Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளுக்கு எரித்தேரியா உதவி - அமெரிக்க செனற் சபை குற்றச்சாட்டு

Featured Replies

விடுதலைப் புலிகளுக்கு எரித்தேரியா உதவி - அமெரிக்க செனற் சபை குற்றச்சாட்டு

தமிழீழ விடுலைப் புலிகளுக்கு எத்திரியா அரசாங்கம் ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க செனற் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கம் ஆயுதக்குழுக்கு உதவிகளை வழங்குவது ஜனநாயக விரோத செயற்பாடுகள் என்றும் இவ்வாறான செயற்திட்டங்களை எத்திரியா அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் அமெரிக்க செனற் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளில் உறுப்பினராகவுள்ள ஒரு நாட்டிற்கு எதிராக செயற்படும் ஆயுதக்குழு ஒன்றிற்கு, ஐக்கிய நாடுகளில் உறுப்பினராகவுள்ள நாடொன்று ஆயுதங்களை வழங்குவதாகவும் அமெரிக்க செனற் வெளியுறவுக்குழு குறிப்பிட்டுள்ளது.

எத்திரியா இத்தாலிய காலணித்துவ நாடாகும், 1941ஆம் ஆண்டு பிரித்தானியாவின் ஆட்சிக்குள் இந்நாடு கொண்டுவரப்பட்டது.

1952ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தின்படி எத்திரியா சுயாட்சி கொண்ட எத்தியோப்பாவின் ஒரு பிராந்தியாமாக கொண்டுவரப்பட்டது.

நீண்டகால போராட்டத்திற்கு பின்னர் 1993ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் எத்திரியா தனிநாடாக பிரகடனப்படுத்தப்பட்டது.

குறிப்பிட்ட இந்த நாட்டு அரசாங்கமே விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி வருவதாக அமெரிக்க செனற் சபை குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எத்திரியாவும் சர்வதேசத்தின் ஓரங்கம்தான். விடுதலைப்புலிகளுக்கான ஆதரவு நிலை எடுப்பதில் தவறில்லை. தெரிந்தது இதுவென்றால் தெரியாமலிருப்பது??? விரைவில் எத்திரியாவின் மறுப்பறிக்கையையும் கண்டனத்தையும் எதிர்பார்க்கலாம்.

ஐநாவில் உறுப்புரிமையைக் கொண்ட எத்தியோப்பியாவிறகு எதிராக ஆயுதக்குழுவாகப் போராடிய பின்னரே எரித்திரியா விடுதலை பெற்றது.

அதேபோன்றே ஐநாவில் உறுப்பரிமையைக் கொண்டிருக்கும் சிறிலங்காவிற்கு ஆயுதம் தாங்கிப் போராடும் விடுதலை அமைப்பிற்கு உதவுகிறது. எரித்திரியா விடுதலை பெற்றது போன்றே தமிழீழமும் விடுதலை பெறும் என நம்பியே உதவுகிறார்கள்.

சோவியத் ஒன்றியத்திற்கு எதிராகப் போராட அமெரிக்கா செச்சனிய போராளிகளிற்கும், ஆப்கானிய முஜாகுதீன்களிற்கும் ஆயுதம் வழங்கியதைவிட மேலானது.

ஏனென்றால் அமெரிக்காவின் நோக்கம் குறித்த போராளிக் குழுக்களிற்கு உதவுவதல்ல மாறாக சோவியத்தை சின்னாபின்னப் படுத்துவதே. ஆனால் எரித்திரியாவின் நோக்கம் தன்னைப் போன்று விடுதலைக்காக போராடும் இனத்திற்கு தோள் கொடுப்பது.

