Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பான் கீ மூன் இலங்கை வருகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பான் கீ மூன் இலங்கை வருகிறார்

By T. SARANYA

28 JAN, 2023 | 01:37 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளார்.

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் பான் கீ மூன்,  காலநிலை மாற்றம் மற்றும் நிலைப்பேர் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட உள்ளார்.

தென் கொரிய அரசின் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவரான பான் கீ மூன் கால நிலை மாற்றம் மற்றும் பசுமை அபிவிருத்தி திட்டங்களில் இலங்கையுடன் ஒன்றிணைந்து செயற்படவுள்ளதுடன் அவரது வருகையின்  பின்னர் பல பசுமை பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேயவர்தன தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் ஸ்தாபிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் குறித்து பான் கீ மூன் தனது விஜயத்தின் போது அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளார். இருதரப்பு கூட்டாண்மையின் கீழ் காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் முன்னெடுப்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை 7 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை சந்தித்து பான் கீ மூன் கலந்துரையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/146919

  • கருத்துக்கள உறவுகள்

காலம் போன சரக்குகள், தங்கள் பதவிக்காலத்தில் கடமையை சரிவர செய்ய துப்பில்லாமல், ஓர் இனத்தின் அழிவை எழுதியவர்கள் மீண்டும் ஏதோ நாசகார வேலைக்கு ஒன்று   கூடி ஓட முயற்சிக்கிறார்கள் போலுள்ளது! 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

காலம் போன சரக்குகள், தங்கள் பதவிக்காலத்தில் கடமையை சரிவர செய்ய துப்பில்லாமல், ஓர் இனத்தின் அழிவை எழுதியவர்கள் மீண்டும் ஏதோ நாசகார வேலைக்கு ஒன்று   கூடி ஓட முயற்சிக்கிறார்கள் போலுள்ளது! 

பகிடி என்ன என்றால் இவரும் ,எறிக் சொல்கையும் சுற்றுசூழல் என்ற ஒரே முத்திரையை குத்திக்கொண்டு சிறிலங்காவுக்கு வருகினம்.....ஏன்?

4 hours ago, ஏராளன் said:
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் பான் கீ மூன்,  காலநிலை மாற்றம் மற்றும் நிலைப்பேர் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட உள்ளார்.

 

இதே காரணத்துக்காகத்தான் எரிக் சொல்ஹெமும் ரணிலால் இலங்கைக்கு அழைக்கப்பட்டிருந்தார். இத்தனை பிரச்ச்னை இருக்க காலநிலை மாற்ற அபிவிருத்தியில் முக்கிய புள்ளிகள் நுளைவதால் ரணிலிடம் ஏதோ திட்டம் உள்ளது.

48 minutes ago, putthan said:

பகிடி என்ன என்றால் இவரும் ,எறிக் சொல்கையும் சுற்றுசூழல் என்ற ஒரே முத்திரையை குத்திக்கொண்டு சிறிலங்காவுக்கு வருகினம்.....ஏன்?

ஆகா இதையேதான் புத்தனும் எழுதியுள்ளார், வாசிக்கவில்லை.

மீண்டும் நல்வரவு புத்தன் !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னெண்டாலும் மலிஞ்சால் சந்தைக்கு வரும் தானே....:beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தை என அதிரடி ஒருபக்கம், இவர்களின் சம்பந்தமில்லாத திடீர் வருகை மறுபக்கம், ஏதோ பீதியை கிளப்புது. விட்டுவைச்ச மிச்சம் மீதியையும் இல்லாமற் செய்யவோ கூட்டி அழைக்கிறார் நரியார்.

  • கருத்துக்கள உறவுகள்

முதல் வந்தவர் மசாலாத் தோசை கிடைக்க வில்லையென்று போட்டாராக்கும்....நரிக்கும் தன் வயதுகாரர் வந்தால்தானே பொழுது போகும்...

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சுகம் என்ன சுகம் உன்னிடம் .......

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வருகிறார் பான் கீ மூன்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

உலக பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவராகவுள்ள பான் கீ மூன், எதிர்வரும் 06 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பிற்கிணங்க நாட்டிற்கு வருகை தரும் பான் கீ மூன், பல்வேறு உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடவுள்ளார்.

இலங்கையின் நிலையான அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய உடன்படிக்கைகள் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளன.

