Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம் பெறும் - சரத் வீரசேகரவின் குழு மகாசங்கத்தினரிடம் எடுத்துரைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

கஜன் தரப்பு சீனாவுடன் ஒரு தொடர்பாடல் வழியை திறக்ககலாம்.

அவர்கள் அப்படி செய்தால் இந்தியா சார்பானவர்கள் துரோகிகள் என்றுதான் கூறுவார்கள். ஏனெனில் இன்றைக்கும் இந்தியாவை விட்டால் எங்களுக்கு தீர்வு தர ஒருவருமில்லை, தமிழ்நாட்டுடனான உறவு etc etc என கனபேர் அங்கே கூட்டங்களிலும் பொதுவாகவும் கதைக்கிறார்கள். சீனா கொடுத்த அரிசியையே சந்தேகத்துடன்தான் பார்க்கிறார்கள். ஆகையால் கஜன்களின் நிலை சீனாவுடன் இணைந்தால் இன்னமும் பின்னோக்கித்தான் போகும் என நினைக்கிறேன்.. 

அங்கே வாழும் மக்களின் எண்ணங்களில் மாற்றங்கள் வருவதையும் இந்தக் கட்சிகளின் மீதான நம்பிக்கையும் குறைகிறது.. அதைத்தான் அங்கே நின்ற காலப்பகுதியில் உணர முடிகிறது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடாது - 4 பௌத்த மகா பீடங்களும் ஜனாதிபதியிடம் நேரடியாக வலியுறுத்தல்

By VISHNU

02 FEB, 2023 | 04:08 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டின் இறையான்மைக்கும், சுயாதீனத்தன்மைக்கும், தேசிய பாதுகாப்பிற்கும் பாரதூரமான அச்சுறுத்தலாக அமையும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடாது என்று நான்கு பௌத்த மகா பீடங்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரடியாக வலியுறுத்தியுள்ளன.

329039480_911181336571969_22878084983837

கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (02) வியாழக்கிழமை மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார்.

இதன் போதே மல்வத்து பீட மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர், அமரபுர பீடத்தின் மகாநாயக்க தொடம்பான ஸ்ரீ சந்திரசிறி தேரர் மற்றும் ராமாஞ்ஞ பீடத்தின் மகாநாயக்க மல்குலாவே ஸ்ரீ விமல தேரர் ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட கடிதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நிறைவேற்றதிகாரி என்ற ரீதியில் நீங்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள கருத்து நாட்டுக்குள் பெரும் பதற்றமான சூழல் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள், மரபு ரீதியானதும் வரலாற்று சிறப்பு மிக்கதுமான ஸ்தலங்கள் தொடர்பான அறிக்கைகள் மற்றும் மத ரீதியான அமைப்புக்களை ஒழுங்குபடுத்தல் உள்ளிட்ட அதிகாரங்களை செயற்படுத்த மாகாணசபைகளுக்கு வாய்ப்பளிக்கப்படுகின்றமையானது நாட்டில் பிரிவினைவாதம் செயல்பட வழிவகுக்கும்.

இதற்கு முன்னர் யுத்தம் பதவி வகித்த நிறைவேற்றதிகார ஜனாதிபதிகளால் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை முழுமையாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காமைக்கான காரணம் நாட்டுக்குள் பதற்றமான நிலைமை உருவாகி விடக் கூடா என்பதனாலாகும் என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

மக்களின் இறையான்மையைப் பாதுகாப்பதற்காக முன்னின்று செயற்படும் நிறைவேற்றதிகார ஜனாதிபதியொருவர், மத்திய அரசாங்கத்தின் சுயாதீனத்தன்மை வீழ்ச்சியடைவதற்கு காரணமாக அமையும் இவ்வாறான அரசியலமைப்பு திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கின்றமையானது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தும்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பிராந்திய மற்றும் உலகலாவிய சக்திகளின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக சில நிபந்தனைகளுக்கு இணக்கப்பாட்டை எட்ட வேண்டிய அழுத்தம் ஏற்படுகின்றது. நாட்டின் இறையான்மை மற்றும் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இவ்வாறான யோசனைகள் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதை மகா சங்கத்தினர் என்ற ரீதியில் நாம் வலியுறுத்துகின்றோம்.

