Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டுபாயிலிருந்து நாடு திரும்பினார் கோட்டா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டுபாயிலிருந்து நாடு திரும்பினார் கோட்டா

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, டுபாய் பயணத்தை முடித்துக்கொண்டு வியாழக்கிழமை (5) காலை நாடு திரும்பினார்.

கோட்டாபய ராஜபக்ஷ டிசெம்பர் 26 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறிய நிலையில்,  அவர் அமெரிக்காவுக்கு செல்வதாக தகவல் வெளியானது.

அவருடன் மனைவி அயோமா ராஜபக்ஷ, மகன் தமிந்த ராஜபக்க்ஷ, மருமகள் எஸ்.டி.ராஜபக்ஷ மற்றும் அவரது பேரக்குழந்தையும் சென்றிருந்தனர்.

அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தனது அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுக்க விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ டுபாயின் தனியார் ‘ஃபேம் பார்க்’ இல் உரிமையாளர் சைஃப் அஹமட் பெல்ஹாசா மற்றும் பல விலங்குகளுடன் எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

image_e3c428b256.jpeg

image_7dc1052425.jpeg
 

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/டபயலரநத-நட-தரமபனர-கடட/175-310193

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

ஆட்சியில் அமர்த்திய மக்களை அன்பாகவும்,அறிவாகவும் அரவணைக்க முடியாதவர்கள்,அயல்நாட்டவனிடம் சென்று அவனின் விலங்குகளை அணைத்துக்கொள்ள வேண்டியதுதான்.காலம் சிறந்த ஆசிரியன்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களது குறைகளை என்னெவென்று  கேட்க விரும்பாதவர் தனக்கு புகலிடம் தரும்படி நாடுநாடாய் அலைகிறார். 

இப்பதான் ஆரம்பித்திருக்கு இன்னும் நிறைய இருக்கு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏமாற்றத்துடன் மனைவியுடன் நாடு திரும்பிய கோட்டாபய

9-2.jpg

டுபாய் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குழுவினர் சற்று முன்னர் நாடு திரும்பியுள்ளனர்.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் செல்லும் நம்பிக்கையுடன் அண்மையில் நாட்டிலிருந்து சென்றிருந்தவர் மீண்டும் இலங்கை வந்துள்ளார்.

எமிரேட்ஸ் விமானமான EK 605 இல் வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி, சிறப்பு விருந்தினர் முனையம் ஊடாக வெளியேறியதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோட்டாபய ராஜபக்ஷவுடன், அவரது மனைவி அயோம ராஜபக்ஷ, பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார மற்றும் மற்றுமொரு நபர் வந்துள்ளதாகவும், அவருடன் சென்ற ஜனாதிபதியின் மகன் மனோஜ் ராஜபக்ஷ, அவரது மனைவி மற்றும் குழந்தை வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 25ஆம் திகதி டுபாய் சென்ற கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்ல விசா கோரியதாகவும், விசா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

டுபாய் செல்லும் வழியில் அவர் டுபாயில் இருந்து பெறக்கூடிய இராஜதந்திர சலுகைகளை பெற முயற்சித்ததாகவும், டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சிறப்பு விருந்தினர் ஓய்வறையை பணம் செலுத்தாமல் பயன்படுத்துமாறு அவர் விடுத்த கோரிக்கை அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் டுபாயில் ஹோட்டல் ஒன்றில் தங்கி ஓய்வெடுத்த முன்னாள் ஜனாதிபதி இன்று இலங்கை திரும்பியுள்ளார்.
 

 

https://akkinikkunchu.com/?p=234425

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் செல்லும் நம்பிக்கையுடன் அண்மையில் நாட்டிலிருந்து சென்றிருந்தவர் மீண்டும் இலங்கை வந்துள்ளார்.