பான் கீ மூன் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளும் காலப்பகுதியில், வௌிவிவகார அமைச்சு மற்றும் உலக பசுமை வளர்ச்சி நிறுவனம் ஆகியன உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதுடன், இரு தரப்பு பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தனவை மேற்கோள்காட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஸ்தாபிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள “காலநிலை மாற்ற பல்கலைக்கழகம்” தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கலந்துகொள்வாரென எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

http://www.samakalam.com/இலங்கை-வருகிறார்-பான்-கீ/

  • கருத்துக்கள உறவுகள்

Veteran Indian diplomat Vijay Nambiar gives a yoga lesson to UN Secretary-General Ban Ki-moon in New Delhi in January

 

இனப்படுகொலையாளிகளைக் கண்டிக்க மறுத்து, நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இன்னொரு கோடரிக்காம்பு. இனக்கொலை முடிந்த பின்னர் வதை முகாம்களில் அடைக்கப்பட்ட மக்களைப் பார்க்கவென்று சுற்றுலா வந்தவன். 

தான் செயலாளர் நாயகமாக வந்தபொழுது தனது பால்ய நண்பனான விஜய் நம்பியாரை தனது செயலாளராக அமர்த்தியவன். இந்த விஜய் நம்பியாரின் சகோதரான சதீஷ் நம்பியாரே இலங்கை ராணுவத்தின் ஆலோசகராக  இனக்கொலை யுத்த காலத்தில் பணியாற்றியவன். உயர் பாதுகாப்பு வலயங்கள் இவனது ஆலோசனையின்படியே பல இடங்களில் அமைக்கப்பட்டன. பேச்சுவார்த்தை குழம்பிய விடயங்களில் இவனது உயர் பாதுகாப்பு வலயங்களும் உள்ளடக்கம்.

வெள்ளைக்கொடி விவகாரத்தில் நம்பியார்களின் கைவரிசை பரவலாகப் பேசப்பட்டது. 

பா கீ மூனை கைக்குள் போட்டுக்கொண்டு இந்த இரு நம்பியார்களும் இனக்கொலை யுத்தத்திற்கான ஆயத்தங்களையும், யுத்தத்தின்போதான சதிகளையும் இந்தியா சார்பில் செய்தார்கள்.

பா கீ மூன் வடக்குக் கிழக்கிற்கு வந்தால் நிச்சயம் எமது எதிர்ப்பினை இந்தக் கோடரிக் காம்பிற்குக் காட்ட வேண்டும்.

 

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8291

https://www.tamilnet.com/art.html?catid=79&artid=33259

https://www.tamilnet.com/art.html?catid=79&artid=35889

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வந்தார் பான் கீ மூன் !

By T. Saranya

06 Feb, 2023 | 10:06 AM
image

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் மூன், இலங்கைக்கான விஜயம் மேற்கொண்டு இன்று (பெப் 06) அதிகாலை நாட்டை வந்தடைந்தார்.

IMG-20230206-WA0001.jpg

பான் கீ மூன், அவரது பாரியார் உள்ளிட்ட உட்பட நான்கு பேர் கொண்ட தூதுக்குழுவினர் இன்று திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்தக் குழுவினர் சிங்கப்பூரில் இருந்து UL-309 ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமானம்  மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பான் கீ மூன் உள்ளிட்ட குழுவினரை வரவேற்றனர்.

IMG-20230206-WA0003.jpg

 

 


 

https://www.virakesari.lk/article/147488

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தவுக்கு சொல்லுங்கள் மூன்: ஞாபகமூட்டினார் மனோ

 image_e1aca54ccb.jpg

இலங்கை வந்துள்ள முன்னாள் ஐநா செயலாளர் பாங்கி-மூன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கட்டாயம் சந்தித்து, தான் கடைசியாக போர் முடிந்த  சில நாட்களில் இலங்கை வந்து, தமிழினம் எதிர்கொண்ட போரழிவுகளை பார்த்து விட்டு, ஊர் திரும்பும் போது அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுகள் நடத்தி, இருவரும் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த வேண்டுமென   தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.   