75 ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடும் நாம் இலங்கையர்கள் என்ற ரீதியில் இனம், மத பேதமின்றி நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டமைக்கான சான்றுகள் எமது வரலாற்றில் காணப்படுகின்றன.

3 தாசாப்தங்களுக்கும் அதிக காலம் பாரதூரமான உள்நாட்டு யுத்தத்தினை எதிர்கொண்டுள்ளோம். இதன் காரணமாக பாரியளவில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றது. வடக்கிலுள்ள அரசியல்வாதிகளுக்கு அமைச்சரவையில் அங்கத்துவம் வகிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்புக்களும் வழங்கப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தி , அதன் ஊடாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உள்ளிட்டவற்றை மாகாண சபைகளுக்கு வழங்குவதானது அரச நிர்வாகத்தை சீர்குலைப்பதாகவே அமையும்.

இதன் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மை, இறையான்மை மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரதூரமான பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.

எனவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதை மகா சங்கத்தினர் என்ற ரீதியில் வலியுறுத்துகின்றோம்.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/147282

  • கருத்துக்கள உறவுகள்

எனி சிங்கள - தமிழ் கலவரம் ஒன்று வருமானால்... சிங்களவர்கள் பிச்சை எடுக்கும் நிலையே வரும். அதுவே  அவர்கள் தாங்களாக தேடிக் கொண்ட அழிவாக அமையும். ஒருவேளை தமிழர்களின் சொத்துக்களை சூறையாடி செல்வச் செழிப்போடு வாழலாம்.. என்று கனவு காண்பார்களாக இருந்தால்.. அது சாத்தியப்படாது. 

  • கருத்துக்கள உறவுகள்

இனக்கலவரம் என்பதெல்லாம் வெறும் பயமுறுத்தல். நாடு இன்று இருக்கிறநிலையில் பொல்லைகொடுத்து அடிவாங்க நினைக்குமா சிங்களம்? இனப்படுகொலை நடக்கவேயில்லை என்று சிங்களவரும் எம்மவரும் அடித்துச்சொல்லிக்கொண்டு, நடந்தது என்றும் தமிழரை உரிமைகளற்ற அடிமைகளாகவே வைத்திருப்போம் என்றும் மகாநாயக்கர்கள் தொடங்கி, இராணுவம், அரசியல் வாதிகள் வரை ஆதாரத்தையும் வழங்கிக்கொண்டே இருக்கிறார்கள் தங்களையறியாமல். மாப்புளிப்பது அப்பத்துக்கு நல்லது என்பார்கள். இவர்கள் குரைப்பதற்கு கோல் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். சர்வதேசத்துக்கு எச்சரிக்கை விட்டு சமாதான நடவடிக்கைகளை கிடப்பில் போட வைக்கலாம் என முட்டாள்கள் நினைக்கலாம் ஆனால் கயிறு இறுக்கிக்கொண்டு போகிறது என்பதை அறிய அவர்களது கடந்த கால அனுபவம் தடுக்கிறது. எல்லார்க்கும் பதில் தன்னிடம் உண்டு என்ற நரியார் பேசாமல் கடிதத்தை வாங்கிக்கொண்டு, கொழுத்திப்போட்டுவிட்டேன் இனி அது தானாக எரிந்து சாம்பலாக்கும் பதின்மூன்றை என்று சிரித்துக்கொண்டு திரும்புவார்.                          

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் சுமந்திரனைப்பாக்க பாவமாக இருக்கிறது. தமிழருக்கு நடந்தது இனப்படுகொலையென நிரூபிக்க ஆதாரம் காணாது என்று புலம்பியவருக்கு தகுந்த ஆதாரம் சிங்களமே அடிக்கடி கொடுத்துக்கொண்டு இருக்கிறது. நடந்தது இனக்கலவரம், முள்ளிவாய்க்காலில் ஓடியது இரத்த ஆறு, இன்னும் செய்வோம் என்று வேறு கூறுகிறார்கள். கொலையாளியே ஆதாரத்தை அளிக்கிறான். தாங்கள் காலங்காலமாய் என்ன செய்தோம் தமிழருக்கு, இனியும் தொடருவோம் என்கிறார்கள். இவர் இல்லை என்று ஆதாரத்தை அழிக்கிறார். பாவம் சுமந்திரன்! இவர் எல்லாம் பெரிய வக்கீல், ராஜதந்திரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகிட தத்திமி தகிட தத்திமி தந்தானா...

