Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலி வடக்கில் 33 வருடங்களின் பின் 108 ஏக்கர் காணி விடுவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image

யாழ்ப்பாணம் வலி. வடக்கு பிரதேசத்தில் கடந்த 33 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்ட 108 ஏக்கர் காணி 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட செயலரிடம் இராணுவத்தினரால் கையளிக்கப்படவுள்ளது. 

காங்கேசன்துறை மத்தி , ஜே/ 234 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட , வெளிச்ச வீட்டில் இருந்து துறைமுகம் வரையிலான 40 குடும்பங்களுக்கு சொந்தமான 26 ஏக்கர் காணியும், இதே கிராம சேவையாளர் பிரிவில், இராணுவத்தினரின் பொறியியல் பிரிவு அமைந்திருந்த 45 குடும்பங்களுக்கு சொந்தமான 24 ஏக்கர் காணியும், மயிலிட்டி வடக்கு ஜே / 246 கிராம சேவையாளர் பிரிவில் 17 குடும்பங்களுக்கு சொந்தமான 16 ஏக்கர் காணியும் , அன்றோனிபுரம் பகுதியில் 13 ஏக்கர் காணியும், நகுலேஸ்வரம் ஜே/ 226 கிராம சேவையாளர் பிரிவில் 20 குடும்பங்களுக்கு சொந்தமான 20 ஏக்கர் காணியும் நாளைய தினம் ஒப்படைக்கப்படவுள்ளது. 

வலி வடக்கில் 33 வருடங்களின் பின் 108 ஏக்கர் காணி விடுவிப்பு! | Virakesari.lk

சுதந்திரத் தினத்தில் தமிழர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு  பகுதியில் யுத்தத்தின் போது பாதுகாப்புப் படையினர் வசமிருந்த சுமார் 109 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு,  197 குடும்பங்களிடம் நாளை (3)கையளிக்கப்படவுள்ளது.

இராணுவத்தினர் வசமிருந்த ஐந்து காணிகளும் கடற்படையினர் வசமிருந்த ஒரு காணியுமே இவ்வாறு மக்களிடம் கையளிக்கப்பட உள்ளன.

இலங்கையின் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வடக்கிலுள்ள காணிகளை விடுவித்து அவற்றை உரிமையாளர்களிடம் கையளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பாதுகாப்புத் துறையின் முழு கண்காணிப்புடன் இந்த காணி விடுவிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. 

Tamilmirror Online || சுதந்திரத் தினத்தில் தமிழர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி ........!  👍

நன்றி பிழம்பு ......!   

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முன்னேற்றம். 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.தெல்லிப்பழையில் இராணுவத்திடமிருந்து 108 ஏக்கர் காணி விடுவிப்பு

By DIGITAL DESK 5

03 FEB, 2023 | 05:13 PM
image

யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலா் பல விற்குட்பட்ட வலி,வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திலிருந்து சுமாா் 108 ஏக்கா் காணி 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளது. 

02__4_.jpg

பலாலி - அந்தனிபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் காணி விடுவிப்புக்கான உத்தரவு பத்திரத்தினை யாழ்.மாவட்ட இராணுவ தளபதி பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜா் ஜெனரல் சுவா்ண போதோட்ட, யாழ்.மாவட்டச் செயலா் அம்பலவாணனா் சிவபாலசுந்தரனிடம் கையளித்துள்ளாா். 

02__3_.jpg

காங்கேசன்துறை - மத்தி (ஜே 234) - 50.59 ஏக்கர், மயிலிட்டி - வடக்கு (ஜே 246) - 16.55 ஏக்கர் , தென்மயிலை (ஜே 240) - 0.72 ஏக்கர், பலாலி - வடக்கு (ஜே 254) - 13.033 ஏக்கர், நகுலேஷ்வரம் (ஜே 226) -28 ஏக்கருமாக,  108 ஏக்கர் காணி மிக நீண்ட காலத்தின் பின்னா் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

02__6_.jpg

இந்நிலையில் மீள்குடியேற்றத்திற்காக 130 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளன. 

02__1_.jpg

மேலும், விடுவிக்கப்பட்டுள்ள 108 ஏக்கர் காணியில் 13 ஏக்கர் அரச காணியாகும். இந்த காணி யாழ்.வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து 5 இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருக்கும் 75 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. 