மே 24, 2009 அன்று வெளியிடப்பட்ட அந்த கூட்டறிக்கையில் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,  தான் தமிழ் கட்சிகளுடன் பேச்சு நடத்தி 13ஐ அமுல் செய்து, அதை மென்மேலும் மேம்படுத்த (13+) உடன்படுவதாகவும், அதேபோல் சர்வதேச மனித உரிமை நியமங்களை ஏற்று இலங்கையில் கடை பிடிப்பதாகவும் உலக மன்றமான ஐநாவுக்கு, அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியான  ஐநா செயலாளர் பாங்கி-மூன்,  என்ற தனக்கு  உறுதி அளித்ததை, இன்றைய அரசின் பிரதான கட்சியான பொதுஜன முன்னணியின் அதிகாரபூர்வ தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அவரது எம்பிகளுக்கும், இவர்களின் பின்னால் இன்னமும் நிற்கும் சில பெளத்த பிக்குகளுக்கும் ஞாபகப்படுத்த வேண்டுமென கோரியுள்ளார்.

மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

இன்று, பொறுப்பை நிறைவேற்றாத தவறுகை செய்து, குற்றவாளி கூண்டில் நிற்பது அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமல்ல. ஒட்டு மொத்த ஐ.நா அமைப்பும் என நான் நம்புகிறேன். இவர்கள் அனைவரும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.

பாங்கி-மூன் – மஹிந்த கூட்டறிக்கையில், கையெழுத்து இட்ட ஒரு தரப்பு வார்த்தை  தவறுமானால், அடுத்த தரப்பு அதை தட்டிக்கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பெயர்தான் கூட்டறிக்கை. ஆனால், அதை ஐ.நா செய்யவில்லை. அது மட்டுமல்ல, போர் நிகழ்ந்த போது, வன்னியில் இருந்த ஐ.நா அலுவலகத்தை இலங்கை அரசு சொன்னது, என்பதற்காக மூடி விட்டு நாட்டை விட்டு வெளியேறிய அன்றைய ஐ.நாவின் முடிவுக்கு முன்னாள் ஐ.நா செயலாளர் இந்த பாங்கி-மூன் பொறுப்பேற்க வேண்டும்.

அதனால்தான், இலங்கையின் இறுதி யுத்தம், சாட்சியமில்லா யுத்தமாக நிகழ்ந்தது.  இன்று போர் முடிந்து ஏறக்குறைய 14ம் ஆண்டுகள் ஓடுகின்றன. முன்னாள் ஐ.நா செயலாளர் இலங்கை போர் தொடர்பில் அன்று  உலக மாமன்றமான ஐ.நா சபை விட்ட  தவறை இன்றாவது  ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று அவர் அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் கூட அவர் அதை பற்றி பேச வேண்டும்.  அது உலக அளவில் எடுபடும். அன்று  இலங்கை யுத்தம் தொடர்பாக ஐ.நா விட்ட  தவறு தொடர்பில் அன்றே ஐ.நா சபைக்குள் ஒரு உள்ளக அறிக்கை தயார் செய்யப்பட்டதை நான் அறிவேன். அது பற்றி, முன்னாள் ஐ.நா செயலாளர் பாங்கி-மூன் இனியாவது பகிரங்கமாக பேச வேண்டும். இலங்கையின் ஊடகவியலார்கள் பாங்கி-மூனை கண்டு இது பற்றி கேள்வி எழுப்ப வேண்டும்.  

இலங்கை வந்துள்ள முன்னாள் ஐநா செயலாளர் பாங்கி-மூன், சந்திக்கும் நபர்களின் நிகழ்ச்சி நிரலில் நான் இல்லை. நான் அவரை கண்டால் இதை அவர் முகத்துக்கே சொல்லி கேட்க  விரும்புகிறேன்.

 

 

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மஹிந்தவுக்கு-சொல்லுங்கள்-மூன்-ஞாபகமூட்டினார்-மனோ/150-311942

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

இலங்கை வந்துள்ள முன்னாள் ஐநா செயலாளர் பாங்கி-மூன், சந்திக்கும் நபர்களின் நிகழ்ச்சி நிரலில் நான் இல்லை. நான் அவரை கண்டால் இதை அவர் முகத்துக்கே சொல்லி கேட்க  விரும்புகிறேன்.

அவரின் நிகழ்ச்சி நிரல் நரி ரனிலுடன் தான். அவரின் கூட்டணிக்குள் நீங்கள் அடங்க மாட்டீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பான் கீ மூன் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கிடையில் நாளை சந்திப்பு

By T. SARANYA

06 FEB, 2023 | 04:58 PM
image

(எம்.மனோசித்ரா)

ஊத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று திங்கட்கிழமை நாட்டை வந்தடைந்தார். அவர் நாளை செவ்வாய்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பான் கீ மூன்,  காலநிலை மாற்றம் மற்றும் நிலைப்பேர் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட உள்ளார்.