May be an image of 2 people and people standing

சர்வதேச நாணய நிதிய உதவி கிடைக்கும்வரை, இந்தியாவுக்கு ஏற்றமாதிரியே பேசினார் ரணில்..
இதோ நாளைக்கே 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுலாகும் என்பதுபோல அவர் பேசியதை பார்த்து புல்லரிக்காதவர்கள் சிலரே..
இப்போது சர்வதேச நாணய நிதியம் உதவி வழங்க, கடன்களை மறுசீரமைத்து இந்தியா ஆதரவளித்தாயிற்று..
இதோ 13 ஐ அமுல்படுத்தவேண்டாமென பௌத்த பீடங்கள் இன்று அதிரடியாக கூறியிருக்கின்றன... அதுவும் ரணில், அவர்களை சந்திக்க போகும்போதுதான் கடிதத்தின் ஊடாக ரணிலிடமே சொன்னார்களாம்... இதை இட்லி என்று சொன்னால் சட்னியும் நம்பாதே மோமண்ட்...
ஐயோ மாநாயக்கர்களே இப்படி சொல்லிவிட்டதால் நான் என்ன செய்ய , என்று ரணில் இனி 3டியில் ஓட்டுவார் படம்...
அன்று இந்தியப்படைகளை அழைத்து தமிழர்களைப் பிரித்து ஜெ.ஆர் , இந்தியாவுக்கு கயிறு கொடுத்தார்..
பின்னர் 13 ப்ளஸ் என்று , இற்றுப்போன கயிறை கொடுத்தார் மஹிந்த...
இப்போ புல்ட்டோ ரொபியை டில்லிக்கு வழங்கி , பாரதத்துக்கே பரதம் ஆடிக்காட்டுகிறார் விக்கிரமசிங்க...
பாவம் டெமில்ஸ்..
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13 ஐ முழுமையாக அமுல்படுத்த மக்கள் வாக்கெடுப்பு அல்லது ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் - கம்மன்பில

By VISHNU

03 FEB, 2023 | 01:37 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தேவையா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளதே தவிர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அந்த அதிகாரம் இல்லை.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமாயின் மக்கள் வாக்கெடுப்பு அல்லது ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும். சுபீட்சமான கொள்கை திட்டத்திற்கு அமையவே ஜனாதிபதி செயற்பட வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவதுதிருத்தத்திற்கு அமைய காணி அதிகாரம் மற்றும் 9 மாகாணங்களுக்கும் பிரத்தியேக பொலிஸ் ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தல் மாத்திரம் தற்போது மிகுதியாகவுள்ளது.

மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் பகிர்ந்தளிக்கும் போது இலங்கை இயல்பாகவே சமஷ்டியாட்சி முறையிலான நாடாக அங்கிகரிக்கப்படும்.

69 இலட்ச மக்கள் சுபீட்சமான கொள்கை திட்டத்தை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து ஜனாதிபதியாக கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள்.

கோட்டபய ராஜபக்ஷ சுபீட்சமான இலக்கு கொள்கை திட்டத்தை அமுல்படுத்துவதற்கு பதிலாக 'பஷில் ராஜபக்ஷ இலக்கு' கொள்கை திட்டத்தை அமுல்படுத்தியதால் நாட்டு மக்கள் ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டபய ராஜபக்ஷவை விரட்டியடித்தார்கள்.

கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 134 உறுப்பினர்களின் ஆதரவினால் தெரிவு செய்யபட்டார். சுபீட்சமான இலக்கு கொள்கை திட்டத்தில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிடப்படவில்லை.

அரசியல் திருத்தங்களுக்கு பதிலாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே மக்கள் பொதுஜன பெரமுன தலைமையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்.

ஆகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு கிடைக்கப் பெற்ற மக்களாணையுடன் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது பதவி வகிக்கிறார், ஆகவே அவர் சுபீட்சமான கொள்கை திட்டத்திற்கு அப்பாற்பட்டு செயற்பட கூடாது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து பதவி வகித்த அரச தலைவர்கள் எவரும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை, ஏனெனில் இதன் பாரதூரத்தை அவர்கள் நன்கு அறிவார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்கள் பிரதிநியல்ல என்பதால் இதன் பாரதூர தன்மையை அறிந்துக் கொள்ளும் தேவை அவருக்கு இல்லை.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதே தனது முக்கிய பொறுப்பு என ஜனாதிபதி குறிப்பிட்டார். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இவர் கடந்த ஆறு மாத காலமாக எதனையும் செய்யவில்லை.

பேச்சளவில் மாத்திரம் மக்களுக்கு நிவாரணம் வழங்குகிறார். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் இல்லாத பிரச்சினையை தோற்றுவிப்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் அதற்கு அவர் மக்கள் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் அல்லது ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும்.13 ஆவது திருத்தம் தேவையா,இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் நாட்டு மக்களுக்கே உண்டு என்றார்.

https://www.virakesari.lk/article/147358

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

தகிட தத்திமி தகிட தத்திமி தந்தானா...

May be an image of 2 people and people standing

சர்வதேச நாணய நிதிய உதவி கிடைக்கும்வரை, இந்தியாவுக்கு ஏற்றமாதிரியே பேசினார் ரணில்..
இதோ நாளைக்கே 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுலாகும் என்பதுபோல அவர் பேசியதை பார்த்து புல்லரிக்காதவர்கள் சிலரே..
இப்போது சர்வதேச நாணய நிதியம் உதவி வழங்க, கடன்களை மறுசீரமைத்து இந்தியா ஆதரவளித்தாயிற்று..
இதோ 13 ஐ அமுல்படுத்தவேண்டாமென பௌத்த பீடங்கள் இன்று அதிரடியாக கூறியிருக்கின்றன... அதுவும் ரணில், அவர்களை சந்திக்க போகும்போதுதான் கடிதத்தின் ஊடாக ரணிலிடமே சொன்னார்களாம்... இதை இட்லி என்று சொன்னால் சட்னியும் நம்பாதே மோமண்ட்...
ஐயோ மாநாயக்கர்களே இப்படி சொல்லிவிட்டதால் நான் என்ன செய்ய , என்று ரணில் இனி 3டியில் ஓட்டுவார் படம்...
அன்று இந்தியப்படைகளை அழைத்து தமிழர்களைப் பிரித்து ஜெ.ஆர் , இந்தியாவுக்கு கயிறு கொடுத்தார்..
பின்னர் 13 ப்ளஸ் என்று , இற்றுப்போன கயிறை கொடுத்தார் மஹிந்த...
இப்போ புல்ட்டோ ரொபியை டில்லிக்கு வழங்கி , பாரதத்துக்கே பரதம் ஆடிக்காட்டுகிறார் விக்கிரமசிங்க...
பாவம் டெமில்ஸ்..

அருமையான கருத்து.

 

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் ஆயுதமேந்தி கேட்டவற்றை பேனாவினால் வழங்க இடமளிக்க முடியாது – சரத் வீரசேகர

உணவு பாதுகாப்பு ஆலோசகராக சரத் வீரசேகர நியமனம்!

பிரபாகரன் ஆயுதமேந்தி கேட்டவற்றை பேனாவினால் வழங்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இந்தியாவின் கடும் அழுத்தத்தினால் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

நெருக்கடிக்கு மத்தியில் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டு நாட்டில் பிரச்சினைகளை தோற்றுவிக்க வேண்டாம் என மகாசங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

மகாசங்கத்தினரின் ஆலோசனைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மதிப்பளித்து செயற்படுவார் என எதிர்பார்ப்பதாகவும் சரத் வீரசேகர தெரிவித்தார்.

13 ஆவது திருத்தம் இந்தியாவினால் பலவந்தமாக இலங்கைக்கு அமுல்படுத்தப்பட்டது என்றும் இதன் பின்னர் ஏற்படுத்தப்பட்ட சில பாதுகாப்பு வழிமுறையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தகர்க்க முயற்சிக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

 

https://athavannews.com/2023/1323049

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.