01__9_.jpg

 நிகழ்வில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்தா,  நாடாளுமன்ற உறுப்பினா்களான எம்.ஏ.சுமந்திரன், அங்கஜன் இராமநாதன், மற்றும் வடமாகாணசபை அவைத்தலைவா் சீ.வி.கே.சிவஞானம், மற்றும் ஜனாதிபதியின் செயலாளா் இ.இளங்கோவன், 

01__4_.jpg

பிரதம செயலாளா், யாழ்.மாவட்டச் செயலா், யாழ்.மாவட்ட உதவி அரசாங்க அதிபா், மேலதிக அரசாங்க அதிபா் (காணி), தெல்லிப்பழை பிரதேச செயலா் மற்றும் பொதுமக்கள், படையினா, பொலிஸாா் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனா்.

02__1_.jpg

01__8_.jpg

01__5_.jpg

01__3_.jpg

01__1_.jpg

01__7_.jpg

01__10_.jpg

02__5_.jpg

https://www.virakesari.lk/article/147389

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ எவ்வளவு சதுர கிமி காணி ஊ.பா.வலயம் என காட்டும் வரைபடங்கள் ஏதும் உள்ளதா?

2009 பகுதியில் இருந்தது.

இப்போ கூகிள் வரைபட கருவிகளை கொண்டு இலகுவாக செய்யலாம் என நினைக்கிறேன்.

இது 2014 வரைக்குமானது.

https://www.aaas.org/resources/monitoring-change-sri-lankas-valikamam-high-security-zone-2009-2014#_ftnref1

  • கருத்துக்கள உறவுகள்

அடபாவிகளா அடாத்தாக பிடித்த காணிகளை எதுவித நஸ்டஈடும் இல்லாமல் ஏதொ இனாமாக கொடுப்பது போல விழா எடுத்து கொடுக்கிறாங்களே.

22 minutes ago, ஈழப்பிரியன் said:

அடபாவிகளா அடாத்தாக பிடித்த காணிகளை எதுவித நஸ்டஈடும் இல்லாமல் ஏதொ இனாமாக கொடுப்பது போல விழா எடுத்து கொடுக்கிறாங்களே.

இதையெல்லாம் தட்டிக் கேட்கிற நிலையிலா நாங்க்கள் இருக்கிறோம். ஏதோ கிடைத்த வரை சந்தோசம் என்று வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, இணையவன் said:

இதையெல்லாம் தட்டிக் கேட்கிற நிலையிலா நாங்க்கள் இருக்கிறோம். ஏதோ கிடைத்த வரை சந்தோசம் என்று வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்.

உண்மை தான்.

  • கருத்துக்கள உறவுகள்

குத்தியர் முந்தி சந்திக்கு சந்தி இராணுவக் காவலரை வைச்சிட்டு அதை எடுக்கிறன் என்று காட்டிக்கொடுப்பு- பின் அரசியல் செய்தார்.. பிறகு கடலுக்க நண்ட பனிக்குந்திகளை எடுக்கிறன் என்ற அரசியல் செய்தார்.. இப்ப ஆக்கிரமிப்பு இராணுவத்தின் செல்லப்பிள்ளையாக இருந்து கொண்டு.. காணி விடுவிப்பு அரசியல் செய்கிறார். 

இதையே புலிகள் பேச்சுக்களின் போது.. குறிப்பாக உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றலும்..மக்களின் காணிகளை விடுவிப்பதும் முதன்மை என்ற போது.. புலிகளை நையாண்டி பண்ணினவை.. இப்ப புலிகள் இல்லாத 14 வருசமா காணி விடுவிப்பு அரசியல் தான் செய்து கிட்டு இருக்கினம். ஆக இவங்களுக்கு ஆக்கிரமிப்பு இராணுவம் எவ்வளவு முக்கியம் என்பதை மக்கள் உணர்ந்தால் சரி. என்ன உணர்ந்திட்டும்.. உந்த ஊத்தைக் கூட்டத்துக்கு வாக்குப் போடிற அடிமுட்டாள்கள் இருக்கும் வரை.. தமிழருக்கு ஒன்றுமே விமோசனமில்லை. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தினரின் காணி விடுவிப்பு : பலாலி வடக்கு மக்கள் ஏமாற்றம்

By Vishnu

05 Feb, 2023 | 12:46 PM
image

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பலாலி வடக்கு இல 254 பகுதியில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு முகாம் அமைக்கப்பட்டிருந்த ஒருதொகுதி நிலங்கள் விடுவிக்கப்பட்டிருந்தது .