தென் கொரிய அரசின் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவரான பான் கீ மூன் கால நிலை மாற்றம் மற்றும் பசுமை அபிவிருத்தி திட்டங்களில் இலங்கையுடன் ஒன்றிணைந்து செயற்படவுள்ளதுடன் அவரது வருகையின்  பின்னர் பல பசுமை பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் ஸ்தாபிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் குறித்து பான் கீ மூன் அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளார். 

இருதரப்பு கூட்டாண்மையின் கீழ் காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் முன்னெடுப்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/147558

  • கருத்துக்கள உறவுகள்

ரணில்விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியும் -பான்கீ மூன்

By Rajeeban

07 Feb, 2023 | 11:37 AM
image

இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் புத்திசாலித்தனமான தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளதாக ஐக்கியநாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் பான்கீ மூன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை ஜனநாயகத்தையும் பேண்தகு பொருளாதார அபிவிருத்தியையும் அடைவதற்கான சாத்தியம் உள்ளது என கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் தலைமையில் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

https://www.virakesari.lk/article/147595

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2050 இல் பசுமை பொருளாதாரத்தை உறுதி செய்ய செயற்திட்டத்தை ஆரம்பித்தது இலங்கை - ஜனாதிபதி

By NANTHINI

07 FEB, 2023 | 02:50 PM
image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பசுமை  பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதற்கான விசேட ஆற்றல் இலங்கைக்கு உண்டு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2050ஆம் ஆண்டளவில் உலகத்தை மிகச் சிறந்த நிலைக்கு மேம்படுத்துவதற்கும் பசுமை பொருளாதாரத்தை உறுதி செய்வதற்கும் என இயற்கைக்கேற்ப நம்மை தயார்ப்படுத்தும் திட்டம் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் செயற்திட்டம் ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் தயாரித்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பசுமை வளர்ச்சிப் பாதையை நோக்கி இலங்கையின் மாற்றத்தை ஊக்குவிப்பதற்கான உத்திகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பிலான உயர்மட்ட நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (6) முற்பகல் கொழும்பு ஹில்டன் கிராண்ட் போல்ரூமில் நடைபெற்றது.

DSC_1047.jpg

இந்நிகழ்வை சுற்றாடல் அமைச்சும் உலகளாவிய பசுமை வளர்ச்சிக்கான நிறுவனமும் (GGGI) ஏற்பாடு செய்திருந்தன.

காலநிலை மாற்றம் தொடர்பிலான புதிய சட்டமூலம் தயாரிக்கப்படவுள்ள அதேவேளை காடுகளை மறுசீரமைத்தல் மற்றும் மீட்டல் ஆகிய விடயங்களை உள்வாங்கும் வகையில் பழைய சுற்றுச்சூழல் சட்டத்தை ஈடு செய்யும் வகையிலான புதிய சட்டமூலமொன்று தயாரிக்கப்படவுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், இப்பிராந்தியத்தில் உள்ள தமது உடைமைகளை உயிரியல் கட்டமைப்புகளாக அடையாளம் கண்ட முதல் நாடாக இலங்கையே இருக்கும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நக்கிள்ஸ் மலைத்தொடர், ஹோர்ட்டன் சமவெளி, சிவனொளிபாத மலை, சிங்கராச வனம், மகாவலி ஆறு, ராமர் பாலம் என்பன அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:

DSC_1146.jpg

உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்துடன் நாளை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதானது, பசுமை பொருளாதாரத்தை நிலை நிறுத்தல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பிலான இலக்குகளை அடைதல் ஆகிய செயற்பாடுகளை நோக்கிய எமது நகர்வுகளின் முதற்படியாக அமையும்.

இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் எட்டாவது செயலாளர் நாயகமும் பொதுச் சபையின் தலைவரும் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவன (GGGI) சபையின் தலைவருமான பான் கி மூன் அவர்களை வரவேற்கின்றேன். 

இலங்கையில் முதல் தடவையாக நல்லிணக்கத்துக்கு வழிவகுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு ஒப்பந்தங்களில் பான் கி மூன் சம்பந்தப்பட்டுள்ளார்.