ஒருவேளை ஆட்கடத்தல் காரரை நம்பி போயிருப்பாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

கடந்த டிசம்பர் மாதம் 25ஆம் திகதி டுபாய் சென்ற கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்ல விசா கோரியதாகவும், விசா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சின்னப்பிள்ளைத் தனமாக இருக்கு. 😁
கோத்தா.... அமெரிக்க விசா இல்லாமல், என்ன துணிவில்,
அமெரிக்கா போக, பயணச்  சீட்டு எடுத்து, பத்திரிகையில் விளம்ரம் 
கொடுத்து விமானம் ஏறியவர்.  

மோட்டு சிங்களவன் என்று சொன்னாலும், இங்குள்ளவர்கள் கோவிக்கின்றார்கள். 😂
அப்ப  இவரை, விபரம் பத்தாத ஆள் என்று சொல்லவா.... 🤣

4 minutes ago, satan said:

ஒருவேளை ஆட்கடத்தல் காரரை நம்பி போயிருப்பாரோ?

அதுக்கேன்... துபாய் போய் அமெரிக்கா போக வேணும். 🙃
பேசாமல்...  மன்னாரில் இருந்து, வள்ளத்தில் ஏறி போயிருக்கலாமே.  🙂

  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration of snake

 

May be a cartoon of standing

துபாயில், மிருகங்களுக்கு... சாப்பாடு வழங்கி விட்டு வந்த கோத்தா.... 🤣

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text that says '### யோவ்... என்னய்யா பழத்தை அந்த கையில வச்சிக்கிட்டு வெறும் கையை நக்க கொடுக்குற? Sir MEME SIYA ரெண்டு வருஷமா என் நாட்டு மக்களுக்கே இதைதான் பண்ணேன் சத்தம் போடாம நக்கு'

 

May be a meme of 3 people and text that says 'FEW MINUTES LATER *ஸ'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 7 people and text that says 'NE SWIRE NEWSWIRE MEME MEME SIYA METemolstesal நான் போயிருக்கனும் அந்த Zoo வுக்குள்ள...'

ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர்... ஆஷு மாரசிங்கவின்  மைண்ட் வாய்ஸ்.............. 🤔 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

அதுக்கேன்... துபாய் போய் அமெரிக்கா போக வேணும். 🙃
பேசாமல்...  மன்னாரில் இருந்து, வள்ளத்தில் ஏறி போயிருக்கலாமே.  🙂

மன்னாரிலிருந்து போனால் இலங்கையர் யாரும் பாக்க மாட்டாங்கள்? துபாயிலிருந்து போனா வேறு நாட்டுக்காரர் கண்டாலும் பரவாயில்லை எண்டு போயிருப்பார். 

3 hours ago, தமிழ் சிறி said:

விபரம் பத்தாத ஆள் என்று சொல்லவா

இத்தனைக்கு பிறகுமா உங்களுக்கு அந்தச் சந்தேகம்? இப்போ நினைப்பார்; அருமந்தாப்போல அமெரிக்கனாயே இருந்திருக்கலாம், இப்போ எல்லாம் போச்சே எண்டு. அதுதான், இங்கே இருந்து அங்கே ஓடினார், அங்கேயிருந்து பறந்து வந்தார், இப்போ போக முடியலையே! மனம் ஒரு குரங்கு! 

  • கருத்துக்கள உறவுகள்

9-2.jpg

அகதிகளை உருவாக்கியவன்  இன்று அகதியாக திரிகிறான் .

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

கோத்தா.... அமெரிக்க விசா இல்லாமல், என்ன துணிவில்,
அமெரிக்கா போக, பயணச்  சீட்டு எடுத்து, பத்திரிகையில் விளம்ரம் 
கொடுத்து விமானம் ஏறியவர்.  

இவரை யாரும் நாடை விட்டு துரத்தவில்லை, வெளியேறுமாறு கோரிக்கை வைக்கவுமில்லை ஆனாலும் வெளியேறத் துடிக்கிறார். ஓரிடத்தில் தரித்திருக்க மறுக்கிறார் அல்லது முடியுதில்ல அவரால்  காரணம் அவர் செய்த பாவம்  அலைக்கழிக்குது. மன உழைச்சல், என்ன முடிவெடுப்பார் என்று அவருக்கே தெரியாது. இப்பிடியே போனால் வெகு சீக்கிரம் ஒரு முடிவு வரும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.