இருந்து மன்னார்தீவு வரை மெதுவாக நகர்வு எண்டாலும் பாதுகாப்பாக வர முடியும்... அதனால் யாழ்ப்பாண இராணுவம் பலமடையும்..

இன்னும் சொல்ல முடியும்...

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் மோடர்கள் என்ற நினைப்பில்தான் இன்னமும் நாங்கள் இருக்கிறோம்.

83 ஆடி மாதத்தின் பின்னர் தீவிரமாகிய தமிழரின் போராட்டம் எவ்வளவு வளர்ச்சியடைந்ததோ, அதைவிட பலமடங்கு வளர்ச்சியைச் சிங்கள ஆயுதப் படைகளும் கொண்டுள்ளன. எனவே இரு படைகளுக்கும் உள்ள இடைவெளி தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்தம் சம பல அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இச்சமநிலை 2005இன் பிற்பகுதியில் இருந்து சிங்களப் படைகளின் பக்கமாகச் சாய்ந்து வருகின்றது. மீண்டும் சமநிலையை அடைந்தால் இன்னோர் யுத்தநிறுத்தம், பேச்சுவார்த்தை என்றுதானே வரும். எனவே சமநிலையை விட அதிக அரசியல்/இராணுவ பலமுள்ளவர்களாக தமிழர் தரப்பு மாறவேண்டும். எனினும் தாயக நிலைமைகளும், சர்வதேச நிலைமைகளும் தமிழர் தரப்பை பலமற்றதாகவே வைத்திருக்க முயல்கின்றன.

இராணுவ உதவிகளை நேரிடையாகவும், மறைமுகமாகவும் பல சக்திவாய்ந்த நாடுகள் சிங்கள அரசுக்கு செய்கின்றன. ஜப்பான் தொடர்ந்தும் பொருளாதார உதவிகளைப் புரிந்துகொண்டுதான் இருக்கும். எனவே சிறிலங்காவை பொருளாத ரீதியில் ஆட்டம் காணவைக்க எடுக்கும் முயற்சிகள் எப்போதும் தற்காலிகமானதாகவே இருக்கும். இந்தப் பின்புலத்தில் சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்புக்களைப் பார்த்தால், அவர்கள் நீண்ட கால இலக்குகளின் அடிப்படையில் தமது படையெடுப்புக்களை நடாத்துகின்றனர். முகமாலையிலும், மடுப்பகுதியிலும் அவர்களால் நினைத்த இலக்குகளை இலகுவாக அடையமுடியவில்லை. எனினும் கற்றுக் கொண்ட பாடங்களில் இருந்து மேலும் முன்னேறத்தான் முயற்சிப்பர். ஆகவே தமிழர் தரப்பு தற்காப்பில்தான் தற்போது உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்னை தலைவருக்கு எல்லாம் தெரியும். சண்டை பிடிக்காமல் எல்லாரயும் வன்னி பிரதேசத்துக்கு கூப்பிட்டிருக்கு, கிழக்கு படையும் போய் சேந்திருக்கு, வன்னிக்குள்ள வரவிட்டு பாருங்கோ........ஊதிற சங்கு பிலத்து கேக்கும். B)

சிங்கள படை வளர்ச்சி அடைந்துதான் இருக்குது,.... அதோட வெளிநாட்டு கடந்தொகையும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது...

இராணுவ உதவிகளை இலங்கைக்கு இப்போது ஒரு நாடுகளும் ஓசியிலை செய்வதில்லை... கையில காசு வாயிலை தோசை... தமிழர் தரப்பும் தற்காபில் இல்லை.. ஒமர் முல்லா மாதிரி காலை கட்டிப்போடு சாகுவரை சண்ண்டை பிடிச்சால்தான் தமிழர் வீரர் , சாதிக்கிறார்கள் எண்டு நம்புவீனம்போல...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.