IMG_7631__1_.JPG

இவ்வாறு விடுவிக்கப்பட்டிருந்த நிலங்களில் ஒரு துண்டு நிலம்கூட பொதுமக்களின் குடியிருப்பு நிலங்கள் விடுவிக்கப்படவில்லை என காணி உரிமையாளர்களான தமிழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

IMG_7621.JPG

சுதந்திரத்தினத்துக்கு முன்னர் தமது காணிகள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதியின் வாக்குறுதியை நம்பி காணி விடுவிப்பு நடைபெறும் இடத்துக்கு வருகைதந்து பார்த்த போது தமக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

IMG_7603.JPG

அரச நிலமாக காணப்பட்ட சிறிய நிலப்பரப்பை விடுவித்து விட்டு பொதுமக்களின் காணி விடுவிக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளதாகவும் மாறாக தமது பூர்வீக குடி நிலங்கள் வீடுகள் என்பன படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதை தம்மால் விடுவிக்கப்படுள்ள நிலத்திலிருந்துகொண்டு பார்க்கமுடிவதாகவும் அந்த நிலங்களில் இராணுவம் விவசாயம் செய்வதோடு முகாம் அமைத்தும் வாழ்ந்துவருவதை பார்க்க முடிவதாகவும் பலாலி வடக்கு இல 254 பகுதி காணி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

IMG_7589.JPG

IMG_7588.JPG

IMG_7541.JPG

IMG_7585.JPG

IMG_7535.JPG

 

 

 

https://www.virakesari.lk/article/147450

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

 

 

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பலாலி வடக்கு இல 254 பகுதியில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு முகாம் அமைக்கப்பட்டிருந்த ஒருதொகுதி நிலங்கள் விடுவிக்கப்பட்டிருந்தது .

இவ்வாறு விடுவிக்கப்பட்டிருந்த நிலங்களில் ஒரு துண்டு நிலம்கூட பொதுமக்களின் குடியிருப்பு நிலங்கள் விடுவிக்கப்படவில்லை என காணி உரிமையாளர்களான தமிழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

சுதந்திரத்தினத்துக்கு முன்னர் தமது காணிகள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதியின் வாக்குறுதியை நம்பி காணி விடுவிப்பு நடைபெறும் இடத்துக்கு வருகைதந்து பார்த்த போது தமக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரச நிலமாக காணப்பட்ட சிறிய நிலப்பரப்பை விடுவித்து விட்டு பொதுமக்களின் காணி விடுவிக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளதாகவும் மாறாக தமது பூர்வீக குடி நிலங்கள் வீடுகள் என்பன படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதை தம்மால் விடுவிக்கப்படுள்ள நிலத்திலிருந்துகொண்டு பார்க்கமுடிவதாகவும் அந்த நிலங்களில் இராணுவம் விவசாயம் செய்வதோடு முகாம் அமைத்தும் வாழ்ந்துவருவதை பார்க்க முடிவதாகவும் பலாலி வடக்கு இல 254 பகுதி காணி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

உண்மைகள் வெளிவர தொடங்குகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

உண்மைகள் வெளிவர தொடங்குகின்றன.

இந்த கண்துடைப்புக்குத்தான் வெள்ளையும் சொள்ளையுமா போய் மேடையில் உக்காந்துள்ளார் சுமந்திரன் மாமா.

பிகு

மாமா என்றதும் தப்பாக நினைக்க வேண்டாம்.

நேரு மாமா போலவே சும் மாமாவும் பாவனை செய்வதால் உருவான மரியாதை வழக்கு இது.

 

large.4968154F-B038-4C7F-AA19-2D58CB9A409C.jpeg.ec012a7b3f91caa6e4b435c1b3c4c143.jpeg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.