  • கருத்துக்கள உறவுகள்

எரித்திரியா விடுதலை போராட்டத்தின் போது,அமெரிக்காவில் மிக கூடுதலான பணம்(எந்த விடுதலை இயக்கத்தினையும் விட)எதியோப்பிய மக்களிடம் சேகரிக்கப்பட்டதாகவும்,அப்பண

எரித்திரியா வும் எங்களை போல் எத்தோப்பிய பெரும்பான்மை இனத்தினால் அடக்கப் பட்டு ஈ.பி.ல். வ் என்ற விடுதலை அமைப்பினால் போராடி வெற்றி கொள்ளப்பட்டு எரித்திரியா என்ற தேசம் உருவாக்கப்பட்டது

தகவலை இணைத்த சபேசனுக்கு நன்றி. மேலும் நல்ல பல தகவல்களை செய்திக்கு பக்கபலமாக இணைத்த நேசன், மின்னல், நுனாவிலானுக்கும் நன்றி. நல்ல விடயம் செய்திருக்கிறீர்கள். முடிந்தால், எரித்தேரியா பற்றியும், அதன் விடுதலைப் போராட்டம் பற்றியும் இன்னும் விளக்கமாக தமிழில் எழுதுங்கள். ஆங்கிலக் கட்டுரைகள் இருந்தால் அவற்றை மொழிபெயர்த்து இணையுங்கள். விடுதலைக்காக போராடும் ஈழத்தமிழ்ச்சமூகத்துக்கு பயனுள்ளதாக இருக்கும். செய்வீர்கள் என்று நம்புகிறேன். :lol:

மின்னல் சொல்வது போல எரித்திரியா விடுதலை பெற்ற நாடே அதுவும் ஆயுதக்குழுவாக ஏராளமான வீரர்களின் தியாகத்தால் உருவாகிய நாடு எரித்திரிய போராட்டத்துக்கும் தமிழீழ போராட்டத்துக்கும் நெஉங்கிய ஒற்றுமைகள் பல உண்டு

ஆக்கிரமிப்பாளரின் கொடுரத்தைக் கண்டவர்கள் அறிந்தவர்கள். எமக்கு உதவுவதில் என்ன தவறு? எரித்திரிய பெண் போரளிகளும் தம் மண்ணின் விடுதலைப் போருக்கு எம்மவரைப் போல் உரம் சேர்ததவர்கள். எம் பெண் போராளிகளுக்குச் சளைத்தவர்கள் அல்லர்.

ஜானா

Edited by Janarthanan

  • தொடங்கியவர்

எரித்திரிய விடுதலைப் போராட்டத்திற்கும் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கும் நிறைய ஒற்றுமை உண்டு.

  • எரித்திரியா காலனித்துவ நாடுகளால் எதியோப்பியாவோடு இணைக்கப்பட்டது.
  • எதியோப்பியா எரித்திரிய மக்களின் உரிமையை பறித்தது
  • எரித்திரியாவில் நிறைய விடுதலை இயக்கங்கள் தோன்றின
  • பெரும்பாலான இயக்கங்கள் பாதை மாறிப் போயின. மக்களின் ஆடு மாடுகளை கொள்ளையிட்டன
  • ஈபிஎல்எவ் என்ற இயக்கம் உறுதியோடு தொடர்ந்து போராடியது
  • சோவியத் யூனியன் எரித்திரிய விடுதலைப் போராட்ட இயக்கங்களிற்கு உதவியது
  • அதே சோவியத் யூனியன் பின்பு எதியோப்பியாவோடு ஒப்பந்தம் செய்து கொண்டு எரித்திரிய விடுதலை இயக்கத்திற்கு எதிராக தன்னுடைய படைகளை அனுப்பி போர் தொடுத்தது.
  • எரித்திரிய விடுதலை இயக்கம் பல இடங்களை இழந்தாலும் தாக்குப் பிடித்து நின்றது.
  • சோவியத் யூனியனின் படைகள் ஒரு கட்டத்தில் வெளியேறின
  • 1991ஆம் ஆண்டு எரித்திரிய விடுதலை இயக்கம் எதியோப்பிய இராணுவத்தை தோற்கடித்து தன்னுடைய நாட்டை மீட்டது
  • 1993 ஆண்டு சுதந்திரம் பிரகடனப்படுத்தப்பட்டது.

அனைத்துமே ஈழ விடுதலைப் போராட்டத்தோடு ஒன்றிப் போகின்றது. எரித்திரியா போன்று தமிழீழமும் சுதந்திரம் பெறும்

எல்லா ஆய்வாளர்களும் செனற் சபையின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்திறமாதிரித்தான

திருவாளர் குறுக்ஸின் கருத்தை கேட்டா சும்மா அதிருதில்ல? :D

  • தொடங்கியவர்

எரித்திரியா மீது அமெரிக்க செனற் சபையின் குற்றச்சாட்டு ஒரு செய்தியாகத்தான் இங்கே இணைக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டு உண்மையாக இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. இங்க சொல்லப்பட்டது போல் எரித்திரிய அரசு இந்தக் குற்றச்சாட்டை நிச்சயம் மறுக்கும்.

