Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்ந்த ஈழத் தமிழனின் எதிர்காலம் - பகுதி 1

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 2/1/2023 at 20:56, இணையவன் said:

வயோதிப வாழ்க்கை என்பது நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதல்ல. எமக்கு ஏற்றவாறான வாழ்கை முறையை ஒருங்கமைத்து வாழ முடியும். ஏறத்தாள மொத்த வாழ்வில் மூன்றில் ஒரு காலப் பகுதியை இது அடக்குகிறது. சிலர் ஏற்கனவே திட்டமிட்டும் சிலர் காலப்போக்கில் எடுத்த முடிவாலும் இன்னும் சிலர் சில நிர்ப்பந்தங்களுக்காகவும் தமது வழிகளைத் தேடிக் கொள்கின்றனர். 

இணையவன்,

வயோதிப காலத்து பொருளாதார உடல் தகுதியை (Wealth and Health Conditions) பற்றி எப்போது சிந்திக்க தொடங்குகிறோமோ அப்பவே நாங்கள் இந்த மனித வாழ்க்கை பற்றிய புரிதலுக்குள் வந்துவிட்டோம் என்று அர்த்தம்.

இந்த நிரம்பு நிலையை அடைவதற்கு பொருளாதார நிரம்பு நிலை, குடும்ப நிரம்புநிலைகளை அடைந்திருந்தால் மட்டுமே இந்த எண்ணங்களுக்கு சாத்தியம். சிலர் ஓய்வு பெறும்வரை அடையமுடியாமல் போனதற்கு அதுவே காரணம்.

பொருளாதார நிரம்புநிலை

செலவீனத்துக்கு மேலதிகமான சம்பளத்தை ஊதாரித்தனமாகவோ, ஏமாந்தோ அழிக்காமல் சேமிப்பதன் மூலமோ, பொருளாதார முகாமைத்துவ ஆலோசகர்களின் வழிகாட்டலுடனோ Wealth Management Consultants (அதிகரித்த மாதாந்த முதலிடலில் 10 வருடங்களில் அடைய முடியும்). அதேவேளை குடும்பத்தை ஒரு குறிப்பிட்ட செல்வீனத்துக்குள் வாழப்பழக்குதலும் முக்கிய வழிமுறையாகும்.

இது Passive income இற்கு வழிவகுக்கும். அத்தோடு நாளாக நாளாக உங்கள் வேலை சதவீதத்தை குறைத்து (உங்கள் வேலைத்தளத்தில் உங்கள் முக்கியத்துவம் நம்பிக்கையை பொறுத்து மாறுபடும்) உடல் தகுதியான நிலையில் ஓய்வுக்கு மாறுதல் (50-55 வயது)

ஆயுள் காப்புறுதி, நோய்க்கான காப்புறுதிகளை சரியாக பேணி உங்கள் குடுபத்தை உங்களுக்குபின் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றுதல்.

வீட்டுக்கடனில் வட்டியை மட்டும் கட்டும் முறைக்கு மாற்றி சரியான தருணத்தில் நீண்டகால நிலையான குறைந்த வட்டி விகிததில் நிலை நிறுத்தி வீட்டை கடனிலேயெ உங்கள் பிள்ளைகளுக்கு கையளித்தல். (அப்போது வீட்டுக்கடன் வீட்டின் விற்பனைப்பெறுமதியில் 50% வீதம் கூட வராது அதுவே நாங்கள் பிள்ளைகளுக்காக கொடுக்கும் முதலீடு)

மனைவியை பிள்ளைகளை நேரம் இருக்கும்போது சிறுக சிறுக பொருளாதார முகாமைத்துவ நுணுக்கங்களை பரிமாறி பொருளாதார வெளிப்படைத்தன்மையை பேணுதல்.

 

குடும்ப நிரம்புநிலை

இது கொஞ்சம் கடினமானதும் 30 களில் திட்டமிட வேண்டியதுமான நிலை.

மனைவி - உங்கள் வயோதிப கால திட்டமிடலை கொஞ்சம் கொஞ்சமாக விளங்கப்படுத்தி தயார்படுத்தல். இதற்கு மனைவி வரமாக அமைந்திருக்க வேண்டும்.