DSC_1093.jpg

காலநிலை மாற்றம் மற்றும் அது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாம் கவலையடைந்துள்ளோம். இதுவரை நடந்தவை திருப்திகரமாக இல்லை. அத்துடன் கடந்த மாநாட்டில் நாங்கள் விரும்பிய முடிவுகள் எட்டப்படவில்லை.

குறைந்த வருமானம் பெறும் நாடுகளும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளும் போதுமான நிதி வசதி இல்லாமையினால், வாழ்க்கைத் தரத்தை பராமரிக்க வேண்டிய அதேநேரம் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதற்கும் முயற்சிக்கின்றன. 

எனவே, அபிவிருத்தியடைந்த நாடுகள் தமது நிதியுதவியை இரட்டிப்பாக்குவதன் மூலம் தாம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டுமென இத்தகைய நாடுகள் எதிர்பார்க்கின்றன.

இவ்வருடம் சில அபிவிருத்தியடைந்த நாடுகள் பொருளாதார நெருக்கடியை சந்தித்திருப்பதாக நான் அறிந்துள்ளேன். 

எவ்வாறாயினும், அதற்கான இலக்குகள் முன்னர் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.

DSC_1176.jpg

எனவே, நாம் இந்த இலக்குகளை எவ்வாறு அடையப்போகிறோம் மற்றும் அதற்கு தேவையான உதவிகள் எவை என்பன தொடர்பிலும் நாம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். 

அத்துடன் எமது நாட்டின் பொறுப்பில் இல்லாத காபன் உமிழ்வுகளுக்காகவும் அபிவிருத்தியடைந்த நாடுகள் நட்டஈடு வழங்க வேண்டும்.

மூன்றாவது விடயம், நாம் எவ்வாறு இழப்புகள் மற்றம் சேதங்களை அடையாளப்படுத்துவது என்பதாகும்.

அபிவிருத்தியடைந்த நாடுகளை அதிக பணம் செலவழிக்குமாறோ அல்லது மேலும் அபிவிருத்திகளை முன்னெடுக்குமாறோ கேட்கும் விடயம் இதுவல்ல. 

நாம் ஒரு பட்டியலின் அடிப்படையில் பணியாற்றுவோம். அவசியமான பணத்தை கணக்கிட்டு, பின்னர் அதனை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது குறித்து பார்ப்போம். 

அவர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும், அதேபோல நமது பங்களிப்பும் இருக்க வேண்டும். ஆனால், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒப்புக்கொள்வோம். 

கடந்த கோப் 26 கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் இதுவரை நிறைவேற்றப்படாமை கவலையளிக்கிறது. 

DSC_1130.jpg

கிளாஸ்கோ மிகச் சிறந்த திருப்புமுனையாகும். பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜொன்சனினால் எடுக்கப்பட்ட முயற்சிகள் முக்கியமானவை. எனினும், அவை பின்தொடரப்படவில்லை. அந்த இலக்குகள் எட்டப்பட்டுள்ளதை நாம் உறுதி செய்ய வேண்டும். எமது இலக்குகள் மற்றும் கோரிக்கைகளை நாம் சுட்டிக்காட்ட வேண்டும். 

இலங்கையானது  2030ஆம் ஆண்டாகும்போது காபன் உமிழ்வை 14.5 சதவீதத்தாலும், அதன் பின்னர் அதனை விடவும் குறைப்பதற்கான செயன்முறையை பின்பற்றி வருகிறது.  

காலநிலை மாற்றம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைப்பதற்காக நாம் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் காலநிலை மாற்றம் தொடர்பான அலுவலகமொன்றை உருவாக்கவுள்ளோம்.

பின்னர், இயற்கைக்கு ஏற்ப எம்மை தயார்ப்படுத்தும் திட்டம் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் செயற்திட்டம் ஆகியவற்றையும் தயாரித்துள்ளோம்.

2050க்குள் பசுமை பொருளாதாரம் மற்றும் சிறந்த உலகத்தை உறுதி செய்வதற்காக இவை அனைத்தும் எங்கள் அரசாங்கத்தால் முன்முயற்சியாக எடுக்கப்படுகின்றன. 

காபன் நடுநிலைமையை பேணுவதற்காக 2050ஆம் ஆண்டாகும்போது காபன் உமிழ்வை சூனியமாக்குவதற்கான திட்டங்களையும் நாம் முன்னெடுத்து வருகிறோம். 