ஆனால் எரித்திரியா தமிழீழத்திற்கு உதவுமாக இருந்தால், அது புரிந்து கொள்ளக்கூடிய ஒன்று. அதற்கான காரணங்களே இங்கு வைக்கப்பட்டுள்ளன.

அப்படி எரித்திரியா இதுவரை உதவி செய்யவில்லை என்றால், இனிமேலாவது தமிழர்களுக்கு எரித்திரியா ஆதரவு கொடுப்பதற்கான வேலைகளை தமிழர்கள் செய்ய வேண்டும்.

மேற்குலகம் ஒரு நேரத்தில் எங்களுக்கு உதவி செய்யும் என்ற எதிர்பார்ப்பை விட்டுவிட்டு, அண்மையில் சுதந்திரம் பெற்ற எரித்திரியா, கிழக்கு திமோர் போன்ற நாடுகளோடும், தென் அமெரிக்க நாடுகளோடும் நாம் உறவை உருவாக்கவும் வளர்த்துக்கொள்ளவும் வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேற்குலகம் ஒரு நேரத்தில் எங்களுக்கு உதவி செய்யும் என்ற எதிர்பார்ப்பை விட்டுவிட்டு, அண்மையில் சுதந்திரம் பெற்ற எரித்திரியா, கிழக்கு திமோர் போன்ற நாடுகளோடும், தென் அமெரிக்க நாடுகளோடும் நாம் உறவை உருவாக்கவும் வளர்த்துக்கொள்ளவும் வேண்டும்.

இது வெறுமனே, கம்னுசிய அடிப்படை வாத சிந்தனையின் ஒரு வெளிப்பாடு தான். அமெரிக்கா என்ன செய்தாலும் ஓலமிடுறகின்றதைப் போல, ஒரு போக்குத் தான்.

எம்மால் அமெரிக்காவையோ, அல்லது மேற்குலகத்தையோ எதிர்த்துப் போட்டு ஒண்டுமே பண்ண முடியாது. மட்டுமல்ல, தென்னமரிக்கா நாடுகளுடன் தற்போதைக்கு நாம் கூட்டு வைப்பது என்பது எம்மைக் கம்னுசிய வாதிகளாக காட்டிவிடும்.

எமக்கு எல்லா நாடுகளும் இப்போதைக்குத் தேவை. அதைத் தான் சிங்கள அரசு தெளிவாகச் செய்யுது. இந்தியாவோடும் கை குலுக்குது, சீனாவோடும் கை குலுக்குது. பாகிஸ்தான் கூடவும் கை குலுக்குது.

அது தான் எங்களுக்குத் தேவையே தவிர, சும்மா அவனோடு நட்பை வை, இவனை வம்புக்கு இழு என்றது எல்லாம் தேவையில்லாத வேலையாகத் தான் போகும்

  • கருத்துக்கள உறவுகள்

1993 ஆம் ஆண்டு எரித்திரியா என்கின்ற தனிநாடு முழுமையான இராணுவ பலம் மூலம் வெற்றி கொள்ளப்பட்டது.

இன்று எங்களிடம் எங்களுடைய தாய் மண்ணின் மூன்றில் ஒரு பகுதி முழுமையான நிர்வாகப் பகுதியாக இருக்கின்றது. ஆனால் எரித்திரிய விடுதலைப் போராளிகள் தங்களுடைய நிலத்தை அதாவது முழுமையாக மீட்பதற்கான அந்தக் கடைசித் தாக்குதலை மேற்கொண்ட போது மிகச் சிறிய நிலப்பரப்புத் தான் அவர்களுடைய கைவசம் இருந்தது.

அந்த மிகச் சிறிய நிலப்பரப்பிலிருந்து தங்களுடைய நிலப்பரப்பில் வாழ்ந்து வந்த மக்கள் அனைவருடைய பலத்தின் மூலம் அவர்கள் தங்களுடைய தாய் மண் முழுமையையும் மீட்டனர். தங்களுடைய தாய் மண்ணை ஆக்கிரமித்திருந்த 1 லட்சத்து 10 ஆயிரம் எதிரிப் படைகளைச் சிறைப் பிடித்தனர்.