பிள்ளைகள் - பெறும் பிள்ளைகளின் எண்ணிக்கை, வயதுகளை கணிப்பில் எடுத்து பிள்ளைகளை பெறுதல். உங்களுக்கு 50 வயதாகும் போது அவர்கள் 18 வயதை தாண்டி இருக்குமாறு பார்த்துக்கொள்ளுதல். 

அது பெற்றோர் சார் பிள்ளைகள் நிலையில் இருந்து உங்களை தள்ளி வைக்கும். அவர்களை வளர்க்கும்போதும் வெறும் பொருளாதார சார்பு பெற்றோராக நடத்தாது அவர்களை தனி முடிவெடுக்கும் திறனுக்கு படிப்படியாக வளர்த்து பரிசோதனைகளும் செய்து பார்க்கவேண்டும். பிள்ளைகளின்  சமய தேசிய மொழி  நிலைகள் பெற்றோரை பொறுத்தது.

அவர்களின் 16 வயதுகளின் உங்களின் வயோதிப கால திட்டங்களை கலந்தாலோசித்து அவர்களை வழிநாடாத்தும் (100%) கடைசி வயதெல்லையை தீர்மானிப்பது. இதில் பிள்ளைகளின் கல்வித்தகமை உடற்தகைமையும் அடங்கும்.

உடற்தகமை- வயோதிப காலத்தை (என்னைபோறுத்தவரை 50+) அனுபவிக்க முக்கியமானதொன்று உடற்ககமை. உங்களுக்கு நிச்சயமாக வரக்கூடிய பரம்பரை நோய்களை கண்டறிந்து முன்கூட்டியே மாப்பொருட்களை எண்ணைப்பொருட்களை தவிர்த்தல். உணவு நேரத்திட்டமிடல், உடற்பயிற்சி, ஓய்வு.

தனி மனித ஒழுக்கம் - இது உங்களுக்கு தேவையற்ற அழுத்தங்களை குறைக்கும்

சரி இப்போ கேள்வி இவ்வளவும் செய்து பிற்காலத்தை வாழ்வதற்கு இப்பவே வாழ்ந்திட்டு போகிறோம்.

இப்படி வாழ்ந்த ஆட்களில் ஒரு உதாரணம் தான் இணையவனின் மூன்றாவது உதாரணம்.

திட்டமிடலுடன் வாழ்பவர்கள் வாழ்க்கையை வாழவில்லை என்று நினைப்பது தவறு. அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்தையும் முறையாக அனுபவித்து சாகும் வரை மகிழ்வாக வாழ்கிறார்கள்.

வயதுடன் மாறும் சந்தோசத்தை நிலையானது என்று நினைக்காதீர்கள். அந்தந்த வயதில் அளவோடு அனுபவித்து கடந்து செல்லுங்கள். எட்டு எட்டாக பிரிப்பதும் பத்து பத்தாக பிரிப்பது உங்கள் உரிமை. 

நான் அனுபவித்து சரியென்று பட்ட என் கருத்தை மட்டுமே உங்கள் முன் வைத்திருக்கிறேன். சரி பிழை இருக்கலாம். ஆக்கபூர்வமாக யதார்த்தமாக விவாதிப்போம்.

வாழ்க்கை வாழ்வதற்கே..!!!

 

குறிப்பு: 

பொருளாதாரத்துக்கு வேலை செய்யும் எண்ணத்தில் இருந்து மனசுக்கு பிடித்ததை (  அந்த வேலை என்ன என்று தெரியாது மாடு வளர்பதாக இருக்கலாம், வைன் செய்யும் தொழிற்சாலை நிறுவுவதாக இருக்கலாம், வயோதிப மடம் வைப்பதாக இருக்கலாம்) செய்யும் நிலைக்கு மாறுவதற்கான பொருளாதார நிலைக்கு 40 களில் வந்துவிட்டதால் என் கருத்தியலின் சில ஒவ்வாமை இருக்கலாம். 

இந்த வருட முதல் காலாண்டுக்கான கருத்தாடலில் நான் எனது வேலையை 80% ஆக்கும் எண்ணத்தை எனது முதல்நிலை நிர்வாக இயக்குநருக்கு தெரியப்படுத்த இருக்கிறேன்.