நிலக்கரி மூலமான ஆற்றலை நாம் மேலும் அதிகரிக்கப்போவதில்லை.

படிம எரிபொருள் மானியங்களை நாம் படிப்படியாக நீக்குவோம். ஏற்கனவே நாம் அதனை நடைமுறைப்படுத்தியுள்ளோம். இவ்வாறு அதனை படிப்படியாக நீக்குவதற்காக நாம் எதிர்தரப்பினரின் தாக்குதலுக்கும் ஆளாகியுள்ளோம். 

DSC_1174.jpg

2030ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமான 70 சதவீத மின் உற்பத்தியை நாம் இலக்கு வைத்துள்ளோம்.

இந்த காலகட்டத்துக்குள் நாம் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம். முதலாவதாக, காலநிலை மாற்றம் தொடர்பிலான அலுவலகத்துடன் இணைந்து செயற்படக்கூடிய ஒரு புதிய காலநிலை மாற்றம் குறித்த சட்டம் உருவாக்கப்படும்.

அடுத்து, 1980ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் சட்டத்துக்கு ஈடாக புதிய சட்டமொன்று உருவாக்கப்படும். இது காடுகளை மறுசீரமைப்பது மற்றும் மீட்பது ஆகிய விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

அதனை தொடர்ந்து எமது சில சொத்துக்களில் உள்ள உயிரியல் கட்டமைப்புகளை அடையாளம் காண்பது மற்றும் நக்கிள்ஸ் மலைத்தொடர், ஹோர்ட்டன் சமவெளி, சிவனொளிபாத மலை, சிங்கராஜ வனம், மகாவலி ஆறு, ராமர் பாலம் என்பன உயிரியல் கட்டமைப்புகளாக அடையாளம் காணப்படுவது போன்றவை  இப்பிராந்தியத்திலேயே மேற்கொள்ளப்படும் முதலாவது விடயமாக அமையும்.

இறுதியாக, சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பிலான பல்கலைக்கழகமொன்றினை நிறுவுவதை கூறலாம்.  

இதனை நாம் பட்டப்பின் படிப்புக்கான பல்கலைக்கழகமாக நிறுவ வேண்டும். அதில்,  இந்து சமுத்திரத்தின் அனைத்து பிராந்தியங்களையும் சேர்ந்த அதிகாரிகளுக்கும், ஆபிரிக்காவை சேர்ந்தவர்களுக்கும் காலநிலை மாற்றம் தொடர்பிலான இலக்குகளை அடைவதற்கும் ஒரு புதிய காலநிலை மாற்றம் மற்றும் புதிய பசுமை பொருளாதாரம் ஆகிய விடயங்கள் குறித்த பயிற்சிகளை அளிப்பதன் மூலம் உலகை காலநிலைக்கேற்ப  தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

DSC_1086.jpg

நாம் தற்போது பசுமை பொருளாதாரத்துக்காக போராடுகிறோம். அதனை நோக்கியே நாம் செல்ல வேண்டும். 

விசேடமாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொடர்பான திறன் எம்மிடம் இருப்பதை நாம் கண்டறிந்துள்ளோம். 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் எம்மிடமுள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் பசுமை ஐதரசன் ஆகியவற்றை நாம் மதிப்பிட ஆரம்பித்துள்ளோம். எம்மிடம் 30 ஜிகா வாட் மேலதிக திறன் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். இன்னும் சிலர் 40 என்றும், 50 என்றும் கூறுகின்றனர்.

ஆனால், எம்மிடம் சரியான மதிப்பீட்டளவொன்று இருக்க வேண்டும். அதனையே ஆசிய அபிவிருத்தி வங்கி முன்னெடுத்து வருகிறது. 

எனவே, இந்த பிராந்தியத்தில் முதலீடு செய்ய நாங்கள் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளோம். இது நாம் முன்னேறக்கூடிய இன்னுமொரு பகுதியாகும்.

எமது பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் புதிய தொழில்நுட்பத்தை பார்க்கிறோம். எனினும், நிச்சயமாக நாம் படிம எரிபொருளுடன் தொடர்புகொள்ள மாட்டோம். அத்துடன் விவசாயத்தை நவீனமயமாக்க தொழில்நுட்ப கைத்தொழில் அடிப்படையிலான  புதிய உற்பத்தி மற்றும் சேவைக் கைத்தொழில்களை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.