அவர்களுடைய பல நூற்றுக்கணக்கான டாங்கிகள் ஆட்டிலறிகள் மிகப் பெரும் போர்க் கலங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

இது 93 ஆம் ஆண்டு நடந்த வரலாறு.

எரித்திரியா 93 ஆம் ஆண்டு தங்களுடைய நிலப்பரப்பு முழுமையையும் மீட்டு தாங்கள் ஓர் தனியரசு என்று அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள்.

அப்போது ஐ.நா.வில் ஒரு பிரச்சினை எழுந்தது. இதனை அங்கீகரிப்பதா இல்லையா என்று. அப்போது எரித்திய மக்கள் அனைவரிடமும் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

எரித்தியா தனிநாடாகப் போக வேண்டுமா இல்லையா என்பது. நீங்களே தீர்மானியுங்கள் என்று.

எரித்திய மக்கள் நாங்கள் தனிநாடாகத் தான் இருக்க விரும்புகின்றோம் என்று வாக்களித்தார்கள்.

எரித்தியா என்கின்ற தனிநாடு உருவானது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வானொலியான புலிகளின் குரலின் செய்தி ஆசிரியர் தி.இறைவன் அவர்கள்

முத்தமிழ் கலையரங்க நிகழ்வில் அவர் பேசியவை

குறுக்காலபோவாரே....... இந்தவிஷயம் எமது நாட்டவரின் உளவுரணுக்கு மிகவும் நல்லது. ஏன் எண்டு உங்களுக்குதெரியும். நாடு நாடாக நம்மவர்கள் போடும் கூச்சல்களையே அவர்கள் கனக்கெடுக்கவிலை. உப்புசப்பு கூட பெறாத விஷயங்களுக்காக தடை செய்திருக்கிறார்கள். யாழ் கள ஆய்வாளர்களின் தன்னம்பிக்கையை பார்த்து பொறுமுகிரீர்களே........... நீங்கள் யார்? (நாரதர் ஸ்டைல் கேள்வி! :blink:)

அய்யா palmera fruit

எங்கடை உலஉறணுக்கு நல்லது எண்டு கனக்க கேள்விப்பட்டிருக்கிறனுங்கோ:

வாகரை விழாது (உபயம் தமிழ்நாதம்)

ஏ9 மாதிரி ஏ10 (உபயம் தமிழ்நாதம்)

மகிந்த அரசியல்வாதி... (உபயம் தமிழ்நாதம்)

தொழிநுட்பம் எல்லாம் என்ன பாரம்பரிய முறைப்படி உளவுபாத்தே வெட்டி விழுத்தலாம் (உபயம் தமிழ்நாதம்)

கிபிர்-மிக்27 தரையிறக்கி பத்திரமா வைச்சிருக்கு (உபயம் பரபரப்பு)

குடிசார் தகவல்கள் படி செங்கலடியில் தற்கொலைத்தாக்குதல் (உபயம் சில டசின் குடிசைக் கைத்தொழில் செய்திச் சேவைகளில் 1)

அடுத்தாக டொப்பிடோ விடப்போறம் (யாழ்களத்து டமில்டேசியவாதி ஒருவர்)

ஜெயசுக்குரிகாலத்திலேயே செய்மதியால பாத்து பாத்துத்தான் அடிச்சனாங்கள் (யாழ்களத்து டமில்டேசியவாதி ஒருவர்)

எங்களை அணுகுண்டு செய்ய வைக்காதேங்கோ (யாழ்களத்து டமில்டேசியவாதி ஒருவர்)

நீர்மூழ்கிக்கப்பல் விடப்போறம் (சுவிசில் இருந்து ஆய்வாளர் நிலவன்)

...

.....

ஞாபகம் வைச்சிருக்க முடியாத அளவுக்கு இன்னும் கனக்க இருக்குங்கோ...

நாங்கள் யாரே? உங்கடை உலஉறணை மழுங்கடிச்சு உங்கடை டமில் டேசியத்துக்கு ஆப்பு அடிச்சு மேலாலை புல்லு வழக்கிற ஆளுங்கோ.

அப்ப நான் வரட்டே...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.