 

இந்த திரியில் நான் கண்ட மகிழ்ச்சி ஒரே நேர்கோட்டில் அல்லது அலைவரிசையில் சிந்திப்பதற்கும் புரிதலுக்கும் எம் இனத்திலும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/1/2023 at 23:42, இணையவன் said:

 

இந்த மூன்றாவது விடயம் சொத்துகள் தனியே பணம் பொருள போன்றவை மட்டுமல்ல. ஒருவர் தனது வீட்டு முற்றத்தைத் துப்பரவு செய்து பூமரங்கள் நட்டுப் பராமரிப்பதும் சொத்துத்தான். இவ்வாறு பலரும் செய்தால் அந்த ஊரே அழகாகிவிடும் அல்லவா.

 

மரக்கறி & பயன் தரு மரங்களையும் சேர்த்து நட்டால் நன்று👍, நல்ல தொடர், தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம வாழ்க்கை நதிபோல

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நந்தன் said:

நம்ம வாழ்க்கை நதிபோல

 

வேற வழி????😭

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

 

வேற வழி????😭

60வது தாண்டிய பின்னும் இருந்தால்,ஊரில போய் போயில கண்டு நடுற ஐடியா இருக்கு  ஆனா மறந்தும் உங்களுக்கு தர மாட்டன்.😅

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நந்தன் said:

60வது தாண்டிய பின்னும் இருந்தால்,ஊரில போய் போயில கண்டு நடுற ஐடியா இருக்கு  ஆனா மறந்தும் உங்களுக்கு தர மாட்டன்.😅

நாங்க திருந்தி நூறாண்டு ஆச்சு. நீங்க இன்னும் சுப்பற்ற கொல்லைக்குள்ள தானா ராசா 😂

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
On 4/1/2023 at 12:45, முதல்வன் said:

இந்த நிரம்பு நிலையை அடைவதற்கு பொருளாதார நிரம்பு நிலை, குடும்ப நிரம்புநிலைகளை அடைந்திருந்தால் மட்டுமே இந்த எண்ணங்களுக்கு சாத்தியம். சிலர் ஓய்வு பெறும்வரை அடையமுடியாமல் போனதற்கு அதுவே காரணம்.

பொருளாதார நிரம்புநிலை

குடும்ப நிரம்புநிலை

உங்கள் நீண்ட பதிவிற்கு நன்றி முதல்வன்.

புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி எழுதப்பட்டதால் பொருளாதார நிறைவு அவசியமில்லை என்று தோன்றியது. பெரும்பாலான தமிழர்கள் மேற்கு நாடுகளில் வாழ்வதற்குத் தேவையான வசதிகளை அந் நாட்டு அரசாங்கங்கள் செய்து கொடுக்கின்றன. எவ்வளவு வசதி இருக்கிறதோ அதை வைத்து வாழ்வைத் திட்டமிட்டு மகிழ்ச்சியாக வாழ முடியும். 

நீங்கள் குறிப்பிட்ட பொருளாதார திட்டமிடல் என்போன்ற எதிர்கால ஓய்வு வாழ்க்கை தேடுபவர்களுக்கு அவசியம். 

எல்லோருக்கும் அடி மனதிலாவது ஓய்வு வாழ்வில் மகிழ்ச்சியான தருணங்களின் எதிர்பார்ப்பு இருக்கும். எழுதுங்கள் விவாதிப்போம். 

On 4/1/2023 at 16:50, நந்தன் said:

நம்ம வாழ்க்கை நதிபோல

ஓடும் நதியில் நீந்தி வாழலாம்.

On 4/1/2023 at 22:35, நந்தன் said:

60வது தாண்டிய பின்னும் இருந்தால்,ஊரில போய் போயில கண்டு நடுற ஐடியா இருக்கு  ஆனா மறந்தும் உங்களுக்கு தர மாட்டன்.😅

ஆசை உண்டல்லவா, செயல்படுத்துங்கள்.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

பல வயதினருக்கும் பயன் தரக்கூடிய அருமையான கருத்தாடல்கள்.......அவை இரண்டாம் பகுதியிலும் தொடர்வது மிக்க மகிழ்ச்சி இணையவன் இப்படி ஒரு திரி தொடங்கியமைக்கு பாராட்டுக்கள்.........!  👍 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் அவர்களது  ஓய்வுகாலத்தை அவர்கள் எதிர்பார்ப்பது போல அமைக்க முடியுமா தெரியவில்லை. ஆனாலும் நல்லதொரு திரி.. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.