இவற்றை அடிப்படையாகக் கொண்டே நாம் பசுமை பொருளாதாரத்தை நோக்கி நகர்கிறோம். இதில் நாம் சில சிக்கல்களை சந்திக்கப்போகிறோம். அதில் ஒன்றே திறன் குறைபாடு.

மேலும், சர்வதேச நிதியுதவிக்கான சிறந்த அணுகலும் எமக்கு தேவை. நாங்கள் கடனை நிதி ரீதியாகவும் வடிவமைக்க முடியும். 

பசுமை நிதிக் கருவியை பயன்படுத்துவதன் மூலம் தற்போதைய கடன் சுமையை குறைக்க முடியும். எமது உள்நாட்டுக் கொள்கை காலநிலை செழுமைத் திட்டத்துக்கு ஏற்றதாக இருக்கும். 

இலங்கை பின்பற்ற விரும்பும் பாதை இதுவாகும். அத்துடன் இதனை அடைய GGGI எமக்கு உதவும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. 

நாளை கைச்சாத்திடப்படும் ஒப்பந்தமே நாம் மேற்கொள்ளவுள்ள மேற்படி செயற்பாடுகளுக்கான முதற்படியாக அமையும் என ஜனாதிபதி ரணில் கூறினார்.

DSC_0956.jpg

மேலும், இந்த நிகழ்வில் ஐ.நா.வின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கி மூன் கருத்துரையில், 

தனது இறுதி வருகைக்குப் பின்னர் கடந்த ஆறரை ஆண்டுகளுக்குள் இங்கு இடம்பெற்றுள்ள மாற்றங்களை தன்னால் உணர முடிந்துள்ளதாகவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையின் கீழ் நாட்டில் ஜனநாயகம் மற்றும் நிலைபேண்தகு பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றை அடைய முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக கூறினார்.

மேலும், இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட், 2050ஆம் ஆண்டில் இலங்கை பசுமை பொருளாதாரம் தொடர்பில் அடையவுள்ள இலக்குகள் குறித்து கட்டம் கட்டமாக விளக்கமளித்தார்.

சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க மற்றும் GGGIயின் நிகழ்ச்சித் தலைவரும் ஆசிய பிராந்தியத்தின் பணிப்பாளருமான கலாநிதி. அச்சலா அபேசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றினர்.

இலங்கைக்கான கொரிய தூதுவர் சந்துஷ் டபிள்யூ. ஜியொங், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/147596

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தார் பான் கீ மூன்

By DIGITAL DESK 5

08 FEB, 2023 | 09:08 PM
image

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகமும், உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவருமான பான் கீ மூன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை புதன்கிழமை (08) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

பாராளுமன்றத்துக்கு வருகை தந்த பான் கீ மூனை, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க ஆகியோர் வரவேற்றனர்.

Ban_Ki-Moon_visit_20230207__18_.jpeg

உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் என்ற ரீதியில் பான் கி மூன், பசுமை அபிவிருத்தி, நிலைபேறான அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்தியிருந்ததுடன், கார்பன் வெளியீட்டைக் குறைத்து நிலைபேறான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பப் புதிய கூட்டாண்மைகளை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.

அரசியலில் கொள்கைகள் வகுக்கப்படும்போது பசுமை வளர்ச்சிக்கான மாதிரியொன்று அடையாளம் காணப்பட வேண்டும் என்றும், அதற்குத் தேவையான குரல் பாராளுமன்றத்தின் ஊடாக எழுப்பப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Ban_Ki-Moon_visit_20230207__10_.jpeg

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறையுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மத்தியில் விரிவான விளிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் சுட்டிக்காட்டிய சபாநாயகர், இந்த இலக்கை அடைவதற்குத் தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

இந்தச் சந்திப்பினைத் தொடர்ந்து பான் கி மூன், இலங்கைக்கான தென்கொரியத் தூதுவர் வூன்ஜின் ஜியோங் மற்றும் GGGI இன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஃபிராங்க் ரிஜ்ஸ்பெர்மேன் உள்ளிட்ட தூதுக் குழுவினர் பாராளுமன்ற சபா மண்டபத்தைப் பார்வையிட்டனர்.

இச்சந்திப்பில் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் கௌரவ அஜித் ராஜபக்ஷ, சுற்றாடல் அமைச்சர் கௌரவ நசீர் அஹமட், ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் தினேஷ் வீரகொடி, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/147741

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.